வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு (Post.10,862)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,862

Date uploaded in London – –    18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளில் கிராமப்புறத்தில் அதிகம் புழக்கத்திலுள்ள பழமொழி – “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பதாகும். இந்தப் பழமொழியை  சுகாதார ரீதியிலும் மொழியியல் ரீதியிலும் ஆராய்வோம். இது பல சுவையான செய்திகளைத் தரும் பழமொழி.

‘வணிஜ்’ என்பது சம்ஸ்க்ரு மூலம். அதாவது வியாபாரி என்று பொருள் . தமிழில் இது வாணி/க , வாணி/ப , வாணி/ய/  என்று மூன்றுவிதமாகப் புழக்கத்தில் உள்ளது. க, ப, ய என்று மூன்றுவிதமாக முடிந்தாலும் பொதுப்பொருள் வியாபாரம், வணிகம்தான். ஆக, இது மொழியியலை வைத்துப் பிதற்றுவோருக்கு நல்ல அடி கொடுக்கிறது எப்படி க, ப, ய ஒட்டுகள் வாணி என்ற சொல்லுடன் ட்டிக்கொண்டு மாற்றியது ? ஏன் மாற்றியது? என்பது கேள்வி.

என்னுடைய பதில்: எந்தவித வெளி கலாசாரம் மூலம் தாக்கப்படாமல் தானே மாறியது என்பதே. இவ்வளவுக்கும் வணிக என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.

இதைவிட சுவையான விஷயம் வ= ப மாற்றத்தை இங்கும் காண்கிறோம். புறநானூற்றிலும் கி.மு 1000 அவஸ்தன் மொழியிலும் வ=ப மாற்றம் இருப்பதைக் காட்டி (தபஸ் = தவம்; அஸ்வ= அஸ்ப) ஈரான் முதல் கன்னியாகுமரி வரை 2000 ஆண்டுக்கு முன்னர் யார் இலக்கணம் எழுதி இப்படி மாற்றினார்கள் என்ற வினாவை எழுப்பி இருந்தேன்.

வடக்கில் வியாபாரிகளை பணியா என்பர்.அதை நாம் வாணிய என்போம் (ப-வ). அவர்கள் ஆலமரத்துக்கு அடியில் நின்று வியாபாரம் செய்ததால் அந்த மரத்துக்கும் பான்யன் ட்ரீ  (Banyan Tree) என்ற பெயர் வந்தது என்பர்.

ஆக மொழியியல் அறிஞர்களைக் கிண்டல் செய்கிறது இது.

XXX

இப்போது சுகாதார ஆரோக்கிய விஷயத்துக்கு வருவோம். வாணிய  என்பது பொதுவாக வியாபாரி என்ற பொருளைக் கொடுத்தாலும் எண்ணெய் வியாபாரம் செய்வோருக்கே தமிழ் மக்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர். அதாவது  டாக்டருக்கும் மருந்துக்கும் கொடுக்கும் காசை , அதற்கு முன்னர் நல்ல பொருள்களை வாங்கி சாப்பிடுவதற்குப் பயன்படுத்தினால் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதாவது நல்ல சாப்பாடு ’ கிடைக்கும் ஆரோக்கியமும் , பலமும் உடலுக்கு கிட்டும்.

ஆயினும் எண்ணெய் வியாபாரியை மட்டுமே வாணியன் என்ற சொல் குறிக்கும் என்று யாரேனும் வாதிட்டாலும் அதிலும் அர்த்தம் இருக்கிறது.

வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தலையில் எண்ணெய் தடவி– குறிப்பாக நல்லெண்ணெய் தடவி– குளிப்பது தமிழர் மரபு. பெண்களானால் செவ்வாய், வெள்ளியும் ஆண்களானால் புதன் ,சனிக்கிழமைகளில் குளிப்பது- தாவது அடி முதல் முடி வரை நல்லெண்ணெய் அல்லது ஸ்ரீவில்லிப் த்தூர் வாசனைப்பொடி கலந்த தைலத்துடன் ஸ் நானம் செய்வது மரபு.

இந்தியா  போன்ற வெப்ப  நாடுகளில் தூசி அதிகம். அது வேர்வை மற்றும் உடலிலுள்ள எண்ணெய்ப் பசை யுடன் கலந்து , உடலில் அரிப்பை ஏற்படுத்தும் அதன் மூல ம் வேறு பல பிரசினைகளும் உண்டாகும் . இதை எல்லாம் தடுக்கவே வாணியனுக்கு காசு கொடுத்து எண்ணெய் வாங்கு; டாக்டருக்குக் காசு கொடுக்கும் அவசியமே இராது என்றனர் இந்தியர்கள் .

இந்தியாவின் வட பகுதியில் இவ்வ்ளவு எண்ணெய்க் குளியல் தேவை இல்லை. அது குளிர்ப் பிரதேசம்.

(லண்டனுக்கு நான், 34 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன் ; இது குளிர்ப் பிரதேசம் . வருடத்துக்கு ஒரு முறை தீபாவளியின் போது சாஸ்திரத்து எண்ணெய் ஸ்நானம் செய்வோம்.)

வாணிய , வாணிக , வாணிப பனியா வாழ்க

–subham—

Tags  வணிக, வாணிக, வாணிப, வானியன் , பனியா , வைத்தியன்

Leave a comment

Leave a comment