ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! (Post No.11,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,120

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ச.நாகராஜன்

தனக்கு ஆர்வமுள்ள துறையில் பிரகாசிக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கு; ஜீனியஸாக ஆக முடியவில்லையே என்ற கவலை சிலருக்கு!

ஏதேனும் வழி இருக்கிறதா, எண்ணியதை அடைய?

இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி ரைகாவ்!

இவரது ஆய்வு ‘ரைகாவ் எஃபெக்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

டாக்டர் விளாடிமிர் ரைகாவ் என்பவர் ஒரு ரஷிய விஞ்ஞானி. மூளையியல் நிபுணர். (Dr Vladimir Raikov – Neuropshychologist)

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மூளை பற்றிய ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்.

தனது ஆய்விற்காக அவர் சில கல்லூரி மாணவர்களை அழைத்தார்.

அவர்களை ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலையில் கொண்டு சென்று அவர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஜீனியஸ் என்று நம்புமாறு செய்தார்.

விளைவு அவர்கள் அப்படியே ஆனார்கள்.

இவர்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர் என்பதை அவர் நம்பும்படி செய்யவே அவர் அற்புதமான ஓவியங்களைப் படைக்க ஆரம்பித்தார்.

ரைகாவ் கூறும் அடிப்படை வழிமுறைகள் இவை:

ஹிப்நாடிஸம் மூலமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒருவரைக் கொண்டு சென்று தான் எதுவாக ஆக விரும்புகிறாரோ அதை நம்பச் செய்வது முதல் வழி. (Hypnosis and Deep trance)

இரண்டாவது பூரண ஓய்வான நிலை அடைதல். (Relaxation)

தான் நினைத்ததை அடைய பூரண ஓய்வான நிலையை ஒருவர் அடைய வேண்டும். அதற்கு சில சுவாசப் பயிற்சி  முறைகள் உண்டு. மிக அமைதியான சூழ்நிலையில் வெளி உலக தொந்தரவு இல்லாமல் ஒருவர் இருக்க வேண்டும்.

அடுத்து அகக்கண்ணில் காணல் (Visualization)

ஆழ்ந்த ஓய்வான நிலையில் தனது ஆதர்சமான ஒருவரை ஒருவர் அகக்கண்ணில் பார்க்க வேண்டும். அது மொஜார்ட்டாக இருக்கலாம் அல்லது அவரது துறையில் மிக வல்லவராக இருக்கலாம். அவரை ஆழ்மனதில் நினைக்க ஆரம்பிக்கவே அவரது நடை உடை பாவனைகள் திறமைகள் அனைத்தும் வர ஆரம்பிக்கும்.

அடுத்து யோசனை கூறல் (Suggestion)

தனக்குத் தானே யோசனை கூறல் அடுத்த வழி. யோசனைகள் மூலம் வலுவான எண்ணங்களை உருவாக்க முடியும். அது நிபுணராக ஆக வழி வகுக்கும்.

ஆக்கபூர்வமாக எண்ணல் (Positive Thinking)

அடுத்து பாஸிடிவ் திங்கிங்  எனப்படும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் எண்ணும் மனப்பான்மையும் ஜீனியஸாக ஆவதற்கான முக்கியமான வழிமுறையாகும். திட்டமிட்டபடி தனது நிலையை உயர்த்த அது சம்பந்தமான ஆக்க பூர்வமான அணுகுமுறை பற்றி எண்ணி தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை. (Belief)

தான் நினைத்த நிலையை அடைந்து விட்டதாகவே உறுதியாக நம்புதல் முக்கியமான ஒன்று. இதையும் பயிற்சி செய்து விட்டால் நிஜமாகவே ஒரு ஜீனியஸ் ஆகி விடலாம்.

இறுதியாக மாடலிங்  (Modeling).

தான் எப்படி ஆக வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்படியே ஆனதாக நினைத்து நடை உடை பாவனைகளை மேற்கொள்ளல்.

இந்த வழிமுறைகளை இதைப் பற்றிச் சிறிதும் நம்பாதவர்களுக்கும் ரைகாவ் சொல்லிக் கொடுத்தார்; பயிற்றுவித்தார்.

விளைவு அபாரமாக இருந்தது!

அனைவரும் ரைகாவின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதை ரைகாவ் எஃபெக்ட் என அழைக்க ஆரம்பித்தனர்.

இப்போது உளவியலாளர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்து அனவைருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.

சுய முன்னேற்றத்தை ஊக்குவித்துக் கற்றுத் தரும் பயிற்சியாளர்கள் இந்த அடிப்படையில் தமது பயிற்சி வகுப்புகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாமும் ஜீனியஸ் ஆக ஒரு வழி : – ரைகாவ் எஃபெக்ட்!

ரைகாவ் எஃபெக்ட் மூலமாக எதை எதை அடையலாம் என்பதற்கு ஒரு பட்டியலே இருக்கிறது.

தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம்.

படைப்பாற்றலை அதிகரிக்கலாம்.

புது திறமை ஒன்றை தெரிந்து கொண்டு, வளர்த்துக் கொள்ளலாம்.

ஆக்க பூர்வமான அணுகு முறையை எதிலும் மேற்கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்களை அறவே அகற்றலாம்.

அன்றாட வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தி நிலையை அடையலாம்.

ஆளுமைத் திறனைக் கூட்டலாம்.

கவலையை ஒழிக்கலாம்.

கவனத் திறனைக் கூட்டிக் கொள்ளலாம்.

சுய மரியாதையை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட உயர் வாழ்வை அமைக்கலாம்.

நிதி நிலையில் மேம்படலாம்.

மொத்தத்தில் செயல் திறனை அதிகரித்து வெற்றியாளராகத் திகழலாம்.

***

tags-  ரைகாவ் எஃபெக்ட் ,

புத்தக அறிமுகம் – 3

நடந்தவை தான் நம்புங்கள்

(சிரிக்கவும், சிந்திக்கவும்)

ச.நாகராஜன்

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

  1. நடந்தவை தான் நம்புங்கள்! – 1                                1. கண்பார்வையற்றவரின் த்ரில்!                              2. ஒரு டி.வி.வேண்டுமே!                                       3. ஒரு ஆட்டிற்கு இவ்வளவு தீனியா?
  2. நடந்தவை தான் நம்புங்கள்!  – 2                              1. இரண்டு எதிர்மறை பதங்கள்                               2. வேலைக்கான அனுபவம்
  3. நடந்தவை தான் நம்புங்கள்! – 3                               1) 24 எழுத்தில் பதில்!                                          2) பார்வை இருந்தும் பார்க்காதவர்கள்                       3) பிகாஸோவின் ஓவியங்கள்
  4. நடந்தவை தான் நம்புங்கள்!  – 4                              1) கடவுளைக் காட்டு!                                           2) ஷூர்                                                          3) வக்கீலின் தவறும் டாக்டரின் தவறும்
  5. நடந்தவை தான் நம்புங்கள்!  – 5                               1) தோல்வி அடைந்த சர்வே!                                  2) அரசியல்வாதி யார்?                                         3) நரகம் பற்றிய விளக்கம்
  6. நடந்தவை தான் நம்புங்கள்! – 6                               1) அவ்விடத்து ஞானம்!                                        2) பயிற்சியின் மகிமை!                                        3) ஒரு கம்பி வயலினில் வாசிப்பு!
  7. நடந்தவை தான் நம்புங்கள்! – 7                               1) இரண்டு அருமையான மகன்கள்!                           2) அரைகுறை ஆங்கிலம் தெரிந்த போலிஷ்காரர்!
  8. நடந்தவை தான் நம்புங்கள்! – 8                               1) சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்                              2) உண்மையான காதலன்                                     3) அட, எருமையே!
  9. நடந்தவை தான் நம்புங்கள்! – 9                               1) அம்மாவை விட அதிகம் வயதான பெண்                 2) மிஷனரியை “வச்சு வாங்கிய” ஐயர்
  10. நடந்தவை தான் நம்புங்கள்! – 10                               1) தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!                              2) காலைப் பார்; பேரைச் சொல்லு!                              3) முகம் கழுவ ஒரு டாலர்: முடி வெட்டவும் அதே டாலர்!                                                     4) குதிரையும் கழுதையும்                                      5) கடவுள் கூட எட்டாத நிலை!
  11. நடந்தவை தான் நம்புங்கள்! – 11                               1) மாமியாரைக் கொன்று விட்டேன்!                           2) கிளியின் வயது என்ன?                                     3) கரைசலில் காசு கரையுமா?
  12. நடந்தவை தான் நம்புங்கள்! – 12                                1) கடவுளும் காமன்வெல்த்தும்                                2) பயிற்சி மாஹாத்மியம்!                                       3) வருத்தப்பட்டது உண்மை, ஆனால்…!                       4) யார் போக்கிரி?!
  13. நடந்தவை தான் நம்புங்கள்! -13                          மூன்று அம்மாக்கள்                                            1) ஜாக் வெல்ச்                                                  2) தாமஸ் ஆல்வா எடிஸன்                                   3) மணலில் விழுந்த பையன்
  14. நடந்தவை தான் நம்புங்கள்! – 14                        மூன்று விளையாட்டு வீரர்கள்                                 1) நீ பாதி; நான் பாதி, நண்பா!                                 2) 19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி’ கொண்ட வீரர்!                                                  3) ஸ்கோர் என்ன?
  15. நடந்தவை தான் நம்புங்கள்! – 15                                   1) தூக்க ஊக்கிகள்!                                             2) நகரக் காவலன்                                              3) நக்ஷத்திரங்களுக்கு நன்றி!                                  4) மூன்று நிபுணர்களின் ஆலோசனை
  16. நடந்தவை தான் நம்புங்கள்! – 16                              1) மனச்சாட்சியுடன் பயணம் செய்பவர்கள்                   2) அரை டிக்கட்டா, முழு டிக்கட்டா?                          3) டிக்கட் கலெக்டரின் பேச்சை சமாளித்த நண்பர்
  17. நடந்தவை தான் நம்புங்கள்! – 17                              1) உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!            2) பெண்களிடம் பிடிப்பது என்ன?                              3) இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?         4) எப்படி வண்ணக் கலவையை உருவாக்குகிறீர்கள்?       5) மாமியாருக்கு மறு பெயர் என்ன?
  18. நடந்தவை தான் நம்புங்கள்!  – 18                 விதவிதமான புத்திசாலிகள்                                                1) வக்கீலின் தர்ம சங்கடம்                                    2) ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்                3) மூன்று கடித உறைகள்!
  19. நடந்தவை தான் நம்புங்கள்! – 19                 விதவிதமான பதில்கள்                                        1) ரோஜா மலரே, சண்டைக்காரி                              2) வஞ்சப் புகழ்ச்சி                                               3) அது தான் இல்லையே!                                      4) அழகான பேச்சு                                              5) ஜீரண சக்தி உள்ள டியூக்!
  20. நடந்தவை தான் நம்புங்கள்! – 20                              1) மார்க் ட்வெயினின் குடை                                   2) தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!                                                         3) ஹெச்.ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!                4) அம்மாவும் அப்பாவும்                                       5) சர்ச்சிலின் வார்த்தைகள்
  21. நடந்தவை தான் நம்புங்கள்! – 21                              1) திருமண கவுன்ஸலிங்!                                       2) ட்வெயினின் மனைவியின் கோபம்!                        3) பயனுள்ள வாக்கியம்!                                       4) கடவுளுக்கான மார்க்!                                        5) க்வீன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்
  22. நடந்தவை தான் நம்புங்கள்! – 22                              1) ஜான் ட்ரைடனின் மனைவி                                 2) பெர்ஃபெக்ட் ஜெண்டில்மென்!                                3) மனைவியுடன் வாதாடுவது!
  23. நடந்தவை தான் நம்புங்கள்! – 23                               1) கல்லறை ‘கால்’கள்!                                         2) வீதியில் கூட்ட்ஃம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!                                                      3) ஜோதிடருக்கே ஜோஸ்யம்!                                   4) ஒரு உண்மையான ஜோஸ்யக் குறிப்பு
  24. நடந்தவை தான் நம்புங்கள்! – 24                              1) விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!               2) முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!           3) ‘நெட்’டைப் பயன்படுத்தத் தடை                             4)  கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!
  25. நடந்தவை தான் நம்புங்கள்! – 25                              1) கணவனும் மனைவியும் ஒருவரே!                         2) உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?       3) உனக்கு நஷ்டம்                                               4) கல்லறையும் நாடும்                                          5) ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!
  26. நடந்தவை தான் நம்புங்கள்! – 26                              1) கூடுதலாக வந்த நாணயங்கள்!                             2) ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?         3) மொழிக் குழப்பம்
  27. நடந்தவை தான் நம்புங்கள்! – 27                              1) கொசுக்கள் பற்றிய புள்ளி விவரம் தேவையா?           2) மெஜாரிட்டியும் லாஜிக்கும்!                                   3) டீயே மதுரம்!                                                 4) டைம் அண்ட் ஸ்பேஸ்                                      5) பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?                      6) டிக்‌ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?

முடிவுரை

நூலில் நான் தந்திருக்கும் முன்னுரை இது:

முன்னுரை

மாபெரும் மேதைகளின் வாழ்விலிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலரது புத்திசாலித்தனம் அவர்களது பேச்சில் மின்னும்; சிலரது கிண்டலும், கேலியும், நையாண்டியும், நகைச்சுவையும் அவர்களது சொற்களில் ஒளிரும்.

மக்களிடையே பிரபலமானவர்களது செயல்களும் சுவையான சம்பவங்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வழி வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் மேதைகளையும் அறிஞர்களையுமே சாமான்யர்கள் மடக்கி விடுவதுமுண்டு.

அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் சில சுவையான சம்பவங்களிலும் நகைச்சுவை நன்கு பரிமளிக்கும்!

இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களைத் தொகுத்து வைத்துள்ளேன். நெட்டிலும், பல தமிழ், ஆங்கில இதழ்களிலும், புத்தகங்களிலுமிருந்து தொகுக்கப்பட்டவை இவை.

இவற்றைத் தமிழில் தர வேண்டுமென்ற நோக்கத்தில் ‘நடந்தவை தான் நம்புங்கள்’ தொடரை லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களின் www.tamilandveads.comஇல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்தேன்.

நூறுக்கும் குறைவான சம்பவங்களே இந்தத் தொடரில்  தரப்பட்டுள்ளது. இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

தொடரை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர்.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும், படித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தத் தொடரை நூல் வடிவில் வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

11-7-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Leave a comment

Leave a comment