மனம் என்னும் மாயம்! – 1 (Post No.10,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,991

Date uploaded in London – –     16 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் என்னும் மாயம்! – 1

ச.நாகராஜன்

மனம் ஒரு மாயம்.

அதை முழுவதுமாக அறிவியல் இன்னும் அறியவில்லை.

ஆனால் நமது சனாதன தர்மம் அதை ஆராய்ந்து அதன்

தத்துவத்தை விளக்கியுள்ளது.

அறிவியல் ரீதியாகவும் சனாதன தத்துவ வாயிலாகவும்

மனதிற்குள் சற்றுப் புகுந்து ஆராய்வோம்.

மனதைப் பற்றி முற்றிலுமாக அறிந்து விட்டால் அதை வசப்படுத்த முடியும்.

மனம் என்பது என்ன? அது எப்படி இருக்கிறது? எங்கு இருக்கிறது?

மனதை எவராலும் கண்ணால் காண இயலாது.

உடலில் உள்ள எந்த அவயவங்களும் மனதைக் காணவில்லை.

மனம் நமது ஸ்தூல சரீரரத்தை அதாவது உடல் சார்ந்த ஒன்றே

தான் என்பது நாத்திகர்களின் முடிந்த முடிவு.

மனம் என்று தனியே ஒன்று இல்லை என்பது அவர்களின் வாதம்

இது சரியா?

பூமி (ப்ருதிவி), அப்பு (நீர்), தேஜஸ் (அக்னி) வாயு ஆகிய நான்கு பூதங்களும் தேகத்தின் வாயிலாகப் பரிணமிக்குமாயின்  அந்த தேகத்தில் அறிவு சக்தி பரிமளிக்கிறது.

விருப்பம், வெறுப்பு, சங்கல்பம், சந்தேகம், நிச்சயம், ஊகம்

ஆகியவை அந்த சக்தியினால் ஏற்படும் செயல்கள்.

மனத்தை எந்த இந்திரியத்தாலும் காண முடியவில்லை என்பதால்

அது சூக்ஷ்மமான ஒரு வஸ்து என்று கூறுவதும் ஒத்துக்கொள்ளத் தக்க ஒன்று அல்ல. இப்படி சூக்ஷ்ம வஸ்து என ஆத்திகர்கள்

கூறுவர்.

மனம் என்பது நான்கு பூதங்களின் பரிணாம விசேஷமாகிய

ஸ்தூல தேகத்தின் குணமே ஆகும். மரணகாலத்தில் அது குலைந்து அழிந்து போகின்றது என்பது நாத்திகர் வாதம். இது சரியல்ல.

சரி, ஒரு வாதத்திற்காக இதை சரி என்று வைத்துக் கொண்டால் ஸுஷூப்தி காலத்திலும் மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த

அறிவு சக்தி இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு விதமான அறிவு சக்தியையும் காணோம்.

தேகம் உண்டானது முதல் மரணம் வரையிலும் அந்த அறிவு சக்தியாகிய குணம் இருக்குமெனில் மரணத்தை விட வேறாக இருக்கும், தினந்தோறும் நடக்கும், ஸுஷூப்தி காலத்திலும்

மூர்ச்சை அடைந்த காலத்திலும் அந்த அறிவு சக்தி ஏன் காணப்படவில்லை?

ஆகவே நாத்திகர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

இல்லை, இல்லை, மூளை தான் மனம் என்று சிலர் சொல்வர்.

இது சரியா? சற்று ஆராய்வோம்!

***  

தொடரும்Tags – மூளை, மனம், மாயம்

Leave a comment

Leave a comment