தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்! (11,007)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,007

Date uploaded in London – –     21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்!

ச.நாகராஜன்

உலகம் அதி வேகமாக முன்னேறி வருகிறது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஆனால் ,‘இதெல்லாம் நமக்கு இல்லை’, என்று எவர் ஒருவர் வளர்ந்து வரும் தொழில்நுட்பபத்தை மதிக்காமல் ஒதுக்கி வைக்கிறாரோ அவர் உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவார்.

எந்தத் தகவல் பரிமாற்றமும் ஒரு சில விநாடிகளில் கண்டம் விட்டு கண்டம் நடக்கிறது.

Whatsapp மஹிமை. ஒரு சந்தேகம் என்றால் அதை உடனே தகுந்த ஒருவர் அரை நிமிடத்தில் தீர்த்து வைக்கிறார்.

பழைய காலத்தில் இதற்கு ஆகும் காலமும் செலவும் அதிகம்.

Facebook, Tweet, Email ஆகியவற்றால் நண்பர்கள் குழு வலுவாகிறது; வளர்கிறது.

வீட்டிற்கு வருவோர் யார் என்பதை நம்மால் வீட்டிற்குள்ளிருந்தே பார்க்க முடிகிறது. பூட்டைத் திறந்து உள்ளே போக வேண்டாம். ரிமோட்டில் கதவு திறக்கிறது.

விளக்குகளை தூரத்திலிருந்தே ரிமோட் மூலம் ‘ஆன்’ செய்கிறோம்.

சுழலும் ஃபேனை தூரத்திலிருந்து ஆஃப் செய்கிறோம்.

வீட்டு அறைகளை சுழன்று கொண்டே சில நிமிடங்கள் சுத்தம் செய்து நீரால் கழுவி விடும் மெஷின்கள் அனேகமாக அனைவர் இல்லத்திற்கும் வர ஆரம்பித்து விட்டது!

Drivierless Car, Space Journey என்று எதிர்காலம் வழங்கவிருக்கும் புதுமைகள் ஆயிரம்.

மனிதன் அருவருப்புடன் செய்யக் கூடிய வேலைகளை – கழிவறை சுத்தம் போன்றவற்றை ரொபாட்டுகள் செய்ய முன் வருவதைப் பார்க்கிறோம்.

மனிதன் செய்ய முடியாததை அல்லது செய்யப் பயப்படுவதை ரொபாட்டுகள் செய்கின்றனர்.

கனமாக ஒரு பொருளை  உயரமான ஒரு இடத்திற்கு ரொபாட்டுகள் அனாயாசமாகத் தூக்குவதைப் பார்க்கிறோம்.

ஆக, செல் போனாகட்டும், ஈ மெயில் ஆகட்டும், வாட்ஸ் ஆப் ஆகட்டும் அனைத்து தொழில்நுட்பங்களும் இன்றைய வாழ்க்கை முறையில் அத்தியாவசிய தேவை.

பூக்காரி கூட நடந்து கொண்டே செல் போனில் பேசி வியாபாரத்தை முடிப்பது இன்றைய நடைமுறை.

இதை வேண்டாம், இது எனக்குத் தெரியாது என்று சொன்னால் அப்படிச் சொல்பவரை உலகம் ஒதுக்கி விடும்; முன்னே போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு எச்சரிக்கையும் தேவை.

இந்த தொழில்நுட்பங்களை நமது முன்னேற்றத்திற்காக ஆதாயத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் ; அப்போது நாம் தொழில்நுட்பத்தை விட புத்திசாலிகள் ஆவோம்.

ஆனால் வெட்டி அரட்டைக்கும், ஒவ்வொரு நாளும் தேவையற்று காலை வணக்கம் சொல்வதற்கும் பயன் படுத்தினால் நாம் முட்டாள் ஆவோம்.

ட்விட்டர் மூலமாக எவ்வளவு சண்டைகள்! ஃபேஸ் புக் மூலமாக எவ்வளவு அனாவசிய வம்பளப்புகள்.

க்ரூப் மூலமாக எவ்வளவு வெட்டி அரட்டைகள்!

தினசரி ஆயிரம் யோசனைகள்; இந்தக் கையை இங்கு அமுக்கு; அந்த விரலை அங்கு அமுக்கு – கான்சர் வராது வந்தால் போய் விடும் என்றெல்லாம் போலிச் செய்திகள்!

எதையும் யாரும் சரிபார்க்காமலேயே ஆயிரமாயிரம் பொய்ச் செய்திகள் பறக்கின்றன.

ஊடகங்களுக்கு ‘தர்மம்’ என்றே ஒன்று இல்லை. (குறிப்பாக தமிழகத்தைச் சுட்டிக் காட்டலாம்)

இதில் தவறான பழைய போட்டோக்களைப் போடுவது. மார்பிங் செய்து படங்களைத் தருவது – என்ன ஒரு அயோக்கியத்தனம்!

இவை ஒவ்வொன்றையும் சரிபார்க்கவா முடியும்!

ஒட்டு மொத்தமாக மக்கள் ஊடகங்களை அறவே புறக்கணித்து விடுவார்கள்.

இது பொய்யில்லை.

ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் தான் முதல் அடி வாங்குவர்.

அவர்கள் சேமித்த அனைத்தும் கடலில் கரைத்த உப்பு போலக் கரைந்து விடும்.

ஏனெனில் இது அறநெறி.

அறநெறி எந்தக் காலத்திற்கும் பொருந்தும்; எல்லோருக்கும் பொருந்தும்.

ஆகவே தான் அற வழியில் தொழில் நுட்பத்தைத் தேவையான தேவையான அளவு தேவையான முறையில் தேவையானவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அப்படிப் பயன்படுத்தினால் பயனர்கள் புத்திசாலிகள்;

இல்லையேல் தொழில்நுட்ப சாதனங்கள் அவர்களை முட்டாளாக்கிப் புதைகுழியில் ஆழ்த்தி விடும்!

காலம் காலமாக உள்ள பல நூற்றாண்டு வரலாறுகள் நமக்குப் போதிக்கும் பாடம் இது தான்!

***

Leave a comment

Leave a comment