இந்து சமய சந்யாசிகள் பற்றி  ரோமானிய அறிஞர் விமர்சனம் (Post.11,031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,031

Date uploaded in London – –    19 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்து சமய சந்யாசிகள் பற்றி  ரோமானிய அறிஞர் விமர்சனம்

ரோம் நகர ஆட்சிக்குட்பட்டு  இருந்த  ஆப்ரிக்க நாடு அல்ஜீரியா. அந்தக் காலத்தில் அதற்கு நுமீடியா என்று பெயர்.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு லத்தீன் மொழி எழுத்தாளர் அபூலியஸ் (Apuleius CE.125-180) வசித்துவந்தார். அவர் எழுதிய தங்கக் கழுதை (The Golden Ass)  என்ற ஒரே ஒரு நாவல் மட்டும் லத்தீன் மொழியை அலங்கரிக்கிறது . அவர் எழுதிய பிற விஷயங்களில் இந்து மத சந்யாசிகள் பற்றிய கருத்து உள்ளது. அது அக்கால இந்தியாவைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதோ அவரது கருத்து:-

“இந்தியர்களில் உயர்ந்த வகுப்பு ஒன்று உள்ளது . அவர்கள் ஜிம்னோசோபிஸ்ட்  (Gymnosophist குறைந்த ஆடைகள் அணிந்த இந்து சந்யாசிகளை கிரேக்கர்களும், ரோமானியர்களும் இப்படி அழைத்தனர்) ஆவர். மற்ற எல்லோரையும் வீட அவர்களைத்தான் நான் புகழ்ந்து உரைப்பேன். அவர்களுக்கு திராட்சைக் கொடிகளை வைத்து தோட்டம் போடத் தெரியாது . மரங்களை ஓட்டுப்போட்டு வளர்ப்பதையும் அவர்கள் அறியார். நிலத்தை உழுது பயிரிடவும் தெரியாது. தங்கத்தை சுத்தப்படுத்துவதோ , குதிரை ஏறி சவாரி செய்வதையோ, காளை மாடுகளை அடக்குவதோ, ஆட்டின் ரோமத்தை கத்தரிப்பதோ, ஆடு மாடுகளை மேய்ப்பதோ அவர்களுக்கு கொஞ்சமும் தெரியாது . அவர்களைப் பற்றிச் சொல்ல என்னதான் இருக்கிறது?

“இப்படித் தெரியாத விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்று மட்டும் தெரியும். அறிவையும் ஞானத்தையும் மட்டும் நாடிச் செல்வது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய குருமார்களும் இளம் சீடர்களும் அறிவு வேட்கை உடையோர் ஆவர் . அவர்களுடைய குணங்களில் நான் மிகவும் புகழ்வது என்ன தெரியுமா? மனதுக்கு ஓய்வே தரமாட்டார்கள். சோம்பேறித்தனமான எண்ணமே அவர்களிடம் கிடையாது .சாப்பாடு சமைத்து எல்லோருக்கும் பரிமாற இருக்கையில், யார் என்ன வேலை செய்து கொண்டு  இருந்தாலும்  ஒரு இடத்தில் குழுமி விடுவார்கள். உடனே அவர்களுடைய ஆச்சாரியார் (ஆசிரியர்) ஒரு கேள்வி கேட்பார். காலை முதல் இந்த நேரம் வரை நீ செய்த நல்ல காரியம் என்ன? என்று கேட்பார்.

ஒரு மாணவன் சொல்லுவான்- நான் சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரிடையே சமாதானம் செய்துவைத்தேன் ; அவர்களிடையே நிலவிய சந்தேகங்களை அகற்றினேன். இப்போது அவர்கள் இருவரும் பகைமை நீங்கி நல்ல நண் பர்கள் ஆகிவிட்டனர்.

மற்றோரு மாணவன் சொல்லுவான் – என் அப்பா அம்மா இட்ட கட்டளையை நான் இன்று செய்துவிட்டேன்.

இன்னும் ஒருவன் சொல்லுவான் – எனக்கு இருந்த ஐயங்களை நான் சிந்தித்து அகற்றிவிட்டேன் அல்லது பிறர் சொன்ன விளக்கங்களால் சந்தேகங்கள் அறவே நீங்கின.

யாராவது ஒருவன் ஒன்றுமே சொல்லாவிட்டால், அவனுக்கு சாப்பாடு கிடையாது. ஏதேனும் நல்லது செய்துவிட்டு வா என்று குரு அனுப்பிவிடுவார்”.

Xxx

பாணினியின் இலக்கணத்துக்கு பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்ய பேருரையில் இதே போல ஒரு விஷயமும் வருகிறது. அவர் ‘சிஷ்டா’ என்பதற்கு விளக்கம் தருகிறார்.

சிஷ்டா என்பவன் உயர் கல்வி கற்றவன் ; கற்றபின் அதற்குத் தக நிற்பவன். அதாவது அறிஞன்; ஒழுக்க சீலன்.

இதை பதஞ்சலியும் விளக்குகிறார்.

யார் சிஷ்டா ?

எ வன் ஒருவன் கற்றபடி நடக்கிறானோ அவனே சிஷ்டன் . இதை ஆரியா வர் த த்தில் மட்டுமே காண முடிகிறது. ஆர்யா வர்த்ததில் வாழும் பிராமணர்கள் வேண்டிய அ ளவு மட்டுமே தானியத்தைச் சேமித்து வைக்கின்றனர்.பேராசை என்பதே இல்லை. பற்று அற்றவர்களாக வாழ்கின்றனர்.எந்த ஒரு துறையைக் கற்றாலும் எளிதாக எல்லை வரை சென்றுவிடுவார்கள்; அவர்களே எல்லோரும் மதிக்கத்தக்க சிஷ்டா ஆவர் .

Xxx

கும்பிதான்யமும் குஸூல தானியமும்

அவர்கள் பணக்காரர் அல்ல. கும்பி தான்யம் உடையோர்.

கும்பிதான்யம் என்றால் என்ன?

நாம் படி, மரக்கால் என்று சொல்லுவது போல ஒரு அளவு ‘கும்பி’ ஆகும். ஆழாக்கு, உழக்கு என்பது போல இது ஒரு அளவு. அதில் தானியம் இருந்தால் இரண்டு நாட்களுக்குத் தான் சாப்பிட அரிசி இருக்கும் ; அதற்கு  மேல் வீட்டில் வேறு எங்கும் தானியம் இருக்காது. இதை பதஞ்சசலியின் மஹாபாஷ்யத்தின் மீதான நாராயணீய உரை விளக்குகிறது

பதஞ்சசாலியும் கூட கும்பி தான்யம் பற்றி விளக்குகிற்றார் :-

வேதம் கற்கும் ஒருவனை கும்பி தான்யம் உடையவன் என்பர் ; அதன் அர்த்தம் என்ன? கும்பி என்னும் அளவுக்கே தானியம் உடையவன்; அதாவது வீட்டில் வேறு எங்கும் தானிய சேமிப்பு இல்லை.

இதற்கு நேர் மாறானது ‘குஸுல தான்ய’. அதாவது வீட்டில் பெரிய குதிர்கள் நிறைய நெல்லோ அரிசியோ இருக்கும். அவர்கள் பணக்காரர்கள்.

ஆதிகாலத்தில் பிராமணர்கள் சேமித்து வைக்காததால் தினமும் வேலைக்குச் சென்று சம்பாதித்து ஆக வேண்டும்.சோம்பேறித்த த்னத்துக்கே இடம் இல்லை.

இவ்வாறு ஆசை என்பதே இல்லாமல், பற்றற்று வாழ்ந்ததால்; அறிவு வேட்கை மட்டுமே, பிழைப்பு ஊதியமாக இருந்ததால் மன்னர்களும் பிரபுக்களும் அவர்களுக்கு வாரி வழங்கினார்கள். மாபெரும் மெளரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கின சாணக்கியன் இறுதிவரை குடிசையிலேயே வாழ்ந்ததாக சம்ஸ்க்ருத நூல்கள் செப்புகின்றன.

–subham—

Tags- பதஞ்சலி , கும்பிதான்யம் , சிஷ்டா, அபூலியஸ் , இந்து சந்யாசிகள்,

Leave a comment

Leave a comment