விஞ்ஞானத்திலும் மோசடிகள்! (Post No.10,920)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,920

Date uploaded in London – –     2 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விஞ்ஞானத்திலும் மோசடிகள்!

ச.நாகராஜன்

நாளுக்கு நாள் வெளிவரும் புது வித அறிவியல் ஆய்வறிக்கைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.

பேப்பரில் வந்தவுடன் அது உண்மை என நம்பி விடுகிறோம்.

ஆனால் பல ஆய்வறிக்கைகள் ஒரு குறிப்பிட்ட (கெட்ட) நோக்கத்துடன் “தயாரிக்கப்படுபவை” என்பதை நம்மில் பலரும் அறிவிதில்லை.

விஞ்ஞானத்தில் கொள்கை முரண்பாடுகள் இருப்பின் அதை அவர்கள் பொதுவாக மறைக்கவே பார்ப்பார்கள்.

தவறான உள் நோக்கத்துடன் கூடிய அறிக்கைகளும் செயற்கையாக எழுதப்பட்ட லேப் ரிபோர்ட்டுகளும் நம்மிடம் தரப்படும் போது அதை எப்படி அறிய முடியும்?

சில நிஜ சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

வானவியல் விஞ்ஞானியான ஹாடன் அர்ப் (Astronomer Haton Arp)

பிக்பேங் கொள்கையை மறுத்து தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க முற்பட்டார்.

பிக் பேங் (Big Bag Theory) கொள்கையையா மறுப்பது? அவர் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிபபது கூடாது என்று மறுக்கப்பட்டது. அத்துடன்  அருமையான அறிவியல் ஆய்வாளராக அவர் இருந்த போதும்  வலுக்கட்டாயமாக ரிடயர் ஆகும்படி அவர் வற்புறுத்தப்பட்டார்.

எப்படியோ இன்றளவும் பிக் பேங் தியரி காப்பாற்றப்பட்டு வருகிறது?

விஞ்ஞானத்தை விட சர்ச் சக்தி வாய்ந்தது. அது சொல்வதற்கெல்லாம் விஞ்ஞானிகள் தலை அசைத்து ஆட்டம் போட வேண்டும்.

பிக் பேங், டார்வின் தியரி உள்ளிட்டவற்றை யாரும் மறுத்தோ எதிர்த்தோ பேசக் கூடாது.

‘தி டேல் ஆஃப் பில்ட்டவுன் மேன்’ ஒரு சிறந்த உதாரணமாகும்.

1911ஆம் வருடம் பில்ட்டவுனில் ஒரு குழியில் மனித மண்டையோட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை மனிதக் குரங்குகளின் எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு இங்கிலாந்து தான் கற்கால முதல் மனிதன் தோன்றிய இடம் என்பது நிறுவப்பட்டது.

நாற்பது ஆண்டுகள் கழித்து இது ஒரு மோசடி வேலை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளி உலகிற்கு அறிவித்தனர்.

1964ஆம் ஆண்டு கார்லோ ரூபியா (Carlo Rubia)  சில ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தார். இவர் 1984ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.

ஆனால் அவரது டீம் உறுப்பினர்களே அவரது தரவுகள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைச் சொல்லி விட்டனர்.

மார்க் ஸ்பெக்டர் (Mark Spector) தனது 24ஆம் வயதிலேயே நோபல் பரிசு பெற இருந்தார். அவரது தியரி அபாரமானது. எப்படி ஒரு கட்டியில் உள்ள வைரஸானது  நார்மலாக இருக்கும் செல்களை  கான்ஸர் உள்ளவையாக எப்படி ஆக்குகிறது என்பதை அவர் தியரி கூறியது. 36 மாதங்கள் கழித்து அவரது அறிக்கைகள், புள்ளி விவரங்கள், தரவுகள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பது அறியப்பட்டு அவர் ஒரு ;ஃப்ராடு என்பதும் நிரூபிக்கப்பட்டது.

இப்படித் தான் ஒரு சிறிய குழுவை ஆராய்கிறேன் என்று சொல்லி சில புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு 750 கோடி உள்ள மனித குலம் அனைத்திற்கும் அந்தப் புள்ளி விவர அடிப்படையில் தவறான சில கொள்கைகளை அளிப்பதும் நடந்து வருகிறது.

ஆகவே அறிவியல் செய்தி எது சொன்னாலும் அது உண்மை என்பதை நம்பக் கூடாது.

பொறுத்திருந்து பார்த்தால் உண்மைகள் வெளிப்படும்.

காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சாஸ்திர விதிகள் இந்த வித அபாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டும் ஒரு செய்தியாக இருக்கிறது.

அறிவியல் கொள்கைகளை அறிவியல் ரீதியாக உரசிப் பார்ப்போம்; பின்னரே அவற்றை நம்புவோம்.

இது தான் நாம் கற்க வே பாடம் இன்று!

***

உழாத நிலம் கெடும், உழைக்காத உடல் கெடும், இறைக்காத…(Post No10,919)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,919

Date uploaded in London – –   1 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 51

Compiled by Kattukutty

படித்ததில் பிடித்தது

 தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது

ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது


ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு

100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்

1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு

3 மணி நேரம் சினிமா விருப்பம்

பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை

வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்

மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்

புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை

பொழுது போக்க முதல் வரிசை

கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே

அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை

இருபது நிமிட தியானம் கசக்கிறது



மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு

செல் போனை தொய்வில்லாமல் தேய்ப்பு!

படித்த உண்மை

*என்னையும் மாற்றிக் கொள்கிறேன்*

*

*முன்னோர்களின் அனுபவ வாக்கு*

உழாத நிலம் கெடும்
உழைக்காத உடல் கெடும்
இறைக்காத கிணறு கெடும்
இரக்கமில்லாத மனிதம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
துடிப்பில்லாத இளமை கெடும்
பொய்யான அழகு கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
கண்டிக்காத பிள்ளை கெடும்
சோம்பலால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்
அளவில்லா ஆசை கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
கவனமில்லாத செயல் கெடும்
கருத்தில்லாத எழுத்து கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
நயமில்லாத சொல் கெடும்
நாடாத நட்பு கெடும்
ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்
ஓதாத கல்வி கெடும்

*

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

(ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது…

எனவே இளைஞர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்க.


                                                                          **

ஞான மொழிகள் – 51

APRIL 2022 LONDON SWAMINATHAN’S ARTICLES ( INDEX No.113) Post No.10,918

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,918

Date uploaded in London – –    1 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

Number Symbolism in Tamil Tirumular’s Tirumanthiram and Rigveda-1 (Post No.10,800); 1/4/2022

March 2022 London swaminathan’s Articles; Index 112 (Post No.10803); 2/4

Number Symbolism in Tirumular—2 (Post No.10,804); 2/4

RIG VEDIC ‘KURIRA’ IN SANGAM TAMIL LITERATURE (Post No.10,807); 3 / 4

TWO TAMIL WORDS SHOW AKKADIAN, SUMERIAN LINK (Post No.10,810); 4/4

0RANGE – A TAMIL WORD OR A SANSKRIT WORD? (Post No.10813); 5/4/2022

AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -3 (Post.10,812); 5/4

RIG VEDIC KINGS AND THEIR DATES (Post No.10,817) 6/4

PALLI & HALLI — SANSKRIT WORDS? (Post No.10,820); 7/4

URUGULA!!! EGYPT- SUMERIAN- TAMIL- ATHARVANA VEDA- GREEK LINK !!! (Post.10,823); 8/4

‘BRAHMINS ARE LIVING WONDERS’ LIKE CALIFORNIA BRISTLECONE PINE TREE! (Post No.10,826)9/4

LINGUISTS’ MYTHS ARE EXPLODED BY WOMEN’S SARI/ SAREES (10,829)10/4

BOGEYMAN  (TAMIL PUUCHAANDI) IS A SANSKRIT WORD (Post No.10,840); 13/4

Sexy Tamil Veda Tirukkural scared Christians!  (Post No.10,846); 14/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA (Post No.10,833); 11/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA-3  (Post No.10,842);13/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 4  (Post No.10,850);15/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 5 (Post No.10,853); 16/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 6 (Post No.10,857); 17/4

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 7 (Post No.10861);

18/4

LINGUISTIC ‘EXPERTS’ ARE SCOUNDRELS, IDIOTS, LIARS AND CHARLATANS- 1 (Post.10,865); 19/4

LINGUISTIC ‘EXPERTS’ ARE SCOUNDRELS, IDIOTS, LIARS AND CHARLATANS- 2 (Post.10,869); 20/4

LINGUISTIC ‘EXPERTS’ ARE SCOUNDRELS, IDIOTS, LIARS AND CHARLATANS- 3 (Post No.10,872);21/4

LINGUISTIC ‘EXPERTS’ ARE ,,,,,,,,,, PART- 4 (Post No.10,877); 22/4

Bhagavad Gita – Chitraratha Mystery Solved ! (Post No.10,882); 23/4

BHAGAVAD GITA ‘CHITRA RATHA’ MYSTERY SOLVED-2 (Post No.10,886); 24/4

35 HISTORICAL RECORDS IN THE RIG VEDA (Post No.10,894);26/4

CHANAKYA’S QUOTATIONS; MAY 2022 CALENDAR (Post No.10,898);27/4

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN (Post No.10,903); 28/4

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN -2 (Post No.10,908); 29/4

XXXX

TAMIL ARTICLES

ரிக் வேதத்தில் நெசவாளர்கள் துணிமணிகள் – 1 (Post No.10,799); 1 / 4

ரிக் வேதத்தில் நெசவாளர்கள் துணிமணிகள் – 2 (Post No.10,802) 2/4

குரீர, வடு, திமில் – சொல்  ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post 10,806); 3/4

AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -2 (Post No.10,809); 4/4

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ்-50; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,816); 6/4

தமிழ்ச் சொல்லா ? பள்ளிக்கூடம், பள்ளிவாசல், பள்ளி அறை , மடப்பள்ளி (Post No.10,819);7/4

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு (Post.10,862);18/4

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-51; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் (Post.10,849); 15/4

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-52; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,880); 23/4

பகவத் கீதையில் சுவையான சொல்; (சாப்பாட்டு) ராமன் !(Post No.10,841);13/4

பகவத் கீதையில் சுவையான சொல் சித்ரரதன் (Post No.10,885)- PART 1 24/4

பகவத் கீதையில் சுவையான சொல் சித்திரரதன் -2 (Post No.10, 890); 25/4

ஆரஞ்சுப் பழம் தமிழ் சொல் இல்லை? (Post No.10,815);6/4

சீலை , சேலை தமிழ்ச் சொற்கள் அல்ல! (Post No.10,828); 10/4

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்! (Post No.10,832); 11/4

பூச்சாண்டி தமிழ் சொல் இல்லை! (Post No.10,836); 12/4

அவள் ஒரு சிறுக்கி! அவன் ஒரு சிறுக்கன் !! (Post No.10844)14/4

துயில் எப்படி துகில்  (Y=K) ஆனது ? (Post.10,854); 16/4

தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு (Post No.10,858);17/4

மொழியியல் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்- 1 (Post.10,866) 19/4

மொழியியல் விஷமங்கள்…… 3 கதைகள் – 3 (Post No.10,876); 22/4

மொழியியல் விஷமங்கள்…… 3 கதைகள் – Part 3 (Post No.10,881); 23/4

பொருள் மாறிய சொற்கள்- எண்ணெய், மை , செம்பு, பிள்ளை, சேரி, ஊர்தி (Post No.10,873); 21/4

அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1 (Post No.10, 902);28/4

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2 (Post No.10,907); 29/4

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் -3 (Post No.10,913);30/4

சாணக்கியரின் 31 பொன்மொழிகள்; மே 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,912);30/4

—SUBHAM—

ரிக் வேதத்தில் யமா – யமி SEXY செக்சி உரையாடல் -1 (Post No.10,917)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,917

Date uploaded in London – –    1 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் உள்ள அகஸ்தியர்- லோபாமுத்ரா செக்சி SEXY  உரையாடல் பற்றி முன்னரே  கண்டோம். இப்பொழுது அதே ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி  காம SEXY சம்பாஷணையைக் காண்போம். அதற்கு முன், ஒரு விஷயம்

பறங்கித் தலை வெள்ளைக்காரப் பயல்களுக்கு செக்ஸ் SEX என்றால் மஹா குஷி; உள்ளுக்குள் ரசித்துப் படிக்கலாம்; வெளியே  இந்து மதத்தை ஏசலாம். செக்ஸ் பற்றிக் கதைத்து இந்து மதத்தை ஒழிக்கலாம் என்று எண்ணியவர்கள் திராவிடர்களும் ஐரோப்பியர்களும்.

அண்ணாதுரை எழுதிய ‘கம்பரசம்’ , கண்ணதாசன் எழுதிய ‘வனவாசம்’ மூலம் திராவிடர் ஒழுக்கம் அம்பலமானது. வெள்ளைக்காரர் ஒழுக்கம் பற்றி யாரும் எழுதத் தேவையே இல்லை. .கிழ்கண்ட விஷயங்களால் இந்து மதத்தை வேருடன் சாய்க்கலாம் என்று எண்ணிய இந்தப்பயல்கள் ‘இலவு காத்த கிளி போல’ ஏமாந்தனர் .

1.கோபியர்-கிருஷ்ணர் லீலை –( இந்து மத எதிர்ப்பு கிறிஸ்தவ பிரசார நூல்களில் 200 ஆண்டுகளாக உள்ள விஷயம் )

2. ரிக் வேதத்தில் உள்ள விருஷாகபி என்னும் செக்சி குரங்கு SEXY  MONKEY – இந்திராணி உரையாடல்

3.ரிக் வேதத்தில் உள்ள ஊர்வசி – புரூரவஸ் SEXY செக்சி உரையாடல்

4.ரிக் வேதத்தில் உள்ள அகஸ்தியர் – லோபமுத்திரை செக்சிSEXY  உரையாடல்

5. ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி SEXY செக்சி உரையாடல்

6.ரிக் வேதத்தில் உள்ள சுனஸ்சேபன் – விச்வாமித்ரன் மனித பலி (HUMAN SACRIFICE) சம்பவம்

7.ரிக் வேதத்தில் உள்ள மொத்தம் 30 உரையாடல்கள் (30+++ DIALOGUE HYMNS OF Rig Veda)

8. இந்திரன்- அஹல்யா மானபங்கம் (Indra raping Ahalya)

இவைகளில் உரையாடல் அனைத்தும் ரிக் வேத காலத்தில் யாக யக்ஞங்கள் முடிந்த பின்னர், மக்களை எச்சரிக்க பயன்படுத்தப்பட்ட, நாட்டிய நாடகங்களின் (Dance Drams of Rig Vedic Period)  சுருக்கம் ; அதில் எதுவுமே கெட்டது நடக்கவில்லை. சுனஸ் சேபன் கதையிலும் மனித பலி நடக்கவில்லை. எல்லா மன்னர் பட்டாபிஷேகங்களிலும் அந்த உபன்யாசம் கம்பல்சரி compulsory / கட்டாயம். அதை படிப்போருக்கு வெள்ளிரதம், தங்கக்காசு பரிசுவேறு!  இவை அனைத்தும் வேத இதிஹாச, புராணங்களில் விளக்கமாக உள்ளன.

ஆக மனித எண்ணங்கள் கோண புத்தியாக மாறக்கூடாது என்பதே  நோக்கம். தவறு செய்த இந்திரன் பட்ட துன்பமும் எல்லோருக்கும் உணர்த்தப்பட்டது .

யமா – யமி உரையாடலை  முதலில் படியுங்கள்; பின்னர் விளக்கத்தைக் காண்போம். வெள்ளைக்காரப் பயல்கள், சில்லுண்டிகள் , திராவிடங்கள், மார்க்சீய அரை வேக்காடுகள் இது பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் புஸ்தகங்களை எழுதி இருப்பதால் அனைவரும் அறிய வேண்டிய விஷயம் இவை .

யமனும் யமியும் TWINS இரட்டைக் குழந்தைகள் ; அதாவது சகோதர சகோதரிகள். அப்பா பெயர் விஸ்வவத் , அம்மா பெயர் சரண்யூ .

xxx

ரிக் வேத சூக்தம் 10-10 துதியில் மொத்தம் 14 மந்திரங்கள் ; இருவரும் நல்ல இளமைத் துடிப்புடன் வளர்ந்த பின்னர்தான் இந்த செக்சி சம்பாஷணை sexy dialogue நடந்திருக்க வேண்டும்.

யமி (ரிக் 10-10-1)

ஒரு நண்பனைத் தேடி நான் , சப்தமே இல்லாத இடத்துக்குப் போக விரும்புகிறேன் கடலுக்கு நடுவில், தொடுவானம் மட்டும் தெரியும் மவுனமான இடம் வேண்டும்; இதற்காக நம் தந்தை மூலம், அருமையான மகன் ஒருவனை படைக்கும் கடவுள் படைத்துள்ளான் (அதாவது சகோதரன் யமன்)

(யமனுக்கு அர்த்தம் புரிந்துவிட்டது ; இந்த பொம்பளைக்கு தலையில் செக்ஸ் ஏறி விட்டது தெரிந்தவுடன் யமன் சொல்கிறான்) (ரிக் 10-10-2)

யமீ ! உன் நண்பன் உன்னுடன் ஒத்துழைக்கமாட்டான் எல்லோருக்கும் தெரியும் யாரும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஏனென்றால் , வானத்தை தாங்கி நிற்கும் பலம் வாய்ந்த அசுரர்கள் தொலைதூரம் வரை காணும் சக்தி படைத்தவர்கள்  (அசுரர் என்னும் சொல் இந்திரன், வருணன், அக்நி , வாயு,மித்ரன் எல்லோருக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. புராண காலத்தில் இதற்கு கெட்ட அர்த்தம் வந்துவிட்டது )

யமி

மனிதர்கள் இயற்றிய சட்டத்திட்டங்களில் இருந்து இதற்கு விதிவிலக்கு உண்டு. அதற்கு கடவுளர் அனுமதியும் உண்டு; ஆகையால் உன் இதயத்தை எனக்கு அளிப்பாயாக. கணவன் – மனைவி போல இணைவோமாக.

யமன்

கடந்த காலத்தில் நாம் செய்யாத ஒன்றை இப்போது மட்டும் செய்யலாமா? இதுவரை தூய்மையான சொற்களையே பேசிய நாம் இப்போது அசிங்கமாக பேசுகிறோமே ! நீரில் நீந்தி விளையாடும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் நம் பந்தத்தை சிறப்பிக்கிறார்கள் ; அதுவே உயர்ந்த பந்தம் .

யமி

நானும் நீயும் அம்மாவின் கர்ப்பப் பையில் இருந்தபோதே பெரிய கடவுள் , நம்மை தம்பதிகளாக செய்துவிட்டான்; வானமும் பூமியும் அதற்கு ஆதரவு தருகின்றன.

(வானமும் பூமியும் என்பது ரிக் வேதம் முழுதும் வரும் த்யவுஸ் – பிருத்வீ என்னும் தேவர்கள் ஆவர் )

யமன்

நீ சொல்லும் பழைய நாட்கள் பற்றி யாருக்குத் தெரியும்? யார் அதைப் பார்த்தார்கள் ? யார் அதைப் பற்றி இப்போது பேச இருக்கிறார்கள் ? மித்ர -வருணர்களின் சட்டதிட்டங்களே  பெரிது ; நீ உன் மனம்போன போக்கில் பேசுகிறாயே!

யமி

யமன் மீது காதல் கொண்டுவிட்டேன் ஆகையால் படுக்கையில் அவனுடன் படுக்க விரும்புகிறேன். நான் என் ‘கணவனுடன்’ படுக்கப்போகிறேன். சக்கரங்கள் (ரதங்கள்) போல விரைந்து சென்று நாம்  சந்திப்போம் (மந்திரம் 10-10-7)

யமன் (10-10-8)

இறைவனின் தூதர்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை ; அவர்கள் கண்களை இமைக்கக் கூட மாட்டார்கள் . அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள் ; காம எண்ணம் கொண்ட பெண்ணே, விரைவாக ரதம் போல உருண்டோடி, வேறு ஒரு ஆண் மகனை நாடுவாயாக

தொடரும் ……………………………..

TAGS- யமா – யமி,  காம, SEXY, சம்பாஷணை,,உரையாடல்

வாட்ஸப் மெஸேஜ் பிரச்சனை (Post No.10,916)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,916

Date uploaded in London – –   1 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாழ்வில் நீ கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று,

உனக்கான நேரம் வரும்வரை அடியை பொறுத்துக்கொள்,,,,,,,,,

குழந்தை மைதானத்தில் விளையாடினால்

ஆடை மட்டும் மண்ணாகும்,

குழந்தை மொபைலில் விளையாடினால்

குழந்தையே மண்ணாகும்.

விமலா – ஏண்டி கவலையா இருக்கே???

கமலா – ஒண்ணும் இல்லேடி ……. என்பையன்

ஸ்கூலுக்கு போய் மூணு மாசமாகுது…….

விமலா – ஏன் என்ன ஆச்சு???

கமலா – மூணு மாசம் முன்னாடி, அவன் காணாம

போனான். என் வீட்டுக்காரர் போட்டோவோட

வாட்ஸப்லே மெஸேஜ் போட்டார். மறுநாளே

அவன் வீட்டுல கொண்டுவந்து சேத்துட்டாங்க…..

விமலா – வாவ்…. !!! உண்மையிலேயே வாட்ஸப்

எவ்வளவு உபயோகம்!!!

கமலா – இப்போ அதே தான் பிரச்சனை ஆகிடிச்சு

அவனால ஸ்கூலுக்கு போக முடியலே…..அவன் வெளியே

போனாலே யாராவது வீட்ல கொண்டு வந்து விட்டுடறாங்க

அந்த வாட்ஸப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு அடிச்சுக்கிட்டே

இருக்கு……. நிறுத்த முடியலே………..

குறிப்பு – பழைய செய்தியை திரும்ப திரும்ப share

செய்பவர்களுக்கு சமர்ப்பணம்!!!

xxxx

ஆட்டோவில் செல்பவரும், டிரைவரும் பேசிக்கொண்டது

டிரைவர், லெப்ட்டுல போகணும்

“ரைட் ஸார்”

லெப்ப்ட்டுப்பா…….லெப்ட்டு………

‘ரைட் ஸார்”

என்னப்பா லெப்ட்டு லெப்ட்டு ன்னு சொல்றேன்

நீ பாட்டுக்கு ரைட் ரைட்ன்னு சொல்றே…..

என்ன ஸார் நீ தான் ரைட்டு ரைட்டு சொல்றே

நா சரி ‘, சரி் ; சொல்றேனே, இது கூட புர்யாதா உன்கு…….

Xxxx subham xxxxx

Your Mind is a Garden, Your Thoughts are Seeds, The Harvest is ……….. (Post No.10,915)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,915

Date uploaded in London – –   1 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 47

Kattukutty

TECHNOLOGY UPDATE -1

There is a device in the market which coverts your THOUGHTS

Into speech……..

It is called ALCOHOL!!!

TECHNOLOGY UPDATE -2

There is another device which coverts your SPEECH

into silence.

It is called WIFE !!!

TECHNOLOGY UPDATE -3

There is another device which converts your fak eFORWARDS

into BELIEF !!!

It is called WHATSUP !!!

Life is flowing like a river with unexpected turns.

May be GOOD may be BAD……

Learn to enjoy each turn because all the turns

Never returns!!!

It is not what you do,

It is how you do it,

It is not what you see,

It is how you look at it,

It is not how your life is,

It is how you live it !!!

Your mind is a garden,

Your thoughts are seeds,

The harvest can either be

Flowers or weeds………..

Happiness is an inner joy….

It is a delicate balance between

What i want and

What i have………….!!!

The road to success is not straight.

There are curves and loops.

You will have flat tires, but if you have a

Spare called strength, and a driver

called GOD, you will make it!!!

People do not decide their future.

They decide their habits,

And the habit decides their

future ……….

—subham —

S.NAGARAJAN ARTICLE INDEX FOR APRIL 2022 (Post 10,914)

S.NAGARAJAN ARTICLE INDEX FOR APRIL 2022 (Post 10,914)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,914

Date uploaded in London – –     1 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SNR Article Index : April 2022

APRIL  2022

 1-4-2022. 10798 SNR Article Index March 2022

 2-4-2022  10801 பெரிய நகரங்களில் சூழல் கேடுகள் AIR உரை 8 29-3-22 ஒலிபரப்பு

            இமயம் முதல் குமரி வரை பாதிப்பு AIR உரை 9 30-3-22 ஒலிபரப்பு

3-4-2022  10805 கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார் (யோக

             வாசிஷ்டம்)

4-4-2022 10808 இடையின எழுத்துப் பாட்டு!

5-4-2022 10811 அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்!

6-4-2022 10814 அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்! (மாலைமலர் 5-4- 22

             கட்டுரை)

7-4-2022 10818 கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்

             (கொங்கு மண்டல சதகம் பாடல் 49)

8-4-2022  10821   பிறிது படு பாட்டு – 1

9-4-2022 10824 இந்தியாவின் சாதனை – மூன்றாவது தடவையாக பத்தாவது

             இடத்தைத் தக்க வைத்திருக்கிறது! – AIR உரை 10 31-3-22 ஒலிபரப்பு

10-4-2022 10827 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! (ஹெல்த்கேர் ஏப்ரல் 22 கட்டுரை)

11-4-2022 10830 ஒரு பாடலில் ஏழு பாடல்கள் (சப்த பங்கி)

12-4-2022 10834 ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் (நவபங்கி)

13-4-2022 10838 அந்தமானைப் பாருங்கள் அழகு! (மாலைமலர் 12-4-22 கட்டுரை)

14-4-2022   10843   பிரித்தெதிர் செய்யுள்

15-4-2022 10847 நிரோட்டம் – 1

16-4-2022 10851  நிரோட்டம் – 2

17-4-2022 10855  பிறிது படு பாட்டு – 2

18-4-2022 10859  வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 1

19-4-2022 10863  வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2  

20-4-2022 10867  அகஸ்தியர் இட்ட சாபம்!

21-4-2022 10870  வெல்ல முடியாத நகரம் லண்டன்! (மாலைமலர் 19-4-22 கட்டுரை)

22-4-2022 10874    கோவிட் சீன்ஸ்! (Covid Scenes)

23-4-2022 10878  ஓரெழுத்து வர்க்கப் பாட்டு!

24-4-2022 10883  அகஸ்தியர் கடல் நீரைக் குடித்த வரலாறு!

25-4-2022 10887  இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம் – 1

26-4-2022 10891  இந்தோனேஷியாவில் சப்தபலோன் கொடுத்த சாபம் – 2

27-4-2022 10895  அப்பர் கேள்விகளும் பதில்களும் : குரு பூஜை தின உரை  – 1  

              (24-4-2022 உரை)

28-4-2022 10899  அப்பர் கேள்விகளும் பதில்களும் : குரு பூஜை தின உரை  – 2  

              (24-4-2022 உரை)

29-4-2022 10904 யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!:

30-4-2022 10909 உலகின் தூய்மைத் தலைநகரம் சிங்கப்பூர் (மாலைமலர் 26-4-22

              கட்டுரை)

***