போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்! (Post No.11043)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,043

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்!

ச.நாகராஜன்

போதிதர்மர் மவுண்ட் சாங்கில் (Mt Song) ஒன்பது வருடம் காலம் தங்கி இருந்த பின்னர் ஷாலின் ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக அங்கிருந்து கிளம்பலானார். ஒரு புதிய அரசாங்கம் இந்த ஆலயத்தை நிறுவ ஆதரவை அளித்தது.

கிளம்புவதற்கு முன் போதிதர்மர் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்தார்.

“சீடர்களே! கிளம்புவதற்கான தருணம் இதோ வந்து விட்டது. இதுகாறும் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதை விளக்கும் விதமாக ஏதேனும் கூறுங்கள்” என்று அவர் கூறினார்.

சிஷ்யர்களில் மூத்தவரான டாவோ செங் ஃபு [Dao Fu (Seng Fu)] என்பவர் எழுந்தார்.

“எனது  பார்வையில், அது வார்த்தைகளுக்கோ சொற்றொடர்களுக்கோ அடங்காதது. அல்லது அது வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களிலிருந்து தனித்து இல்லாதது. இது தான் அந்த வழியின் செயல்பாடு.” என்று கூறினார் அவர்.

உடனே போதிதர்மர், “நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து எழுந்த ஜோங் சி (Zong Chi) என்ற சந்யாசினி கூறினார்: “நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அது அக்‌ஷோப்ய புத்தாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதில் ஒரு புகழ் வாய்ந்த சிறு கண்ணோட்டமே. ஒரு தடவை பார்த்து விட்டால் அதை மறுமுறை பார்க்கத் தேவையில்லை.”

(அக்க்ஷோப்ய என்றால்அசையாதது, என்றும் நேராக இருப்பது, நிலையானது என்று பொருள்)

உடனே போதிதர்மர், “நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து டாவோ யு (Dao Yu) என்ற சீடர் எழுந்து கூறினார்:

“நான்கு பூதங்களும், சூன்யம் தான். விழிப்புணர்வின் ஐந்து அங்கங்கள் உண்மையில் இருக்கையில்லாமல் உள்ளவையே. நான் பார்க்கையில் ஒரு நிகழ்வும் கூட புரிந்து கொள்வதற்காக இல்லை.”

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

கடைசியில் ஹூய்க் (Huike) எழுந்து அவரை வணங்கி நிமிர்ந்து நின்றார்.

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

பின்னால் அனைவரும் இவையெல்லாம் மேலோட்டமான மற்றும் ஆழமான நிலைகள் தாம்!  ஆனால் இவையெல்லாம் முன்னோர் கூறியதன் அர்த்தம் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டனர்.

“நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்பது கூண்டு விளக்குகளையும் தூண்களையும் பற்றிப் பேசுவது போல ஆகும்.

“நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்பது “இந்த மனமே தான் புத்தர்” என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்பது மலைகள், ஆறுகள் மற்றும் இந்த பெரிய பூமியைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்பது ஒரு மலரைச் சுழற்றுவதற்கும் கண்களை இமைப்பதற்கும் ஒப்பாகும்.

எதுவுமே மேலோட்டமானதும் இல்லை, ஆழமானதும் இல்லை. எதுவும் மேலானதில்லை அல்லது கீழானதில்லை.

இப்படிப் பார்த்தால், அப்போது தான் முன்னோர் கூறியதை உன்னால் பார்க்க முடியும்.

இரண்டாம் நிலை முன்னோரைப் பார்த்தால் நீ காவி உடை மற்றும் பிக்ஷா பாத்திரத்தின் மாறுதல் நிலையை உன்னால் பெற முடியும்.

விழிப்புணர்வு பெற்ற முன்னோரின் தர்ம சக்கரத்தின் சக்தியானது மிகவும் பெரியதாகும், அது பிரபஞ்சம் முழுவதையும் சுழல வைக்கும், ஒவ்வொரு அணுவையும் சுழற்ற வல்லது.

ஹூய்க்கின் கரங்களில் காவி உடையும் பிக்ஷா பாத்திரமும் மாற்றப்பட்டாலும் கூட, சத்தியமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கேட்கும்.

கூட்டம் முடிந்தது.

அனைவரும் புரிந்து கொண்டனர்.

போதிதர்மர் அங்கிருந்து ஷாலின் ஆலயத்தை நிறுவக் கிளம்பினார்.

***

tags-  போதிதர்மர் , ஷாலின் ஆலயம்

Leave a comment

Leave a comment