வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி! (10,619)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,619
Date uploaded in London – – 2 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!
நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி!
ச.நாகராஜன்

வள்ளுவரின் குறளை தினமும் ஓதி உணர்தல் வேண்டும். அப்போது
நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) என்பது என்ன என்று தெரியும்.
நல்ல செய்கை, தீய செய்கை பற்றிச் சொல்ல வருகிறார் வள்ளுவர்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை
(குறள் 469 – தெரிந்து செயல் வகை அதிகாரம்)
நன்று ஆற்றல் என்பது பொதுவாக எல்லோருக்கும் கொடுத்தலையும் எல்லோரிடமும் இன்சொல் பேசுவதையும் குறிக்கும்.
ஆனால் அதைக் கூடப் பார்த்துச் செய் என்கிறார் வள்ளுவர்.
ஒவ்வொருவருடைய பண்பு அறிந்து பின்னர் ‘நன்று ஆற்றலை’க் கடைப்பிடி என்கிறார் அவர்.
ஒருவர் பெறுவதற்கு உரியர் அல்லார் எனில் கொடுக்காதே; இன்சொல் பேசாதே என்பது அவரது அறிவுரை.
அப்படி நல்ல செய்கையிலும் கூட தவறு உண்டு – பார்த்துச் செய்யாவிட்டால்!
ஒவ்வொரு சிறு செய்கையிலும் கூட உன்னிப்பாக நமது கவனம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி!

ஆகவே இனிய உளவாக இன்னாத கூறல் (குறள் 100) கனி இருக்க காயை நுகர்வது போல என்று சொன்னாலும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும், எவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இரு என்கிறார் வள்ளுவர்.

இனி அடுத்து நல்ல செய்கையை விடுத்து கேட்டிற்கு வருவோம்.
இப்போது பார்க்க வேண்டிய குறள் 796. (நட்பு ஆராய்தல் அதிகாரம்)
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
கேடு என்பது அளக்கும் ஒரு கருவி என்கிறார் வள்ளுவர்.
கேட்டிலும் கூட பெறக் கூடிய ஒரு நல்லறிவு உண்டு.
நமது நண்பர்களை எப்போது அளப்பது? எப்படி அளப்பது?
கேடு வரும் காலை எவன் ஒருவன் நமக்கு உதவிக்கு வருகிறான் என்று பார்.
நல்ல காலத்தில் கூட இருப்பவர் ஆயிரம் பேர்.
ஆனால் கெட்ட காலத்தில் உடுக்கை இழந்தவன் கை போல எவன் வருகிறான் – அவனே நண்பன்!
ஆக கேடு கூட ஒருவகையில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு உதவி செய்யத் தான் செய்கிறது.

சரி, தவறு என்பதை எப்போதும் கவனிக்க வேண்டுமா?
இல்லை, ஐயா, கணவன் – மனைவி உறவு என்பது வேறு.
தலைவன் – தலைவி கூடும் போது உள்ள காதல் அகராதி வேறு.

வள்ளுவர் கூறுகிறார்:
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் குறள் 1286இல்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

கணவனைப் பார்க்கும் போது அவனிடம் ஒரு தவறு கூட இல்லை; தவறைப் பார்க்கவே முடியாது. அவனுடன் இன்பமாய் இருப்பது தவிர வேறொரு நினைப்பும் கிடையாது.
ஆனால் அவன் சற்று வேறிடம் சென்று விட்டால் அவனிடம் நினைப்பதற்கு ஒரு நல்லது கூட இல்லை. எல்லாம் தவறாய்த் தான் தெரிகிறது!
என்ன விசித்திரம்!!
தவறில் கூட அகராதியில் பொருள் வேறு படுகிறது.
உறவெல்லாம் கணவன்-மனைவி உறவு போல ஆகுமா?
இன்னும் 1154, 1321, 1325 ஆகிய குறள்களில் வரும் ‘தவறு’ குறள்களையும் ஒரு பார்வை பாருங்களேன்!

இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு (குறள் 1321 ஊடல் உவகை அதிகாரம்)
தோழி கேட்கிறாள் : ஏன் இப்படி உன்னவரை இப்படித் தவறாகச் சொல்கிறாய் என்று.
பதில் வருகிறது தலைவியிடமிருந்து : “அவரிடம் தவறு இல்லை. என்றாலும் கூட இப்படி தவறு என்று சொல்வதால் அவர் தரும் இன்பம் பேரின்பம் ஆக இருக்கிறதே” ஆகவே ஊடுதல் சரியே. அது பின்னால் கூடும் போது எல்லையற்ற இன்பத்தை அல்லவா அளிக்கிறது!” – இதுவே தலைவியின் பதில்!

தவறு இலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து
(குறள் 1325 ஊடல் உவகை அதிகாரம்)

தலைவி வேண்டுமென்றே தலைவனிடம் சிறிதோ பெரிதோ ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகிறாள்.
தலைவன், அங்கு பேசவா முடியும்!
ஊடலுக்கு ஒரு காரணம்.
பேசாமல் இருப்பது மென் தோள் வீழ்வாரது வழி.

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு
(குறள் 1154 – பிரிவு ஆற்றாமை அதிகாரம்)

உன்னைப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்று பார்த்த முதல் நாளே சொன்னவர் தாமே பிரிந்து சென்றால், அவருக்குத் தான் தவறே அன்றி அதை உண்மை என்று நம்பியவர்க்கு தவறு (குற்றம்) உண்டோ?
யாரிடம் இருக்கிறது தவறு?

ஆக இப்படி வள்ளுவரை ஊன்றி அவர் சொல்லும் சொற்களின் கூடவே சென்றால் நாம் பெறுவது பேரின்பம்.
பல அகராதிகளை நாம் அவரிடம் காண்கிறோம். அத்தனையும் உண்மையான அகராதிகளே!


tags– வள்ளுவர் , ஊடல்-கூடல்,  அகராதி

சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2 (Post No.10,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,618

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2

நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் .  அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.

இதோ மேலும் சில மரம் விஷயங்கள்

காளிதாசன் நூல்கள்

மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_

காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.

இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது 

இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)

xxx

ரகு வம்சம் 17-12  பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–

மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.

“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார்.  இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.

சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்

XXX

வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்

சங்க இலக்கிய நூல்கள்

புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்

புற நானூறு   199  – மகா பத்மன் – கடவுள் ஆலம்

“காமர் நெஞ்சம்  ஏமாந்து உவப்ப

ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்

வேல் கெழு குருசில் “

பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,

“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..

என்று பாடுகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்

Xxxx

குறுந்தொகை 87- கபிலர் பாடியது  — மரத்திலுள்ள கடவுள் கொடியோருக்கு துன்பம் கொடு ப்பார்.

கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடலில்

“மன்ற மரா அத்த பே எ முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூ உ மென்ப யாவதும்

கொடியரல்ல ரெங்குன்று கெழு  நாடர்” — பாடல் 87

என்பார்

பொருள்-

பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை  வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்

கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்

அக நானூறு 70-  கடுவன் மள்ளனார் பாடல் – ஆல  மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.

xxx

நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்

நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது

இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’   உள்ளது

சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..

இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது

–subham—

tags- சங்க இலக்கியத்தில், மர வழிபாடு,

பகவத்கீதை சொற்கள் INDEX-41; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-41(Post No.10,617)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,617

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-41; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-41

நஹ  1-32  இல்லை

நாகானாம் 10-29  பாம்புகளுள்

நானா பாவான் 18-21 வெவ்வேறான ஆன்மாக்களை

நானாவர்ணா க்ருதீனி 11-5 பல நிறங்களும் வடிவங்களும் உடைய

நானாவிதானி  11-5  v பல வகையான

நானாசஸ்த்ர ப்ரஹரணாஹா 1-9 பல  ஆயுதங்களை ஏந்தியவர்

நான்யகாமினா 8-8 வேறு ஒன்றை நாடாத

நாமயக்ஞைஹி 16-17 பேர் மட்டில்

நாயகாஹா 1-7 நாயகர்கள், தலைவர்கள்

நாரதஹ 10-13    நாரத மஹரிஷி   —10 words

நாரீணாம்  10-34 – பெண்களுள்

நாவம்-  2-67  படகு

நாசனம் 16-21   நாசம் விளைவிக்கும்

நாசயாமி 10-11  அழிக்கிறேன்

நாசாய 11-29  நாசம் அடைவதற்கு

நாசிதம் 5-16 அழிந்ததோ

நாஸ அப்யந்தர சாரினவ் 5-27

நாசிகாக்ரம் 6-13  மூக்கின் நுனியில்

நிகச்சதி 9-31 அடைகின்றான்

நிக்ருஹீதானி  2-68  அடக்கப்பட்டிருக்கின்றதோ – 20 words

நிக்ருஹணாமி 9-19  தடுக்கிறேன்

நிக்ரஹம் 6-34  அடக்குவது

நிக்ரஹக   3-33 தடையானது

நித்யஜாதம்  2-26 மீண்டும் பிறப்பதாகவும்

நித்ய திருப்தஹ  4-20 எப்போதும் திருப்தி உடையவன்

நித்ய யுக்தஸ்ய 8-14 ஒருநிலைப்பட்ட யோகிக்கு

நித்ய யுக்தஹ 7-17   என்றும் வழுவாத யோகம் பூண்டு

நித்ய வைரிணா 3-39 நித்திய சத்ருவினால்

நித்யசஹ  8-14 நெடிது

நித்ய சத்வஸ்தஹ —2-45  எப்போதும் சத்துவத்தில் இருப்பவன்—- 30

நித்ய சந்யாசீ  5-3 நித்திய சந்யாசீ

நித்யஸ்ய 2-18 நித்தியத்தி னுடைய

நித்யம் 2-21  நித்யமானதாகவும், மாறுதல் இல்லாதது

நித்யஹ 2-20 நித்தியமானது; இறவாதது

நித்யாபியுக்தானாம் 9-22 நிலைபெற்ற யுக்தர்களுடைய

நித்ரா ஆலஸ்ய பிரமாத உத்தம் 18-39   தூக்கம், சோம்பல், மதியீனம் ஆகியவற்றிலிருந்து தோன்றும்

நிதனம்   —  3-35   மரணம்

நிதானம் 9-18 களஞ்சியம் , பொக்கிஷம்

நிந்தன்தஹ 2-36 நிந்திப்பவர்களாய்

நிபத்தஹ  18-60 — கட்டுண்டவனாய் ———40

நிபத்னந்தி 4-41 கட்டுப்படுத்துதல்

நிபத்னாதி 14-7 கட்டுகிறது , பந்தத்தில் ஈடுபடுத்துகிறது

நிபந்தாய  16-5  பந்தத்திற்கும்

நிபந்த்யதே  4-22 கட்டுப்படுவது

நிபோத 1-7 கவனி

நிமித்தமாத்ரம் 11-33  ஒரு கருவியாக, ஒரு காரணமாக மட்டும்

நிமித்தானி 1-31 சகுனங்கள் , அறிகுறிகள்

நிமிஷன்  5-9  கண் மூடினாலும், இமைத்தாலும்

நியதாமானஸஹ  6-15  அடங்கிய மனமுடைய

நியதஸ்ய 18-7   நித்தியம், தினசரி  ……. 50 words

நியதம் 1-44   நிலையான

நியதாத்மபிஹி  8-2 தன்னடக்கம் பெற்றவரால்

நியதாஹாராஹா  4-30  அளவான உணவை உண்பவரா க

நியதாஹா 7-20   கட்டுண்டு, கட்டுப்பட்டு       –54 words

54 words are added in this part 41 of Gita Word Index in Tamil

Xxx subham xxx

Tags – Gita word index 41

14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில் (Post No.10,616)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,616
Date uploaded in London – – 1 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!
ச.நாகராஜன்

14 கேள்விகள்.
ஒரே ஒரு சொற்றொடரில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியுமா?
முடியும்.
சம்ஸ்கிருதம் என்னும் விந்தையால் மட்டுமே முடியும்!

ஒரே ஒரு கவிதையைப் பார்ப்போம்:

கிம் த்ருஷ்ணாகாரி கோத்க்ரயசரணமஹோ ரௌதி க: காந்திகாஞ்சி:
கோபஸ்மாரி புஜங்கே கிம் கலிஷமனம் த்வார்யசம்போதனம் கிம் |
கா சுந்தர்யாமபோந்து: கதமசலப்ருத: கா ச சம்புத்தரக்னேர்
பீஜ கிம் காவநீஜாரமணமதிஹரா ஹேம சாரங்க லீலா ||
இதில் 14 கேள்விகள் கேட்கப்பட்டு விடையாக கடைசியில் ‘ஹேம சாரங்க லீலா’ என்ற சொல் தொடர் வருகிறது.

கேள்வியையும் விடையையும் பார்ப்போம் :

பேராசை எதைப் பெற்றது? – ஹேம – தங்கத்தை
தேரின் சக்கரம் எப்படி இருக்கிறது? – சாரம் – சாரத்துடன் – சாரக் கம்பிகளுடன்
யார் அதிகமாகப் பேசுகிறார்? – கலி – தொண்டை கிழியப் பேசுபவர்
கடலைச் சுற்றி எது உள்ளது? – இலா – பூமி
வலிப்பு வந்தவனுக்கு என்ன வரும்? – லாலி – வாயிலிருந்து நுரை
பாம்பில் என்ன உள்ளது? – கரம் – விஷம்
சண்டையைத் தீர்ப்பது எது? -சமா – சமாதானம்
ஒரு பிரபு எப்படி அழைக்கப்படுகிறார் – ஹே – ஹே என்று
ஒரு அழகியிடம் என்ன இருக்கிறது? – லீலா- உல்லாச கேளிக்கைகள்
சந்திரன் எப்படி உள்ளது? – மாலி – கறுப்பு நிற களங்கத்துடன்
மலை எப்படி இருக்கிறது – சாக – மரங்களுடன்
அக்னி எப்படி அழைக்கப்படுகிறது – ராம்– தீ என்று
பீஜ மந்திரம் எது? – ராம
எது சீதையின் கணவனை ஈர்த்தது? – ஹேம- சாரங்க – லீலா – தங்க நிற மானின் விளையாட்டு
இதில் முக்கிய சொற்றொடர் ஹேம சாரங்க லீலா.
இது பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டு 14 கேள்விகளுக்கும் விடையை அளிக்கிறது.
என்ன ஒரு மொழி? எப்படிப்பட்ட விந்தை, ஜாலம்!

What has greed procured? – Hema – Gold
How is the wheel of the chariot? – Saram – With spokes
Who talks much – gali – full-throated one
What is the girdle of the sea? – ila – earth
What happens to one in epilepsy? – lali – froth in the mouth
What is in a snake? – garam – poison
What subdues quarrels? – sama – conciliatory conduct
How is a noble person addressed? – he, – oh
What is found in a charming woman? – hela – amorous sport
How is the moon? – mali – with black spot
How is a mountain? – Saga – with trees
How is fire addressed? – ram – fire
What is the Bijamantra – Rama
What captivated the mind of Sita’s husband? – hema – saranga – lila. -The sport of a golden deer
(ஆங்கில மொழியாக்கம் திரு A.A.R)

அருமையான இது போன்ற கவிதைகள் ஆயிரக்கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. படித்து ரசிப்போம்; சம்ஸ்கிருத விந்தையைப் போற்றுவோம்!


tags – 14 கேள்விகள், ஒரேபதில்,