WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,699
Date uploaded in London – – 28 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கரு (DED.1279) என்பது தமிழ்ச் சொல் என்று பர்ரோ , எமனோ உருவாக்கிய திராவிட சொற்பிறப்பியல் அகராதி (DED) கூறுகிறது. அது தவறு. ஒரு சொல் ஐரோப்பிய மொழிச் சொற்களில் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வந்த சொல் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மாதா = மதர் , ப்ராதா = பிரதர் , பிதா =பாதர் என்பன எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் .
DED 1279- KARU
DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY = DED
BY Originally published: 1961
Editor: Murray Barnson Emeneau
கரு என்பது ‘கர்ப்ப’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும்.
இரண்டு பொருள் உடைத்து இந்தச் சொல்.
கரு= கருமை நிறம் BLACK
கரு = சினை , முட்டைக்கு கரு, கர்ப்பம், உட்பொருள், பிள்ளை, குழந்தை பரமாணு, கருமை நிறம் என்று 1935ம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ் அகராதி பட்டியல் இடுகிறது. EMBRYO, CORE, FOETUS
என்னுடைய கருத்து இரண்டுமே ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் .
ஆகையால் நான் சொல்லுவது போல தமிழுக்கும் ஸம்க்ருதத்துக்கும் மூலம் ஒன்றே. அதிலிருந்துதான் உலகின் பழைய மொழிகளான கிரேக்கம், லத்தீன் முதலியன வந்தன.
தொல்காப்பியப்ப பொருளதிகாரத்தில் மட்டும் கருப்பொருள், உரிப்பொருள் என்ற இடத்தில் இதை கர்ப்பம் (தோற்றம், உட் கருத்து) என்ற பொருளில் பார்க்க முடிகிறது.
சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் கருமை, கர்ப்பத்தின் (EMBRYO, FOETUS) மூலம் என்ற இரு பொருளிலும் வருகிறது .
சங்க இலக்கியத்தின் பழைய நூல்களில் ஒன்று புறநானூறு. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்.
புறம் பாடல் 34
பாடியவர்- ஆலத்தூர் கிழார்
சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது
ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழு வாயும் உள என,
நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே
பெண்களின் கருவை சிதைத்தோர்க்கு — என்பது இரண்டாவது வரி. இதில் கரு என்பதும் , சிதை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்
நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. ஆனால் பிரமணர்களையோ, பசுக்களையோ, பெண்களையோ அவமானப்படுத்தியோருக்கு பரிகாரம் உண்டு. இது வால்மீகி ராமாயண (4-34-12) ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பு.
கர்ப்பம் என்ற சொல் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.(ரிக்வேதம் 10-184)
கிரேக்க மொழியில் கார்ப் CARP= FRUIT என்றால் கனி என்று பொருள். இதுவும் பிள்ளை, குழந்தை என்ற சொல்லையும், அதற்கு மூலமான கருப்பப் பையிலுள்ள கருவையும் தொடர்பு படுத்துகிறது..
கரு என்பது மருவி ஆங்கில, பாஸ்க் மொழிகளில் கூட CORE கோர் என்று இருக்கிறது.
அவை அனைத்துக்கும் மூலம் கர்ப்ப. (GARBHA)
GARBHA- CORE- CARP(Gk)- KARU (Tamil)
கர்பரக்ஷகாம்பிகை எழுந்து அருளும் கோவிலுக்குக்கூட திரு கருகாவூர் என்றே பெயர்!
கீழே உள்ள இணைப்புகளையும் காண்க
Garba = karu
The Vedic texts have many passages, where the hymn solemnizes the desire for having a child, without specifying the gender of the child. For example, the Rigveda in section 10.184 states,[2]
विष्णुर्योनिं कल्पयतु त्वष्टा रूपाणि पिंशतु । आ सिञ्चतु प्रजापतिर्धाता गर्भं दधातु ते ॥१॥
गर्भं धेहि सिनीवालि गर्भं धेहि सरस्वति । गर्भं ते अश्विनौ देवावा धत्तां पुष्करस्रजा ॥२॥
हिरण्ययी अरणी यं निर्मन्थतो अश्विना । तं ते गर्भं हवामहे दशमे मासि सूतवे ॥३॥
May Vishnu construct the womb, may Twashtri fabricate the member, may Prajapati sprinkle the seed, may Dhatri cherish thy embryo;
Sustain the embryo Sinivali, sustain the embryo Saraswati, may the divine Aswins, garlanded with lotuses, sustain thy embryo;
We invoke thy embryo which the Aswins have churned with the golden pieces of Arani (firewood), that thou mayest bring it forth in the tenth month.
— Rig Veda 10.184.1 – 10.184.3, Translated by HH Wilson[6]
மனு ஸ்ம்ருதி, மஹாபாரதம் முதலிய நூல்களில் பல இடங்களில் வருகிறது
XXXX
South Dravidian etymology :
Proto-South Dravidian : *karu-
Meaning : foetus
Dravidian etymology: Dravidian etymology
Tamil : karu
Tamil meaning : foetus, embryo, egg, germ, young of animal
Tamil derivates : karuppai womb; karuvam foetus, embryo
Malayalam : karu
Malayalam meaning : embryo, yolk
Malayalam derivates : karuntala generation
Kannada : kandu
Kannada meaning : foetus of beasts
Proto-Nilgiri : *karv
Number in DED : 1279
XXXX
| Basque | core | ||
| Belarusian | ядро | ||
| Irish | croí | ||
| Italian | nucleo | ||
| Latvian | serde | ||
| Lithuanian | šerdis | ||
| Luxembourgish | Kär | ||
| Corsican | core | ||
கருமை BLACK என்பதும் கலி , காளி , கலியுகம் KALI, KAALI, KALI YUGA (இரும்பு யுகம்) என்ற சம்ஸ்க்ருத மூலத்துடன் தொடர்புடையனவே
–SUBHAM –
DED1279, KARU, CORE, CARP, GARBHA, கரு, கர்ப்பம், தமிழ், சொல், சம்ஸ்க்ருத,