தெருக்குறள்—வெள்ளத்துப்பால் (Post No.10,922)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,922

Date uploaded in London – –   2 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 49

Kattukutty

மாற்றி யோசிக்கணுங்க!

This message is fun to read and also says there is also different ways to approach an issue


ஒரு சிந்தி மார்வாரி ஒருவரிடம் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

மறுநாள் கடைத்தெருவில் சிந்தி போய்க் கொண்டிருந்த போது மார்வாரி அவரை சந்தித்தார். “அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மார்வாரியிடம், சிந்தி தயங்காமல் “நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்” என்றாரே பார்க்கலாம்.

***
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்*

“இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு
*முதல் மந்திரி*
உங்க மாமனார்தான். அவர்தான் .
*பாதுகாப்புத் துறை,*
*வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார்.

“இங்க நான்தான்
*துணை முதல்வர்.*
*உள்துறை,*
*நிதித்துறை,*
*ஜவுளித்துறை*
எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

“என் மகன் அதாவது
உன் வீட்டுக்காரன்தான்
*தொழில் துறை,*
*போக்குவரத்துத் துறை,*
*வீட்டு வசதித்துறை*
எல்லாம் பாத்துக்குவான்.

“என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
*செயலாக்கத் துறையையும்,*
*விளையாட்டுத் துறையையும்*
பாத்துக்குவா.

*நீ எதைப் பாத்துக்கறே சொல்லு…???*
உனக்கு
*உணவுத்துறை,*
*சுகாதாரத்துறை,*
*குடும்ப நலத்துறை*
எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்;
*சரிதானா…???*

சிரித்துக்கொண்டே
*மருமகள் சொன்னாள்*
“ஐயோ அத்தை;
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு…???
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.

*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்*
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்…

*கொய்யால யாருகிட்ட*

                                                                                  ***

 
கணவன் :- கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்

மனைவி :- எங்க என்ன விஷயமா போறீங்க?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி :- தண்ணியடிக்கவா? தெளிவா சொல்லித் தொலைங்க…

மனைவிடா 

                                                                   ***

தெருக்குறள்—வெள்ளத்துப்பால்



தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை



மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
‘போட்’டினில் பின் செல்பவர்
———-
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
———————
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
————————-
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
—————————–
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
————————-
வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
—————————-
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
———————————
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
———————————————-
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
———————————————-
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
————————————————————
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை

To be continued……………………………

 tags-  தெருக்குறள், வெள்ளத்துப்பால்

Leave a comment

Leave a comment