வேதங்களில் நாம் அறியாத விநோதக் கதைகள்-Part 2 (Post No.10,593)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,593

Date uploaded in London – –    24 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மந்திர சப்தத்தால் வெற்றி!!

அதர்வண வேதத்தில் நவீன விஞ்ஞானத்தை மிஞ் சும் ஒரு செய்தி உள்ளது. அ தாவது ஒலியைப் பயன்படுத்தி எதிரிகளை வெல்வது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் பிரச்சார மந்திரி கோயபெல்ஸ் தினமும் பொய்ச்  செய்திகளைப் பரப்பி ஹிட்லருக்கு நிறைய வெற்றி தேடித் தந்தார். ஒரு பொய்யைப்  பத்து முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது அவரது சித்தத்தாந்தம் ; இன்று பல அரசியல் கட்சிகள் இதைக் கடைப்பிடித்து மக்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம்.

இது ஒருபுறமிருக்க விஞ்ஞான வசதிகளை பயன்படுத்தி சண்டை போடும் செய்திகளும் வருகின்றன. அதாவது ஒரு நாடு ஒளிபரப்பும் விஷயங்களை மற்றவர்கள் கேட்காமல் இருக்க அந்த ஒளி அல்லது ஒலி பரப்பை ஜாம் JAMMING செய்துவிடுவது . அதாவது அந்த அலைகளை, அறிவியலைப் பயன்படுத்தி அழித்துவிடுவது . இது போல ஒரு செய்தி அதர்வண வேதத்தில் உள்ளது.

இதில் விஞ்ஞானம் எதுவும் இல்லை என்று எண்ணினாலும் இந்த உத்தியை தேவர்கள் கடைப் பிடித்ததிலிருந்து வேத காலத்தில் எவ்வளவு முன்னேற்றம் இருந்தது என்பதை அறியமுடிகிறது . விஷயம் என்னவென்றால் தேவர்கள் சொல்லிய சொற்களில்  அசுரர்கள் குழம்பிப் போனார்கள் ; அதனால் அவர்கள் தோற்று ஓடிப்போனார்களாம் !

இதோ அதர்வண வேத சூக்தம் 721ன் அடிக் குறிப்பு —

இங்கு ஆறு பாடல் உள்ளன. இவை பிராவாஹ்கலிகம் என்று அழைக்கப்படும்  மொழிபெயர்க்கத் தகுதியுடைவனாக இல்லை. புதிராக உள்ளன; இவற்றைக் கூறி தேவர்கள் அசுரர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினர். வேள்வியைச் செய்பவர்களும் இவற்றைக் கூறி எதிரிகளைத் தோற்கடிக்கலாம் என்று RALPH TH GRIFFITH கிரிப்பித் எழுதியுள்ளார்.

ஆனால் ஜம்புநாத ஐயர் தன்னுடைய நாலு வேத மொழிபெயர்ப்பில் இதை மொழி பெயர்த்துள்ளார். சிலேடைப் பொருளில் பார்த்தால் கொஞ்சம் விரசமான – செக்ஸ் SEXY  – பொருளும் தொனிக்கும்

“இரண்டு கிரணங்கள் விசாலமாயுள்ளன. புருஷன் அவற்றை அரைக்கிறான் குமாரியே ! நீ நினைப்பது போல் அது இல்லை”

கடைசி வரி ‘குமாரியே ! நீ நினைப்பது போல் அது இல்லை’ என்று ஆறு மந்திரங்களிலும் அது வரும். உடலுறவுப் பாடல்களைப் போல வரிகள் இருக்கும்.

XXX

எனது கருத்து

இது போல, பல துதிகளை வரிசையாக வைத்து, அவற்றை யாகத்தில் பயன்படுத்தியதாகவும் பிற்கால பிராமண நூல்களில் எழுதி வைத்துள்ளனர். இவற்றின் மறைபொருள் என்ன என்று நமக்கு இன்று தெரியவில்லை. தமிழ்த் திரைப்படப்பாடல்களில் கூட சில  பாடல்கள் இப்படி விரசமான  விளக்கத்துக்கு வழிசெய்கின்றன. நான் எடுத்துக்கட்டுகளைத் தரத் தேவையே இல்லை. வாசகர்களுக்கே தெரியும்

முதல் பகுதியில் “கரக் முறக், தஸ் புஸ்” — மந்திர ஒலிகள் பற்றி எழுதி இருந்தேன் இந்த பொருளற்ற அல்லது பொருள் புரியாத முதல் மூன்று மந்திரங்கள் பிரதிராதா என்று அழைக்கப்படுவதாக அடிக்குறிப்பு சொல்கிறது. இதைச் சொல்லி, அசுரர்களை தேவர்கள் முறியடித்தார்கள் .அதில் 11 முதல் 13 வரையுள்ள மந்திரங்களை ‘பூதேச்சத்’ என்று அழைத்தனர். ‘கண்ணைப் பறிக்கும் ஒளி’ என்பது அதன் பொருளாம்.

முதல் பகுதியில் ‘பிலு ’PIILU என்னும் தாவரம் பற்றியும் உள்ளது. இது சோழ நாட்டில் மலைப்பகுதியில் வளரும் மரம் என்றும்  என்றும் கரேயா ஆர்போரியா CAREYA ARBOREA அல்லது சால்வடோரா பெர்சிகா SALVADORA PERSICA என்ற மரமாக இருக்கலாம் என்றும் அடிக்குறிப்பு கூறுகிறது. 12 ஆவது மந்திரத்தில் நடுங்கும் புறா பற்றிய வரியுடன் இதன் பழத்தை இந்திரன் புறாவுக்கு கொடுத்ததாக வருகிறது. அந்தக் கதை இப்போது இல்லை; வேறு இரண்டு புறாக்கதைதான் உள்ளன என்றும் முதல் பகுதியில் கண்டோம். மொத்தத்தில் பாடல் முழுதும் புரியாத ஒலிகள், புரியாத விஷயங்கள், புரியாத கதைகள் உள்ளன . இவை அனைத்தும் யாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒலிகள் அசுரர்களைக் குழம்பச் செய்து தோல்வியைத் தழுவச் செய்தன.

ரிக் வேத (RV), அதர்வண வேத (AV) மந்திரங்களை இலவசமாக  படிக்கலாம். அனைத்தும் கூகிள் GOOGLE செய்தால் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் அவை உள்ளன.

–subham—

tags- மந்திரத்தால்,  வெற்றி, பிலு, மந்திர சப்தம்,

Leave a comment

Leave a comment