EB ஆபிஸர் : வாழைபழம் என்னபா விலை? செத்தான்டா குமாரு! (Post.10,856)

Compiled  BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,856

Date uploaded in London – –   17 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானப் (பழ )மொழிகள் -34


by kattu kutty

படிச்சிட்டு சிரிக்க கூடாது

 வாழைப்பழம் : முதல் பகுதி


ஒரு Electricity Board Office, வெளியில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…

*EB ஆபிஸர் :* வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி :* சார், பழத்தை எதுக்கு வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் விலை செல்ல முடியும்…?

*EB ஆபிஸர் :* என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி :* இல்ல சார், நீங்க இந்த வாழைப் பழத்த கோயிலுக்குனு வாங்குனா ஒரு பழம் 5 ரூபா

வீட்ல குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 7 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா ஒரு பழம் 10 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 20 ரூபா சார்.

*EB ஆபிஸர் :* யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

*வியாபாரி :* This is my tariff plan.


கொய்யாலே, நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு, வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி Rate னு சொல்வீங்க. கேட்டா tariff plan னு சொல்லுரீங்க.”

*Banana vendor rocked..*
*The EB officer shocked.*

xxxxx

 செத்தான்டா குமாரு!


கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி.

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை:

“குட் ஈவினிங் குமார் சார்!” –
இது கேட்கீப்பர்.

உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?

குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.

பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?.

குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே.
நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க….

டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க….
வேற யாரும் கிடைக்கலையா?…
செத்தான்டா குமாரு………..

Xxxx subham xxxxtags- ஞானப் (பழ )மொழிகள் -34, டாக்சி, மனைவி.,வாழைபழம், EB ஆபிஸர்

Leave a comment

Leave a comment