லெய்டன் செப்பேட்டில் கோட்டையூர் பிராமணன் அனந்த நாராயணன் (Post.11,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,193

Date uploaded in London – 14 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கல்வெட்டுகளில் உள்ள 800 சம்ஸ்க்ருத, பிராகிருத மொழிப் புலவர்களின் பட்டியலை வெளியிட்ட புனே நகர திஸ்கால்கர்  அளிக்கும் மேலும் சுவையான செய்திகள் இதோ :-

கோட்டையூர் அனந்த நாராயணன்  , வசிஷ்ட கோத்ரம் 

லெய்டன் செப்பேடுகள் சோழர் காலத்தியவை. அதில் பெரிய லெய்டன் செப்பேடுகள், சிறிய லெய்டன் செப்பேடுகள் என்று இரண்டு உண்டு. அவை தற்போது ஹாலந்து நாட்டின் லெய்டன் நகரில் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிய செப்பேடுகள் ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தன. அவை ராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. ராஜராஜனின் 21ம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டவை அதாவது கி.பி. அல்லது பொது ஆண்டு 1044.

எல்லா செப்பேடுகளிலும் முதலில் ஸம்ஸ்க்ருத மொழி வாசககங்கள் வரும். பின்னர் தமிழ் மொழி வரும். பெரிய செப்பேடுகளில் 21 தாமிரத் தகடுகள்/ ஓலைகள் இருக்கின்றன.மொத்தமுள்ள 332 வரிகளில் 111 வரிகள் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.

இந்த செப்பேடு நாகப்பட்டினத்தில் புத்தவிஹாரம் கட்டுவதற்கு தென்கிழக்கு ஆசியாவில் ஆட்சிபுரிந்த சைலேந்திர வம்ச அரசின் உதவி பற்றிப் பேசுகிறது . கனக கிரியைத் (மகா மேரு) தோற்கடிக்கும் உயரத்துக்கு புத்த விஹாரம் அமைந்ததாம்! தமிழ் பகுதியில் புத்த விஹாரத்துக்கு கிராமம் தானம் அளிக்கப்பட்ட  செய்திகளும் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் சோழர் குலத்தின் பெருமையும் பேசப்படுகின்றன.கோட்டையூர் வசிஷ்ட கோத்திர பிராமணன் அனந்த நாராயணன் சம்ஸ்க்ருத செய்யுளை இயற்றியதாகவும் செப்பேடு குறிப்பிடுகிறது. செப்பேட்டை எழுத்து வடிவில் தந்த சித்ரகாரர்கள் 5 பேர் ஆவர்.

இதை ராஜராஜன் காலத்திய திருவாலங்காட்டு செப்பேடுகளுடன் ஒப்பிடலாம். அதை 4 சித்ரகாரர்கள் தாமிரத் தகடுகளில் பொறித்தனர். அதில் சங்கரன் மகன் நாராயணன் எழுதியதாகக் குறிப்பிடுவதால் அது இந்த அனந்த நாராயணனாக இருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. மேலும் இது ராஜராஜனின் 6ஆவது அல்லது ஏழாவது ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது.

XXX

அபிராம சபாபதி காமாக்ஷி

புதுக்கொல்லம் கல்வெட்டில் அந்தச் செய்யுளை  இயற்றிய அபிராம சபாபதி காமாக்ஷி  என்பவரின் பெயர் காணப்படுகிறது .1583-ம் ஆண்டு ஸ்ரீ வல்லப, வரதுங்கராம பாண்டியர் கால கல்வெட்டு இது.

வீர பூபாலனின் வலது காரமான திருமலை ராயனின் வேண்டுகோளின் பேரில் பல பிராமணர்களுக்கு புதுக்கொல்லம் கிராமத்தை தானமாகக் கொடுத்த செய்தி இதில் காணப்படுகிறது.

XXX

அப்பையன் எழுதிய 70 செய்யுட்கள்

ஒரிஸ்ஸாவில் புரி அருகில் தசகோபா கல்வெட்டு உளது. இதில் கங்க வம்ச அரசர் மூன்றாம் ராஜராஜன் போற்றப்படுகிறார். 1199-ம் ஆண்டில் எழுதப்பட்ட இதில் உரைநடைப் பகுதியுடன் அப்பையன் எழுதிய 70 செய்யுட்கள் இருக்கின்றன.. கங்க வம்ச அரசர்களின் குலப் பெருமையுடன் தானம் பெற்ற 75 பிராமணர்களின் கோத்திரங்களும் அவர்கள் தானமாகப் பெற்ற நில விவரங்களும் காணக்கிடக்கின்றன.

எல்லா பிராமணர்களின் சார்பில் யார் கையில் நீர் வார்த்து அவைகள் கொடுக்கப்படுகின்றனவோ, அந்தப் பிராமணருக்கு கூடுதல் நிலம் அளிக்கப்படும். அவரைப் பாணியாகிராஹின் என்று அழைப்பார்கள் .

அரசனின் மகனான மூன்றாம் அநங்க அபிராம சார்பில்  1229-ல் கொடுக்கப்பட்ட தானத்துக்கு இதே புலவர் கவிகள் புனைந்துதுள்ளார். இதில் 89 செய்யுட்கள் வெவ்வேறு யாப்பு அணிகளில் அமைந்துள்ளன இதிலும் பிரம்மதேயம் பெற்ற பிராமணர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.

என் கருத்து

இந்தக் கல்வெட்டுகள் அந்தக் காலத்தில் , அதாவது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர், நிலவிய பெயர்களையும், பிராமணர்களின் கோத்திரங்களையும், ஊர்ப் பெயர்களையும் சொல்வதால் பல்வகை ஆராய்ச்சியாளருக்கு அவை பயன்தரும் . இது தவிர மன்னர்களின் வரலாறும் பரம்பரையும் கிடைக்கும். வட இமயம் முதல் தென் குமரி வரை கல்வெட்டுகளில் சம்ஸ்க்ருத மொழியும், மக்களின் பெயர்களில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் இருப்பது ஆராய்ச்சிக்குரியது. புற நானூற்றிலேயே தாமோதரன், கபிலன், பரணன் , வால்மீகி , காமாக்ஷி (காமக்கண்ணி), பிரமன், மஹாமூலன்/மாமூலர் , விஷ்ணுதாசன் (விண்ணந்தாயன்), கண்ணதாசன் (கண்ணந்தாயன் ) பல நாகன் பெயர்கள் இருப்பது ஆராய்ச்சிக்குரியன..

70 முதல் 90 பாடல்கள் உள்ள இந்தக் கல்வெட்டுக் கவிதைகள் அச்சிடப்பட்டால் பலருக்கும் பயன்தரும்.

–சுபம்—

Tags– லெய்டன், செப்பேடு, பிராமணன், செய்யுட்கள், கல்வெட்டு

Leave a comment

Leave a comment