நவீன மொபைல் போன், வீடியோ பூதங்கள்!(Post.11,511)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,511

Date uploaded in London – 6 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நவீன மொபைல் போன்வீடியோ பூதங்கள்!

ச.நாகராஜன் 

பிசாசு, பேய், பூதம், அரக்கன் – இல்லை என்று யார் சொன்னது?

இந்த நவீன டெக்னிகல் உலகிலும் இருக்கிறார்கள்.

மொபைல் போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு செய்திகள்! ஆசை காட்டும் செய்திகள் பல!

‘உனக்குக் கொடுக்கிறோம் போனஸ் 9000 ரூபாய்.இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!’

நம்பி ஆசைப் பட்டு க்ளிக் செய்தால் வெளிப்படுவது அலாவுதீனின் பூதம் தான்!

எத்தனை ரூபாய் இழப்போ! அது அந்த வேளையில் க்ளிக் செய்த நபரின் மோசமான காலத்தைப் பொறுத்து இருக்கும்!

வீடியோவில் நீ ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சியை அனைவருக்கும் ஷேர் செய்யவா அல்லது ரூபாய்…. அனுப்புகிறாயா?

தூக்கிவாரிப்போட்டு அந்த வீடியோ பூதத்தைச் சமாளிக்க அந்த பூதத்திடம் அகப்படுபவர் படும் பாடு…..!!!!?

நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றாலும் ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஒரு அரசல் புரசலான மங்கிய காட்சியை அனுப்பி மிரட்டும் போது யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?

OTP, Passcode, Bank account Number, Aadhaar no, Pan No, Transaction details உள்ளிட்ட எதையும் வெளியிடக் கூடாது!

*

ஒரு பெரிய நாடு தழுவிய நிறுவனத்தின் மேலாளராக அறிமுகப் படுத்திக் கொண்டு என்னிடம் மியூச்சுவல் ஃபண்ட் போடுமாறு அழைத்தார் ஒருவர். நல்ல ஆங்கிலம். குழையும் குரல். மரியாதையான பேச்சு.

நம்பினால் அதோகதி தான்!

நான் அவரது நிறுவனத்தின் முகவரியைக் கேட்டேன். ஆன்லைனில் தான் என்றார். நான் உஷாராகி விட்டேன்.

இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு ஒரு ஆபீஸ் இல்லையா என்றேன்.

தொழில்நுட்ப வேகம் என்றார். தொடர்ந்து நாள் தோறும் பேசுவார். ஆபீஸ் முகவரி, மேனேஜர் பெயர், அவர் போன் நம்பர் கேட்பேன். வைத்து விடுவார்.

*

ஒரு பெண்மணி. எனது முக்கிய பேங்க் பெயரைச் சொல்லி  அதில் அக்கவுண்ட் இருக்கிறதா என்றார். ஆம் என்றேன். அவர் அந்த பேங்கில் தான் வேலை செய்வதாகச் சொன்னார். ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் அனுப்பினால் போதும், டெபாஸிட் செய்யலாம், எக்ஸ்ட்ரா பெனிஃபிட்  உடனே பெறலாம்” என்றார்.

நான் சொன்னேன் – “இந்த பேங்க் என் வீட்டிலிருந்து பத்து கட்டிடம் தான் தள்ளி இருக்கிறது. இதோ நேரில் வருகிறேன். எக்ஸ்ட்ரா பெனிபிட்டை தயார் செய்து வையுங்கள். பத்து நிமிடத்தில் பார்க்கிறேன் என்றேன்.”

அவ்வளவு தான்! போன் கட்!

நண்பர்களே, யாரிடமும் போனில் எந்தத் தகவலையும் தராதீர்கள்!

நேரடியாக இதோ வருகிறேன் என்று சொல்லுங்கள், அவ்வளவு தான், போன் கட் ஆகி விடும்!

*

இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி 2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சம்பவம் இது!

யூனியன்  மினிஸ்டர் அஜய் மிஸ்ரா தேனி (Union Minister Ajay Mishra Teni) அவர்களுக்கு ஒரு போன் கால் வந்தது. இரண்டு கோடி ரூபாய் கேட்டார்கள்! எதற்காக?

2021, அக்டோபர் 3ஆம் தேதி தேனியும் அவரது மகனும் காரில் செல்லும் போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் புரட்சி.

அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அதைப் பற்றிய ரகசிய வீடியோ ஒன்று இருக்கிறது என்றும் அது தேனியின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்றும் இரண்டு கோடி தந்தால் வீடியோவைத் தருவதாகவும் ப்ளாக்மெயில் கால் வந்தது.

யூனியன் மினிஸ்டருக்கே ஒரு மிரட்டலா?

அவர் பயப்படவில்லை. நேரடியாக டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானாவிடம் ஒரு புகார் கொடுத்தார். எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதில் ஐந்து டெக்கிகள் இணைந்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ப்ராக்ஸி செர்வர்கள்- proxy servers for dynamic, jumping IPs and Virtual Private network –  VPN ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸாரையே திணற அடித்தது இந்த டெக்னிகல் கும்பல்.

போன் செய்த இடம் நாய்டாவில் உள்ள ஒரு பார்க். அதன் அருகில் இரு டெலிபோன் டவர்கள் இருப்பதால் எங்கிருந்து கால் வந்தது என்று குழப்பம் ஏற்படும். இன்னும் பல உத்திகள்.

அனைத்தையும் ஆராய்ந்து ஐவரையும் பிடித்தது போலீஸ். பணம் தருவதாகச் சொல்லி குறிப்பிட்ட இடம் செல்ல, அங்கு வந்து சிக்கினான் ஒருவன். அதே சமயம் பல இடங்களில் ரெய்டு நடத்தி மற்ற நால்வரையும் பிடித்தனர் போலீஸார்.

மத்திய மந்திரிக்கே இப்படி ஒரு மிரட்டல் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்!

ஆகவே போனில் நமக்கு அறிமுகம் இல்லாத யாரிடமும் நமது நிதி மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கூறவே கூடாது. தெரிந்த உறவினர்களுக்கும் இப்படிப்பட்ட விவரங்களைத் தரக்கூடாது. ஏனெனில் அவர்களின் கவனக்குறைவாலும் நாம் பாதிக்கப்படலாம்!

ஆன்லைனில் பணம் அனுப்புவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அதி நவீன தொழில் நுட்பங்களை மிகுந்த ஜாக்கிரதையாக கையாண்டு அதன் நல்ல அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – எச்சரிக்கையுடன்!

பழைய கால பூதங்களை கட்டுக் கதை என்று சொல்பவர்கள் கூட இந்த நவீன கால பூதங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், பயப்பட்டு ஜாக்கிரதையாக இருக்கத் தான் வேண்டும்.

ஜாக்கிரதை, போன், வீடியோ பூதம் ஜாக்கிரதை! 

***tags- நவீன, மொபைல் போன்வீடியோ, பூதங்கள்,

ரசாயன (Chemistry) பாடமும் சுவையானதே (Post No.11,510)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,510

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மூலகங்கள் எனப்படும் தனிமங்கள் (Elements) பற்றி 40 க்கும் மேலான  கட்டுரைகள் எழுதி இரண்டு நூல்களாக வெளியிட்டேன். ஒவ்வொரு உலோகம் , காரம், உப்பு பற்றிய சுவையான விஷயங்கள், கதைகள் மூலம் வேதியல் சுவையான பாடம் என்பதைக் காட்டியுள்ளேன். 2 புஸ்தகங்களைப்  படித்துப் பார்த்துவிட்டு  நான் சொல்லுவது சரியா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

13.எலும்பு வலுப்பட கால்சியம்குழந்தை பிறக்க செலீனியம் பல் பளபளக்க ப்ளூரைட்

CONTENTS-METALS

1.நெப்போலியனை பிரிட்டிஷார் கொன்றது எப்படி?

2.ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம்

3 டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை

4..யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் ASTATINE

5. பல் கட்ட உதவும் ப(ல்)லேடியம்

6.ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்திகள்

7.அணுகுண்டுக்கு சக்தி தரும்மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில்லியம்

8. பற்களுக்கு ப்ளூரைட்கரப்பான்பூச்சிக்கும் டெப்லான் பாத்திரங்ளுக்கும் கூட ‘F’

9.இடாய்-இடாய் நோய் தெரியுமாகாட்மியம் ஆபத்து!!

10.குரோமியம் தரும் நோய்களும்செய்யும் நன்மையும்

11.இரத்த அழுத்தமும் துத்தநாகமும்

12.உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் பொட்டாசியம்!

13.உடலுக்கு கால்சியம் ஏன் தேவை?

14.துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸும் நியான் வாயு கண்டுபிடிப்பும்

15. புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது!

16.புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2

17.புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம்

18.குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்!

19.உடலில் பாதரச விஷம் ஏறினால் ஆபத்து

20.பைத்தியக்கார பாதரஸ சோதனை!

21.நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்!

22.பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்!

23.பாதரசம் என்னும் அற்புத உலோகம்

24.போருக்குத் தேவையான 16 மூலகங்கள்

25.ஜப்பானியர் பாதுகாத்த மாலிப்டின ரகசியம்

26.மனித உடலில் 7 மில்லிகிராம் தங்கம்

27.வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்!

28.மோசஸ் உடைத்த தங்க விக்ரகம்


XXX

15.வெள்ளிஅலுமினியம்யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

பொருளடக்கம்

1.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள்-1

2.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள் – பகுதி 2

3.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1

4.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2

5.உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -1

6.உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -2

7.அடடா! அடடா! அயோடின் Iodine-டா!

8.அயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும்

9.ரசாயன மூலகம் டெல்லூரியத்தின் கதை

10.நியோடைமியம் (NEODYMIUM) பற்றிய சுவையான தகவல்

11.தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!!

12.அழகிகளைக் கொன்ற ரேடியம்

13.அலுமினியம் பற்றிய அதிசயச் செய்திகள் 

14.படிகாரம் பற்றிய அதிசய நம்பிக்கைகள்

15.கரி என்னும் அற்புத மூலகம்- Part 1

16.கரி என்னும் அற்புத மூலகம்-2;  CO உயிருக்கு ஆபத்து 

17.அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு!

18.நிக்கல் என்னும் அற்புத உலோகம்

19.ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்!

20.பேரியம் கஞ்சியும் பச்சை மத்தாப்பும்

21.பெண்களுக்கு அழகு தரும் ‘பள, பள, தள, தள’ பிஸ்மத்!

.22. இந்திரஜால வித்தை செய்யும் உலோகம் கோபால்ட் – ரத்தசோகையை அகற்றும்!

23.யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை!

24.மக்னீஷியம்- பேதி மருந்து! அக்னி வெடிகுண்டு!!

25.கொலைகார மூலகம் (THALLIUM) பற்றிய சுவையான தகவல்கள்!

26.குளோரின் – நாம் தினசரி உபயோகிக்கும் வாயு

27.மன நோயாளிகளுக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்!

28.பாஸ்வரம் – உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 1

29.பாஸ்வரம் – உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 2

30. தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான, வரலாற்று விஷயங்கள்

xxxxxxxx

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags- My books, Chemistry in Tamil ,மூலகங்கள் , தனிமங்கள், ரசாயன பாடம், சுவை,

Learn Tamil Verbs- 29 கொள் (1000 Tamil Verbs)—Post No.11509

செய்துகொள் அவள் அலங்காரம் செய்துகொண்டாள்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,509

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In the last lesson we saw 31 verbs with SEY (make or do)suffix; in lesson 21 we saw reflexive verbs ending with KOL meaning someone is doing something for himself or her self or myself or yourself.

Sey – Payirchi  Sey / Do Exercise பயிற்சி செய் (exercise as in lessons or physical exercise as in a Gym)

xxx

We will look at more KOL (reflexive verbs)

Unlike Sey, KOL is added to converbial form of the verb; I have underlined them in the following examples

Kol is conjugated in the same way in all the compound reflexive verbs

கொள் – 31 examples are given here:

xxxx

செய்துகொள் அவள் அலங்காரம் செய்துகொண்டாள்

Aval – alankaaram – seythu kondaal

Seythukol – shel—adorn/ decoration/beautify—did it for herself

In Tamil only the noun ‘decorartion’ அலங்காரம்is used because it goes with the verb செய்துகொள்– literally She did Decoration to herself.

xxxx

வாங்கிக்கொள் buy it for yourself/herself/himself/themselves/ myself

நான் எனக்கு ஒரு சட்டை வாங்கிக்கொண்டேன்

Naan- enakku – our – sattai —  vaangkik konden—

I – to me – one – shirt – bought for myself

I bought a shirt for myself

xxx

பழகிக்கொள் – practise – learn for yourself

மாணவர்கள் சைக்கிள் ஓட்ட பழகிக் கொள்கிறார்கள்

Maanavarkal – cycle—otta—pazakik kolkiraarkal

Students – cycle- to run—learn for themselves

Students are learning cycling (for themselves)

Xxxx

படித்துக்கொள்  — read it for yourself or oneself

Unakku oru katitham vanthirukkirathu- neeye padiththuk kol

To you – one — letter — has come—redd it yourself

Here is letter for you – Read it yourself

xxxx

பாடிக்கொள் – Paadikkol – sing (for herself/ himself/ themselves, itself, oneself)

வாங்கிக்கொள்  — vaangkikkol – buy for oneself

வந்துகொள் , — vanthukol- come on your own

போய்க்கொள் ,– poykkol —  go on your own

வாங்கிக்கொள் — buy it for oneself

சாப்பிட்டுக் கொள்  (10)- eat yourself, eat oneself

சமைத்துக்கொள் — cook on your own or for oneself

மடித்துக்கொள் , – madiththukkol – fold it

எழுதிக்கொள் , — ezuthik kol –write it

மாற்றிக் கொள்  — maarrik kol–change it

ஏற்றுக்கொள் , — etruk kol–take it, accept it

விற்றுக்கொள் , – vitruk kol —-sell it

கற்றுக்கொள்  katrukkol – learn

விலகிக்கொள், — vilagik kol – get out of it- resign —

ஒளிந்துகொள் – olinthu kol – hide yourself

ஒப்புக்கொள் , (20)- oppukkol – confess- accept

விளங்கிக்கொள் — vilangkik kol – understand —

பார்த்துக்கொள், — paarththuk kol – look for yourself – look after

புரிந்துகொள்— purinthukol — understand

போட்டுக்கொள்– pottukkol – wear it—put on—

,அணிந்துகொள்ள, — aninthu kol – wear it

தாங்கிக்கொள்thaangik kol —bear it, withstand it

கவனித்துக்கொள்gavaniththuk kol —take care of

உட்கார்ந்துகொள் ,utkaarnthukol – sit and make yourself comfortable

எழுதிக்கொள்—ezuthik kol – write it

ஏறிக்கொள் (30)—erikkol- climb , go up

மறைத்துக்கொண்டு / hiding himself  — Maraiththuk kondu

Xxx

Some more examples:

மாற்றிக் கொள்  — maarrik kol–change it

நடிகைகள் ஒவ்வொரு காட்சியிலும் புடவையை மாற்றிக்கொள்கிறார்கள்

Nadikaikal – ovvoru — kaatchiyilum— putavaiyai – maatrikkolkiraarkal-

Actresses — each and every—scene—saree- change (for themselves)

Xxxx

கற்றுக்கொள்  katrukkol – learn

மஹாபாரதக் கதை- ஏகலைவன் தானே வில்வித்தையை கற்றுக்கொண்டான் ; அவன் தன்னை  மரத்தின் பின்னால் மறைத்துக்கொண்டு / hiding himself  இப்படிச் செய்தான்

Mahabharata story – Ekalaivan —self/ on his own— archery — learnt; he himself tree behind— hiding himself— this way—did .

The Mahabharata story is that EKALAIVAN learnt archery for himself; he did it by hiding himself behind a tree.

Xxx

கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள் —

கண்ணாடியில் — முகம் — பார்த்துக் கொள்

In the mirror – face — look (for yourself)

ALL KOL VERBS CONJUGATED   IN THE SAME WAY  AS SHOWN  IN ABOVE CHARTS 

-to be continued………………………

 tags-  கொள் KOL, reflexive verbs 

பேசத் தெரியாதவன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,508)

WORLD LEADERS FELL ASLEEP WHEN SOME SPEAKER WAS DELIVERING A BORING SPEECH.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,508

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே

     வாயிலா தவனொரு பதர்;

  வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்

     மனக்கோழை தானொரு பதர்;

ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்

     றிகழநிற் பானொரு பதர்;

  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ

     டிணங்கிவாழ் பவனொரு பதர்;

வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி

     வீண்பேசு வானொரு பதர்;

  வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை

     விட்டுவிடு வானொரு பதர்;

ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்

     அமல! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல!

– தணியாத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள்புரியும் தூயவனே!

‘எமது ……. தேவனே!’ மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே வாய்

இலாதவன் ஒரு பதர் – திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர்,

வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் மனக்கோழைதான் ஒரு பதர் –

எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்

மனவுறுதியற்றவன் ஒரு பதர்,

ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி!

என்று இகழ நிற்பான் ஒரு பதர் –

செல்லாத வழக்கைச் செப்பியாவரும்

சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர்,

இல்லாள் புறம்செலச்

சம்மதித்து அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் –

தன் மனையாள் அயலானிடத்திற்போக மனம் ஒப்பிஅவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர்
– தன்னை மற்றவர் புகழாமல்தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர்,

வேசையர்கள் ஆசை கொண்டு
உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் 

பரத்தையரிடங் காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.

     (க-து.) இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்
தக்கவர்கள்.

நெற்பயிரில் பதர் என்பதன் உள்ளே ஒன்றுமிராது. காலியாக இருக்கும். ஆயினும் வெளியே அது தெரியாது. இது போல மனிதர்கள் போல தோற்றம் தரும் ‘காலி’  கள் , வெற்று வேட்டுக்கள் உண்டு. அவை வெடிக்காத புஸ் வாணங்கள்  ; அவர் யாவர்?

1.பேசத் தெரியாதவன்

2.போரில் புறமுதுகு காட்டுவோன்

3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்

4.மனைவியை வாடகைக்கு விடுவோன்

5.தன்னைத்தானே புகழ்பவன்

6.பிற பெண்களை நாடுவோன்

XXX

1.பேசத் தெரியாதவன்

நன்கு படித்து என்ன பயன்? அதைப் பிறருக்கு சொல்லத் தெரியவேண்டும். அதை வள்ளுவர் அழகாக ஒரே குறளில் சொல்கிறார்; பேசத் தெரியாதவர்களை மலர்ந்தும் மணம் வீசாத மலர்கள் என்கிறார்

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார் —குறள் 650

நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் .

XXX

“எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்

துய்த்துணர் வில்லெனி னில்லாகும் – உய்த்துணர்ந்துஞ்

சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்

பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)

XXX

பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

XXX

கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றிவேற்கை

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

XXX

பேச்சுக் கலை பற்றி சாணக்கிய நீதி

அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்பவரும் கேட்பவரும் அரிது.

XXX

சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

XXXX

2.போரில் புறமுதுகு காட்டுவோன்

புற முதுகு காட்டாமல் போரிட வேண்டும் என்பது இந்து மரபு; அப்படி நெஞ்சில் புண்படாமல் முதுகில் புண்பட்டுவிட்டால் அவர்கள் வடக்கிருந்து உயிர் துறப்பர் ; புனிதமான இமயமலை, மேரு மலை, கயிலாயம் உள்ள வடதிசை நோக்கி உண்ணாவிரதமிருந்து  கோப்பெ ருஞ்சோழன் சொர்க்கம் சென்றதை புறநானூறு காட்டும்.

வீரத்தாய் பற்றி ரிக் வேதம் முதல் பாரதி வரை பலரும் பாடியுள்ளனர். அவர்கள் புறமுதுகு காட்டாமல் போரிட்டவர்கள்.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

Xxx

3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்

பொய் சாட்சியம்

பொய் சொல்வோரைக் கண்டுபிடிக்கும் முறை பற்றி உபநிஷதம் மற்றும் கலித்தொகை நூல்கள் பல அதிசயச் செய்திகளை உரைக்கின்றன .பாலைபாடிய பெருங் கடுங்கோ கலித்தொகையில் ஒரு உவமை சொல்கிறார்.

கரிபொய்த்தான் கீழ் இருந்த  மரம்போல கவின்வாடி — என்பது அது. அதாவது பொய் சொன்னவன் கீழே நின்றால் அந்த மரமும் வாடிவிடுமாம் இதை ஆதி சங்கரர்- மண்டனமிஸ்ரர் சம்வாதத்தில் முதல் மாலை வாடுபவரே தோற்றார் என்று சரசவாணி சொன்ன சம்பவத்திலும் எடுத்துக் காட்டியுள்ளேன் 

Xxxx

4.மனைவியை வாடகைக்கு விடுவோன்

13: காமம் வலியது

உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி,

வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி,

அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச்,

சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.

—–விவேக சிந்தாமணி

ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.(ஆகவே எச்சரிக்கையாயிரு.)

சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை —குறள் 57

”நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்

சிறையான் அகப்படுத்த லாகா”— (பழமொழி 30)

“உண்டியுட் காப்புண் டுறுபொருள் காப்புண்டு

கண்ட விழப்பொருள் கல்விக்குக் காப்புண்டு

பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்

கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” —-(வளையாபதி)

xxxxx

6.பிற பெண்களை நாடுவோன்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு—குறள் 148

மார்க்சீயவாதிகளும் பயங்கரவாதிகளும் யார் யாரை எல்லாமோ மாவீரர் என்று புகழ்வர். ஆனால் இந்தியாவில் இரண்டு மாவீரர்தான் உண்டு. புலன்களை வென்று நிமிர்ந்த பார்வையுடன் நிற்கும் சமண மத தீர்த்தங்கரர் மஹாவீரர், ஜிதேந்த்ரியன் என்று புகழப்படும் அனுமன் ஆகிய இருவர்தான் மாவீரர். புலன்களை வெல்லா தோர்  செய்யும் இழி செயல் பிறர் மனை நாடுதல் . ராவணன் பட்ட கஷ்டத்தை ராமாயணம் புகலும் . கோவலன் பட்ட கஷ்டத்தைச் சிலப்பதிகாரம் புகலும்; அவன் மாதவியிடம் போகாமல் இருந்தால் சிலம்பு விற்கப் போய் கொலையுண்டு இருக்கமாட்டான் .

திருவள்ளுவரும் ஆடவர்களைச் சுண்டி இழுக்கும் பெண்களைத் தாக்கி பாடுகிறார்.

தினசரி  நாளேடுகளில் வரும் கிரைம் CRIME //குற்றச் செய்திகளில் இதுவே முதலிடம் வகிப்பதால் நான் விளக்கத் தேவையே  இல்லை

கீழ்மக்கள் யார் ? என்று விவேக சிந்தாமணியும் விளக்கும்

தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான் சொல் வோரும், பொன்னைத்தான் தேடியறம் புரியாமல் அவை காத்துப் பொன்றி னோரும், மின்னைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும், அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறமில்லாக் கசட ராமே,

தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.

5.தன்னைத்தானே புகழ்பவன்

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு

மனு நீதி நவில்வது 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:- 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162) 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-163

Xxxx  subham xxxxxxxx 

 tags-பேசத் தெரியாதவன், புறமுதுகு காட்டுவோன், பொய் வழக்கு ,பொய் சாட்சிய, மனைவி வாடகை,தன்னைத்தானே புகழ்பவன், பிற பெண்களை நாடுவோன்

அருள்வாயே! – 6 (Post No.11,507)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,507

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 6

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

46) திருத்தணிகை

    வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்

      அமையு மெனக்கிட முனது பதச்சரண்

        மருவு திருப்புக ழருள எனக்கினி   யருள்வாயே

பாடல் எண் 263 –   ‘குருவி என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப் பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். ஆகவே அந்தத் திருவடியைச் சேருதற்குரிய திருப்புகழ்ப் பாக்களை நான் பாட எனக்குத் தந்தருள்வாயாக!

47) திருத்தணிகை

    பொருள் தீரில்

  ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்

     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட

       ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே

பாடல் எண் 266 –   ‘கூந்தல் அவிழ்த்து’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கையில் கொடுப்பதற்குப் பொருள் தீர்ந்து போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்களான பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே! எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்வாயாக!

48) திருத்தணிகை

   கனத்த தத்துவமுற் றழியாமற்

     கதித்த நித்தியசித் தருள்வாயே 

பாடல் எண் 278 –   ‘நினைத்தது எத்தனை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்த நிலையை நீ அருள்வாயாக.

49) திருத்தணிகை

   பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்

      குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே 

பாடல் எண் 280 –   ‘பருத்தபற் சிரத்தினை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையை, வாழும் போது தாங்குவதும், சாவில் ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக!

50) திருத்தணிகை

   ஆரணத் துக்க ணத்து னான்மலர்ப் பொற்ப தத்தை

     யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே

பாடல் எண் 283 –   ‘பூசலிட்டு’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள்வாயாக!

51) திருத்தணிகை

 கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் 

  கழற்புணை நீதந் தருள்வாயே

பாடல் எண் 284 –   ‘பெருக்க உபாயம்’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (ஆசை, பிறவி, நூல் ஆகிய) கடல்களைக் கடக்க, கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள்வாயாக!

52) திருத்தணிகை

    அற்பர மட்டைகள் பால்சென்

றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை

  அற்றிட வைத் தருள்வாயே

பாடல் எண் 287 –   ‘பொற்குடம் ஒத்த’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய பொதுமகளிரிடம் போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செது அருள்வாயாக!

53) திருத்தணிகை

    பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன

        பதத்து மலரினை யருள்வாயே

பாடல் எண் 293 –   ‘முடித்த’குழலினர்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே

வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்தருள்வாயாக!

54) திருத்தணிகை

அவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட  

   உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே

பாடல் எண் 299 –   ‘வரிக்கலையின்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  ஒருவருடன் பகை, வேறு ஒருவரிடம் விருப்பம் என அவர்களோடு  சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

November 2022 London Swaminathan Article (INDEX No.120) – Post No.11,506

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,506

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

October 2022 London Swaminathan Article (INDEX No.119) – Post No.11,419 (6/11)

RSS Zindabad : Kanchi Shankaracharya (Post No.11,403) 1/11/2022

Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன், காமன்) -Post 11,407

Tamil Hindu Encyclopaedia – 17 (Tamil Lovers= Rathi+ Manmatha காதல் ஓவியங்கள்) Post.11,410

Tamil Hindu Encyclopaedia – 18 (Vedas & Brahmins வேதங்களும் பிராமணர்களும்) -Post No.11,412(4/11)

Tamil Hindu Encyclopaedia – 20 ( Brahmins பார்ப்பான், பார்ப்பன மகன், பார்ப்பனி) – Post No.11,418 (6/11)

Tamil Hindu Encyclopaedia 23 (Havis =ஹவிஸ், ஆவுதி; Yupa யூபம்)—Post 11,436 (11/11)

Tamil Hindu Encyclopaedia :24 (Yaga Smoke, Brahmin Murder யாகப் புகை,  ஐயர் கொலை)- Post.11,443 (14/11)

Tamil Hindu Encyclopaedia 25 ( Thirty Three Devas and Yama- தேவர்கள், யமன்) in Sangam Tamil Poems (11,451) 17/11

Tamil Hindu Encyclopaedia 27: Mr Blue, Mr Tall/ Vishnu , நீல நிற வண்ணன், நெடியோன் (Post.11,460)

21/11

Tamil Hindu Encyclopaedia 28: Garuda Flag, Lotus from Belly with Brahma, Source of Universe/Vishnu (11,463)22/11

Tamil Hindu Encyclopaedia 26: Vishnu/ Maal/ மால் (Post No.11,458)

Tamil Hindu Encyclopaedia – 21 (Yaga, Yagnas, Gotras யாக, யக்ஞங்கள், கோத்ரங்கள்) – Post 11,421 (7/11)

Tamil Hindu Encyclopaedia – 22 (தமிழ் மன்னர் செய்த யாகங்கள் Yagas by Tamil Kings)- Post 11,428 (9/11)

Tamil Hindu Encyclopaedia 29: Garuda Purana in Sangam Tamil Books (Post.11,465) 23/11

Tamil Hindu Encyclopaedia 30: Lakshmi and 1000 headed Snake in Sangam Tamil Books (11,474)25/11

Tamil Hindu Encyclopaedia 31 Brahma / பிரம்மா Post No.11,489) 30/11

HISTORY FLASH :NEW ETRUSCAN DISCOVERY IN ITALY (Post No.11,431) 10/11

History Flash; Hindus must learn from Today’s Roman Coin Story (Post No.11,470) 24/11

Sita’s Famous Quotes: I would Follow Eleven Women (Post No.11,469) 24/11

GURU NANAK  QUOTES : DECEMBER 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.11,486); 29/11

Learn Tamil Verbs ( Open, Forget, Fly, Milk)– Tamil Lesson 17 (Post.11,405) 1 November 2022

Learn Tamil Verbs ( See, Die)– Tamil Lesson 18 (Post.11,408)

Learn Tamil Verbs – (add ஆ aa, ஓ oo, ஏ ee

to change meaning) Lesson 19- Post.11,413 (4/11)

Learn Tamil Verbs Lesson 20 :Negative Converbial (Post.11,416); 20/12

Learn Tamil Verbs : Lesson 21 :Reflexive Compound Verb கொள் (Post No.11,422)7/11

Learn Tamil Verbs (Lesson 22)- ‘PADU படு’ ending Verbs (Post No.11,433)10/11

Learn Tamil Verbs -23 விடு /VIDU verbs (Post No.11,439)

Learn Tamil Verbs -24 Prohibitive, Permissive and Potential (Impersonal Verbs)—Post.11,446 (15/11)

Learn Tamil Verbs 25 Pugaz -Praise Makiz- Feel Happy (Post No.11,456) 19/11

Learn Tamil Verbs 26 : Adai/Reach/Get/Obtain (Post.11,478)

Learn Tamil Verbs 27 தேடு ,மூடு ,ஆடு, (Post.11,490)

xxx

TAMIL ARTICLES 

வியன்னா நகர ஓவிய மியூசியங்கள் (Post.11,404) 1/11/22

கைகண்ட மருந்து/ மந்திரம் ! (Post No.11,424)8/11

சத் குரு பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,480)27/11

சீதை வணங்கும் 11 பெண்கள் ! (Post No.11,472)25/11

செல்வம் தேடும் வழி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post no.11,488) 30/11/22

தமிழில் 1030 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் (Post No.11,449) 16/11

தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை  அறிவு (Post.11,438)12/11

மருத்துவத்தில் (வயாக்ரா மர்மம்) நைட்ரஜன்! (Post No.11,427) (9/11)

போர்க்களத்தில் நைட்ரஜன்– நோபல் பரிசின் கதை (Post No.11,430) 10/11

மனிதப் பிறவி அரிது -அறப்பளீச்சுர சதகம் (Post No.11,466) 23/11

மனைவி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,468) 24/11

யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை,  கிருஷ்ணன்- வேர் (Post.11,455)19/11

மகன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,473) 25/11

மரங்களை வளர்த்தால் சொர்க்கம் கிடைக்கும் (Post No.11,453) 18/11

ஒரு மரம் = பத்து மகன்கள் ; மரங்கள் நோய்களைப் போக்கும் (Post.11,448)

தாவரங்களிலும் நைட்ரஜன்- பகுதி 3 (LAST PART)- Post No.11,435 (11/11)

நல்ல மாணவர் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,482)28/11

நெல்லிக்காய், இலந்தைப் பழ மகிமை: மருத்துவப் பொன்மொழிகள் (Post.11,425)

புறச் சூழல் விஷயத்தில் இந்துக்களின் அபார முன்னேற்றம் (Post No.11,445) 15/11

பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? (Post No.11,461)21/11

கழுத்தில் சங்கிலி பெண்ணுக்கு! காலில் சங்கிலி ஆணுக்கு!! (Post.11476)26/11

—subham—

 tags- November 2022 Index, Index No.120, London swaminathan, Articles

இந்திய கோஹினூர் வைரத்தைக் கமில்லா அணிவாரா ? (Post No.11,505)

St Edwards Crown (Not Kohinoor Crown)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 11,505

Date uploaded in London – 4 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge. 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பிரிட்டிஷ் பத்திரிகைகள் மஹாராஜா (Coronation) பட்டமேற்பு விழா பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எலிசபெத் மஹாராணி செப்டம்பர் 8- ஆம் தேதி (2022) இறந்தார். இதைத் தொடர்ந்து  அவரது மகன் சார்ல்ஸ் மூன்றாவது சார்ல்ஸ் (Charles III) என்ற பெயரில் அடுத்த ஆண்டு 2023 மே 6-ஆம் தேதி (2023) பதவி ஏற்கப்போகிறார். பின்னர் பிரிட்டனின் தபால்தலை, கரன்ஸி , காசுகளில் அவரது உருவப்படம் இருக்கும். பிரிட்டிஷ் அரசன் அல்லது அரசி படங்களுடன் தபால்தலை வெளியிடும் நாடுகளும் அவரது படத்தை வெளியிடலாம்.

செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்

நேற்றைய செய்தி என்னவென்றால் ராணி அணிந்த பட்டமேற்பு செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown லண்டனிலுள்ள டவர் ஆப் லண்டன் மியூசியத்திலிருந்தது (Tower of London Museum) அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அவருடைய (Charles) தலை அளவுக்குப் பொருந்துமாறு செய்ய இப்படி அகற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இதில் இந்தியர்களுக்கு  சுவையான செய்தியையும் பத்திரிகைகள் கிளப்பிவிட்டுள்ளன . இளவரசி டயானா இறந்தபின்னர் கமில்லா (Camilla) என்ற பெண்மணியுடன் சார்ல்ஸ் வசித்து வருகிறார். அவர் துணைவி என்ற முறையில் அவருடன் அமரும்போது கோஹினூர் வைரம் பிரகாசிக்கும் கிரீடத்தை அணிவாரா? என்பதே கேள்வி. இது பற்றி அரண்மனை வட்டாரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதியுள்ளன . கோஹினூர் வைரம் கடைசியாக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து கைமாறியது. அதை பிரிட்டிஷார் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியும், ‘இல்லை இல்லை அதை ரஞ்சித் சிங்கே பரிசாககக் கொடுத்தார் என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே. பிரிட்டிஷாரே  மற்ற  சில நாடுகளைத் தூண்டிவிட்டு எங்களுடையது என்று நீங்களும் சொல்லுங்கள் என்று ஏவி விட்டதையும் நாம் அறிவோம்.

105 காரட் எடை யுள்ள கோஹினூர் வைரம் தாங்கிய கிரீடத்தை மகாராணியின் அன்னை (Queen Mother) அணிந்து வந்தார் .

இப்போது மஹாராஜா  CHARLES பதவி ஏற்கும் நாளன்று அணியப்போகும் செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown வெள்ளிக்கிழமை இரவில் , அதி பயங்கர செக்யூரிட்டியுடன் ஒரு ரகசிய இடத்துக்கு அகற்றப்பட்டது. இது நடந்த பின்னரே இதை பக்கிங்ஹாம் அரண்மனை, அறிவித்தது . அது வரைக்கும் பரம ரஹசியம் 

2017 ஆம் ஆண்டு முதல் Mark Appleby, of Mappin and Webb மார்க் ஆப்பிள் பி நிறுவனம்தான் ராஜ கிரீடங்களைப் பராமரித்து வருகிறது. அவர்கள்தான் ரஹசிய இடத்தில் கிரீடத்தை பெரிதாக்கப் போகிறார்கள். மன்னரின் தலை , ராணி எலிசபெத்தின் தலையைவிடப் பெரியது.

செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown

 1661ம் ஆண்டில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னருக்காக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் செய்யப்பட்டது 1649-ம் ஆண்டில் உருக்கப்பட்டுவிட்ட முந்தைய கிரீடத்தைப் போல அது வடிவமைக்கப்பட்டது. ஒரிஜினல் கிரீடம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஜனக மஹாராராஜா போன்ற ஞானி/ அரசர் எட்வர்ட் (royal saint, Edward the Confessor, the last Anglo-Saxon King of England). உடையது  

பின்னர் செய்த புதிய கிரீடத்தில் சிலுவையும் பூக்களும் இருக்கின்றன. இந்த கிரீடம் தங்கக் கட்டிக்களால் ஆனது (தங்கத்தகடு அல்ல ; கட்டித்தங்கம்)அதில் மாணிக்கம், நீலம் , புஷ்பராகம் மற்றும் (Semi Precious Stones) அமெதிஸ்ட் கார்னெட் , டோர்மலின் போன்ற நவரத்னங்களுக்கு நிகரான கற்களும் இருக்கின்றன . அதை வெல்வெட் துணியால் up of a solid gold frame set with rubies, amethysts, sapphires, garnet, topazes and tourmalines) போர்த்தியிருப்பார்கள் .

St Edwards Crown (Not Kohinoor Crown)

அண்மையில் மஹாராணி இறுதி ஊர்வலத்தைக் கண்ட கோடிக் கணக்கானோர் இதை டெலிவிஷனில் பார்த்திருப்பார்கள்  (made

— subham —

tags–கோஹினூர், கிரீடம், செயின்ட் எட்வர்ட்ஸ், மஹாராஜா , சார்ல்ஸ் 

tags- கோஹினூர், கிரீடம், மகாராஜா , செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்

சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,504)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,504

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

சூடான ஐஸ்க்ரீம் (Hot Ice Cream) இருக்க முடியாது, கோகுலாஷ்டமியும் குலாம்காதரும், அப்துல்காதரும் அமாவாசையும்  என்று தலைப்பிட்டாலும் பொருத்தம் இராது .முஸ்லீம் வெஜிட்டேரியன் என்று சொன்னாலும் ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்துவார்கள் ; சுருங்கச் சொல்லின் பொருத்த மற்ற இரண்டு விஷயங்கள். இதை அறப்பளீச்சுர சதகம் பல எடுத்துக்கட்டுகளால் விளக்குகிறது

LONDON SWAMINATHAN’S NEW COMMENTARY ON VERSE 11 OF ARAPPALEECHURA SATAKAM

 11. தகாத சேர்க்கை

பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே

     பொருளைஅரு ளிச்செய் தனை!

  புண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே

     பொல்லாத மிடிவைத் தனை!

நீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க

     நெறிமாத ரைத்தந் தன்னை!

  நிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு

     நீலியைச் சோவித் தனை!

சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று

     தாழ்ந்துபர வச்செய் தனை!

  தமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்

     தாம்பாட வேசெய் தனை!

ஆதரவிலாமல்இப் படிசெய்ததென் சொலாய்?

     அமல! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அமல – குற்றம் அற்றவனே! எமது ……… தேவனே!, பூத

தயை இல்லாத லோபிய ரிடத்திலே பொருளை அருளிச் செய்தனை –

உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சரிடத்திலே செல்வத்தைக்

கொடுத்தருனினைபுண்ணியம் செய்கின்ற சற்சனரிடத்திலே பொல்லாத

மிடி வைத்தனை – நன்மை புரிகின்ற நல்லோரிடம் கொடிய வறுமையைக் குடியாக்கினாய், நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க நெறி

மாதரைத் தந்தனை – அறத்தின் நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி

போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை – அமைதியான நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக் (GHOST WOMAN NEELI) கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை – உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின் பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத

புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை – தமிழின் இனிமையைக் காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! – இவ்வாறு ஒருவர்க்கொருவர்

பற்றில்லாமற் பண்ணினது ஏன்கூறுவாயாக.

XXX

 . அருந்ததி -வசிட்டரின் மனைவி. கற்புக்கரசி. சங்க இலக்கியத்தில் பலமுறை குறிப்பிடப்படும் கற்புக்கரசி. வானத்தில் மீனாக/ நட்சத்திரமாகக் காட்சி (Northern Star) தருபவள்; அம்மி மிதித்தல் ,அருந்ததி காட்டல் என்ற இந்து மதத் திருமணச் சடங்கின் கதாநாயகி.

xxx

நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு

வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்

செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்

மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்

பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்

மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்

ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள். இவளைப்பற்றிய முழுகே கதையையும் என்னுடைய கட்டுரையையிலும் தமிழ்நாட்டை உலுக்கிய பேய் என்ற என் புஸ்தகத்திலும்  காணலாம் .

   நல்ல குடியில் பிறந்தவர்கள் அரசியல் லாபத்துக்காகவோ பணத்துக்காகவோ ஆட்சியாளர்களுக்குத் துணை போவதை அறிவோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்படி உயர் ஜாதியினர் அவர்களுடைய ஆட்சிக்கு உதவினார்கள் .

கவிஞர்களும் அறிஞர்களும் திடீரென்று சில அரசியல் தலைவர்களை புகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகின்றனர்.; அண்மைக்கலாத்தில் வாலி (TAMILPOET போன்றோர் மக்களின் நம்பிக்க்கையை இழந்ததைக் கண்டோம்

சில கவிஞர்கள் பொன்னாடைக்கும் அரசாங்க விருதுக்காகவும் ஆட்சியாளருக்கு ஜால்ரா போடுவதையும் இன்னும் பலர் VTICAN MONEY வாடிகன் தரும் கிறிஸ்தவ பணத்துக்காக கர்நாடக இசையை சீர்குலைத்ததையும் , சில பேச்சாளர்கள் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசியதையும் பத்திரிக்கையில் படித்தோம். இதுகள் மேற்கூறிய பொருத்தமில்லாத சூடான ஐஸ்க்ரீம்கள் தகாத சேர்க்கை

பாரதி போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை வறுமையில் வாடவிட்டு , எச்சிற் கையாலும்  காகத்தை ஓட்டாத மக்களிடம் பணத்தைக் கோடிகோடியாக  (கடவுள்??பூர்வ ஜென்ம புண்யம் ???) சேர்த்து வைத்ததையும் கண்டோம் .

இவ்வாறு பொருத்தமில்லாத விஷயங்களை இணைத்துப் பாடும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உண்டு

68. அறியமுடியாதது 

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,

பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்

அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தி மரத்தில் மலரையும், வெள்ளை உடலை உடைய காக்கையும், பித்தர்களுடைய மனதையும், நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும், பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும், காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை..

https://www.purnayogam.org/2020/05/blog-post.html

XXXX

.    69. பயனில்லாதன 

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,

இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,

இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

https://www.purnayogam.org/2020/05/blog-post.html

XXXX

இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள்பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

XXX


அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:

கதிர்பெறு செந்நெல் வாடக்

கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.

இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.

நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

http://ninaivu.blogspot.com/2005/03/17.html

XXXX SUBHAM XXXX

 tags- சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் , அறப்பளீச்சுர சதகம்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

CONTENTS

1.பேய்களை விரட்ட வெண் கடுகு!!

2.திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்!

3.சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி, அணங்குகள்

4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

5.புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய் !

6.ஔவையாரை மிரட்டிய பேய் !

7.தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

8.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்

9.சிந்து சமவெளியில் பேய் முத்திரை

10.ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்

11.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி

12.பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ்

13.யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-1

14.யக்ஷப் ப்ரஸ்னம்–பகுதி-2

15.யக்ஷப் ப்ரஸ்னம் பகுதி- 3

16.யார் இந்த மர்ம தூதர்கள் ?

17.யோகிகள் தீப் பிழம்பாக மாறும் அதிசயம்!

18.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

19.புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

XXXX

வாச பஜனம்! (Post No.11,503)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,503

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாச பஜனம்! 

ச. நாகராஜன் 

1) வாச பஜனம்

வாக்கினால் செய்யப்படும் வழிபாடு வாச பஜனம் எனப்படும்.

இது நான்கு வகைப்படும்.  1) சத்யம் 2) ஹிதம் 3) ப்ரியம்

4) ஸ்வாத்யாயா

சத்யம் ப்ரியம் ஹிதம் ஸ்வாத்யாய: |

                          சர்வதர்சன சஹஸ்ரக:

உண்மை பேசுதல், இதமாகப் பேசுதல், ப்ரியமாகப் பேசுதல், சாஸ்திரங்களைக் கற்றுணர்தல்

இந்த நான்கும் வாக்கினால் செய்யப்படும் வழிபாடு எனப்படும்.

2) வானப்ரஸ்தம்

முதுமையில் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்குதல் வானப்ரஸ்தாஸ்ரமம் எனப்படும்.  இது மனித வாழ்க்கையில் மூன்றாவது ஆஸ்ரமம் ஆகும்.

இது நான்கு வகைப்படும். 1) வைகானஸம் 2) ஔதும்பரம் 3) வாலகில்யம் 4) பேனபா

வனஸ்தா அபி சதுர்விதா: – வைகானஸ- ஔதும்பரோ – வாலகில்ய: பேனபாஸ்சேதி |

–    நாரதபரிவ்ராஜகோபநிஷத்

ஒய்வு பெற்ற முது நிலையில் வானப்ரஸ்தம் விதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 75 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒருவர் இந்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம். வானப்ரஸ்தம் என்றால் வனத்தில் அல்லது காட்டில் வசிப்பது என்று பொருள் படும்.

இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம். (3.12.43)

இதை மேற்கொண்டவர்கள் பின்னர், நான்காவது ஆஸ்ரமமான சந்யாஸ ஆஸ்ரமத்தை மேற்கொள்வர்.

முதலில் இந்த வானப்ரஸ்தம் மனைவியுடன் தொடங்குகிறது. இருவரும் சேர்ந்தே வனத்தில் பயணிப்பர். ஒரு சிறிய குடிசையில் வசிப்பர். புனித தலங்களுக்கு யாத்திரை செய்வர். செக்ஸ் என்பது இருக்காது. பின்னால் மனைவி தனது இல்லம் திரும்புவார். தனது புத்திரர்களின் பராமரிப்பில் வசிப்பார்.

இதைப் பற்றிய நீண்ட விவரணத்தை ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

3) கலியுகத்தில் வெற்றி யாருக்கு?

அதர்மம் ஓங்கி இருக்கும் யுகம் கலி யுகம்.

இதில் தர்மத்தை அதர்மம் ஜெயிக்கும்.

சத்யத்தை அஸத்யம் வெல்லும்.

ராஜாவானவன் வேலைக்காரனால் வெல்லப்படுவான்.

ஆண்களை பெண்கள் வெல்வார்கள்.

தர்மோ ஜிதோ ஹ்ராதர்மேண ஜித: சத்யோன்ருதேன ச |

ஜிதா ப்ருத்யைஸ்து  ராஜான: ஸ்தீரிபிஸ்ச புருஷா ஜிதா: ||

4) செல்வத்தின் வகைகள்

செல்வம் நான்கு வகைப்படும்.

1) ஸ்வார்ஜிதம் 2) பிதுரார்ஜிதம் 3) ப்ராத்ருவித்தம் 4) ஸ்தீரிவித்தம்

உத்தமம் ஸ்வார்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம் |

கனிஷ்டம் ப்ராத்ருவித்தம் ச ஸ்தீரிவித்தம் மத்யமாத்யமம் ||

–    சுபாஷிதரத்னபாண்டாகாரம் 160/319

–     

இதில் தானாக சம்பாதிக்கும் செல்வம் ஸ்வார்ஜிதம். இது உத்தமம் எனப்படுகிறது. அடுத்து தந்தை வழியே வருவது மத்யமம் எனப்படுகிறது. அடுத்து சகோதரனின் செல்வத்தை அடைவது அதமம். ஸ்தீரி மூலமாகப் பெறப்படும் செல்வம் எல்லாவற்றையும் விட அதமம் ஆகும்.

5) வித்தை நான்கு வகைப்படும்

வித்தையானது நான்கு வகைப்படும்.

1) ஆன்விக்ஷ்கி   2) த்ரயீ 3) வார்த்தா 4) தண்டநீதி என்று இவ்வாறு அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

ஆன்விக்ஷ்கி என்றால் தத்துவம் என்று பொருள்

த்ரயீ என்றால் மூன்று வேதங்கள் என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதம் ஆகிய மூன்றையும் கற்று உணர்தல்.

வார்த்தா என்றால் பொருளாதாரம் – Economicis

தண்ட நீதி என்றால் அரசியல் –    Politics – என்று பொருள்.

ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ்சேதி வித்யா:

                        அர்த்த சாஸ்திரம் 1.2.1

6) வீணாகப் போகின்றவை நான்கு

சமுத்ரேஷு வ்ருஷ்டி:

கடலில் மழை : கடலில் மழை பெய்து யாருக்கு லாபம்? அது வீண் தான். நிலத்தில் பெய்தால் விளைச்சல் உண்டாகும்.

த்ருப்தஸ்ய போஜனம்

ஏற்கனவே நன்கு சாப்பிட்ட ஒருவருக்கு உணவு அளிப்பது.

சமர்தஸ்ய தானம்

நல்ல திறமை உள்ள ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம்.

திவா தீபா

விளக்கை பகல் நேரத்தில் எரிப்பது.

இந்த நான்கும் வீணே.

வ்ருதா வ்ருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம் |

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச ||

இப்படி நான்கு நான்காக உணர்ந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.

***

நூல் பல கல்: ஆத்திச் சூடி!(Post.11,502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,502

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

நான் எழுதிய 85 நூல்களில் கம்பன் படைப்புகள் பற்றிய இரண்டு நூல்கள் இதோ:

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

1.அருந்தவத்து அரசி சபரி; ராமாயண இன்பம்

2.ஒரே துறையில் மானும் புலியும்

3.கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு

4.சாமுத்ரிகா லட்சணம் பற்றி கம்பன் தகவல்

5.அகஸ்தியர் கொடுத்த அற்புத ஆயுதங்கள் : கம்பன்,

வால்மீகி தரும் தகவல்கள்

6.கங்கை பாவம் எப்படிப் போகும்? கம்பன்,

தரும் அதிசயத்  தகவல்

7.கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

8.கம்ப ராமாயண யுத்த காண்ட பொன்மொழிகள்

9.கம்பன் காலத்தில் ‘கமாண்டோ’ படை இருந்ததா?

10. கம்பன் கவிதையில் உபநிஷத், ஓம்

11.ராமன் குறித்து ராவணன் பரிகாசம், கிண்டல்

12.சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்!

13.கம்பராமாயணத்தில் கண்ணாமூச்சி

14.கம்பராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’

15.இராமபிரானுக்கு கம்பனும், காந்தியும், சுவாமி

விவேகானந்தரும் சூட்டும் புகழ்மாலை

16.தோள் கண்டார் தோளே கண்டார் – கம்பனுக்குப்  போட்டி

17.குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும்

18.பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

19.வெள்ளை வேண்டாம் – கம்பன், வள்ளுவன் போர்க்கொடி

20.கம்பன் பாடல்களில் அதிசய ரத்தினக் கற்கள்

21. அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்!

22. ஆரியம் முதல் பதினெண் பாடையில்…….. கம்பன் மொழி

23.உன்னம், புதா, உளில், குரண்டம், கிலுக்கம், சென்னம் குணாலம்—கம்பன் தரும் பறவை லிஸ்ட்

24.கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’!

25.சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! கம்ப ராமாயண இன்பம்

Xxxx

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

பொருளடக்கம்

1. ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு!

2. 9000 கோடி படை வீரர்! கம்பன் சொன்ன பொய்!!

3. அறம் வெல்லும், பாவம் தோற்கும்: கம்பன் பொ ன்மொ ழி

4. அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல்

5. அனுமன் தோல்வி ! ஆனை க்கும் கூட அடி சறுக்கும்!

6.அனுமாருக்கு இரண்டு இறக்கை ! கம்பன் புதுத் தகவல்!

7. அனுமார் பற்றிய விநோதக் கதை

8. இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தரும் தகவல்

9. இலங்கையைப் பாதுகாக்கும் பஞ்சவர்ணக்கிளி

10. கம்ப ராமாயணத்தில் பரத நூலும் சுரத நூலும்

11. கம்பனின் அதிசய உவமை ! புறச் சூழல் உண்மை

12. கம்பன் கவிதையில் உபநிஷதம், ஓம்

13. கம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து !

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ; உபநிஷத அற்புதங்கள்

14. கற்பணம் , முசுண்டி , பிண்டிபாலம் கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்

15. குடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை

16. சச்சரி , குச்சரி , பிச்சரி ன் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு இசைத் தமிழ் அதிசயங்கள்

17. சம்பாதி செய்த அற்புதம்: கம்பன் கூறும் செய்தி !!

18. சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்

19. தாய் தன்னை அறியாத கன்று இல்லை ! கம்பன் உவமை நயம்!!

20. துணை இலா தவரும், புணை இலா தவரும்– கம்ப ராமாயணச் சுவை

21. துன்பங்கள் நீங்க வழி ; அனுமன் கண்டுபி டிப்பு

22. நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனி னும் நல்லது உண்டோ

23. மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்?

24. ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன?

25. ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவை மிகு தகவல்

26.ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

27. ராமாயணத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!

உலகின் முதல் வெளி நாட்டு தற்காலிக அரசு!

28. ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல்

29. லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல்

30. வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் பிடித்த அவதாரம்!

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

  1. You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

—–subham—

Tags -என் புஸ்தகம், கம்ப ராமாயணம்