ஞான மொழிகள்- 82; சிரிக்காவிட்டால் விடமாட்டேன் (Post No.11,026)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,026

Date uploaded in London – –    18 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

PART-3

மாப்பிள்ளை பெரிய ரவுடியாஇருப்பாரோ??

ஏன அப்பிடி கேக்குறீங்க?

பார்டர்ல ஜரிகை வச்ச லுங்கி வேணும்ன்னு கேக்குறாரே?

xxxx

நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?

வேலூரா?அல்லது பாளையங்கோடையா?

xxx

தேவைப்பட்டா நீங்க கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லணும்……

தேவைப்படல்லேனா???

ஸ்டேஷனுக்கு வந்து மாமூல் தரணும்!

xxxx

தலைவர் கிட்ட யார்

கடன்கேட்டாலும் வட்டி

பிடிச்சுக்கிட்டுத்தான் தருவார்……

மகளிர் அணி தலைவி கேட்டா?

கட்டி பிடிச்சுக்கிட்டுத்தான் தருவார்.

xxx

நம்ம மன்னர், போரிலிருந்து வருவதற்கும்,

bar லிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்…..

போரிலிருந்து வரும்போது அலறிக்கொண்டு வருவார்,

Barலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!

xxx

என்னோட நாலு தம்பிங்க குளத்தில விழுந்துட்டாங்க.

ஒருத்தன் தலை முடிதான் கிடைச்சது?

அப்படியா, மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?

இல்லை அ வங்க மூணு பேரும் மொட்டை!

xxx

என்ன தரகரே, பொண்ணப் பாக்கணும்ன்னு சொன்னா

சுடு காட்டுக்கு கூட்டுட்டு வந்திருக்கீங்க……

நீங்கதான “அடக்கமான” பொண்ணு வேணும்ன்னு கேட்டீங்க?

xxx

இந்த வழக்குல நான் ஜெயித்து கொடுத்தா என்ன கொடுப்பீங்க?

அடுத்த தடவை அடிக்கிறதுல ஆளுக்கு பாதி?

என்ன deal ஒகே யா ?

xxx

என்ன….சார் உங்க வீட்ல திருடனவன் கிட்ட ஆட்டோ கிராப்

வாங்கணுமா?

அவன் என் மனைவி கன்னத்துல பளார் பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலிருந்து நான், அவன் விசிறி ஆகிவிட்டேன் சார்!

xxx

டிப்பார்ட்மென்ட்டுக்கே “தண்ணி” காட்டிட்டு இருந்தவன

எப்படி பிடிச்சீங்க?

‘மாமூல்”தொகையில் 40% தள்ளுபடி, ன்னு ஒரு திட்டத்த அறிவிச்சேன் ,

பய சிக்கிட்டான்!

xxx

நோயாளி – ஹலோ டாக்டர்,உங்கள வந்து பார்க்கணும்.

நீங்க எப்ப free?

டாக்டர் – எப்ப வந்தாலும் free கிடையாது…..பீஸ் வாங்குவேன்!

xxx

என் பையன் வீட்ட விட்டு ஓடிப்போனதிலிருந்து வீட்டு

வேலையெல்லாம் அப்படியே கிடக்குது………

ஏன் ? வேலைக்காரி என்ன ஆனாள்?

அவன் ஓடிப்போனதே அவளோடுதான்!

xxx

மனைவி – (நோய்வாய் பட்டு படுக்கையில்)நான் இறந்து விட்டால்

நீங்கள் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வீர்களா?

கணவன் – இதற்கு பதில் சொல்வது கஷ்டம்

மனைவி – ஏன் அப்படி?

கணவன் – நான் செய்து கொள்வேன் என்றால் நீ கோபித்துக்

கொள்வாய்.நான் செய்து கொள்ள மாட்டேன் என்றால் நீ

பிழைத்துக் கொள்வாய்…….

Xxx

எங்க வீட்டுக்கு வர பிச்சைக்காரன் டெய்லி பாட்டுப் பாடி

மிரட்டித்தான் பிச்சை கேட்பான்

எப்படி?

தனியொருவனுக்கு உணவில்லைஎனில் ஜகத்தினை

அழித்துடுவோம்ன்னு பாடுவான்!

Xxx

பத்திரிக்கை ஆபீஸுக்கு எதுக்குடா போய்ட்டு வர?

வி ளம்பரம் கொடுக்கத்தான்…….

என்ன விளம்பரம்டா?

பிளஸ் டூ–ல என நம்பரைக் காணோம். கண்டு பிடித்து தருவோர்க்கு.

தக்க சன்மானம் வழங்கப்படும என்றுதான்!

xxxx

அவர் எப்படி போலி டாக்டர்ன்னு சொல்லற.?

பின்ன, மனசு உடஞ்சு போச்சு டாக்டர்ன்னு சொன்னேன்.

மாவு கட்டு போட்டு குணப்படுத்திறேன்னு சொல்றாரே!

xxx

நீ பரிட்சையில் பெயில ஆனதற்றகு யார் காரணம்?

அரசியல்வாதி மகன்- நான பெயில் ஆனதற்கு ஆளும்

கட்சியின் திட்டமிட்ட சதிதான் காரணம்!

xxx

ஒருசர்தார்ஜி புதுசா ஒரு கார் வாங்கினார்.

அந்தக் காருக்கு பின்னாடிதான இன்ஜின்.

சர்தாரஜி காரில் சென்று கொண்டிருக்கும்போது

நடு  ரோட்டில் கார் நின்றது. டூல் பாக்ஸை எடுத்து முன்

புறம் போய்தி றந்ததார்.அங்கு இன்ஜின் இல்லாதது

கண்டு அதிர்ச்சி அடைந்தார். “ஓ “வன்று அழுதார்!

அப்போது இன்னொரு சர்தார்ஜி அதே பிராண்ட்

காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.அழும் சர்தார்ஜியை

பார்த்து வண்டியை நிறுத்தினார்,

ஏனப்பா அழுகிறாய் ? என்று கேட்டார்.

“இஞ்சினே   ல்லாம எனக்கு காரை கொடுத்து

ஏமாத்திட்டான்” என்று அழுதார் சர்தார்ஜி!

உடனே இந்த சர்தார்ஜி, “சேச்சே, இதுக்கு போய்

அழலாமா? என்காரின் பின்னால ஒரு இன்ஜின்

எக்ஸ்ட்ராவா கொடுத்திட்டான் அதை எடுத்துக்கொ

என்றார்!!!

Xxxx

Last but not least……

ஒருகாரை எட்டு பேர் தள்ளினாங்க, கார் ஒரு அடிகூட

நகரல்ல ஏன் தெரியுமா?

தெரியல்லையே?

கார் முன்னாடி நாலு சர்தாரஜியும், கார் பின்னாடி நாலு

சர்தார்ஜியும் தள்ளினாங்க!

THE END

Tags-  ஞான மொழிகள்- 82

உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய 1001 அபூர்வ கருத்துக்கள்! (Post.11,025)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,025

Date uploaded in London – –    18 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய 1001 அபூர்வ கருத்துக்கள்!

ச.நாகராஜன்

மனித குலத்தை வளப்படுத்திய கருத்துக்கள் ஏராளம். அவ்வப்பொழுது ஆங்காங்கே தோன்றிய மகான்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் தங்களது கருத்துக்களை மக்கள் முன்னே வைப்பார்கள்.

அதைக் கேட்டு வியந்து போகும் மனித குலம் ஒரு அடி முன்னே வைக்கும்.

இப்படி உள்ள கருத்துக்களில் முக்கியமான 1001 கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறார் ராபர்ட் ஆர்ப், 1001 ஐடியாஸ் தட் சேஞ்ஜ்ட் தி வே வீ திங்க் (1001 Ideas that changed the way we think) என்ற தனது புத்தகத்தில்!

பழங்காலம், மத்திய காலம், நவீன காலத்தின் முற்பகுதி, பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டு, சம காலம் (1950 முதல் தற்போதைய காலம் வரை) என ஆறு பகுதிகளாக வரலாற்றுக் காலத்தைப் பிரித்து உலகின் சிந்தனையாளர்கள் தந்த கருத்துக்களை சுருக்கமாக ஆனால் தெளிவாக இந்த நூலில் பார்க்க முடிகிறது.

சமகாலத்தை எடுத்துக் கொள்வோம் :-

1950இல் பாப் மியூஸிக், க்ரெடிட் கார்டுகள், ஃபெர்மி பாரடாக்ஸ், என்னியாகிராம் (Enneagram), 1951இல் ராக் அன் ரோல், 1952இல் ஸயிண்டாலஜி, 1952இல் பாரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 1953இல் மரபணு பற்றிய டிஎன் ஏ டபிள் ஹெலிக்ஸ், 1954இல் வேல்யூ ஆடட் டாக்ஸ், 1957இல் ஏலியன் அப்டக் ஷன், 1957இல் மெனி வோர்ல்ட் தியரி, 1961இல் ட் ரேக்  ஈக் வேஷன், 1962இல் பர்ஸனாலிடி இண்டிகேடர், 1963இல் கயாஸ் தியரி, 1964இல் ஹிக்ஸ் போஸான், 1965இல் க்ரயானிக்ஸ், 1966இல் டேடா பேஸ், 1967இல் அடாமிக் மாடல், 1968இல் பிபிளிகல் ரிடாரிகள் க்ரிடிஸிஸம், 1969இல் பட்டர்ஃப்ளை எபக்ட், 1970இல் ரீ சைக்ளிங், 1971இல் ப்ரேக் டான்ஸிங், 1972இல் ஜீன் தெராபி, 1973இல் ஜிபிஎஸ், 1974இல் ஜெனிடிக் எஞ்சினியரிங், 1975இல் நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ், 1976இல் மிஸ்ஸிங் லெட்டர் எஃபக்ட், 1977இல் ஆர் எஸ் ஏ அலாக்ரிதம், 1978இல் க்ரிடிக் ஆஃப் ஓரியண்டாலிஸம், 1979இல் ராப் மியூஸிக், 1980இல் ஒரிஜினாலிஸம் என இப்படி கருத்துக் குவியலைப் பார்க்கும் போது பிரமிப்படைய வேண்டியிருக்கிறது.

சிந்தனையின் வித்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விதைக்கப்பட அது காலப் போக்கில் பெரிதாக வளர்ந்து பயன் தருவதைப் பார்த்து வியக்கலாம்.

சிந்தனையைத் தூண்டியவர் யார், கண்டுபிடித்தவர் யார், அது எந்த விஷயத்தைச் சார்ந்தது, அதன் விளக்கம் என  விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டிருக்கிறது.

ஒரு பெயரை எடுத்துக் கொண்டு அதன் மூலமும் விளக்கத்தைப் பெறலாம். எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டீன் என்று எடுத்துக் கொண்டால் 1905ம் ஆண்டு அவர் முன் வைத்த ‘ஸ்பெஷல் ரிலேடிவிடி’ பற்றிய கொள்கையைக் காணலாம். ஐஸக் நியூட்டன் என்றால் 1687இல் அவர் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிய கொள்கையைப் பற்றிக் காணலாம்.

இன்னும் ஜோதிடம், மறுபிறப்பு, விண்வெளி என இப்படி பல விஷயங்களைப் பற்றியும் உடனடியாக பின்னால் தரப்பட்டுள்ள இண்டெக்ஸ் மூலமாக குறிப்பிட்ட பக்கத்தை நாட முடிகிறது.

மொத்தத்தில் உலகப் போக்கு மாறிய விதத்தைச் சுவையான, சுருக்கமான விளக்கத்துடன் படித்துத் தெளிந்து கொள்ள இந்த நூலை நாடிப் படிக்கலாம்.

மொத்தப் பக்கங்கள் 960 விலை – 32 $.

***

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 57 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,024)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,024

Date uploaded in London – –    17 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 57 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

யக்ஞ பாவிதாஹா 3-12 வேள்வியால் போற்றப்பட்டு

யக்ஞ விதஹ 4-30  யக்ஞத்தை உணர்ந்தவர்கள்

யக்ஞ சிஷ்டாம்ருதபுஜஹ 4-31 யக்ஞம் செய்து எஞ்சிய இன்னமுதை  உண்ணுவோர்

யக்ஞ சிஷ்டாசினஹ  3-13  வேள்வி செய்து மிஞ்சியதை உண்ணும்

யக்ஞம் 4-25  வேள்வி

யக்ஞாத் 3-14 யக்ஞத்திலிருந்து

யக்ஞானாம் 10-25 யக்ஞங்களில்

யக்ஞாய 4-23 வேள்வியின் பொருட்டு

யக்ஞார்தாத் 3-9   யக்ஞத்திற்காக

யக்ஞாஹா 4-32  பலவித வேள்விகள்         10 words

யக்ஞேன 4-25 ஆன்மாவைக்கொண்டே

யக்ஞைஹி 9-20 வேள்விகளால்

யத சித்தஸ்ய 6-19 அடங்கிய சித்தத்துக்கு

யதசித்தாத்மா 4-21 உள்ளத்தையும் உடலையும் அடக்கியவன்

யத  சித்தேந்த்ரிய க்ருயஹ 6-12 மனம், இந்திரியங்களின் செயல்களை அடக்கியவன்

யத சேதஸாம் 5-26 அடங்கிய சித்தம் உடையவர்களும்

யததகஹ 2-60 முயற்சியுடையவன்

யததா 6-36 முயற்சி செய்பவனால்

யததாம் 7-3 முயற்சி செய்வோரில்  20 words

யததி 7-3 முயற்சி செய்கிறான்

யததே 6-43  முயல்கிறான்

யத வாக் காய மானஸஹ 18-52

யதந்தஹ  9-14 முயற்சியுடையவர்களாய்

யதந்தி 7-29 முயல்கின்றார்களோ

யத மானஹ  12-11 அப்யசிக்கும்

யதயஹ 4-28 விடா முயற்சி உடையோர்

யதஹ 6-26 எந்த எந்த

யத ஆத்மாவான் 12-11 அடங்கிய மனத்தினாய்

யதாத்மா 12-14   அடங்கிய மனத்தினாய்

     30 words

யதாத்மானஹ 5-25  எவருடைய இந்திரியங்கள் அடங்கினவோ

யதீனாம் 5-26 ஸந்யாஸிகளுக்கு

யதேந்த்ரிய மனோபுத்திஹி 5-28 இந்திரியம், மனம், புத்தி இவற்றை அடக்கியவனாய்

யத் ப்ரபாவஹ 13-3 எத்திறத்தினன் என்றும்

யத்ர 6-20 எந்த நிலையில், எங்கு

யதா 2-13 YATHAA எப்படியோ

யதாபாகம் 1-11  அவரவர் இடத்தில்

யதாவத் 18-19 உள்ளபடி

யதா 2-52 எப்பொழுது YADHAA

யதி 1-38 என்றாலும்    40 words

யத் ருச்சயா 2-32 தற்செயலாய்

யத் ருச்சாலாப ஸந்துஷ்டஹ 4-22

யத்வத் 2-70 எவ்வாறு

யத்விகாரி 13-3 என்ன வேறுபாடு உடையது

யந்த்ரா ரூடானி 18-61 தேகமாகிய எந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போல

யமஹ 10-29  யமன்

யயா 2-39  இந்த

யசஹ 10-5 கீர்த்தி, புகழ்

யஷ்டவ்யம் 17-11 செய்யவேண்டியது கடமை

யஸ்மாத் 12-15 எவனிடமிருந்து

யஸ்மின் 6-22 எதில்

யஸ்ய 2-61 எவனுடைய

யஸ்யாம் 2-69  எதில்

யம் 2-15  எந்த

யா 2-69 எது

யாதயாமம் 17-10 சமைத்து ஆறிப்போனது

யாதி 6-45 அடைகின்றான்

யாதவ 11-41 யாதவா

யாதஸாம் 10-29 நீர் வாழ்வனவற்றுள்

யாத்ருக் 13-3 எவ்வகைத்து        60 words

யான் 2-6  எவர்களை

யாந்தி 3-33  ஒழுகுகின்றன

யாபிஹி 10-16 எந்தெந்த

யாவத் 1-22  எதுவரை நின்று பார்த்தால்

யாவான் 2-46  எங்கனம் அடங்கியுள்ளதோ

யாஸ்யஸி  2-35  அடைவாய்

யாம் 2-42  எந்த

யாஹா 14-4  எந்தெந்த

67  words added from part 57 of Gita word index

To be continued…………………………….

tag- gita word index 57

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 1 (Post No.11,023)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,023

Date uploaded in London – –    17 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கல்ஹணர் யார்?

அவர் காஷ்மீரி பிராமணன்; இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியர் (வெள்ளைக்காரன் கணக்குப்படி); அவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய புஸ்தகத்துக்கு ராஜதரங்கிணி என்று பெயர். அரசர்களின் ஆறு என்று ஆங்கிலத்தில் ஆர்.எஸ்.பண்டிட் மொழிபெயர்த்துள்ளார். நேருஜியின் சொந்தக்காரர். இந்தப் புஸ்தகத்தில் சுமார் 8000 சம்ஸ்க்ருத ஸ்லோகக்ங்கள் இருக்கின்றன. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதை எழுதினார்.

கலியுகம் போன்ற வருஷங்களைச் சொல்லாமல் தற்கால ஆண்டுகளை பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள், கல்ஹணர்தான் முதல் வரலாற்று ஆசிரியர் என்று பிதற்றுவர். அவர் முதல் 4 அத்தியாயங்களில் சொன்னதை ஒதுக்கிவிட்டனர். கடைசி நாலு அத்தியாயங்களில் சொன்னதை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்வர் வெளிநாட்டார் !

அவர் சொன்ன அதிசய விஷயங்கள்

1.கலியுகம் என்பது கி.மு. 3102-ல் துவங்கவில்லை; அதற்கு 653 ஆண்டுகளுக்குப் பின்னரே துவங்கியது என்பது அவரது கொள்கை

2.ராவணன், விபீஷணன், யுதிஷ்டிரன் என்ற பெயர்களில் கி.மு. காலத்தில் காஷ்மீரி அரசர்கள் இருந்தனர்.

3.அக்னி செளச என்ற மான், தீயில் விழுந்து தன்னை சுத்தம் செய்துகொள்ளும் (5-15)

4.கிளிகள் கொண்டுவந்த முத்துக்களைக் கொண்டு கோவிலில் அலங்காரம் செய்தனர்; இதை அமைத்தவர் பிரபாகர் வர்மன் என்னும் அமைச்சர் ஆவார். விஷ்ணு கோவிலில் அமைக்கப்பட்ட இந்த மண்டபத்தை  ஹர்ஷன் கொள்ளை அடித்தார். பின்னர் உச்சல என்பவர் இதேபோல கிளிக்கூண்டு மண்டபத்தை  திரிபுவன சுவாமி கோவிலில் அமைத்தார் (8-80)

தமிழ்நாட்டுக் கோவில்களிலும் கிளிக்கூண்டு மண்டபங்கள் உண்டு. பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் அதை மதுரை மீனாட்சி கோவிலில் நாங்கள் கண் கொட்டாமல் பார்ப்பது வழக்கம்.. நாங்கள் ராமா , மீனாட்சி என்று குரல் கொடுத்தால் அவைகளும் திரும்பிச் சொல்லும்.சுகாவலீ என்று கல்ஹணர் சொல்லும் இக்கிளிக் கூண்டை ஒரு அமைச்சசர் முத்துக்களைக் கொண்டே அமைத்தார் போலும். ஆயினும் அந்த முத்துக்களைக் கிளிகளே கொண்டுவந்து  கொடுத்தது அதிசயமே.

பாரி என்னும் மன்னரின் பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்ட காலத்தில் கபிலர் என்னும் பிராமணப் புலவர் கிளி களையும், குருவிகளையும் பழக்கி தனியங்களைக் கொண்டுவந்த விஷயம் சங்கத் தமிழ் நூல்களில் உள்ளது

5.அவந்திவர்மன் என்னும் மன்னரின் காலம் காஷ்மீரின் பொற்காலம் ஆகும். அப்போது உயிர்க்கொலைகள் நடக்கவில்லை. இதனால் பாதீன என்னும் மீன் வகை கரைக்கு வந்து உலவின. (5-65)

பாதீன என்னும் மீன் வகையை  கிராதார்ஜுனியம் (4-5) என்ற நூலும் குறிப்பிடும். சிராத்தம் என்னும் திதிகளில் இதை காஷ்மீரி பிராமணர்கள் நீத்தாருக்குப் படைப்பர். மனு ஸ்ம்ருதியும் (5-16) இதை பித்ருக்களுக்குப் படைப்பதை ஆதரிக்கிறது .

நல்லாட்சி நடைபெற்றால் விவசாயம் செய்யாமலேயே நல்ல விளைச்சல் ஏற்படும் என்று வள்ளுவர் கூறுவது போல, மீன்களே அஞ்சாமல் வரும் என்பதை ஒப்பிடலாம்.

நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்தும் என்ற கருத்து கம்பனிலும் காளிதாஸனிலும் உள்ளது .

6.கல்லாடர் என்னும் புலவர் பெயர் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பிற்காலத்திலும் காணப்படுகிறது. கல்ஹணரும் ஒரு கல்லாடர் பற்றிப் பேசுகிறார் (6-66) அவந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் பல சித்தர்களும் பட்ட கல்லாடரும் பூமியில் அவதரித்தனர்.(6-66)

அவந்திவர்மன் கி.பி 855 முதல் சுமார் 30 ஆண்டுகளுக்கு காஷ்மீரை ஆண்டான். கல்லாடம் என்னும் நூலை எழுதிய கல்லாடருக்கும் காஷ்மீர் கல்லாடருக்கும் தொடர்பு உண்டா என்பதை ஆராய வேண்டும். ஏறத்தாழ அதே காலத்தில் திருமூலரும் காஷ்மீரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்.

7.காரீ என்னும் எடை அளவு பற்றி கல்ஹணர் 6-71) குறிப்பிடுகிறார். ரிக் வேதமும் (4-32-17), பாணினியும் இந்த அளவை குறிப்பிடுகின்றனர். சங்கத் தமிழ் நூலகளின்படி, காரீ என்பது கடை எழு வள்ளல்களில் ஒருவரின் பெயர் ;   காரீ       டைய குதிரைக்கும் அதே பெயர் ; அவந்திவர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஒரு காரீ எடை அரிசி விலை 1050 தினாரா ஆனது . அக்காலத்தில் அதிசயமாகப் பிறந்த ஒரு பொறியியல் வல்லுநர் நிலத்தைச் சீர்திருத்தி விளைச்சளைப் பெருகியதால் அரிசிவிலை 36 தினாராகக்  குறைந்தது (6-116).

ஒரு சண்டாள வகுப்பு பெண்மணி தெருக்கூட்டும்போது கண் ட பானைக்குள் கிடைத்த குழந்தையே ஒரு சூத்திரர் வீட்டில் வளர்ந்து பேரறிஞன் ஆகியது என்று கல்ஹணர் பாடுகிறார்.

8.பெரும்புகழ் படைத்த அவந்திவர்மன் பகவத் கீதையைக் கேட்டுக்கொண்டு, விஷ்ணுவைப் பிரார்த்தித்தவாறு இறந்தான் (6-125)

9.கவிஞர்கள் பிறர் எழுதியதை தாம் எழுதியதாகச் சொல்லும் காலம் வந்தது. ஆட்சியாளர்கள் பிறர் சொத்துக்களை அபகரிக்கும் காலம் வந்தது ( அவந்திவர்மனின் மகன் சங்கரவர்மனின் ஆட்சியில்) 5-160

10.திமி மீன்கள் அதன் வகைகளையே சாப்பிடும் ; அமைதியாக நிற்கும் கொக்குகள் அவற்றைச் சாப்பிடும்  அந்தக் கொக்குகளை காட்டில் மறைந்திருக்கும் வேடன் கொல்கிறான் . இதுதான் உலகம். யாருக்கு அதிக திறமையும் பலமும் உள்ளதோ அவன் வாழ்கிறான் SURVIVAL OF THE FITTEST

11.ரத்தம் தோய்ந்த ஆட்டுத்தோல் மீதி நின்று இரு அரசர்களும் சத்தியப் பிரமாணம் செய்தனர் 5-326. ஸ்காண்டிநேவிய அரசர்களும் இப்படிச் செய்ததாக ரஞ்சித் சீதாராம் பண்டிட் அடிக்குறிப்பில் கூறுகிறார்.8-3006- லும்  இது உள்ளது . பிரமணர்கள் நீர் வார்த்து சத்தியம் செய்வார்கள்

.

12.பிராமண குருக்கள் தாமாகவே புதிய சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். மீன்களைக் கொண்டு யாகம் செய்தார்கள் 6-11

TO BE CONTINUED…………………………………..

tags- கல்ஹணர், ராஜா தரங்கிணி, அதிசய விஷயங்கள்

ஞான மொழிகள்-81; கடி ஜோக்ஸ் (Post No.11,022)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,022

Date uploaded in London – –    17 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-81

(இது முழுக்க முழுக்க கடிஜோக்ஸ்- ஏற்கனவே நீங்கள் படித்தாக கக்கூட இருக்கலாம். இருந்தாலும் ரசிக்கவும்)

ரத்த வங்கிக்கு போனா ரத்தம் வாங்கலாம்,

இந்தியன் வங்கிக்கு போனா இந்தியா வாங்க முடியுமா?

xxx

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ண காதலிக்கும்போது நீங்க அடிமை,

அதுவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா

நீங்க கொத்தடிமை!

Xxxx

காந்திஜி சாகரதுக்கு முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா?

ஏன் தெரியுமே, உயிரோடு இருந்தார்!

Xxxx

லாரில கரும்பு ஏறினா காசு!

கரும்புல லாரி ஏறினா ஜூஸு!

Xxx

பேப்பர போடுறவன் பேப்பர்காரன்,

பால் போடுறவன் பால்காரன்,

அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

Xxx

அதிரடி மெகா சீரியல் எடுக்கப்போறாங்களாமே

என்ன தலைப்பு?

இதுவாடா முடியும்!

Xxx

சிகரட் குடிச்சா கேன்ஸர் வரும்ன்னு சொல்றாங்களே

அது உண்மையாடா?

தெரியல்லடா மாப்ளே, நான் குடிச்சா புகைதான் வருது!

Xxx

நேற்று ஏன் லீவு?

ஒரு சேஞ்சுக்காக வீட்டிலேயே தூங்கிட்டேன்!

xxx

எல்லா மொழியும் பேசக்கூடியது எது?

எதிரொலி!

xxxx

வர தட்சிணையா two wheeler கேட்டது தப்பாப் போச்சு

மாட்டு வண்டிய கொடுத்து அனுப்பியிருக்காங்க?

xxx

திருடனுக்கு பிடித்த ராகம் எது?

“சுருட்டி”

மாணவர்களுக்கு பிடித்த ராகம் எது?

“காப்பி”

மிகவும் மக்கான ஊர் எது?

“மா மண்டூர்”!

கப்பல் ஏன் ஆடுது?

அது “தண்ணில “ இருப்பதால்’!

சலூன்காரருக்கு பிடித்த காய் எது?

“கத்தரிக்காய்”!

எலிக்கு பிடிக்காத படிப்பு எது?

“பொறியியல்”!

Xxx

நோயாளி -ஆபரேஷனுக்கு பிறகு பீஸ் வாங்கிகங்க!

டாக்டர் -யாருகிட்ட?

Xxx

உலகத்திலேயே எந்த நாட்டிலுள்ள மக்கள் சிரிக்கவே மாட்டாங்க?

“சிரியா”

ராவணன் காதலித்து தோத்து போனா அதுக்கு என்ன பெயர்?

ஒரு தலைக்காதல்

இல்லை ……. பத்து தலை காதல்!

Xxxx

புள்ளிமான் உடம்புல புள்ளி இருக்கும்,

கன்னுக் குட்டி உடம்புல கண்ணு இருக்குமா?…

xxx

வெட்டி சம்பளம் வாங்கரவரு யார்?

டெய்லர், பார்பர்

Xxx

ஒரு ரயில் நிதானமில்லாம

தள்ளாடி தள்ளாடி்வருகிறது ஏன்?

அது “சரக்கு”ரயில்!

Xxx

தண்ணீரிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்பொது ஷாக் அடிக்குமே!

xxx

மண்டேல போடறது DYE!

மண்டைய போட்டா அது DIE!

Xxxx

பரம்பரையா உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,

பாஸ்ட் புட் கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடணும்!

xxx

நீண்ட நாள் வாழ என்ன வழி?

வேறன்ன சாகாமல் இருப்பதுதான் !

xxx

டீ மாஸ்டர் என்னதான் டீ “லைட்டா”போட்டாலும்

அதுலேர்ந்து வெளிச்சம் வராது!

பவர்கிளாச எவ்வளவு நேரம் வச்சாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது!

என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் சொன்னாலும்,

அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்!

Xxx

காதலி அடிச்சா வலிக்கும்,

பிரண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்,

சரக்கு அடிச்சா வலிக்குமா?

Xxx

ஒரு அரசனுக்கு வந்த இரண்டு புறாக்களுக்கும்

கால்கள் இல்லை?

என்ன மந்திரி இது?

இதுதான் ‘Missed call” அரசே!…………..35

Xxx

என்னதான் நாம அனுப்பற மெஸேஜ் அட்டு பழசாயிஇருந்தாலும்

உங்க மொபைல்ல நியூ மெஸேஜ் ரிசீவ்டு ன்னு தான் வரும்!

Xxx

ஒருவர்- என்னப்பா ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பிச்சை

எடுக்க வரே?

பிச்சை -இந்த ஏரியாவ இரண்டு லட்சத்திற்கு ஏலம்

எடுத்திருக்கேங்க!

Xxx

இந்த முறை நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு

என்ன தருவாங்க?

அல்வா தருவாங்க!

xxx

தலைவரை உங்ங்க வீட்டு பிள்ளைன்னு சொன்னது தப்பாப்போச்சு

ஏன்.

எல்லார் வீட்லயும் போய் “பாக்கெட் மணி”கேக்குறர்!

xxx

என்னதான்கம்ப்யூட்டர் விண்டோவுலே உலகமே தெரிஞ்சாலும்

எதிர் வீட்டு விண்டோவுல பொண்ணு தெரியமா?

Xxx

ஏம்மா பிச்சை எடுக்க நீ வந்துருக்கே? உன்புருஷன் எங்கே?

பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கரம்மா!

Xxx

டைம் இஸ் கோல்ட் ன்னா ஏன் ஒத்துக்க மாட்டேங்கறே?

அத அடமானம் வைக்க முடியாதே?

Xxx

ஜனவரி 14க்கும், பிப்ரவரி 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14!

அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14!

Xxx

மாங்கா மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும்?

சே ! புளிக்குதுன்னு துப்பிடும்.

Xxx

என் மகனும் கரண்டும் ஒண்ணு,

இரண்டுமே வீட்டில இருக்கறதில்லே?

xxx

உங்க சின்ன குழந்த எப்படி அந்த சேரில் ஏறிச்சு?

அது “ஈஸி” சேராச்சே!

Xxx

என்னதான் பூமி சூரியனை சுத்தி வந்தாலும்

பூமிக்கு சூரியன் பிக்கப் ஆகாது!

THE END

Tag- ஞானமொழிகள்-81

மனித வாழ்வில் பிரச்சினைகள தீர ருத்ராட்சம் அணிக! (Post No.11,021)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,021

Date uploaded in London – –    17 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனித வாழ்வில் பிரச்சினைகள தீர ருத்ராட்சம் அணிக!

மாலைமலர் (6-6-22) இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ச.நாகராஜன்

நான்கு பேறுகளையும் நல்கும் ருத்ராட்சம்

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நீண்ட நெடிய வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினை தோன்றுவது இயல்பே.

இதை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், அருளாளர்கள், ரிஷிகள் அதற்கான தீர்வுகளையும் பல்வேறு விதங்களில் கூறி அருளியிருக்கின்றனர்.

அவற்றில் ஒன்று ருத்ராட்சத்தைப் பயன்படுத்துவதாகும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பெரும் பேறுகளில் வீடு என்ற கடைசிப் பேற்றை நல்கும் ஆன்மீக சாதனமான ருத்ராட்சம் முதல் மூன்று பேறுகளையும்யும் கூட அதை அணிந்தோர்க்கு நல்க வல்லது என்பதை நமது நூற்றுக்கணக்கான அற நூல்கள் வலியுறுத்துகின்றன.

பொதுவாக அனைத்து ருத்ராட்சங்களுமே கீழ்க்கண்ட நற்பலன்களைத் தருவதற்கானவையாகும்.

இறையருள் பெற ஏற்றது,

சகல தோஷங்களையும் போக்க வல்லது

பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது

ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும் அருள்வது

சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது

நவ சக்திகள் நம்மிடம் உருவாக வைப்பது

சுப காரியங்களைத் தடையின்றி நிறைவேற்றி வைப்பது

காம தேவனின் அருள் சித்திப்பது

ருத்ராட்ச மணிகள் மின்காப்புப் பொருளாக (DI ELECTRIC) ஆக உள்ளது் அதாவது மின் சக்தியை தன் உள் சேமித்து வைக்கும் தன்மை உள்ளது.

இந்த தன்மையினால் இதயத் துடிப்பு சீராகிறது.

உடலை எப்பொழுதும் சீராக இயங்க உதவுகிறது.

ருத்ராட்சத்திற்கு காந்த சக்தியின் ( MAGNETIC) குணமும் உண்டு.

மேற்கண்ட குணாதிசயங்களினால், ரத்த ஓட்டம் சீராகிறது

“மூளை”எப்போதும் வேலை செய்யும் நிலைக்கு ஆட்படுகிறது.

நரம்பு மண்டலம் எப்போதும் சீராகவும் , துடிப்பாகவும் வேலை

செய்கிறது.

ஆயுர்வேதத்தில் மூட்டுவலி உள்ளிட்ட பல வியாதிகளுக்கு ருத்ராட்சப் பயன்பாடு அறிவுறுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் நிபுணரான ஒருவர் வழியே இதைக் கேட்டு அறியலாம்.

  இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளோர் அதைத் தீர்ப்பதற்கு முனைதல் அவசியம். எந்த பிரச்சினை தீர எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பது முக்கியம்.

அறிவியல் சோதனையில் ருத்ராட்சம்

சுபாஷ் ராய் என்ற காசி பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் புராதன ரகசிய அறிவை நவீன அறிவியலால் உரசிப் பார்த்து அவற்றின் உண்மைகளை அறிய முயன்றார்.  ருத்ராட்சம் பற்றி சிவ புராணம், பத்ம புராணம் போன்ற நூல்கள் மிக்க ஆன்மிக உயர்வு, மருத்துவ குணநலன்கள் ஆகியவற்றைத் தரும் என மேன்மையாகக் கூறியதை நவீன அறிவியல் உபகரணங்களைக் கொண்டு ஆராய ஆரம்பித்தார்.  விளைவு – ருத்ராட்சம் உடலில் படும் போது டை – எலக்ட்ரிக் பொருளாகப் பயன்பட்டு வெவ்வேறு முகங்களுடைய ருத்ராட்சங்கள் வெவ்வேறு விதமான ‘கபாசிடர்’ களாக இயங்கி புராணங்கள் கூறும் பயன்களைத் தருவதைக் கண்டுபிடித்தார்!  கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் இணைய வைத்து இடையில் ருத்ராட்ச மாலை உபயோகப் படுத்தப்படும் போது மனம் ஒருமுகப் படுத்தப்பட்டு மூளை அலைகள் சமன் படுத்தப்படுகின்றன என்பது அவரது ஆய்வின் முடிவில் தெரிந்தது.  ஒவ்வொரு விரலுக்கான மின்சக்தியையும், அது கட்டை விரலுடன் இணையும் போது ஏற்படும் அற்புத ஆற்றலையும் விஞ்ஞான ரீதியான படங்களுடனும் புள்ளி விவரங்களுடனும், (Frequency versus inductance for Rudraksha) அவர் விளக்கும் போது அறிவியல் ரீதியாக ருத்ராட்ச மகிமையை உணர முடிகிறது.

ருத்ராட்சத்தின் அர்த்தம்

ருத்ர + அக்ஷ = ருத்ராக்ஷம் (ருத்ராட்சம்)

அதாவது ருத்ரனின் கண்களிலிருந்து விழுந்த துளிகளே ருத்ராட்சமானது.  சிவனின் கண்களுக்கு விருப்பமானது என்றும் சொல்வர். ருத்ராட்ச மலைகளில் காணப்படும் ருத்ராட்சம் மரங்களிலிருந்து கிடைக்கிறது.  இதை ஆங்கிலத்தில் Elaco carpus seeds என்பர்.  ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு, நடுவிலே உள்ள துவாரங்களின் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது மரபு. 

 ருத்ராட்சத்தில் ஒரு முகம் என்பதிலிருந்து 28 முகங்கள் வரை இருப்பது பொதுவாகக் காணப்படுகிறது. 

முகம் என்றால் என்ன? 

ருத்ராட்சத்தில் உள்ள பிரிவு ஆகும்.  உதாரணமாக ஐந்து முகம் என்றால் ஆரஞ்சு சுளைகள் போல ஐந்து பிரிவுகளை ஐந்து முக ருத்ராட்சம் கொண்டிருக்கும்.  இதே போல ஆறுமுகம் என்றால் ஆறு பிரிவுகளைக் காணலாம்.  சிவனுடைய உடுக்கையிலிருந்து எழுந்த ஒலிகள் அல்லது சப்தங்கள் அல்லது எழுத்துக்கள் 14.  இவற்றிற்கும் ருத்ராட்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  ஆகவே 14 முகம் வரை உள்ள ருத்ராட்சங்களின் பலன்களைத் தெளிவாக நமது நூல்களில் காணலாம். 

 ருத்ராட்சம் : உயிரியல் பெயர் ( Biological name)

ELAEOCARPUS GANITRUS ROXB.( latin name)

விளையும் இடம்

ருத்ராட்ச மரங்கள் காணப்படும் இடங்கள் :

இமய மலைச்சாரல், குஜ்ராத், பீஹார், மத்திய பிரதேசம்

நேபாளம் , தென் கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியா, மலேசியா,

ஜாவா, தைவான் , முக்கியமாக இந்தோனேஷியா, சைனா.

ருத்ராட்சம் :இரசாயன சேர்க்கை

கார்பன் (CARBON). 0.024%

ஹைட்ரஜன் (HYDROGE) 17. 798%

நைட்ரஜன் (NITROGEN) 9.9461%

ஆக்ஸிஜன் (OXYGEN) 0.4531%

அலுமினியம், கால்சியம், க்ளோரின், தாமிரம், கோபால்த், நிக்கல், மக்னீஷியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொடாசியம், சோடியம், துத்தநாகம், சிலிகான் ஆக்ஸைட் உள்ளிட்டவையும் கூட ருத்ராட்சத்தில் இருந்தாலும் அவை மிகக் குறைந்த அளவே உள்ளன.

ருத்ராட்ச பலன்கள்

ருத்ராட்சத்தில் உள்ள பல வகைகளுக்கான ப்லன்களை உபநிடதம் தெரிவிக்கிறது.

 :

ஒரு முகம் :   இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்

இரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம  ப்ரீதி

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.

ஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியையும் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.

ந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.

12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.

14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

இப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.

இந்த அட்டவணையிலிருந்து படைப்பாற்றல் திறனை பெற விழைவோர் ஒரு முகத்தையும், பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்க விரும்புவோர் 13 முகத்தையும், செல்வ வளம் விரும்புவோர் 6 முகத்தையும், மரண பயம் நீங்க விரும்புவோர் 10 முகத்தையும் முக்தி பெற விரும்புவோர் ஏக முகத்தையும் அணிய வேண்டும் என்பது தெளிவு.

ஜன்ம ராசிக்கு உகந்த ருத்ராட்ச வகை

இனி மனிதராயப் பிறந்தோர் ஒவ்வொருவரும் கிரகங்கள் சஞ்சரிக்கும் 12 ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பதை ஒட்டி எந்த ராசியில் பிறந்தோர் எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்றும் நம் ரிஷிகள் கூறி அருளியுள்ளனர்.

அதைக் கீழே காணலாம்:

ஜன்ம ராசி      ராசி அதிபதி      அணிய வேண்டிய ருத்ராட்சம்

மேஷம், விருச்சிகம்    செவ்வாய்      மூன்று முகம்

ரிஷபம், துலாம்        சுக்ரன்          ஷண்முகம்

மிதுனம், கன்னி         புதன்           நான்கு முகம்

கடகம்                  சந்திரன்        இரண்டு முகம்

சிம்மம்               சூரியன் ஏகமுகம் அல்லது த்வாதச முகம்

தனுசு, மீனம்        ப்ருஹஸ்பதி         ஐந்து முகம்

மகரம், கும்பம்       சனி                  சப்த முகம்

நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்ச வகைகள்

இனி 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதையையும் அணிய வேண்டிய ருத்ராட்சத்தையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தப் பட்டியல் வருமாறு:-

நட்சத்திரம் அதி தேவதை அணிய வேண்டிய ருத்ராட்சம்

அசுவனி     கேது          நவமுகம்

பரணி        சுக்ரன்         ஷண்முகம்

கார்த்திகை   சூர்யன்         ஏக முகம், த்வாதச முகம்

ரோஹிணி    சந்திரன்       இரண்டு முகம்

மிருகசீரிஷம்  செவ்வாய்     மூன்று முகம்

திருவாதிரை     ராகு        எட்டு முகம்

புனர்பூசம்      ப்ருஹஸ்பதி  ஐந்து முகம்

பூசம்           சனி          சப்த முகம்

ஆயில்யம்      புதன்           நான்கு முகம்

மகம்           கேது         நவ முகம்

பூரம்           சுக்ரன்        ஷண்முகம்

உத்தரம்        சூர்யன்        ஏக முகம், த்வாதச முகம்

ஹஸ்தம்      சந்திரன்        இரண்டு முகம்

சித்திரை       செவ்வாய்    மூன்று முகம்

சுவாதி          ராகு        எட்டு முகம்

விசாகம்       ப்ருஹஸ்பதி    ஐந்து முகம்

அனுஷம்       சனி           சப்த முகம்

கேட்டை       புதன்           நான்கு முகம்

மூலம்         கேது            நவ முகம்

பூராடம்        சுக்ரன்          ஷண்முகம்

உத்தராடம்      சூரியன்       ஏக முகம், த்வாதச முகம்

திருவோணம்    சந்திரன்        இரண்டு முகம்

அவிட்டம்        செவ்வாய்     மூன்று முகம்

சதயம்           ராகு          எட்டு முகம்

பூரட்டாதி       ப்ருஹஸ்பதி      ஐந்து முகம்

உத்தரட்டாதி     சனி            சப்த முகம்

ரேவதி           புதன்           சதுர் முகம்

ருத்ராட்சம் எப்படி தோன்றியது : புராண வரலாறு

ருத்ராட்சம் தோன்றியது பற்றி நமது புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

தேவி பாகவதம் கூறும் வரலாறு இது:

ஒரு காலத்தில் திரிபுரன் என்னும் அசுரன் திருமால் பிரமன் உள்ளிட்ட அனைவராலும் ஜயிக்க முடியாதபடி இருந்து அனைவரையும் துன்பப்படுத்தி வந்தான்.

அக்கினி போலச் சுடர் விட்டு எரிப்பதாயும், சகல தேவ சொரூபமாயும் உள்ள அகோரம் என்னும் திவ்ய அஸ்திரத்தைப் பற்றி சிவபிரான் பல்லாயிரம் வருடம் சிந்தித்திருந்து கண் விழித்தார். அவரது அஸ்திரத்தால் அசுரன் அழிந்தான்.

அப்போது அவரது மூன்று கண்களிலிலிருந்தும் நீர்த்துளிகள் கீழே விழுந்தன. அதிலிருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாயின. அவரது ஆணையின் பொருட்டு அந்த மரங்களிலிருந்து முப்பத்தெட்டு பேதமாயுள்ள ருத்ராட்சங்கள் தோன்றின. வலக்கண்ணாகிய சூரிய நேத்திரத்திலிருந்து தோன்றிய பன்னிரெண்டு பேதங்கள் கபில நிறமாயின.

இடக்கண்ணாகிய  சந்திர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினாறு பேதங்கள் வெண்ணிறமாயின.

அக்னி நேத்திரத்திலிருந்து தோன்றிய பத்து பேதங்கள் கறுப்பு நிறமாயின.

ருத்ராட்சம் என்றால் ருத்ரனின் கண்கள் எனப் பொருள். (அக்ஷம் – கண்கள்)

எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது

ருத்ராட்சங்களை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது?

நல்ல விஷயம் தெரிந்த, உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பர் அல்லது நிபுணர் மூலம் வாங்குவதே சிறந்தது.

ஏக முகம் கிடைப்பது அரிது. பஞ்ச முகம் சுலபமாகக் கிடைக்கும்.

அரிதாகக் கிடைக்கும் ஏக முகம் லட்ச ரூபாய் என்று சொல்லும் போது பஞ்ச முகம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சில ருத்ராட்சங்களின் விலை இருபது லட்சம் என்று சொல்லும் போது மலைக்க வேண்டி இருக்கும்.

108 மணிகள் அல்லது 54 மணிகளைச் சேர்த்து மாலையாக அணிவது பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்கும் மரபாகும்.

எப்படி சோதிப்பது?

ருத்ராட்சம் வாங்குவதில் சுலபமாக ஏமாற்றப்படலாம்.

ஆகவே நல்ல ருத்ராட்சமா எனச் சோதித்து உறுதியான பின்னரே வாங்கி அணிய வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.

ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது?

முதலில் பார்வையால் சோதனையிட வேண்டும். ருத்ராட்சம் அனைத்தும் ஒரே போல ஒரு வித வேறுபாடுமின்றி இருந்தால் அது மோல்டிங் எனப்படும் அச்சில் வார்க்கப்பட்ட செயற்கை மணிகள்- சிந்தடிக் – என்பதைச் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இயற்கை ருத்ராட்சங்கள் நிச்சயம் ஒன்றுக்கொன்று சிறிது வேறுபாட்டுடன் துளைகளுடன் இருக்கும்.

அடுத்து அதன் ஸ்பெஸிபிக் கிராவிடி எனப்படும் அடர்த்தி எண் அல்லது ஒப்படர்த்தி 1.1 முதல் 1.6 வரை இருக்கலாம்.

தாமிரக் காசுகளின் இடையே மிகவும் தரமான ருத்ராட்ச மணியை வைத்தால் அது சுழலும்.

இன்னும் ஒரு எளிய வழி – ருத்ராட்சத்தை நீரில் போட்டால் நல்ல ருத்ராட்சம் மூழ்கும். போலிகள் மிதக்கும்.

ருத்ராட்சங்களை எப்படி அணிவது

ருத்ராட்சங்களை அதற்குரிய பட்டு நூலில்  இணைத்து அணிவது மரபு. பித்தளையிலும், வெள்ளியிலும், தங்கத்திலும் இணைத்து அணிவது அவரவர் வசதியைப் பொறுத்தது.

முதலில் அணியும் போது ருத்ராட்சங்களை கங்கை ஜலம் அல்லது பசும்பாலில் அல்லது கோமூத்திரத்தில் நனைத்து அணிதல் வேண்டும்.

சுத்தமான நிலையில் அணிவது நல்ல பயனைத் தரும்.

புஷ்ய நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாளில் இதை அணிந்தால் அதிகப் பலனைப் பெறலாம் என அற நூல்கள் கூறுகின்றன. (வருடத்திற்கு இந்த அமைப்பு இரு தடவை வரலாம்)

பெண்கள் அணியலாமா?

ருத்ராட்சங்களைப் பெண்கள் அணியக் கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது.

பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம். (மாதவிலக்குக் காலம் தவிர) சிவ புராணத்தில் சிவன் பார்வதியிடம் , “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் இதை அணியலாம்” என்று கூறி அருள்கிறார் (சிவ புராணம் அத்தியாயம் 25, சுலோகம் 47)

ருத்ராட்சம் பற்றிய நமது இதிஹாஸ, புராணங்கள் மற்றும் அறநூல்கள் தரும் சுவையான செய்திகளில் ஒரு சிலவற்றையே மேலே பார்த்தோம். சிவ ரகசியம், திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில், இதன் அருமை பெருமைகளைப் படித்தால் வியந்து பிரமிப்போம்.

இன்னும் ருத்ராட்சத்தில் நிபுணர்களாக உள்ளவரை அணுகி அவரவருக்கு உரிய வகையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் அவரவர் பிரச்சினைகள் களையப்பட்டு அனைத்து நலன்களையும் பெறுவது உறுதி.

சுற்றமும் நட்பும் சூழ அனைவரும் ருத்ராட்சம் அணிந்து சகல மேன்மைகளையும் பெற வாழ்த்துக்கள்!

***

tag- ருத்ராட்சம்

THIRU UTTARA KOSA MANGAI IN BULLET POINTS (Post No.11020)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,020

Date uploaded in London – –    16 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Those who go to Rameswaram from Madurai can get four birds in one stone. I mean you can visit four temples in half a day. On 31st of May 2022, we went to Rameswaram at 11-30 am, a three-hour drive from Madurai. After Dharsan of Ramanatha Swamy in the Shiva temple we went to Dhanuskoti. From there we went to Thiruppullani and Thiru Uttara Kosa managai on our return journey. It is approximately 20 kilometres from Ramanathapuram.

xxx

1.Religious significance

The shrine is mentioned 38 times by great Saivite saint Manikkavasagar in his Tiruvasagam

This is a Shiva temple with a rare six foot tall Nataraja statue. It is called Maragatha Nataraja , literally translated Emerald Nataraja. But I think it is made up of green stone, not emerald. They cover it with sandal paste all through the year except Arudra Day. They bathe the statue with all types of spices, sandal etc on that day. Other days the bathing called Abhisheka is done to Spatika linga (linga made up of crystal).

Linga is the formless shape of Lord Shiva.

Nataraja is the dancing form of Shiva.

Another unique feature is the Dakshinamurthy inside the temple Prakara/ corridor. Dakshinamurthy is always shown as meditating under a banyan tree. But here he is shown without a banyan tree. It is Medha Dakshinamurthy.

Another unique thing is there is a shrine for the saint Manikkavasagar.

Xxx

The temple is atleast 1000 year old, may be 1500 years old, because Manikkavasagar is placed between sixth and ninth centuries.

Lord Shiva is called Mangalanathar here

Goddess is called Mangaleswary (Parvathy)

When Parvathy wanted to know the spiritual secrets, Shiva gave her (Mangai) the Upadesa (Uttara) of the secrets (Kosa).

xxx

Architectural wonder

Yali statue in the temple (yali is a lion like mythical animal) has a rolling stone ball inside its mouth. It cannot be taken out. English word Leo for Lion came from Yali. If you reverse Yali you will get Liya. It is called a mirror image in linguistics)

The towers of the temple were built by Pandya kings and Nayak Kings.

It is maintained by Ramnad Samasthanam. The huge temple is undergrowing renovation at the moment.

The temple is associated with Mandothari, wife of demon king Ravana of Sri Lanka. There is a tank called Agni Theertha, where Lord Siva appeared as Agni/ fire ball.

One more strange thing is Thaazam Pu (aloe flower) is used in the worship of god here; normally it is banned inside the temples.

–subham—

Tags- Uttarakosa mangai, Mangalanatha swami, Mandothari, Maragatha Nataraja, Manikavasagar

சிரிக்காவிட்டால் விடமாட்டேன்’ (Post No.11,019)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,019

Date uploaded in London – –    16 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-80

சிரிக்காவிட்டால் விடமாட்டேன் PART 2

நோயாளி – என் கண்ணுக்கு சித்திர் குப்தன் தெரிகிறான் டாக்டர்…..

டாக்டர், ஆபரேஷன் நடக்கட்டும் எம்தர்மனே தெரிவார் பார்!

xxx

முதலாளி -ஏற்கனவே மகளுக்கு காது குத்தல், மகனுக்கு மொட்டை,

மாமியாருக்கு கருமாதின்னு ஏகப்பட்ட லீவு எடுத்துட்டே, இப்ப என்ன

காரணத்திற்காக லீவு கேக்கப்போற?

வேலைக்காரன் – நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், அதற்காக

லீவு வேண்டும்முதலாளி!

xxx

அந்தப் படம்பயங்கர சண்டைப் படம்!

அதுனால என்ன?

டிக்கட் வாங்கும்போதே மூஞ்சில ஒரு குத்து விட்டுதன் டிக்கட்

கொடுக்கறங்க…….!

xxx

கம்ப்யூட்டர்சென்டர் திறப்பு விழாவில தலைவர் மானத்த

வாங்கிட்டார்………

எப்படி?

ஆன் லைன் மாதிரி பெண் லைன் வசதி செய்யறதுக்கும் ஏற்பாடு

செய்யறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்!

xxx

ஒரு காட்டுக்கு 5 பேர்வேட்டையாட போனார்கள்.

மூன்று பேரை சிங்கம் அடித்துக் கொன்று தின்றுவிட்டது.

பாக்கி 2 பேரை விட்டு விட்டது…….

ஏன்?…

அவுங்க இரண்டு பேரும் LIONS CLUB மெம்பர்களாம்!!!

xxx

டாக்டர் – சே இவ்வளவு கஷ்டப்பட்டும் பேஷன்டை பிழைக்க

வைக்க முடியல்லியே?

Assistant – ஏ லூசு டக்டர்! நீ பண்ணினது ஆபரேஷன் இல்லே,

போஸ்ட் மார்ட்டம்!!!

xxx

தலைவர ஏன் மேடல வைச்சு இந்த அடி அடிக்கிறாங்க???

ஓட்டப் பந்தயத்துல முதலாவதாக வந்த பெண்ணுக்கு

“ஓடு காலி “ ன்னு பட்டம் கொடுத்தாராம்!!!

xxx

ஆபரேஷன் தியேட்டர்ல என்ன கலாட்டா???

பேஷன்டுக்கு பதிலா ரெஸ்ட் எடுத்துக்கிட்ருக்கற டாக்டரை தவறுதலா தூக்கிட்டு வந்துட்டாங்களாம்!!!

xxx

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு…….

ஏன்? இப்ப கட்சி “ஊர்வலத்திலிருக்கற எல்லோருக்கும்

குவாரட்டருக்கு பதிலா “டானிக் பாட்டில்” தராராம்!!!

xxx

டாக்டர், இந்த மருந்துக்கு சைட் எபக்ட் side effect இருக்காதுன்னு

சொன்னீங்க…..ஆனா இப்ப வயிறு வீங்கிப் போச்சே???

வயிறு நடுவுலதானே இருக்கு சைட்ல இல்லேல்ல……..

xxx

“போகாதே, போகாதே”, ன்னு நவகிரக சன்னதிலிருந்து தொண்டர்கள்

எதுக்கு கோஷம் போடறாங்க???

தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம், அதை நிறுத்தத்தான்

போராட்டம் நடத்துறாங்க!!!

xxxx

காதல்ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம்,

நனைந்த பின் ஜலதோஷம்!!!

xxxx

அவர் பிருமாண்டமான பல் டாக்டர்! பல் சட்டுக்கூட தோட்டா

தரணியைத்தான் கூப்பிடுவார் என்றால பார்த்துக்கோயேன்!!!

xxx

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு!

காதல் என்பது வயசுக் கொழுப்பு!

xxx

திருடன்-1 டேய் ! நாம் திருடன பணத்தை எண்ணாம கூட ஒளிச்சு

வச்சிருக்கோமே???

திருடன்-2 அதுனால என்ன…. நாளைக்கு பேப்பர்ல வருமில்ல

அப்ப பாத்துகலாம்?…..

xxx

மனைவி – நம்ம பையன் வளர்ந்து என்னவாக வேண்டுமன்னு

ஆசைப் படுறீங்க???

கணவன் – என்னவேணாலும் ஆகட்டும், ஆனா யாருக்கும்

புருஷனாக மட்டும் ஆக க்கூடாது. நான் பட்ட கஷ்டம்

என்னோடு போகட்டும்…….

xxx

மனைவி – உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லா இருக்குன்னு

ஏன் பொய் சொன்னீங்க???

கணவன்-எனக்கு பொண்ணு பார்க்கும்போது உண்மையைச்

சொன்னானா அவன்???

xxx

பியூன்- மணிஆறாகுது இன்னும் வீட்டுக்குப் போகலியா?

அதிகாரி – இன்னைக்கு வருமானம் ஒண்ணு கூட இல்லே

வீட்டுக்கு போனா மானம் போகும்……

xxx

ஏட்டையவை ஏன் அரெஸ்ட் பண்றாங்க???

ஆர்வக்கோளாறுல “மாமூலுக்கு வருமான வரி விலக்கு உண்டு”

அப்டீன்னு எழுதி ஸ்டேஷன் வாசல்ல போர்டு எழுதி வச்சாராம்

!!!”

xxx

திருடன் – எப்போது இந்த புடவை எடுத்தே??? தீபாவளிக்கா ?

பொங்கலுக்கா?

மனைவி – கடைக்கார்ர குனிஞ்சு பில. போடும்போது!’

xxx

ரிடையர் ஆகும்போது அவருக்கு பணமுடிப்பும் அருகம்புல் கட்டும்

கொடுக்கிறார்களே. ? ஏன்?

இந்த கம்பேனிக்கு அவர் மாடா உழைத்தாராம் அதுக்கு!

xxx

சார் சாப்பிட்டாச்சா? பில் போடலாமா?

வேண்டாம், க்ரைண்டர்ல அரிசியப் போடுங்க…….

xxx

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?

பாபூஸ் பேஸ்ட்

என்ன சோப் யூஸ் பண்ற?

பாபூஸ் சோப்

அது என்ன புது பிராண்டா?

இல்ல என் ரூம் மேட் பெயர்!

xxx

24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது?

சாக்கடை!

xxx

THE END

Tags- ஞானமொழிகள்-80,  சிரிக்காவிட்டால், விடமாட்டேன்,

தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள் (Post No.11018)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,018

Date uploaded in London – –    16 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தீபாவளி என்றவுடன் புத்தாடை, இனிப்புகள், பட்டாஸ்- வெடி-மத்தாப்பு, எண்ணெய்க்  குளியல் , நரகாசுர வதம் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும் .

இது தவிர ராமர் அயோத்தி மாநகருக்குத் திரும்பியது , மற்றும் சீக்கியர்களும் ஜைனர்களும் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் படித்திருப்போம். ஆனால் கந்த புராணம் முதலிய நூல்களில் உள்ள தீபாவளி தகவல்கள் பெரும்பாலோருக்குத் தெரிந்திராது.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. தன திரயோதசி முதல் பலி ப்ரதிபதா என்ற நிகழ்வு வரை 4 நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.

இது தவிர மேலும் இரண்டு நாட்களும் முக்கியத்துவம் பெறுகிறது. அவை கோவத்ஸ துவாதசி,  யமத்விதீயா என்ற 2  நாட்கள் ஆகும்.

வட இந்தியர் கணக்குப்படி ஐப்பசி மாதத்தின் (கிருஷ்ண பக்ஷம்) இருண்ட பகுதியும், கார்த்திகை மாதத்தின் ஒளிமிக்க பகுதியும் (சுக்ல பக்ஷமும்) தீபாவளிப் பண்டிகை ஆகும் . அதாவது தமஸோ மா ஜ்யோதிர் கமய = இருளில் இருந்து ஒளிக்குச் செல்வோமாக.

நாட்டின் பல பகுதிகளில் அமாவாசை முதல் அடுத்த மாதம் துவங்கிவிடுவதால் ஐப்பசி-கார்த்திகை தீபாவளி மாதம் ஆகும்.. தமிழர்கள் நரக சதுர்தசியில் தீபாவளியைத் துவக்கி அமாவாசையன்று முடித்துவிடுவார்கள் .

தீபாவளியில் கொண்டாடப்படும் கடவுளர்- கிருஷ்ணர், யமன், பலி,, பசு மாடு / கோமாதா

XXX

கோ வத்ஸ துவாதசி

இது தீபாவளிக்கு  முன்னர் வரும். கோ என்றால் பசு, வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. அதாவது 12ஆவது நாள்= துவாதசி

யம த்விதீயா

எம த்விதீயா என்பது தீபாவளிக்குப் பின்னர் வரும்; யமன் பற்றி அறியாதோர் இல்லை. 500 கோடி மக்களின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு கால்குலேட்டர், கம்ப் யூட்டர் இல்லாமேயே நம் கணக்கை  கச்சிதமாக முடித்துவைக்கிறார். இந்த நாளுக்கு ‘பையா தூஜ்’ என்றும் பெயர். சகோதர்கள், அவர்களுடைய சகோதரி வீடுகளுக்குச் செல்வர். அங்குள்ள பெண்கள் தீப ஆரத்தியுடன் அண்ணன் , தம்பிகளை வரவேற்பார்கள்.

பலி  ப்ரதிபதா என்னும் நாள், பலி என்னும் அசுரனை,வாமன அவதாரம் மூலம் விஷ்ணு விரட்டி அடித்த நாள் ஆகும். ஓணம் என்ற நாளாக மலையாளிகள் இதை வேறு ஒரு மாதம் கொண்டாடுவர்.

நரக சதுர்தசி

சதுர்தஸி என்றால் 14ஆவது நாள்; அதாவது அமாவாசைக்கு முந்திய நாள்; தமிழர்களைப் போலவே எண்ணெய் ஸ்நானத்துடன் வட இந்தியர்களும் இந்த நாளை அனுஷ்டிக்கிறார்கள் நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் இது. அன்றைய நாள் செல்வத் திருமகளை – லட்சுமியை வழிபடுவது மரபு. சில சமயம் இரண்டு திதிகளும் ஒரே நாளில் வரக்கூடும். அப்போது சூரிய உதயத்துக்கு முன்னால் எண்ணெய்க் குளியலும், பின்னர் லட்சுமி வழிபாடும் நடக்கும் .

தன திரயோதசி

திரயோதசி என்றால் 13-ஆவது நாள்; அதாவது நரக சதுர்தசிக்கு முந்திய நாள். அப்போது

கடலிலிருந்து அமிர்த கலசத்தை ஏந்திவந்த தன்வந்திரியை வழிபடுவது வழக்கம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை.

இவை எல்லாம் காலப்போக்கில் மாறியும் கலந்தும்போய் ஆறுநாள் தீபாவளி 2 அல்லது 4 நாள் தீபாவளி ஆக சுருங்கிவிட்டது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியைக் கொண்டாடியது போல நாம் இன்று கொண்டாடவில்லை.

XXX

ஆறு  நாள் தீபாவளி

கோ வத்ஸ துவாதசி

தன திரயோதசி

நரக சதுர்தசி

அமாவாசை/ லட்சுமி பூஜை

பலி ப்ரதிபதா / புத்தாண்டு துவக்கம்

யம த்விதீயா

XXX

கோ வத்ஸ துவாதசியில்தான் தீபாவளி துவங்கும். இதன் சிறப்பு கந்த புராணத்தில் உள்ளது.பசுமாடுகள் வீடு திரும்பும் மாலைக் காலத்தில் இந்த வழிபாடு துவங்கும்.

மாடு (பசு, காளை , கோ, வத்ஸ) என்ற தமிழ்ச் சொல்லுக்கு செல்வம் என்று பொருள்.

பசுமாட்டின் சாணமும் மூத்திரமும் கலந்த தூசி உடலுக்கு நல்லது. பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க இது உதவும். இதை ரகுவம்சத்தில் காளிதாச மகா கவி சுட்டிக்காட்டுகிறார். அதையும் கூட ஆல மரம் அல்லது அரச மரத்தின் கீழ் செய்வார்கள். இதனால்தான் அரச மரத்தைச் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது. வட சாவித்ரி என்னும் விரதமும் ஆல மரத்தைக் கொண்டாடும் . தாவர இயல் விஞ்ஞானப்படி ஆல் , அரசு , அத்தி (FICUS) மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தனவே. இதை அறிந்த இந்துமத விஞ்ஞானிகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட இந்த மூன்று மரங்களையும் விஷ்ணுவின் நாமாக்களாகச் சேர்த்துள்ளனர்.

பசுமாடுகளுக்கு தீப ஆரத்தி எடுப்பர்

ஒன்பது திரி கொண்ட விளக்குகளை  ஏற்றி  அவைகளை  வடக்கு நோக்கி எரியும் படி வைப்பார்கள் . தீப சுவாலை கிழக்குப்பக்கம் சாய்ந்தால் சுபச் செய்திகள் வரும். மேற்கு நோக்கிச் சாய்ந்து எரிந்தால் நல்ல சகுனம் இல்லை என்பது மக்களின் நம்பிக்கை.

(மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் என்ன நிற பட்டு அணிந்து வருகிறார் என்பதைப் பொறுத்து ஆரூடம் சொல்வது போன்ற நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன)

கந்த புராணத்தில் 2-4-9 விளக்கு பற்றிய ஸ்லோகமும் உள்ளது –

“ஓ தீபங்களே ! நீங்கள் சூரியனின் குடும்பத்தில் பிறந்தவர்கள் ; நீங்கள் எங்களுக்கு சுபம், அசுபம் பற்றி அறிவிப்பீர்களாகுக” .

இதே போல தன திரயோதசியன்று ஏற்றப்படும் தீபத்துக்கு ‘யம தீபம்’ என்று பெயர். அகால மரணம் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் அன்று யமனை வழிபடுவது வழக்கம்

நரக சதுர்தசியன்று தமிழ் நாட்டைப்போலவே நாடு முழுதும் இந்துக்கள் எண்ணெய்க் குளியல் எடுக்கிறார்கள் . அப்போது எண்ணையில் லட்சுமியும், தண்ணீரில் கங்கா தேவியும் வசிப்பார்கள் என்பது ஐதீகம். இதனால் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று விசாரிப்பர்.

பாதிக் குளியலில் அபாமார்க்க (ACHARANTHES ASPERA) என்ற மூலிகையைக் கொண்டு தலையைச் சுற்றுவர். குளித்து முடித்த பின்னர் யமனுடைய இரண்டு புதல்வர்களான ‘ஸ்யாம’, ‘சபல’ என்போருக்கு இரண்டு விளக்குகளை ஏற்றிவைப்பர். உளுந்து இலைகளை (BLACKGRAM LEAVES BROTH) கொதிக்க வைத்து சாப்பிடுவர். அமாவாசை அன்று லட்சுமி பூஜை செய்வர்.

லட்சுமி பூஜையன்று நகரம் எங்கும் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். (தமிழர்கள், கார்த்திகை பெளர்ணமி அன்று இப்படிச் செய்வார்கள் . வடக்கத்திய கணக்குப்படியும் அமாவாசை அன்று கார்த்திகை மாதம் துவங்கி விடும் )

ORIGIN OF CHRISTMAS TREE

பலி , நரக என்ற அசுரர்களின் வதமும் , விளக்கு ஏற்றலும் பொதுவான விஷயங்கள்; கந்த புராணம் தீப வ்ருக்ஷம் (Tree of Lights) பற்றியும் பேசுகிறது . இந்த வழக்கம்தான் கிறிஸ்தவ மாதத்தில் ‘கிறிஸ்ட்மஸ் ட்ரீ’ CHRISTMAS TREE-யாக மாறி து என்றால் அது மிகையாகாது.

லட்சுமி பூஜைக்குப் பின்னர் ‘மூதேவி விரட்டலும்’ சில மாநிலங்களில் நடைபெறும். அப்போது சாணத்தால் அசுரர் உருவம் செய்து அதை எரிப்பார்கள். இதுவே பிற்காலத்தில் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமாக மாறிவிட்டது போலும்! கோவர்த்தன பூஜை எனப்படும் மலை வழிபாடும் நடைபெறும். கண்ணபிரான் கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்து பசுக்களையும் இடையர்களையும் பாதுகாத்தது எல்லோரும் அறிந்த கதையே . 

சில பகுதிகளில் கயிறு இழுக்கும் போட்டியும் (Tug of War) நடைபெறும். அதில் அரச குலத்தவர் ஒருபக்கமும், நாட்டு மக்கள் மறு புறமும் நின்று இழுப்பர். அதில் அரச குலம் வெற்றி அடைய வேண்டும் என்பது சம்பிரதாயம். அப்போதுதான் நல்லாட்சி  கிடைக்கும்; சுபிட்சம் நிலவும்.

கடைசி நாள் யம த்விதீயா; அன்றைய தினம் அத்தி மரத்துக்கு (Ficus Glomerata) அடியில் ஒரு வட்டம் போட்டு அதற்குள் பிரம்மா , விஷ்ணு, சிவனை வைத்து வழிபடுவர்.அதே நாளில் யமன், சரஸ்வதி, யமனின் சகோதரி யமுனை நதி ஆகியவற்றையும் வணங்குவர் . இதை எல்லாம் செய்ய முடியாதோர் பசு அல்லது நீர் நிலை முன்னர் உணவு அருந்த வேண்டும் என்று கந்த புராணம் (2-4-11; 2-4-15/30) சொல்லும்.

இந்தக் காலங்களில் சூதாட்டம், தாயக்கட்டம் விளையாடுவதையும் பத்ம புராணம், பவிஷ்ய புராணம் குறிப்பிடுகின்றன.

ஒளி உமிழும் விளக்குகள் ஏற்றுவதோடு காலப்போக்கில் பட்டாசு, மத்தாப்பும் சேர்ந்து கொண்டன என்றே நம்ப வேண்டியுள்ளது.

வாழ்க தீபாவளி!  வளர்க சம்பிரதாய நம்பிக்கைகள்!!

Source book:- GLIMPSES OF PURANIC MYTH AND CULTURE, SADASHIV A.DANGE; YEAR 1987

–SUBHAM–

tags- tags- தீபாவளி ,புத்தாடை, இனிப்புகள், பட்டாஸ்- வெடி-மத்தாப்பு, எண்ணெய்க்  குளியல் , நரகாசுர வதம் ,அறியாத விஷயங்கள்

அலோஹா, ஹவாய், அலோஹா! (Post No.11,017)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,017

Date uploaded in London – –    16 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

31-5-2022 மாலைமலர் நாளிதழில் வெளியான கட்டுரை!

அலோஹா, ஹவாய், அலோஹா!

ச.நாகராஜன்

இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.

பிக் ஐலண்ட்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து ஐந்தரை மணி நேர விமானப் பயணம் மேற்கொண்டு ஹவாயில் உள்ள பிக் ஐலேண்டிற்கு (பெரிய தீவு) வந்து சேர்ந்தோம், உற்சாகமாக.

விமான நிலையத்திலிருந்து நேராக வால்மார்ட்டிற்குச் சென்று சமையலுக்குத் தேவையான எண்ணெய், புளி, வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வாங்கிக் கொண்டு தங்க வேண்டிய இடத்திற்குச் சென்று ‘செக் இன்’ செய்தோம்.

கடற்கரை ஓரத்தில் உள்ள அற்புதமான அந்த தனி வீட்டில் நீண்ட ஹால், சமையலறை, படுக்கை அறைகள், – வாரண்டா உள்ளிட்ட இடங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன.

சுத்த சைவம் என்பதால் தேவையான பொருள்களைக் கொண்டு போயிருந்ததால் சாப்பாட்டிற்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. இனி ஹவாயை ஹாயாகச் சுற்றிப் பார்க்கத் தடை ஏதும் இல்லை அல்லவா!

ஆண்டு தோறும் பல லட்சம் மக்களைக் கவர்ந்து ஈர்த்து வருகை புரியச் செய்யும் ஹவாய் உலகின் தனிப்பெரும் மகிழ்ச்சித் தொகுப்பு!

137 தீவுகளின் தொகுதி

ஹவாய் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்று. இது 137 தீவுகளின் தொகுதி ஆகும். ஆனால் ஹவாய், மௌவி, லனாய், நீஹா உள்ளிட்ட எட்டு தீவுகள் தான் முக்கியமான தீவுகளாக உள்ளன.

ஹவாய் என்ற பெயர் எப்படி வந்தது? இந்தத் தீவை முதலில் கண்டுபிடித்தவர் ஹவாய் லோவா. அவர் பெயரால் இது ஹவாய் என அழைக்கப்படுகிறது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் உள்ளிருந்து எரிமலை பொங்கி வெடிக்க அது ஆறாக ஓடி ஒருவாறாகப் பல்லாயிரம் ஆண்டுகளில் குளிர்ந்து ஹவாய் பகுதியாக பரிமளித்தது.

உலகின் மிக நீண்ட தீவுகளின் சங்கிலித் தொடர் ஹவாய் தான்!

ஹவாயின் செல்லப் பெயர் அலோஹா!

அலோஹா என்றால் ஹலோ (வணக்கம்) என்றும் பொருள்; பை, பை (சென்று வருகிறேன்) என்றும் பொருள். ஹவாயில் வணக்கம் தெரிவிக்கவும், சென்று வருகிறேன் என்று சொல்லவும் நாம் சொல்ல வேண்டிய ஒரே சொல் ‘அலோஹா’ தான்!

ஹவாயில் உள்ள தீவுகளில் பெரிதான பெரிய தீவு -பிக் ஐலேண்ட் – 4028 சதுர மைல் பரப்புடையது. 92 மைல் நீளமும் 76 மைல் அகலமும் கொண்ட இந்தத் தீவின் ஜனத்தொகை சுமார் இரண்டு லட்சம். வெப்ப நிலை சராசரியாக 21 முதல் 25 டிகிரி செல்ஸியஸ்.

உலகத்தின் ஜனநடமாட்டம் உள்ள கடைக்கோடி

அமெரிக்காவின் தெற்கில் மனித நடமாட்டமுள்ள கடைசி இடம் ஹவாய் தான். ஹவாய்க்குப் பின்னர் தென் துருவம் – அண்டார்டிகா தான்!

இதை அறிவிக்கும் ஒரு சிறு போர்டு இருந்தது. எங்குமே போட்டோ எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லாத நான் அங்கு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். ‘உலகின் ஜனநடமாட்டம் உள்ள கடைசிக் கோடியை பார்த்த ஆள் ஐயா நான்’ என்று ஆதாரத்துடன் சொல்லிக் கொள்ளலாம் இல்லையா!

ஹவாய்க்கும் அண்டார்டிகாவுக்கும் இடைப்பட்ட தூரம் 7598 மைல்கள். மனித நடமாட்டமே இல்லாத பகுதி இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!

ஹவாயிலிருந்து ஒரு நிலப் பகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்று விரும்பினால் குறைந்தபட்சம் 2000 மைல்களைக் கடக்க வேண்டும்!

கடற்கரைத் தீவு

ஹவாயை கடற்கரைகளின் மாநிலம் என்று சொல்லலாம். ஐந்து மைலுக்கு ஒரு கடற்கரை என்று சொல்லும் படி ஏராளமான கடற்கரைகள். ஒவ்வொரு கடற்கரையும் ஒவ்வொரு விதம்.

ஒரு கடற்கரையில் நெடிதாக வளரும் தென்னை மரம் கிடைமட்டமாக நீண்டிருக்க அதில் ஏறி பாதி தூரத்தில் அமர்ந்தோம். கீழே ஆர்ப்பரித்து அலை மோதும் கடல். மேலே தென்னை மரத்தில் நாங்கள்.

நம் தமிழ் திரைப்பட இயக்குநர்களும் கேமராமேன்களும் இந்த இடத்தைப் பார்த்தால் சும்மா விடுவார்களா என்ன?

இன்னொரு கடற்கரையில் அபாய அறிவிப்பு : இங்கே ஆழம் அதிகம். இறங்கவே இறங்காதீர்கள்.

இன்னொரு கடற்கரையில் அழகிய மரத்தினால் ஆன உணவு விடுதி. அனைவரும் ஆனந்தமாக அங்கு அமர்ந்து கொரிக்கவும் காபியை அருந்தவும் செய்கின்றனர்.

இன்னொரு கடற்கரையிலோ நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மிகக் குறைந்த ஆடையுடனும் வாலிபர்கள் திறந்த மார்புடனும் – சன் பாத் – சூரியக் குளியலை அநுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். நீச்சல், படகு, சர்ஃபிங் என்று ஏக அமர்க்களம்.

ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு நாள் ஓடி விடும்.

கடலில் காலையில் சூரியன் உதிப்பதையும்  மாலையில் சூரியன் மறைவதையும் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவதைப் பார்க்கலாம். ஒரே ஒரு கணத்தில் கடலிலிருந்து செக்கச் செவேலென சூரியன் உதிப்பதை காத்திருந்து பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி!

இதே போல நீர் வீழ்ச்சிகளைப் பார்க்கலாம், அங்கு பாறைகளில் அமரலாம். வெப்ப மண்டல மழைக் காடுகளில் உள்ளே சென்று காட்டின் அனுபவத்தை அநுபவிக்கலாம்.

இங்கு இளநீரைச் சாப்பிடாதவர்கள் ஹவாய் பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம். உலகின் மிகச் சிறந்த இளநீரை இங்கு குடிக்கவில்லை என்றால் வேறு எங்கு தான் குடிக்க முடியும்!

மாநில மலரான மஞ்சள் ஹிபிஸ்கஸ் பூத்துக் குலுங்குவதைப் பார்ப்பதே ஒரு அழகு தான்!

ஹவாயில் காபி அருந்துவது ஒரு காபியின் உண்மையான சுவையையும் மணத்தையும் தெரிந்து கொள்வதற்கான வழியாகும். அப்படி ஒரு மணம், சுவை.

டால்பின்களைப் பார்த்து மகிழ்வது இன்னொரு அநுபவம். அதற்கு எதையும் உணவாக அளிக்கக்கூடாது என்ற கண்டிப்பான எச்சரிக்கையும் உண்டு.

இங்கு பாம்புகளைப் பிடித்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சம் டாலர் அபராதம்! அத்தோடு பல ஆண்டு சிறைவாசமும் உண்டு

எரிமலைக் குழம்பும் எரிமலைகளும்

ரம்யமான கடற்கரை மற்றும் நீர்வீழ்ச்சிக் காட்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு மட்டும் ஹவாய் பயணம் முடிந்து விடாது.

எரிமலையின் தாயகமான ஹவாயில் எரிமலைக் குழம்பைப் பார்த்து பிரமித்து, திகைத்து, பயப்படவும் வேண்டும்.

பிக் ஐலேண்டில் உயரமான மலைப் பகுதியில் ஏறும் போதே ஆக்ஸிஜன் குறைந்த இடம் ஆகவே, ஜாக்கிரதை என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்து பயப்படாமல் இருக்க முடியாது.

ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டி தைரியமாக மலை ஏறுவதைக் கண்ட நாங்களும் எரிமலைக் குழம்பைப் பார்க்கப் போனோம்.

பிக் ஐலேண்டில் உள்ள எரிமலை தேசியப் பூங்காவில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

நான்கு அடிக்கு நான்கு அடி உள்ள ஒரு சிறிய சதுரக் குழி!

அதில் எட்டிப் பார்த்தால் எரிமலைக் குழம்பு. கொதிக்கிறது. இது ஒரு சாம்பிள். இப்படிப்பட்ட பூமி இது என்று கட்டியம் கூறுகிறார்கள். பின்னர் சற்றுத் தள்ளி ஓரமாகச் சென்று பார்த்தால் அப்பப்பா! தொலை தூரத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு ஆறாகப் பாய்வதைக் கண்டு திடுக்கிடலாம்.

இன்னொரு இடத்தில் சுமார் அரை கிலோமீட்டர் நீளமுள்ள  ஒரு இருட்டு குகை இருக்கிறது. 20 நிமிடத்தில் கடக்கக் கூடிய இந்த ‘லாவா டியூபில்’ பக் பக் என்ற பதைபதைப்புடன்  நடந்து சென்று வெளியே வருவது இன்னொரு அனுபவம்.

எரிமலை காட்டுப் பகுதியில் உச்சியில் உள்ள ஒரு காட்சியகத்தில் அவ்வப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் சிறிய திரைப்படக் காட்சியும் உண்டு.

அதில் ஹவாயின் தோற்றம், பூர்வகுடியினரின் வாழ்க்கை முறை, அவர்களின் ராணியை அவர்கள் போற்றும் விதம், எரிமலை, கடற்கரை அழகுகள் அனைத்தையும் சிறிது நேரத்தில் படம் பிடித்துக் காட்டி மகிழ்விக்கின்றனர்.

பல கோடி வருடங்களாக எரிமலை பொங்கி அந்த பிக் ஐலேண்ட் பகுதியை உருவாக்கி இருக்கிறது.

சமீபத்தில்  2018இல் மே மாதம் 6.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் 2000 பேர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று ஏராளமானோர் இறந்தனர்.

நாங்கள் சென்ற பகுதி இது தான் என்று நினைக்கும் போது திக்கென்று இருந்தது. ஐந்து தனித் தனியான எரிமலைகளில் இன்னும் மூன்று எரிமலைகள் “ஜீவனுடன்” உள்ளன. எப்போது பொங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

.

ஆகவே ஹவாய் செல்வதற்கு முன்னர் அங்குள்ள தட்பவெப்ப நிலையைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னர் தான் டிக்கட்டையே பதிவு செய்ய வேண்டும்.

ஜுராஸிக் பார்க்

மிக பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான ஜுராஸிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்தப் படம் ஹவாய் பகுதியில் தான் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெர்ல் ஹார்பரில் நடந்த தாக்குதல் பற்றிய பெர்ல் ஹார்பர் படமும் இங்கு எடுக்கப்பட்டது தான். உலகின் மிக பிரம்மாண்டமான புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களில் தலையாய இருபது படங்கள் எடுக்கப்பட்ட இடம் ஹவாய் தான்.

இங்கு திரைப்படங்களை எடுக்கவென்றே ஒரு தயாரிப்பு யூனிட் உண்டு.

ஷாப்பிங் மையங்கள்

ஹவாய்க்குச் சென்றோர் ஏராளமான ஷாப்பிங் மையங்களைப் பார்க்க முடியும். ஹவாய்க்கே உரித்தான சித்திர வேலைப்பாடுள்ள ஆடைகள், ப்ரிண்டட் ஃபேப்ரிக், வித விதமான அழகிய மாலைகள், கைவினைப் பொருள்கள், ஹவாயின் விசேஷ மரமான கோவா மரத்திலிருந்து செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருள்கள், பசிபிக் மா கடலிலிருந்து எடுக்கப்பட்ட அழகிய பெரிய பெரிய ஒரிஜினல் முத்துக்கள், இசைப் பிரியர் என்றால் உகுலேலே எனப்படும் ஹவாய் கிதார்கள் என மிக நீண்ட பட்டியல் உண்டு. பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் தக சிலவற்றையாவது வாங்காமல் திரும்ப முடியாது!

அலோஹா! அலோஹா!!

அது சரி, உலகில் ஹவாய் பகுதியில் உள்ள தீவுகளையும் ஜேம்ஸ் பாண்ட் ஓட்டிய பழைய சப்மரீன் காரையும் வாங்கி மலைச் சிகரங்களில் பிரம்மாண்டமான கடிகாரங்களையும் அமைப்பது இலான் மஸ்க், ஜெஃப் பெஜோஸ் மட்டும் தான்!

ஏன் சார், அவர்களால் மட்டும் ஹவாய் தீவுகளில் சிலவற்றை வாங்க முடிகிறது?!

சிம்பிளான பதில் : உலகின் ஆகப் பெரிய பணக்காரர்களான அவர்களிடம் ‘வக்கு’ இருக்கிறது. நம்மிடம் இல்லை.

ஆமாம், இந்தத் தீவுத் தொகுதியில் சிறிய ஒன்றை வாங்க வேண்டும் என்றாலும் பல பில்லியன் டாலர்களைத் தர வேண்டும். (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு 77.53 ரூபாய்)

நம்மால் முடிந்த அளவு, எண்ணிலடங்கா போட்டோக்களை எடுத்து வந்து, மலரும் நினைவுகளை வாழ்நாள் முழுவதும் நாம் பார்த்து மகிழலாம்.

அத்தோடு நினைவுச் சின்னமாக நான் அங்கிருந்து பயத்துடன் எடுத்துக் கொண்டு வந்தது சுண்டைக்காய் அளவுள்ள ஒரு எரிமலைக் கல்லைத் தான். அது வெடித்துச் சிதறி விடக் கூடாதே என்ற அனாவசிய பயமும் கூடவே இருந்தது!

ஹவாயிலிருந்து பிரியா விடை கொடுத்து விமான நிலையம் வரும் போது யாரானாலும் அவர் கூறுவது :

அலோஹா அகு நோ, அலோஹா மை நோ (நான் உன்னை நேசிக்கிறேன்; பதிலுக்கு நீ என்னை நேசிப்பாயாக!)

ஹவாய்! ஹவாய்!! ஹே ஹவாய்!

அலோஹா (போய் வருகிறேன், பை, பை!)

மஹாலோ!! (நன்றி)