Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
AZA.VALLIYAPPA, FAMOUS TAMIL POET, HAS ADAPTED SOLOMON GRUNDY NURSERY RHYME FOR TAMIL CHILDREN . TAMIL CHILDREN CAN EASILY LEARN DAYS OF THE WEEK.
Solomon Grundy, Born on a Monday, Christened on Tuesday, Married on Wednesday, Took ill on Thursday, Grew worse on Friday, Died on Saturday, Buried on Sunday, That was the end, Of Solomon Grundy
(Please see the attachments)
Odi Vilaiyadu Pappa by Bharati
Vegetables in Tamil
Aza. Valliyappa’s Thief
tags– solomon grundy, days of the week, Aza. Valliyappa, Vegetables in Tamil, Bharati
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-2
உலகம் முழுதுமுள்ள மாணவர்களுக்கு அதர்வண வேத பூமி சூக்த துதியை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் ; இதில் மதத்தை விட பொதுவான (More secular than religious) இயற்கை விஷயங்களே அதிகம் உள்ளன. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் இந்த பூமி பற்றி எவ்வளவு சிந்தித்துள்ளனர் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது !
“மலை உச்சியும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இந்த பூமி; மக்களை ஒன்றிணைக்கும் சமவெளிகளை உடையது. பல்வேறு குணப்படுத்தும் மூலிகைகளை உடையது இந்த பூமி. அவள் நமக்காக பல்கிப் பெருகி விசாலம் அடைவாளாக “
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்களுக்கு என்ற சொல்லாகும். வேத மந்திரங்கள் பெரும்பாலும் கூட்டுப் பிரார்த்தனை மந்திரங்கள். உலகப் புகழ் பெற்ற, நாலு வேதங்களிலும் உள்ள, காயத்ரீ மந்திரம் கூட எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்றே வேண்டுகிறது . இதனால்தான் இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்களும் பிரபுக்களும் பிராமணர்களுக்கு வாரி வழங்கினார்கள் .
மங்கலம் என்ற பெயரில் பல தமிழ்நாட்டு ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் பிரம்மதேயம்; அதாவது பிராமணர்களுக்கு மன்னர்கள் அளித்த ஊர்கள். இதுதவிர வேள்விக்குடி போன்ற பெயர்களிலும் யக்ஞ பூமி என்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் தண்டச் சோறு தின்னவில்லை. எப்போது பார்த்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களைப் positive thoughts பரப்பி ‘எல்லோரும் வாழ்க’ என்று பிரார்த்தித்தனர். இந்த பூமி சூக்தமும் எல்லோருக்கும் வேண்டுவதை 63 மந்திரங்களிலும் காணலாம்.
ந: (நஹ )= எங்களுக்கு என்பது காயத்ரீ மந்திரம் மற்றும் இந்த இராண்டாவது மந்திரத்தில் வருவதைக் காண்க
மற்றொரு சொல் மனு; மனுவின் வழி வந்தவர்கள் மானவர்கள் . இன்றும் நாம் மனிதன் என்கிறோம் (மனுஷ= மனித; ஷ =த MAN )
மனுவின் பெயர் ரிக் வேதத்திலும் வருவதால் பிரளயம் ஏற்பட்ட காலம் அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும் . ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் மேன் MAN என்று மனுவை தினமும் நினைவு கூறுகிறார்கள். இதனால் ஒன்று தெளிவாகியறது . வேத கால சொற்களை இன்று வரை புழங்குகிறோம். நாகரீகம் உடைய எவரும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் பேச முடியாது; தமிழர்களும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாது.
ஸம்ஸ்க்ருதச் சொற்களை நீக்கினால் திருக்குறள் செத்துவிடும்; மூன்றில் ஒரு திருக்குறள் அவுட்!
ஆங்கில உலகில் இயற்கையை முன்வைத்துப் பாடிய வோர்ட்ஸ்வொர்த்தும் William Wordsworth மலை பள்ளத்தாக்குகளுடன் தன் டாபோடில்ஸ் Daffodils கவிதையைத் துவக்குகிறார்
I wandered lonely as a cloud
That floats on high o’ervales and hills
ஆயுர்வேதத்தின் துவக்கம், உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் உள்ளதை பல துதிகளில் காண முடிகிறது. ஆயுர்வேத மூலிகைகளை பகிரங்கமாகப் பயன்படுத்தியதை அனுமன் சஞ்சீவி பர்வத சம்பவத்தில் காண முடிகிறது. இங்கும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை வளரும் பூமி என்று முனிவர்- புலவர் புகழ்கிறார்
HANUMAN FLYING WITH SANJEEVINI PARVATHA IN YAGA FIRE
ஓஷதி என்ற சொல்லைக் கவனிக்கவும் ; அதிலிருந்து வருவதே நம் தமிழ் நூல்களிலும் காணும் அவுடதம்= ஒளஷதம் (ஷ= ட )
யஸ்யாமிதம் ஜின்வதி ப்ராண தேஜத் ஸா நோ பூமிஹி பூர்வபேயே ததாது
பொருள்
“ஆழி சூழ் உலகமும் நதிகளும் நீர்நிலைகளும் நிறைந்த பூமி,
எவளிடத்தில் உணவும் தானிய நிலங்களும் உள்ளதோ
எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ
அவள் எங்களுக்கு விளைச்சளைப் பெருகி விசாலம் ஆகட்டும்”
இதிலுள்ள ‘அன்னம்’, ‘பூமி’= புவி (ம=வ), ப்ராண (பிராணன் உள்ளது பிராணி) போன்றசொற்களை நம் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.
நகர கூடிய, சுவாசிக்கக்கூடிய என்ற அ ழகான சொற்களால் எல்லா உயிரினங்களையும் முனிவர் குறிப்பிடுகிறார். சென்ற மந்திரத்தில் நகராத தாவரங்களை மட்டும் கண்டோம். இந்த மந்திரத்தில் ஒரு நாட்டின் செல்வமான தாவரங்களும் பிராணிகளும் வந்துவிடுகின்றன. வேத கால இந்துக்கள் நாடோடிகள் அல்ல; விவசாயிகள்; தா னிய உழவு நிலங்களைக் குறிப்பிட்டு அமோக அறுவடைக்கும் வேண்டுவதால் பக்கா விவசாயிகள் என்பதும் தெளிவாகிறது
இதை எழுதும் போது பாரதியார் சொன்ன கடல், மலை, ஜீவராசிகள் அனைத்தும் நினைவுக்கு வரும்:-
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் —
இந்த அருமையான கருத்தை 3-ஆவது மந்திரத்தில் காணலாம்.
–தொடரும்
TAGS– பூமி சூக்த ஆராய்ச்சி-2, மலை, கடல், ஓஷதி , பிராமணர்கள்
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,480 Date uploaded in London – – 24 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
இசையில் வித்தகக் குரலும், விரலும் : சுவையான நூல் தரும் செய்திகள்!
ச.நாகராஜன்
‘சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே’ என்ற அருமையான பாடல் நாம் அனைவரும் கேட்ட ஒரு பாடல். ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் மஹாகவி பாரதியார்.
இந்த இசையை முறைப்படி பயின்றவர்கள் மற்றவர்களுக்கு இசை வழியாகத் தரும் ஆன்மீக இன்பம் சொல்லுக்கு அப்பாற்பட்டது. இசை வாத்தியங்களோ எனில் இசை கேட்போருக்கு ஒரு புதிய உயரத்தைக் காட்டும். இத்தகைய இசைக் கலையில் மிருதங்க வித்வானாகப் பரிமளிப்பதோடு, இசை நுணுக்கங்களை ஆய்ந்து வரும் ஆய்வாளராகவும் இசைப் பேராசிரியராகவும் பல நூல்களைப் படைக்கும் எழுத்தாளராகவும் பன்முகம் கொண்டிருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன்.
பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவர்களின் பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர். மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் எழுதியுள்ள புத்தகம் இசையில் வித்தகக் குரலும், விரலும் என்ற இந்தப் புத்தகம்.
217 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது. இசைவானின் நட்சத்திரங்கள் என்ற முதல் பாகத்தில் தியாகபிரம்மமும் பக்தர் கண்ணனும், சங்கீத பிதாமகர் செம்மங்குடி R. சீனிவாசய்யர், பதத்திற்கு T.பிருந்தா, ஸங்கீதத்திற்கு பாடுபட்டம்மாள், சங்கீத வாணி M.L. வசந்தகுமாரி,வித்துக்கலை வித்வான்களாக்கிய வித்யாலயம் என்ற ஆறு அத்தியாயங்களில் அபூர்வமான இசைக்கலைஞர்களின் அருமையையும் பெருமையையும் அறிகிறோம்.
அடுத்து ராஜவாத்யம் மிருதங்கம் என்ற பகுதியில் மிருதங்கத்தின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு முறைகள், மிருதங்கம் ஒரு சிறந்த பக்க வாத்தியம், கொன்னக்கோல் மரபு, மிருதங்க வித்வான்கள் கையாண்ட புதிய பாணிகள், மிருதங்கத்தில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் புதிய உத்திகள் என்ற ஐந்து அத்தியாயங்களைக் காணலாம். அடுத்து இசையும் லயமும் என்ற பகுதியில் பண்களும் தாளமும், கல்வெட்டுக்களில் இசை, நாவுக்கரசர் காட்டும் முழவு, ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்களில் தாளக்கூறுகள், சிதம்பர க்ஷேத்திரத்தின் இசை உருக்கள், இசையில் கணிதம், உடலின் வடிவமே இசையின் வடிவம், இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசையில் ‘இணைய பஞ்ச தஸ தொழில் நுட்ப மார்க்கங்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் பல்வேறு புதிய விவரங்களைத் தருகிறது.
56 வயதான இந்த நூலாசிரியருக்கு தியாகராஜன் என்ற பெயர் வந்ததே சங்கீதத் தொடர்பினால் தான் என்பதை முதல் அத்தியாயமே தருகிறது. இவரது தந்தையார் திரு தே. கண்ணன் தியாகராஜ ஸ்வாமிகளின் பக்தர். அவரைப் பற்றிய பல உருக்கமான செய்திகளைக் கண்டு உருகுகிறோம். தியாகபிரம்மத்தின் மேல் கொண்ட பக்தியினால் தான் இவருக்கு தியாகராஜலு என்ற பெயர் இவர் தந்தையாரால் இடப்பட்டது!
சங்கீத பிதாமகர் என்று அழைக்கப்பட்ட செம்மங்குடி சீனிவாசையர், 40 ஆண்டுகள் இணைபிரியாது கச்சேரி செய்த வீணை தனம்மாளின் பேத்திகளான ப்ருந்தா- முக்தா சகோதரிகளில் ப்ருந்தா – ஆகியோரைப் பற்றிய சுவையான வரலாற்றைத் தரும் நூலாசிரியர் D.K. பட்டம்மாளின் இசை வாழ்க்கையைப் பற்றியும் சுவையான விவரங்களுடன் விவரிக்கிறார்.
சின்னஞ்சிறு கிளியே – பாரதியாரின் பாடல். ராஜா தேசிங்கு படத்தில் இடம் பெறுகிறது இந்த பாரதியின் பாட்டு. மீண்ட சொர்க்கம் படத்தில் பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரதக் கலை என்ற அருமையான பாடல். இதைப் படித்தவுடன் உடனே நமது நினைவுக்கு வருபவர் சங்கீதவாணி M.L. வசந்தகுமாரி. அவரது வாழ்க்கைச் சிறப்புகள் பற்றி ஒரு அத்தியாயம் தருகிறது.
அடுத்து 1966ஆம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்ட ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயத்தின் தோற்றம், வளர்ச்சி, அது உருவாக்கிய இசைக் கலைஞர்கள் பற்றிய அரிய விவரங்களை முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம் விவரிக்கிறது. ராஜவாத்யம் மிருதங்கம் என்ற இரண்டாம் பாகத்தில் அரிய வாத்தியமான மிருதங்கம் பற்றிய ஏராளமான நுட்பமான தகவல்களைப் பெற முடிகிறது.
ராம லட்சுமணர் போரில் வெற்றி பெற்றவுடன் மிருதங்கம் உள்ளிட்ட தாளங்களை வாசித்து வெற்றியைக் கொண்டாடினர் என்கிறது இராமாயணம். ரண பண்டிதனான இந்திரஜித் அனுமனுடன் போரிட வருவதை சுந்தர காண்டம் 48வது அத்தியாயம் விவரிக்கிறது. அதில் 30ஆம் ஸ்லோகம் ‘ததஸ்து தத் ஸ்யந்தந நி:ஸ்வநம் ச ம்ருதங்க பேரி படஹ ஸ்வநம் ச’ என்று அநுமன் இந்திரஜித்தின் தேர் ஓசையையும் மிருதங்கம்,பேரி, படஹ வாத்தியங்களின் கோஷத்தையும் நாணிட்டு இழக்கப்படுகிற வில்லின் கோஷத்தையும் செவியுற்று இன்னும் மேலே துள்ளிப் பாய்ந்தார்’ என்று விவரிக்கிறது. இப்படி பாரத இதிஹாஸம் மற்றும் இலக்கியங்கள் முழுவதும் மிருதங்கத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். ஆக மிருதங்கத்தின் அருமை பெருமைகளை அழகுற இந்தப் பாகம் தருகிறது.
ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாடல்களைக் கேட்காதோர் இருக்க முடியாது. அவரது பாடல்களில் சொற்கட்டு, சொற்கட்டு சுர இயல், மத்திமகாலம், விரைவு நடை, சுவை, அபிநயக்கூறு ஆகிய தாளக்கூறுகள் அனைத்தும் அமைந்துள்ளன. அவரைப் பற்றிய சுவையான செய்திகள் மூன்றாம் பாகக் கட்டுரை ஒன்றில் தரப்படுகிறது.
சிதம்பரத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட பதிகங்களும், பாடல்களும் ஏராளம் ஏராளம். அவை தரும் சுவையான செய்திகளும் ஏராளம் ஏராளம். அவற்றைத் தொகுத்துத் தருகிறது சிதம்பர க்ஷேத்திரத்தின் இசை உருக்கள் என்ற அத்தியாயம்.
அறிவியல் ரீதியாக இசையை ஆராய்கிறது இசையில் கணிதம், உடலின் வடிவமே இசை வடிவம் ஆகிய அத்தியாயங்கள்.
இசையை அனுபவிப்பது என்பது ஒன்று; இசை பற்றிய தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது வேறொன்று. ஆனால் இசை பற்றிய நுட்பங்களையும் தகவல்களையும் அறிபவர்கள் இசையின் மேன்மையை இன்னும் நன்றாக அறிந்து அதை மேம்பட ரசித்து மேம்படுவர் என்பது உண்மையே.
ஆகவே இந்த நூல் இசைக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, இசையை நுகர்வோருக்கும் இன்றியமையாத, படிக்க வேண்டிய ஒரு நூலாக அமைகிறது.
நூலுக்கு ‘இசைத்தமிழ் கலைச்சொல் அகராதியின் தொகுப்பு ஆசிரியர்’, கலைமாமணி, முனைவர் அரிமளம் பத்மநாபன் தகுந்த ஒரு வாழ்த்துரையை அளித்துள்ளார்.
இந்த நூலாசிரியரை தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த முறையில் கௌரவிக்கும் என்று நம்பலாம். சங்கீத ஆர்வலர்கள் மறக்காமல் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகமாக இது அமைகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்களிலும் இடம் பெற வேண்டிய ஒரு நூல் இது. பன்முகப் பரிமாணத்தோடு இலங்கும் முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014
tags- இசையில் வித்தகக் குரலும், விரலும், திஸ்ரத்வனி, இசை அறக்கட்டளை, க. தியாகராஜன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Now I do more research into the Hymn to Earth in the 12th Book of Atharvana Veda (AV). It is incredible that one can sing such a long hymn with 63 Mantras/stanzas around 1000 BCE touching all aspects of the Earth, the Big Blue Marble.
The first Mantra is similar to one in Sangam Tamil literature though there is at least 1000 year gap between them. Both the Tamils and the Vedic seers were wondering what makes the earth clock ticking. How come this circular globe is not falling and still hanging in the middle of vast Space.
Hindu Vedas make three scientific statements even before the Western world did.
1.All through the Sanskrit literature we see Globular, Oval shape is attributed to Earth. Anda is the Sanskrit word for Egg and the Earth. They even use it for Universe with more pre fixes (Brahmanda, Akilanda ec. Tamils followed it in their later literature.
2.Hindus named all heavenly bodies including Sun and Moon as “Graha” which means Catch, Hold, Grab, Attract. English words such as Grip, Grab and Gravity came from this Sanskrit word; ‘Paani Grahanam’ is Holding Hand or Grabbing the hand of a woman which is used in Marriage invitations; Chnadra Grahana or Surya Grahana is ‘Shadow catching Moon and Sun’ (eclipse). So Hindus knew every heavenly body whether it is moon or mars, has Gravity
3.This shows that they knew earth is hanging in space but not falling down.
The first stanza or mantra says
“Truth, Eternal Order that is great and stern,
Consecration, Austerity, Prayer and Ritual—these uphold the Earth
May she, Queen of what has been and will be,
Make a wide world for us”.- AV 12-1-1
If at all the earth is existing today, it is because of the above good things.
Tamils also believed that good qualities only uphold the earth. Ilamperuvazuthi, a Pandya King, composed a poem (182 of Purananuru) which said that if the Tamils get even Indra’s Amrita (Nectar of Immortality) they wont eat it alone without sharing. Hospitality is praised throughout Vedic and Tamil literature. One must notice the Pandya king used Rig Vedic Sanskrit words ‘Indra’ and ‘Amrita’. The same king sang about Vishnu as well in another verse (See Paripatal) . He listed more good qualities in the poem.
Tiru Valluvar, author of Tamil Veda Tirukkural, also said the same in couplets 82, 996
“Even the nectar of immortality is not to be consumed,
Without sharing with the guests waiting outside”- Kural 82
Valluvar also mentioned Amrita in the above couplet.
In another couplet , he says,
“The world goes on smoothly, because of men of good breeding and culture;
But for them all this harmony would be buried in dust” – Kural 996
Cultured were called ‘Arya’ and uncultured, uneducated, criminals were called ‘Dasyus’.
In English they were called ‘Spurious’, opposite of Aryas
Spurious= Fake, False, Illegitimate
Xxx
Now let us compare it with AV ‘Hymn on Earth’.
The first stanza lists good qualities that uphold the earth — Truth, Austerity, Eternal Order/Rtm, Prayer and Ritual.
Truth and Eternal order (rutham) are praised sky high throughout the Vedas. Nowhere in the world we see such repetitions.
‘Rtm’ gives the word Rhythm in English.
‘Sathyam’ is Truth; Even English girls have the name Ruth.
And the Sanskrit word for austerity is Tapa (It becomes Tava in Tamil; P=V)
The Sanskrit word Tapas is used at least 50 times in Sangam literature and at least ten times in Post Sangam work ‘Tirukkural’.
2000 years ago Tamils were so familiar with Indra, Amrita and Tava , they used the exact Sanskrit words.
Another interesting comparison is Earth as Wife/Queen in AV and Earth as Prostitute in Tamil Purananuru of Sangam Period.
Later in AV, we see Earth as Mother. The poet who sang that song is Markandeyanar (Puram 365)
In Hinduism Kings are married to Earth i.e. Rajyalakshmi. So here the Tamil poet says, “Earth is crying that all the kings who married me left and I suffer like a prostitute (every king enjoys me but not staying with me). The poet emphasize the impermanence of life. The message is ‘even the greatest of Kings are gone but the earth is there permanently’.
So, it is alright for the Vedic poet to describe earth as Patni.
Last but not the least, the Vedic poet is talking about past and future of the Planet earth
Truth, Eternal Order that is great and stern,
Consecration, Austerity, Prayer and Ritual—these uphold the Earth
May she, Queen of what has been and will be,
Make a wide world for us.
This poetry is universal and not local. The poet has a perspective outlook. It is a priceless contribution of the AV to Vedic literature. The Vedic sage does not think of the earth in terms of only present but also the past and the future. The words Bhuta and Bhavishya in the first stanza would remind us the very first sloka in Vishnu Sahasranama where God is described as Bhuta, Bhavya and Bhavishya .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-1
பூவுலகத்தைப் பற்றி வேதகால மனிதன் சிந்தித்திருக்கிறான். அது மட்டுமல்ல . அவனுக்கு பூமி பற்றி மிகப் பரந்த விஞ்ஞான அறிவு இருந்திருக்கிறது. .3 விஷயங்கள் வேதத்தில் தெளிவாக உள்ளன.
1.பூமி என்பது வட்ட வடிவமானது .
2.பூமி என்பது அந்தரத்தில் நிற்கிறது.
3.அது விழாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம்
பூமியை அண்டம்/முட்டை, கோளம் என்றே வருணித்துள்ளனர்; பிரபஞ்சமே வட்ட வடிவில் பலூன் போல ஊதிப் பெருத்து வருகிறது என்பதையும் அவர்கள் அறிவர் ; தமிழர்களும் இதை பின்பற்றி மிகவும் பிற்காலத்தில் பாடி வைத்தனர்
பூமியை ஏதோ தாங்கி நிற்கிறது? அது எது? என்ற கேள்வியை எழுப்பி விடை காண்கின்றனர். அதிலிருந்து இந்த பூமி விழாமல் இருக்கிறது என்ற கருத்து தொனிப்பதைக் காணலாம். ஏன் ‘தாங்கி’, ‘பாரத்தைச் சுமந்து’ என்ற சொற்கள் வந்தன? பிற்காலத்தில் ஆதி சேஷன் தலையில் பூமி நிற்பதாகவும் , ஆமை முதுகில் நிற்பதாகவும் சொன்னதற்கு வேறு காரணங்கள் உள. .இதற்கு தார்மீக காரணம் ஒன்று; விஞ்ஞான காரணம் ஒன்று. அது பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY – ALL ARE DERIVED FROM SANSKRIT GRAHA) என்று சூரியன், சந்திரன், பூமி எல்லாவற்றுக்கும் பெயரிட்டனர் முன்னோர்கள். இதன் பொருள் ‘பிடித்தல்’. ‘பாணிக் கிரஹணம்’ என்றால் ‘கைப்பிடித்தல்’ = கல்யாணம்; ‘சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம்’ என்றால் ஒரு நிழல் அவைகளைப் பிடிக்கிறது. ஆங்கிலத்தில் பிடித்தல், ஈர்த்தல் என்ற எல்லா சொற்களும் ‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY) என்ற வேர்ச் சொல்லில் இருந்தே வருகிறது. ஆக, கிராவிடி GRAVITY என்னும் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே . தமிழர்களும் சம்ஸ்கிருதத்தை அப்படியே மொழி பெயர்த்து ‘கோள்’ என்றனர். கொள் (USED AS SUFFIX IN REFLEXIVE VERBS MEANING YOU KEEP IT FOR YOURSELF- YOU GRAB IT) என்ற வினைச் சொல்லுக்கும் ‘பற்றுதல் , பிடித்தல்’ என்றே பொருள்.
அதர்வண வேதத்தின் 12 ஆவது காண்டத்தின் முதல் துதி பூமி சூக்தம்; 63 பாடல்கள் அல்லது மந்திரங்கள் அடங்கியது. இதை உலகம் முழுதும் கட்டாய பாடமாக (COMPULSORY LESSON FOR ALL STUDENTS) வைக்கவேண்டும். அற்புதமான விஞ்ஞான, சமூக, இயற்கை, மற்றும் புறச் சூழல் விஷயங்களை ஒருவர் அருமையாகப் பாடியுள்ளார்..
அதை விரிவாக ஆராய்வதோடு ஆங்காங்கே ஒப்பிட்டும் காட்டுகிறேன்.
‘வையகமும் துயர் தீர்கவே’ என்று சம்பந்தர் பாடினார் ; அது ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என்பதன் மொழியாக்கம். அந்தக்கருத்து இந்தப்பாடலில் வருகிறது. ‘மைத்ரீம் பஜத’ என்ற சம்ஸ்கிருதப் பாடலை இயற்றி, அதை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி மூலம் ஐ.நா சபையில் பாடவைத்தார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ;அந்தக் கருத்தும் இதில் வருகிறது .
ஒன்று பரம்பொருள் – நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி என்று பாரதியார் சொல்லும் கருத்ததும் இப்பாடலினின்று பிறந்த கருத்தே .
காண்டம் 12; சூக்தம் 474; பூமி (12 ஆவது காண்டத்தில் முதல் துதி)
ஸா நோ பூதஸ்ய பவ்யஸ்ய பத்ன்யுரும் லோகம் ப்ருதிவீ நஹ க்ருணோது
எவ்வளவு எளிமையான சொற்கள்; இந்திய மொழிகள் அறிந்த அனைவருக்கும் தெரிந்த சத்யம் /வாய்மை, தவம், தீட்சை , ருதம், பிரம்மம் , யக்ஞம், பிருத்வீ , உக்ரம் — இவைதான் முதல் மந்திரத்தில் வருகின்றன .
இந்த உலகம் எப்படி இன்றும் விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது ? பூமி முட்டை வடிவில் இருந்தால் சமுத்திர நீர் ஏன் கீழே விழாமல் இருக்கிறது? வட்ட வடிவ அண்டத்தில் (அண்டம் = முட்டை) கீழே இருப்போர் எப்படி தலை கீழாக நின்றும் விழாமல் இருக்கிறார்கள்?
இவ்வளவு கேள்விகளுக்கும் தமிழன் சொன்ன விடை :-
புறநானூறு பாடல் 182. உண்டாலம்ம இவ்வுலகம்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182).
இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
:”இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.”
இதையே வள்ளுவரும் செப்புகிறார்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் – 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.
இன்னொரு குறளில் ,
பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் – 996)
பொருள்: பண்புடையவர்கள் இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.
ஆக உலகம் அழியாமல் இருக்க அமிர்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்ணுவோர் இருப்பது ஒரு காரணம். இரண்டாவது பண்புடையோர் இருப்பது மற்றொரு காரணம். பண்புடையோரை வேதமும் பாரதியும் ஆரியர் என்று எல்லாப் பாடல்களிலும் படியிருப்பதைக் காணலாம். ஆரியர் அல்லாதோர் பூரியர் ; தஸ்யூக்கள் ; அ தாவது கிரிமினல்ஸ் CRIMINALS ; இந்தச் சொல் ஆங்கிலத்தில் ஸ்பூரியஸ் SPURIOUS என்று புழக்கத்தில் உள்ளது
ஸ்பூரியஸ் SPURIOUS = பூரியர் (ஆரியரின் ARYA x SPURIOUS எதிர்ப்பதம் )
SPURIOUS = FALSE, FAKE, ILLEGITIMATE
XXXX
அதர்வண வேதம் சொல்லும் காரணம்
சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார் இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது
கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .
அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம்’ இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொ வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM
உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்
இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ; அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்
முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும் (ப=வ)
இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!
தவம் –
சங்க இலக்கியத்தில் சுமார் 50 இடங்களில் தவ/ம் என்ற சொல் வருகிறது; மஹா சம்ஸ்க்ருத மேதையான வள்ளுவன், பத்து குறள்களில் தவ/ம் என்ற சொல்லை பயன்படுத்துகிறான். சிலப்பதிகாரம், மணிமேகலையில் நிறைய இடங்களில் ‘தவம்’ வருகிறது இந்த வேத காலச் சொல்லை அறியாத தமிழன் இல்லை; அறியாவிட்டால் அவன் தமிழனும் இல்லை
தீட்சை யக்ஞம் ,பிரம்மம் முதலியன ஆன்மீக இலக்கியங்களில் மட்டும் வருகின்றன. ஆயினும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு நல்ல பாயிண்ட் POINT சொல்கிறார். சங்க இலக்கியத்திலேயே ‘வேள்வி’ என்ற மொழிபெயர்ப்பு இருப்பதால் (யக்ஞ = வேள்வி) இது தமிழர்களும் இந்துக்களும் ஒரே வேத கலாசாரத்தில் வந்ததைக் காட்டுகிறது என்கிறார். வெள்ளைக்கார கிறிஸ்தவ மகா பாவிகள், இதை இறக்குமதி விஷயம் என்று சொன்னதற்கு அவர் மிதியடி கொடுக்கிறார் .
யஜ = அக்கினியில் ஆஹுதி கொடுத்து வேண்டுதல் = யக்ஞம் ;
வேட்கை – தீ மூட்டி, நெய்ச் சோறு பெய்து , வேண்டுவதைப் பெறுவது வேள்வி ; யஜ் =வேள்
XXX
முதல் மந்திரத்தில் இன்னும் ஒரு அற்புத தகவல் வருகிறது !
பூமியை ராணி என்று வருணிக்கிறார். பின் னொரு மந்திரத்தில் தாய் என்று இந்த ரிஷி வருணிக்கிறார் . அதை விட முக்கியமான விஷயம் எதிர்காலம் பற்றிப் பேசு வதாகும் ; ‘பூத, பவிஷ்ய’ என்ற இரண்டு சொற்களைக் காணலாம். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் முதல் ஸ்லோகத்திலேயே பூத, பவிஷ்ய, பவத் என்று முக்காலமும் வருகிறது. இங்கு நிகழ் காலத்தைச் சொல் லத் தேவை இல்லை. புலவர் பாடிக்கொண்டிருக்கிறார். கடந்த காலம் போலவே வருங்காலமும் இருக்கட்டும் ; இந்த உலகம் மேலும் விரிவடைந்து காக்கட்டும் என்ற அருமையான வாசகம் உள்ளது. பூமியை பத்னி (மனைவி) என்று சொல்லி இருக்கிறார். இதை மகா ராணி என்றும் சொல்லலாம்.
ஆனால் புறநானூற்றுப் புலவரும் ‘நில மடந்தை’ என்று பாடுகிறார் . மன்னரின் மனைவி பூமி; அதாவது ராஜ்ய லக்ஷ்மி ; எல்லா மன்னர்களும் என்னை மட்டும் விட்டு விட்டுப் போகின்றனரே ; நான் மட்டும் தொடர்ந்து பூ பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றேனே என்று மார்கண்டேயனார், புறநானூறு 365ல் பாடுகிறார் . புலவரின் பெயர் என்றும் 16 வயதுடன் வாழ்ந்த மார்க்கண்டேயனின் புராணக்கதையை நினைவுபடுத்தும். பாடலில் பூமாதேவி தன்னை ‘விலை நலப் பெண்டிர்’ என்று தாழ் த்திக்கொள்ளுவது நிலையாமையை வலியுறுத்தவே. முடிசார்ந்த மன்னரும் பின்னர் பிடி சாம்பலாய்ப் போனதை நிலமகள் சொல்லி அழுகிறாள் என்கிறது புறநானூறு.
ஆக, பூத, பவிஷ்ய, பத்னி என்பதற்கெல்லாம் பெரு விளக்கம் தேவைப்படும் மந்திரம் முதல் மந்திரம்.
இன்னும் 62 மந்திரங்கள் இருக்கின்றன இந்தப் பாடலில்!! தொடர்ந்து காண்போம்.
Xxx subham xxxx
tags-
பூமி சூக்தம் , அதர்வண வேதம், உண்டாலம்ம , நிலமகள் சத்யம், ருதம், தவம்
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,476 Date uploaded in London – – 23 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்! ச.நாகராஜன்
பாரதம் கண்ட 64 கலைகளில் இசைக் கலை மிக முக்கியமானது. அந்தக் கலையிலும் வாத்தியங்கள் அற்புதமான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவை. இந்திய மக்களின் வாழ்க்கையில் இசையும் வாத்தியங்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் காலம் காலமாக முழுவதுமாகக் கலந்திருப்பதை நமது இதிஹாஸங்களான இராமாயணம், மஹாபாரதத்தில் காணலாம். வேதங்கள் இசை மஹிமை பற்றியும் ஒலியின் சக்தி பற்றியும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன; ஒலி பற்றிய பல அபூர்வ இரகசியங்களை அவை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நமக்கு ஒரு அபூர்வமான நூலைப் படைத்து அளித்திருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன். பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பிள்ளையவ்ர்களைப் பற்றித் தெரிந்திராதவர்களே இல்லை. அவரது பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர். பாரம்பரிய சங்கீதம் இவர் ரத்தத்தில் ஊறியதற்கு இந்த ஒரு காரணம் போதாதா என்ன? மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இசை சம்பந்தமான மிருதங்க இசை மரபு என்ற அரிய ஆய்வை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது ஆய்வின் அடிப்படையில் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் ஒரு புத்தகம் : மிருதங்க இசை மரபு. 104 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகதம் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்னுரை, மிருதங்கம் தோற்றம், வளர்ச்சி, மிருதங்கம் தயாரிப்பு மரபு, மிருதங்கம் பாட மரபு, மிருதங்கம் வாசிப்பு மரபு, முடிவுரை ஆகிய தலைப்புகளில் ஏராளமான சுவையான செய்திகளைப் படித்து வியக்கிறோம். பிரமிக்கிறோம்.
முன்னுரையில் நூலாசிரியர் தரும் சுவையான தகவல்களில் சில : இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் தமிழகத்தில் இருந்தன. சர்.சி.வி.ராமன் மிருதங்க வாத்தியத்தின் மீது அபார பற்று கொண்டவர். அதன் ஒலி பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். தினமும் காலையில் எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் ஒன்றாக மிருதங்கத்தை நமது சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. அடுத்து மிருதங்கம் அதன் தோற்றம் வளர்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தில் சிவபிரானிடமிருந்து எப்படி வாத்தியங்கள் தோன்றின என்ற வரலாறு நமக்குக் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் அர்ஜுனன் மிருதங்கம் வாசித்தது, சங்க இலக்கியத்தில் வாத்தியங்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள், கல்வெட்டு தரும் சான்றுகள் என பிரமிக்க வைக்கும் தகவல்கள் ஓரிழையாகத் தரப்படுகிறது. மிருதங்க வாத்தியம் மரபு வழுவாது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம். இந்தத் தயாரிப்பாளர்கள் எந்த ஊர்களில் இருக்கிறார்கள் என்பதும் தரப்படுகிறது.
தாளத்தினைப் போட்டு பாடல்களைப் பாடும் போது அவற்றிற்குத் துணையாகப் பலவகைத் தாள வாத்தியங்கள் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும், மிருதங்கத்திற்குரிய சொற்கள், கால அளவு மிக நுட்பமாக இங்கு விளக்கப்பட்டுள்ளன. சில சொற்களை மிருதங்கத்தின் இரு புறங்களிலும் வாசிப்பதனால் தான் நாதம் பிறக்கிறது. நாதம் நாதம் நாதம் நாதத்தேயோர் நலிவுண்டாயின் சேதம் சேதம் சேதம்
தாளம் தாளம் தாளம் தாளத்திற்கோர் தடையுண்டாயின் கூளம் கூளம் கூளம் என்ற மஹாகவி பாரதியாரின் கவிதா சொற்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை இந்த நூலாசிரியர் திரு க.தியாகராஜன் தக்க தகவல்களைத் தந்து நிரூபிக்கும் போது இவ்வளவு நுட்பமான நாம் அறிய வேண்டிய ஆழ்ந்த விஷயங்கள் உள்ளனவே என்ற வியப்பு மேலிடுகிறது. சங்கீதப் பயிற்சி கொள்வோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
மிருதங்க சம்பந்தமான தற்போதைய பாட திட்டத்தையும் 1966இல் தோற்றுவிக்கப்பட்டு மிக அருமையாக நடந்து வரும் மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பற்றிய விவரங்களையும் இந்த அத்தியாயம் கூடவே தருகிறது. அடுத்து மிருதங்கம் வாசிப்பு மரபை விவரிக்கும் ஆசிரியர் மிருதங்கம் பற்றி பல மிருதங்க நிபுணர்கள் கூறிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தருகிறார்.
வயலினும் மிருதங்கமும் இல்லாத இசைக் கச்சேரிகளே தற்போது இல்லை. மிருதங்க வாசிப்பில் பாணி, தனித்தன்மைகள் (Different Styles) வேறுபடுகின்றன. முடிவுரையில் பிரபஞ்சம் உள்ள வரை இயக்கங்கள் உண்டு. இயக்கம் உள்ளவரை லயம் உண்டு. லயம் உள்ளவரை ஜீவன் உண்டு. உயிர் உண்டு. லயத்திற்கே உயிர் கொடுக்கும், உருவைக் கொடுக்கும் மிருதங்க இசை மரபானது இசைத்துறைக்கு மட்டுமல்லாது உலகம் மேம்படவே வழிகளைத் தரும் என்று கூறி நூலை முடிக்கிறார் தியாகராஜன். அறிவியல் ரீதியாகத் தரப்பட்டுள்ள சான்றுகளைப் படித்தபின்னர் ஆம் என்று நாமும் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறோம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கூறி இருக்கிறாரே, “ஸொகஸுகா மிருதங்க தாளமு” என்பதில் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பதை நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்வர்.
இந்த நூலுக்குத் தமிழக அரசு தக்க விருதைத் தர வேண்டும்; மத்திய அரசு தக்கபடி இவரை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் இதைப் படிப்போர் மனதில் எழுவது இயல்பே.
இவர் ஆய்வுக்கு தக்க முறையில் ஊக்கம் அளித்த ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலய முதல்வர் திருமதி டாக்டர் லதா வர்மா பாராட்டுக்கு உரியவர்.
இந்த நூல் அனைத்து நூலகங்களையும் சங்கீதத்தில் ஆர்வமுள்ளோர் இல்லங்களையும் அலங்கரித்து, ஏராளமான இசை விற்பன்னர்களை துறை சார்ந்த அறிவுடன் உருவாக்கும் என்று நம்பலாம்.
மொத்தத்தில் நல்ல ஒரு இசைக் கச்சேரியைத் தகுந்த மிருதங்க வாத்தியத்துடன் கேட்டு அனுபவித்த உணர்வை இந்த நூல் தருகிறது. முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
A herb called Apaamaarga is mentioned at least in four hymns of Atharvana Veda(AV). It shows its importance. Magical qualities of this herb make interesting reading. I have given here all the four verses. Let me mention the interesting bits first with my comments:
Apamarga is Achyranthes Aspera; it is Naayuruvi in Tamil according to Wikipedia
Ralph T H Griffith gives the following information in the footnotes: –
What is Apamarga?
It is identified as Achyranthes Aspera, a biennial plant frequently used in incantations, in medicines, in washing linen and in sacrifices, and still believed to have the power of making men proof against the stings of scorpions. It is called also Paraakpushpii, Pratyak Pushpii, and Pratyak parni from the reverted direction of the growth of its leaves, flowers and fruit.
See also AV. IV-19- 4,7; VI-129-3; and VII-65-1
What is the meaning in Sanskrit?
Apaa= with; mrj= to cleanse, wipe.
This hymn is a charm , addressed to the plant endowed with magical virtues to secure immunity from various kinds of evil, and restoration of health.
xxx
MY COMMENTS
The first two mantras praise the virtues of this herb as ‘Conquering’ and ‘Queen of Medicines’. It banishes the curse.
Other mantras in the hymn are about evil spirits, which are driven out by this herb.
Tamils still believe in such things. The most famous Kavasam (armour, shield) in Tamil is on Lord Skanda composed by Devaraya Swamikal. It is recited by all Saivite Tamils. That has a long list of ghosts, fiends, and evil spirits. By reciting this Kavsam, all those evil spirits are driven away. It is an echo of Vedic mantras.
Hanuman Chalisa , the most famous hymn in the North, also considered an antidote for evil spirits; the hymn says ‘Bhuta Pisacha nikata nahim ave’, where Hanuman’s name is recited.
In the olden days even the virus and bacteria were listed as evil sprits. So South Indian Hindus used neem leaves to get immunity from small pox, chicken pox etc. and those neem leaves are considered symbol of goddess.
If the identification of this plant as Nayuruvi in Tamil is correct, then we can add one more interesting point. That herb is used in Navagraha Homa done in all House warming ceremonies. (My comments continues at the end of the hymns.)
HYMN XVII; BOOK 4; AV; SUKTA 119
A charm to secure freedom from various evils
1.We seize and hold thee, Conquering One! the queen of medi- cines that heal. O Plant, I have endowed thee with a hundred powers for every man, 2.Still conquering, banishing the curse, mighty, with thy reverted. bloom. Thee and all Plants have I invoked: Hence let it save us! was my prayer. 3.She who hath cursed us with a curse, or hath conceived a murderous sin, Or seized our son to take his blood, may she devour the child she bare. 4.What magic they have wrought for thee in dish unbaked or burnt dark-red, What they have wrought in flesh undressed,—conquer the sorcerers therewith. 5.Ill dream and wretchedness of life, Rākshasa, monster, stingy hags, All the she-fiends of evil name and voice, we drive away from us. 6.Death caused by famine, caused by thirst, failure of children,. loss of kine, With thee, O Apāmārga, all this ill we cleanse and wipe away. 7.Death caused by thirst, death caused by stress of hunger, loss at play with dice, All this, O Apāmārga with thine aid we cleanse and wipe away.
8.The Apāmārga is alone the sovran of all Plants that grow. With this we wipe away whate’er hath fallen on thee: go in health!
XXXX
HYMN XVIII; BOOK 4; AV
A counter-charm against the incantations of enemies
1.The moonlight equalleth the sun, night is the rival of the day. I make effectual power my help: let magic arts be impotent. 2.Gods! if one make and bring a spell on some man’s house who knows it not, Close as the calf that sucks the cow may it revert and cling to him. 3.When one puts poison in a dish of unbaked clay to kill a man, It cracks when set upon the fire with the sharp sound of many stones. 4.Endowed with thousand powers! adjure the bald and those with necks awry. Back to its author turn the spell like a dear damsel to her friend! 5.I with this Plant have ruined all malignant powers of witchery. The spell which they have laid upon thy field, thy cattle, or thy men. 6.No power had he who wrought the spell: he hurt his foot, he broke his toe. His act hath brought us happiness and pain and sorrow to him- self.
7.Let Apāmārga sweep away chronic disease and every curse, Sweep sorceresses clean away, and all malignant stingy hags.
8.Sweep thou away the sorcerers, all stingy fiendish hags away. All this, O Apāmārga, with thine aid we wipe away from us.
XXXX
HYMN CXXIX; BOOK 6; AV
A charm for success and happiness
1.With fortune of the Sisu tree—with Indra as my friend to aid I give myself a happy fate. Fly and begone, Malignities! 2.That splendour and felicity wherewith thou hast excelled the trees Give me therewith a happy fate. Fly and begone, Malignities 3.Blind fortune, with reverted leaves that is deposited in trees— Give me therewith a happy fate. Fly and begone, Malignities.
XXX
HYMN LXV; BOOK 7; AV
A charm against imprecation and threatened evils
1.With retroverted fruit hast thou, O Apāmārga, sprung and grown. Hence into distance most remote drive every curse away from, me. 2.Whatever evil we have done, whatever vile or sinful act, With thee, O Apāmārga, who lookest all ways, we wipe it off. 3.If with the cripple we have lived, whose teeth are black and nails deformed, With thee, O Apāmārga, we wipe all that ill away from us.
Hymn 18 given above adds interesting details about collecting this plant:-
The plant is collected during night time on full moon days .
Mantra 1 in hymn 18 says: I gather a plant whose efficacy is undoubted, which shall counteract the magical practises of malignant fiends and sorcerers.
In short people believed in its medical and magical qualities. Westerners are affected mentally than any other place. They spend a lot of time and money in counselling. Psychologists make good money in ‘driving away the evil thoughts/spirits. Hindus don’t waste time or money; they are advised to go to temples and breath fresh air and enjoy nature. They get cured within a few months. Westerners spoil the people with lithium tablets. So, mantras like this have more psychological benefits for the patients and the family that looks after the patients.
I taught Tamil at SOAS, University of London, for over 20 years as a part time tutor. I prepared lot of lessons to cater to the students at different levels. I was part of Cambridge University Tamil Examinations at GCSE and A Level and ASSET languages.
I am uploading Tamil lessons prepared over 20 years. Some pictures or tabular columns are from other books or sites. I will explain them as far as possible.
Feel free to contact me for clarfications or tutions.
Here is the First Lesson
Ival Oru Pen; Ival Pusthakam Padikkiraal.
She (is) a girl. She reads (a) book
Note:
இவள் (ஒரு) பெண் ; இவள் புஸ்தகம் படிக்கிறாள்
In Tamil short sentences can be formed without a verb.
in Tamil articles like a or an or the are optional; they are not alwayes used.
xxx
FRUIT SHOP (Picture is at the top)
This (is) a Fruit Shop. He sells fruits
Pazam = Fruit in singular
when you add Kal it becomes plural- Fruits.
In Engish you add S in most of the words.
If I say VirkiraaN= male
If I say virkiraaL = female
If I say VirkiraaR = gender free verb; but respectful.
Vil= to sell
Virkiraar = present tense
Kadai = Shop
Fruit Shop = Pazak Kadai
Ivar = He (with respectful R at the end.
இது ஒரு பழக்கடை ; இவர் பழங்கள் விற்கிறார்.
xxx
These (are) Stones
இவைகள் கற்கள் = Ivaikal Karkal கல்= Kal = Stone கற்கள்= Karkal = Stones இவை = Ivai = These இவைகள்= Ivaikal = These
Adding Kal, we change a word into plural.
xxxx
இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)