Tamil Hindu Encyclopaedia – 39; கந்தன், வேலன் Skanda ,Velan in Sangam Tamil Books (Post No.11,560)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,560

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is second part on Murugan/Skandan in Sangam Tamil Literature

Birth of Muruga

Paripatal poem 5 gives a detailed description about Muruga’s birth. Tripurantaka /Siva had union with his wife Uma and her foetus got divided into seven parts due to the interference of Indra . Actually ,the embryo or foetus was produced from the third eye of Lord Siva/Tripurantaka. Brahma received it and gave it to Indra, who could not handle it. So, he struck it with his weapon which got divided into seven parts. The seven parts were received by Sapta/ Seven Rishis. They gave it to their wives after processing them in Yaga fire . Arundhati, the chastest woman of Hindu literature, did not consume it. Other six women gave birth to six baby boys on lotus flowers in the beautiful pond in the Himalayas. Indra got angry and struck at six babies and they became one boy with six heads.

பரிபாடல் 5

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

5

உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,        30

6

‘விலங்கு’ என, விண்ணோர் வேள்வி முதல்வன்

விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது

அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,

எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு

திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் அருள:    35

7

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை

நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,

சாலார்; தானே தரிக்க’ என, அவர் அவி     40

உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்

8

தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,

வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,

அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:  45

9

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;

10

நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,                   50

11

அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,

எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,

அறு வேறு துணியும் அறுவர் ஆகி,

ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

xxx

The six mothers are referred to in other Sangam poems as well Pari 8-126; Murugu 255;Pari  9-6

மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த செல்வன் Pari 8-126

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ Murugu 255

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

மறு மிடற்று அண்ணற்கு ,மதி ஆரல் பிறந்தோய் Pari  9-6/7

Xxxx

Lord Muruga’s avatar is mentioned by many Sangam poets in

Murugu 253-255

Perum . 458/459

Kali 81-9; 83-84

Xxx

Paripatal 5 adds that Indra and his battalion got defeated in the war with Six Faced, 12 Handed Muruga. And the defeated Devas gave a memento each to Muruga. They are

Fire god /agni gave Cock

Indra gave Peacock

Yama gave Whit goat

And others also gave you and you hold the following 12 in your hands: Goat, Peacock, Cock, Bow, Tree, Sword, Spear, Axe, Trisula, Fire pot, Garland and Gem

ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய  55

போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,

13

அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,

செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து

வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,

திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;        60

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,

இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;

ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த

மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,தாமரை

பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,          65

செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,

தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,

வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,

14

மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்

பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.     70

Xxx

There are beautiful descriptions of his appearance in Murugu 1-11, 77-125

He is red like the rising sun in the sea. His 12 hands do different tasks; he has six faces  and seated on a peacock. His garlands and dress also looked fame red

Pari 5-11; 14-21; 21-67

Xxx

திருமுருகாற்றுப்படை 1-9

“[All beings of the] world rejoice when the Sun, praised by many, rises shedding its rays over the eastern ocean and traverses [in clockwise direction] around the MahAmEru mountain [centre of the Universe]; likewise shines forth Lord Murugan’s splendour of light, that is seen not only by the external eyes of the Lord’s devotees from far, but also perceived by the inner vision of devotees with their eyelids closed.

முருகன் தோற்றம் – விளக்கம்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு  

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,         5

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,  

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

Xxx

திருமுருகாற்றுப்படை

.”Lord Murugan is riding a male tusker, whose spotted forehead bears the scars made by the sharply-pointed-goad. The tusker’s forehead is well adorned with dangling wreaths of unfading blossoms [made of gold] and a fine frontal plate; when the death- wielding yaman-like-tusker walks rapidly like the blowing of strong wind, the bells hanging on either side produce tinkling sound alternately.

Lord Murugan’s sacred hair on the crowned-head is artistically arranged in five styles of thAmam, magudam, pathumam, kimpuri, and kOdagam, and adorned with gems-stones of contrasting colours, dazzling with the brightness of lightning. The finely- wrought golden magara-shaped-ear- rings of the Lord are dangling with a brightness like that of the stars that surround the lustrous moon which sheds its light even on distant earth. The effulgence of the Lord’s sacred faces is perceived by the minds of the sages who carry out their penances with faultless vow … “

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர,

படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை,         80

கூற்றத் தன்ன மாற்று அரு மொய்ம்பின்,

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி

மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப,         85

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்ப,

தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:     90 

Xxx

 What do the six faces do?

“One of the Lord’s sacred faces produces many sparkling splendours, so that the world, engulfed by darkignorance, may appear flawessly bright;

 another sacred face of the Lord, praised by the Lord’s devotees, joyfully confers on them all the gracious favours requested by them;

 another sacred face of the Lord ensures that sacrificial rituals of sages, conducted in accordance with true scriptures, are not disturbed by evil forces;

 another sacred face of the Lord expounds to the sages such great truths which are not revealed by true scriptures, and enlightens their minds just as the moon shows all the directions of the world;

 another sacred face of the Lord annihilates the demonic forces in battle, so that the sacrificial rituals may be held on the battle-field to celebrate the victory;

 another sacred face of the Lord rejoices together with the hunter’s young daughter VaLLi-ammai of creeper-like-slender-waist [representing ichchA-sakthi] … “

 தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:     90

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,

பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,   

ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ   95

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம் 

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,

திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம் 

செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,   

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100

குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்  

மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின் 

(English translation is from Kaumaram.com)

To be continued………………………………….

 Tags- Muruga, Skanda, Six Faces, Birth, 12 Hands, Indra

லண்டன் டாக்டர் அ .நாராயணனின் மார்கழிக் கவிதைகள்(Post.11,543-part 2)

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543-2

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழி 2

அஞ்சுகம் கரமேந்திய வஞ்சிக் கொடியாளே

கஞ்சன் வயிற்றிருந்த நெருப்பான நெடுமாலை

நெஞ்ச முருகும் பாமாலைப் பஞ்சணையிலே 

தஞ்ச மடைய வைத்தவளுமிந்தத் தாரகையே              2.5

நான் மறை போற்றும்  நாரணன் பேர் பாடி

நாளோர் பாவை நற்றமிழில் பண்ணிசையாக

நாச்சியார்  திருமொழியில் பேச்சிலே மயங்கி  

ஆய்ச்சியன் மையல் கொண்ட மங்கை வாழி                2.6

வையத்து வாழ்வோருய்ய மார்கழித்திங்களில்

நெய்யும் பாலுமுண்ணா அதி காலை நீராடி 

மையிடாக்கண்களும் நறு மலரிடாக் கூந்தலுமாய்

பொய்யும் புன்னெறியும் புறங்கூறலையும் புறம்

பெய்தி வாயும் வயிறும் வரந்தியோர் எஞ்சா                

அன்னமிட்டு  நோன்பு காத்துப் பாற்கடலில்

பையத்துயின்ற பரமனடிபாடிப்பணிந்த  நங்

கையர் குழாம் நாயகி நப்பின்னை வாழியே                 2.8

நாராயணன்

Xxxx

மார்கழி 3

மூவுலகளந்த  முகுந்தன் மலரடியே முதலாக

முறையான நூற்ற நோன்பிலே மும்மாரி   

முகில்களோர் திங்களிற் சொரிந்ததிலே

முளைவிட்டச் செந்நெல்ஓங்கிய நிலத்திலே 

ஊடு கயலோட கறவைகள் மடி கனத்ததிலே

முலை பீச்சிய பால் தாங்கிய குடம் வழிய

தீங்கின்றி நாடெல்லாம் தீராச் செல்வம் பெற

பன்னோர் நலம் கோரியக் கோதை வாழியே

மறையுள் நின்ற மாதவனோ யாதவனே

குறையொன்று மில்லாக் கோவலனாக 

நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி

வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி 

Xxxx

மார்கழித் திங்கள் 4

மறையுள் நின்ற மாதவனோ யாதவனே

குறையொன்று மில்லாக் கோவலனாக 

நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி

வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி 

வீங்கு நீர் கடலொத்த உடலோன், கை

வாங்கிய நீரால் கார் முகில் வண்ணனாக

தாங்கிய கரங்களில் மின்னிய ஆழியும்

முழங்கிய சங்கும் வில் விடுத்த சரம்போல் 

மழையில் உலகோர் உய்ய இயற்கையில் 

இழைந்தியங்கும் இருடிகேசனுக்கு மார்கழி

நீராடி தூயமங்கையராய்த் தூயானைத்தொழ

கோரிக்கை வைத்த கோதைநாயகி வாழியே

நாராயணன்

To be continued………………………………

ஆடினாள், பாடினாள்; முறத்தால் கணவனை சாடினாள்– அவ்வையார் அதிர்ச்சி (Post.11,559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,559

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 26

Arappalisura sataka verse 26 with my commentary 

         26. ஆகாதவை, அறப்பளீசுர சதகம்

உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி

     உறவாடும் உறவும் உறவோ?

  உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ

     றுண்டவர்க் கன்னம் ஆமோ?

தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு

     தக்கபயிர் பயிரா குமோ?

  தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்

     தானையும் தானை யாமோ?

விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு

     விருப்பமும் விருப்ப மாமோ?

  வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்

     மிக்கசீ வனமா குமோ?

அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 (இ-ள்.) அள்ளாத இருங் கருணையாளனே – குறையாத

பேரருளாளனே!, தேவர் தொழும் ஆதியே – அமரர் வணங்கும்

முதல்வனே!, அருமை ………. தேவனே!,

உள்அன்பு இலாத பேர்

தித்திக்கவே பேசி உறவாடும் உறவும் உறவோ – மனத்திலே அன்பு

இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும் உறவாகுமோ?, அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு அன்னம் ஆமோ – அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, தள்ளாது இருந்துகொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ – ஊக்கமின்றி வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர் நல்ல பயன் தருமோ?, தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன்சென்றிடும் தானையும் தானை ஆமோ – படைத்தலைவன் ஒருவன் இல்லாமல் முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ? விள்ளாத

போகம் இல்லாத பெண்மேல் வரும் விருப்பமும் விருப்பம் ஆமோ –

பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும் ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? வெகு கடன்பட்டபேர் செய்கின்ற சீவனமும் மிக்க சீவனம் ஆகுமோ – மிகு கடன்

கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?

xxxx

இதை ஒப்பிட அவ்வையார் வாழ்வில் நடந்த சம்பவம் தனிப்பாடல் திரட்டில்  உள்ளது.

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

XXX

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள். 

XXX

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

XXXX 

NO ENTRY BOARD AND ONE WAY TRAFFIC BOARD 

ஒருதலைக் காமம் என்பது சாலையில் உள்ள ONE WAY TRAFFIC BOARD

ஒன் வே டிராஃபிக் போர்டு; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; இது NO ENTRY BOARD நோ எண்ட்ரீ போர்டு போன்றது. உள்ளே நுழைந்தால் தொல்லைதான் ; எல்லோரும் நடிகையையோ, பணக்காரியையோ மணக்க முடியாது. 

XXXX 

நட்பு என்பது பசப்பான சொற்கள் நிறைந்தது அல்ல–குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

XXX

Tags–அறப்பளீசுர , சதகம், மண்ணைவி, அன்பான , உணவு, போலி நட்பு, அவ்வையார், தனிப்பாடல்கள்

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 7 (Post No.11,558)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,558

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 7

ச.நாகராஜன் 

கண்ணதாசனை அறிவியல் ரீதியாகவும் பார்க்க முடியும்.

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் எந்தாய் போற்றி

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போறி

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி

கர்ணன் படத்தில் வரும் இந்தப் பாடலைப் போற்றாதவர் கிடையாது.

முதல் வரியில் வேதக் கருத்தைத் தொட்டு ஆரம்பித்தவர் இறுதியில் அறிவியலில் முடிக்கிறார்.

சூரியன் எத்தனை பில்லியன் ஆண்டுகள்(ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஒளி தந்துள்ளான். ஒளி தரப் போகிறான். இந்த நானிலம் எத்தனை பில்லியன் ஆண்டுகள் இருக்கப் போகிறது. அறிவியல் ரீதியாக ஒரு பிரம்மாண்ட கணிதம் வருகிறது. அத்துணை ஆண்டுகள் நாம் சூரியனைப் போற்றுவோமாக என்கிறார் கவிஞர்.

ஆயிரம் வாசம் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்பதில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 40000 எண்ணங்களை எண்ணுகிறான் என்று அறிவியல் கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

சென்னையைச் சேர்ந்த நாஞ்சில் ஷா என்பவர் காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்  தலைமேலே அமரப் போகும்  சாதனை தான் எப்போ தென்பீர்

என்று ஒரு கேள்வியைகவிதையாகவே கேட்டார்.

அதற்கு கவிதையாகவே கவிஞர் பதில் கூறினார்!

அவரது பதில் இது:-

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்                              

  நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்                                     

ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்                                        அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்                                      

சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்                                               

 தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?                                        

 வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்                                      

 வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

When troubles come to trouble you do not allow the troubles to trouble you but allow the troubles to trouble the trouble so that no trouble is free to trouble you; let not the troubles trouble let the troubles trouble the troubles  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதையே வள்ளுவர் 623வது குறளில்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர் என்றார்.

துன்பம் நேர்ந்த போது அதற்காகத் துன்பப்படாதவர்கள் வந்துற்ற துன்பத்திற்கே துன்பத்தினை உண்டாக்கி வெற்றி காண்பார்கள் என்பது அவர் தரும் செய்தி.

பல துன்பங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டு ஜெயித்தவர் அவர்.

காலத்தைக் கடந்து வெற்றி பெற்றவர் தனது ஐம்பதாவது ஆண்டு பிறந்த நாளில் ஒரு சுயமதிப்பீட்டைச் செய்து கொள்கிறார்:

“ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”

என்றார். ஆனால் இறைவன் அவனது பாடல்களைத் தன்னருகே இருந்து கேட்க அவரை சீக்கிரமே அழைத்து விட்டான் போலும்.

தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                       

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன் –நான்

பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்                                             

படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்                                                                                                மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்

நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த                                                                                      நிலையிலும் எனக்கு மரணமில்லை

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.

ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.

‘அந்த நிலையினில்’ அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.

 அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில் ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!

‘கண்களை மூடினாலும்’ காலமெல்லாம் ஜீவித்திருப்பதை ‘சிம்பாலிக்காக’ உணர்த்தி விட்டாரோ, என்னவோ!

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்  இப்படி:

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

கவிதையின் கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவர் காலத்தை வென்ற கவிஞனாக ஒளிர்கிறார்.

You tube link

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்

தொடரும்

Tamil Hindu Encyclopaedia -38; Murugan /முருகன் Skanda in Sangam Tamil Corpus (Post No.11,557)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,557

Date uploaded in London – 17 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Tamil community’s most favourite god is Skanda also known as Kartikeya, Subrahmanya and Murugan. Both Tamil and Sanskrit names are used by the Tamils in naming their new born boys. Sangam Tamil literarture has a full book on Him called Tirumurugaatruppadai (shortened as Murugu திருமுருகாற்றுப்படை (முருகு)). He is the god of mountainous area called குறிஞ்சி Kurinji . in addition to Murugu, we have several long poems devoted to him in Paripatal where 8 long poems are attributed to him.

 In Tolkappiam , oldest tamil book, he is placed next to Vishnu and he was given the nameசேயோன்  Seyon , meaning the Redman.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன்  மேய மைவரை  உலகமும்

Among the Ten Idylls of Sangam period, the long poem on Skanda Murugan, திருமுருகாற்றுப்படை (முருகு)‘Tirumurugaatruppadai’ is given the first place. All these signify the importance given to Skanda/Murugan. Sangam poets called him வேள் , செவ்வேள் நெடுவேள் வேலான் , வேலன் in addition to Murugan.since he belonged to mountainous landscape called குறிஞ்சி KURINJI,   he is called Kurinjik kizavan குறிஞ்சிக் கிழவன்.

Murugan means the Handsome one. He is always presented as a Young god. Nakkirar who composed the long poem on him portrayed him as young and beautiful :

என்றும் இளையாய் ,அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே

He is described as a Heroic god. He has Spear in his hand.. it is called Vel வேல்.

He is shown riding a peacock or an elephant named Pinimukam பிணிமுகம்

His consorts are Valli and Deivanai

Valli is a Tamil girl and Deivaanai is the daughter of Indra, according to Tamil books.

We see lot of similarities between Kumarasambhava of Kalidasa and Sangam books. But two important differences are marrying Tamil Valli and killing Tamil demon Suurapadman.

When Tamil girls become love sick, their mothers thought they are possessed possessed by Murugan and sought the help of special village priest to drive away the sickness. He used to come in special dress and stage a dance with spear and offer meat and rice balls smeared with goat’s blood.

Tiru murugatruppadai explains that he is also worshipped in other places as well

முருகன் இருப்பிடங்கள் 

சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து,

வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,

ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220

ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும், 

வேலன் தைஇய வெறி அயர் களனும், 

காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,

யாறும் குளனும், வேறு பல் வைப்பும், 

சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும்,     225

மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்  

 xxx

Tamil words

திருமுருகாற்றுப்படை (முருகு)Tirumurugaatruppadai’

வேலன் VELAN, SEVVEL, NEDUVEL.

XXX

LATER USAGES

கார்த்திகேயன் KARTIKEYAN, ஸ்/கந்தன் S/KANDA  , சுப்ரமண்யன் SUBRAHMANYAN ,

 குமரன் KUMARAN,

பரிபாடல் PARIPATAL ,

குறிஞ்சி KURINJI,

குறிஞ்சி ஆண்டவன் Kurinji Aandavan

to be continued……………………………………………Tags- Murugan, Skanda, Tamil Sangam, Kurinji, God of Mountain, 

கம்பன் தரும் புது சரணாகதி பட்டியல்: வால்மீகியில் இல்லை (Post.11,556)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,556

Date uploaded in London – 17 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

வீடணன் அடைக்கலப் படலம்

விபீஷண சரணாகதி படலத்தில் கம்பனுக்கும் வால்மீகிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன .கண்வர் மகனான கண்டு மகரிஷி ஸ்லோகங்களை மேற்கோள்  காட்டி அதையே தான்  பின்பற்றப்போவதாக ராமபிரான் அறிவிக்கிறார் என்பது வால்மீகி சொல்லும் கதை

(நேற்றைய கட்டுரையில் விவரம் காண்க )

ஆனால் கம்பனோ, ராமபிரான் வாய் மூலமாக, விபீஷணனுக்கு முன்னர் சரண் அடைந்த 7 பேர் பட்டியலைத் தருகிறான் இரண்டு பேர் சொன்ன பாடல்களிலும் நமக்கு புதிய விஷயங்கள் கிடைக்கின்றன .

இன்னும் ஒரு வேறுபாடு,  ராமனின் உறுதிமொழியில் காணப்படுகிறது..நான் உன்னவன் என்று யாரேனும் ஒரே ஒரு முறை சொன்னாலும் போதும் அவரைக் காப்பது என் விரதம் / கொள்கை என்று வால்மீகி ராமன் சொல்கிறான் . கம்பனிலோ இந்த உறுதி மொழி முன்னரே கிஷ்கிந்தா காண்ட  சுக்ரீவன் சரணாகதியில் வந்து விடுகிறது . இதோ அந்த உறுதி மொழி

கிட்கிந்தா காண்ட நட்புக்கு கோட் படலத்தில் சுக்ரீவன் சொல்கிறான்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

உடனே ராமன் சொல்கிறான்

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்

சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.

பொருள்:- FRIENDSHIP TREATY BETWEEN SUGREEVA AND RAMA 

நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-

1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்

2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை

3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்

4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்

5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே

6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்

 எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!

Xxx

இப்போது யுத்தகாண்டத்துக்குச் செல்வோம் –

அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609)

மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்

‘பேர் அறிவாள! நன்று! நன்று!!’ எனப் பிறரை நோக்கிச்

‘சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்’என்ன

ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார்.  6.4.104

அனுமன் சொன்னதே சரி . VERY, VERY GOOD  வெரி,வெரி  குட்  என்று ஆரியன் ராமன் சொன்னான்

XXX

‘மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.  

இனி  உரைப்பதற்கு என்ன உண்டு?  அனுமன்  கூறிய ஆலோசனையே மேலான ஆலோசனை;  வீடணனை ஏற்றுக்   கொள்வதால்   வெற்றியே  உண்டாகட்டும்;  நாம்    தோற்கட்டும் அழியட்டும் அழியாது வாழட்டும்; – அபயம் என்று வந்தவனை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறேதும்  உள்ளதோ?

XXXX

 ‘இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்றான்;
தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ?         6.4.107

நம்மிடம்   அடைக்கலம் என்று   கூறி   வந்த இவன்;

இன்றுதான்     வந்தான்      என்று    விலக்குதல்   உண்டோ;

எனது தந்தையையும்,   தாயையும்   முன்பு கொன்றுவிட்டு வந்த

ஒருவனானாலும்   விலக்குவதுண்டோ; நம்மை  நெருங்கி வந்து

நமக்கு   அன்பு செய்கின்ற   துணைவன்   அவனே;  பின்பு   நம்மிடம்   மாறுபடுவான் என்ற போதிலும்;  இவனை ஏற்றுக்கொள்ளும் நமக்கு புகழ்தானே அல்லாது; வேறு பழி

உண்டாகுமோ?

XXX


1.முதல் சரணாகதி –புறா


‘பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என்று வாழ்கின்றானைத்
துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சி யாலே
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான்.   6.4.108

 பிறந்தநாள் முதலாக; ஒரு புறாவுக்காகத்தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய  சிபிச்சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ இல்லை அன்றோ? என்னை அடைக்கலம் என்று   கூறி  வந்து வாழ இருக்கும் இந்த வீடணன் செயல்களால்;  நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; நான்   என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன்கூறினான்.

XXX

இரண்டாவது சரணாகதி  –சிவனிடம் தேவர்கள்

 ‘இடைந்தவர்க்கு”அபயம் யாம்” என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?         6.4.109

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய

நஞ்சுக்கு அஞ்சி நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று

கெஞ்சிய தேவர்களுக்காக;   நஞ்சைத்தான்   உண்டு,  அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள்

கண்டதில்லையா?     தோல்வியால் சிதைந்து நொந்தவர்களுக்கு   உதவவில்லை என்றால்; தன்னிடம்  உள்ள பொருளைக்  கேட்டுவந்தவர்களுக்குத்   தரவில்லை   என்றால்;

அடைக்கலம்  என்று வந்தவர்களுக்குக்     கருணைகாட்டி    அருள்  செய்யவில்லைஎன்றால்; அறத்தால் என்னபலன்? ஆண்மையால் என்ன பயன்?

XXX

மூன்றாவது சரணாகதி  — வே டனுக்காக புறா செய்த தியாகம்


 பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ?         6.4.110


பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன் ஜோடியான   தன்னையும் பிடிக்கவந்திருந்த வேடன்   ஒருவனுக்கு;   குளிர்காலத்தில்,

 விறகு பொறுக்கி வந்து, வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப் போக்கி,  அவனது பெரும்பசியைப் பார்த்து, அந்தத்தீயில் வீழ்ந்து தனது  உடலையே அவனுக்கு  உணவாகக்   கொடுத்த   ஒரு   ஆண்புறா, பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை;   வேதத்தைவிட மேலான தொன்றல்லவா?

XXXX

நாலாவது சரணாகதி  — கஜேந்திர  மோட்சம்


‘போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின்,
“ஆதி அம் பரமே! யான் உன் அபயம்!” என்று அழைத்த அந்நாள்,
வேதமும் முடிவு காணா மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி,
மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பு இலாதார்?         6.4.111

கஜேந்திரன் என்ற பெயர் கொண்ட  யானை  ஒன்று;  தாமரைப் பொய்கையில்   சினம்  கொண்ட முதலை ஒன்று தனது காலைப்  பற்றி   இழுத்துச் செய்த   போரிலே, ஆதி மூலமாயுள்ள பரம்பொருளே நான்   உனது அடைக்கலம்;   என்று அழைத்த அந்த நாளிலே; வேதங்களும்  தேடி முடிவுகாண முடியாத   மெய்ப்பொருளாகிய   பரமன் வெளிப்பட்டு அந்த

முதலையைக் கொன்று   யானைக்குற்ற   துன்பத்தை  மாற்றியருளினார் என்ற வார்த்தையை;   அடியார்கள்   என்றும்    மறப்பார்களோ?

XXXX

ஐந்தாவது சரணாகதி  — மிருகண்டு, மார்க்கண்டேயன்


 ‘நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு ஆளன்,”நாளும்
தஞ்சு”என, முன்னம், தானே தாதைபால் கொடுத்துச்,”சாதல்
அஞ்சினேன்; அபயம்!”என்ற அந்தணற்கு ஆகி, அந்நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ?         6.4.113

பாற்கடலைக் கடைந்த தேவர்கள் நஞ்சினால் நலியாதபடி

உண்டு கண்டத்திலே  நிறுத்தி வைத்த, சிவபிரான்;

வாழ்நாள் குறைவாக தந்தையான மிருகண்டு முனிவருக்கு வரம் தந்தும்; சாவுக்கு அஞ்சினேன் நான்  உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த;   மார்க்கண்டனுக்கு அந்த நாளிலே உயிரைக் கவரவந்த எமனை விரட்டி ;  வாழ்நாளை என்றும்   பதினாறாக   மாற்றிய   சிவபெருமானுடைய பண்பைவிட;  மேலானது வேறேதும் உண்டோ?

XXXX

ஆறாவது சரணாகதி  – ஜடாயுவிடம் சீதை சரண்

“‘சரண் எனக்கு யார்கொல்?” என்று சானகி அழுது சாம்ப,
“அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தயெ்வ
மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ?         6.4.114

இராவணனால் கவர்ந்து   செல்லப்பட்டபோது, எனக்கு  அடைக்கலமளித்துக் காப்பவர் யார் ? என்று   கூறி, சீதா பிராட்டி அழுது   சோர்ந்திருக்க,  நான்   உனக்கு  அரணாக   நின்று காப்பேன்;  அஞ்சாதே   என்று   கருணை  கொண்டு   வந்து; 

கொடியவனான இராவணன் வாளால்  வெட்டிக்கொல்ல;  ,  இராவணனுடன் போர் செய்து தெய்வீக மரணத்தை சடாயு   பெற்றது; அது போலல்லாமல் நான் மாறுவது முறையல்லவே 

XXXX

ஏழாவது சரணாகதி  – ராமனிடம் முனிவர்கள் சரண்

உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,
மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115

நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன்   என்று   வந்த  ஒருவனுடைய உயிரினைத்   தன்னுயிராகக் கருதிப்   பேணிக் காப்பாற்றாத   கீழ்மகனும் நன்றி மறந்தவனும்;   சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்;   உண்மை   நெறியைப்  பொய் என்று கூறுபவனும்மீண்டு  வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.



‘சீதையைக் குறித்த தேயோ,”தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வென்”என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர்,”அபயம்” என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ?         6.4. 116

தேவர்களைத் துன்புறுத்திய  இராவணனை; கொல்வேன் என்று

நானே விரும்பி ஏற்றுக்கொண்ட   இந்த   விரதத்தின்    தன்மை;  சீதையை மீட்டு    வருவதற்கு மட்டுமல்ல; அரக்கனிடமிருந்து பாதுகாப்பு கோரி ,அந்தணர்கள் சரணடைந்தபோது நான் அஞ்சல் என்று கூறிய அந்தச் சொல்லை நான் மீறலாமோ?

XXXX

ராமன் உறுதிமொழி

6608. ‘காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா?         6.4.117

நாம் எடுத்த காரியம் முற்றுப்   பெறட்டும்;    அல்லது     முடியாமல்   போகட்டும்; கருணையாளர்க்குரிய தன்மை என்னவென்றால்   அடைக்கலம் என்று வந்தவனை

ஆதரித்துக்   காப்பதே;  அதைவிட மேலானதொன்று இல்லை.

கீழ் மக்களாயினும்  தங்களைச்   சரணடைந்தவர்களுக்கு;  தங்களது

ஆருயிரைத் தந்து காத்த  மன்னர்கள் தொகை  எண்ணிலடங்காது .

 ‘ஆதலான்,”அபயம்” என்ற போதத்தே அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’என்றான்.         6.4.118

ஆதலால்   இவன் அபயம் என்று   வந்த   அந்தச்  சமயத்திலேயே, அபயதானம் தருவதே நமக்கரிய கடமை என்பதை    என்பாலுள்ள அன்பால் கூடாதென்று சொன்னீர்கள்; இனி இதற்கு மாறாக எண்ணுதற்கு வேறு என்ன இருக்கிறது?    சூரிய குமாரனான சுக்கிரீவனே!   குற்றமொன்றுமில்லாத இந்த வீடணனை;  நீயே சென்று என்னிடம் அழைத்துக்கொண்டு வருக என்றான்.

 —- subham —

Tags–சரணாகதி தத்துவம், விபீஷணன் , 7 சரணாகதிகள், ராமன் உறுதிமொழி, அடைக்கலம் , வீடணன்

முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம்: அறப்பளீசுர சதகம் (Post.11,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,555

Date uploaded in London – 17 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ARAPPALISURA SATAKA VERSE 25 WITH MY COMMENTARY 

     25. இதனை இதுகண்டு மகிழும்,

அறப்பளீசுர சதகம் 25

தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப

     தவர்தந்த சந்ததி யதாம்!

  சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவி

     தங்குபைங் குமுத மலராம்!

புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ

     பொங்குதா மரைமலர் களாம்!

  போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்

     புரிவது மயூர இனமாம்!

சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு

     சீர்பெறுவ திரவலர் குழாம்

  திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்

     செகம்எலாம் என்பர் கண்டாய்!

அந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம் அந்தி வான் அனைய செம் சடாடவியனே – அழகிய

அந்தி வானம்போலச் சிவந்த சடைக்கற்றையுடையவனே!, அமலனே –

குற்றமற்றவனே!, அருமை ……… தேவனே!,

தந்தை தாய் மலர்முகம் கண்டு

நின்று ஆலிப்பது அவர் தந்த சந்ததியது ஆம் – பெற்றோரின் மலர்ந்த

முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்ற சந்ததி ஆகும், சந்திரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி தங்கு பைங்குமுத மலர் ஆம் – திங்களின் வருகைநோக்கி மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய அல்லிமலர் ஆகும், புந்தி மகிழ்வாய் இரவி வருதல் கண்டு அகம் மகிழ்வ

பொங்கு தாமரை மலர்கள் ஆம் – மனம் மகிழ்வாக ஞாயிறு எழுதல்

நோக்கி மனம் களிப்பன மிகுதியான தாமரைப்பூக்கள் ஆகும், போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம் புரிவது மயூர இனம் ஆம் – முகிலை நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம்புரிவது மயிலின் கூட்டம் ஆகும்,

சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு சீர் பெறுவது இரவலர்

குழாம் – மனக் களிப்புடன் கொடுக்கும் கொடையாளியைக் கண்டு

சிறப்புறுவது இரவலர் கூட்டம், திகழ் நீதி மன்னரைக் கண்டுகளிகூர்வது இச் செகம் எலாம் என்பர் – விளங்கும் முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம் யாவும் என்று அறிஞர் கூறுவர்.

Xxxx

பெற்றோரைக் கண்டால் குழந்தைகள் மகிழும்

சந்திரனைக் கண்டால் அல்லி மலர்கள் மலரும்

சூரியனைக் கண்டால் தாமரைகள் விரியும்

மேகத்தைக் கண்டால் மயில்கள் ஆடி மகிழும்

கொடையாளிகளைக் கண்டால் பாவலர்கள் மகிழ்வர்

நல்ல அரசனைக் கண்டால் உலகமே வணங்கும் –அம்பலவாணர்

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி இதற்கு  நல்ல எடுத்துக்காட்டு. உலகில் யார் எந்தப் பக்கம் சர்வே எடுத்தாலும் எப்போதும் முன்னனியில் நிற்கிறார் மோடி .

Xxx

DAFFOLDILS டாஃபோடில்ஸ் மலர்கள் தரும் இன்பம் பற்றி ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் செப்புகிறார்

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.

சிந்தனைச் சூழலில் சிக்கி

அடிக்கடி படுக்கையில் புரள்வேன்

மனக்கண் முன்னே பளிச்சிடும்

அந்த தனிமை தருவதோ பிரம்மானந்தம்

இதயம் நிரம்ப மகிழ்ச்சி பொங்க

ஆடுவேன் டாபோடில்ஸ் மலர்களுடன் கூட

–WILLIAM WORDSWORTH

XXX

ஒப்பிடுக

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

Xxxx

ஐயாஎன் பெயர் வள்ளுவர்.

நான் எழுதிய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

xxx

எது அல்லது யார் இன்பம் தருவர்?

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம் 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

Xxx

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

Xxx

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

XXX

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

XXX

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

XXX

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

XXX

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

–SUBRAHMANYA BHARATI

Xxxx subham xxxxx

TAGS–இன்பம் , எது, யார், தருவார் , அம்பலவாணர் , சதகம்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 6 (Post.11,554)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,554

Date uploaded in London – 17 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 6

ச.நாகராஜன் 

1965ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் சிறிது மனத்தாங்கலால் அவரைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞரை ஆண்டவனே என்று அழைப்பது தான் வழக்கம். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கண்ணதாசனைத் தவிர வேறு யாரும் பாடலை எழுத முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெதுவாக எம்.ஜி.ஆரிடம் இதைத் தெரிவித்த போது ஆண்டவன் இந்தப் பாடலை எழுதுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றவர் அவரையே அழைத்தார்.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் என்ற பாடல் மலர்ந்தது. உலகையே மகிழ்வித்தது!

பின்னால் ஒரு காலத்தில் முதல் அமைச்சர் எம் ஜி ஆரிடமிருந்து கவிஞருக்கு ஒரு போன் வந்தது. “ஆண்டவனே! நான் சொல்வதற்கு நோ என்று சொல்லக் கூடாது என்ற கண்டிஷனுடன் ஆரம்பித்தார் எம் ஜி ஆர். உங்களை அரசவை கவிஞராக அனவுன்ஸ் செய்யப் போகிறேன்.” என்றார் அவர். கவிஞர் மாபெரும் கூட்டத்தில் மனம் நெகிழ்ந்து பேசினார். அவர் கண்கள் கசிந்தன!

இதயக் கமலம் படத்தில் ஒரு பாடல்:

மலர்கள் நனைந்தது பனியாலே என்ற அந்தப் பாடலில் கடைசி வரிகளில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார் கவியரசர்.

இறைவன் முருகன் திரு வீட்டில்

என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி

உயிரென்னும் காதல் நெய்யூற்றி

உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி! என்று  முடிந்தது பாடல்.

ஆழ்வார்கள் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாகவும், வையம் தகளியாய் வார்கடலே நெய்யாகவும்,  ஏற்றிய விளக்கு நம் நினைவிலே வந்து கண்ணதாசன் ஏற்றி வைக்கும் விளக்கு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

 கேள்வி-பதில் பாணியில் அவர் ஒரு புதிய பிரமாண்டத்தை சிருஷ்டித்தார்.

நதி எங்கே போகிறது? கடலைத் தேடி!

நாள் எங்கே போகிறது? இரவைத் தேடி!

நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!

நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி!

இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நல்ல அழகிய கேள்வி-பதில் பாடல்கள் உடனடியாக நம் நினைவுக்கு வரும்.

கன்னத்தில் என்னடி காயம்? இது வண்ணக்கிளி செய்த மாயம்

கனி உதட்டில் என்னடி தடிப்பு – பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு’

மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம்?

கண் காட்டுவதென்ன ஜாலம்? தலைவி தலைவனிடம் பெற்ற இன்பத்தை மாற்றிக் கூறி காதல் இன்பத்தை மேலும் மெருகூட்டிக் கொள்வது கண்ணதாசன் செய்யும் ஜாலம்!

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்!

இது இன்னொரு உருக்கமான ரகம்.

ஒரு படத்தின் முழு சாரத்தையும் ஒரு பாடலிலே தருவது அவர் வழக்கம். முந்தைய கால கவிஞர்களுக்குக் கிடைக்காத திரைப்பட யுகத்திலே கிடைத்த இந்த வாய்ப்பை கவியரசன் போலச் சிறப்பாகப் பயன்படுத்திய கவிஞர் இன்னொருவர் இல்லை.

எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:

 பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

ஏன் என்று நான் சொல்லலாகுமா

ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்

அலங்கார சின்னம் அலை போல மின்னும்

நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்

பழங்கால சின்னம் உயிராக மின்னும்

துள்ளி வரும் வெள்ளி நிலா

துவண்டு விழும் கொடியிடையாள்

விண்ணோடு விளையாடும்

பெண் அந்த பெண்ணல்லவோ

சென்றேன் அங்கே

கண்டேன் இங்கே 

எனக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியினால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். அது ESP Power – EXTRA SENSORY PERCEPTION POWER! அதீத உளவியல் ஆற்றல் சக்தி தன்னிடம் இருக்கிறது என்பதை அவர் நிரூபித்த சம்பவங்கள் ஏராளம்.

சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடம் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.

“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.

“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து அவர்  கேலி செய்யப்படுகிறார்.

ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்

1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன. மக்கள் தவிதவித்துப் போயினர்.

கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர்.

பாண்டிச்சேரியிலும் மழை இல்லை. ஒரே வறட்சி.

விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்ணனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

அவர் வாக்கு பொய்க்கவில்லை.

வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.

பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாகச் செய்தி வந்தது!

இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிஞரும் அதில் பங்கேற்றார்.

பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.

வான் முட்டும் கோபுரங்கள்

    வானுக்குச் செய்தி சொல்வீர்!

தேன்முட்டும் இதழாள் சக்தி

     தேவியைத் துயிலெ ழுப்பீர்!

கான்முட்ட மழைபொழிந்து

     காவிரி பெருகி ஓடி

மீன்முட்டும் வெள்ளக் காடாய்

      வியன் நிலம் ஆவதாக!

என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.

கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவதற்குள் அடை மழை கொட்டியது.

You tube link

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன்

தொடரும்

Learn Tamil Verbs Part -34 ( 1000 Verbs) Podu போடு as suffix (Post No.11,553)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,553

Date uploaded in London – 16 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PODU is an interesting verb. When it is used as a separate verb it has the simple meaning drop (down).

But you can use it as a suffix with words to form auxiliary verbs

Like English LET, Tamil PODU போடு also has hundreds of usages.

I am listing only the common verbs

The O sund in pOdu போடு is similar to cOde in English word ‘Code’

Here are some examples

DRESS

போடு PODU- Drop

சட்டை போடு SATTAI PODU = PUT ON SHIRT

MAY BE USED WITH MANY DRESSES LIKE ரவிக்கை  RAVIKKAI/BLOUSE PODU

XXX

ADD போடு WITH TAMIL WORDS

JEWELLERY தோடு மூக்குத்தி வைர நெக்லஸ்

தோடு THODU/EAR RING

மூக்குத்தி MOOKKUTHTHI – NOSE RING

மோதிரம் MOTHIRAM – FINGER RING

சங்கிலி SANGKILI -NECKLACE…………………………………. PODU

IT MEANS WEAR TH ABOVE MENTIONED JEWELLERY

XXXX

FOOD ITEMS

IF YOU ADD PODU TO FOLLWING, IT MEANS  ‘SERVE ME’  OR MAKE ME

உப்பு UPPU,  சர்க்கரைSARKKARAI சாதம் SAATHAM , சோறு SORU இட்லி IDLI, தோசை DOSAI, சாம்பார் SAAMBAAR பாயசம் PAAYASAM அப்பளம் APPALAM  காபி

COFFEE  /KAAPPI PODU= MAKE ME COFFEE , டீ PODU  TEA – MAKE ME TEA, படுக்கை போடு PADUKKAI PODU, MAKE ME BED

XXXX

ADD PODU போடு WITH ALL THESE WORDS

மொட்டை போடு MOTTAI PODU—GIVE  HAIR TO GOD, SHAVE THE HAIR

கட்டை போடு KATTAI PODU  – PLACE THE WOODEN BLOCK BEFORE CHARIOT

SIMILAR TO BREAK PODU= APPLY BREAK IN A CAR

பட்டை போடு= PATTAI PODU= WEAR HOLY ASH

நாமம் NAAMAM PODU- WEAR VERTICAL TILAK MARK

AS AN IDION SAME TWO WORDS  MEAN CHEAT SOME ONE OR DON’T GIVE BACK WHAT IS PROMISEED

அட்டை போடு – ATTAI PODU== PLACE A WRAPPER TO A BOOK

கட்டம் போடு– KATTAM PODU= DRAW SQUARES

மட்டம் போடு= MATTAM = PLAY TRUANT; STAY AWAY FROM SCHOOL OR OFFICE WITHOUT PERMISSION

வட்டம் போடு= VATTAM =CIRCLE (BIRDS CIRCLING)

கோலம் போடு= KOLAM =MAKE RANGOLI, DRAW RANGOLI DESIGNS IN FRONT OF THE HOUSE OR INSIDE HE HOUSE

ஆட்டம் போடு = AATTAM = IDIOM AND PHRASE= BEHAVING BADLY, OSTENTATIOUSLY

பிச்சை போடு = PICHAI = GIVE ALMS

தர்மம் போடு = DHARMAM =GIVE ALMS

அடி போடு= ADI = GIVE HIM A BLOW, SMACK THE BOY OR GIRL

ADD PODU போடு WITH ALL THESE WORDS

POTTI போட்டி PODU = CONTEST

VAZAKKU வழக்கு = SUE, FILE A CASE

PANTHU பந்து THROW BALL

GOAL கோல் SCORE A GOAL  

ODITHTHU ஒடித்து = BREAK IT

UDAITHTHU உடைத்து = BREAK IT

PAZI பழி = BLAME

KADAIYIL PODU கடையில் = SELL IT IN THE SECONDHAND SHOP

MISHINIL PODUமிஷினில் போடு =PUT IT IN THE MACHINE

VOTTU வோட்டு= CAST YOUR VOTE

சுற்றிப்போடு= CIRCLE AROUND  

THAALPPAAL தாழ்ப்பாள் BOLT IN OR BOLT OUTT

KANNAADI கண்ணாடி= WEAR SPECKS OR FRAME A PICTURE

KODU கோடு DRAW LINES

PANAM  பணம் ADD MONEY INTO ACCOUNT

PADAM படம் DRAW A PICTURE, SHOW THE FILM IN A CINEMA HOUSE

NAADAKAM நாடகம் = STAGE A PLAY

மெட்டு= MAKE SUITABLE TUNE

RAAGAM  ராகம் SING WITH SUITABLE RAGA

UTHTHARAVU உத்தரவு – PROCLAIM AN ORDE

விலை= MARK THE PRICE

BILL  பில் GET THE BILL READY  

MARUNTHU மருந்து APPLY EXTERNAL MEDICINE

MOOKUPPODI மூக்குப்பொடி USE SNUFF POWDER

PUKAIYILAI  புகையிலை USE OR CHEW TOBACCO

VETRILAI வெற்றிலை CHEW BETEL LEAVES OR SUPARI /PAAKKU

VAANGI வாங்கிப் = BUY IT AND KEEP FOR FUTURE

VIRITHTHU விரித்துப் SPREAD IT (MAT OR BEDSHEET OR  QUILT)

ILAI இலை- SPREAD THE PLANTAIN LEAVES FOR SERVING FOOD

THIRAI திரை CLOSE THE CURTAINS

URAI உறை COVER THE PILLOWS WITH OR COVER SOMETHING WITH A COVERING CLOTH

KALIMBU PODU களிம்பு- APPLY OINTMET

THIS IS NOT A COMPREHENSIVE LIST; ONLY COMMON USAGES ARE GIVEN

ADD PODU போடு WITH ALL THESE WORDS

KEEZE கீழே DROP IT

MELE மேலே THROW IT UP

THADAI தடை = BAN IT, PROHIBIT

GUNDU குண்டு = BOMB IT

OOSI ஊசி = GIVE INJECTION

THAALAM தாளம் = GIVE SUITABLE BEATS

PHRASE = SECOND FIDDLING, SUPPORTING ONE WITHOUT RHYME OR REASON

THAIYA தையல் = STICH IT

PANGU பங்கு = SHARE IT, DIVIDE IT

KAI ELUTHTHU கையெழுத்து = SIGN THE DOCUMENT OR LETTER

KUTTI குட்டி = MAMMALS GIVING BIRTH

MANU மனு- SUBMIT AN APPLICATION OR MEMORANDUM

KOOCHAL கூச்சல்= MAKE A LOUD NOISE, SOS

SATHTHAM சத்தம் = MAKE LOUD NOISE

SOTHANI சோதனை= RAID, PROBLE, CHECK A PERSON

XXX

RESPECTFUL OR PLURAL

IF YOU WANT TO GIVE RESPECT OR ADDRESSING MORE THAN ONE PERSON, MAKE IT PLURAL BY ADDING ங்கள் .

போடு + ங்கள் PODUNGAL

போடு +ங்கோ = BRAHMINICAL DIALECT; USED IN TEMPLE

XXXX

 RHYME AGAINST WIFE

தோடு தோடு என்று மனைவி நச்சரித்தாளாம்

THODU THODU ENDRU MANAIVI NACHCHARITHTHAALAAM

EARRING  EAR RING SAYING WIFE NAGGING

கணவன் போடு போடு என்று போட்டு அடித்தானாம்

HUSBAND HIT HIT  HITING BEATING )HER)

XXX

CONJUGATION

போடு  போடுகிறான்- போடுவான்- போட்டான் –

போடவில்லை – போடமாட்டான் – போடவில்லை

போடுகிறேன் போடுகிறாய் போடுகிறீர்கள் , போட்டார்கள்

போடும் போடாது

போடாதே , போடாதீர்கள் , போடமாட்டீர்கள் , போடுங்கள்

—SUBHAM —tags- podu, podu suffix, Tamil verbs, போடு

நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை (Post No.11,552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,552

Date uploaded in London – 16 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மழை பெய்யக் காரணம் என்ன?

கடலிலுள்ள நீரை சூரிய ஒளி சூடாக்குகிறது. அது ஆவி ரூபத்தில் மேலே சென்று மேகமாகிறது. பின்னர் உரிய சூழ்நிலை ஏற்படுகையில் மழையாகப் பொழிகிறது. இதெல்லாம் விஞ்ஞானம். அப்படியுள்ள மேகம் எப்போது புயல் உருவில் வந்து அழிக்கும் ;பருவ மழை உருவில் வந்து காக்கும் என்பதை இன்றும் விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. ஆண்டுதோறும் அமெரிக்காவைச சுற்றியுள்ள இடங்களை சூறாவளிகள் தாக்கி கோடிக் கணக்கில் சேதம் உண்டாக்குகின்றன. இந்தியாவில் புயல் மழை வெள்ளத்தில் கோடிக்கணக்கான டன் தானியங்கள் வீணாகின்றன . இவைகளையெல்லாம் கண்ணோட்டமிட்ட கிருஷ்ண பரமாத்மா, வள்ளுவர், அவ்வையார் ,விவேக சிந்தாமணி எழுதிய  பெயர் தெரியாத ஆசிரியர், சதகம் எழுதிய அம்பலவாணர் வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். அவைகளில் இழையோடும் கருத்து தர்மம் இருக்கும் இடத்தில் மழை பெய்யும். மன்னவர் ஆட்சி நேர்மையாக இருந்தால் பயிர் செய்யாமலே தானியம் விளையும் Magic மாஜிக்- மாயாஜாலம் பற்றி வள்ளுவனும் கதைக்கிறான்.

1.ஒப்பிடுக

நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)

எல்லார்க்கும் பெய்யும் மழை10 மூதுரை

பொருளுரை:

நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.

அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.

Xxxxx

2.இதோ வள்ளூவன் எழுதிய  குறள்:–

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் ‘பெய்’ என்றால் மழை பெய்யும்..

மநு நீதி நூலிலும் (9-247) நல்ல மன்னவன் ஆட்சியில் பருவ மழை தவறாது என்கிறார்.

9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்–குறள் 559

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

xxx

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு–குறள் 545

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

Xxxx

3. பகவத் கீதை 3-14

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥3-14॥

அந்நாத்³ப⁴வந்தி பூ⁴தாநி பர்ஜந்யாத³ந்நஸம்ப⁴வ:|

யஜ்ஞாத்³ப⁴வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்³ப⁴வ: ||3-14||

பூ⁴தாநி அந்நாத்³ ப⁴வந்தி = உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன

பர்ஜந்யாத் அந்ந ஸம்ப⁴வ: = மழையால் உணவு தோன்றுகிறது

பர்ஜந்ய: யஜ்ஞாத்³ ப⁴வதி = மழை வேள்வியால் ஆகிறது

யஜ்ஞ: கர்ம ஸமுத்³ப⁴வ: = வேள்வி செய்கையினின்று பிறப்பது

xxx

कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।

तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥

கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் வித்³தி⁴ ப்³ரஹ்மாக்ஷரஸமுத்³ப⁴வம்|

தஸ்மாத்ஸர்வக³தம் ப்³ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் ||3-15||

கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் = செய்யும் கர்மங்கள்  பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்

ப்³ரஹ்ம: அக்ஷரஸமுத்³ப⁴வம் வித்³தி = பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது

தஸ்மாத் ஸர்வக³தம் ப்³ரஹ்ம = ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்

நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் = எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது

ஆக வேள்வியே மழைக்கு காரணம். வேள்வி என்பது யாகம் மட்டும் என்பதல்ல.அறநெறி வாழ்வும் வேள்வியே

xxx

4.அறப்பளீசுர சதகம் பாடல் 24

24. ஒன்றுக்கொன்று ஆதரவு

வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்

     வாழ்வுதரும் உதவி புவனம்

  வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி

     வாழ்பெற் றிடுமன் னராம்!

தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவி

     சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;

  சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவி

     சீர்பெற வழக்கு மழையாம்!

மேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்று;

     வேந்தர்தம் நீதி யொன்று

  வேதியர் ஒழுக்கம்ஒன் றிம்மூன்று மேயென்று

     மிக்கபெரி யோர்உரை செய்வார்

ஆனமர் நெடுங்கொடி உயர்த்தனம் இறைவனே!

     அதிபனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆன் அமா நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே – ஏறு

எழுதிய நீண்ட கொடியை உடைய எம் தலைவனே!, அதிபனே – அரசனே!,

அருமை ………… தேவனே!, வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர்

கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் – அமரரும் தென்புலத்தாரும்

ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடரும் பிரமன் திருமால் உருத்திரன்

என்னும் முத்தலைவரும் ஒன்பது கோள்களும் வாழ்வதற்கு உதவிசெய்வது

இவ்வுலகம், வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு

பெற்றிடும் மன்னர் ஆம் – செழிப்பு மிகுந்த உலகத்திற்கு மேலும் மேலும்

துணையாவார் வாழ்விற் செழித்த அரசர்கள் ஆவர், தேன் அமர் நறு

தொடையல் புனை மன்னவர்க்கு உதவிசேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் –

தேன் பொருந்திய மணமலர்த்தார் அணிந்த அரசர்கட்குத் துணை

அரசரைச் சார்ந்த குடிகளும் படையும் ஆகிய குழுவாகும், சேர் குடி

படைக்கு உதவி விளை பயிர் – கூடிய குடிகளுக்கும்படைகளுக்கும்

துணையாவது விளைந்த பயிராகும், பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும்

மழை ஆம் – பயிருக்குத் துணையாவது சிறப்புறப்பெய்யும் மழையாகும்,

மேல் நிமிர் மழைக்கு உதவி – வானத்தில் ஓங்கிப் பரவிப் பெய்யும்

மழைக்குத் துணையாவன, மடமாதர் கற்பு ஒன்று – இளமங்கையின் கற்பு

ஒன்றும், வேந்தர் தம் நீதி ஒன்று – அரசர்களின் முறைமை ஒன்றும்,

வேதியர் ஒழுக்கம் ஒன்று – அந்தணரின் ஒழுக்கம் ஒன்றும், இம்

மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் – (ஆகிய) இவை

மூன்றுமே என்று சிறந்த சான்றோர் செப்புவார்.

     (வி-ரை.) ஆன் : ன் : சாரியை. உயர்த்தல் : அடையாளமாக

வானிற் பறக்கும்படி உயர்த்திக் கட்டுதல். ஒன்பது கோள்கள் : ஞாயிறு,

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது.

5.   விவேகசிந்தாமணி

      வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை

          நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை

          மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை

          மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே”

என்னும் விவேகசிந்தாமணியின் கருத்து இங்கு வந்துள்ளது.

     (க-து.) அரசரும், அந்தணரும் மாதரும் ஒழுக்கந்தவறாது

இருப்பின் உலகியல் ஒழுங்காக நடைபெறும்.

அவர்கள் மூவரும் ஒழுக்கம் தவறினால் மாதம் மும்மாரி பெய்யும் மழை  வருடம் மும்மாரியாக மாறி வறட்சி ஏற்படும் 

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே!

Xxx

6. BHARATI

.முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

Xxxx

7.ஆண்டாள்

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று ஆண்டாள் திருப்பாவை பாடினார்

-subham—-

TAGS–மழை , நல்லாட்சி , கற்பு, நல்லார் ஒருவர் உளரேல் , அறப்பளீசுர சதகம் , கீதை, குறள்