இந்தியாவின் சாதனை – தட்பவெப்ப குறியீடு- பத்தாம் இடம் (Post No.10,824)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,824

Date uploaded in London – –     9 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 31-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய பத்தாவது இறுதி உரை

10

இந்தியாவின் சாதனை – மூன்றாவது தடவையாக பத்தாம் இடத்தைத் தக்க வைத்திருக்கிறது!

க்ளைமேட் சேஞ்ச் பெஃர்பார்மன்ஸ் இண்டெக்ஸ் (Climate change Performance Index) எனப்படும் தட்பவெப்ப மாறுதல் செயலாக்கக் குறியீடு என்பது உலக நாடுகள் எந்த அளவு செயல்திறனுடன் செயல்பட்டு தட்பவெப்ப நிலையைச் சீராக வைக்கப் பாடுபடுகிறது என்பதற்கான குறியீட்டு எண் ஆகும்.

இதில் மூன்றாவது முறையாக இந்தியா பத்தாம் இடத்தைத் தக்க வைத்துப் புகழை அடைகிறது.

சமீபத்தில் க்ளாஸ்கோவில் 2021 அக்டோபர் 2021 முதல் நவம்பர் 13ஆம் தேதி முடிய  நடைபெற்ற (Glasgow 31-10-2021 – 13-11-2021)நடந்த COP26 உச்சி மாநாட்டில் இந்தத் தகவல் வெளியானது.

தட்பவெப்பம் பற்றிய மாநாட்டில் 26வது முறையாக நடப்பதால் இது

COP26 என்று அழைக்கப்பட்டது.

இந்தக் குறியீட்டின் படி எந்த நாடும் முதல் தரத்தை எட்டவில்லை என்பதால் முதல் மூன்று இடங்களை யாரும் பிடிக்கவில்லை.

சீனா 37ஆம் இடத்தில் இருக்க அமெரிக்கா 55ஆம் இடத்தில் இருக்க இந்தியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2006 ஆம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்படும் இந்தத் தரக் குறியீட்டு எண் 60 நாடுகளின் தரப் பட்டியலையும் 27 யூரோபியன் யூனியன் நாடுகளின் தரப்பட்டியலையும் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

450 நிபுணர்கள் இந்தத் தர நிர்ணயத்தைச் செய்து அறிவிக்கின்றனர்.

கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், ஓஜோன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இவற்றின் வெளிப்பாடு க்ரீன்ஹவுஸ் கேஸ் எமிஷன் (Greenhouse gas emission) என்று சொல்லப்படுகிறது.

இதில் ‘நெட் ஜீரோ’ (Net Zero) என்ற நச்சு இல்லவே இல்லாத நிலையை அடைய உலக நாடுகள் பாடுபட்டு வருகின்றன.

இந்த க்ரீன் ஹவுஸ் வாயுக்களினால் ஓஜோன் உரையில் துளை விழும் அபாயம் ஏற்பட்டு விட்ட நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உலகளாவிய அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன.

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் வளி மண்டலத்தின் ஒரு முக்கியப் பகுதியான ஓஜோன் உறையைக் காக்க கங்கணம் பூண்டுள்ளதால் இந்தப் பத்தாம் இடத்தை நாம் தக்க வைத்துள்ளோம்.

டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் இடங்களில் உள்ளன.

இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து நச்சு வாயுக்களைக் கட்டுப்படுத்துவோம். முதல் இடத்தைப் பிடிப்போமாக.

***

TAGS-  இந்தியா, தட்பவெப்ப குறியீடு,  பத்தாம் இடம் 

Leave a comment

Leave a comment