WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,718
Date uploaded in London – – 6 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சங்க காலத்திலேயே பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் நாடு எங்கும் வசித்தது புலவர்களின் பெயர்களிலிருந்து தெரிகிறது. இது தவிர கல்வெட்டுகள், செப்பேடுகளில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. முதலில் முது பெரும் அறிஞர், வரலாற்று ஆசிரியர் டாக்டர். இரா. நாகசாமி தரும் தகவல்களைத் தருகிறேன் :
புத்தகத்தின் பெயர் – யாவரும் கேளிர் , எழுதியவர் டாக்டர். இரா. நாகசாமி, 1973, வாசகர் வட்டம், சென்னை-17
“அகத்தியர், கவுண்டின்யர் தலைமையில் பிராமணர்கள் வந்தனர். இவர்கள் வேறுகுடிகளோடு வந்தனர்.அசோக மாமன்னன் பவுத்த சமயத்தைப் பரப்புவதற்கு இலங்கைக்கு, ஆட்களை அனுப்பியபோது இலங்கையில் அந்தணர் இருந்தனர்; அவர்களில் பலரும் பவுத்த மதத்தைத் தழுவினர் என்று அந்நாட்டு நூல்களிலிருந்து அறிகிறோம்.. பிராமணப் பெண்கள் பிராகிருத மொழி பேசினர் .
சங்க காலத்திலேயே பல கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் வசித்ததை சங்க இலக்கியயனங்களிலிருந்து அறிகிறோம்.
கவுண்டின்யர்,
வாதுளர்
கோசிகர்
ஆத்ரேயர்
காசியபர்
ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தோர் தமிழ்நாட்டில் வசித்தனர்.
சுமார் கிபி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்திலும் ஆந்திரத்திலும் 32-க்கும் மேற்பட்ட கோத்திரங்களை சேர்ந்தோர் வசித்தது செப்பேடுகளில் இருந்து தெரிகிறது.
அந்த கோத்திரங்கள் பின்வருமாறு:
சாண்டில்ய, ஆவிஷ்ட, கவுண்டின்ய , ஹரித
பாரத்வாஜ, ஆத்ரேய, சாவர்ணி, லோஹித ,
கெளதம , கெளசிக , மெளத்கல , வாசிஷ்ட,
தாராயண , வத்ஸ, சாங்கிருத்யாயன , கார்க்க
பராசர, விஷ்ணுவிருத்த, மாஷல , அக்நிவேச்ய ,
காச்யப, ரதீதர , காமக , சாங்கர்ஷ,
கண்வ, மாத்தர , குத்ஸ, சாலவத,
வாதூல பவுரு குத்ஸ, கபி , ஜாதகர்ண
XXX
பாண்டியரின் ஸ்ரீவரமங்கலம் செப்பேடு பார்கவ கோத்திரத்தையும் தளவாய்புரம் செப்பேடு வான கோத்திரத்தையும் குறிக்கின்றன .
XXX
சூத்திரங்கள்
அந்தணர்களின் அன்றாட வாழ்க்கையை கிருஹ்ய சூத்திரங்கள் என்ற நூல்கள் கட்டுப்படுத்துகின்றன . இவற்றில் பல கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவது உண்டு.
இச்சூத்திரங்கள், இயற்றிய முனிவரால் பெயர்பெற்றன பல்லவர் காலத்தில்
ஆபஸ்தம்ப,
பிராவசன
வாஜசனேயி
ஹிரண்யகேசி
பவிஷ்ய
சந்தோக
கலாராச்ய
காலார்ச்ச
அக்னிவேச்ய
முதலிய சூத்திரங்களைப் பின்பற்றினோர் இருந்தனர் என்பதை காசாக்குடி, புல்லுர் முதலிய செப்பேடுகளால் அறியலாம்.
ஸ்ரீவரமங்கலம் செப்பேடு ஆச்வலாயன சூத்திரத்தைக் குறிக்கிறது
பாண்டியர் செப்பேட்டில் பெளதாயன கல்பத்தைச் சேர்ந்தவர் குறிக்கப்படுகிறார்.
தமிழகத்தில் ஆபஸ்தம்பம் , போதாயனம் , ஆச்வலாயனம் ஆகிய சூத்திரங்கள் இன்றுவரையிலும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகின்றன
XXX
நான் கண்ட விஷயங்கள் :–
இனிமேல் நான்கண்ட விஷயங்களைத் தருகிறேன்.
சங்க இலக்கியப் புலவர்கள் தங்கள் பெயர்களுடன் பெருமையாக கோத்திரப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர் . இதோ சில எடுத்துக் காட்டுகள்:-
தொல்காப்பியரும், காப்பியாற்றுக் காப்பியனாரும் கபி என்னும் காவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்
தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் செப்புகிறார்.
பாலைக் கெளதமனார் – கெளதம கோத்ரம்
செல்லூர் கோசிகன் கண்ணன் – கெளசிக
பெருங் கெளசிகனார் , இளம் கெளசிகனார் – கெளசிக
கள்ளில் ஆதிரையனார், தங்கால் ஆத்ரேயன் – ஆத்ரேய
கொடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் – வாதூல
கார்க்கியார் – கார்க்ய
மதுரை கவுணியன் பூதனார் – கவுண்டின்ய
ஆமூர்க் கோதமன் சஹதேவன் – கெளதம கோத்ரம்
இவர்களைத் தவிர கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சுமார் 20 பிராமணப் புலவர்கள் தங்கள் கோத்திரங்களை வெளியிட வில்லை.
நச்சினார்க்கினியர் என்னும் உரை ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர்தான் தமிழில் அதிக உரைகளை நமக்கு எழுதிவைத்தவர். அவர் எழுதிய ஒவ்வொரு உரை முடிவிலும் தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் எழுதிய உரை என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்.
–SUBHAM—
tags- சங்க இலக்கியம், கோத்ரம், சூத்திரம், பட்டியல், பிராமணர், பார்ப்பனர் .