புலியைக் கட்டித் தழுவலாம்; முட்டாளைத் திருத்த முடியாது- அறப்பளீசுர சதகம் (Post.11,521)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,521

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

முட்டாள்கள் பற்றி வள்ளுவன்பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை :

வள்ளுவன் 1330 அருங் குறள்களை யாத்தான்;பர்த்ருஹரி 300 பாக்களில் வரிக்கு வரி குறள் போலவே பேசுகிறார். பஞ்சதந்திரம் இயற்றிய பிராஹ்மணன் விஷ்ணுசர்மனோவெனில் கதைக்குள் பொன் மொழிகளைப் பொழிகிறார். நாம் எல்லோரும் பஞ்சதந்திரம் என்றால், ஏதோ மிட்டாய், சாக்லெட் சாப்பிடும் சின்னப் பயல்களுகான கதை என்று நினைப்போம். ஆனால் அதில் திருக்குறளையும் பர்த்ருஹரியையும் விடக் கூடுதல் அறிவுரை உளது. நிற்க. 

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் என்ன செப்பினார்? 

प्रसह्य मणिम् उद्धरेन्मकरवक्त्रदंष्ट्रान्तरात्
समुद्रम् अपि सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।
भुजङ्गम् अपि कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु प्रतिनिविष्टमू‌ऋखजनचित्तम् आराधयेथ् ॥ 1.4 ॥ 

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் -1-4

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

लभेत सिकतासु तैलम् अपि यत्नतः पीडयन्
पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
क्वचिदपि पर्यटन्शशविषाणम् आसादयेत्
न तु प्रतिनिविष्टमूर्खचित्तम् आराधयेथ् ॥ 1.5 ॥

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் -1-5

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

xxx

முட்டாள்கள் பற்றி வள்ளுவர் சுமார் 20 குறள்களில் கொட்டித் தீர்த்துவிட்டார்,

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின் (குறள் 838)

முட்டாள் கையில் ஒரு பொருள் கிடைத்து விட்டால் ஏற்கனவே பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டால் என்ன ஆகுமோ அப்படி ஆட்டம் போடுவான்.

குரங்கு கையில் பூமாலை, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான், இஞ்சி தின்ன குரங்கு போல- பழமொழிகள் நம் நினைவுக்கு வரும்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல் (குறள் 839)

முட்டாளுடன் தொடர்பு கொள்வதும் இனிதே; ஏனெனில் அவன் பிரிந்து செல்லும்போது கொஞ்சமும் வருந்தமாட்டோம்.

போனான்டா சனியன் என்று கொண்டாடுவோம்

 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய் – குறள் 848

 சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் கற்க மாட்டான்; அவன் சாகும் வரைக்கும் நம்மைப் பிடித்த நோய் போன்றவன்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தன்கண்டவாறு –  குறள் 849

 முட்டாளுக்குக் கற்பிக்கப் போனவன் முட்டாள் ஆகிவிடுவான்; முட்டாளோ பிறர் சொல்லுவதைக் கேட்காமல் அறிவாளிபோலத் தோன்றுவான்.

 அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவான்.

இதற்கு பஞ்ச தந்திரம் எழுதிய விஷ்ணு ஸர்மா ஒரு நல்ல கதை சொல்லுவார்.

ஒரு காட்டில் குளிர்காலம் வந்தது; குரங்குகள் வாடைக் காற்றில் வாடின. மாலை நேரம் வந்தது; அப்பொழுது மின்மினிப் பூச்சிகள் ‘பளிச் பளிச்’ சென்று ஒளி உமிழ்ந்து பறந்தன. ஒரு குரங்குக்கு நல்ல யோஜனை பிறந்தது. ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்து, காய்ந்த இலை, சருகுகளுக்கு அடியில் வைத்து தீ எரிவதாகக் கற்பனை செய்து கொண்டு கை,கால்களைத் தடவி சூடு உண்டாக்கின. குளிரால் மிகவும் வாடிய ஒரு குண்டுக் குரங்கு வாயால் ஊதி மேலும் தீயை எழுப்ப முயன்றது. இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணங் குருவிக்கு ஒரே சிரிப்பு. இந்த முட்டாள் குரங்குகளுக்கு கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லுவோம் என்று மரத்தின் மேலிருந்து சொன்னது:

ஓ, குரங்குகளே! அது தீப்பொறி அன்று; வெறும் பூச்சிதான்; அதனால் தீ உண்டாகாது- என்று. 

குரங்குகளோ இதை செவிமடுக்கவில்லை. அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. 

குருவிக்கு வருத்தம்; கொஞ்சம் நன்றாகக் காதில் ஓதுவோம் என்று பறந்து வந்து ஒரு குரங்கின் காதில் முன் சொன்னதை ஓதியது. கோபம் அடைந்த அந்தக் குரங்கு குருவியைப் பிடித்து, ஒரு பாறையில் மோதிக் கொன்றது.

 இது போலப் பஞ்சதந்திரக் கதைகளில் நிறைய கதைகள் முட்டாளின் சிறுமைதனைப் பேசும்

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும் 

இவ்வாறு ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் இடையிலும் முடிவிலும் விஷ்ணுஸர்மா பாடிக்கொண்டே கதை சொல்லுவார்.

Date: 21  September 2018

xxx

Here is verse 15 of Arappalichura Sataka by Ambalavana Kavirayar

15. செயற்கருஞ் செயல்; அறப்பளீசுர சதகம்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மேவுஆர் கொன்றைபுனை வேணியா – விரும்பிய

ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடைமுடியுடையவனே!, சுரர்பரவும் அமலனே – வானவர் வாழ்த்தும் தூயவனே!,

அருமை………தேவனே!, நீர் மேல் நடக்கலாம் – தண்ணீரின்மேல் நடந்து

செல்லலாம், எட்டியும் தின்னலாம் – (கசப்பையுடைய) எட்டிக்காயையும் தின்னலாம், நெருப்பை நீர்போல் செய்யலாம் – (வெப்பமுடைய) தீயை

(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நெடிய பெருவேங்கையைக் கட்டியே

தழுவலாம் – நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்

நீள்அரவினைப் பூணலாம் – (நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்) மேலே அணிந்துகொள்ளலாம், பார்மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம்

– உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் பட்சமுடனே

உண்ணலாம் – அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், பாணமொடு

குண்டு விலகச் செய்யலாம் – அம்பையும் துப்பாக்கிபீரங்கி ஆகியவற்றின்

குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும்வண்ணம் புரியலாம், மரப்பாவை பேசப்பண்ணலாம் – மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம் – அழகிய காடியையும் கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், புத்தி சற்றும் இல்லாத மூடர்தம்

மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது – சிறிதும்

அறிவற்றபேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது, காண் :

Xxx

My Commentary

சில புலவர்கள் மனதை  அடக்குவது எவ்வளவு கடினம் என்பதற்கு செய்ய முடியாத விஷயங்களின் பட்டியலைத் தருகிறார்கள் ; இன்னும் சிலர் பெண்களை நம்பக்கூடாது என்பதற்கு ஒரு பட்டியலைத்

தருகிறார்கள். அவைகளை ஒப்பிடும்போது அம்பலவாண கவிராயர் சொல்லுவது நன்றாகப் புரியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடும் முட்டாள்களை பிடிவாதக்காரர்களையும் நாம் தினசரி வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.முட்டாள்களுக்கு அறிவுரையும் வழங்கக்கூடாது . தமிழிலும் ஒரு சொல் வழக்கு உண்டு. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவனைப் போல பாசாங்கு செய்வோரோனை எழுப்பமுடியாது ; முட்டாள்களைத் திருத்த முடியாது

वरं पर्वतदुर्गेषु

भ्रान्तं वनचरैः सह

न मूर्खजनसम्पर्कः

सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி- நீதி சதகம்

பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்..

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

குறள் 834, 835

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.

நாமும் முட்டாள்களைக் கண்டால் ஒடி ஒளிந்து கொள்ளுவோம்.

xxx

He who knows not and knows not………………………

An ancient saying from the Middle East says:

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows , is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

—subham—

Tags- முட்டாள், அறப்பளீசுர சதகம், பர்த்ருஹரி, பஞ்ச்ச தந்திரம், குறள் , திருத்த முடியாது , அம்பலவாணர், செயற்கருஞ் செயல்

Tamil Hindu Encyclopaedia 34- Siva, ருத்ர Rudra,  Tryambaka In Sangam Tamil Corpus (Post No.11520)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,520

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Lord Siva has been a very popular God among Tamils for over 2000 years. Two things are noticeable in Sangam Tamil books. His name SIVA did not appear anywhere in Sangam books. Like Rig Veda other names of him such as Rudra, Neelakanta, Tri Purantaka, Trayambaka, Crescent moon Bearer etc are used by Sangam Tamil poets. Another noticeable feature is his full appearance is described. This confirms that his paintings or idols or statues were there in nook and corner of Tamil Nadu. Later Tamil epic Silappadikaram confirmed the existence of temples of gods in Tamil Nadu.

Except Prof. Wilson, all others argued that the name SIVA சிவ did not find a place in the Rigveda. Sivaya Namah appeared first in the Yajur Veda (Rudram -Chamakam). In the same way Sivaya Namah appeared in Tamil only from sixth century CE only. Tamil saints Appar, Sambandar and Manikaavasagar spread it from the devotional period. No where in Sangam poems the name Siva occurred.

xxx

MR RUDRAKSHA

Another interesting feature is Tamils translated the Sanskrit names of SIVA verbatim.

ருத்ர- Rudra

Mr  Rudraksha of Kadiyalur கடியலூர் உருத்திரங்கண்ணனார்- Kadiyalur Uruththirankannanar is the author of Sangam Poems Perumpaanaatruppadai and Pattinappaalai. His name is the exact translation of RUDRAKSHA- Rudra+ Aksha.

கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

This is confirmed by the doyen of Tamil literature U Ve Sa and Kanchi Paramacharya (1894-1994). They translated Kamak Kanniyar (kaamakkanniyaar) as Kamakshi. Aksha= Eye.

So Sangam Tamil poets had the name of Kamakshi and Rudraksha

XXX

NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- Tamils were great masters of Hindu Puranas. When the Milky Ocean was churned by the Devas and Asuras, poison and Amrita came out. Lord Siva drank the poison to save the humanity, but Uma, his wife, got shocked and stopped it halfway through his throat. So he is called Blue Necked or Sapphire Necked.

xxx

TRI PURA ANTAKA த்ரிபுராந்தக- Lord Siva destroyed Three Space Stations of demons that were flying in the orbit . So he is known as the Destroyer of Three Forts

TRAYAMBAKA த்ரயம்பக- Lord Siva is famous for his Third Eye-  The Eye of Wisdom. When Manmata came to give him the sexual desire , he was burnt alive with his Wisdom Eye. This is called Third Eye. Tamils sang about it whenever they mentioned Manmata (Churner of Mind). So siva was called Three Eyed= TRAYAMBAKA= Three Eyed. Sangam poets translated it verbatim as முக்கண்ணான்.

xxx

ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon

Sangam Tamils knew the story of Descent of Holy River Ganga from the sky . To  control its tremendous force Siva took it in his hair and let it in manageable speed on land and so his hair is always wet/ ஈர்சடை அந்தணன்.

Even today in Tamil Nadu temples, the Abisheka of Siva is very popular. He is called Abhisheka Priya while Vishnu is called Alankara Priya

Siva likes bathing and Vishnu likes decorations (with dress and jewels).

Siva  is sporting the crescent moon on his forehead பிறைநுதல்.

Since Sangam Tamils described all these minute details, we are certain that they were seeing it in various places in pictures and idols.

xxx

MR RED

Red colour signifies auspiciousness and perfection.

Siva, Sivaniya (Tolkappiyar’s favourite word) ,Sivappu in Tamil are synonyms for red and perfection செம்மை, செந்தமிழ்.

Rudra is   also   Red, Red Faced in Sanskrit. The famous mantra Rudra and Chamaka of  Yajur Veda shows both these (auspiciousness, perfection) aspects. All orthodox Brahmins recite it every day and the bathing of God is done with this mantra in all Siva temples many times a day.

Tamil poets of Sangam Age never missed a chance in mentioning this RED colour of Siva. They called him Mr Red or Mr Red Body. Because of his rosy red body, his hair also is portrayed reddish in colour. They compared it with flame.

Two thousand years ago, Tamil poets described all Hindu gods in colourful pictures  which shows they were deep into Puranic lore. If one reads all these descriptions in Tamil one will date all the Sanskrit  Puranas in BCE period. Sanskrit Puranas must be very popular in BCE. All the Gods’ descriptions in Tamil are nothing but verbatim translations of those works.

TAMIL REFERENCES

Now I will give all Tamil references from Sangam Literature:

Lord Siva is RED like dusk

வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து

உரு உடன் இயைந்த தோற்றம் போல,

அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,

வந்த மாலை பெயரின், மற்று இவள்

அகநானூறு Akananuru 360

The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)

In the payer verse of Akananuru also, the poet said செவ்வான் அன்ன  மேனி– body like dusky red sky

Purananuru 56 portrayed him as one with flame coloured and loose/ untied hair புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை

Xxx

பிறைநுதல்

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,

கலித்தொகை 104-11

In these two short sentences Siva is shown with crescent moon sporting ,  three eyed, shiny ,light emitting , lowered/untied hair.

Xxxx

ARUDRA STAR GOD

Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20

பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150

To be continued…………………………….

 tags-siva, rudra, trayambaka, சிவன், ருத்ரன், முக்கண்ணான் , செம்மேனி அம்மான், உருத்திரங் கண்ணனார் , 

எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? (Post No.11,519)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,519

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மஹாபாரத வழிகாட்டி

எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? 

ச.நாகராஜன்

எந்த தேசத்தில் வசிக்க விரும்ப வேண்டும் என்பதைப் பற்றி நாரத மஹரிஷி காலவருக்குக் கூறுகிறார்.

இந்த சம்வாதம் சாந்தி பர்வத்தில் 293வது அத்தியாயத்தில் காணலாம்.

அவற்றில் சில முக்கிய கருத்துக்களைக் கீழே காணலாம்:

சிஷ்யோபாத்யாயிகாவ்ருத்திர்யத்ர ஸ்யாத் சுசமாஹிதா |

யதாவச்சஸ்த்ரசம்பன்னா கஸ்தம் தேஷம் பரித்யஜேத்  ||

எந்த தேசத்தில் குரு சிஷ்யர்களுடைய செய்கையானது சாஸ்திரப்படி ஏற்பட்டதும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்டதுமாய் இருக்கிறதோ அந்த தேசத்தை எவன் தள்ளுவான்?

ஆகாஷஸ்தா த்ருவம் யத்ர தோஷம் பூயுவிபஸ்சிதாம் |

ஆத்மபூஜார்பிகாமோ வை கோ வஸேத் தத்ர பண்டித: ||

எந்த இடத்தில் வெளியிலுள்ளவர்கள் வித்வான்களுக்கு நிச்சயமாக தோஷத்தைச் சொல்லுவார்களோ அந்த தேசத்தில் தனக்கு கௌரவத்தை விரும்பும் எந்தப் பண்டிதன் தான் வசிப்பான்?

 யத்ர சம்லோடிதா லுப்தை: ப்ராயஷோ தர்மசேதவ: |

ப்ரதீப்தமிவ சைலாந்தம் கஸ்தம் தேசம் ந சம்த்யஜேத் ||

எந்த தேசத்தில் லோபிகளாலே தர்மத்தின் அணைகள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்த தேசத்தை, முந்தானை பற்றி எரிகின்ற ஆடையைப் போல யார் தான் விடமாட்டான்?

 யத்ர தர்மமநாஷங்காச்சரேயுர்வீதமத்ஸரா: |

பவேத் தத்ர வஸேஸ்ஸைவ புண்யஷீலேஷு சாதுஷு ||

எந்த தேசத்தில் பயமும் மத்ஸரமுமின்றி ஜனங்கள் தர்மத்தைப் பின்பற்றுகின்றார்களோ அங்கே பிறக்க வேண்டும். புண்ணியசீலர்களான சாதுக்களிடத்தில் வசிக்க வேண்டும்.

தர்மமர்தோநிமித்தம் ச சரேயுர்யத்ர மானவா: |

ந த்ஜாமமிசேவேஜ்ஜாது தே ஹி பாபக்ருதோ ஜனா: ||

எந்த தேசத்தில் பணத்தை அடைவதற்காக தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களிருக்கும் இடத்தின் அருகே ஒரு போதும் வசிக்கக் கூடாது. அவர்கள் பாவத்தை அல்லவா செய்கின்றனர்!

எந்த இடத்தில் ஜனங்கள் பாவத் தொழிலால் உயிர் வாழ விரும்புகிறார்களோ அந்த இடத்திலிருந்து பாம்பு இருக்கும் வீட்டை விட்டு ஓடுவது போல  வேகமாக ஓட வேண்டும்.

யத்ர ராஜா தர்மநித்யோ ராஜ்ய தர்மேண பாலயேத் |

அபாஸ்ய காமான் காமேஷோ வஸேத் தத்ரவிசாரயன் ||

எந்த நாட்டில் எல்லா செல்வங்களும் உள்ள அரசன் காமங்களை விலக்கி தர்மத்தை நித்தியமாகக் கொண்டு தர்மத்துடன் நாட்டை பரிபாலனம் செய்வானோ அந்த நாட்டில் விசாரிக்காமல் வசிக்க வேண்டும்.

யதாஷீலதா ஹி ராஜான்: சர்வான் விஷயவாஸின: |

ஸ்ரேயஸா யோஜயத்யாஷு ஸ்ரேயஸி ப்ரத்யுபஸ்திதே ||

அரசர்களின் சீலத்துக்கும் ஸ்வபாவத்திற்கும் தக்கபடி மக்களும் இருப்பார்கள் அல்லவா? தமக்கு நன்மை ஏற்பட்ட போது தேசவாசிகளான அனைவரையும்  சீக்கிரம் ச்ரேயஸோடு சேர்ப்பிப்பார்கள்.

இப்படி ஒரு நீண்ட உரையை நாரதர் காலவரிடம் நிகழ்த்தினார்.

(அதன் சாரம் மேலே தரப்பட்டுள்ளது.)

தர்மத்துடன் வாழும் அரசன் இருக்கும் இடத்தைச் சேர்.

வித்வான்கள் மதிக்கப்படும் இடத்தைச் சேர்.

எங்கே சாதுக்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே சேர்.

தர்மத்தை தர்மத்திற்காகச் செய்ய வேண்டுமே அல்லாது பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யக் கூடாது.

அரசன் தர்மத்துடன் நாட்டை அரசாண்டால் அவனிடமிருக்கும் அனைத்து நலன்களும் மக்களையும் சேரும்.

எந்த நாடு மேன்மையை அடையும் என்பதற்கான காரணங்களை தேவரிஷி நாரதர் கூறுவது பொருள் படைத்த ஒன்றாக அமைகிறது.

***

Hindus knew about ETs, UFOs, Time Travel and Nuclear Weapons (Post No.11,518)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,518

Date uploaded in London – 7 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx

Hindus knew about ETs, UFOs, Time Travel and Nuclear Weapons?

Is it ? Don’t bluff. Is there any evidence?

Yes; there is evidence. Read my books and decide.

Is Brahmastra a Nuclear Weapon?

CONTENTS

1.Is Brahmastra a Nuclear Weapon?

2.What India could teach NASA Scientists?

3.Hindus’ Future Predictions- Part 1

4.Hindus’ Future Predictions- Part 2

5.What Hindus know that Scientists don’t know!

6.Medical Science solves Ten Mysteries in the Mahabharata !

7.Mahabharata Story is True! Man Gives Birth to Babies!

8.CLONING IN ANCIENT HINDU LITERATURE

9.Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity

10.MY GREAT DISCOVERIES SO FAR! – Part 1

11.MY GREAT DISCOVERIES SO FAR! – Part 2

12.TAMILS’ GREAT DISCOVERY ABOUT SEA AND OCEAN

13.Hindus invented Calling Bell !

14.Why do Hindus Worship Bell?

15.Hindu Wisdom: Copper kills Bacteria!

16.Hydro Therapy in Hindu Scriptures

17.Tomatoes prevent cancer

18.Power of Holy Durva Grass

19.Why do Hindus Worship Vanni /Shami Tree on Vijaya Dasami Day?

20.Iodine Wonders- Napoleonic Wars and Secret Rains

     ***

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

CONTENTS

1.Space Shuttle in Hindu Literature !

2.TIME TRAVEL by TWO TAMIL SAINTS

3.Do Hindus Believe in ETs and Alien Worlds?

4.Five Beautiful Stories on Hindu Concept of Time

5.EINSTEIN THEORIES SMASHED BY HINDUS ?

6.Black Hole in Bhagavad Gita and Manu Smrti!!

7.OLDEST ROBOT IN THE WORLD WAS A HINDU ROBOT !

8.Great Engineers of Ancient India

9.Amazing power of Human Mind

10.You become what you think!

11.Famous Yogi Explains Miracles- Part 1

12.Famous Yogi Explains Miracles- Part 2

13.Hindu God with “an I Pod”

14.Miracles by the Blind & Oldest Organ Donation

15.HINDUS DISCOVERED HOMEOPATHY

16.HERBAL MYSTERY IN CHANAKYA NITI!

17.How Did a Pandya King Get a Golden Hand?

18.Brain Surgery in Ancient India: Bhoja and Indus Valley

19.Golden sayings in Ayurveda Books

20.HINDUS DISCOVERD ACUPUNCTURE

21.God with a Laser Weapon

22.Head towards North is wrong

23.SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

24.SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!!

25.DIWALI FIRE CRACKERS- ‘TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION’

26.Hindus’ Strange Medicines! Cow’s Urine, Tiger Teeth, Elephant’s Hair, Deer Skin

******************

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

26 ENGLISH BOOKS WRITTEN BY ME

(1).Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain &

Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17.Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18. Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21. Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26. Woman is an Adjective, Man is a Noun

–subham—

Tags- My books, ET, Time Travel, UFO, Aliens, Nuclear weapons

Learn Tamil Verbs- 30 ;அழி, பழி, கிழி ,விழி ,சுழி (1000 Tamil Verbs)—Post No.11517

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,517

Date uploaded in London – 7 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

In lesson 28 we learnt 31 SEY ending verbs; in lesson 29 we learnt 31 KOL ending Tamil verbs.

Now I will give similar sounding  14 verbs but conjugated differently because they don’t belong to the same class of Tamil verbs.

xxxx

Z=L ;Special L of Tamil language (similar to rolling R of French language) is written with Z (not Chola empire but Choza empire); it is a retroflex letter; you curve your tongue and touch the back of the upper part of your mouth. Eg.Pazam= Fruit

xxx

Azi அழி (second class, Sixth class) , Rub or destroy  in one class of verb

சுவரில் எழுதியதை அழி

Suvaril – ezuthiyathai – azi

In the wall—that which is written—rub

Rub what is written on the wall

கண்ணகி மதுரையை அழித்தாள்

Kannaki — mathuraiyai— aziththaal

Kannaki — Madurai + ai— destroyed

Kannaki destroyed Madurai (Silappadikaram story)

ராவணன் பெண்ணால்  அழிந்தான் (second class)

Ravanan – pennaal —- azainthaan

Ravana —- by woman — was destroyed / got destroyed

Ravana was destroyed by woman   9because of woman)

xxx

Pazi பழி, blame someone, discredit

kizi கிழி (second class, Sixth class), tear, rip or torn

துணியைக் கிழி

Thuni+ai —  kizi

Cloth   =ai— rip, tear, cut

Tear the cloth or cut the cloth

தையல்காரர்கள் துணியைக் கிழிக்கிறார்கள்

Thaiyalkaararkal— thuniyaik— kizikkiraarkal

Tailors —- cloth +ai —- tearing/cutting/ripping

Tailors are cutting the cloth ( to stitch  a blouse)

என் சட்டை கிழிந்தது

En —sattai —–kizinthathu

My —shirt— was torn

xxx

vizi விழி, wake up

suzi சுழி,draw  zero, blank, show disapproval

mazi மழி , shave

xxxxx

kazi கழி (Second class, Sixth class), deduct, pass time or suffer diarrhoea

நூறிலிருந்து 33ஐ க்கழி

Noorilirunthu— 33 ai — kazi

100 from—-33 ai—- deduct

Deduct 33 from 100

எப்படி நேரத்தைக் கழிப்பது என்றே தெரியவில்லை

Eppadi —neram +ai—– kazippathu —endre — theriyavillai

How – time— to pass – not at all – don’t know or did not know

I don’t know how to spend or pass time at all.

In Tamil past negative and Present negative are same.

So Don’t know or Did not know is fine.

அவன் காரத்தைச் சாப்பிட்டுவிட்டு கழிந்தான் (second class)

Avan – kaaraththai — saappittuvittu—kazinthaan

He – spicy food- eating – purged/ suffered diarrhoea

He suffered from diarrhoea after eating hot/spicy (food)

Xxx

Vazi வழி- wipe up, scrape or Ooze, trickle, overflow

பாத்திரம் நிரம்பி தண்ணீர் வழிந்தது (second class)

Paaththiram— nirambi —vazinthathu

Vessel -filled—overflowed

பூஜாரி  சிலையிலிருந்து சந்தனத்தை வழித்தார்

Poojaari/priest – silaiyilirunthu – santhanaththai — vaziththaar

Priest – statue from — sandal+ai — wiped up/scraped

The priest wiped/took the sandal from the statue

xxx

polzi பொழி, rain, shower

pizi பிழி, squeeze, press, take juice out of fruit, wring

ozi ஒழி , get lost, wipe, clean

muzi முழி, wake up, blink

kuzi குழி , make a pit, form a hollow, form dimple

mozi மொழி , speak, say (used in formal way of writing only)

xxx

Examples of Second Class and Sixth Class Tamil Verbs

Best example for second class verbs is Utkaar/sit

Best example for sixth class verbs is Paar/see and Samai/cook

to be continued………………

tags—Vazi, Pazi, kizi, suzi, Tamil verbs, Second class, Sixth Class

நீங்கள் பிரமனா,  விஷ்ணுவா, சிவனா ? புது CCTV ‘காமெரா’ சொல்லிவிடும்! (Post.11,516)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,516

Date uploaded in London – 7 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாண கவிராயர் ஒரு புது உத்தி (CCTV CAMERA) கண்டுபிடித்துள்ளார். ஒரு ஆள் இந்திரன் போல் புகழ்பெற்றவரா அல்லது உயர் நிலையில் உள்ள சிவன் போலப் புகழுடையவரா என்று அறிய அவர் ஒரு எடைபோடும் மிஷின் அல்லது CCTV காமெரா வைத்துள்ளார். நீங்கள்

10 பேருக்கு உதவினால் தேவன்

100 பேருக்கு உதவினால் இந்திரன்

1000 பேருக்கு உதவினால் பிரம்மா

10,000 பேருக்கு உதவினால் விஷ்ணு

எல்லோருக்கும் எப்போதும் உதவினால் சிவ பெருமான்

யார் உதவியையும் நாடாமல் தனக்குத் தானே வாழ்ந்து கொள்பவன் நல்ல மனிதன்

ஆகையால் கொல்லி மலை வாழ் சதுரகிரி உறை வாசனாகிய சிவனைப் போற்றும் அம்பலவாண கவிராயர் வைத்திருக்கும் சி சி டிவி CCTV Camera காமெரா உங்களை படம்பிடித்துக் கொண்டு இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 14. மேன்மேல் உயர்ச்சி

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்

     சாமர்த்தியம் உளபுருடன் ஆம்

  சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க

     தரணிபுகழ் தருதேவன் ஆம்.

பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்

     புரப்பவன் பொருவி லிந்த்ரன்,

  புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று

     புண்யவா னேபிரமன் ஆம்

நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து

     ரட்சிப்ப வன்செங் கண்மால்,

  நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு

     நரனே மகாதே வன் ஆம்,

அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அல் மட்டுவார் குழலி பாகனே – இருள் போலக்

கருநிறமான, மணமிக்க, நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை

இடப்பாகத்தில் உடையவனே!, ஏகனே – தனி முதல்வனே!, அண்ணல் –

தலைமையிற் சிறந்தவனே, எமது……….தேவனே!இரவாது தன்மட்டில்

சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உள புருடன் ஆம் – (பிறரை) நாடாமல்

தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமுடைய ஆடவனாவான்,

சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க தரணி புகழ்தரு தேவன்

ஆம் – எப்போதும் பதின்மரை ஆதரிப்போன் இவ்வுலகு புகழும் சிறந்த அமரன் ஆவான், மட்டிலாமல் பொன் ஈந்து ஒரு நூறுபேரைப் புரப்பவன்

பொருஇல் இந்திரன் – அளவின்றிப் பொருள் கொடுத்து நூறுபேரைக்

காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான், புவிமீதில் ஆயிரம்பேர்

தமைக் காப்பாற்று புண்ணியவானே பிரமன் ஆம் – உலகில் ஆயிரவரை

ஆதரிக்கும் அறத்தலைவனே நான்முகன் ஆவான், நன்மைதரு

பதினாயிரம் பேர்தமைக் காத்து ரட்சிப்பவன் செங்கண்மால் – நன்னெறி

செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாறியருள்வோன் செந்தாமரைக் கண்ணனான திருமால் ஆவான், நாளும் இவன்மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவும் நரனே மகாதேவன் ஆம் – எந்நாளும்

அவனைவிட மிகுதியாக அளவற்றவர்க்குக் கொடுக்கும் மனிதனே

மகாதேவன் ஆவான்.

xxxx

இதை ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்துடன் ஒப்பிடலாம்

ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒருவரைத் தியாகம் செய்யத் தயாராக இரு; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்; ஒரு ராஜ்யத்தைக் காக்க ஒரு கிராமத்தைத் தியாகம் செய்; ஒருவனின் ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்!

த்யஜேதேகம் குலஸ்யார்தே க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |

க்ராமம் ஜனபதஸ்யார்தே ஹ்ருதாத்மார்தே ப்ருதிவீம் த்யஜேத் ||

त्यजेत् कुलार्थे पुरुषं ग्रामस्यार्थे कुलं त्यजेत् |

ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ||

renounce one person for the sake of the family,

a family for the sake of village;

village for the sake of country and

even the [kingdom of] earth for one’s own sake.

இதில் வரும் கணக்கு

ஒரு குடும்பத்துக்காக  ஒரு மனிதன் பலி

ஒரு கிராமத்துக்காக  ஒரு குடும்பம்  பலி

ஒரு நாட்டுக்காக ஒரு கிராமம்  பலி

ஆன்ம முன்னேற்றத்துக்காக ஆசை அனைத்தையும் பலி கொடு

பெரியோர்கள் வெவ்வேறு அளவுகோலை,   எடைபோடும் எந்திரத்தைப் பயன்படுத்துவதை இது காட்டுகிறது.

Xxxx

வாதக்கோன்வையக்கோன்ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816)

Written by london swaminathan

Date: 16 May 2016; Post No. 2816

ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்? 

வாதக்கோன் நாளை என்றான்வையக்கோன் பின்னையென்றான்

ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்

வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்

ஏதக்கோன் இல்லை இனிது

பொருள்:

நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.

கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.

 ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.

 இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.

xxxx

உத்தமன் யார்மத்யமன் யார்அதமன் யார்? (Post No.2894)

Written by London swaminathan 

Date: 14 June 2016; Post No. 2894 

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்). 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி 

அறிஞர்களின் அளவுகோல்கள் வெவ்வேறு என்பதை அறிய மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் உதவும்

 —subham—

Tags- உதவி 100 பேர், 1000 பேர், இந்திரன், பிரம்மா, திருமால், அம்பலவாணர் , அறப்பளீ

ராமாயணத்தில் நதிகள் – 5 (Post.11,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,515

Date uploaded in London – 7 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி 

ராமாயணத்தில் நதிகள் – 5

ச.நாகராஜன் 

கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்: 

3. கங்கை

‘கங்கை என்னும் கடவுள் திரு நதி’ என்று கம்பன் போற்றும் தெய்வத் திருநதியைப் பற்றி பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.

கம்ப ராமாயணத்தில் இரண்டாவது காண்டமாக அமையும் அயோத்தியா காண்டத்தில் ஆறாவது படலமாக அமைவது கங்கைப்படலம்.

இதில் அருமையான 77 பாடல்கள் உள்ளன.

இவை அனைத்தையும் படித்து மகிழ்வதே சாலச் சிறந்தது. என்றாலும் இந்தத் தொடரில் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

பரிதி பற்றிய என்று தொடங்கும் பாடல் 9இல் கம்பன். –

‘சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும் விரி திரைப் புனல் கங்கை”

என்று கங்கை பற்றிக் குறிப்பிடுகிறான்.

வேதங்களைப் பயின்று மேம்பாடுற்ற குற்றமற்ற முனிவர் சூழ்ந்து, தங்கப் பெற்ற பரவுகின்ற அலை நீரை உடைய கங்கா நதி” என்பது இதன் பொருள்.

அடுத்த பாடலில்

கங்கை என்னும் கடவுள் திரு நதி

தங்கி வைகும் தபோதனர் யாவரும்

எங்கள் செல் கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகன் காண வந்து அண்மினார்

என்கிறான்.

 கங்கை என்று சொல்லப்படுகின்ற தெய்வத்தன்மையுள்ள சிறந்த நதிக் கரையில் தங்கி வாழ்கின்ற தபஸ்விகள் அனைவரும் ‘நாங்கள் தவம் செய்து அடையும் புகலிடமாகிய பரம்பொருள் இங்கேயே வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து அழகிய திருக் கண்களை உடைய இராமபிரானைத் தரிசிப்பதற்காக வந்து நெருங்கினார்கள்.

 இப்படி தபஸ்விகள் மட்டுமல்ல, கங்கா நதியே இராமபிரானை கைகூப்பி வணங்கிப் போற்றுகிறாள்:

பாடல் 17 : – 

கன்னி நீக்கு அருங் கங்கையும் கை தொழாப்

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர்; யானும் இன்று என் தந்த

உன்னின் நீக்கினன் உய்ந்தனனெனால் என்றாள்

  அழியாத் தன்மையின்று நீங்குதல் இல்லாத ஜீவ நதியான அந்த கங்கை இராமபிரானை கை கூப்பி வணங்கிக் கூறுகிறாள் :

 “ உலகத்தவர் சொல்ல முடியாத மிகுதியான பாவத்தை என்னிடத்தில் மூழ்குவதால் போக்கிக் கொள்வர்; இன்று இப்போது அந்தப் பாவங்களை எல்லாம் திரிவிக்கிரமனாகிய ஶ்ரீ பாதத்திலிருந்து என்னை உண்டாக்கிய உன்னாலே நீ என்னிடத்து மூழ்குவதால் போக்கினவளாய் உய்ந்தேன்”

கங்கையை ‘தள்ளு நீர்ப் பெருங்கங்கை” (பாடல் 19) – மோதும் தன்மையை உடைய நீரையுடைய சிறந்த கங்கை அலை” என்கிறான் கம்பன்.

கங்கையில் சீதை, ராமன் குளித்ததைப் பாற்கடலுடன் வர்ணிக்கும் கம்பன், சீதைகங்கையில் குளித்ததால், கங்கை நறு மணம் பெற்றாள் என்கிறான்.

(நாவி நாண்மலர் கங்கையும் நாறினாள்)

 இராமனே வந்து மூழ்கியதால் கங்கா நதிக்கு மகிமை கூடுகிறதாம்.

இங்கு கம்பன் சமத்காரம் தோன்ற ஒரு கவின் மிகு சொற்றொடரைக் கையாள்கிறான் :

“கங்கையிற்றருங் கங்கையினாடினான்”

 கம் – நீரினால்;

கையின் – கையின் மூலமாக;

தரும் – உண்டாக்கிய

கங்கையின் – கங்கா நதியில்

ஆடினான் – நீராடினான்.

கம் + கை = கங்கை – கையினால் உண்டாக்கிய கங்கையில், அந்த ராமனே வந்து மூழ்கினான் என்பது நிருத்தி அலங்காரம் என்னும் பிரிநிலை நவிற்சி அணி ஆகிறது. 

அடுத்து இராமனைப் பார்க்க குகன் வருகிறான். அவனை கம்பன், ‘கங்கையின் ஆழமிட்ட நெடுமையினான்’ – கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன்’ என வர்ணிக்கிறான்.

 அடுத்து அயோத்தியா காண்டத்தில் 11வது படலமாக அமைவது குகப்படலம்.

இதிலும் கங்கா நதியின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது.

கம்பன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். சோழ நாட்டின் பெருமையைப் பேசாமலிருக்க முடியுமா, என்ன?

‘பூவிரி பொலன் கழல் பொரு இல் தானையான்

காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீ இ’  (குகப்படலம் பாடல் 1)

 என்று கூறுகிறான்.

“அழகு மிக்க பொன்னால் ஆகிய வீரக் கழலையும் ஒப்பில்லாத சேனையையும் உடைய பரதன் காவேரி பாயும் சோழ நாட்டை ஒத்த கழனிகளை உடைய கோசல தேசத்தை விட்டு நீங்கி” என்பது இதன் பொருள். 

கோசல தேசம் காவிரி நாடு போல இருந்ததாம். என்ன அழகிய புகழ் மொழி?! 

                          ****                   தொடரும்

தமிழே, தமிழே! உயிரே ,உயிரே!! (Post No.11,514)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,514

Date uploaded in London – 6 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்,

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

என்று பாரதி சொன்னான்

நானும் தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும். என்று எண்ணி பிபிசி தமிழோசையில் லண்டனிலிருந்து தமிழ் ‘ஓசை’ செய்தேன் . இப்போதும் லண்டனிலிருந்து ஓசை செய்கிறேன். இதோ என்னுடைய 85 புஸ்தகங்களில் தமிழ் பற்றி சில

:–

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

பொருளடக்கம்

1.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?

2.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2

3.வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று

4.தமிழில் ஆறு அவ்வையார்கள் !

5.ஒளவையார் போடும் புதிர்கள்

6.தமிழ் ஒரு அதிசய மொழி!

7.அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

8.“நான்மறை” பற்றி குழப்பம் வேண்டாம்

9.தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார்?

10.இரண்டு எதுகை அகராதிகள் !!

11.பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் !

12.சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே

 13.கடவுள் தந்த இரண்டு மொழிகள்

14.கரிகாலன் வரலாறு கூறும் சுவைமிகு பாடல்கள்!

15.பாணினியும் கரிகால் சோழனும்

16.நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்?

17.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

18.லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்?

19.தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’!

20.சங்கத் தமிழில் நகைச்சுவை

21.வள்ளுவர் ‘காமெடி’: சிரிப்பு எத்தனை வகை?

22.தமிழ் மொழி தொடர்பான எனது முந்தைய மூன்று நூல்களின் பொருளடக்கம்

**********************

18.திராவிடர்கள் யார்குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

(தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.தமிழ் இனத்தின் வயது என்ன?

2.சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி)

3). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 1

4). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 2

5.குமரிக்கண்டம் அட்லாண்டிஸா?

6.தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி?

7.கபாடபுரம் இருந்ததற்கு சான்று

 8. மூன்று தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையாஉண்மையா?

9.கடலில் தோன்றும் மர்மத் தீ-1

10 .கடலில் தோன்றும் மர்மத் தீ-2

11.நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!!

12.மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்

13. திராவிடர்கள் யார்?

14. “மிலேச்ச” என்றால் என்ன?

15. காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை

16.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !

17.‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’

18. ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்

19.சங்ககால ஜாதிகள் “இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”

20. தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?

21.நீ தமிழனா வடுகனா ?

22.மேல் ஜாதிகீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!

23.பஞ்ச திராவிடர்பஞ்ச கௌடர்பஞ்சதந்திரம்

**********************

19.தொல்காப்பிய அதிசயங்கள்

( 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு )

பொருளடக்கம்

1.தொல்காப்பிய அதிசயங்கள்

2.தொல்காப்பிய அதிசயங்கள் – 2

3.தொல்காப்பியர் காலம் தவறு -1

4.தொல்காப்பியர் காலம் தவறு –2

5.தொல்காப்பியர் காலம் தவறு  -3

6.தொல்காப்பியர் காலம் தவறு -4

7.தொல்காப்பியர் காலம் தவறு -5

8. மீசை வைத்த பிராஹ்மணன் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? எழுதினாரா?

9.தொல்காப்பியன் புகழ்

10.தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா

11.தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!

12.தொல்காப்பிய – பாணினீய 3 ஒற்றுமைகள்

13.தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’!

14.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

15.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை!

16.தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

17.‘ச’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?

18.தொல்காப்பியத்தில் வருணன்

19.தொல்காப்பியத்தில் இந்திரன்

20.தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

21.பலராமனின் பனைக்கொடி

22..தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—1      

23.தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2      

24.தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள்

25.தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை!

26.‘எல்லா உயிர்க்கும் இன்பம்’- என்று தொல்காப்பியர் எப்படி செப்பினார் ?

27.குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும்

28.தொல்காப்பியத்தில் (Biology)  உயிரியல் விஞ்ஞானம்!

29.தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள்

30.தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை

31.தொல்காப்பியம் பற்றிய 2 வினோத புஸ்தகங்கள்

32.இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை?

(தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி, தொல்காப்பிய பொன்மொழிகள்

முதலிய கட்டுரைகள் என்னுடைய வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன)

xxxx

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

1.தமிழ் ஒரு கடல்!!

2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

3.வரலாறு எழுதிய முதல் தமிழன்

4.வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள்.; 3000 ஆண்டு தமிழ் வரலாறு

5.சோழர்கள் தமிழர்களா?

6.ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

7.அதிசயப் பறவைத் தமிழன்!!!

8.தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

9.ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டிய மன்னன் கொன்றது ஏன்?

10.தமிழர்களின் தழை உடை-1

11.தமிழர்களின் தழை உடை-2

12.நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’

13.எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!!

14.தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து!!

15.டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள்

16.வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி

17.இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை!

18.தமிழன் கண்ட 3 அற்புத “மை”

19.ஒன்றரைக் கண்ணன்! அப்பர் கிண்டல்!

20.பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும்

21.வீரத் தாயும் வீர மாதாவும்

22.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1

23.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2

24.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 3

25.ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

26.தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே!

27.புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றி அதிசயச் செய்திகள்

28.அக்கரைக்கனி அளித்த சக்கரைக்கட்டி

29.சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா?

30.சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண்

31.கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல்

32.சங்க இலக்கியத்தில் வேளாப் பார்ப்பான்

33.வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!!

34.பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்!

35.இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!!

36.வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?

37.முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை பாட்டு

xxx

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

tags- My books, on Tamil,

என்ன என்ன செய்ய வேண்டும் :அறப்பளீச்சுர சதகம் அறிவுரை (Post No.11,513)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,513

Date uploaded in London – 6 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Arappalichura Satakam verse 13- my commentary

13. செய்ய வேண்டும்

வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற

     வழியிலே நிற்க வேண்டும்;

  வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி

     வளரறஞ் செய்ய வேண்டும்;

சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்

     செய்யா திருக்க வேண்டும்

  செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு

     தியாகம் கொடுக்க வேண்டும்;

ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி

     நன்றாய் நடத்த வேண்டும்;

  நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி

     னாலும்மிகு பத்தி வேண்டும்

ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!

     அனக! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

இ-ள்.) ஆலம் அமர்கண்டனே – நஞ்சு பொருந்திய

கழுத்தையுடையவனே! பூதி அணி முண்டனே – திருநீறு பூசிய நெற்றியை

யுடையவனே!, அனக – குற்றம் இல்லாதவனே!, எமது…….. தேவனே!,

வாலிபந்தனில் வித்தை கற்கவேண்டும் – இளமையிலேயே கலைகளைக் கற்றல் வேண்டும், கற்ற வழியிலே நிற்கவேண்டும் – கற்றவாறே நன்னெறியிலே நடத்தல் வேண்டும், வளைகடல் திரிந்து பொருள்

தேடவேண்டும் – (உலகை) வளைந்திருக்குங் கடலிலே (கலம் ஊர்ந்து) அலைந்து பொருளைச் சேர்த்தல் வேண்டும். தேடி வளர் அறஞ் செய்யவேண்டும் – சேர்த்துப் பெருகும் அறங்களை இயற்றல் வேண்டும்சீலம் உடையோர்களைச் சேரவேண்டும் – ஒழுக்கம் உடையவர்களிடம் நட்புக் கொள்ளவேண்டும்பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் – (அவர்களை) நீங்காது இருத்தல் வேண்டும். செந்தமிழ்ப் பாடல் பல கொள்ளவேண்டும் – பல செந்தமிழ்ப் பாக்களைப் (புகழ் மாலையாக) ஏற்றல் வேண்டும்கொண்டு தியாகம் கொடுக்கவேண்டும். ஏற்றுப் (புலவர்களுக்கு) நன்கொடை அளித்தல் வேண்டும். ஞாலம்மிசை பல தருமம் நாட்டவேண்டும் – உலகிலே பல அறநிலையங்களை நிறுவுதல் வேண்டும். நாட்டி நன்றாய் நடத்தவேண்டும் – நிறுவியதோடு நில்லாமல்அவற்றை ஒழுங்காக நடத்தல் வேண்டும். நம்பன் இணையடி பூசை பண்ணவேண்டும் – சிவபெருமானாகிய (உன்) இரு திருவடிகளினும் வழிபாடு செய்தல் வேண்டும், பண்ணினாலும் மிகுபத்தி வேண்டும் – வழிபாடு செய்தாலும் பேரன்பு வேண்டும்.

     (க-து.) இங்கே கூறியவாறு கல்வி கற்றல் முதலியவை வேண்டும்.

இதில் சொன்ன எல்லா விஷயங்களும் மிக மிக எளிய அறிவுரைகள் . அவ்வையாரின் ஆத்திச் சூடியிலும் அதிவீர ராம பாண்டியனின் வெற்றிவேற்கையிலும் காணப்படும் அறிவுரைகளே !

இளமையில் கல் ,

கற்கக் கசடற கற்பவை கற்ற பின்

நிற்க அதற்குத் தக (குறள் )

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

குந்தித் தின்றால் குன்றும் கரையும் (தமிழ்ப் பழமொழி)

xxxx

பாரதியாரும் கொஞ்சு தமிழில் அழகாக இவைகளை அடுக்குகிறார்:

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்

இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்

சிந்தையே இம்மூன்றும் செய்

Xxx

பாரதியின் பேராசை

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!

பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்.  குறள் 1062)

பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?

தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.

அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!

இன்னொரு இடத்தில்,

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

Xxx

தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பம் செய்திடுவேன்;

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி

இராதென்றன் நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி

வேல் சக்தி வேல் சக்தி வேல்!

Xxxx

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

Xxx

அபிராமி பட்டரும் நல்லோர் சேர்க்கை, கடவுள் பக்தி பற்றிப் பாடுகிறார்

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

Xxxx

 இறுதியாக வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சொன்னதையும் ஒப்பிட வேண்டும்

 ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

xxxx

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத

இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்

இடுகின்ற திறமும்இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள

நினைவிடா நெறியும்அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று

நெகிழாத திடமும்உலகில்

xxx

பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்

பார்முகம் பார்த்திரங்கும்

பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்

—- தெய்வ மணி மாலை , வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்

Xxx

இதிலுள்ள ஒரு விஷயம் உலகில் வேறு எங்கும் ஆதிகாலத்தில் இல்லை ; அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்தல் என்று பாரதியாரும் குறிப்பிடுவார் ; ஊருக்கு ஊர் தர்ம சத்திரங்கள் நிறைந்த நாடு இந்தியாதான். மனிதர்களுக்கு மட்டுமின்றி பிராணிகளுக்கு ஆஸ்பத்திரிகளையும் நிறுவினர் சமண மதத்தினர். அசோகர் கல்வெட்டு முதல் சத்திரங்கள் பற்றி அறிகிறோம். அவற்றைப் பராமரிக்க மன்னர்கள் மான்யம் கொடுத்ததையும் கல்வெட்டுகள் பகர்கின்றன. மாடுகள் முதுகைச் சொறிந்து கொள்ள கற்கள் நடவேண்டும் என்றும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளது.

Xxx  subham xxxxx

Tags-   என்ன வேண்டும் , அறப்பளீசுர சதகம்

Tamil Hindu Encyclopaedia part-33; அவதாரங்கள் (Post No.11,512)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,512

Date uploaded in London – 6 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

In part 32 we looked at Varaaha Avatar, Vaamana/Trivikrama Avatar and Swan/Anna Avatar. There are more Avataras (Incarnations of Vishnu) in Sangam Tamil literature. Nara Simha (Man- Lion) Avatar நரசிம்மாவதாரம் is one of the important avatars  among more than 20 Avatars/ அவதாரங்கள்

of Vishnu.

Narasimha Avatara

Pari. 4-10/21 gives the story briefly.

You, red eyed one! for the sake of Prahlada who was devoted to you, appeared from inside the pillar with thundering roar and tore to pieces his father (Hiranyakasipu) with your sharp teeth ,who troubled and tortured the boy (his own son).

Those who read the last four lines in the above passage will see Bharatiyar’s UUZIK KUTHU (Vedipadu mandath thidi pala thaalam poda வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட)

Xxx

Parasu Raama

Parasuraama Avatara பரசுராம அவதாரம் is reported in Akanaanuru, which is a secular book about family and sex life of Tamil Hindus. The Yaga performed by Parasuraama is used as a simile. It says The beauty’s chest is not easily accessible like the Yupa pillar secured with ropes. That pillar came about after the rare Yaga performed by the Tall One with Mazu Weapon (Parasu Raama) who killed all the kings on land/earth.

Parasurama avenged his father’s death by killing 21 generations of Kings. He is called Rama with  Ax/Parasu to differentiate from Dasaratha Rama and Bala Rama. Tamil commentators add that a big Yaga was performed by him at Sellur. No other information is available about the Yaga or Sellur.

Xxx

Ramayana – Raamaavataara

Rama of Ramayana figured in two poems of Aka and Pura Nanuru verses. Strangely those episodes are not in Tamil or Sanskrit Raamaayanaas.

Pura Naanuuru 378 gives a simile where the womenfolk of bard community wore the jewels given by the Choza king in wrong places in their bodies because they were so poor that they never had seen such jewels in their life. This is similar to the act of monkeys which found the jewels thrown by Sitaa from the air plane of Raavana when he abducted her. They also wore them at the wrong places.

Aka 70 also reports a rare episode. When Rama was holding a high level security consultation meeting with Tamil engineers Neelan and others about building a bridge across the sea, the birds in the big banyan tree were making big noise. Rama ordered them to keep quiet and they miraculously fell to silence.

The interesting things in these two poems is Rama and Sita were mentioned by name and Ravana was portrayed as a demon. Rama is given the epithet Vicorious Rama. So Tamil Hindus held Rama in high esteem and Ravana as a demon. This explodes all the political Dravidian myths of projecting Ravana in good light. ராமாவதாரம்அரக்கன் ,வெல்போர் ராமன்

Xxxx

Krishnaavataara

Among the Avataras Rama and Krishna are very popular. Their names are in more verses than others. They are still used as Boys’ names throughout India.

Krishna – Gopi episode is in Akananuru 59 (Please see my previous posts given below)

HINDU PURANIC SCENES IN SANGAM TAMIL LITERATURE

https://tamilandvedas.com › hindu-p…

·Translate this page

3 Oct 2022 — When the world famous poet Kalidasa saw blue Yamuna and white Ganges water , he immediately remembered bluish black Krishna and white …

Krishna | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › krishna

When Gopis, girls from the cowherd community, gave him boundless love, he showered them with love thousand times more! (Please read my post ‘Swami Vivekananda …

Xxxx

Bala raama Avatara பலராம அவதாரம்

In ancient Tamil Nadu, most of the Vishnu temples had Balarama shrine side by side the Krishna shrine. We can see the vestiges in Tamil Nadu temples. We don’t know why and how and when Balarama shrines disappeared. Whenever Krishna was mentioned, Balarama is also mentioned in Tamil literature. Whenever Sanskritists and Tamils wanted to use Colour Contrast as a simile they used the Bluish Black Krishna and Whitish Balarama.

There are too many references to give here. Some are given below:

Pari 2-20/27

This poet is giving some rare information. Baladeva / Balarama was your elder. But you younger stood first because of your special qualities. But I know that only Vishnu is in all, like oil inside the sesame seeds. The implication is that both are the incarnations of Vishnu

Xxx

Age of Mahabharata- Date of Mahabharata War-  COPPER AGE

Krishna’s Pot Dance with Gopi Girls (Yadava Girls) is reported in Pari.3-83/86

Krishna killed Horse Demon Kesi sent by Kamsa- Kali  103-53/54  and Pari 3-31/32

Krishna belonged to Copper Age and not Iron Age. This very important message is recited by Tamil Poets; they clearly say that Krishna ruled Dwaraka with copper forts and Velirs of Tamil Nadu were Yadavas. Kali.52-5/6 and Kali 134-1/4

BHAGAWAD GITA EPISODE IN SANGAM LITERATURE

Most famous commentator of Tamil literature is Madurai Bharadwaja Gotra Brahmin Nachinarkiniyar. He was the one who wrote highest number of commentaries on Sangam Tamil books. Without his commentary ,Tamil verses will be Greek to anyone. He was the one who gives us the story of Brahmin Tolkappiyar. Commenting on Madurai Kaanchi lines 761-763, he says the teacher mentioned here is the Lord Krishna who gave us Bhagavad Gita

MAHABHARATA EPISODES

Mahabharat episodes and mention of Kaurava 100 and Pandava 5 are found in many verses:

Kali 25-1/8 (Dhritarashtra is referred to along with Pandavas and Kauravas)

In addition to House of Wax அரக்கு மாளிகை (Palace of Lacquer) anecdote this passage describes Dhritarashtra using Vedic Materials; Tamils knew that one of the 12 Adityas, Bhagan, was blind. The way the poet described Dhritarashtra  (Vayakkuru Mandilam in Sanskrit named man) showed that Tamils knew full Vedic lore. Another interpretation is given using Sanskrit words. Darapana in Sanskrit is Mirror. Dhritarashra , the blind king was called Mirror Faced King. Mirror cant see the real figure; it can only reflect it. (Darpana + Aanana= Mirror Faced).

Pandavas’ vow to eliminate Kauravas after they molested Draupadi in Public Assembly, is reported in Kali 101- 18/20

One mysterious Akkuran is also mentioned in Tamil verse Pathitru.14-5/7 . Not even Doyen of Tamil literature U.Ve.Sa. could figure it out. He says it may be Akkuran or Karna of Mahabharata . Both of them were famous for their magnanimous donations. They were great philanthropists.

Xxx

Perunchoru – Great Feast Reference

Puram 2 of Muranchiyur Mudinagarayar presented a debatable point to the scholars. He mentioned that the Chera King Uthiyan Cheralaathan provided Perunchoru/ great feast while the Five fought with 2X50 men.

Some Tamils believe that Chera kings lived during Mahabharata Times and maintained neutrality in the Great war and provided food for both the armies (armies of Five Panadavas and 100 Kauravas).

But Perunchoru is a memorial feast ceremony for the war heroes and annually they organise feasts on the memorial day and feed thousands of people. Even today Tamils do it in the name of Guru Puja and Aradhana. So Tamils did not take part in the Mahabharata War but organised Great Feasts in memory of the war dead .

Xxx

Chieftain Tondaimaan’s victory is compared with Pandava victory in Tamil Perum. Lines 415-420.

Kali 104-57/59 also refers to Mahabharata war.

If we go by commentaries, there are more references to Hindu epics. All these show Tamils were well versed not only in Puranas and Ithihasas but also Vedic literature 2000 years ago. Even Upanishad’s Aham Brahmaasmi is in Sangam Tamil literature.

xxxx

Tamil References:

COPPER AGE DWARAKA AND VELIR MIGRATION TO TAMIL NADU 49 GENERATIONS AGO- PURAM VERSE 201

புறநானூறு 201, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள், 

இவர் யார் என்குவை ஆயின், இவரே,

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை

படுமணி யானைப் பறம்பின் கோமான்,

நெடுமாப் பாரி மகளிர், யானே,  5

தந்தை தோழன், இவர் என் மகளிர்,

அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே,

நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்

செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை

உவரா ஈகைத் துவரை யாண்டு  10

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்,

தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே!

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்!  15

யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து

இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்

பொன்படு மால் வரைக் கிழவ! வென்வேல்

உடலுநர் உட்கும் தானைக்

கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.  20

xxxxx

Perum choru = great food= great feast in memory of the war heroes

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!

Purananuru -2

Xxx

பெரும்பாணாற்றுப்படை KAURAVA- PADANVA REFERENCE IN PERUM PAANAATRUP PADAI

அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்

அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப

வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப

ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய . . . .[415]

பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்

ஆரா செருவின் ஐவர் போல

அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து

கச்சியோனே கை வண் தோன்றல் . . . .[412 – 420]

XXXX

பதிற்றுப்பத்து 14-5/7 MYSTERIOUS AKKRAN, THE GREAT PHILANTHROPIST- PATHITUP PATHU

போர்தலை மிகுந்த ஈர் ஐம்பதின்மரொடு

துப்புத் துறை  போகிய துணிவுடை ஆண்மை

அக்குரன் அனைய கைவண்மையே

XXX

கலித்தொகை 25- HOUSE OF WAX EPISODE + BLIND DHRITARASHTRA IN KALIT THOKAI 25

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம்

XXX

MATHURAIK KAANCHI 761-763 மதுரைக் காஞ்சி

BHAGAVAD GITA ACCORDING TO NACHINARKINIYAR COMMENTARY

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி சால் சிறப்பின்

நிலம் தரு திருவின் நெடியோன் போல

XXXX

புறநானூறு 58 WHITISH BALARAMA AND BLUISH KRISHNA IN PURA NANURU 58

பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்

நீனிற வுருவி னேமி யோனுமென்

றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்

குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி

இன்னீ ராகலி னினியவு முளவோ

XXX

பரிபாடல் 2 KRISHNA AND BALADEVA ARE VISHNU INCARNATIONS; PARI PAATAL

நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20

இளையன்’ என்போர்க்கு இளையை ஆதலும்,

‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு

முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை

நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.

XXXX

பரிபாடல் 4 NARA SIMHA AVATARA – MAN LION INCARNATION

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழப்

     புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்

     பிருங்கலாதன் பலபல பிணி பட

     வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து

     அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்

15 இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா

     நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,

     ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்

     படிமதம் சாம்ப ஒதுங்கி,

     இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,

20 வெடி படா ஒடி தூண் தடியொடு,

     தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;

     புருவத்துக் கரு வல் கந்தத்தால்

     தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்

     ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்

XXXX

AKANANURU- 220- PARASURAMA

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்

முன் முயன்று அரிதில் முடித்த வேள்வி

கயிறு அரை யாத்த காண் தரு வனப்பின்

அருங்கடி நெடுந்தூண் போல

–அக நானூறு 220

XXX

RAMAYANA IN PURAM AND AKAM

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.

——-புறநானூறு 378

BIRDS BECAME QUIET WHEN RAMA SAID KEEP QUIET- AKA NANURU 70

வதுவை கூடிய பின்றை, புதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்      10

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

—-அக நானூறு 70

To be continued…………………………….

 Tags- Avatar, Avatara, incarnations, Narasimha, Parasu Rama, Krishna, Rama, Balarama, Age of Mahabharata, Copper Age, Dwaraka