கீதையில் சுவையான சொற்கள் – வேத வாதரதாஹா (Post No.10,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,694

Date uploaded in London – –    26 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் ஆத்ம ஞான விசாரம் செய்கையில் மற்றொரு பக்கம் கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சுவையான சொற்களையும் படித்து ரசிக்க வேண்டும். எதையும் நாளை நாளை என்று ஒத்திப்போடும்  திரு நாளைப் போவார்களுக்கு தீர்க்க சூத்ரீ என்று முத்திரை குத்துகிறார். இதற்கு ‘நீண்ட கயிறு’ என்று பெயர். நாமே இதை கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு மாட்டையோ நாயையோ கட்டிப் போடுபவன்  நீண்ட கயிற்றால் அதைக் கட்டிப்போட்டால் என்ன பயன்? அது  போல எல்லா காரியங்களையும் ஒத்திப் போடுபவன் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது.

நாலாவது அத்தியாயத்தில் ஞானத் தீ, ஞானப் படகு, ஞான தபஸ் என்று பல சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடுகிறார் கிருஷ்ணர்.

இது போல 2-42ல் ஒரு சுவையான சொல் வருகிறது வேதவாத ரதாஹா ; அதாவது வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்று கொண்டு , வேறு எதுவும் இல்லை என்று வாதிடுவதாகும் . கிருஷ்ணனே இதை மேலும் விளக்குகிறார்.

இதைச் செய்தால் உனக்கு

சொர்க்கம் கிடைக்கும் ;

இன்பம் கிடைக்கும் ;

உயர் பதவி கிடைக்கும் ;

தொழிலில்  வெற்றி கிடைக்கும்;

என்றெல்லாம் அறிவீனர்கள் பூப்போன்ற சொற்களை உதிர்த்து இனிமையாகப் பேசுவார்கள் .

கிருஷ்ணர் பயன்படுத்திய சொற்கள் புஷ்பிதாம் வாசம் = பூப்போன்ற சொற்கள்

ப்ரவதந்தி = தொடர்ந்து கதைப்பார்கள் .

இதற்கு ராம கிருஷ்ண பரம ஹம்சர் நல்ல எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.

மாம்பழங்களை சாப்பிடு; தோட்டத்தில் எத்தனை ஆயிரம் மரங்கள், எத்தனை கோடி இலைகள் என்று கணக்கிடுவதில் பயன் என்ன.? தத்துவ வாதங்கள் உன் வாழ்க்கையை மாற்றுமா?

கழுகு ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறது. ஆயினும் அது எந்தக் குழியில் எந்தப் பிணம் கிடக்கிறது என்று கீழ் நோக்கிய வண்ணமாகவே இருக்கும் . அது போல சாஸ்திரங்களைக் கற்றவராராக இருப்பினும் பலர் கீழ் நோக்குடையவராய்ப் பொன் ஆசை, பெண் ஆசை முதலி ய உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவராய் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் உண்மை ஞானத்தைப் பெறுவதில்லை.

ஆதி சங்கரரும் இத்தகையோரை கிண்டல் செய்கிறார். டுக்ருஞ் கரணே என்று இலக்கண விவாதத்தில் கார சாரமாக இரண்டு பண்டிதர்கள் வாதம் செய்ததை பார்த்தவுடன் அவருக்கே சிரிப்பு வந்து விடுகிறது. இவ்வளவு கற்றும் இறுதியில் திண்ணையில் உடகார்ந்து விதண்டாவாதம் செய்வோரிடம் பஜ கோவிந்தம் என்று பஜனை செய்யுங்கள் என்கிறார்.

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

XXXX

பகவத் கீதை 2-42

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

பார்த² = பார்த்தா!
வேத³வாத³ரதா: = வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்
புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்ய = பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்
ந அந்யத் அஸ்தி இதி வாதி³ந: = தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

தயா அபஹ்ருத சேதஸாம் = அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு
போ⁴க³ ஐஸ்²வர்ய ப்ரஸக்தாநாம் = போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: = நிச்சய புத்தி
ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே = சமாதியில் நிலைபெறாது

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.

வள்ளுவனும் சொல்கிறான்

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள்  தொழா அர் எனின் – குறள் 2

–subham—

TAGS – வேத வாத ரதாஹா, புஷ்பிதாம் வாசம், பூப்போன்ற சொற்கள் , பகவத் கீதை 2-42

Leave a comment

Leave a comment