திதி, வார நாட்கள் : ஒரு விளக்கம்! (Post No.11,170)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,170

Date uploaded in London – –    6  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

திதி, வார நாட்கள் : ஒரு விளக்கம்!

வாஸரா

தமிழில் : ச.நாகராஜன்

இன்றைய நவீன காலத்து வார நாட்களுக்குச் சமமாக தற்காலத்திய பயன்பாட்டிற்கு ஹிந்து பஞ்சாங்கம் வாஸரா அல்லது வார நாட்களைத் தருகிறது. ரவி வாஸரா,  சோம வாஸரா, மங்கள வாஸரா என்பது ஞாயிற்றுக் கிழமை திங்கள் கிழமை, செவ்வாய்க் கிழமை ஆகியவற்றிற்குச் சமமான வார்த்தைகள். இவை குறிப்பிடத்தக்க சொல் இலக்கணச் சாயலையும் கொண்டுள்ளது.

சாந்திரமான நாட்காட்டி ஒரு நாளை நிர்ணயிக்கப் திதிகள் பயன்படுவது போல,  கணக்கீட்டிற்கு வாஸாரங்கள் எந்த ஒரு விதப் பயனையும் தருவதில்லை; என்றாலும் கூட, அவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களுல் ஒன்றாகவே உள்ளது. இதர நான்கு அங்கங்கள் யோகம், திதி, நக்ஷத்திரம், கரணம். இவையும் கூட வேதாங்க

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவே ஹிந்து ஜோதிடத்தின் மூலமாகக் கருதப்படுகிறது.

இந்த அமைப்புக்கு எது  காரணம் என்று பார்க்கப் போனால் நமக்குக் கிடைக்கும் விடை நவகிரகங்கள் என்பது தான்: சூரியன் (ரவி) சந்திரன் (சோம), செவ்வாய் (மங்கள்), புதன் (புத), வியாழன் (குரு), வெள்ளி (சுக்ர), சனி (சனி), ராகு மற்றும் கேது.

இதில் முதல் ஏழும் ஒவ்வொரு வாஸரத்தின் தலைமையாகும். ராகுவும் கேதுவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களுக்கு உரியன.

இந்த ஒன்பது கிரகங்களும் ராசிகளின் ஊடே செல்பவை. ஆகவே அந்தந்த ராசிக்கு உரியவர்களின் வாழ்க்கை  மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை.

ஒரு நாளின் ஆரம்ப மணிக்கு தலைமையாக  மேற்கத்திய ஜோதிடத்தில் தரப்படும் வெவ்வெறு தேவதைகள் அதற்குரிய பெயர்களால் தரப்படலாம்.

ஆகவே நமது அமைப்பு மேலை நாடு தருவது போன்ற ஒன்றே தான் என்பதில்லை.

திதிகளும் வாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திராமல் தனித்தனியாக இருப்பவை. வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்பவை.

திதிகள் வானவியலில் நாட்களைக் கணக்கிடுவதிலும் வானில் நிகழும் கிரகணங்கள் போன்றவற்றைக் கணிப்பதிலும் அதிகமான இடத்தை வகிக்கின்றன.

ஒரு மனிதனின் வாழ்வில் இன்றைய நிலையில் உள்ள  நக்ஷத்திரத்திங்கள் அவனுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவை நிர்ணயிக்க உதவுவதற்கு வாஸரங்கள்,  ஜோதிடத்தில் பிரதான இடத்தை வகிக்கிறது.

ஹிந்து மதத்தில்  வானவியலும் ஜோதிடமும் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டவை. இவை ஒன்றுடன் ஒன்று கலந்தே இருப்பவை. நாட்களில் ஏற்படும் நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு திதிகளைப் பார்ப்பதே சிறந்தது.

நன்றி : 17-6-2022 TRUTH கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்

.

*

மூலக் கட்டுரை ஆங்கிலத்தில் கீழே தரப்படுகிறது:

 VASARA

The Hindu equivalent for the modern weekday is called as Vâsara or Vâra in the modern usage. Ravi-Vâsara, Som-Vâsara, Mangal-Vâsara etc, which are equivalent of Sunday, Monday and Tuesday, do bear a striking resemblance etymologically.

Although Vâsaras do not serve any computational purpose, unlike Tithis, which are used to determine a day in the lunar calendar, they still do form one of the five angas of the Hindu Panchanga, the other four being tithi, nakshatra, yoga and karna. They are also

mentioned in the Vedanga Jyotisha, which is considered to be the origin of Hindu Astrology.

As for what could be the origin of this system, the answer is the Navagrahas: Surya (Ravi, Sun), Som (Moon), Mangal (Mars), Budha (Mercura), Guru (Jupiter), Shukra (Venus), Shani (Saturn), Rahu and Ketu.

The first seven preside over individual Vâsaras, while Rahu and Ketu are responsible for the Solar and Lunar eclipses. All these nine Grahas are said to move with respect to the fixed constellations in the zodiac, hence influencing the lives of the people affected by the

respective constellations. It is not very unlikely, the western belief in astrology, where different deities were said to preside over the opening hours of the days, were named after them.

So it is not just a westernised version of our own system. Tithis and Vâsaras exist independently of each other and fulfil different requirements. Tithis have more significance in the field of Astronomy for maintaining calendars and predicting celestial events like eclipses.

Vâsaras have Astrological significance, helping determine the effect of the current arrangement of stars on the life of an individual.

But as with everything else in Hinduism, Astronomy and Astrology are closely related and these two are easily mixed up with one another. It is better to keep track of tithis for the purposes of a calendar of events.

***

புத்தக அறிமுகம் – 20

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 5

பொருளடக்கம்

1 – வெப்ப நிலை மாறுபாட்டால் உணவு உற்பத்தி குறையும்!

2 – அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் அபாயம்!

3 – எண்ணெய் வளம் ஏற்படுத்தும் மாசு!

4 – நடந்தே பூமியைக் காக்கலாம்!

5 – நீர் பாதுகாப்பு!

6 – காடுகளைப் பாதுகாப்போம்!

7 – குப்பைகளைப் பொது இடங்களில் எரித்தல்

8 – ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம்!

9 – நமது அரசின் வெற்றிகள்!

10 – இரண்டு டிகிரி செல்ஸியஸ் என்னும்

11 – இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்

12 – செரிங்கட்டி விதிகள்

13 – செரிங்கட்டி தரும் ஆறுவிதிகள்

14 – ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!

15 – ஒளி மாசின் பாதிப்பு

16 – கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழியும் அபாயம்!

17 – கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர்

18 – ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்

19 – உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு

20 – விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்

21 – பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

23 – அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

24 – இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!

25 – சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 1

26 – சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2

27 – மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்

28 – தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்!

29 – சூரிய ஆற்றலின் நன்மைகள்!

30 – விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!

31 – அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இழப்பு!

32 – பிளாஸ்டிக் பொருள்களினால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!

33 – உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!

34 – சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறோம்!

35 – காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்!

36 – சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்!

37 – நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்!

38 – நதிகளைக் காப்போம்!

39 – அண்டார்டிகா பனிப்பாறையில் (Antarctic Glacier) அபாயகரமான ஓட்டை!

40 – மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்!

41 – சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்!  

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

JULY 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.116) Post No.11,169

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,169

Date uploaded in London – 5  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

JUNE 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.115) Post No.11,069, JULY 1, 2022

IS WHITE COLOUR GOOD OR BAD? (Post No.11,072)1/7

MEANING OF URDU AND HORDE (Post No.11,075) 2/7

MY VISIT TO KANCHIPURAM (Post No.11,079) 4/7

MY VISIT TO TIRUVARUR SHIVA TEMPLE (Post No.11,084) 6/7

MY TRIP TO THIRUKKADAVUR SHIVA TEMPLE (Post.11090) 8/7

My Visit to Thiruppullani Adi Jagannatha Perumal / Vishnu Temple (Post No.11,094) 10/7

MY VISIT TO TIRUVANNAMALAI SHIVA TEMPLE AND

ASHRAMS OF RAMANA & SESHADRI SWAMIGAL (11,098)12/7

JAINS AND COLOURS- A STORY (Post No.11,104)14/7

Gems from Jain Literature- 1 (Post No.11,134)24/7

Jain Story of Iron & Gold Mines; Gems from the Jain Literature- Part 2 (Post.11,138)25/7

Kapila story : Gems from Jain Literature- Part 3 (Post No.11,141)26/7

Gems from Jain Literature-4; Burglar Story (Post No.11,144)27/8

Gems from Jain Literature-5; Four Things are Rare (Post No.11,148)

31 Jain Quotations : August 2022 ‘Good Thoughts’ Calendar (Post.11,150)28/7

Xxx

TAMIL ARTICLES

கடிகாரத்திலும் விண்கலத்திலும் பயன்படும் சீசியம் (Post No.11,092) 9/7

பகவத் கீதையில் சுவையான சொற்கள்- ‘பிரயாண காலே’(प्रयाणकाले) Post No.11,096; 11/7

சமண மதக் கதை: பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் (Post.11,107) 15/7

ஐந்திரம் உள்பட எட்டு இலக்கணங்கள் ! (Post No.11,113)17/7

சுவையான சமண மத உவமைகள்- கர்ம வினை என்ன செய்யும்? (Post No.11,119)19/7

இலக்கணம் ஒரு கடல்; அதில் முதலைகள் உண்டு (Post No.11,122)20/7

இலக்கணம் ஒரு கடல் – 2 (Post No. 11,125) 21/7

தேனீ போல இரு;  மூங்கில் போல அழியாதே – மேலும் சில

சமண சமய உவமைகள் (Post No.11,128) 22/7

சமண மதக் கதைகள்- தங்கச் சுரங்கமும் , கபிலனும் (Post No.11,140) 26/7

Q & A on Tolkappiar தொல்காப்பியர் , அந்தணப் புலவர்கள் பற்றிக் கேள்வி (Post.11,145) 27/7

ஆயுள் குறைய ஏழு காரணங்கள் : சமணர் தகவல் (Post No.11,143) 27/7

மணிமேகலை பொன்மொழிகள் 31; ஆகஸ்ட் 2022 காலண்டர் (Post No.11,153)30/7

மேலும் சில சமண சமய பொன்மொழிகள் (Post.11,152) 30/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 61 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,071) 1/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 62 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,077)3/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 63 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,081)5/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-64 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,088)7/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-65 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No. 11,100) 13/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-66 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,110)16/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-67 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11116)18/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-68 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,131)23/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-69 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,137)25/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-70 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,1147)28/7

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-71 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post 11,155)31/7

–SUBHAM—

TAGS – INDEX No.116, London Swaminathan, July 2022 posts

பகவத் கீதையில் சுவையான சொற்கள் -சொர்க்க வாசல் ,நரக வாசல் (Post.11,168)

பகவத் கீதையில் சுவையான சொற்கள் -சொர்க்க வாசல் ,நரக வாசல் (Post.11,168)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,168

Date uploaded in London – 5  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகவத் கீதையின் மொத்த கருத்தை மனதில் கிரகிக்க ஒரு சுலபமான வழி , சுவையான சொற்களை நினைவு வைத்துக் கொள்வதாகும். பகவான் கிருஷ்ணர் சொர்க்கத்தின் கதவுகள் மற்றும் நரகத்தின் கதவுகள் எது என்று சொல்கிறார். இதோ இரண்டு ஸ்லோகங்கள் :

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।

सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥

யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்|

ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||

பார்த² = பார்த்தா;

யத்³ருச்ச²யா உபபந்நம் = தானே வந்திருப்பதும்

அபாவ்ருதம் ஸ்வர்க³த்³வாரம் = திறந்து கிடக்கும் ஸ்வர்க வாயில்

ஈத்³ருஸ²ம் யுத்³த⁴ம் = இத்தகைய போர்

ஸுகி²ந: க்ஷத்ரியா: லப⁴ந்தே = பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக/ ஸ்வர்க வாயில் போன்றது இத்தகைய போர்;  

இது கிடைக்கப் பெறும் மன்னர் அனைவரும் பாக்கியவான்கள் .

என்னுடைய வியாக்கியானம்

பகவத் கீதை யுத்தத்தை ஆதரிக்கிறதா? உண்மைதான். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எப்போதும் யுத்தம் நடை பெறுகிறது. ரிக் வேதத்திலேயே அசுரர்கள் காணப்படுகிறார்கள் . பகவான் கிருஷ்ணரும் நாலாவது அத்தியாயத்தில் ஸம்பவாமி யுகே யுகே என்று சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்  கடவுள் யுகம் தோறும் அவதரிப்பார் என்ற கருத்தே அசுரர்கள்/ அரக்கர்கள்/ தீயோர் எப்போதும் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறது. மேலும் நாம் எல்லோரும் கலியுக அவதாரமாகிய கல்கி அவதாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கிறோம்.

அப்படியானால் யுத்தத்தில் நிறைய பேர் இறப்பார்களே ! அதுவும் உண்மை தான் ; அர்ஜுனன் தனது சொந்த மகனானான அபிமன்யுவையே இழந்தான்; பீஷ்ம பிதாமஹர் , துரோணர், கர்ணன் ஆகியோரும் இறந்ததைக் கண்டோம். ஆனால் போரில் இறப்போர் அனைவரும் சொர்க்கத்துக்குச் செல்வர் என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் உள்ளது. உலகிலுள்ள 200+++++ நாடுகளின் படை வீரர்களின் எண்ணிக் கை  யைக் கூட்டிப்பார்த்தால் பல கோடிகள் வரும். நாட்டைக் காப்பதும் தர்மத்தைக் காப்பதும் புனிதமான தொழில். உலகம் அஹிம்சையை ஏற்பது இல்லை. அப்படி ஏற்றால் அவதாரங்களுக்குப் பொருள் இராது. இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனை ப் பார்த்து “போர் செய்; இறந்தால் சொர்க்கம் ; வாழ்ந்தால் அரசாட்சி” என்கிறார். நமது எல்லைகளைக்  காத்து நிற்கும், இமய மலையைக் காத்து நிற்கும், நம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்லோகம் இது.

XXX

நரக வாசல் 3

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।

कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥

த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |

காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||

இத³ம் ஆத்மந: நாஸ²நம் = இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான

த்ரிவித⁴ம் நரகஸ்ய த்³வாரம் = இம் மூன்று நரக வாயில்கள்

காம: க்ரோத⁴: ததா² லோப⁴ = காமம், சினம், அவா

தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் = ஆதலால், இம்மூன்றையும் விடுக

ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நரகம் :(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.

எனது வியாக்கியானம்

இது அற்புதமான உண்மை. தினமும் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளையும், பத்திரிகையில் வரும் குற்றவியல் செய்திகளையும் படியுங்கள்; செக்ஸ் அல்லது கோபம் அல்லது பேராசை ஆகிய மூன்று வகைகளில் பிரித்து விடலாம். இதை நாம் நன்கு புரிந்துகொண்டு இந்த மூன்று நன்றாக வாயில்களையும் மூட வேண்டும்.

நான் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறைச் சாலைகளுக்கு விஜயம் செய்து இந்து மத சிறைக் கைதிகளின் (Hindu Chaplain) ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தேன். கிறிஸ்தவ, முஸ்லீம் கைதிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்தக் கைதிகளின் எண்ணிக்கை மிக, மிக ,மிகக் குறைவு. ஆயினும் அவர்களையும் இந்த மூன்று வகைகளில் அடக்கி விடலாம் (செக்ஸ், கோபம், பணத்துக்கு ஆசை).; இதைக் கிருஷ்ணர் இவ்வளவு அழகாக ஒரே வரியில் சொன்னதை எண்ணி எண்ணி வியப்பேன் . ஆகையால் இந்த இரண்டு ஸ்லோகங்களும் என் மனதில் எப்போதும் நிற்கும்.

நீங்களும் சொர்க்க வாசல், நரக வாசல்களை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

நாட்டிற்காக உயி துறப்போர் அனைவரும் சொர்க்கம் செல்லுவார்கள்.

–SUBHAM—

Tags- பகவத் கீதை, சுவையான சொற்கள், சொர்க்க வாசல், நரக வாசல்

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-73 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,167)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,167

Date uploaded in London – 5  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxxx

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-73 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸ்வ ஜனம்  1-28 சொந்தக்காரர்கள்

ஸ்வ தேஜஸா 11-19 தன்  ஒளியால்

ஸ்வ தர்மம் 2-31 உனக்குரிய தர்மம்

ஸ்வ தர்மஹ  3-35 தன்னுடைய தர்மம் ,

ஸ்வ தர்மே  3-35 தன்னுடைய தர்மத்தில்

ஸ்வ தா 9-16 பித்ருக்களுக்கு இடும் அன்னம்

ஸ்வ னுஷ்டி தாத்  3-35  நன்கு அனுஷ்டிக்கப்பட்ட

ஸ்வ பன் 5-8  தூங்கினாலும்

ஸ்வ ப் னம் 18-35 தூக்கத்தையும்

ஸ்வ  பாந்தவா 1-37  நமது உறவினர்கள்

ஸ்வ  பாவஜம் 18-42 இயற்கையில் ஏற்பட்ட

ஸ்வ  பாவஜா 17-2 இயற்கையாக உண்டான

ஸ்வ பாவஜே ன 18-60  உடன்பிறந்த

ஸ்வ  பாவனியதம் 18-47 இயற்கையில் ஏற்பட்ட

ஸ்வ பாவ ப்ரபவைஹி  18-41 அவரவர் இயற்கைக்குரிய

ஸ்வ பாவஹ 5-14 இயற்கை

ஸ்வ யம்  4-38  தானாகவே

ஸ்வ யா 7-20  தன்னுடைய

ஸ்வ ர்கதிம் 9-20 சுவர்க்கம் செல்லுதலை

ஸ்வ ர்கத் வாரம் 2-32  சுவர்க்க வாசல்

ஸ்வ ர்க பரஹ  2-43  சுவர்க்கத்தையே மேலாகக் கொண்டவர்கள்

ஸ்வ ர்க லோகம்  9-21 சுவர்க்க லோகத்தை

ஸ்வ ர்கம்  2-37 சுவர்க்கம்

ஸ்வ ல்பம்  2-40  சிறிது, கொஞ்சம்

ஸ்வஸ்தி 11-21 வாழி , வாழ்க

ஸ் வஸ்தஹ  14-24  தன்னிடம் நிலைத்தவன்

ஸ் வஸ்யாஹா  3-33 தன்னுடைய

ஸ் வம் 6-13   தன்னுடைய

ஸ்வாத்யாய ஞான யக்ஞாஹா  4-28 வேதம் ஓதுதல், உணர்தல் என்னும் யக்ஞம்

ஸ்வா த்யாயஹ 16-1 சாஸ்திரங்களை ஓதுதல்

ஸ்வா த்யாயா ஸனம் 17-15  தமக்குரிய வேத நூல் ஓதும் பழக்கமும்

ஸ்வா ம் 4-6  என்னுடைய

ஸ்வேன 18-60 உன்னுடைய

XXX

ஹ – வர்க சொற்கள்

ஹதம்  2-19 கொல்லப்படுவதாக

ஹதக 2-37 கொல்லப்பட்டால்

ஹதான் 11-34 கொல்லப்பட்டவர்கள்

ஹத்வா 1-31 கொன்று,

ஹனி ஷ்யே 16-14  கொல்லப்போகிறேன்

ஹந்த 10-19  நன்று

ஹந்தாரம் 2-19 கொல்லுபவனாக

ஹந்தி  2-19 கொல்வது

ஹந்தும் 1-35 கொல்வதற்கு

ஹன்யதே 2-19  கொல்லப்படுதல்

ஹ ன்யூஹு 1-46 கொல்லுவார் எனில்

ஹயைஹி 1-14, குதிரைகள்

ஹரதி 2-67 கவர்ந்து செல்கிறது

ஹரந்தி 2-60 இழுத்துச் செல்கின்றன

ஹரிஹி  11-9 ஹரி, கிருஷ்ணன்

ஹரே ஹே 18-77  ஹரியினுடைய

ஹர்ஷ சோக அன்விதஹ 18-27

TO BE CONTINUED

50 WORDS ARE ADDED FROM PART 73  OF BHAGAVAD GITA WORD INDEX

TAGS- GITA WORD INDEX, TAMIL WORD INDEX, PART 73

செப்பு மொழி இருபத்தி ஐந்து! (Post No.11,166)

1.எனக்கு ஒரு கெடுதியை நீ செய்தால் உனக்கு கெடுதி வந்து சேரும். இது தான் கர்மா!

If You will do bad with me the bad will happen to you this is known as karma.

2.எனக்குக் கிடைக்காத கேள்வியை நீ கொடுத்தாயானால், உனக்குப் புரியாத விடைகளை நான் தருவேன்.

You give me questions I don’t get; I’ll give you answers you won’t understand.

3.எனது விடைகள் எல்லாம் நீ எப்படி கேள்வி கேட்கிறாய் என்பது பற்றித் தான்!

My answers are all about how you question me.

4.எனது கஷ்ட காலத்தில் எனக்கு நீ கை கொடுத்து உதவினால் நான் ஒரு போதும் நல்ல காலத்தில் உனது கையை விட மாட்டேன்.

If you will hold my hand in my bad time I will never leave your hand in my good time.

5. மற்றவனை அடக்கி ஆளும் ஒருவன் சக்தி வாய்ந்தவனாக இருக்கலாம்; ஆனால் எவன் ஒருவன் தன்னை அடக்கி ஆள்கிறானோ அவன் இன்னும் அதிக சக்தி வாய்ந்தவன்  –  லாவோ ட்சு

He who controls others may be powerful, but he who has mastered himself is mightier still. – Lao Tzu

6.உனது கோபத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு பதில் அது ஏன் என்பதை வெளிப்படுத்தினாயென்றால், நீ விவாதத்திற்கு பதில் தீர்வுகளைக் காணும் கதவைத் திறந்து விட்டவனாவாய்!  – ரூத் காடூரி

Explain your anger instead of expressing it, and you will open the door to solutions instead of arguments. –  Ruth Ghatourey

7. 10% முரண்பாடு கருத்து வேறுபாட்டினால் ஏற்படுகிறது; 90% அதை வெளிப்படுத்தும் குரலினால் ஏற்படுகிறது.

10% of conflict is due to differences in opinion, and 90% is due to delivery and tone of voice.

8. என்னை எனது வெற்றியை வைத்து எடை போடாதீர்கள். நான் எத்தனை முறை விழுந்து எழுந்திருந்திருக்கிறேன் என்பதை வைத்து எடை போடுங்கள் – நெல்ஸன் மண்டேலா

Don’t judge me by my success. Judge me by how many times I fell down and got back up again. – Nelson Mandela

9. என்ன, நான் எப்போதும் ஒரு லோ-கட் ஆடையைத் தான் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, நான் முக்கியமானவளாக இருக்க! – நடிகை ஜீன் ஹார்லோ

Must I always wear a low-cut dress to be important? –  Jean Harlow 

10. கடவுள் ஒருவர் இருக்கிறார், ஹாலிவுட்டில் கூட! – நடிகை ஜீன் ஹார்லோ

There is a God, even in Hollywood. Jean Harlow 

11. ஒரு எம்ஜிஎம் குவியலில் நான் எனது 12ஆம் வயதில் பிறந்தேன். – நடிகை ஜூடி கார்லேண்ட்

I was born at the age of twelve on an MGM lot. – Judy Garland

12. ஒவ்வொரு மேகத்தின் பின்னாலும் இன்னொரு மேகம் இருக்கிறது. – நடிகை ஜூடி கார்லேண்ட்

Behind every cloud is another cloud.  – Judy Garland

13. எனது கால்களும் எனது மேக்-அப் பெட்டியும் இருக்கும் வரையில் நான் ஓய்வு பெறவே மாட்டேன் – நடிகை பெட்டி டேவிஸ்

I will not retire while I’ve still got my legs and my make-up box. – Bette Davis

14. பதினைந்து மில்லியன் டாலர்களை கையில் வைத்திருந்து அதில் பாதியை எனக்கு எழுதி வைத்து, தான் இன்னும் ஒரு வருடத்தில் செத்து விடுவேன் என்று  உத்தரவாதம் அளிக்கும் ஒரு ஆளைப் பார்த்தால் நான் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளத் தயார்! – நடிகை பெட்டி டேவிஸ்

I’d marry again if I found a man who had fifteen million dollars, would sign over half to me, and guarantee that he’d be dead within a year. – Bette Davis

15. இந்த (சினிமா) வியாபாரத்தில் நீ ஒரு பிசாசு என்று அறியப்பட்டால் தான் நீ ஒரு ஸ்டார் – நடிகை பெட்டி டேவிஸ்

In this business, until you’re known as a monster, you’re not a star. –– Bette Davis

16. அழகான கண்களைப் பெறுவதற்கு மற்றவர்களிடம் உள்ள நல்லதைப் பார்; அழகான உதடுகளுக்கு அன்பு வார்த்தைகளை மட்டுமே பேசு; நிதானத்திற்கு நீ தனியாக ஒரு போதும் இல்லை என்ற அறிவுடன் நட! – ஆட்ரி ஹெப்பர்ன்

For beautiful eyes, look for the good in others; for beautiful lips, speak only words of kindness; and for poise, walk with the knowledge that you are never alone. – Audrey Hepburn 

17. நான் டயட் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. காரட்டுகளில் எனக்கு ஆர்வம் ஊட்டும் காரட் வைரத்தில் உள்ள காரட் எண்ணிக்கை தான்! – நடிகை மே வெஸ்ட்

I never worry about diets. The only carrots that interest me are the number you get in a diamond. – Mae West

18. நான் இரண்டு மொழிகளில் பேசுகிறேன் – உடல் மற்றும் ஆங்கிலம்! – நடிகை மே வெஸ்ட்

I speak two languages – body and English. – Mae West

19. திருமணம் என்பது ஆயிரம்காலத்துப் பயிர்; நான் ஆயிரம் காலத்திற்குத் தயாரில்லை – நடிகை மே வெஸ்ட்

Marriage is a great institution, but I’m not ready for an institution – May West

20. என்னைப் பார்ப்பவர்கள் பார்த்து விட்டுப் போகட்டும், பார்க்காமல் இருப்பதை விட அது மேல்! – – நடிகை மே வெஸ்ட்

It is better to be looked over than overlooked. – May West

21. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் கண்களைச் சுழற்றும் ஒரு பெண் இருக்கிறாள் – ஜிம் கேரி

Behind every great man is a woman rolling her eyes. – Jim Carey

22. இரண்டு விஷயங்கள் எல்லையே இல்லாதவை. ஒன்று பிரபஞ்சம், மற்றொன்று மனிதனின் முட்டாள் தனம்; எனக்கு பிரபஞ்சம் பற்றி உறுதியாக ஒன்றும் தெரியாது – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe. —Albert Einstein

23. இந்தப் புத்தகம் 100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட வார்த்தைகளினால் எழுதப்பட்டதே தான். – டெர்ரி ப்ரட்செட்

This book was written using 100% recycled words.
― Terry Pratchett, Wyrd Sisters

24. நீ ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அறிய,  அவரை ஸ்லோ இண்டர்நெட்டுடன் உள்ள ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தச் சொல் – வில் ஃபெர்ரல்

Before you marry a person, you should first make them use a computer with slow Internet to see who they really are. —Will Ferrell

25. எல்லாம் முன்னாலேயே நிர்ணயிக்கப்பட்டதே, நம்மால் எதையும் மாற்ற முடியாது என்று உறுதியாகக் கூறும் மனிதர்கள் கூட சாலையைக் கடக்கும் முன்னர் இரு பக்கமும் பார்த்து விட்டுத் தான் கடக்கிறார்கள் – ஸ்டீபன் ஹாகிங்

I have noticed that even people who claim everything is pre­determined and that we can do nothing to change it look before they cross the road.
— Stephen Hawking

xxx

புத்தக அறிமுகம் – 19

புராணத் துளிகள் – பாகம் 3

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பகுதி

புராணங்கள் பற்றிய விளக்கம் : காஞ்சி பரமாசார்யாள் அருளுரை!

இரண்டாம் பகுதி

அத்தியாயங்கள்

1. யோக ரஹஸ்யம்

2. பரமபதம் அடைவது எப்படி?

3. நமது துக்கத்திற்குக் காரணம்!

4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

5. மூவகை பக்தி

6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?

7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்?

8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?

9. திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?

10. மனிதர்களின் கால அளவும் தேவர்களின் கால அளவும்!

11. பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள்!

12. வியாஸர் எங்கு தவம் செய்தார்?

13. பாகவதத்திற்கு இன்னொரு பெயர் என்ன? வியாஸர்

14. கங்கைக்கும், பாகவதருக்கும் பாவம் எப்படிப் போகிறது?

15. சந்தோஷம், பொறுமை, நேர்மை, தயை … என்றால் என்ன? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

16. தமிழில் பாடுக! உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

17. ஒன்பது தத்துவங்கள் எவை? உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்!

18. ஐந்து அதர்மங்களை விலக்க வேண்டும்!

19. பிரம்மத்தின் இலக்கணம்!

20. கன்னியின் கைவளை தந்த உபதேசம்!

21. 49 அக்னிகள்!

22. பிரகலாதன் தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது

23. 28 நரகங்களின் பெயர்கள்!

24. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

25. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!

26. ஆன்ம தத்துவங்கள் 24

27. ஜோதிர்லிங்கங்கள் 12

28. உப ஜோதிர்லிங்கங்கள் 12

29. பத தானங்கள்!

30. ஓம் தோன்றியது எப்படி?

31. ஓம் என்ற பிரணவத்தின் மஹிமை!

32. ஓம் என்ற பிரணவ உச்சரிப்பால் ஏற்படும் பலன்கள்!

33. அருணாசலேஸ்வரரின் மஹிமை : பகவான் ரமண மஹரிஷி மொழி பெயர்த்து அருளியது!

34. எது சிறந்த செயல்?

35. சரணாகதியே சகலமும் தரும்

36. எவனை வித்வான் என்று கூறலாம்?

37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?

38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?

39. எந்தப் பாவம் போகவே போகாது?

40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?

41. மகாலக்ஷ்மி தோற்றம்

42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர் ஜீவராசி நாசமடைவதற்கு உதாரணங்கள்!

43. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்!

44. சிவனை பூஜித்து நன்மை அடைந்தவர்கள்!

45. ஹரிச்சந்திரன் சரித்திரத்தைக் கேட்பதின் பலன்!

46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!

47. நவநிதிகள் யாவை?

48. விபூதி தாரண மஹிமை

49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!

50. ஆதிசைவர் தோற்றம்!

*

அணிந்துரை

திரு ச. நாகராஜன் அவர்கள் எழுதிய புராணத்துளிகள் மூன்றாம் பாகம் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். எனது சம்பந்தி என்ற முறையில் திரு ச. நாகராஜன் அவர்களைப் பதினைந்து ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். தேசியமும் ஆன்மீகமும் நிறைந்த பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர் . அறிவியல், விண்வெளித்துறை, சுய முன்னேற்றம், ஆன்மீகம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவருடையை கட்டுரைகள் தமிழ் நாட்டின் முன்னணி பத்திரிகைகள், இதழ்களில் வந்துள்ளன. பாக்யா பத்திரிகையில் இவருடைய கட்டுரைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து சாதனைகள் படைத்துள்ளன. 

நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார். இன்றும் பல வலை தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்.

அவரைச் சந்திக்கும்போதெல்லாம், அவருடன் பல் வேறு தலைப்புகளில் விவாதித்துள்ளேன். உண்மையில் அவர் ஒரு வித்தகர். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று என்னால் சொல்லமுடியும். அவருடைய உற்சாகம், சுறுசுறுப்பு, படைப்பாற்றல் திறன் இவைகளே என்னையும் எழுதத் தூண்டின. என்னுடைய குருவாகவே அவரை நான் நினைக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்குச் சமுதாயப் பொறுப்புணர்வு மிக அவசியம். அதை உணர்ந்தவர் திரு ச, நாகராஜன். இன்றைய இளைய சமுதாயம் சினிமா, சின்னத்திரை இவைகளில் சீரழிந்து கொண்டிருக்கின்றது. இளையவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், உபநிஷத்கள் இவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவேண்டிய முதியோர்கள் தமது கடமையிலிருந்து நழுவி, தொலைகாட்சி தொடர்களில் மூழ்கிவிட்டனர். திரு ச. நாகராஜனது அறிவியல், விண்வெளித்துறை மற்றும் ஆன்மீகம் பற்றிய கட்டுரைகள் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்து மிக மிக எளிய முறையில் விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் உலகில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் மாறுதல்களைப்பற்றி தெரிந்துகொள்ள அவருடைய கட்டுரைகளைப் படித்தாலே போதும். அதுபோல ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மெனக்கிடவேண்டியது இல்லை. அவருடைய ஆன்மீக கட்டுரைகள், புராணத்துளிகள் இவற்றைப் படித்தாலே போதும். மிகச் சுருக்கமாக எளிதாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் படைத்துள்ளார்.

அந்த வரிசையில் வந்ததுதான் புராணத்துளிகள் பாகம் மூன்று. தனது முன்னுரையில் தனது குறிக்கோளைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். “பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பணியை மேற்கொண்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துக்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகச் சொல்லி உள்ளார். பாகவதம் என்பது ஒரு பெரிய கடல்.அதில் உள்ள சிறப்பு அம்சங்களை இந்த புத்தகத்தில் கையாண்டுள்ளார். ஆசனங்களைப் பற்றிய எளிய குறிப்புகள். துன்பத்தின் காரணம், முக்தி அடைய எளிய வழிகள், மூவகை பக்திகள், தேவிபாகவத்தின் கால அளவைகள் இப்படி பலருக்கும் தெரியாத விஷயங்களைத் தொகுத்துள்ளார். கால அளவைகள் என்று சொல்லும்போது மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே உள்ள கால அளவின் வேறுபாடுகளைப் பற்றி அவர் தெரிவித்துள்ள செய்திகள் மிகவும் சுவையானவை.அவை நம்மை பிரமிக்கவைக்கின்றன.

உத்தவருக்கு கிருஷ்ணர் அளிக்கும் பதில்களில் பல முக்கிய விஷயங்களை சொல்லி உள்ளார், அதில் சொல்லப்பட்டுள்ள அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் இவர்களுடைய குண நலன்கள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை.

உத்தவரிடம் கிருஷ்ணர் தமிழில் பாடச்சொல்வது புதிய செய்தி. மொத்தத்தில் இப்புத்தகம் ஒரு அகராதியின் தொகுப்பு போல உள்ளது. எல்லோருக்கும் பயன்தரக்கூடியது. இதைப் படிப்பவர்கள் எல்லோரும் அத்தோடு நின்றுவிடாமல் அதை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்போதுதான் திரு நாகராஜன் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்தப் பணியைச் செய்கின்றாரோ அது நிறைவேறியதாகக் கருதப்படும்.

திரு நாகராஜன் அவர்கள் இது போன்று பல படைப்புகளை உருவாக்கித் திசை தெரியாது அலையும் இந்த சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டவேண்டும். இத் தொண்டினை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்வதற்கு அவருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நல்கவேண்டுமென்று நான் வணங்கும் மகாபெரியவரிடம் வணங்கி வேண்டுகிறேன்.

வெல்க அவர் பணி!

சென்னை
22-12-2021

இராம. சேஷாத்ரிநாதன்

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் – மூன்றாம் பாகம் மலர்கிறது.

பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை நல்கி என்னைக் கௌரவிக்கும் திரு இராம. சேஷாத்ரிநாதன் இதிஹாஸம் மற்றும் புராணங்கள் பால் மிகுந்த பக்தி கொண்டவர். பாரம்பரியம் மிக்க இசை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

யூனியன் வங்கியில் 30 ஆண்டு காலம் உயர் பதவி வகித்த இவர் இப்போது இராமாயணத்தின் மிக முக்கிய பகுதிகளை வால்மீகி, துளஸி, கம்ப ராமாயணம் ஆகியவற்றை இணைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் பல நூறு பகுதிகளாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த புஸ்தகா டிஜிடல் மீடியா பிரைவேட் லிமிடட் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

ச.நாகராஜன்
பங்களூர்
22-12-2021

மின்னஞ்சல் முகவரி :snagarajans@gmail.com                                           

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

VICTORY IS WHERE KRISHNA IS! A SCENE FROM THE BATTLE FILED!! (Post No.11,165)

VICTORY IS WHERE KRISHNA IS! A SCENE FROM THE BATTLE FILED!! (Post No.11,165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,165

Date uploaded in London – 4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Mahabharata is full of twists and turns. Here is scene just before the great war begins

Dr S.Radhakrishnan, philosopher, and former President of India describes the scene in the battlefield:

योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागता: |
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षव: || 23||

yotsyamānān avekhe ha ya ete tra samāgatā
dhārtarā
hrasya durbuddher yuddhe priya-chikīrhava

I desire to see those who have come here to fight on the side of the evil-minded son of Dhritarasthra, wishing to please him.

His request for the chariot to be placed in the middle of the battlefield was to take a closer look at the Kaurava army. Arjun wanted to see all those who had taken the side of injustice. He wanted to punish them equally, as they had chosen to be on the wrong side, none of them would be spared.

Dr S.R.’s commentary on the above sloka:-

All the preparations for the ware are ready. That very morning , Yudhisthira looks at the impenetrable formation organised by Bhisma. trembling with fear he tells Arjuna: How can victory be ours in the face of such an army?

Arjuna encourages his brother quoting an ancient verse, “they that are desirous of victory, conquer not so much by might and prowess as by truth, compassion, pity, and virtue. Victory is certain to be where Krishna is. … Victory is one of his attributes  … so also is humility.

Krishna advises Arjuna to purify himself and pry to Durga for success. Arjuna descends from his chariot and chants in praise of the Goddess. Pleased with his devotion,  Durga blesses Arjuna, O Son of Pandu, you will vanquish your enemy in on time. You have Narayana himself to help you. And yet as a man of action, Arjuna did not think out the implications of his enterprise. The presence of his teacher, the consciousness of the Divine, helps him to realise that the enemies he has to fight are dear and sacred to him. He has to cut social ties for the protection of justice and the suppression of lawless violence.

The establishment of the  Kingdom of God on earth is a cooperative enterprise between God and man. Man is a co-sharer in the work of creation.

–subham–

tags, Krishna, Vitory, battle filed, Arjuna, Yuthisthira

பகவத் கீதை ஒரு கப்பல் ; ஏறினால் அடுத்த கரை சேரலாம் (Post.11,164)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,164

Date uploaded in London – 4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் நூற்றுக் கணக்கான மொழிகளில் வெளியாகியுள்ளன ; இன்னும் வெளியாகி வருகின்றன. ஆனால் பகவத் கீதையின் பெருமையைக் கூறும் ஸ்ரீமத் பகவத் கீதா மஹாத்ம்யம் பற்றி பலருக்கும் தெரியாது. அதில் கீதையின் பெருமையைச் சொல்லும் அருமையான ஸ்லோகங்கள் இருக்கின்றன . சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.

 பகவத் கீதை ஒரு கப்பல்

ஸம்ஸார ஸாகரம் கோரம் தர்த்துமிச்சதி யோ நரஹ

கீதானாவும் ஸமாஸாத்ய  பாரம்  யா து ஸுகேன ஸஹ

பொருள்

பயங்கரமான சம்சார சாகரத்தை எந்த மனிதன் கடக்க விரும்புகிறானோ  அவன் கீதையாகிய கப்பலில் ஏறிச் சுகமாக அக்கரை  சேரலாம் .

திருவள்ளுவரும் இதே கருத்தை பத்தாவது குறளில் சொல்கிறார்.-

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்  நீந்தார்

இறைவன் அடி சேராதார்

வள்ளுவர் பார்த்த கடல் ஏரி போல் உள்ள வங்காள விரிகுடாதான் . ஆகையால் அவர் நீச்சல் பற்றிப் பாடுகிறார்.ஆனால் மஹா பாரதம் எழுதிய வியாசரோ பசிபிக், அட்லாண்டிக் , இந்து மஹா சமுத்திரம் அனைத்தையும் கண்டவர்; அறிந்தவர் ; பூகோள மன்னன்; ஆகையால்தான் கோரம்/ பயங்கரமான என்ற அதை மொழியைப் போட்டு சம்சார சாகரம் என்ற சொல்லைப் பிரயோகிக்கிறார்.

வியாஸருடைய கடல் பற்றிய அறிவை பகவத் கீதை 2-70 லு ம் காண்கிறோம் ,

आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।

तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||

யத்³வத் = எவ்விதம்
ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்³வத் = அதே விதமாக
யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

Gita sloka taken from sangatham.com; thanks.

சுவையான விஷயங்கள்

ஆன்மீகத்தைக் கொஞ்சம்  ஒதுக்கிவைத்துவிட்டு , வேறு சில அறிவியல் , மொழி இயல் விஷயங்களை அலசுவோம்.

புத்தரும், மகாவீரரும் கடல் கரையைக் காணாத நேபாளம், பீஹார் பகுதியில் சுற்றியவர்கள் அதிகபட்சம் உத்தரப் பிரதேசம் வரை வந்தவர்களே. ஆகையால் கடல் பற்றிப் பேசுவதில்லை  மேலும் இந்தப் பிறவி என்பது கடல்போலப் பெருகியது, அதைக் கடப்பது எளிதல்ல என்ற  உவமையும் இந்தியாவில் பிறந்த மதங்களில் மட்டுமே காணக்கூடியது.

கீதா மஹாத்ம்யத்தில் வரும் நாவம் என்ற சொல்லில் இருந்து நேவி NAVY போன்ற ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் உலகம் அறியும். அது மட்டும் அல்ல ; கடலில் எத்தனை நதிகள் கோடிக்கணக்கான டன் நீரைக் கொண்டு கொட்டினாலும் அது நிரம்புவதில்லை என்ற உவமையை வேதத்திலும், சங்க இலக்கியத்தில் பரணர் எழுதிய பாடலிலும் காணலாம்.

அதுமட்டுமல்ல ; இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில்  இந்த உவமையை தினமும் சொல்கின்றனர். ஆகாஸாத் பதிதம் தோயம்…………………………… வானிலிருந்து விழும் மழைத்துளிகள் (நதியாக) கடலை நோக்கிச் செல்லுவது போல என் பிரார்த்தனை அனைத்தும்  கேசவனை நோக்கிச் செல்லட்டும் என்று சொல்கிறார்கள்.

.Xxx

கீதா மஹாத்ம்யத்தில் உள்ள இன்னும் ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்

கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே

சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே

பொருள்

கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்ற நான்கு க-கார நாமங்கள் இருதயத்தில் நிலை பெற்றுவிட்டால் புனர் ஜென்மம் இல்லை . இந்த ஸ்லோகம் மஹா பாரத த்தில் உள்ளது.

இதிலுள்ள சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்

மேற்கூறிய நான்கில் ஓன்று  நம் வாழ்க்கையில் அமைந்து விட்டாலேயே நமக்கு முக்தி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .கங்கை நதி பற்றி ரிக் வேதத்திலும் உள்ளது. சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ளது. சேரன் செங்குட்டுவன் , தன்னுடைய தாயாரை கங்கையில் குளிப்பதற்கு அழைத்துச் சென்ற செய்தியும், மற்றும் ஒரு முறை இமயத்தில் கல் எடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினித் தெய்வமான கண்ணகிக்குச் சிலை எடுத்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த அப்பர் சுவாமிகளும் கங்கையின் பெருமையைப் பாடுகிறார்..

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு இந்தியாதான். இப்போதுள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கியது. அவர்கள் அனைவரும் கங்கையைப் பாடிப் பரவியதிலிருந்து இந்துமதம், எப்படி பிரம்மாண்ட மான தேசத்தைக் கட்டிக்க காத்தது என்பதை அறிகிறோம்.

ஏனைய மூன்று “க” பற்றி , கீதையின், காயத்ரீயின், கோவிந்தனின் பெருமையை நாம் நன்கு அறிவோம் ..

Xxx

கீதை புஸ்தகம் வீட்டில் இருந்தால்

லண்டனில் என்னுடைய வீட்டின் மேஜையின் மீது எப்போதும் பகவத் கீதை, திருக்குறள், பாரதியார் பாடல் புஸ்தகங்கள் இருக்கும். இப்படி இருப்பதால் திடீரென்று எதையோ ஒரு விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. நேரம் கிடைக்கையில் ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தாலும் புதிய கருத்து உதயமாகும். உடனே பென்சிலைக் கொண்டு மார்ஜினில் குறிப்பு எழுதுவேன். இதை ஆதரிக்கும் ஸ்லோகம் இதோ —

கீதாயாஹா புஸ்தகம் யத்ர நித்ய- பாடச்ச வர்த்ததே

தத்ர ஸ ர்வாணி தீர்த்தானி ப்ரயாகாதீனி பூதலே

பொருள்

எவ்விடத்தில் கீதை புஸ்தகம் இருக்கிறதோ , எங்கே கீதா பாடம் நிகழ்கிறதோ , அவ்விடத்தில் இவ்வுலகிலுள்ள பிரயாகை முதலிய ஸகல தீர்த்தங்களும் எப்போதும் உறைகின்றன .

ஆகவே எல்லோரும் சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதை புஸ்தகத்தையோ அல்லது சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் அறிஞர் அண்ணா அவர்கள் உரை எழுதிய கீதை புஸ்தகத்தையோ மேஜையின் மீது வைத்துக்கொள்ளுங்கள். அட்டை முதல் அட்டை வரை படிக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து படியுங்கள் . பின்னர் நீங்களும் என்னைப் போல பாரதீய வித்யா அவன் நடத்தும் 5 பகவத் கீதை தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சி அடையலாம்.

வாழ்க பகவத் கீதை ! வளர்க்க இந்து மதம் !!

Xxx subham xxxx

Tags- கீதை, கப்பல், பிறவி, பெருங்கடல் 4 க-காரம் , புஸ்தகம், பிரயாகை

களப்பாளன் பாடிய அந்தாதி! (Post No.11,163)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,163

Date uploaded in London – –    4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 30

களப்பாளன் பாடிய அந்தாதி!

ச.நாகராஜன்

களப்பாளன் என்னும் செல்வந்தர் தமிழில் வல்லவர். வேளாள குலத்தைச் சேர்ந்த அவர் நெற்குன்றூர் என்னும் தலத்தில் வாழ்ந்து வந்தார்.

திருப்புகலூரில் உறைகின்ற சிவபிரான் மீது அடி மடக்கும், சொல் இன்பமும், இலக்கண இன்பமும் பொருந்தும் படி அற்புதமான ஒரு கலித்துறை அந்தாதியை (நூறு பாடல்கள் கொண்டது அந்தாதி) அவர் பாடினார்.

‘பூக்கமலம்’ என்ற சொல்லை முதலாகக் கொண்டு அமைந்தது அந்த அந்தாதி.

பூக்கமலத்து விழிவளர்வானென்றும் போற்றியவூர்

மாக்கமலத்து மகிழ்கின்றவூர்மது வானிறைந்த

தேக்கமலத்து வழியேபரக்குந் திருப்புகலூர்

நோக்கமலத்துயர் சோதிநெஞ்சே நம்மை நோக்குதற்கே

என்ற அற்புதமான பாடலே அது.

அவையடக்கமாக அவர் பாடிய பாடல் இது:

வளப்பாடிலாத வெருக்குமிதழி மலருமன்ப

ருளப்பாடுறைபுக லூரருக்காதலி னோதிமிக்க்கோர்

தளப்பாடிது தமிழ்க் கென்னிலுஞ் சாற்றுவன் சந்திரன் சொற் களப்பாளனெற்குன்ற வாணனந்தாதிக் கவித்துறையே

இந்தப் பாடல் மூலம்  அவர் அந்தாதி பாடியது தெரிய வருகிறது.

படுபருந்துஞ் சூர்ப்பேயும் பல் விலங்கும் நாயும்

கொடியுங் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம்

என்ற பாடல் மூலம் இவனது வெற்றித் திறத்தை அறிய  முடிகிறது.

இப்படிப்பட்ட களப்பாளன் வாழ்ந்த மண்டலம் தொண்டை மண்டலமே என தொண்டைமண்டல சதகம் தனது 30 வது பாடலில் பாடி அவனைப் புகழ்ந்து கூறுகிறது.

பாடல் வருமாறு:-

கிளப்பார் கிளப்ப வடிமடக்காகக் கெழுமிய சொல்

லளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் றாய்ந்தெடுத்த

களப்பாள னெற்குன்ற வாணனந்தாதிக் கலித்துறையே

வளப்பார்புகழை வளர்ப்பிக்கு மாற்றொண்டை மண்டலமே

பாடலின் பொருள் : நெற்குன்றூரில் வாழ்கின்ற களப்பாளன் என்னும்

வேளாண் தலைமகன் – செல்வத்தாலும் வெற்றியாலும் அன்றிக் கல்வியாலும் கூடச் சிறந்தோன் என்பதை – பிறிது ஒன்றையும் வியந்து சொல்லாத புலவர்களும் வியந்து பாடி பாராட்டும் படி – திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் உறைகின்ற சிவபிரான் மேல்

அடி மடக்கும் சொல் இன்பமும் இலக்கண இன்பமும் பொருந்த, முதற் பாடலில் முதலிலே “பூக்கமலம்” என்னும் சொல்லை மங்கலம் முதலியவற்ற்கு இயையும் பாடி ஆராய்ந்து எடுத்து முடித்த கலித்துறை அந்தாதியே எடுத்துக் காட்டியது. இந்த எடுத்துக்காட்டு வளப்பம் பொருந்திய பூவுலகின் கண் தொண்டை மண்டல வேளாண் மக்களது புகழை வளரச் செய்ய வல்லது!

தொண்டை மண்டலத்தில் வாழும் வேளாளர் செல்வச் சிறப்பு, கொடைச் சிறப்பு, வெற்றிச் சிறப்பு ஆகியவற்றுடன் தமிழில் அழகுற நூல்கள் இயற்றும் தமிழ்ச் சிறப்பையும் கொண்டவர்கள் என்பதை இந்தப் பாடல் அழகுற விளக்குகிறது.

***

புத்தக அறிமுகம் – 18

புராணத் துளிகள் – பாகம் 2

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பகுதி

புராண மஹிமை

புராணம் பற்றிய ஒரு நூல் : புராணக் களஞ்சியம்

18 புராணங்களையும் எளிதில் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

இரண்டாம் பகுதி

பிரம்மாவின் வம்சம்

சுகம் எது, துக்கம் எது?சத்ரு எவர், நண்பர் எவர்?

வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வேதாங்கம் ஆறு

வேதங்களின் புரோகிதர்கள்

ஏழு சிரஞ்சீவிகள்

ருணங்கள் மூன்று

ப்ராண பிணம் யார்?

சுபாஸ்ரயம் எது?

லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

ஒருவர் அர்க்யம் விடுவது எதற்காக?

பாகவத மஹிமை

அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

மூன்று ஈஷணைகள்!

கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு

வாஹனம்!

தேவியின் கண்கள்

பாரத தேசத்தின் பெருமை

தர்ப்பம் ஏன் புனிதமானது!

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

வாஹனம் – 2

நவ கிரகங்கள்

அழகாபுரியின் வர்ணனை!

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

மும்மூர்த்திகளும் ஒருவரே!

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

மாயைக்கு மருந்து

தூக்கம் வராத நான்கு பேர்!

பலன் தரும் யந்திரங்கள்!

அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

சப்த ரிஷிகள் யார் யார்?

சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?

சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

யார் யாரை வதம் செய்தனர் – 2

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

சூரியனுடைய சஞ்சாரம்

பவித்ர நதிகள்

தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!

ப்ரளயம் நான்கு வகைப்படும்

துர்கா ஸப்த சதி!

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

*

அணிந்துரை

என்னுடைய அருமை நண்பர் சந்தானம் நாகராஜன் அவர்கள் இறை உணர்வும் நாட்டுப்பற்றும் தன் இரண்டு கண்களாகக் கொண்டவர்.அன்னை மீனாட்சியின் அருளாசியுடன் மதுரை மாநகரில் தனது இளமை பிராயத்தைக் கழித்தவர். இவருடைய தந்தையார் சந்தானம் அவர்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து விளங்கிய பத்திரிகையாளர். சுதந்திர போராட்டக் களத்தில் திரு ஏ.என்.சிவராமனுடன் இணைந்து போராடிய தேசபக்தர். அவரே இவருக்கு வழிகாட்டி! அவருடன் நற்பணி மன்றங்களில் பணியாற்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அடியேனும் இணைந்து பயணித்த காலங்கள் இன்றும் பசுமையாக எனது எண்ணத்தில் நிழலாடுகின்றன.

சந்தானம் நாகராஜன் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.

“நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல்” என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை சிந்தனையில் கொண்டு இன்றுவரை சோர்வின்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அரும்பணியாற்றி வருகிறார்.

இதுவரை அவர் ஆன்மிகம் தேசியம் அறிவியல் முதலான பலதுறைகளில் உன்னதமான கருத்துக்களுடன் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.” பாக்யா” இதழில் பல்வேறு கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வுக்கு வித்திட்டிருக்கிறார்.

பாரதியின் ஞானப்பாடல் வரிகளான “ஊருக்கு உழைத்திடல் யோகம்! நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்! போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்!” என்ற கவிதை வரிகளே இவரை “புராணத்துளிகள்” படைக்க அடித்தளமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்

புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த வேத உபநிடதங்கள் வியாச மகரிஷியால் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் இதிஹாச புராணங்கள் மலர்ந்தன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

“சநாதன தர்மம்” என்ற வேத சாகரத்திலிருந்து பேரலையாக எழுந்த இதிகாச புராணங்களின் ஆன்மிக அமுதத்தின் திவலைகளை எளிய நடையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கு புரியும் படியாக தொகுத்து எழுதியுள்ளார் எனது நண்பர் சந்தானம் நகராஜன் அவர்கள்.

புராணம் என்றால் தொன்மையானது. புரா, நவம் என்ற இரு சொற்களின் கலவையே புராணம். புரா என்றால் தொன்மை, நவம் என்றால் புதுமை. அதாவது தொன்மையில் புதுமை என்பர் ஆய்வாளர்கள்.அந்த வகையில் தொன்மையான சநாதன தர்மத்தை எளிமையாக புரிந்துகொள்ள புதுமையான புராணங்களை இயற்றினர் மகரிஷிகள்.

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களை விளக்கி இந்த மாநிலத்து மாந்தரெல்லாம் சநாதன தர்மத்தின் வழியில் வாழ்ந்து நற்பேறு அடைய வழிகாட்டும் கலங்கரை விளக்கமே புராணக் களஞ்சியங்கள்.

ஏற்கனவே புராணத்துளிகள் முதல்பாகம் பதிவு செய்து மகத்தான பணியினை செய்த நண்பர் நாகராஜன் இப்போது இரண்டாம் பாகம் இயற்றியுள்ளார்.

அது இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.

முதல் பகுதியில் “புராண மஹிமை”யினை ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவு மூலம் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். பதினெண்புராணங்களை விளக்கியும் அவைகளை நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகத்தையும் எழுதியுள்ளதும் அருமை.

அடுத்த பகுதியில் “புராணக் களஞ்சியம்” என்ற தலைப்பில் தனது இரண்டாவது பாகத்தினை பதிவிட்டுள்ளார். இந்த பாகத்திலும் உன்னதமான பாகவத புராணம் முதலானவைகளில் உள்ள புருஷார்த்த விஷயங்களை தெளிவாக அழகாக வரிசைப்படுத்தி விளக்குகிறார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் பரம்பொருளை அடைய நாம் செய்ய வேண்டிய கிரியைகளையும் செவ்வனே எடுத்துரைக்கிறார். விஞ்ஞான ரீதியாகவும் புராணங்களில் உள்ள கால நிர்ணயம் உள்ளிட்ட பஞ்சாங்க விஷயங்களையும் விவரமாக விளக்குவது அருமை!

ஞான சாகரத்தில் ஆழ்ந்து அவர் அனுபவித்து எடுத்த நல்முத்துக்களை நமக்கு வரிசைப் படுத்தி அழகிய அணிகலனாக பதிவிட்டுள்ளார். இவருக்கு இவ்வளவு திறமையும் ஊக்கமும் விளைந்துள்ளது பகவத் பாகவத கடாட்சமே! மொத்தத்தில் “புராணத்துளிகள்” இரண்டாம் பாகம் ஒரு திரண்ட கருத்துப் பொக்கிஷமே!

நண்பர் சந்தானம் நாகராஜனின் நற்பணி பாரத சமுதாயத்துக்கு மட்டுமில்லாமல் உலகளாவிய சநாதனதர்மத்துக்கும் பரவட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் ஆச்சார்யரையும் வேண்டி வணங்கி அவரை பாராட்டி மகிழ்கிறேன்.

அடியேன்
என் ஸ்ரீனிவாசன் BSc FCA
ஆடிட்டர் மதுரை 625014

29-12-2021

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் – இரண்டாம் பாகம் மலர்கிறது.

பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி என்னை கௌரவித்திருக்கும் ஆடிட்டர் திரு என். ஸ்ரீனிவாசன் அவர்களுடன். ஐம்பது ஆண்டுகளாக தெய்வீகப் பணியிலும் தேசீயப் பணியிலும் இணைந்து பணியாற்றியதால் இவரைப் பற்றி நன்கு அறிவேன். மிகச் சிறந்த ஆடிட்டரான இவர் ஏராளமான பெரிய நிறுவனங்களுக்கு ஆடிட்டர். நிதி ஆலோசகர். தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வளம் பெற வழி கோலியவர். அத்துடன் மட்டும் நின்று விடாமல் சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலரும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்: பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலை

என்ற கடலுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி கூறிய இலக்கணப்படி தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்பவர். இளைஞர் நற்பணி மன்றம் என்ற ஒரு அரும் மன்றத்தின் தலைவராக இருந்து பாரதியார் பாடல்கள் மூலமாக இளைஞர்களிடையே தேச பக்தியை ஊட்டியவர். வேதாந்த தேசிகர் பக்த சபை, தாம்ப்ராஸ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீக சபைகளில் பொறுப்பு வகிப்பதோடு ஆன்மீக இயக்கங்களில் முன்னின்று பொறுப்பேற்று வழி நடத்தியவர், வழி நடத்துபவர்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த புஸ்தகா டிஜிடல் மீடியா பிரைவேட் லிமிடட் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

ச.நாகராஜன்
பங்களூர்

மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Tags- களப்பாளன், அந்தாதி,

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-72 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,162)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,162

Date uploaded in London – 3 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-72 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸூயதே  9-10 பிறப்பிக்கின்றது

ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12  ஆயிரம் சூரியர்களின்

ஸூர் யஹ  15-6 சூரியன்

ஸ்ரு ஜதி 5-14 சிரு ஷ்டித்தான்

ஸ்ரு ஜாமி 4-7 படைத்துக் கொள்கிறேன்

ஸ்ருதீ 8-27 மார்க்கங்கள்

ஸ்ருஷ்டம் 4-13 சிருஷ்டிக்கப்பட்டது

ஸ்ருஷ்ட் வா 3-10 சிருஷ்டித்து

ஸேன யோஹா 1-21 சேனைகளுக்கு

ஸே னானீனா ம் 10-24 சேனாபதிகளுக்குள்

ஸேவதே 14-26 சேவிக்கின்றானோ

ஸேவயா 4-34 சேவையாலும்

ஸைன்யஸ்ய 1-7 சேனைக்கு

ஸோ டும் 5-23 தாங்குவதற்கு

ஸோமபாஹா 9-20 சோம பானங்களால்

ஸோமஹ 15-13 சந்திரன்

ஸௌம்க்ஷ் யாத் 13-32  சூட்சுமத் தன்மையால்

ஸௌபத்ரஹ 1-6 சுபத்திரையின் புதல்வன் (அபிமன்யு)

ஸௌமதத்தி 1-8 சோமதத்தனுடைய புதல்வன் (பூரிச்ரவஸ் )

ஸௌவ்ம்யத்வம் 17-16  அன்புடைமை

ஸௌம்யம் 11-51 இனிய

ஸௌம்யவபுஹு 11-50 இனிய உருவத்தை

ஸ்கந்தஹ 10-24 கந்தன்         23 WORDS

ஸ்த ப்தஹ 18-28 கர்வமுடையவன்

ஸ்த ப்தாஹா 16-17 வணக்கமில்லாதவராய்

ஸ்து திபிஹி  11-21 புகழுரைகளால்

ஸ்துவந்தி 11-21 துதிக்கின்றனர்

ஸ்தேன ஹ 3-12 திருடன்

ஸ்த்ரி யஹ 9-32 பெண்கள்

ஸ் த்ரீ ஷு 1-41 பெண்கள்

ஸ்தா ணு ஹு 2-24 நிலையான , நகராத

ஸ்தா னம் 5-5 நிலை

ஸ்தா னே 11-36  இது பொருத்தமே

ஸ்தாபய 1-21 நிறுத்தும்

ஸ்தாபயித்தவா 1-24  நிறுத்தி

ஸ்தாவர ஜங்க மானா ம் 13-26

ஸ்தாவராணாம் 10-25 அசையாப் பொருட்களில்

ஸ்தாஸ்யதி 2-53  நிற்குமோ

ஸ்தித ப்ரக்ஞஸ்ய  2-54 ஞானம் நிலைத்து

ஸ்தித்வா 2-72  நின்று     40 WORDS

ஸ்தித தீஹீ  2-54 அந்த ஸ்தித பிரக்ஞன்

ஸ்திதம் 5-19 நிறுத்தப்பட்டதோ

ஸ்திதஹ  5-20 நிற்பவனாய்

ஸ்திதான் 1-26 இருந்த

ஸ்திதாஹா 5-19 நிலைபெறுகின்றனர்

ஸ்திதிம் 6-33 நிலையை

ஸ்திதிஹி 2-72 (ஒன்றுபட்ட) நிலை

ஸ்திதெள 1-14 நின்றுகொண்டு

ஸ்திர புத்திஹி  5-20 நிலையான புத்தியுடையவனாய்

ஸ்திர மதிஹி 12-19 திடச் சித்தம் உடையவன்

ஸ்திரம் 6-11 அசையாதது

ஸ்திரஹ 6-13 ஸ்திரமாக இருந்து

ஸ்தைர்யம் 13- 7 விடா முயற்சி

ஸ்னிக்தாஹா 17-8 பசை உடையவனாக

ஸ்பர்சனம் 15-9 மெய், உடல்

ஸ்பர்சன் 5-27 விஷய நுகர்ச்சிகளை

ஸ்ப்ரு சன் 5-8 தொட்டாலும்

ஸ்ப்ரு ஹா 4-14 ஆசை

ஸ்மரதி 8-14 நினைக்கிறானோ, எண்ணுகின்றானோ

ஸ்ம ரன் 3-6 நினைத்துக்கொண்டு  60 WORDS

ஸ்ம் ருதம்  17-20  கருதப்படும்

ஸ்ம் ருதஹ  17-23 கூறப்பட்டுள்ளது

ஸ்ம் ருதா 6-19 (அறிஞர்களால்) சிந்திக்கப்பட்டுள்ளது

ஸ்ம்ருதி ப்ரம்சாத் 2-63 நல்ல நினைவு கெட்டதால்

ஸ்ம்ருதி விப்ரமஹ  2-63 நல்ல நினைவின் கேடு

ஸ்ம்ருதி ஹி 10-34 ஞாபக சக்தி

ஸ்யந்தனே 1-14 தேரின் மேல்

ஸ்யாத் 1-36 ஏற்படும்

ஸ்யாம 1-37   ஆவோம்

ஸ்யாம் 3-24 ஆவேன்

ஸ்யு ஹு 9-32 உ ண்டோ , இருக்கிறார்களோ

ஸ்ர ம்ஸ தே 1-30 நழுவுகிறது

ஸ்ரோ தஸாம் 10-31 நதிகளில்

ஸ்வ கர்மணா 18-46 தனக்குரிய கருமத்தால்

ஸ்வ கர்ம நிரதஹ 18-45 தன் கருமத்தில் நிலைபெற்றவன்

ஸ்வகம் 11-50  தனக்கு உரிய

ஸ்வக்ஷுஷா 11-8 உன்னுடைய கண்களாலேயே

77—WORDS ARE ADDED FROM PART 72 OF GITA WORD INDEX

TAGS- TAMIL WORDS INDEX, PART 72, BHAGAVAD GITA,பகவத்கீதை ,சொற்கள் ,இண்டெக்ஸ்-72

எஸ். நாகராஜன் ஜுலை 2022 கட்டுரைகள் (Post No.11,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,161

Date uploaded in London – –    3 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SNR Article Index : July 2022

JULY  2022

  1-7-2022   11067. SNR Article Index JUNE 2022

  2-7-2022   11073 உலக இயக்கத்திற்கு உதவும் நாடு! 22-6-22 மாலைமலர்

             கட்டுரை

 3-7-2022 11076 ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம் 

  4-7-2022   11078  நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!

 5-7-2022 11080  ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!

 6-7-2022 11082 ISBN அதிசயம்!

 7-7-2022 11085 நடந்தவை தான் நம்புங்கள் – 22

 8-7-2022 11089 நடந்தவை தான் நம்புங்கள் – 23

   9-7-2022 11091 நடந்தவை தான் நம்புங்கள் – 24

10-7-2022 11093 நடந்தவை தான் நம்புங்கள் – 25  

11-7-2022 11095 நடந்தவை தான் நம்புங்கள் – 26

12-7-2022  11097  நடந்தவை தான் நம்புங்கள் – 27

13-7-2022  11099  சந்தோஷமாக இருப்போமே!

14-7-2022 11102 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67

15-7-2022 11105  உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு – ( 29-6-22

              மாலைமலர் கட்டுரை)

16-7-2022 11108. மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு (5-7-22

              மாலைமலர் கட்டுரை)

17-7-2022  11111 புத்த பூமி ஹாங்காங்! (மாலைமலர் 12-7-22 கட்டுரை)   

18-7-2022  11114   காந்திஜிக்கு அமைக்கப்பட்ட மணப்பெண் அறை! +

                                  புத்தக அறிமுகம் 1 ஆலயம் அறிவோம் – முதல் பாகம்

19-7-2022 11117 விநாயக் தாமோதர் சவர்கார்

                                   புத்தக அறிமுகம் 2 ஆலயம் அறிவோம் – இரண்டாம்

               பாகம்

20-7-2022 11120  ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து

              கொள்ளுங்கள்

                                    புத்தக அறிமுகம் – 3 நடந்தவை தான் நம்புங்கள்!

20-7-2022 11123    மேதை ஆக ஏழு படிகள்!

              புத்தக அறிமுகம் 4 உலகவலத்தில் ஒன்பது நாடுகள்

22-7-2022 11126.    செப்பு மொழி இருபத்தியிரண்டு

              புத்தக அறிமுகம் 5 திருக்குறளில் அந்தணரும்

               வேதமும்

23-7-2022 11129     ஓஷோவின் குட்டிக் கதைகள்

              புத்தக அறிமுகம் 6 அதிசய மஹாகவி பாரதியார்!

24-7-2022 11132   செப்பு மொழி இருபத்திமூன்று

              புத்தக அறிமுகம் 7 தமிழ் என்னும் விந்தையில்  

              (வி)சித்திர கவி விளக்கம் – பாகம் 1

25-7-2022 11135.  பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

             புத்தக அறிமுகம் 8 தமிழ் என்னும் விந்தையில்  

              (வி)சித்திர கவி விளக்கம் – பாகம் 2

26-7-2022 11139.  கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!

             புத்தக அறிமுகம் 9 நோய் தீர, இன்பம் சேர, வினை தேய

             தேவாரம், திருவாசகம்!

27-7-2022 11142   செப்பு மொழி இருபத்திநான்கு

              புத்தக அறிமுகம் 10 காலத்தை வென்ற கவிஞன்

              கண்ணதாசன்

28-7-2022 11146    ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி  

              ஜெர்மெய்ன்!

                புத்தக அறிமுகம் 11  12288 காதல் வகைகளில்

              இலக்கியம் தரும் சில காட்சிகள்!

29-7-2022 11149   மூன்று திரைப்படங்கள் 1) A Twele-year Night 2) Argo 3) A Call to

                                   Spy  –  புத்தக அறிமுகம் 12 சம்ஸ்கிருதச் செல்வம்

30-7-2022 11151   ராக்கெட்ரி:    மாதவனின் அருமையான படம்!

              புத்தக அறிமுகம் 13 : பகவான் ரமணரின் வாழ்க்கையில் 

              சுவையான சம்பவங்கள்!

31-7-2022 11154     கோலாகல கோலாலம்பூர் (மாலைமலர் 26-7-22 கட்டுரை)                

                                    புத்தக அறிமுகம் 14 : செல்வம் செழிக்க – ஜெம்ஸ்,

              வாஸ்து வழிகள்

***

புத்தக அறிமுகம் – 17

மகான்களின் சரிதம் – பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஷீர்டி சாயிபாபா!

2. ஸ்ரீ மத்வாசாரியர்!

3. ஸ்ரீ ராகவேந்திரர்!

4. ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள்

5. ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்

6. ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்!

7. ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்!

8. ஸ்ரீ திருஞானசம்பந்தர்!

9. ஸ்ரீ திருநாவுக்கரசர்

10.ஸ்ரீ சுந்தரர்!

11. ஸ்ரீ மாணிக்கவாசகர்

12. ஸ்ரீ அருணகிரிநாதர்

13. ஸ்ரீ தாயுமானவர்!

14. ஸ்ரீ உமாபதி சிவம்

15. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி!

16. ஸ்வாமி ராமதீர்த்தர்!

17. மஹரிஷி அரவிந்தர்

18. ஸ்ரீ சத்ய சாயி பாபா!

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

(ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா முதல் ஸ்ரீ சத்ய சாயி பாபா வரை)

லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயம் ஒளிபரப்பில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு ச. சுவாமிநாதன் மற்றும் சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

அந்த உரைகளில் இடம் பெற்ற மகான்களின் சரிதம் முதல் பாகமாக மலர்ந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் 18 மகான்களின் சரிதமும் அவர் தம் அருளுரைகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஞானமயம் வாய்ப்பை எனக்கு நல்கிய லண்டன் திரு ச. சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

14-1-22

ச.நாகராஜன்

பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**