பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் (Post No.11,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,135

Date uploaded in London – –    25 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

ச.நாகராஜன்

அறிவியல் துறையில் பெண்கள் அரும்பாடு பட்டுத் தான் முன்னேறினர்.

மஹாகவி பாரதியார் பெண் விடுதலை கேட்டு இந்தியாவில் முழக்கமிட்ட அதே வேளையில், அதே காலத்தில் அமெரிக்காவிலும் பெண்கள் படிக்கத் தடை தான் இருந்தது.

இந்தத் தடையை உடைக்க முனைந்தவர் எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் (Ellen Swallow Richards – தோற்றம்3-12-1842 – மறைவு 30-3-1911).

அறிவியலை அனைத்துத் துறைகளுக்கும் கொண்டு செல்லலாம் என்றும் பெண்கள் இதில் இணைய வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் அவர் பாடுபட்டார்.

அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் டன்ஸ்டேபிள் (Dunstable, Massachusetts) என்ற இடத்தில் பிறந்த எல்லனுக்கு கல்வியின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. எதையும் கற்க வேண்டும் என்ற துடிப்பால் அவர்

மசாசூசெட்ஸில்  எம் ஐ டியில் (MIT) சேர விண்ணப்பித்தார். மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் 1870இல் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

ஆனால் பெண்களை பல்கலைக் கழகத்தில் நுழைய விடத் தயக்கம் காட்டிய பல்கலைக் கழக நிர்வாகம், அவரது பல்கலைக் கழக கட்டணத்தை ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸியாக எடுத்துக் கொண்டது.

யாராவது ஒருவர் ஒரு பெண் எப்படி இங்கு படிக்கலாம் என்று கேட்டால் அது முறையான் அட்மிஷன் இல்லை என்று தப்பித்துக் கொள்ளவே இந்த முறையை நிர்வாகம் கடைப்பிடித்தது.

தனது நகரத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருப்பதைக் கண்டு வேதனைப் பட்டார் எல்லன்.

அறிவியல் மூலம் இந்த நிலையைப் போக்க முடியும் என்ற உத்வேகத்தால் தனக்கு என ஒரு சிறு சோதனைச் சாலையை அமைத்துக் கொண்டார்.

சுமார் 20000 நீர் மாதிரிகளை அவர் சோதனை செய்து பார்த்தார்.

நீரை எப்படி சுத்தம் செய்வது என்பதை ஆராய்ந்து கண்டு பிடித்தார்.

அவரது பெரு முயற்சியின் காரணமாக மக்கள் சுத்தமான நீரைப் பெற முடிந்தது.

அத்துடன் அவர் நிற்கவில்லை, பெண்களின் படிப்புரிமைக்காகப் பாடுபட ஆரம்பித்தார்.

தபால் மூலம் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற ஒரு புது வழிமுறையைத் தோற்றுவித்தார்.

அதிகம் வீட்டு வேலை பார்த்துக் கொண்டே படிப்பதால் ஆரோக்கியம் சீர் கெடுவதாக பெண்களிடம் ஒரு பிரச்சினை எழுந்தது. உடனே பெண்களின்  ஆரோக்கிய மேம்பாட்டிற்கான வழிமுறைகளை அவர் ஆராயலானார்.

அவரது பெருமுயற்சியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து முதன் முதலாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படலாயினர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்க வேண்டும் என்று முதலில் முழங்கியவர் அவர்.

ஆனால் 1890இல் அவர் ஆரம்பித்த இந்த முயற்சி 116 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவின் மூலம் வெற்றி அடைந்தது. அவர் ஆரோக்கியமான பள்ளிக்குழந்தை உணவை அறிமுகப்படுத்தினார்.

எல்லன் பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்தார்.

ஹோம் எகனாமிக்ஸ் மூவ்மெண்ட் எனப்படும் ‘இல்ல பொருளாதார இயக்கத்தை’ நிறுவியவரும் அவரே. துப்புரவுத் துறையில் (Sanitary) மகத்தான சாதனையை அவர் படைத்தார்.

தனது கணவரின் துணையோடு வருடத்திற்கு ஆயிரம் டாலரை மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்திற்கு, பெண்கள் பரிசோதனைச்சாலைக்காக அவர் வழங்கி வந்தார்.

1911 மார்ச் 30ஆம் நாள் இதயவலியால் மூச்சு முட்டல் (angina) ஏற்பட்டு அவர் மறைந்தார்.

பெண் கல்வி, துப்புரவு, குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் என இப்படிப் பல துறைகளிலும் முன்னோடியாக நின்ற அவரை உலகம் மறக்காது.

***

புத்தக அறிமுகம் – 8

தமிழ் என்னும் விந்தையில்

(வி) சித்திர கவி விளக்கம்

பாகம் – 2

பொருளடக்கம்

என்னுரை

1. வல்லின எழுத்துப் பாட்டு!

2. மெல்லின எழுத்துப் பாட்டு!

3. இடையின எழுத்துப் பாட்டு!

4. எழுத்து வருத்தனம்

5. ஓரெழுத்து வர்க்கப் பாட்டு

6. முதல் எழுத்து அலங்காரம் – 1

7. முதல் எழுத்து அலங்காரம் – 2

8. நடுவெழுத்தலங்காரம் – 1

9. நடுவெழுத்தலங்காரம் – 2

10. நடுவெழுத்தலங்காரம் – 3

11. கடை எழுத்து அலங்காரம்

12. நிரோட்டம் – 1

13. நிரோட்டம் – 2

14. வினா – உத்தரம்! – 1

15. வினா – உத்தரம்! – 2

16. பிரிந்தெதிர் செய்யுள்

17. பிறிதுபடு பாட்டு! – 1

18. பிறிதுபடு பாட்டு! – 2

19. கரந்துறைப் பாட்டு – 1

20. கரந்துறைப் பாட்டு – 2

21. ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்கள் – திரிபங்கி!

22. ஒரு பாடலில் ஏழு பாடல்கள் – சப்தபங்கி!

23. ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் – நவ பங்கி!

24. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!

25. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி!

26. யமக அந்தாதி பட்டியல்!

27. தமிழில் அலங்காரம்!

புத்தகத்தில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழ் என்னும் விந்தையில் (வி)சித்திர கவி விளக்கம் என்ற தலைப்பில் 27 அத்தியாயங்கள் அடங்கிய எனது நூல் 2022 ஜனவரியில் வெளியிடப்பட்டது.

நூலுக்கு முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, மேனாள் விரிவுரையாளர் (பணிநிறைவு), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அணிந்துரை தந்து என்னைக் கௌரவித்தார்.

அதில் சதுரங்க பந்தம், சருப்பதோ பத்திரம், கூட சதுர்த்தம், கோ மூத்திரி, மாலை மாற்று, சுழிகுளம், திரிபங்கி ஆகிய தமிழ் கவிதா விசித்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக இந்த நூல் மலர்கிறது.

இதில் வல்லின எழுத்துப் பாட்டு, மெல்லின எழுத்துப் பாட்டு, இடையின எழுத்துப் பாட்டு உள்ளிட்ட பல தமிழ் கவிதா விந்தைகள் விளக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் www.tamilandvedas.com இல் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ்அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைப் படித்து என்னை ஊக்குவித்த அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் எனது நன்றி.

புத்தகமாக வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர்களின் விருப்பம் இதை வெளியிடுவதன் மூலம் நிறைவேறியுள்ளது.

தமிழ், அளக்கமுடியா ஒரு மாபெரும் கடல். அதில் உள்ள விந்தைகள் ஏராளம். அவற்றில் இன்னும் பலவற்றை அடுத்த பாகத்தில் காணலாம்.

நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ
18-7-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

tags- எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

Gems from Jain Literature- 1 (Post No.11,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,134

Date uploaded in London – –    24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Gems from Jain Literature- 1

Big numbers

Jains were great mathematicians. Mahavira, who was senior to Buddha lived in North India 2600 years ago. We may say that he lived before the famous Greek philosophers. The teachings of Jains are almost similar to the Hindus. Jains also believed in the Karma theory, re births and Moksha. They practised stricter Ahimsa/non violence towards all living beings. Like Hindus, men and women became ascetics. One sect of them did not wear clothes and they were called Digambaras meaning Sky clad. Another sect wore white clothes, and they were called Svetambharas. English word White came from Sanskrit word Swetha.

Jains were fascinated with numbers and they have their own classification of Time.

The following is taken from Jain scriptures

The smallest or indivisible unit of Time-  1 Samaya

Countless or innumerable Samayas –      1 Aavalikaa

Numerous Aavalikaas ——                      1 swaasa/ breath

Two Svaasas/ breaths ——.                      1 Praana

Seven Praanasankatam —-                     1 Stoka

Seven Stokas——-                                   1 Lava

77 Lavas ———-                                       1 Muhuurta

30 Muhuurtas—-                                       1 Day / 24 Hours

15 days—-                                                 1 Paksha

Two Pakshas —                                        one month

Two months —                                          one season

Three seasons —-                                    one Ayana

Two Ayanas——                                      one year or Samvatsara

100 years—-                                              one century

Ten centuries—                                         1000 years

84000 lakhyears —                                   one Puurvaanga

84 Lakh Puurvaanga s —                         one Puurva

Thus one Puurva consists of 7056 0000000000 years

The ancient seers have calculated figures even beyond these. But as figures are of no avail in calculating and arriving at those figures, they have resorted to comparisons. Thus, if you have a well, one Yojana/8 miles in length, one yojana in breadth/ circumference and one yojana in depth, and fill it with extremely thin human hair and press them down in such a manner that even if an army were to march over it, the hair would not go down; and if you were to empty that well out one piece of hair at an interval of 100 years, then the time required to empty the well constitutes one Palyopama.

Ten crores into ten crores of Palyopamas constitute one Sagaropama.

20 crores into20 crores of Sagaropamas make one Kala Chakra and countless Kala chakras make one Pudgalaparaavarta.

One may think these are not useful in practical life. But the modern day astronomers use the computers for biliions of calculations before launching a satellite. When they talk about the distance of stars and galaxies they use huge numbers. Laymen may think they are not useful.

Rig Veda divided a year into six seasons. Tamil literature also followed the Vedas. We see the same division in Jain literature. Number 84,000 plays same role in both the religions. The number of living creatures is 84 lakhs. The big calculations in time is also similar to Hindu calculations of Manvantara.

Lord Krishna in Bhagavad Gita also gives very big numbers (Sahsra Yuga Paryantham) ; the day of Brahma is 1000 Chatur Yugas and the night of Brahma is again 1000 Chatur Yugas. And he lives for 100 years. That is one Param. One Chatur Yuga is equal to 4,32,000 years. We cant even write one Brahma’s age in numbers. These calculations show that there are Extra Terrestrial Civilizations where the calculation of Time is different. If a May fly knows mathematics it will tell its babies some huge numbers when it talks about human lives. The May fly lives for only one day. So Hindus know that we are small pebbles on the shores of mighty oceans. When Krishna showed Arjuna Viswa Rupa Darsan, he described his brightness equal to 1000 suns (Divi Surya Sahasrasya); when a little Hindu girl begins his studies, she praises  Lord Ganesh as bright as ten million suns (Koti Surya Smaprabha); when other religions talked in terms of 40s, Hindus thought about billions.

Tamil poet Tiruvalluvar talks about 10 times ten millions or ten to the power of ten millions (Paththu Adukkiya Koti in Tamil)

Jains lived a peaceful life in North India, but in Tamil Nadu and Karnataka they involved in politics 1400 years ago. That resulted in big clashes between the Saivaites and the Jains in Tami Nadu. They made a big contribution to Tamil literature. They started writing and painting in Tamil Nadu caves. Hindus followed them. Jains who came to Tamil Nadu probably copied Emperor Asoka.

Source :-

The Teachings of Lord Mahavira (with my inputs)

Sri Mahavira Vacanamrtam

Pronunciation— Srii Mahaaviira vacanaamrtam

To be continued

tags- Mahavira, Mathematics, Jains, Gems, Literature

நவராத்திரி வெடிகள். ஞான மொழிகள்-103 (Post No.11,133)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,133

Date uploaded in London – 24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-103

நவராத்திரி வெடிகள்.

———————————————-

1)

”குருக்களே ! நவராத்திரி பூஜை செய்ய கூடாதுனு சொன்ன அறநிலைய அதிகாரியை எப்படி சம்மதிக்க வச்சீங்க ?”

குருக்கள் :

லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை-ன்னு சொன்னா செய்யக்கூடாது-னு சொல்வார். அதனால, ஒன்பது நாளும் , ”துர்கா பூஜை செய்யணும்-னு சொன்னேன்! . உடனே நவராத்திரி கொண்டாட ஒப்புக்கிட்டார்.”

***********

2)

என்ன இது ? உங்க வீட்டு கொலுவுல ரெண்டு செட்டியார் பொம்மை இருக்கு. ?

” ஒருத்தர் OPS .இன்னொருத்தர் EPS .

அப்படினா ?

OPS — ஒன்பதாம் படி செட்டியார்

EPS — ஏழாம் படி செட்டியார்.

——

3)

அந்த வீட்டு கொலுவுல எல்லா பொம்மையும் இரண்டு இரண்டா வச்சிருக்காங்களே. ஏன் ?

”அவங்க நிதியமைச்சருக்கு உறவாம்.”

———

4)

போன வருஷம் கொலுவுல மேல் படியில், முருகன் பொம்மையை வச்சிருந்தீங்க. இந்த வருஷம் அண்ணாமலை செட் மேலே வச்சிருக்கீங்களே.”’

”ஹி ஹி ! நான் BJP

———

5)

” என்ன இது ? Sundal வேகவே இல்லை ?”

இன்னைக்கு Sunday ! பூஜை செய்யக்கூடாது இல்லே. அதனால Sundal ப்ரசாதத்தை Sunda-ம, ‘ல்’ மட்டும் செஞ்சேன்.”

——-

6)

வழக்கமா அந்த மாமி கர்ண கொடூரமா பாடுவா ! இந்த தடவை ”மானஸ சஞ்சரரே” பாட்டை பிளந்து கட்டறாளே.

”மானஸ சஞ்சரரே பாடட்டுமா னு கேட்டா . மாஸ்க்-கோட சஞ்சரிங்கோ னு சொன்னேன். மாஸ்க்கை கழட்டாம பாடறதால, பாட்டு கேட்கும்படி இருக்கு.”

———-

7)

அந்த வீட்டு கொலுவை பார்க்க நூறு ரூபாய் டிக்கெட் போட்டிருக்காங்களாமே ? அப்படி என்ன ஸ்பெஷல் ?”

கொலுவுல ருத்ர தாண்டவம் செட் வச்சிருக்காங்களாம். ”

——–

8)

”உங்க கொலுவுல சைதன்ய மகாபிரபு பொம்மை ஒண்ணு இருக்குமே. இந்த வருஷம் காணோமே. ?

”என் பிள்ளை சமந்தா ரசிகன். சைதன்யா பொம்மை வைக்கக்கூடாது-னு சொல்லிட்டான்.

——-

9)

” கொரோனாவுக்கு பயந்துகிட்டு ஆன்லைன்ல நவராத்திரி கொலுவை காட்டறது தப்பில்லே. ஆனா Smule மூலமா பாடுங்க, Swiggy மூலமா சுண்டல் வாங்கிக்கங்க, டஞ்சோ மூலமா தாம்பூலம் அனுப்பறோம்னு சொல்றது எல்லாம் too much.

——-

10)

”வீட்டுக்காரரை ஏன் அந்த மாமி திட்டிகிட்டு இருக்காங்க. ?

மாமி மீரா பஜன் பொம்மை வாங்கிட்டு வர சொன்னாராம்.. இவரு மீரா மிதுன் பொம்மையை வாங்கிட்டு வந்துட்டாராம்.”

— subham —-

செப்பு மொழி இருபத்திமூன்று! (Post No.11,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,132

Date uploaded in London – –    24 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்திமூன்று!

ச.நாகராஜன்

  1.  சத்தியம் தனது காலணியை அணிந்து கொள்வதற்குள் பொய் உலகெங்கும் சுற்றி விடுகிறது – பிரெஞ்சு பழமொழி

A lie travels round the world while truth is putting her boots on – French

  •  எவன் நிறைய அறிந்திருக்கிறானோ அவன் குறைவாகவே பேசுகிறான் – ஸ்பானிய பழமொழி                              Who knows most speaks less – Spanish
  • ஒரு அறிவாளி ஒரு வார்த்தையைக் கேட்கிறான், இரண்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறான். – யிட்டிஷ் பழமொழி

        A wiseman hears one word and understands two. Yiddish

  • கந்தல்துணிகள் தான் பேப்பரை உருவாக்குகின்றன,

பேப்பர் தான் பணத்தை உருவாக்குகிறது,

பணம் தான் வங்கிகளை உருவாக்குகிறது,

வங்கிகள் தான் கடனை உருவாக்குகிறது,

கடன் தான் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது,

பிச்சைக்காரர்கள் தான் கந்தைத் துணிகளை உருவாக்குகின்றனர்!

Rags make paper,

Paper makes money,

Money makes banks,

Banks make loans,

             Loans make beggars

             Beggers make rags

  • பணம் சேர்ப்பது ஒரு கலை அல்ல, அதைப் பாதுகாப்பது தான் கலை!

The art is not making money, but in keeping it.

  • பழமையாக எதெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் நான் விரும்புகிறேன்,

பழைய நண்பர்கள், பழைய காலம்,                       பழைய பழக்க வழக்கங்கள்,                              பழைய புத்தகங்கள், பழைய ஒயின்….    ஆலிவர் கோல்ட்ஸ்மித்

     I love everything that is old                                                 

     Old friends, old times,                                                   

     old manners, Old books, old wines…..      – Oliver Goldsmith

  • மாமியார் உனக்கு கல்யாணம் ஆகும் போது கிடைக்கும் பரம்பரைச் சொத்து!  – ஆங்கிலப் பழமொழி

A mother-in-law is what you inherit when you marry – English

  • இன்று என்பது நேற்றைய தினத்தின் மாணாக்கன்.

Today is yesterday’s pupil.

  • புன்னகை இல்லாத மனிதன் ஒரு கடையைத் திறக்கக் கூடாது.

A man without a smiling face must not open a shop

  1. ஒரு கடையைத் திறப்பது சுலபமான விஷயம்; அதைத் திறந்தே வைத்து நடத்துவதோ ஒரு கலை!

To opend a shop is easy, to keep it open is an art.

  1. ஒரு கால் உடையவன் தடுக்கி விழுவதே இல்லை.                The one legged never stumble.
  1. நண்பர்களை அடைவது நரகத்தில் கூட நல்லது.                 It is good to have friends even in hell.
  1. எல்லா அந்நியர்களும் ஒருவருக்கொருவர் உறவினரே.          All strangers are relations to each other.

அயர்லாந்து பழமொழிகள் (14 முதல் 23 முடிய)

  1.    என்னுடைய ‘இன்று’ நேற்றை விட நல்லதாக இருக்கலாம், ஆனால் நாளையை விட நல்லதாக இருக்க முடியாது.         May today be better than yesterday, but, not as good as tomorrow. …
  1. நிதானமானன ஒருவன் இதயத்தில் எதை வைத்திருக்கிறானோ அதை குடிகாரன் உதடுகளில் வைத்திருக்கிறான்.               What a sober man has in his heart, the drunk has on his lips. …
  1. அதிர்ஷ்டம் ஒரு போதும் கொடுப்பதில்லை; அது கடனாகத் தான் தருகிறது.                                                  Luck never gives; it only lends. …
  1. கடந்த காலம் கணிக்கவே முடியாதது.                          The past is very unpredictable. …
  1. நீ எதைச் சொன்னாலும், அதைச் சொல்லாதே.                 Whatever you say, say nothing.
  1.  கூட வரும் ஒருவன் கடக்கும் தூரத்தைச் சிறிதாக்குகிறான்.     A companion shortens a road.
  • தூக்கம், மீண்டு வருவதன் முதல் அறிகுறி.                     Sleep is the first sign of recovery.
  • அன்பும் சிரிப்பும் உன் நாட்களை பிரகாசமுடையதாக ஆக்கட்டும்.   May love and laughter light your days, …
  • கடனை மறப்பது அதைத் திருப்பிக் கொடுத்ததாக ஆகி விடாது. Forgetting a debt doesn’t mean it’s paid.
  • நல்ல வார்த்தை ஒரு போதும் பல்லை உடைக்காது.        

                 A good word never broke a tooth.

xxxx

புத்தக அறிமுகம் – 7

தமிழ் என்னும் விந்தையில்

(வி) சித்திர கவி விளக்கம்

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

அத்தியாயங்கள்

தமிழ் என்னும் விந்தை! – 1 – சதுரங்க பந்தம் -1

தமிழ் என்னும் விந்தை! – 2 – சதுரங்க பந்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! – 3 – சதுரங்க பந்தம் -3

தமிழ் என்னும் விந்தை! – 4 – சதுரங்க பந்தம் -4

தமிழ் என்னும் விந்தை! – 5 – சதுரங்க பந்தம் – 5

தமிழ் என்னும் விந்தை! – 6 – சதுரங்க பந்தம் – 6

தமிழ் என்னும் விந்தை! – 7 – சதுரங்க பந்தம் – 7

தமிழ் என்னும் விந்தை! – 8 – சதுரங்க பந்தம் – 8

தமிழ் என்னும் விந்தை! – 9 – சதுரங்க பந்தம் – 9

தமிழ் என்னும் விந்தை! – 10 – சதுரங்க பந்தம் – 10

தமிழ் என்னும் விந்தை! – 11 – சதுரங்க பந்தம் – 11

தமிழ் என்னும் விந்தை! -12 – சருப்பதோபத்திரம் – 1

தமிழ் என்னும் விந்தை! -13 – சருப்பதோபத்திரம் – 2

தமிழ் என்னும் விந்தை! -14 – சருப்பதோபத்திரம் – 3

தமிழ் என்னும் விந்தை! -15 – சருப்பதோபத்திரம் – 4

தமிழ் என்னும் விந்தை! -16 – கூட சதுர்த்தம் – 1

தமிழ் என்னும் விந்தை! -17 – கூட சதுர்த்தம் – 2

தமிழ் என்னும் விந்தை! -18 – கோமூத்திரி – 1

தமிழ் என்னும் விந்தை! -19 – கோமூத்திரி – 2

தமிழ் என்னும் விந்தை! -20 – மாலைமாற்று – 1

தமிழ் என்னும் விந்தை! -21 – மாலைமாற்று – 2

தமிழ் என்னும் விந்தை! -22 – சுழிகுளம் – 1

தமிழ் என்னும் விந்தை! -23 – சுழிகுளம் – 2

தமிழ் என்னும் விந்தை! -24 – திரிபங்கி – 1

தமிழ் என்னும் விந்தை! -25 – திரிபங்கி – 2

தமிழ் என்னும் விந்தை! -26 – பேசுவதெல்லாம் கவிதை!

தமிழ் என்னும் விந்தை! -27 –தமிழ் என்னும் விந்தைக் கடல்!

அணிந்துரை

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி,
மேனாள் விரிவுரையாளர்( பணிநிறைவு),
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ர்

தமிழ்மொழி காலந்தோறும் கற்றறிந்தார்க்கு அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்ந்துவருகிறது. இன்று பன்மொழி கற்கவேண்டிய தேவையும் சூழலும் பெருகியுள்ளது. இந்நிலையில் 

‘நாமமது தமிழரெனக்’ கொண்டிருந்தும் – தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் மிகப்பலர் இம்மொழியின் பெருமை உணராது கற்க விருப்பம் இல்லாது உள்ளனர். இச்சூழலில் ஐயா சந்தானம் நாகராஜன் அவர்களின் ‘தமிழ் என்னும் விந்தையில்(வி)சித்திரகவி விளக்கம்’ என்னும் நூல் வெளிவருவது தமிழின் மாண்பை எடுத்துரைக்கும் முயற்சி மட்டுமன்று; அதனைக் கட்டிக்காக்கும் முயற்சியும் ஆகும்.

வாழ்க்கைக்காகப் பொறியியல் கற்ற நூலாசிரியர் வாழ்வுக்காக வளமார் தமிழைப் பழுதறக் கற்றவர்! நெஞ்சை நிறைக்கும் தஞ்சைமண்ணிலே தமிழ்ப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். தேசப்பற்று மிக்க குடும்பத்தின் வாரிசான இவரிடம் தேசநேசமும் மொழிநேசமும் இல்லாது போய்விடுமா? அந்த நேசத்தால் தமிழை விந்தைமொழி எனக் கொண்டாடி மகிழ்கிறார். தமிழை அவர் விந்தைமொழியாகக் கண்டதற்கும் காட்டியதற்கும் காரணங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தமிழில் அமைந்துள்ள சித்திரகவி என்னும் கவிவகை. சித்திரகவி இவருக்கு விசித்திர கவியாகவே தோன்றுகிறது! இவர் சமஸ்கிருதம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என இந்திய மொழிகள் பலவற்றுடன் ஆங்கிலமும் கற்றவர் என்ற கருத்தை உளங்கொண்டு சிந்திக்கையில் இவருக்குச் சித்திரகவி எவ்வாறு விசித்திரகவியானது என்பதை நம்மால் உணரமுடிகிறது. பன்னூற்பயிற்சிமிக்க இவர் ஒப்பீட்டுப்பார்வையுடன் சித்திரகவி விசித்திரகவியான விந்தையைத் தம்நூலில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

‘சித்திரகவி விளக்கம்’ என்னும் பரிதிமாற்கலைஞரின் நூலுக்கு எளியமுறையில் விளக்கம் தருகிறார் நூலாசிரியர் நாகராஜன். நாகராஜன் அவர்களின் நூலைப்பற்றிப் பேசுமுன் பரிதிமாற்கலைஞரின் நூல் எழுந்ததன் பின்னணியை அறிவது அவசியமாகும். அப்போதுதான் நாகராஜன் அவர்கள் எத்தகைய உழைப்பை மூலதனமாக்கி மெனக்கெட்டு இந்த நூலுக்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பதை நாம் உணரமுடியும்.

கி.பி.1897 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்குரிய நூல்களில் தண்டியலங்காரத்தின் சொல்லணியியல் பாடமாக வைக்கப்பட்டது. சுத்தமான பாடத்தோடு கூடிய தண்டியலங்காரப்பிரதி கிடைத்தற்கு அரிதாயிருந்தது. மேலும் சித்திரகவிதைகள் இன்னின்னவாறு தீட்டப்படவேண்டும்; இன்னின்ன எழுத்துகள் இன்னின்னவாறு அமைக்கவேண்டும் என்பது புலப்படாததால் தம் மாணாக்கர்கள் இடர்ப்படக்கூடாது என்னும் நோக்கில் சித்திரகவிகளின் இயல்புகளை விளக்கிப் பரிதிமாற்கலைஞர் எழுதிய நூலே சித்திரகவி விளக்கம் என்பதை இந்நூலின் பதிப்புரை வழியே அறிகிறோம். பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ்த்தொண்டினைப் பேசும் பெரும்பாலான இலக்கியவரலாறுகள் ‘சித்திரகவி விளக்கம்’ என்னும் நூலைக் குறிப்பிடவே இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் நூலை உருவாக்கிய பேராசிரியர் மது.ச. விமலானந்தம் “இவர் யாத்த தனிப்பாடல்கள் – தனிப்பாசுரத்தொகை; ஆங்கிலத்தில் போப் ஐயர் பெயர்த்துள்ளார். சித்திரக்கவிகள் சில புனைந்துள்ளார்” (ப-483) என்று மட்டுமே எழுதுகிறார். பரிதிமாற்கலைஞரின் சித்திரகவி விளக்கத்தில் அகச்சான்றாகப் பரிதிமாற்கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் உதாரணச் செய்யுள்களுக்கு உரையும் வரைந்து சேர்த்து அன்னாரின் மகன் வி.சூ.சுவாமிநாதன் அவர்கள் முயற்சியால் 1939இல் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரிய இந்த நூலுக்கு விளக்கம் எழுதி மேலும் எளிமைப்படுத்தி உள்ளார் திரு நாகராஜன் அவர்கள்.

சித்திரகவிதையை யாப்பிலக்கணத்தின் மணிமுடி’ என்று கூறுவது தவறாகாது. சித்திரகவிதையை எழுதுவதற்கும், அதைப்படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஆழ்ந்த யாப்பறிவு இன்றியமையாதது. சதுரங்க பந்தத்திற்கு 11 வகையான விளக்கங்களும்,சருப்பதோபத்திரம் என்னும் சித்திரகவிக்கு 4 வகை விளக்கங்களும், கூட சதுர்த்தம், கோமூத்திரி, மாலைமாற்று, சுழிகுளம், திரிபங்கி என்பனவற்றுக்கு முறையே இரண்டிரண்டு வகை விளக்கங்களும் தந்து விளக்கியுள்ளார். விளக்கத்துக்கு விளக்கம் எழுதுவது கடினமான வேலையா என்று சிலர் யோசிக்கலாம். ஆம்! உண்மையில் கடினமான வேலைதான். இதனைச்செய்வதற்கு அறிதலும் புரிதலும் அடிப்படை. இவற்றுக்கும் மேலாக இவரின் கணிதஅறிவும் சிந்தனைத்திறனும் பெரிதும் உதவியுள்ளன. குறுக்கெழுத்துப்போட்டி போன்று இவரே முயன்று பல புதிர்களை விடுவித்துள்ளார். சதுரங்க துரககதி பந்தம் என்னும் வகையை உதாரணமாக எடுத்துக்கொண்டு பரிதிமாற்கலைஞரின் சித்திரகவியில் கட்டங்களில் எழுத்துகள் இருக்க அவற்றுக்கு எண்கள் கொடுத்துக் குதிரைப்பாய்ச்சலை விளக்க முயல்கிறார்.

இவருடைய இந்த நூல் வழி பல புதிய தகவல்களை நாம் பெற முடிகிறது. 1911இல் வெளிவந்த ‘நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து’ என்னும் நூல் விளக்கக்குறிப்புரையுடனும் சித்திரக்கோட்டங்களுடனும் ‘நகுலேச ஸ்தோத்திரம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ள செய்தியையும் இந்நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப்பிரசித்த நோத்தரி மயிலிட்டி க.மயில்வாகனப்பிள்ளை என்பதையும், இந்நூல் மறுபதிப்பாக 2004இல் தேன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது எனவும் அறிகிறோம். இன்றளவும் பழமைக்கு உள்ள மதிப்பைப்புரிந்துகொள்கிறோம். பழமை தானே புதுமைக்கு வித்திடுகிறது?

சித்திரகவிகள் வெறும் புலமைச் சித்திரங்கள் மட்டுமல்ல; அவை மந்திர ஆற்றல் வாய்ந்தவை என்பதற்குப் பாம்பன் சுவாமிகளின் சித்திரகவிதைகளை எடுத்துக்காட்டுகிறார். மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போன்ற புலவர் பெருமக்கள் தமக்குள் மொழிவிளையாட்டுகளின் வாயிலாகப் புலமைவிளையாட்டுகளையும் நடத்தி உள்ளதை அறியும்போது இன்றைய கற்றல் கற்பித்தல் சூழலில் பயன்படும் புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி போன்றவற்றின் தொன்மையையும் அவை நமக்குப் புதிதல்ல என்பதையும் இந்நூல் கூறுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள சித்திரகவிகளையும் ஆங்கிலத்தில் உள்ள குறுக்கெழுத்துப்போட்டியையும் உதாரணம் காட்டி விளக்குகிறார். சதுரங்கவிளையாட்டுக் குறித்து விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்டுத் தம் புரிதலை விசாலப்படுத்திக்கொண்டு சதுரங்கபந்தத்தை விளக்க முனைகிறார்.

இந்த நூலில் தமக்கு விளங்காத பகுதிகளை நேர்மையாகச் சொல்வதன் மூலம் புதிய ஆய்வுமுயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் வழிகாட்டுகிறார் எனலாம். சித்திரகவிகளைப் பற்றிய இவருடைய தேடல் இன்னும் தொடர்கிறது. சிங்கப்பூரில் உள்ளவற்றையும் நூலாசிரியர் என்னிடம் கேட்டுள்ளார். இவருடைய ஆய்வுத்தாகம் வருங்காலத் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டகத் திகழும் பெற்றி வாய்ந்தது. நூலாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
முனைவர் எம் எஸ் சிங்கப்பூர் ஸ்ரீலக்ஷ்மி
சிங்கப்பூர்.

ஜனவரி 2022

*

புத்தகத்தில் என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

இப்பாடல்கள் www.tamilandvedas.com லும் வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.

இந்த நூலுக்கு அழகியதொரு அணிந்துரையை சிங்கப்பூரில் வசிக்கும் முனைவர் திருமதி எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி அளித்துள்ளார். அவர் தமிழின் பல் சுவையைக் கண்டவர். எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம்,சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஆகப் பெரிய பெரும் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்துத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். மலாய், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி வல்லுநரான இவர் 33 அரும் நூல்களைப் படைத்துள்ளார். இவற்றில் சில பல்கலைக் கழகப் பாட நூல்களாகும். 150க்கும் மேற்பட்ட பிரமிக்க வைக்கும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். கதாசிரியர்; ஒரு கவிஞரும் கூட. பல பயிலரங்குகளை நடத்தி வருபவர். இவர் 17 விருதுகளைப் பெற்றதில் வியப்பே இல்லை. தமிழுக்குத் தொடர்ந்து அரும்பணி ஆற்றிவரும் இவர் என்னை கௌரவித்து அணிந்துரை அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,131)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,131

Date uploaded in London – –    23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸம தீத்ய 14-26  எளிதில் கடந்து சென்று

ஸமத்வம் 2-48  சம நிலைமை

ஸம தர்சினஹ  5-18 சமமாக்கக் கருதும் நோக்கு உள்ளவர்கள்

ஸம துக்க ஸுகம்  2-15  இன்ப துன்பங்களைச் சமமாய்க் கொண்டவன்

 ஸம துக்க ஸுகஹ 12-13 இன்ப, துன்பங்களை சமமாய்க் கருதுபவன்

ஸமா தி கச்சதி  3-4  அடைதல், அடைகிறது

 ஸம புத்திஹி  6-9  சம புத்தியுடையவன்

 ஸம புத்தயஹ 12-4  சம புத்தி உடையவர்களாய்

 ஸம லோஷ்டா  ஸம காஞ்சனஹ  6-8 கல்லையும் பொன்னையும் சமமாகக் கருதும்

 ஸம வஸ்திதம் 13-28  நிலைத்து நிற்பவன்

 ஸம வேதான்  1-25  கூடியுள்ள, அணிவகுத்துள்ள

 ஸம வேதாஹா 1-1  கூடியுள்ள, அணிவகுத்துள்ள

 ஸம ம் 5-19  சமம் ஆனது

ஸம ந்ததஹ  6-24  எப்புறத்தும்

 ஸமஹ  2-48   சமமாக

 ஸமா கதாஹா  1-23  வந்திருப்பவர்கள், கூடியுள்ளவர்கள்

 ஸமாசார 3-9  செவ்வனே செய்வாயாகுக

 ஸமாசரன் 3-26  அனுஷ்டித்து , பின்பற்றி

 ஸமதாதும் 12-9   நிறுத்துவதற்கு

 ஸமாதாய 17-11 நிறுத்தி

 ஸமாதிஸ் தஸ்ய 2-54  சமாதியில் நிற்பவன் உடைய

 ஸமாதெள  2-44  உள்ளத்தில்

ஸமாப் னோஷி  11-40  வியாபிக்கின்றாய், பரந்து  நிற்கிறாய்

 ஸமாரம்பாஹா 4-19  கருமங்களும்

 ஸமா ஸதஹ  13-18 சுருக்கமாக

 ஸமாஸேந 13-3  சுருக்கமாக

 ஸமா ஹர்தும் 11-32 ஒடுக்குவதற்கு, அழிப்பதற்கு

 ஸமா ஹிதஹ 6-7  நிலை பிறழாது நிற்கும்

 ஸமாஹா 6-41  ஆண்டுகள்

ஸமிதிஞ் ஜயஹ 1-8    யுத்தத்தில் எப்போதும் வெற்றிபெறும்

ஸமித்தஹ   4-37  மண்டி எரிகின்ற

ஸமீக்ஷ்ய  1-27  நன்றாகப் பார்த்துவிட்டு

ஸமுத்ரம்  2-70  பெருங்கடல்

ஸமுத்தர்தா 12-7 கரை ஏற்றிக் காப்பவனாக

ஸமுபஸ்திதம் 1-28 கூடியுள்ள

ஸமுபாச்ரிதஹ 18-52  நன்கு கைக்கொண்டு

ஸம் ருத்த வேகாஹா 11-29  மிகுந்த வேகத்துடன்

ஸ ம் ருத்தம் 11-33 செல்வம் நிறைந்த

ஸ ம்யக்  5-4  நன்றாக

ஸரஸா ம்  10-24  ஏரிகளில்

ஸ ர்கஹ   5-19   பிறவி

ஸ ர்காணா ம் 10-32  சிருஷ்டிகளின் , படைப்புகளின்

ஸ ர்கே 7-27  பிறக்கும்போதே

ஸ ர்பாணா ம் 18-13 பாம்புகளில்

ஸர்வ 11-40 எல்லா

ஸர்வ கர்மணாம் 18-13  எல்லா கருமங்களின்

ஸ ர்வ கர்ம பலத்யாகம் குரு 12-11  எல்லா கருமங்களின் பலனையும்

எனக்கு அர்ப்பணம் செய்

ஸர்வ கர்மாணி 3-26  எல்லா கருமங்களையும்

ஸர்வ காமேப்யஹ  6-18  எல்லா ஆசைகளில் இருந்தும்

ஸர்வ கில்பிஷைஹி 3-13  எல்லாப் பாவங்களில் இருந்தும்

ஸர்வ க்ஷேத்ரேஷு 13-2  எல்லா க்ஷேத்ரங்களிலும்

ஸர்வ கதம் 3-15  எங்கும் பரவிய

ஸர்வ கதஹ 2-24  எங்கும் உள்ளது

ஸர்வ குஹ்ய தமம் 18-64  ரகசியங்களில் சிறந்ததுமான

ஸர்வ ஞான விமூடான் 3-32  நல்லறிவு அனைத்தும் மழுங்கிய

ஸர்வ தஹ 2-46   எங்கும்

ஸர்வதஹ பாணி பாதம் 13-13  எங்கும் கை கால்கள் உடையது

ஸர்வதஹச்ருதி மத் 13-13  எங்கும் காதுகள் உடையது

ஸர்வதோக்ஷி சிரோ முகம் 13-13  எங்கும் கண்ணும் தலையும் வாயும்  உடையது

ஸர்வதோ தீப்திமந்தம் 11-17  எங்கும் பிரகாசிக்கும்

XXXXXX

60 MORE WORD ADDED FROM PART 68 OF GITA WORD INDEX

tags- Bhagavad Gita, Word Index 68

சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும்- ஞானமொழிகள்- 102 (Post No.11,130)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,130

Date uploaded in London – 23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்– 102

*வாழ்வில் தெரிந்துகொள்ள வேண்டியன*

சில காயங்கள் ” *மருந்தால்* ” சரியாகும்.

சில காயங்கள் ” *மறந்தால்* ” சரியாகும்.

xxx

” *ஆடம்பரம்* ” அழிவைத்தரும். ” *ஆரோக்கியம்* ” நல்வாழ்க்கை தரும்.

கார் இருந்தால் ” *ஆடம்பரமாக* ” வாழலாம்

.

மிதி வண்டி இருந்தால் ” *ஆரோக்கியமாக* ” வாழலாம்.

xxx

” *வறுமை* ” வந்தால் வாடக்கூடாது.

” *வசதி* ” வந்தால் ஆடக்கூடாது.

xxx

*வீரன்* சாவதே இல்லை.

” *கோழை* ” வாழ்வதே இல்லை.

xxx

தவறான பாதையில் ” *வேகமாக* ” செல்வதைவிட.

சரியான பாதையில் ” *மெதுவாக* ” செல்லுங்கள்.

xxx

மனிதனுக்கு ABCD ” *தெரியும்* ” ஆனா *”Q”* ல போகத் “தெரியாது”.

எறும்புகளுக்கு ABCD ” *தெரியாது* ” ஆனா *”Q”* ல போகத் “தெரியும்”.

xxxx

ஆயிரம் பேரைக்கூட ” *எதிர்த்து* ” நில்.

ஒருவரையும் ” *எதிர்பார்த்து* ” நிற்காதே.

xxx

தேவைக்காக கடன் ” *வாங்கு* “.

கிடைக்கிறதே என்பதற்காக ” *வாங்காதே* “.

xxx

உண்மை எப்போதும் ” *சுருக்கமாக* ” பேசப்படுகிறது.

பொய் எப்போதும் ” *விரிவாக* ” பேசப்படுகிறது.

xxx

” *கருப்பு* ” மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.

” *சிவப்பு* ” மனிதனின் நிழலும் கருப்புதான்.

*வண்ணங்களில்* ” இல்லை வாழ்க்கை.

மனித ” *எண்ணங்களில்* ” உள்ளது வாழ்க்கை

xxx

” *கடினமாய்* ” உழைத்தவர்கள் முன்னேறவில்லை.

” *கவனமாய்* ” உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

xx

வியர்வை துளிகள் ” *உப்பாக* ” இருக்கலாம். ஆனால்,

அவை வாழ்க்கையை ” *இனிப்பாக* ” மாற்றும்.

xxxx

*கடனாக* இருந்தாலும்சரி,

” *அன்பாக* ” இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.

xxx

” *செலவு* ” போக மீதியை சேமிக்காதே.

” *சேமிப்பு* ” போக மீதியை செலவுசெய்.

xxxx

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு ” *வெற்றி* ” பெற்றால் சிலை,

” *தோல்வி* ” அடைந்தால் சிற்பி.

xxxx

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை ” *உயிரற்ற* ” பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு ” *முட்டாள்* ” என்று தெரியும்.

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு

” *புத்திசாலி* ” என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை ” *போற்றும்* “.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி

” *தூற்றும்* “.

xxxx

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் ” *பொய்* “.

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே ” *உண்மை* “.

xxxx

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் ” *புத்திசாலி* “.

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் ” *திறமைசாலி* “.

xxx

கவலைகள் கற்பனையானவை.

” *மீதி* ” தற்காலிகமானவை.

குறைகளை ” *தன்னிடம்* ” தேடுபவன் தெளிவடைகிறான்.

குறைகளை ” *பிறரிடம்* ” தேடுபவன் களங்கப்படுகிறான்.

xxx

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் ” *உண்டு* “.

இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் ” *இல்லை* “

xxx

விழுதல் என்பது ” *வேதனை* “.

விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது ” *~சாதனை*~ “

xxx

*ஆனந்தமே ஆரோக்கியம்!*

( படித்ததில் பிடித்தது)

Xxx

நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.

.

அவரிடம்

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.

.

“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.

.

“for example?”

.

“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”

.

“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”

.

“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”

.

“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”

.

“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”

.

“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”

.

“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”😊

Xxxx

Tags- ஞானமொழிகள்– 102

ஓஷோவின் குட்டிக் கதைகள்! (Post No.11,129)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,129

Date uploaded in London – –    23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஓஷோவின் குட்டிக் கதைகள்!

ச.நாகராஜன்

ஓஷோவின் குட்டிக் கதைகள் சிரிக்க வைக்கும்; சிந்திக்க வைக்கும்; சிறந்த பல உண்மைகளைச் சொல்லும்.

அவற்றில் நான்கு கதைகளைப் பார்ப்போம்.

1

ஒரு ஜென் மாஸ்டருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவருமே புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இருவரும் மாஸ்டரிடம் புகை பிடிக்க அனுமதி வாங்க எண்ணம் கொண்டார்கள்.

“நாளை நிச்சயம்  மாஸ்டரிடம் அனுமதி வாங்கப் போகிறேன்” என்றான் முதலாம் சீடன்.

“நானும் தான்” என்றான் இரண்டாவது சீடன்.

மறு நாள் தோட்டத்தில் முதல் சீடனைப் பார்த்த இரண்டாமவன் மிக்க கோபம் கொண்டான்.

ஏனெனில் அவன் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.

“என்ன, அனுமதி வாங்கினாயா, புகை பிடிக்க, என்னை புகை பிடிக்கக் கூடாது என்றல்லவா சொன்னார்” என்றான் இரண்டாம் சீடன்.

“இல்லை, எனக்கு அனுமதி உண்டு” என்றான் அவன்.

“அது, எப்படி உனக்கு மட்டும் அனுமதி?”

இப்போது விழித்துக் கொண்ட முதல் சீடன், “ நீ என்னவென்று அவரிடம் கேட்டாய், சொல், பார்ப்போம்!”

“தியானத்தின் போது புகை பிடிக்கலாமா?” என்று கேட்டேன்.

“அது தான் நீ செய்த தவறு. நான் புகை பிடித்தாலும் தியானம் செய்யலாமா? என்று கேட்டேன். தாரளமாக என்றார். இதோ புகை பிடிக்கிறேன்!”

ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு வெற்று கான்வாஸ். அதை நல்ல ஒரு கலை நோக்குடன் அணுகி ஓவியங்களை வரைய வேண்டும்!

2

ஒரு சூஃபி சாது மன்னன் ஒருவனின் அரண்மனைக்குச் சென்றார்.

அவரை யாராலும் தடுக்க  முடியவில்லை. நேராக மன்னன் இருக்குமிடம் வரைக்கும் அவர் சென்று விட்டார்.

“நீர் யார்?” என்று கேட்டான் மன்னன்.

“நான் ஒரு வழிப்போக்கன். இன்று ஒரு நாள் மட்டும் இந்த சத்திரத்தில் தங்க விருப்பம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் சாது.

கோபம் கொண்ட மன்னன், “இது சத்திரம் இல்லை. எனது அரண்மனை” என்றான்.

“சரி, இந்த அரண்மனை உன்னுடையது என்கிறாயே? உனது அப்பா எங்கே” என்று கேட்டார் சாது.

மன்னன் : “அவர் இறந்து விட்டார்!”

சாது : “அவருக்கு முன்னால் இங்கு யார் இருந்தார்?”

“எனது தாத்தா இருந்தார்!”

“அவருக்கும் முன்னால்…?”

“எனது தாத்தாவின் அப்பா!”

“ஓ! இப்படி ஒவ்வொருவர் சில காலம் இருந்து போன இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறு என்னவாம்?”

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

3

நஸ்ருத்தீன் ஷாவிடம் ஒருவன் வந்து ஒரு வாத்தைக் கொடுத்தான்.

அதை நன்கு வேக வைத்து சூப் தயாரித்துத் தந்தார் ஷா.

அவன் போய் அடுத்த நாள் அவனது நண்பன் என்று வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கு சூப்பைத் தயாரித்துத் தந்தார் அவர்.

அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கும் சூப் செய்து தந்தார் ஷா.

அதற்கு அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

இது தொடர்ந்தது.

ஒரு நாள் அவரிடம் வந்து நண்பனுக்கு நண்பன்….. என்ற தொடர்கதையைச் சொல்லி சூப் கேட்டான் ஒருவன்.

நஸ்ருத்தீன் பார்த்தார். நல்ல தண்ணீரை சுடச்சுட சூடாக்கி அவனிடம் தந்தார்.

“ஹூம்! இது சூப் இல்லையே வெறும் வெந்நீர் போல அல்லவா இருக்கிறது!” என்றான் அவன்.

“இது சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்” என்று சொல்லி முடித்தார் ஷா.

வந்தவனைக் காணோம். ஓடி விட்டான்!

4

ரின் ஜாய் என்ற ஜென் மாஸ்டரின் சீடர் ஒரு நாள் ஒரு ஆலமரத்தடியின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

பல மாஸ்டர்களின் சீடரும் அங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான்.

அதற்கு இன்னொருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான். ஒவ்வொருவரும் இப்படி அவரவர் மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரிக்கும் போது ரின் ஜாயின் சீடர் மட்டும் பேசாமல் இருந்தார்.

“என்ன, உனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லையா?” என்று கேலியாக அனைவரும் அவரைக் கேட்டனர்.

“ எனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லை. அது தான் அவர் செய்யும் அற்புதம்” என்றார் ரின் ஜாயின் சீடர்.

அனைவரும் அசந்து போய் அதில் இருக்கும் உண்மையை அறிந்து கொண்டனர்.

எல்லா அற்புதங்களையும் ஆற்ற வல்ல ஒருவராக இருப்பினும் கூட, அதைச் செய்து விளம்பரம் தேடாமல் இருப்பதே பெரிய அற்புதம் என்பதை ரின் ஜாயின் சீடர் விளக்கியதை அவர்களால் உணர முடிந்தது.

***

புத்தக அறிமுகம் – 6

அதிசய மஹாகவி பாரதியார்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பாகம் – பாரதியார் பா நலம்

1. பாரதி தரிசனம்

2. பாரதி 100!

3. பார் போற்றும் மகாகவி!

4. அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!

இரண்டாம் பாகம் – பாரதியாரின் இசை, வானவியல் அறிவு

5. பாரதியாரும் வானசாத்திரமும்! – 1

6. பாரதியாரும் வானசாத்திரமும்! – 2

7. பாரதியாரும் வானசாத்திரமும்! – 3

8. பாரதியாரின் ராகங்கள்! – 1

9. பாரதியாரின் ராகங்கள்! – 2

10. பாரதியாரின் ராகங்கள்! – 3

11. திரைப்படங்களில் பாரதியார்! – 1

12. திரைப்படங்களில் பாரதியார்! – 2

13. மஹாகவிக்குச் செய்யும் மஹத்தான துரோகம்!

14. பாரதியார் கவசம் அணியுங்கள்!

மூன்றாம் பாகம் மத – நல்லிணக்கமும் மஹாகவியும்

15. பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

16. பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

17. தமிழ் அபிமானி பற்றி பாரதியாரின் விளக்கம்!

18. தீபாவளி பண்டிகை பற்றி பாரதியார்!

19. முஸ்லீம்கள் யார்? ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை பற்றி பாரதியார்!

20. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை – 1

21. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை! – 2

22.பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்!

நான்காம் பாகம் – கவிதாஞ்சலி

23. பாட்டிற்கோ பாரதியே தான்!

24. அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

25. முடிவுரை

*

இந்த நூலுக்கு கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் புதல்வர் திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை தந்து என்னை கௌரவித்துள்ளார். அந்த அணிந்துரை இதோ:

அணிந்துரை

‘சிவமென்னும் செம்பொருளே தமிழாய் வந்த

சிறப்பிதனைச் சிந்தையிலே சேர்ப்பார் தம்முள்
நவசித்தன் பாரதிநம் தலைவன் ஆக’

அமைந்த நற்பொருளைப் பயின்று, வாழ்நாளெல்லாம் பாரதியுகத்தின் பிரஜையாக வாழ்கின்ற சந்தானம் நாகராஜன் அவர்களின் அரிய நூல் ‘அதிசய மஹாகவி பாரதியார்’ என்னும் இந்த நூல்.

’கிருதயுகம் எழுக மாதோ’ என்று அறைகூவல் விடுத்து, பாரதி கனவுகண்ட இன்றைய யுகத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே பாரதியுகத்தின் பிரஜைகள்தாம். வாராது வந்த மாமணியாய் சென்ற நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டில் தோன்றி, தமிழ்ச்சாதியையும் பாரத நாட்டையும் உய்விக்கவந்த மஹாகவியின் வழிவந்த நாம், அக்கவிக்கு பூசனை செய்ய கோடி கோடி மலர்களை தினம் தினம் அவன் பாதங்களில் அர்ப்பித்து வருகிறோம். ‘யதா சக்தி’ என்று அவரவர் சக்திக்கேற்ப அர்ப்பணம் செய்கிறோம். ‘நிதி மிகுந்தவர் பொற்குவை’ தருவதைப் போல சந்தானம் நாகராஜன் இந்த நூலை பாரதிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

“பாரதியின் பெருமை உலகமெங்கும் பரவ வேண்டும். அதற்கு நான் பயன்படவேண்டும். இது ஒன்றே என்னுடைய ஆசை” என்று சொன்னவர் பாரதியைப் பரப்புவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள். அவரைப் போன்றே எப்போதும் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியைப் பற்றி பல நூல்களையும் எழுதி, உரைகளையும் நிகழ்த்தி வருபவர் தான் இந்நூலாசிரியர்.

ஆன்மீகம், தேசப்பற்று, மொழியறிவு, மொழிப்பற்று, புராண இதிகாசங்களின் ஈடுபாடு, வேத வேதாந்தங்களில் சூல்கொண்ட உண்மைகளின் உறவாடல் என்று பாரதி ஆழ்ந்து கற்று, கற்றதை கவிதையாய்ப் பொழியாத விஷயம் உண்டா? பாரதியைப் பற்றி எந்த கோணத்தில்தான் எழுதமுடியாது? ‘யாதுமாகி நிற்கின்ற’ அவனைப் பற்றி அதிகக் கோணங்களில் ஒரு நூல் எழுதவதும் அத்தனை எளிதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். எவ்வளவோ எழுதலாம் என்கிற வசதியே எப்படி எழுதுவது என்கிற மலைப்பையும் கொடுக்குமல்லவா? அத்தகைய மலைப்பைத் தாண்டி அவனை சொற்களில் படம் பிடிக்கவல்ல ஒருவர் தான் சந்தானம் நாகராஜன் அவர்கள்.

இந்த நூலில் பாரதி என்னும் சித்திரம் எப்படியெல்லாம் வரையப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதே ஓர் அனுபவம். கேள்வி பதில் வடிவத்தில் பாரதியின் பாக்களே விடையாக வருமாறு வினாக்களை எழுப்பி இருக்கும் முறை புதுமை. உண்மையில் குழந்தைகளுக்கு பாரதியை அறிமுகம் செய்ய இந்தமுறை மிகப் பயனுள்ளதாக இருக்கும். 70களின் தொடக்கத்தில் ‘பாரதி பாடம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கென்று சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்காக ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை தயாரித்திருந்தது நினவுக்கு வருகிறது.

இதுமட்டுமன்றி, ஒரு வர்ணஜாலம் போல் பாரதியைப் பல கோணங்களில் காட்டுகிறார் ஆசிரியர். பாஞ்சாலி சபதத்தில் உள்ள ‘இயற்கை வருணனை’ – பல சொற்பொழிவுகளில் பொதுவாக சொல்லப்படாமல் கடக்கப்படும் பகுதி -, பாரதியே தன் பாடல்களுக்கு அமைத்த ராகங்கள், மத ஒற்றுமை குறித்த ‘கம்பளி ஸ்வாமி’ தெளிவு (ஜெயகாந்தனும் குணங்குடி மஸ்தானும் நினவுக்கு வருகிறார்கள்), பாரதி ஒரு கர்வமும் கௌரவமும் மிகுந்த ஹிந்து தான் என்பதை பாரதியின் சொற்களைக் கொண்டே நிறுவுதல், ‘சிவாஜியின் வீர வசனம்’ பகுதியில் இஸ்லாமியர்கள் மனம் நோகும் வண்ணம் உள்ள வரிகளைப் பற்றிய விளக்கம், இஸ்லாமியர்கள் அந்த வரிகளின் சரியான காவியத் தேவை காரணங்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள், 

இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினர் அனைவரும் பழங்காலத்து இந்துக்களே என்ற வரலாற்றுத் தெளிவு, பாரதியின் ‘ஆரியன்’ என்ற சொல்லாட்சி, ‘ஆரிய’, ‘திராவிட’ என்ற சொற்களின் மூல வரலாறு, ‘ஸ்ரீ சிவாஜி உத்ஸவம்’, திரைப் பாடல்களில் பாரதியின் பாடல்கள் பற்றிய நீண்ட குறிப்பு என்று அனைத்தையும் திரிகடுகம், சிறுபஞ்சமூலம் கலந்ததைப் போல் கலந்து கொடுத்திருக்கிறார்.

பாரதியைப் பயிலும் முறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைமை பற்றியும் எச்சரிக்கை செய்யாமல் இல்லை ஆசிரியர். பாரதியைப் பதிப்பிக்கும் வெளியீட்டளர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாற்றங்கள் செய்வதையும் ஆசிரியர் கண்டிக்கின்றார். இது மிகவும் தேவையான எச்சரிக்கை. பாரதியே தன் கைப்பட எழுதி ஐயமற நம் கைக்குக் கிடைத்திருக்கும் விஷயங்களில் கூட பதிப்பாளர்கள் மாற்றங்கள் செய்வது மன்னிக்க முடியாத குற்றமே ஆகும். அவர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. பாரதியின் படைப்பில் மாற்றம் செய்யும் குற்றம் மிகப்பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்பதைக் காண்கிறோம். பாரதியார் தன் மனைவி செல்லம்மா மேலே எழுதிய ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’, ‘பீடத்திலேறிக்கொண்டாள்’, ‘எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ’ முதலிய பாடல்கள் பலவற்றிலும் ‘செல்லம்மா’ என்றே எழுதினார் என்றும், ஆனால் செல்லம்மாவின் சகோதரர் அப்பாதுரை அய்யர் தன் சகோதரியின் பெயரில் அந்தப் பாடல்கள் வெளியாவது நாகரிகக் குறைவென்று கருதி ‘கண்ணம்மா’ என்று மாற்றி விட்டதாகவும் பாரதியாரின் மகள்கள் தங்கம்மாள் பாரதியும் சகுந்தலா பாரதியும் குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் எதுவானாலும், ‘ஆழ்ந்த கவியுள்ளம் காண்கிலார்’ இந்தக் குற்றவாளிகள்.

இப்படி இந்த நூல் ஒரு ‘பாரதி சுற்றுலா’விற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்காமல் சுழலும் இந்தச் சுற்றுலாவில் நம் அனைவரையும் கூட்டிச் செல்ல சந்தானம் நாகராஜன் அவர்கள் அழைக்கிறார். வாருங்கள், செல்லலாம்.

சுப்ரமணியன் சீதாராம்

மும்பை தாணே
18 ஏப்ரல், 2022

*

புத்தகத்தில் என்னுரையில் திரு சுப்ரமணியன் சீதாராம் பற்றிய ஒரு பகுதி இது:

என்னுரை

இதற்கு நல்லதொரு அணிந்துரை தந்திருப்பவர் பாரதியாரின் மானசீக புத்திரராக அமைந்து பாரதி பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர் திரு திருலோக சீதாராம் அவர்களின் புதல்வரான திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள்.

தந்தையாரான கவிஞர் தனது மகனை அவையத்து முந்தி இருக்கச் செய்து தன் கடமையை ஆற்றிய போது மகன் ‘இவன் தந்தை என் நோற்றான்’ என அனைவரும் வியக்கும் வண்ணம் தந்தையின் வழியிலே பாரதியைப் பரப்பும் பணியில் இன்றளவும் ஈடுபட்டு

தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர் சிறந்த பேச்சாளர். கட்டுரையாளர். பண்பாளர். எனது இனிய நண்பர்.

பாரதியார் பற்றிய நூலுக்கு பாரதி பக்தரான சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

தேனீ போல இரு;  மூங்கில் போல அழியாதே – மேலும் சில சமண சமய உவமைகள் (Post No.11,128)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,128

Date uploaded in London – –    22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தேனீ போல இரு;  மூங்கில் போல அழியாதே – மேலும் சில சமண சமய உவமைகள்

சமண மத தீர்த்தங்கரர்களில் கடைசியாக வந்தவர் 24-ஆவதாக வந்த மஹாவீரர் ஆவார் . அவர் புத்தருக்கும் முந்தையவர். அவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பார்ஸ்வநாதர், மற்றும் கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த நேமிநாதர் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைப்பதால் அந்த மதத்தின் பழமை நமக்கு விளங்குகிறது . தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும், வழிதவறிப்போன சில சமணர்கள் அரசியலில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் ஏனைய இடங்களில் அவர்கள் அமைதியான துறவற வாழ்க்கை வாழ்ந்ததால் நல்ல பெயர் மிஞ்சியது. எடுத்துக்காட்டாக தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சமணர்களை வெகுவாகப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். நிற்க.

சென்ற ஒரு கட்டுரையில் சமணர்களின் புஸ்தகமான மஹாவீர வசனாம்ருதத்தில் இருந்து சில சுவையான உவமைகளைக் காட்டினேன். மஹாவீர வசனாம்ருதம் என்ற நூல் மகாவீரரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு ஆகும். அது பிராகிருத மொழிகளில் ஒன்றான அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இதோ மேலும் சில உவமைகள் :–

நமது உடல் படகு அல்லது கப்பல்; அதன் மாலுமி அல்லது படகோட்டி  நமது ஆன்மா ; இகலோக வாழ்க்கை எனப்படும் சம்சாரம் ஒரு சாகரம்/கடல். பல மஹான்கள், முனிவர்கள் அதைக் கடந்து சென்றுள்ளனர்  இதோ மஹாவீரர் வாக்கியத்தில் —

ஸரீரமாஹு  நாவத்தி ஜீவோ வுச்சயி நாவி ஓ

ஸம்ஸாரோ அண்ணவோ வுத்தோ ஜம் தரந்தி மஹேஸிணோ 

இது கீதையில் உள்ள கருத்து; சம்சார சாகரம் என்பதை கிருஷ்ணர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ஸம்ஸ்க்ருதத்தைக் கரைத்துக் குடித்த வள்ளுவன் ,அதை அப்படியே பத்தாவது குறளில் பிறவிப் பெருங்கடல் என்று பயன்படுத்துகிறார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -10

Xxx

தேனீக்கள் மரங்களில் உள்ள பூக்களில் இருந்து தேனை அருந்துகின்றன. அவைகளும் திருப்தி அடைகின்றன. ஆனால் பூக்களுக்கோ மரங்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது போல அமைதியையும் , சமநிலையையும் நாடும், பற்றற்ற  சமணத் துறவிகளும் தூய உணவையும் பானங்களையும் தேனீக்கள் போல பெற வேண்டும்

ஜஹா துமஸ்ஸ புஷ்பேஸு பமரோ ஆவியஈ  ரஸம்

ண  ய புஷ்பம் கிலா மே இ  ஸோய பீணேஇ  அப்பயம்

ஏ மே ஏ ஸமணா முத்தா  ஜே லோஏ ஸந்தி  சாஹுணோ

விஹம் கமா  வ புஷ்பேஸு தா ண பத்தேஸணே  ரயா

Xxx

அகந்தை , கோபம், ஆடம்பரம் அல்லது உதாசீனம்/கவனக்குறைவு  காரணமாக ஒரு துறவி  அடக்கத்தை / பணிவைக் கற்காவிடில் அது ஆன்மீக வறட்சிக்குச் சமம் ஆகும் ; அவன் ஒரு மூங்கில் மரத்தின் பழம் போல தனக்குத்தானே தனக்கு அழிவைத் தேடிக்  கொள்வான் –

தம் பா ந கோஹா வ மயப்பமாயா குரு ஸ் சஹாஸே விணயம்  ந ஸிக்கே

 ஸோ சைவ ஊ  தஸ்ஸ  அபூயி பாவோ பலம் ச கீயஸ் ஸ  வஹாய ஹோ இ

மூங்கில் மர உவமை ஏன்?

மூங்கில் மரமானது 100 ஆண்டுகளில் ஒரு முறை பூத்து பழத்தை உண்டாக்கிவிட்டால் அது காய்ந்து  உதிர்ந்து விடுமாம். அதாவது அந்த மரம் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறது

xxx

சமணர்கள் கணித மேதைகள்.  இந்துக்கள் எப்படி  யுகங்களுக்கும் , பிரம்மாவின் ஆயுளுக்கும், மன்வந்தரத்துக்கும் பெரிய எண்களைத் தருகிறார்களோ அதே போல சமணர்களும் ஒரு கணக்கு உவமை தருகின்றனர். ஒரு யோஜனை என்பது எட்டு மைல் . ஒரு யோஜனை அகலமும், ஆழமும், உள்ள ஒரு குழி தோண்டி அதை மனிதரின் மயிர்களால் நிரப்புங்கள். நன்றாக அமுக்குங்கள். ஒரே இராணுவமே அதன் மீது நடந்தாலும் அது அமுங்காதபடி நெருக்கமாக நிரப்புங்கள் . பின்னர் ஒவ்வொரு முடியையும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுங்கள். அத்தனை முடியையும் எடுத்து முடிக்கும் காலம் ஒரு பல்யோபமா .அது போல 100 கோடி ஒரு சாகரோபமா அதுபோல 400 கோடி ஆண்டு ஒரு கால சக்ர . எண்ணற்ற காலசக்ர சேர்ந்தது ஒரு புத்கல  பராவர்த்த . ஒரு தலை முடியை சத கோடியாகப் பிரிக்கும் உவமைகளை தமிழில் திருமூலரும் பயன்படுத்துகிறார். திருவள்ளுவரோ பத்து  அடுக்கிய கோடி பற்றிப்படுகிறார் . அவர்கள் அனைவரும் சொல்லவருவது மிகப்பெரிய கற்பனைக்கெட்டாத கால அளவு

அல்லது எண்.!!!

Xxx

பரிபூரண நிலையை அடைந்தவர்களை சமணர்கள், ‘தீர்த்தங்கரர்’ அல்லது ‘அர்ஹத்’ என்பர். இதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் சித்தர்கள். அவ்ர்களைத் தமிழ் சித்தர்களுடன் ஒப்பிடலாம்.

அவர்கள் குணங்களை வருணிக்கும் அர்த்தமாகதி மொழி ஸ்லோகம்-

அரூவிணோ ஜீவகணா  நாண தம்சண ஸ ண்ணி யா

அ உலம்  ஸுஹம்  ஸம்பத்தா உவமா ஐஸ்மா நத்தி உ

அவர்களுக்கு / சித்தர்களுக்கு உருவம் இல்லை.  உயிர் உள்ளவர்கள்; ஆனால் உடல் அற்றவர்கள் ; அறிவும் தொலைநோக்கும் உள்ளவர்கள்; எப்போதும் பேரானந்தத்தில் திளைப்பவர்கள் . அந்த ஆனந்தத்துக்கு உவமை ஏதும் இல்லை.

Xxx

அவர்களுடைய உலகம் நம் உலகிற்கு மேலே உள்ளது ; சனாதனம் ஆனது. அதற்கு ஏறிச்  செல்லுவது கடினம். இந்த உலக வாழ்க்கை என்னும் சூழலில் இருந்து தப்பித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் அங்கே செல்கிறார்கள்; அவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது. இதோ அதற்கான ஸ்லோகம் —

தம் டாணம்  ஸாஸயம்  வாஸம் லோகக்கம்ஸி

ஜம் ஸம்பத்தா ந சோயந்தி பவோஹம் தகரா முணீ

xxx

உயிர்வாழும் இனம் மொத்தம் 84 லட்சம் வகை,  ஆத்மா என்பது  அழிவற்றது,  தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் — என்ற கருத்துக்கள்  சமண சமயத்திலும் உண்டு . ஒரு கைப்பிடி விதைகளைத் தூவினால் அது காலப்போக்கில் கோடி கோடியாகப் பெருகுவது போல  ஒரு வினையிலிருந்து பல கோடி வினைகள் பரிணமிக்கும் என்று உரைகாரர் செப்புவர்

xxx

நான்கு விஷயங்கள் கிடைப்பதற்கு அரிது. அவையாவன — மனித ஜன்மம் , சமய போதனை,  உண்மை மதத்தில் நம்பிக்கை, புலனடக்கம் .

இதோ மஹாவீரர் ஸ்லோகம்

சத்தாரி பரம் ஸங்காணி துல் லஹாணிஹ  ஐந்துணோ

மா ணுசத்தம் சுயி ஸத்தா ஸஞ்ஜமம்மி ய வீரியம்  

சம்சயாத்மா விநஸ்யதி – சந்தேகப் பேர்வழி அழிந்தே போவான் என்று கிருஷ்ணரும் பகவத் கீதையில்  பகிர்கிறார் . ஆயிரத்தில் ஒருவன்தான் இறையன்பை நாடுவான் என்றும் சொல்கிறார்.

ஆதி சங்கரரும்  மனித ஜன்மம் துர்லபம் என்றும், சத்சங்கமே மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்றும் நுவல்கிறார் ; அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அவ்வைப்பாட்டியும் சொல்கிறாள்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

இதோ ஆதிசங்கரர் ஸ்லோகம்

ஜந்தூனாம்  நர ஜன்ம துர்லபதஹ பும்ஸ்த்வம் ததோ விப்ரதா

தஸ்மாத்வைதிக தர்ம மார்க பரதா  வித்வத்மஸ்மாத்பரம்

எல்லாவற்றிலும் மனிதனாய் பிறப்பது கடினம்; அதிலும் ஆண்மகனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் அந்தணனாய்ப் பிறப்பது அரிது. அதிலும் வேதமார்கத்தைப்  பின்பற்றுபவராய்  (இந்துவாய்ப்)  பிறப்பது அரிதிலும் அரிது.

அடுத்த ஸ்லோகத்தில் 100 கோடி பிறப்புகளில் சேர்த்த புண்ணியத்தால்தான் முக்தி கிடைக்கும் என்கிறார்.

விவேக சூடாமணியின் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார் —

துர்லபம் த்ரய மேவைத தேவானுக்ரஹ ஹேதுகம்

மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயஹ

–விவேக சூடாமணி

மூன்று விஷயங்கள் அரிதிலும் அரிது ; அவை இறைவன் அருளால் கிட்டும்; மனித ஜன்மம் , மோட்சம் பெற ஏங்குதல் , குரு  அருள் ; அதாவது பூ ரணத்துவம் பெற்ற ஒரு மஹானின் கடாக்ஷம் /கவனிப்பு

ஆதி சங்கரரின் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அர்த்தமாகதி மொழியில் மஹாவீரர் சொன்னதைப் படித்தால் மிகவும் எளிதாகப் புரியும்.

Xxx

ஆச்சர்யத்துடன் பார்க்கிறான், கேட்கிறான்

இது கீதையிலுள்ள வாக்கியம் ; அபூர்வம், அரிது , அதிசயம் என்பது அதன் பொருள் . அதை மகாவீரரும் பயன்படுத்துகிறார் —

ஆஹச்ச ஸவணம்  லப்தும்  ஸ த்தா பரம துல்லஹா

ஸோச்சா ணேஆஉயம்  மக்கம் பஹவே பரி பஸ்ஸஈ

அபூர்வமாக  சமய சொற்பொழிவைக் கேட்கலாம்.  அதில் நம்பிக்கை ஏற்படுவது கடினம்; அப்படிக் கேட்டவர்களிலும் பலர் வழி தவறிப்போவதுண்டு

இதோ கீதை ஸ்லோகம் –

आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।

आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|

ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்

ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = வியப்பெனக் காண்கிறான்

ஆஸ்²சர்யவத் வத³தி = வியப்பென ஒருவன் சொல்கிறான்

ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = வியப்பென ஒருவன் கேட்கிறான்

கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்

(Gita slokam -From Sangatham.com)

Xxx subham xxxx

TAGS –சமண உவமைகள் , மூங்கில், தேனீ , துறவிகள், உடல் படகு, ஞானி , மனிதப் பிறப்பு, துர்லபம்

STORY OF TWO BEGGARS IN NEW YORK (Post No.11,127)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,127

Date uploaded in London – 22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-101

In New York, two beggars were sitting side by side, one carrying *OM* sign and the other with *CROSS* sign.

People passing that area were giving dirty look to the beggar carrying the *OM* sign but was giving dollar to the one carrying the *CROSS* sign.

This was going on, when a father of a church was passing by and noticed this. He then came to the beggar who was carrying the *OM* sign and told him: “You are in a country, where people follow Christianity. You being a Hindu will hardly get any alms. Just to make you feel jealous and frustrated people are giving dollars to your counterpart.”

After the Father left, the beggar carrying the OM sign said the following in Gujarati to his counterpart: “Jignesh Bhai?”

“Yes, Mansukh Bhai.”

“Now this Father is trying to teach us how to do business.”

TAMIL JOKES (Tamil Speakers only will enjoy the following funny comments)

Brilliantly Funny jokes involving Tamil lingo 🤪

1. My elder brother is an irritating fellow.

He is anna-ying.

3. Where do dentists in Chennai practice?

EEE-kaatu thaangal.

4. How did the Arctic bear slap the other one?

Polar polar nu.

5. Why is Michelle Obama considered so careless?

Ava epome Barack ah paathutu irupa.

6. Why do people take binoculars to a wedding?

They can see their doorathu sondham.

7. If Black Panther sits down he never gets up, because…?

Okkandha forever.

8. What do you call it when your elder sister gives you a place to stay?

Akkamodation.

9. Why did the king’s stuff turn into sand?

Because the amaichar said, “Aagantum Manna.”

10. Where did the Mallu girl go when she became angry?

Ava Cochinu poita.

11. What do you call it if the dogs are so attached to you?

Pawsam.

12. I married a pizza.

My children are kutti pizzasu.

13. Why did Batman shout, “Aeiouuu”?

Because avan vowel manidhan.

14. Which writer asked his son to donate his eyes?

Kanna thaa son.

15. What happened to those oranges left in the freezer?

Orange-i poochu.

16. Why was the spy staring at the sea?

Avan Wave paakaraan.

17. Most people who do CA love mutton. Why?

Because they are aadu-eaters.

18. A jealous engineer can never design a proper circuit. Why?

Avanuku Wire ah eriyum.

19. Why were the tourists staring at the hammer instead of sight-seeing?

Avanga suthi paaka vandhaanga.

20. My dad’s brother is a big joke.

You could call him Periya-pun.

21. What do you call a piece of cotton falling from a high altitude?

Punjee Jumping.

22. Your friend poked you.

You poked back.

You’ve poked each other 158 times in a row.

Pozhudhu-poke.

23. Did you know that Bruce Banner smelt good after getting exposed to the radiation?

Gamma gamma nu irundhaaru.

24. Why are the articles in English known as orphans?

They are an, a, the. (Anadhi)

25. A scientist shows his awards and achievements to his friend.

Scientist: These are all my awards in physics.

Friend: These are arranged so randomly!

Scientist: Yes. My field of interest is en-trophy.

Xxx Subham xxxx

Tags- ஞானமொழிகள்-101

செப்பு மொழி இருபத்தியிரண்டு (Post No.11,126)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,126

Date uploaded in London – –    22 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபத்தியிரண்டு!

ச.நாகராஜன்

  1. இயற்கை, காலம், பொறுமை – இந்த மூன்றும் தான் பெரிய வைத்தியர்கள்!

In, Nature, Time and Patience are the three great Physicians.

2) இயற்கையின் ஒரு ஸ்பரிஸம் உலகனைத்தையும் உறவாக்கி விடுகிறது.     –     ஷேக்ஸ்பியர்

One touch of nature makes the world kin – Shakespeare

3) நெருஞ்சியை விதைப்பவன் நெருஞ்சி முள்ளையே அறுவடை செய்வான்.

He that sows thistles shall reap prickles

4) போருக்குப் போக ஒரு மணி நேரம் முன் பிரார்த்தனை செய்;

கடலில் இறங்க இரண்டு மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்;

திருமணத்திற்கென்றால் மூன்று மணி நேரம் முன்னர் பிரார்த்தனை செய்  – இந்தியப் பழமொழி

Pray one hour before going to war;

Two hours before going to sea,

And three hours before getting married.  – Indian proverb

5) கடவுள் மனித குலத்தைத் தூய்மைப் படுத்த நினைத்தான்; வக்கீல்களை அனுப்பினான்.  – ரஷிய பழமொழி

God wanted to chastise mankind, so he sent lawyers.  – Russian

6) உடல் நலத்துடன் இருக்கும் போதே வியாதியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பி.   – தாமஸ் ஃபுல்லர்

Study sickness while you are well.   – Thomas Fuller

7) கெட்ட மனிதர்கள் இல்லையென்றால் நல்ல வக்கீல்களே இருக்க மாட்டார்கள் – சார்லஸ் டிக்கன்ஸ்

If there were no bad people there would  be no good lawyers.  – Charles Dickens

8) சுருங்கிய பர்ஸ், சுருக்கங்கள் கொண்ட முகத்தை உருவாக்குகிறது. – பிரெஞ்சு பழமொழி

Wrinkled purses make wrinkled faces.  – French

9) ரோஜாவை விரும்புபவன் முள்ளை மதிக்க வேண்டும் – பெர்சிய பழமொழி

He who wants a rose must respect the thorn.  – Persian

10) நான் மிஸ்டர் ‘ரைட்’டை முதலில் சந்திக்கும் போது அவரது பெயரின் ஆரம்பம் “ஆல்வேஸ்” (எப்போதும்) என்பது தெரியாது! – ரீடா ருட்னர்

When I first met Mr Right  I had no idea that his first name was Always.  – Rita Rudner

11) என் மனைவியிடம் நான் பேசி பல வருடங்களாகி விட்டன. அவளை ஒரு போதும் குறுக்கிட்டுப் பேச நான் விரும்பவில்லை. – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

I haven’t spoken to my wife in years. I didn’ want to interrupt her. – Rodney Dangerfield

12) உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வயதாகி விட்டால் சில அடையாளங்கள் இருக்கும். நான் ஒரு கல்லறைப் பக்கம் போன போது இரண்டு ஆட்கள் மண்வெட்டியுடன் என் பின்னால் ஓடி வந்தார்கள் – ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட்

You know when you’re getting old, there are certain signs. I walked past a cemetery and two guys ran after me with shovels.   – Rodney Dangerfield

13) நான் ஒரு நீதிபதியால் மணம் செய்து வைக்கப்பட்டேன். ஜூரிகளை நான் கேட்டிருக்க வேண்டும்.  – க்ரௌச்சோ மார்க்ஸ்

I was married by a Judge, I should have asked for a jury. – Groucho Marx

14) ஒரு மரத்தை நடுபவன் தன்னை நேசிப்பதோடு மற்றவர்களையும் நேசித்தவன் ஆகிறான். – ஆங்கிலப் பழமொழி

He that plants trees loves others besides himself.  – English

15) குழந்தைகள் ஏழைகளின் செல்வம் – ஆங்கிலப் பழமொழி

Children are poor men’s riches. – English

16) வரதட்சிணை எங்கு இருக்கிறதோ, அங்கு அபாயம் இருக்கிறது – அயர்லாந்து பழமொழி

Where there is dowry, there is danger.  – Irish

17) அனுபவமே ஒரே ஆசான்

Experience is the only teacher.

18) வியாதியை விட பெரும்பாலும் டாக்டரைப் பார்த்துத் தான் பயப்பட வேண்டும். – பிரெஞ்சு பழமொழி

The doctor is often more to be feared than the disease. – French

19) வைத்தியர்கள் அதிகம் பணம் செலவழிக்க வைக்கும் விருந்தாளிகள்.

Physicians are costly visitors.

20) ஒரு பூ மாலையாகாது. – பிரெஞ்சு பழமொழி

One flower will not make a garland.   – French

21) திருமணம் செய்து வைக்கப்பட நான் விரும்புகிறேன். வாழ்க்கை முழுவதும் எரிச்சலூட்ட ஒரு விசேஷ ஆசாமியை கண்டு பிடிப்பது ஒரு பெரிய விஷயம் தானே! – ரீடா ருட்னர்

I love being married. It’s so great to find that one special person you want to annoy for the rest of your life. – Rita Rudner.

22)  சமுத்திரத்தைப் புகழ்ந்து பேசு; ஆனால் நிலத்தை வைத்துக் கொள்.

Praise the sea but keep on land.

***

புத்தக அறிமுகம் – 5

சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

1. திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

2. திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

3. நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !

4. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 1

5. புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

6. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3

7. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 4

8. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 5

9. பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

10. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும்!

11. குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!

12. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!

13. அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை!

14. பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

15.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

16. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

17. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

18.பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

19. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5

20. பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

21. பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

தமிழை வளர்ப்போர் என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தன் வயிற்றையும் குடும்பத்தையும் வளர்ப்போர், அத்தோடு நில்லாமல் பல தவறான கருத்துக்களைத் தமிழ் சமுதாயத்தில் விதைத்து பிளவையும் வெறுப்பையும் தூண்டி விடுவதைக் கண்டு திடுக்கிடுகின்றோம்.

இதற்கென பல புத்தகங்களை சங்க இலக்கிய ஆய்வுரைகள் என்ற பெயரில் வெளியிட்டு அதில் தமது கருத்துக்களைப் புகுத்தி அதை அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர்.

இந்தக் கருத்துக்கள் பல்வேறு விதமாக இளம் சிறார்கள் மத்தியிலும் விதைக்கப்படுகின்றன.

பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்றும் வேதம் கவைக்குதவாத ஒன்று என்றும் இவர்களது ஆய்வு முடிவுகள் அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இவர்களது பொய்க் கூற்றுகள் வெளிச்சத்திற்கு வந்து விடும்.

பல ஆண்டுகளாக சங்க இலக்கியம் அந்தணரையும் வேதத்தையும் தரும் பல செய்திகளைத் தொகுத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஒரு அன்பர் தனது விமரிசனத்தால் இந்தக் கருத்தை வலுப்படுத்தித் தூண்டி விட்டார்.

தொடர் உருவானது.

‘மெக்காலே மாடல்’ என்று சொல்லப்படும் ‘இந்தியாவை பிளவு படுத்தும் சதியைப்’ பற்றி இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்முல்லர் விதைத்த பிரிவினை வாதக் கொள்கை பற்றியும் இப்போது அனைவரும் அறிவர்.

மாக்ஸ்ம்ல்லர் மர்மம் என்ற எனது ஆய்வு நூலில் பல உண்மைகள் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.

ஆரிய- திராவிட வாதம் என்பது அடிப்படையற்றது.

இதைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளில் தெளிவாகக் கூறுகிறார்.

அவரது கட்டுரைகளில் சில பகுதிகளைக் கீழே காணலாம் :

“தமிழ் இலக்கியம் கண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றும் வடக்கேயிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம்.”

“சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா? உக்ரபாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர்களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா?”

இப்படி ஏராளமான வாதங்களை முன் வைத்து ஆரிய திராவிட வாதத்தைப் பொடி பொடி ஆக்குகிறார் நாமக்கல் கவிஞர்.

அடுத்து 2009ஆம் ஆண்டு ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் ஆய்வாளர்களும் இந்திய இயல் பற்றிய ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகளும் ஆரிய – திராவிட வாதம் அடிப்படையற்றது என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

ஐந்து லட்சம் மரபு சார் அணுக்களை 25 குழுக்களிலிருந்து 132 தனி நபர்களிடம் ஆராய்ந்து அவர்கள் தம் முடிவை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது ஆய்வு பற்றிய செய்தியை 25-9-2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவாக வெளியிட்டுள்ளது.

(The study was conducted by CCMB in collaboration with Harvard Medical School, Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT).

ஆக ஆரியர், திராவிடர், பிராமணர், பிராமணர் அல்லாதார் போன்ற கருத்துக்கள் பிரிவினையை உண்டு பண்ணி தமிழ்ச் சமுதாயத்தை அழிக்க நினைப்பவரின் சதியே என்பது நிரூபணமாகிறது.

அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம்.

அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டோர்; வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று.

பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இவை.

சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் அந்தணர் போற்றப்படுவதையும் வேதம் மிகவும் மதிக்கப்படுவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும்.

அனைவரும் பொய்களைப் புறம் தள்ளி உண்மைகளைக் கண்டறிந்து அவற்றைப் பரப்புவோம்.

ஏக பாரதத்தை என்றும் நிலை நிறுத்துவோம்.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

நன்றி.

பங்களூர்
4-4-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***