March 2022 London swaminathan’s Articles; Index 112 (Post No.10803)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,803

Date uploaded in London – –    2 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

March 2022 London swaminathan’s Articles; Index 112

F U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ENGLISH ARTICLES

QUOTATIONS FROM KALHANA: MARCH 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.10,702); 1/3

MYSTERY OF TWO KALI YUGAS EXPLAINED (Post No.10,707); 2/3

KALKI AVATAR IN SRI LANKA? – Part 1 (Post No.10,710); 3/3

KALKI AVATAR IN SRI LANKA? – Part 2(Post No.10,713); 4/3

WOMEN AS GIFT TO RISHIS ! GOTRAS IN TAMIL SANGAM LITERATURE (Post No.10,716);5/3

FEBRUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX No.111 (Post No.10,719); 6/3

STARS SHOW INDIA’S  LINK WITH GREECE AND IRAN IN VEDIC PERIOD (Post No.10,722);7/3

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE (Post No.10,729)

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE (Post No.10,729); 9/3

ANCIENT TAMILS’ AMAZING HISTORICAL SENSE ! (Post No.10,732); 10/3

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND ? (Post No.10,735)- part 1; 11/3

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND? -part 2 (Post No.10,737); 12/3

STORY OF VEDIC SUNAHSEPHA IN GREECE AS CYNOSURE! (Post 10.743)

Panini’s Mysterious 83 words show he is close to Vedic Period – Part 1 (Post No.10,757);18/3

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 2 (Post No.10,760); 19/3

PANINI’S 83 MYSTERIOUS WORDS- PART 3 (Post No.10,763); 20/3

PEACOCK MYSTERY HINDU BIRD IN TURKEY SYRIA-PART 2 (Post No.10,769); 22/3

PEACOCK MYSTERY: HINDU BIRD IN TURKEY/SYRIA AROUND 1400 BCE- Part 1 (Post No.10,767)[21/3

WHAT MADE LINGUISTS GO WRONG? (Post No.10,753);17/3

COTTON PLACES RIG VEDA BEFORE HARAPPAN CIVILIZATION (Post No.10,773); 23/3

SANSKRIT WORDS IN FINNISH, HUNGARIAN LANGUAGES (Post No.10,775);24/3

TAMIL- PERSIAN LANGUAGE LINK 2000 YEARS AGO (Post No.10,778);25/3

WEAVING IN VEDAS AND SANGAM TAMIL LITERATURE- 1 (Post No.10,781);26/3

WEAVING IN VEDAS AND SANGAM TAMIL LITERATURE- 2 (Post No.10,785); 27/3

WEAVERS IN THE RIG VEDA (Post No.10,789); 28/3

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-1 (Post No.10,792); 29/3

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-2 (Post No.10,793); 30/3

QUOTATIONS FROM RIG VEDA- APRIL 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.10,794);30/4

XXXX

TAMIL ARTICLES

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1 (Post.10,703);1/3

காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள் – மார்ச் 2022 காலண்டர் (Post10,704); 1/3

பிள்ளை தமிழ் சொல் இல்லை? (Post No.10,709);3/3

திராவிட “அறிஞர்கள் ” எழுதிய நூல்கள் பற்றி எச்சரிக்கை ! (Post No.10,715);5/3

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’ (Post No.10,712) ;4/3

சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் கோத்திரங்கள் (Post No.10,718);6/3

இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724); 8/3

இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728);9/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -47; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post No.10,731); 10/3

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள்- part 1 (Post No.10,738);12/3

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – 2 (Post No.10,741);13/3

வரலாறு தெரிந்தவன் தமிழன் !!! (Post No.10,734); 11/3

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது! (Post.10,748) 15/3

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2 (Post No.10,750);16/3

தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’! (Post.10,721); 7/3

தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு TAMIL-AVESTAN LINK (Post No.10,770);22/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -48; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,772);23/3

குதிரை, பரி, புரவி, இவுளி  தமிழ்ச் சொற்களா? (Post No.10,776);24/3

பிரசாந்த,  பிரசன்ன:  பகவத் கீதையில் சுவையான சொற்கள்! (Post No.10,779);25/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -49; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,782),26/3

நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’ -1 (Post.10,786); 27/3

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! (Post No.10,788)/28/3

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! -part 2 (Post No.10,791)29/3

30 ரிக் வேத மேற்கோள்கள்; ஏப்ரல் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.10,797)/31/3

XXXX

ரிக் வேத ரிஷிகள் பட்டியல் – பகுதி 1 (Post No.10,744); 14/3

400 ரிக் வேத ரிஷிகள் பட்டியல்-2 (Post No.10,747); 15/3

400 ரிக்வேத புலவர்கள் பட்டியல்- 3 (Post No.10,751); 16/3

400 ரிக் வேத ரிஷிகள் ,புலவர்கள்  பட்டியல்-4 (Post No.10,754) 17/3

400 ரிஷிகள் புலவர்கள் பட்டியல் – 5 (Post No.10,756); 18/3

400 ரிக்வேத கால புலவர்கள் பட்டியல்-6 (Post No.10,759)

400 ரிக்வேத ரிஷிகள் பட்டியல் – 7 (Post No.10,762); 20/3

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 ; .10,766; 21/3

–subham–

ரிக் வேதத்தில் நெசவாளர்கள் துணிமணிகள் – 2 (Post No.10,802)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,802

Date uploaded in London – –    2 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்திலும் (10-7-42/43)   நெசவு, நெசவாளர் பற்றிய மந்திரங்கள் உள்ளன.

இது ஏற்கனவே ரிக்வேத 10-130-ல் கண்ட விஷயம்தான்

42. தன்னந் தனியாகவுள்ள இரண்டு இளம் பெண்கள் வெவ்வேறு வர்ணப் பெண்கள், ஆறுபகுதிகளில் நெசவு செய்கிறார்கள் . ஒருவன் இழைகளை இழுக்கிறான்; மற்ற ஒருவன் பரத்துகிறான்  அவர்கள் அறுப்பதில்லை; இறுதிவரை உழைக்கிறார்கள்

அவர்கள் இருவரில் யார் யார் என்று எனக்குத் தெரியாது; ஒரு புருஷன் நெசவு செய்கிறான்; மற்றவன் நீக்குகிறான்

இதிலும் ரிக் வேதம் போலவே பெண்களே நெசவு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

XXX

ரிக்  வேதத்தில் துணி சம்பந்தமுள்ள சொற்கள்  நிறைய உள்ளன.

சொற்களும் அவை வரும் மண்டலங்களும், துதியின் எண்ணிக்கையும் பின் வருமாறு:-

அட்க – போர்த்தும் துணி  (RV.5-74-5; 6-29-3; 8-41-9)

அதிவஸ்  (RV.1-140-9; 1-162-16; 10-5-4)

ஊர்ன ம்ருதா  – கம்பளம் போல மென்மையான  (5-5-4; 10-18-10

ஓட – பாவு  (6-9-2/3)

காந்தாரி அவிக  –  காந்தார ஆடு  (Afghanistan) RV 1-126-7

சித்ர ரஸ்மி – வர்ண நூல் (1-134-4)

தந்து – நூல் (i-12-1; 2-3-6)

தந்திர – தறி  (10-71-9)

தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்

தசரா – நூலைக் கொண்டு செல்லும் கருவி SHUTTLE? (10-130-2)

தசராணி – தரையிலுள்ள துணி  (10-130-2)

த்ரிகா  – மும்மடங்கு  (10-59-9)

த்ரிதந்து – முப்புரி

பூணுலை முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன

தம்ச ரஸ்மி – அற்புத நூல்; மிகவும் சன்னமான நூல்  (1-134-4)

தீர்க்க தந்து – நீண்ட இழை  – ( 10-69-7)

தனுத்ரி – நெசவுக் கருவி carding bow? Quick  (3-31-6; 9-93-1)

த்ராபி – போர்வை   (1-25-13; 1-116-0;  4-53-2)

பேச – பூ வேலைப்பாடுமிக்க / எம்ப்ராய் டரி துணி

 (2-3-6; 4-36-7; 7-34-11)

வயன்  – நெசவு வீவ் WEAVE என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலம்   (5-47-6)

வார – கம்பளி நூல் ; வூல் WOOL என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்  (1-128-6; 5-16-2)

வாச  – உடை  (1-34-1; 10-26-6)

வஸ்திர- வேஷ்டி, ஆங்கிலத்தில் VEST வெஸ்ட்

வாஸோவாய   – நெசவாளி  WEAVER (10-26-6)

வேமன – lதறி (Yajur Veda 19-83)

வேசி – ஊசி  (7-18-17)

சீப்ரா – தலைப் பாகை  (2-2-3; 4-37-4; 10-96-4)

சுக்ர வாச  – வெள்ளை ஆடை  (1-113-6)

சிரி – தறியிலுள்ள கருவி shuttle (1-71-9) also weaver

தறியில் குறுக்கு நூல் இழையை  ங்கிச் செல்லும் ஊடை

சூசி – ஊசி  (2-32-4)

தமிழ்ச் சொல்லின் வேர்

சப்த தந்து – ஏழு புரி கயிறு  (10-52-4; 10-124-1)

சுவாசன் – நல்லுடை தரித்த  (6-51-4; 9-97-50)

பகவான் சிங் என்பவர் வேத கால ஹரப்பன் நாகரீகம் என்ற நூலில் இந்தப்பட்டியலைக் கொடுத்துள்ளார் (Bhagawan Singh- The Vedic Harappans)

Xxx

ஆங்கிலத்திலோ தமிழிலோ சில ரிக் வேத சொற்கள் இருப்பது குறிப்பிடததக்கது .

நீல நிறை உடை அணிந்த பலராமனை நீலாம் பரரதாரி என்றும் மஞ்சள் பட்டாடை தரித்த கிருஷ்ணனை பீதாம்பரதாரி என்றும் வண்ண உடைகளால் அழைத்தோம். சமணர்களின் வெள்ளாடை தரித்த ஸ்வே தாம்பரரையும் உடையின் வர்ணத்தின் அடிப்படையில் அழைக்கிறோம். விநாயகர் துதியில் சுக்லாம்பரதர = வெள்ளாடை தரித்த என்றும் பாடுகிறோம்.

Xxxx

சீவக சிந்தாமணியில் எலி மயிர் ஆடை

சிலப்பதிகாரம் ஊர் காண் கதையில் மதுரை நகர கடைத்தெருக்கள்  வருணிக்கப்படுகின்றன . அதில் ஜவுளிக்கடை பற்றிய வருணனையில் மயிரும் என்ற வரிக்கு எலி மயிர் ஆடைRAT HAIR DRESS என்று அடியார்க்கு நல்லார் எழுதியதை முன்னர் ஒரு கட்டுரையில் சொன்னேன். அதற்கான அடிக்குறிப்பில் உ.வே.சாமிநாதையர் சீவக சிந்தாமணியில் 2686 பாடலிலும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதோ அந்த பாடல்

செந் நெருப்புணுஞ்  செவ்வெலிம் மயிர் 

அந்நெருப்பளவாய்  பொற்கம்பலம்

மன்னருய்ப்பன மகிழ்ந்து  தாங்கினார்

என்னரொப்புமில்லவர்க லெளன்பவே

–சீவக சிந்தாமணி 2686

பொருள்

கண்ணால் காண முடியாத  மிக மெல்லிய  செந்நிறத் துகில் அணிந்த அல்குலையும் , அழகிய ஒளி வீசும் மணிப் பூண்களையும்  உடைய மகளிர் , சிவந்த நெருப்பின் நிறம் போன்ற – எலி மயிரால் செய்த — அந்நெருப்பைப் போலவே குளிருக்கு வெப்பம் தரத்தக்கதென மன்னரால்  ஆராய்ந்து அனுப்பப்பட்ட — கம்பளிகளை  விரும்பி அணிந்தது கொண்டு,  எவரும் ஒப்புவமை கூற இயலாதபடி  இருந்தனர்

சிலப்பதிகாரத்தில் ஆடை வகைகளில் மயிர் என்று மட்டும்தான் இருந்தது. திருத்தக்க தேவரோ சிவப்பு நிற எலி மயிர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்!

XXXX

ஆர்ய தரங்கிணி ARYA TARANGINI BY A.KALYANARAMAN என்ற ஆங்கில நூலில் அ.கல்யாணராமன் (1968) மேலும் பல புதிய தகவல்களைத் தருகிறார்.

“இந்திய ஆடைகள் சுமேரியாவிலும் எகிப்திலும் காணாப்படுகின்றன கர்ப்பாச / பருத்தி என்ற சொல், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மொழிகளிலும் உள்ளன. பருத்தி என்பது இந்திய தாவரம் என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அது பசிபிக் சமுத்திரத் தீவு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து சென்றது .

கிரேக்கர்களும் ரோமானியர்களும் எழுதிய நூல்களில் இந்தியர்களின் பூ வேலைப்பாடுமிக்க, ரத்தினம் பதித்த கம்பளி மற்றும் பட்டு ஆடைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

பாணினி எழுதிய இலக்கண நூலில் பட்டு (கெளசேய ) கம்பளி (ஒளர்ண), பருத்தி (கர்ப்பாச ), லினன் (ஒளமக ) உடைகள் குறிப்பிடப்படுகின்றன. ARRIAN அரியன் எழுதிய நூலில் இந்தியர்களின் மேலாடை, உள்ளாடை பற்றி குறிப்பிடுகிறார். பாணினியும் ‘ஆப்ரபாதின’ என்ற உள்ளாடை முழங்கால் வரை செல்வதைக் கூறுகிறார். இடுப்பில் ஒரு கச்சை /பெல்ட் மூலம் அது இறுகக் கட்டப்பட்டுள்ளது . மெளரிய கால சிற்பங்களிலும் இதைக் காண்கிறோம்.

பாணினி ‘பிருஹத் ஆச்சாதன’ என்னும் பெரிய போர்வை பற்றிப் பேசுவதால் தையல் கலை பற்றியும் அறிய முடிகிறது . இதற்கு ‘ப்ரவர’ என்று பெயர்.

இது 24 அடிக்கு 12 அடி அகலம் உடையது. ரோமானிய TOGA டோகா போன்றது.யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு ரிஷிகள் கஞ்சுகம் , தலைப்பாகை அணிந்து வந்ததாக மகா பாரதம் கூறுகிறது

பகவான் சிங் எழுதிய வேதிக் ஹரப்பன் ஆங்கிலப் புஸ்தகம் வருவதற்கு முன்னரே அய்யாசுவாமி கல்யாண ராமனின் ஆர்ய தரங்கிணி அச்சிடப்பட்டது. அவர்தரும் வேத கால ஸஸ்க்ருதச் சொற்களின் பட்டியல் இதோ :

அட்க – மேலங்கி

உபநஹ – காலணி

உஸ்னிஸ – தலைப்பாகை, டர்பன்

தரப்ய – பட்டு ஆடை

த்ராபி – மேலங்கி

நிவி – உள்ளாடை

பரிதன – உடை, துணி

பண்டவ – சாயம் ஏற்றாத துணி

பேசஸ் – எம்ப்ராய்டரி / பூ வேலைப்பாடு மிக்க துணி

வாதபன – காற்றைத் தடுக்கும் துணி

சமுல – கம்பளிச் சட்டை

சமுல என்பதும் கம்பளம் ஆக வாய்ப்பு உண்டு பாய்மரக் கப்பல்களில் பிரமாண்டமான துணிகள், காற்றைத் தடுக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கப்பல்கள் கரிகாலன் காலத்தில் இருந்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர்.  (புறம். 66, வெண்ணிக் குயத்தியார்).

எனது ஆராய்ச்சி

ப்ரவர= தமிழில் போர்வை ஆனது

ஆச்சா தன =   தமிழில் ஆடை  ஆனது ; ஆங்கிலத்தில் ATTIRE அட்டைர் ஆனது

டியூனிக்TUNIC – என்பது தமிழ் துணி- யின் மரூஉ

டோகா TOGA – என்பது தோகை போன்ற ஆடை அல்லது தொங்கல் .

திரைச் சீலை போன்றதையும் தொங்கல் என்போம்

சட்டைSHIRT/SKIRT என்ற தமிழ் ச் சொல் காட்டன் COTTON என்ற சொல்லுடன் தொடர்புடையது.

காட்டன் /பருத்தி/ பஞ்சு அரேபிய மொழித் KATN தொடர்புடையது.

சூசிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழில் ஊசி ஆனது

வாய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆங்கிலத்தில் WEAVE வீவ் ஆனது நெய் / நெசவு என்ற சொல் எகிப்திய நெசவுத் தெய்வம் NEITH நெய்த் – உடன் தொடர்புடையது.

கம்பளம் /கம்பலம் சீவக சிந்தாமணியில் வருகிறது

படாம்  (யானையின் முக படாம் ) = பட்டு என்பன ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்.

பருத்தி = பட்டு (TTH= TT) என்பதையும் கூட மொழியியல் ரீதியில் தொடர்பு படுத்த முடியும்.

கத்திரி SCISSORS என்ற மயிர் குறைக் கருவி பற்றி சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். இதே கருவி தையலிலும் பயன்பட்டி   கும் என்பதில் ஐயமில்லை . தையல் = TAILOR டெய்லர் என்ற சொற்களில் உள்ள ஒற்றுமையும் ஒப்பு நோக்கத்தக்கது.. சுருங்கச் சொன்னால் தமிழ்- சம்ஸ்க்ருத மூலச் சொற்களே உலக மொழிகளில் காணப்படுகினறன.

‘கண்டம் துண்டம்’  என்பது சம்ஸ்க்ருதம்- பாணினியின் நூலில் கூட உள்ளது. ‘துண்டு’ போடப்பட்ட துணிதான் துண்டு / முண்டு ஆகியதா என்பதையும் ஆராய வேண்டும்.

தந்திர – தறி  (10-71-9)

தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்

-சுபம் —

tags- தறி, கத்திரி, கம்பளம், நெசவு, ஆடை, துண்டு,  எம்ப்ராய்டரி, நெசவாளர்

பெரிய நகரங்களில் சூழல் கேடுகள்! (Post No.10,801)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,801

Date uploaded in London – –     2 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 29-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய எட்டாவது உரை

8

பெரிய நகரங்களில் சூழல் கேடுகள்!

ச.நாகராஜன்

சமீபத்தில் க்ளாஸ்கோவில் நடந்த சூழல் மேம்படுத்தும் மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை மனதில் கொண்டு நமது நாட்டில் உள்ள பெரிய நகரங்களை முதலில் நம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தலைநகரமான டில்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 8000  முதல் 9000 டன்கள் வரை கழிவுப் பொருள்கள் உருவாகின்றன.

இதன் Air Quality Index திகைப்பூட்டும் 999 என்ற அளவை எட்டியுள்ளது.

காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர்  க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என

ஆறு மட்டங்கள் உள்ளன.

இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவாகும்.  இந்த குறியிட்டில் ஒவ்வொரு 50 எண்ணும் கூடுதலாக ஆக ஆக அது மிக மோசமான அளவைக் குறிப்பதாகும். 350 என்ற அளவு காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும்.

400க்கு மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். ஆக 999 என்ற எண் அளவு நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்,

ஆக இதே போல காற்றின் தரம் குறைவு பட்டு மாசுபட்ட நிலையைப் பல நகரங்களிலும் காண்கிறோம்.

இந்த அபாயகரமான நிலையை மாற்ற பெரிய நகரங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும்.

பெரிய நிறுவனங்களும், சூழல் மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரை சுத்திகரித்து வெளியேற்றச் செய்தல் இன்றியமையாதது.

காற்றை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வாகனப் பயன்பாட்டை குறைத்தல் வேண்டும். கூட்டு முயற்சியாக ஒரு வாகனத்தில் இணைந்து செல்வது, பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவது, குறுகிய தூரம் செல்ல சைக்கிளில் செல்வது அல்லது நடந்து செல்வது உள்ளிட்ட ஏராளமான வழிகள் உள்ளன.

பிளாஸ்டிக் கழிவை தவிர்ப்பதோடு, திடக் கழிவை முடிந்த அளவில் குறைத்தல் வேண்டும். இதற்கான முயற்சியை ஒவ்வொரு இல்லமும் மேற்கொண்டால் நகரத்தின் சூழ்நிலை காக்கப்படும்.

பசுமைப் பூங்காக்களை ஆங்காங்கே அமைத்து அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது, மரங்களை வீட்டளவிலும் கூட வளர்ப்பது போன்ற எளிய வழிகள் ஏராளம் உள்ளன.


சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக ஒவ்வொருவரும் மாறி குழுக்களை அமைத்து போர்க்கால அடிப்படையில் சூழலை மாசுபடுத்தும் அனைத்து விவரங்களையும் சேகரித்து அவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் உள்ள வழிகளை இனம் கண்டு பரிந்துரைத்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நகரமும் காற்றுத் தரக் குறியீட்டு எண்ணில் லட்சிய அளவான 50 என்ற எண்ணை எட்ட வேண்டும்.

நச்சுப் புகை வாழ்விலிருந்து நல்ல வாழ்விற்கு மாறுவது நம் ஒவ்வொருவரின் கையிலும் தான் உள்ளது என்பதை உணர்வோமாக. உயர்வோமாக!

**

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 30-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஒன்பதாவது உரை

9

இமயம் முதல் குமரி வரை பாதிப்பு!

ச.நாகராஜன்

புவி வெப்பமயமாதலால் இமயம் முதல் குமரி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

வெப்ப அலைகளால் பாதிப்பு ஒரு புறம் என்றால் திடீர் திடீரென ஏற்படும் வெள்ள அபாயம் இன்னொரு புறம்; அத்துடன் மழை பெய்வதில் சீரற்ற தன்மை உருவாவது ஒரு புறம் என இப்படி பல வழிகளிலும் தீவிர பாதிப்புகள் வரவிருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

வெளியிடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அதிக வெப்ப நிலையில் வேலை பார்ப்பது இயலாது என்பதால் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல வேலைகள் தடைப்படுகின்றன.

ஆக இப்படி ஒரு ஆண்டுக்கு இந்தியா இழக்கும் மனித மணி நேரங்கள் (Man hours) மலைக்க வைக்கும் 100 பில்லியன் மணிகள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். ஆக நூறு நூறு கோடி மதிப்புவாய்ந்த மனித மணி நேரங்களை நாம் இழக்கிறோம்.

ஆகவே இந்த வெப்ப உயர்வைப் பல்வேறு வழிகளாலும் முனைப்புடன் தடுக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.

பசுமைக் கட்டிடங்களை அமைப்போம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் இலட்சிய கோஷமாக ஆக வேண்டும்.

பசுமைக் கட்டிடங்கள் கார்பன் டை ஆக்ஸைடு ஏற்படுத்தும் நச்சைத் தடுக்கும். மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் வளத்தைச் சீராக்கும். நிலத்தடி நீரைச் சேமிக்கும்.

வீட்டில் LED  விளக்குகளைப் பொருத்துவதால் பெருமளவு ஆற்றல் சேமிக்கப்படும். Incandescent எனப்படும் வெண்சுடர் குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக LED விளக்குகளைப் பொருத்தும் போது நாம் 75 விழுக்காடு அளவு ஆற்றலைச் சேமிக்கிறோம். செலவும் குறைக்கப்படுகிறது.

அத்துடன் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது VOC   – Volatile Organic Compounds – எனப்படும் துரிதமாக ஆவியாகும் கரிமச்சேர்மங்களினால் ஆன வண்ணங்களை ஒரு போதும் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தல் கூடாது. குறைவாக உள்ள VOC அல்லது அறவே VOC இல்லாத வண்ணங்களை வீட்டிற்கெனப் பயன்படுத்தல் வேண்டும்.

இவை மிக எளிதில் ஆவியாகி சுற்றுப்புறச் சூழலில் கலந்து சுற்றுப்புறத்தை நச்சுத் தன்மை வாய்ந்ததாகச் செய்து விடுகிறது.

சில வண்ணங்கள் தலைவலி, மயக்கம் ஆஸ்த்மா ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் நீடித்து இருந்து வந்தால் ஆரோக்கியத்திற்குக் கேடு ஏற்படும். ஆகவே VOC அளவைப் பார்த்து வண்ணங்களை வாங்கிப் பயன்படுத்தல் வேண்டும்.

பெரிய கட்டிடங்களில் சோலார் எனப்படும் சூரிய ஆற்றல் விளக்குகளைப் பொருத்தலாம்.

பசுமைக் கட்டிடம் கட்டுவதற்கான பொருள்கள் என்றே ஒரு பெரும் பட்டியல் இருப்பதால் அவற்றை வீடு கட்ட விழைவோர் முதலில் அறிந்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

இவை எல்லாம் புதிதாக வீடு கட்டுவோருக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய குறிப்புகள் மட்டும் அல்ல:

இப்போது வாழ்கின்ற வீட்டில் கூட இந்தக் குறிப்புகளையும் வழிகளையும் மேற் கொள்ளலாம் என்பதும் முக்கியமான ஒன்று.

மொத்தத்தில் இந்தியாவெங்கும் உள்ள கட்டிடங்கள் இயற்கைச் சூழலுக்கு உகந்த கட்டிடங்களாக மாற்றப்பட்டால் பெருமளவு வெப்பமயமாதல் என்னும் அபாயம் குறையும் அல்லவா!

இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்துவது இல்லங்களில் வாழும் ஒவ்வொருவரது கடமையாகும்!

**

Number Symbolism in Tamil Tirumular’s Tirumanthiram and Rigveda-1 (Post No.10,800)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,800

Date uploaded in London – –    1 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Tirumular is one of the Saivite Saints who lived around ninth century CE. He is the author of Tirumanthiram. The book has 3000 stanzas in Tamil dealing with many spiritual matter including yoga. He is one of the 18 Siddhas. Tirumular used number symbolism like the Rigveda. Here are a few examples

V R Ramachandra Dikshitar of Madras University says in his book ‘Studies in Tamil Literature’ (year 1930),

“The name of this great author stands perhaps unrivalled in the domain of Tamil writers in general, and of mystic ones in particular. His work Tirumanthiram is a masterpiece in itself dealing with a variety of subjects numbering over 400 themes. It speaks of both possible and the impossible, the practicable and the impracticable, great as well as trivial things.

The following out of many could be quoted as typical illustrations of its mystical tendencies. In what is known as Sunya sampasanai chapter of  Tirumanthiram it is said that when the brinjal/aubergne seed was planted, pakal /bitter gourd of bitter taste, grew out of it

When the earth was dugout, a poosani/pumpkin appeared. The gardeners ran to fetch them. But it was a banana that was fully ripe. This is the literal meaning of a stanza.

But what underlies this is of enormous importance. The brinjal/aubergine in Tamil is Kaththiri which also means a pair of scissors. According to the Hindu Yoga treatises, there are two main tubes through which the life breath passes in and out, running diagonal wise down from the toe of the foot to the nostril. By controlling and regulating the passage of air through these tubes by means of Praanaayaama, a man is enabled to attain the state of Vairagya. That is when the mind ceases to function, and is at rest, it is easy to realise God. The banana fruit refers to the salvation of the soul or Moksha in Sanskrit.

Xxx

Another stanza says,

There are five cows in the Brahmin’s house. They roam astray. If they are controlled by a proper herdsman, then all the five would furnish plenty of milk. The mystic interpretation is that a person who wishes to attain the eternal enjoyment of bliss, should keep his five senses under strict control and watch.

xxx

Again it is said that

The boat is taken to the shore by the steersman for commercial purposes. If in the middle of the way, the keel gives way, the consequence is easily imaginable. This poem expounds the great truth contained in what is known in Sanskrit philosophy ‘Thou Art That’ . Here the body is the vessel on which the Jivatman or the Individual Soul travels to the place where the Paramatman or the universal soul is, there to become united with it. In plain words the body is the vehicle for the attainment of salvation.

Thus a careful examination of these three stanzas manifests clearly that the mysticism here is not only formal, but also material. The language is obscure, and the matter also not easily intelligible.

Xxx

My comments

Rig veda is full of such enigmatic mantras. Foreign translators were not practising Hindus. So whenever some enigmatic or mystic matter came in the mantras , they said the meaning is obscure, perhaps some other stanzas got jumbled or may be interpolation from other sources.

Let us compare it with one mantra in RV 1-164

This hymn is full of number symbolism

1-164-20

Two birds with fair wings, knit with bonds of friendship, in the same sheltering tree have found a refuge

One of the twain eats the sweet fig tree’s  fruitage; the other eating not regardeth only

(Mundaka Upanishad and Svetesvatara Upanishad repeat this; full details are in my article THREE APPLES THAT CHANGED THE WORLD written in 2011)

It is about two birds sitting on a tree and one eating the fruit and the other being a passive observer. The same matter comes in Upanishad as well. Kanchi Paramacharya (1894-1994) was the one who pointed out the philosophical meaning behind it. It is the basis of Adam/Atma and Eve/Jeeve Atma story in the Bible. When they ate the apple, they committed a sin. That apple story is from the Rig veda and later Upanishad. Atma, with swapping of letters became Adam. Jeeve Atma became Eve. No one else saw this story in the Rigveda or Upanishad.

Number symbolism is found through out the Vedas. Without commentaries or explanations given by great people like Shankaracharya we would also struggle to get the real meaning.

Here are two stanzas from the Rigveda

Four are his horns, three are the feet that bear him; the heads are two, his hands are seven in number

Bound with a triple bond the steer roads loudly; the mighty god has entered into mortals

R V.4-58-3

Savitar thrice surrounding with his  mightiness mid-air, three regions and the triple sphere of light,

Sets the three heavens  in motion and the three fold earth, and willingly protects us with his triple law

R V.4-53-5

Xxx

Tamil verses from Tirumular’s Tirumanthiram


”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”–  2868.

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” – திருமந்திரம் 2883

தோணி யொன்றுண்டு துறையில் விடுவது

வாணி மிதித்து நின் றைவர் கோலூன்றலும்

வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை

யாணி கலங்கி னதுவிது  வாமே

“Three Apples that Changed the World” | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/11/16 › three-apples-…

16 Nov 2011 — Adam and Eve’s apple story is actually a Hindu Upanishad story. … recognise the transformation of Atma into Adam And Jeeva into Eve.

To be continued………………………

tags-  Tirumular, Tirumanthiram, Number symbolism, Rigveda, Tamil verses 

ரிக் வேதத்தில் நெசவாளர்கள் துணிமணிகள் – 1 (Post No.10,799)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,799

Date uploaded in London – –    1 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக்வேதத்தில் ஒரு அற்புதமான உவமை வருகிறது. கவிஞர்கள்  கவிதை புனைவது, நெசவாளர் துணிகளை நெய்வது போல இருக்கிறதாம். இதனால் நெசவுத்தொழில் எவ்வளவு உச்சகட்டத்தில் இருந்தது என்பது தெரிகிறது. தமிழர்கள் ஸம்ஸ்க்ருதத்தை அப்படியே காப்பி copy  அடித்து புஸ்தகங்களுக்கு ‘நூல்’ என்று பெயரிட்டனர். ஸம்ஸ்க்ருத மொழியில் சூத்ர (நூல்) என்றால் புஸ்தகம், துணிமணிகளுக்கான நூல் (Sutra= Book, Thread) .தமிழர்கள் எழுதுவதற்கு 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ‘சூத்ர’ம் துவங்கிவிட்டது. பாணினி பயன்படுத்திய ‘சூத்திர’த்தை தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திலும் காணலாம்.  தமிழ் மொழியும் ஸம்ஸ்க்ருதமும் இரண்டு கண்கள்  என்பதால் தமிழ் அகராதியிலும் நிகண்டிலும் தமிழைவிட அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்களை ‘தமிழ்’ என்று பெயர் சூட்டினார்கள்

வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று வெளிநாட்டு அரைவேக்காடுகளும் மார்க்சீய கட்சியினர் எழுதிய புத்தகங்களும் சித்தரித்தன. ஆனால் நெசவு மற்றும் விவசாயம் பற்றி ரிக் வேதம் நெடுகிலும் குறிப்புகள் உள்ளன. இது வெளிநாட்டு “அறிஞர்களின் ” முகத்திரையை கிழிக்கின்றது

ஏராளமான விவசாய சொற்களும்,நெசவாளர் குறிப்புகளும் உள்ளன.

இதோ சில பாடல்கள்/ மந்திரங்கள்

வருணனை நோக்கி ரிஷி கிருத்சமதன்  பாடிய பாடல் RV.2-28-5

“கட்டுகளில் இருந்து அவிழ்ப்பது போல என்னை பாவத்திலிருந்து விடுவி; நாங்கள் வளர்வோமாக; நான் பாடல் என்னும் ஆடையை நெய்யுங்கால் நூல் இழையை அறுத்துவிடாதே என்னுடைய செயல் நிறைவடையும் வரை அது கெடாமல் பார்த்துக்கொள்வாயாக” .

இதில் கவிதை புனைவதை ஆடை நெய்வதற்கு ஒப்பிடுகிறார்.

பாடல் என்னும் ஆடை என்பது நேரடி மொழிபெயர்ப்பு (R T Griffith கிரிப்பித்) (அறிவு என்னும் ஆடை என்று ஜம்புநாதன் மொழிபெயர்க்கிறார்.)

XXX

2-38-4

ரிஷி கிருத்சமதன்  ஸவிதாவை (சூரியன்) நோக்கிப் பாடிய பாடலில் வரும் மந்திரம் 2-38-4:

ஆடையை நெய்யும் பெண்மணியைப் போல இரவு (ராணி) இந்த உலகத்தை மீண்டும் நெய்து மூடுகிறாள்.காலையில் கதிரவன் எழுகிறான் களைப்பற்றவனும் , பருவங்களை உண்டாக்குபவனுமான சூரியன் எழுந்தவுடன் உலகம், உறக்கத்திலிருந்து எழுகிறது.

XXX

ஊடு நூல் – பாவு நூல்

நான் குறுக்கிழைகளை அறியேன் ; நெடுக்கிழைகளை அறியேன். ஒரு போட்டியில் நெசவாளர்கள் நெய்யும் ஆடையையும் அறியேன்; இங்கு எந்த மனிதனுடைய புதல்வன் கீழே இருக்கும் தந்தையால் கற்பிக்கப்பட்டு , மேலேயுள்ளவனைப் பற்றிய விஷயங்களை அறிவான்?

இதிலுள்ள நெசவு உவமையில் ஊடு நூல் – பாவு நூல்  பற்றிக் கூறுவது நெசவு மிகவும் பரவிய ஒரு தொழில் என்பதைக் காட்டுகிறது. இங்கு நெசவு என்பது பெரிய தத்துவம் அல்லது பாடல் போட்டி பற்றியது என்று வில்சனும் கிரஸ்மானும் வெவ்வேறு விளக்கங்களைக் கூறினாலும் நெசவு பற்றிய உவமையை எல்லோரும் ஏற்கின்றனர்.

(VEDIC TRANLATORS: R.T. GRIFFITH, PROF. WILSON, and  GRASSMANN)

XXX

புலவன் வீட்டில் நெசவு நூலை எலிகள் கடிக்கும் வறுமை பற்றிய சாதாரண உவமைகள் முதல் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை உருவாக்கிய பிக் பேங் தியரி Big Bang Theory வரை , நெசவு உவமை உபயோகிக்கப்படுகிறது

10-130-1/2

வேள்வி என்னும் யாகத்தை நெசவுக்கு ஒப்பிடுகிறார் பிரஜாபதியின் புதல்வர்

சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களின் இழைகளால் எங்கும் பரத்தப்படுவதும் 101 வருடங்கள் நீடிக்கப்படுவதுமான இந்த யக்ஞத்தை பிதாக்கள் நெய்கிறார்கள்; அவர்கள் பாவு (Warp) நூலின் அருகில் அமர்ந்து கொண்டு முன்னே நெய்யுங்கள், பின்னே நெய்யுங்கள் என்று உரத்த குரலில் பேசுகிறார்கள்

(101 புரோகிதர்கள் என்பது கிரிப்பித் R T Griffith மொழிபெயர்ப்பு)

புருஷன் (God) இந்த ஆடையை விரிக்கிறான்; புருஷன் அதை மேலே சுருட்டுகிறான். அவன் இதை சுவர்க்கத்தின் மீது பரத்துகிறான்.அவனுடைய தறி நெய்யும் கம்பங்கள் யாக சாலையில் நடப்பட்டுள்ளன அவை சாமங்களை (Saman Hymns) நெய்யும் நாடாக்களாக , நெசவு நூல் நாழிகளாகச் (ஷட்டில்) செய்தன

. (இந்த கிரணங்கள் வேள்வியின் பீடத்திலே அமர்ந்தன – என்பது ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு); 

தறியில் (Loom) குறுக்கு இழைகளை எடுத்துச் செல்லும் பாகத்தை ஷட்டில் shuttle என்பார்கள். இங்கே பிரபஞ்சத்தை உண்டாக்கிய மாபெரும் வெடிப்பு Big Bang பற்றிப் பேசுகிறார்கள் என்பது என் கருத்து. இது பிரபஞ்ச்சத்தின் தோற்றம் Creation என்ற தலைப்பில்தான் இந்த துதியானது , எல்லா புஸ்தகங்களிலும் உளது

XXX

எலி தின்னும் நெசவு நூல்

ரிஷி கவச ஜலூஷன் பாடியது

RV.10-33-3

சதக்ரதுவே! வழிபடுபவனான என்னை கவலைகள், நூற்களைத் தின்னும் எலிகள் போலத், தின்கின்றன. இந்திரனே! மகாவனே ! நல்ல தானங்கள்  கிடைக்க அருள்செய்; தந்தையைப் போல எங்களைக் கவனித்துக் கொள்வாயாக

(சங்க இலக்கியத்தில் ஈறும் பேனும் உள்ள கந்தை ஆடைகளுடன் சென்று வள்ளல்களிடம் கெஞ்சிய பாணர்களின் பாடல்களை நினைவு படுத்தும் மந்திரம் இது)

xxx

இவ்வாறு பல பாடல்களில் போகிற போக்கில் நெசவு உவமைகள் வருவதால் இது மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் என்பது புலப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே இந்த நூற்பு வேலையில் ஈடுபட்டதும் தெரிகிறது. பட்டு, கம்பளம் போன்றவை பற்றிய குறிப்புகள் தனியே உள்ளன.

To be continued………………………………..

Tags- எலி ,நெசவு , ஊடு, பாவு,  நூல் , சூத்ரம்

S.NAGARAJAN’S ARTICLE INDEX MARCH 2022 (Post No.10,798)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,798

Date uploaded in London – –     1 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SNR Article Index : March 2022

MARCH 2022

 1-3-2022. 10701 யார் எழுத வல்லார் அதை? பகவான் ரமணரின் கேள்வி!

 2-3-2022  10705 மனிதப் பிறவியின் மகத்துவம் : புத்தரின் அருளுரை!

3-3-2022  10708 ஜீமுதவாஹனனின் தியாகம்!

4-3-2022 10711 வேதங்களின் மஹிமை : ஶ்ரீ சத்யசாயிபாபா அருளுரை!

5-3-2022 10714 நடுவெழுத்தலங்காரப் பாடல் – 1

6-3-2022 10717 நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2

7-3-2022 10720 SNR Article Index February 2022

8-3-2022  10723   குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!

             சுபாஷிதம்

9-3-2022  10726 முதல் எழுத்து அலங்காரம் – 1

10-3-2022 10730  நடுவெழுத்தலங்காரப் பாடல் – 3

11-3-2022 10733 வினா – உத்தரம் : சித்திர கவி பாடல் – 1

12-3-2022 10736 வினா – உத்தரம் : சித்திர கவி பாடல் – 2

13-3-2022 10739 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 8

              ஹெல்த்கேர் மார்ச் மாதக் கட்டுரை

14-3-2022 10742   கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால்

              அது போடும் ஆட்டம் அடடா! (சுபாஷிதம்)

15-3-2022 10745 ஹரியோ ஹரனோ நெற்றியில் எழுதியதை அழிக்க

              முடியாது! (சுபாஷிதம்)

16-3-2022 10749  காதலுடன் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்த நிலை

              – தமிழர் இலக்கியம் – காதல் காட்சி – அகநானூறு!

17-3-2022 10752 மார்பக கான்ஸர் அபாயத்தைத் தவிர்க்க சில வழிகள்  

              (ஹெல்த்கேர் மார்ச் 2022 கட்டுரை)

18-3-2022 10755  முதல் எழுத்து அலங்காரம் – 2

19-3-2022 10758  கடை எழுத்து அலங்காரம் – 1

20-3-2022 10761  எழுத்து வருத்தனம் – 1

21-3-2022 10764  கரந்துறை பாட்டு – 1

22-3-2022 10768    கரந்துறை பாட்டு – 2

23-3-2022 10771  கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள்!

               சுபாஷிதம் – சரோஜா பட்

24-3-2022 10774  வல்லின எழுத்துப் பாட்டு

25-3-2022 10777  பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து – மாலைமலர்    

               22-3-2022 கட்டுரை

26-3-2022 10780  தட்ப வெப்ப மாற்றத்தினால் ஏற்படும் கேடுக்ள் உரை எண் -1 22-3-22 ஒலிபரப்பு

27-3-2022 10783 காலத்திற்கு உகந்த கழிவுப்பொருள் மேலாண்மை – உரை 

              எண் 2 23-3-22 ஒலிபரப்பு

              விருக்ஷதேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஶ்ரீ பட்டம்

              உரை எண் 3  24-3-22 ஒலிபரப்பு

28-3-2022 10787  புதிய வழிகளைக் காண்பிக்கும் சுற்றுப்புறச் சூழல்

              ஆர்வலர்கள் – உரை எண் 4  25-3-22 ஒலிபரப்பு

              தட்ப வெப்பம் சீராக இருக்க மீத்தேன் வாயுவைக்

              கட்டுப்படுத்துவோம்! – உரை எண் 5  26-3-22 ஒலிபரப்பு

29-3-2022 10790 தாவரம் காப்போம்: பல்லுயிரினம் காப்போம்! உரை எண்   

                                   6 27-322 ஒலிபரப்பு

                                  மண்வளம் காக்க மரங்களை நடுவோம்! உரை எண் 7

              28-3-2022 ஒலிபரப்பு

30-3-2022 10793 மெல்லின எழுத்துப் பாட்டு

31-3-2022 10796  சூரியன் முதலில் உதிக்கும் நாடு (29-3-22 மாலைமலர்

             இதழில் வெளிவந்த கட்டுரை)

–subham–