நா இன்னிக்கி பாங்கிலே cheque டெபாசிட் பண்ணுனா எப்ப சார் கிளியர் ஆகும்? (Post 10,924)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,924 (missed number)

Date uploaded in London – –   6 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் –   55

Kattukutty

உலகத்திலேயே அதிக பொய் கொண்ட இரண்டு லெட்டர்கள்

  1. LOVE LETTER.
  2. LEAVE LETTER.

XXX

உன் கவலைகளையெல்லாம் ஆண்டவனிடமே சொல்லி அழு….

ஏனெனில. அவர் மட்டும்தான் அதை யாரிடமும் சொல்லி

சந்தோஷப்பட மாட்டார்.

XXX

சிரிக்கும்போது வாழ்க்கையை வாழ்கிறோம்.

ஆனால் அழும்போது வாழ்க்கையை புரிந்து கொள்கிறோம்

XXX

தக்காளி சோறு பிரியாணி மாதிரி இருந்தா அது அம்மா சமையல்,

பிரியாணியே தக்காளி சோறு மாதிரி இருந்தா அது தங்கச்சி சமையல்,

சாப்பிட்டவுடனே வாந்தி வர மாதிரி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!!!

XXX

என்ன ,…..மாப்ளே உங்க கண்ணெதிர ஒருத்தன் கோயில்

உண்டியல் உடைச்சு பணத்த எடுத்தான்னு சொல்றீங்க…..

அத பாத்துட்டு சும்மா இருந்திருக்கீங்களே….???

அந்த கோயில்ல தான் உங்க பொண்ண எனக்கு கல்யாணம்

பண்ணி வைச்சீங்க…. அப்போ சாமி தடுக்காம

பாத்துக்கிட்டுதானே இருந்துச்சு………!!!

XXX

Customer : நா இன்னிக்கி பாங்கிலே cheque டெபாசிட் பண்ணுனா

எப்ப சார் கிளியர் ஆகும்????

Bank manager: 3 நாள் ஆகும்.

Customer: என்னோட ‘செக்’, எதிரில இருக்கற பேங்கோடதுதானே???

ரெண்டு பேங்கும் எதிர் எதிரெதான இருக்கு, பின்ன எதுக்கு இவ்வளவு

நாளாகும்???

Bank manager: சார், புரொசீஜர்ன்னு ஒண்ணு இருக்கு அத follow

பண்ணனுமில்ல…..கொஞ்சம் யோசிச்சு பாருங்க …. நீங்க வெளிலெ போயுட்டிருக்கீங்க …… வழில சுடுகாடு வருது…. சுடுகாடு முன்னாடி

நீங்க திடீர்ன்னு செத்து போயிடிறீங்க ……. அப்படியே உங்கள

எரிச்சடுவாங்களா இல்லே….. வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்து சாங்கியம்

எல்லாம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா????

Customer: ???

tags ஞான மொழிகள் –   55

Leave a comment

Leave a comment