அவள் ஒரு சிறுக்கி! அவன் ஒரு சிறுக்கன் !! (Post No.10844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,844

Date uploaded in London – –    14 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தற்காலத்தில் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தும் போது அவள் ஒரு சிறுக்கி என்று சொன்னால், அவளுடைய காலில் அணிந்த பொருள் நம் முகத்திலோ தலையிலோ விழும். ஏனெனில் இப்போது அது ஒரு கெட்ட வார்த்தை (Rude word). ஆனால் 300, 400 ஆண்டுகளுக்கு முன்னால் கமலா ஒரு சிறுக்கி, விமலா ஒரு சிறுக்கி என்று சிறு பெண்களைப்பற்றி நாம் பேசலாம்.

ஒரு மொழியில் எழுத்துக்களும் பொருளும் எப்படி காலப்போக்கில் மாறும் என்பதற்கு தமிழ் மொழியிலேயே உதாரணங்களைக் காட்டினேன். சங்க காலத்தில் பாண்டில் என்றதை சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் பண்டி என்று எழுதினார். இன்று நாம் குதிரை வண்டி, மாட்டு வண்டி என்று சொல்லும் பொது ப= வ ஆக மாறிவிட்டிருக்கிறது .

இது தெரிந்தும் தெரியாமல் போல நடித்த கால்டு வெல்களும் , பர்ரோக்களும், எமனோக்களும் அண்டப்புளுகு , ஆகாசப்புளுகுகளை அள்ளி வீசி இருக்கின்றனர். தமிழ் மொழியில் மட்டுமின்றி  மாற்றங்கள் அவஸ்தன் , கிரேக்க மொழியிலும் இருப்பதால் அவர்களுடை திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் அயோக்கிய வாசகம் என்பதும் தெளிவுபடும்.

இது பற்றி சென்னை பல்கலைக்கழக தமிழ் அறிஞர் டாக்டர் ஆர்.பி சேதுப்பிள்ளை 1943-44ல் ஆங்கிலத்தில் எழுதியதைக் காண்போம் :-

பழந் தமிழில் ஒரு பையனை சிறுவன், சிறுக்கன் என்றும் ஒரு சிறு பெண்ணை சிறுவி , சிறுக்கி என்றும் அழைத்தனர். இன்று நாம் சிறுவன் , சிறுமி என்றே பயன்படுத்துகிறோம்.

சிறுக்கி என்பதற்கு கெட்ட பொருள் வந்து விட்டது . அதைப் பயன்படுத்த முடியாது.

இப்போது  நாம் பயன்படுத்தும் சிறுமி நல்ல தமிழ் இல்லை. அது கொடுந் தமிழ் பேசும் குட நாட்டிலிருந்து வந்தது என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் எழுதுகிறார்.

ஆக சிறுக்கி, சிறுவி என்ற நல்ல தமிழ்ச் சொற்கள் தோற்றுப் போய் கொடுந் தமிழ் வெற்றி பெற்றுவிட்டது என்றும் சேதுப்பிள்ளை விமர்சிக்கிறார்.

xxx

எனது கருத்து

நல்ல சொற்கள் கெட்ட அர்த்தம் பெறும் என்பதற்கு மணம் (smell, fragrance) என்ற சொல்லே போதும். இதற்கு தமிழில் உள்ள சொல் நாற்றம். ஆனால் இன்று நாற்றம் அடிக்கிறது என்றால் துர் நாற்றம் என்றே பொருள்.

இதை விட வேடிக்கையான விஷயம் இலங்கைத் தமிழ் பாஷையில்  மணக்கிறது என்றால் துர் நாற்றம் வீசுகிறது என்று பொருள். தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஹோட்டலுக்குள்ளோ, சமையல் அறையிலோ நுழைந்து நல்ல மணம் வீசுகிறது என்றால் அதன் பொருள் நறு மணம் ; நல்ல வாசனை!!

ஒரு இலங்ககைத் தமிழ் பெண்மணிக்கு, ஆஸ்பத்திரியில் மொழி பெயர்க்கச் சென்றேன். குழந்தைக்கு என்ன என்ன பிரச்சினைகள் என்று டாக்டர் கேட்டார். எல்லா தாய்மார்களும் சொல்லும் வழக்கமான பல்லவி வந்தது– நல்லா சாப்பிட மாட்டேங்கறது ; வேறு என்ன? டாக்டர் கேட்டார். சிறுநீர்/ மூத்திரம் போனால் மணக்குது என்றார் அப்பெண்மணி.

மதுரையில் செந்தமிழ் பேசிய எனக்கு திகைப்பு; மொழி பெயர்ப்பதற்கு முன்னால் நீங்கள் ஸ்மெல் smell அடிக்கிறது என்கிறீர்களா? என்றேன் அப்பெண்ணும் ஆமாம் ஒரே ‘ஸ்மெல்’ என்றார் .

நான் பிரயோகித்த ஸ்மெல் smell என்பதும் தவறான பிரயோகம். ஸ்மெல் என்றால் கெட்ட ஸ்மெல் என்று ஆங்கிலத்தில் அர்த்தம் இல்லை. அது நல்ல ஸ்மெல் அல்லது கெட்ட ஸ்மெல் ஆக இருக்கலாம். ஆக அது இந்தியன் இங்கிலீஷ்

அல்லது எங்கள் மதுரைத் தமிழ் ஆசிரியர் வி ஜி சீனிவாசன் சொல்லுவது போல TANGLISH டாங்கிலீஸ் (டமில் +இங்கிலீஷ்)

நடு சென்டர் , கேட் வாசல் , அசால்ட்டா நின்றான் etc

XXX

இதோ டாக்டர் சேதுப்பிள்ளை தரும் உதாரணங்கள் :-

ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் – பெரியாழ்வார் 1, 4, 7

சிறுக்கிகள் உறவாமோ – திருப்புகழ் 145

சிறுவி = மகள் – சூடாமணி நிகண்டு

XXX

எனது ஆராய்ச்சி :–

வ = ம ஆகும் என்பதற்கு எனது 200 மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் உதாரணம் காட்டினேன்.

இங்கும் சிறுவி= சிறுமி ஆகிவிட்டது ! வி =மி

முந்தைய எடுத்துக்காட்டுகள் :

புவி= பூமி ; வண்டோதரி= மண்டோதரி; விருகம் =மிருகம் (திருவாசகம்); விழுங்கு= முழுங்கு; பிற மொழிகளில் : ஸ்வப்ன = சோம்னாம்புலிசம் SWAPMA= SOMNAMBULISM ; கோமணம் =கோவணம் /கெளபீனம்.

சிறுமி – கலித்தொகை 65-16

சிறுவன், சிறுவர்- சுமார் 15 இடங்கள்

சிறுவீ – சிறிய என்ற பொருளில் வந்துள்ளது.

சிறுமியர்கள் – சிலம்பு 17-28-2

சிறுவியர் – சிலம்பு 4-53

ஆக வேற்று மொழியின் தாக்கம் இல்லாமலேயே வண்டி, சிறுமி மாறி வந்திருப்பதைக் காண்கிறோம். அது ஸ்வ ப்பன= சோமனா ம்புலிசம் சொற்களில் இருப்பதையும் காண்கிறோம் . Burrow, Emeneau, Caldwell

கால்டுவெல்களையும், பர்ரோ – எமனோக்களையும் ஒதுக்கிவிட்டு நாம் நமது ஆராய்சசியைத் தொடர்வோம் .

Xxsubhamxx

tags– சிறுவி, சிறுமி , சிறுவன், சிறுக்கன் , சிறுக்கி

Leave a comment

Leave a comment