இந்துக்களின் ஆசை- உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்புவோம் (Post.10,980)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,980

Date uploaded in London – –    13 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வேத கால இந்துக்களின் ஆசை உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்புவோம்  

உலகம் முழுதும் பண்பாடும் நாகரீகமும் பரவ வேண்டும், அது இந்துக்களின் கடமை என்பதை ரிக் வேத முனிவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆரிய என்ற சொல்லை கோணல் பார்வை கொண்ட வெள்ளையர்களும் கூட நோபிள் NOBLE என்ற ஆங்கிலச் சொல்லை வைத்து  மொழிபெயர்த்துள்ளனர்

நோபிள் – உன்னதமான, உயர்வான பண்பாடு

XXX

ஆர்யா வ்ரதா விஸ்ருஜந்தோ அதிக்ஷமி

ரிக்வேதம் 10-65-11

எல்லா கடவுளரையும் — விச்வே தேவாஹா — நோக்கிச் சொல்லும் பிரார்த்தனை —

அவர்கள்தான் பிரார்த்தனை, பசுக்கள், குதிரை, தாவரங்கள், காட்டிலுள்ள மரங்கள், இந்த பூமி, நதிகள் , மலைகள் அனைத்தையும் உருவாக்கினார்கள்.

தயாள குணமுடைய அவர்கள்தான் சூரியனை வானத்தில் நிலைபெறச் செய்தார்கள் ; அவர்கள்தான் எல்லா இடங்களிலும் ஆரிய விரதங்களை — நாகரீகத்தைப் – பரப்புகிறார்கள்

XXX

விஸ்வம் க்ருராவந்த  ஆர்யம்

ரிக்வேதம் 9-63-5

சோமலதா என்னும் தெய்வீக மூலிகைக் கொடியை நோக்கிப் பாடுவது —

சோமம் ஆனது சிறப்பான பணியைச் செய்கிறது ; இந்திரனுக்கு வலுவூட்டுகிறது; உலகம் முழுதையும் பண்பாடு மி க்கதாக — நாகரீகமுடையதாகச் செய்து, நாத்தீகர்களை விரட்டி அடிக்கிறது

xxx xx

விஸ்வம் அத்ய மருதோ விஸ்வ உதெள

விஸ்வே பவன்த் வக்னயஹ  சமித்தாஹா

விஸ்வேனோ தேவா அவசாகமந்து

விஸ்வமஸ்து த்ரவிணம் பாஜ அஸ்மை

ரிக்வேதம் 10-35-13

எல்லா கடவுளரையும் — விச்வே தேவாஹா — நோக்கிச் சொல்லும் பிரார்த்தனை —

மாபெரும் தாய் போன்ற வானமும் பூமியும் எங்கள் பாவங்களை அகற்றி, சாந்தியையும், இன்பத்தையும் தந்து , எங்களைக் காப்பார்களாகுக

காலையில் உதயமாகும் உஷா , எங்கள் பாவங்களை அகற்றட்டும்

பேரானந்தம் கிடைக்க நாங்கள் அக்கினியை வளர்த்து பிரார்த்திக்கிறோம்.

Xxx

அதர்வண வேத பூமி சூக்தத்திலும் இதே கருத்து வருகிறது :–

பாடல்/ மந்திரம் 54

அஹமஸ்மி  ஸஹமான உத்தரோ நாம பூம்யாம்

அபிஷாடஸ்மி விஸ்வாஷா டா சாமாசாம் விஷா ஸஹி ஹி –54

நான் வெற்றி வீரன்; இந்த பூமியிலேயே மிகவும் உயர்ந்தவன் நான்; எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி ; எல்லா திசையிலும் வெற்றி (எங்கு நோக்கினும் அங்கு நானே வெல்வேன்)

அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்

ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ –55

பாடல் 55 பொருள்

முன்னேறிச் செல்லும் தேவிய!  உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .

பாடல்/ மந்திரம் 56

யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்

யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே –56

பாடல் 56ன் பொருள்

கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்

இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.

காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது.

–SUBHAM—

 tags- இந்துக்களின் ஆசை, உலகம் ,  பண்பாட்டைப் பரப்புவோம் 

Leave a comment

Leave a comment