ராமாயணத்தில் ஜனநாயகம், சரணாகதி தத்துவம்! (Post No.11,551)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,551

Date uploaded in London – 16 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமாயணத்தில் எல்லோரும் பார்ப்பது பக்திக் சுவையே; ராமன், சீதை, அனுமன் ஆகியோர் மீதுள்ள பக்தி காரணமாக வேறு பல முக்கிய விஷயங்களை கவனியாமல் விட்டுவிடுகிறோம் ஜனநாயகம், சரணாகதி தத்துவம் ஆகியன பற்றி அருமையான விஷயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கம்பன் நீண்ட உரையாற்றுகிறான்; ஆனால் வால்மீகியில் வேறு விஷயங்கள் உள்ளன.ஒப்பிட்டு ரசிப்போம்

ஜனநாயகம்-1

ராமனை முடிசூட்ட விரும்புகிறேன் என்று அறிவித்த தசரதர் சொல்கிறார்

यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।

भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।

யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்

பவந்தோ மே அனுமன்யந்தாம்  கதம் வா கரவாண்யாஹம்

இது எனது விருப்பம்நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு உங்களு

டைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்யவேண்டும் என்றும் விளம்புங்கள் .

அங்கே ஒரு பொன்மொழியையும் உதிர்க்கிறார் ‘பாரபட்சமில்லாதோரின் கருத்துக்கள் பயனுடையவை’ என்கிறரர்.

यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।

अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।

யத்ய ப் யேஷா மாமா ப்ரீதிர்  ஹிதம் அந்யத் அபி சிந்த்யதாம்

அன்யா மத்யஸ்த்ய சிந்தா ஹி  விமர்த்தாப்ய  அதிகோதயா

இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்றுவழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்கவேண்டும். நடுநிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக்கூடியவை

Xxxx

ஜனநாயகம்-2

இது தவிர வால்மீகியும் கம்பனும் சொல்லாத ஒரு ராமாயண  ரகசியத்தை மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் அகநாநூற்றுக் கவிதையில் (அகநானூ.70) சொல்கிறார் . திருவணைக் கரைக்கு அருகில்    ஒரு ஆலமரத்தின் கீழ் , இலங்கையின் மீது படையெடுப்பது பற்றி வானர சேனை COMMANDERS கமாண்டர்களுடன், ராமன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் , அப்போது மரத்தின் மீதிருந்த ஏராளமான பறவைகள் கூச்சல் /இரைச்சல் போட்டதாகவும் SHUT UP YOUR MOUTH ராமன் ஷட் அப் யுவர் மவுத் என்று கட்டளையிட்டவுடன் பறவைகள் ‘கப் சிப்’ என்று அடங்கி  மவுனமாயின  என்றும் பாடியுள்ளார். இங்கேயும் அவர் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி பிறரைக் கலந்தாலோசித்தத்தைக் காண்கிறோம்

கடல் மீது பாலம் கட்டுவது பற்றி நீலன் என்ற தமிழ் சிவில் என்ஜினீயருடன் TAMIL CIVIL ENGINEER NEELAN ராமன் கலந்தாலோசித்தது வேறு இடங்களில் காணப்படுகிறது ; ஆக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் ஜனநாயக நடை முறையினை ராமாயணம் மஹாபாரதம் முழுதும் காண்கிறோம். ரிக் வேதத்தில் உள்ள சமிதி (கமிட்டி), ஸபா (சபை-அவை) என்பன எல்லாம் உலகிற்கே நாம் ஜனநாயத்தைக் கொடுத்ததைக் காட்டுகின்றன. பின்னர் எண்பேராயம், ஐம்பெ ருங்குழு என்பனவற்றை தமிழர்கள் அமைத்து, ஜனநாயக முறையில் முடிவெடுத்தனர். அரசனும் அவர்கள் சொல்லுவதைக் கொண்டே ஆட்சி நட்த்தினான்.

Xxxx

ஜனநாயகம்-3

ராமரின் சரணாகதி தத்துவம்

ராமரின் சரணாகதி தத்துவம் வால்மீகி இராமாயண  யுத்த காண்டத்தில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. இதை அறிவிக்கும் முன்னர், அவர் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அறிவதில் நாம் ஜனநாயக நடை முறைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல இது KANDU MAHARISHI  ‘கண்டு மகரிஷி’ யின் கொள்கை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் . அதாவது தன்னிச்சையான (NOT AUTOCRATIC) முடிவு இல்லை.

मित्र भावेन सम्प्राप्तम् न त्यजेयम् कथंचन |

दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||६-१८-३

நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்கமாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் -6-28-3

மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன

தோஷோ  யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்

XXXX

புறாவின் கதை

श्रूयते हि कपोतेन शत्रुः शरणम् आगतः ||६-१८-२४

अर्चितः च यथा न्यायम् स्वैः च मांसैर् निमन्त्रितः |

ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதையையும் ராமன் மேற்கோள் காட்டுகிறான்.

(இந்த இடத்தில் கம்பன் ஒரு நீண்ட பட்டியலே தருகிறான். அதையும் பின்னர் காண்போம் )

ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு சரணம் ஆகதஹ

அர்ச்சிதஹ ச யதா ந்யாயம் ஸ்வைஹி ச மாம்ஸைர் நிமந்த்ரிதஹ

Xxxx

स हि तम् प्रतिजग्राह भार्या हर्तारम् आगतम् ||६-१८-२५

कपोतो वानर श्रेष्ठ किम् पुनर् मद् विधो जनः |

ஓ குரங்கினப் பெருந்தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்றபோதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப்போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்யவேண்டும் ?

ஸ ஹி  தம்  ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ

கபோதோ வானர ஸ்ரேஷ்ட  கிம் புனர் மத் விதோ ஜனஹ

ஈசாப் கதைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றன என்பதற்கு வேதம் ,ராமாயண , மஹாபாரதம்,  ஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரம், ஹிதோபதேசத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன .

(புறாக்கதை , ஈசாப் காப்பி அடித்த கதைகள் பற்றி இந்த பிளாக்கில் ஏற்கனவே கட்டுரைகள் உள )

Xxxx

ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परम ऋषिणा ||६-१८-२६

शृणु गाथाम् पुरा गीताम् धर्मिष्ठाम् सत्य वादिना |

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்

ருஷேஹே கண்வஸ்ய புத்ரேன  கண்டுனா பரம ரு ஷிணா

ஸ்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்டாம் ஸத்ய வாதினா

Xxxx

बद्ध अन्जलि पुटम् दीनम् याचन्तम् शरण आगतम् ||६-१८-२७

न हन्याद् आनृशंस्य अर्थम् अपि शत्रुम् परम् पत |

எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக்கூடாது

பத்த அஞ்சலி புடம் தீனம் யாசந்தம் சரண ஆகதம்

ந ஹன்யாத் ஆன்ருசம்ஸ்ய  அர்த்தம் அபி  சத்ரும் பரம் பத

xxxx

अर्तो वा यदि वा दृप्तः परेषाम् शरणम् गतः ||६-१८-२८

अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृत आत्मना |

அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ

அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா

முன்னர் அகந்தையுடனும் அடக்கியாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்

(விருந்தோம்பல் HOSPITALITY , கற்பு CHASTITY ,  நிலையாமை IMPERMANENCE, தூதர் இலக்கணம் AMBASSADOR RULES, சரணடைதல் SURRENDER, அகதிகள் REFUGEES  பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மிக தெளிவான நாகரீமிக்க  கொள்கைகளை வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் நான் கண்டதில்லை.)

Xxxx

स चेद् भयाद् वा मोहाद् वा कामाद् वा अपि न रक्षति ||६-१८-२९

स्वया शक्त्या यथा तत्त्वम् तत् पापम् लोक गर्हितम् |

பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன பலம் கொண்டமட்டும் பாதுகாக்காவிடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்

ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி

ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்

Xxxx

विनष्टः पश्यतस् तस्य रक्षिणः शरण आगतः ||६-१८-३०

आदाय सुकृतम् तस्य सर्वम् गच्चेद् अरक्षितः |

ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்கநேரிட்டால் இதுவரை கிடைத்த நற்பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய்விடும்

வினஷ்டக பச்யதம் தஸ்ய ரக்ஷிணஹ சரண ஆகதஹ

ஆதாய சுக்ருதம் தஸ்ய ஸர்வம்  கச்சேத் அரக்ஷிதஹ

xxx

एवम् दोषो महान् अत्र प्रपन्नानाम् अरक्षणे ||६-१८-३१

अस्वर्ग्यम् च अयशस्यम् च बल वीर्य विनाशनम्

ஏவம் தோஷோ மஹான் அத்ர ப்ரபந்நாம் அரக்ஷணே

அஸ்வர்க்யம் ச அயசஸ்யம் ச  பல வீர்ய விநாசனம்

அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும் .

Xxx

करिष्यामि यथा अर्थम् तु कण्डोर् वचनम् उत्तमम् ||६-१८-३२

धर्मिष्ठम् च यशस्यम् च स्वर्ग्यम् स्यात् तु फल उदये |

கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்

தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே

நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே  அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி  திறக்கும் ; கை  மேல் பலன் தரும்

Xxx

யுத்த காண்டத்தில் முத்தாய்ப்பு வைக்கும் ஸ்லோகம் இதோ

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

33. yaachate = he who seeks; prapannaaya = refuge; sakR^ideva = just once; iti = saying that; asmi = I am; tava = yours; dadaami = I shall give; abhayam = assurance of safety; sarva bhuutebhyaH = against all types of beings; etat = this; mama = is my; vratam = pledge.

“He who seeks refuge in me just once, telling me that I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge”

ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும்  நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதிமொழி . என்னுடைய உறுதியான கொள்கை

சம்ஸ்க்ருதத்தில் இது என் விரதம் VOW/ PLEDGR என்று செல்லப்பட்டுள்ளது

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத்  வ்ரதம்  மம

Xxxx

கம்பன் சொல்லும் வேறு விஷயங்கள்

கம்ப ராமாயணத்தில் இந்த உறுதி மொழி, கிஷ்கிந்தா காண்ட சுக்ரீவ சரணாகதி விஷயத்திலேயே வந்துவிடுகிறது.. இந்த விபீஷண சரணாகதி படலத்தில் புறாக்கதையுடன் வேறு பல விஷயங்களை அடுக்குகிறான் .இதோ அந்தப் பட்டியல் :

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில் இராமன் தரும் அகதிகள் பட்டியல் வேறு

1. சிபிச் சக்ரவர்த்தி/புறா ; 2.தேவர்/அசுரர் -நஞ்சசுண்ட கண்டன்/சிவன்; 3.வால்மீகி சொன்ன புறா ; 4.கஜேந்திரன் என்னும் யானை ;5.மிருகண்டு முனிவர்/சிவன் ; 6.சீதை-ஜடாயு ; 7.ராமனைச் சரணடைந்த முனிவர்கள்.

பாடல்களுடன் விரிவாகக் காண்போம்

தொடரும்

TAGS0- சரணாகதி தத்துவம், கம்பன், அகதிகள், புறா கதை , ஜனநாயகம், வால்மீகி , ராமாயணம்

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 5 (Post 11,550)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,550

Date uploaded in London – 16 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 5

ச.நாகராஜன் 

கவியரசு கண்ணதாசன் பன்மொழி விற்பன்னர் என்பது பலருக்கும் தெரியாது.

அவர் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில்  அவர் எழுதிய கவிதை இது:

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்!

அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

–    தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

–     

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 “தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

அவர் எழுதிய வடமொழிப் பாடல் இது:

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை! மிகச் சிறந்த சம்ஸ்கிருத கவிஞர்களையும் புறம் தள்ளி விடும் சொல் ஜாலங்களும் அர்த்த கோலங்களும் கொண்ட அழகிய பாடல் இது!

‘கடவுளே, இன்னும் சிறிது காலம் என்னை வாழவிட்டால் ஆங்கிலத்தில் ஒரு காவியமும் சம்ஸ்கிருதத்தில் ஒரு காவியத்தையும் படைப்பேன்’ என்று எழுதினார் அவர்.

சமயத்திற்கேற்றபடி உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் அவர்.

‘அடடா இது என்ன கண்ணா, இவள் அந்தர லோகத்துப் பெண்ணா’ என்று அவர் கூறிய போது மகிழ்ந்தது நடிகையர் திலகம் சாவித்திரி மட்டுமல்ல; முழு தமிழகமுமே மகிழ்ந்தது.

இசைஞானி இளையராஜா அற்புதமாக தனது கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-

“இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதே ‘அருண் பிரசாத் மூவிஸில்’ எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளிக்கு’ப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணு’ என்ற பாடலில்,

“வா, ராஜா, வா!”

என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.

கண்ணதாசனின் சொல் விளையாட்டு அபூர்வமான ஒன்று.

‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படிச் சொல்வேனடி?!’

 பாவ மன்னிப்பு படத்தில் சாவித்திரியும் தேவிகாவும் இணையும் காட்சியில் இடம் பெறும் இப்பாடல் எத்தனை ஆயிரம் பெண்களின் மனங்களில் என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்தியதோ! இளம் பெண்களின் மனதை வருடும் பாடலுக்கு மன்னன் கண்ணதாசன் அல்லவா! எப்படி சொல்வேனடி என்பதை இன்னொரு படத்தில் இன்னொரு பாடலிலும் சொல்லி விடுகிறார். மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் ‘என்னை நிலாவினில் துயர் செய்தான், அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்’ என்றார். இது போல அகத்துறையை விளக்கும் இன்னொரு பாடலை எந்த மொழியிலாவது காட்டுங்கள் பார்ப்போம். முடியவே முடியாது!

‘பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு! இந்தப் பிள்ளை, யாரு?!’

 பாகப்பிரிவினை படத்தில் வரும் இந்தப் பாடலில், பிள்ளையார் என்ற வார்த்தை பிள்ளையாரையும் இந்தப் பிள்ளை யார் என்ற கேள்வியையும் எழுப்பும் சிலேடையை ரசிக்காமல் இருக்க முடியாது.

அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ

காய்களை வைத்து சொல் விளையாட்டை நடத்தும் கவிஞரின் பாடலில் காய்ச்சீர் அருமையாக அமைந்திருப்பதையும் வியந்து ரசிக்கலாம்! எத்தனை காய்கள், எத்தனை அர்த்தங்கள்!! பலே பாண்டியா படத்தில் இடம் பெறும் இப்பாடலில் தேவிகாவும் சிவாஜி கணேசனும் காய்களின் இரு பொருள் அர்த்தங்களை விளக்கும் பாவமும் அதற்குக் கவிஞர் இடம் தந்திருப்பதையும் எந்தக் கால ரசிகர்களும் ரசிக்கலாம்!

சிவாஜி கணேசன் சொல்வாராம், கவிஞரின் பாட்டிற்குத் தக என் முகபாவமும் நடிப்பும் அமைய வேண்டுமே என்று!

தேன் சொட்டும் பாடல் ஒன்று வேண்டுமா? இதோ:

பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பாடல் முழுவதும் சிலேடை வார்த்தைகள்! வீர அபிமன்யு படத்தில் கவிஞர் சிலேடை பாடல் அமைப்பின் சிகரத்தில் ஏறி விடுகிறார்!

YOU TUBE LINK

  https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 – 

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.—நாகராஜன்

மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி பாடலுக்காக சுரங்களை அவரே அமைத்தார். இசை வளம் கொண்ட இசை மேதை அவர் என்பதை நிரூபித்தார்.

தொடரும்

Democracy and Asylum in Ramayana (Post No.11,549)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,549

Date uploaded in London – 15 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 The story of Rama has been an inspiration to Hindus for generations. We see him in the dramas of Bhasa and works of Kalidasa. If we take into account of all the songs composed by famous composers and poems by Alvars, his story would have been repeated thousaands of times. Even the great Saivite saints didn’t forget to mention him in their devotional poems.

Some of important matters in the epic may be missed by the devoted readers of Ramayana. They focus their mind only in devotion to Rama and Sita. There are many anecdotes where democracy is favoured instead of autocracy.

In all ancient cultures the eldest son is appointed as the next king. In Dasaratha’s Ayodhya one would expect the same. But Dasaratha humbly sought the opinion of all elders and ministers in the assembly before appointing his son Rama. It is in the second Sarga of Ayodhyaa Kaanda.

Tamil poems give another anecdote where Rama was conducting a consultation meeting under a banyan tree with the civil engineers about building a pontoon bridge between Dhanushkoti and Sri Lanka. It is in poem 70 of Akananuru. The birds on the tree were making huge noise. Perturbed by the interference, he asked them to shut up. Ad miraculously they all fell into silence. The ancient commentators commenting on this verse say that Rama was holding a secret consultation meeting with the heroes of the Monkey Brigade (Vaanara Sena) about the impending war with Ravana.

The third democratic consultation is seen in the chapter on Vibhishana’s surrender to Rama. Before giving him asylum Rama sought the opinion of all the important leaders assembled there.

Even in Ravana’s Sri Lanka we see Vibhishana, Kumbakarna giving their opinions boldly against Ravana’s detention of Sita Devi.

Xxx

Some of the slokas in the relevant chapters are worth quoting.

Dasaratha says that he wanted to appoint Rama as next king and he took this decision after consulting others. And he seeks the assembly’s consent

अनेन श्रेयसा सद्यस्संयोज्यैवमिमां महीम्।

गतक्लेशो भविष्यामि सुते तस्मिन्निवेश्य वै।।2.2.14।।


तस्मिन् when such, सुते son (Rama), इमाम् this, महीम् earth, निवेश्य entrusting, अनेन श्रेयसा to ensure the welfare of the world, एवम् thus, सद्य: without any delay, संयोज्य having united, गतक्लेश: relieved of my anxieties, भविष्यामि shall become.


I shall be relieved of my anxiety by entrusting the land (ruled by me) to my son (Rama) without any more delay and thus ensure the continued welfare of this world.

यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।

भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।


मया by me, सुमन्त्रितम् well thoughtover, इदम् this word, साधु proper, मे my, अनुरूपार्थं यदि if worthy of me, भवन्त: you, मे to me, अनुमन्यन्ताम् your consent shall be given, अहम् I, कथं वा how else, करवाणि I shall do?


Although it (this decision) is personally favourable to me and I have decided after seeking good counsel, you should also give me your consent and tell me what I should do.

यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।

अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।


एषा this, मम my, प्रीति: यद्यपि even though I like, अन्यत् any alternative, हितम् means of welfare, विचिन्त्यताम् let it be thought over, मध्यस्थचिन्ता opinion of those without partiality, अन्या alternative, विमर्दाभ्यधिकोदया deliberations may bring good.


Although this is what I would like to do, please suggest alternative ways of achieving the welfare (of this kingdom). Deliberations by the unbiased (on this issue) may bring good.

इति ब्रुवन्तं मुदिताः प्रत्यनन्दन्नृपा नृपम्।

वृष्टिमन्तं महामेघं नर्दन्त इव बर्हिणः।।2.2.17।।


इति thus, ब्रुवन्तम् speaking, नृपम् king Dasaratha, नृपा: kings, मुदिता: delighted, वृष्टिमन्तम् raining, महामेघम् thick cloud, नर्दन्त: making sounds, बर्हिण: इव like peacocks, प्रत्यनन्दन् acclaimed.


Having thus heard king Dasaratha speak, the kings acclaimed him with delight, like peacocks crying (in joy) to see thick clouds.

Xxx

Vibhishana Saranaagathi  (Vibhishana seeking asylum)

After listening to the views of assembled monkey leaders including Sugriva and Hanuman, Rama decided to give Vibhishana, asylum. Vanara leaders did not give a unanimous verdict. Some of them opposed Vibhishana saying that he may be a spy or an unreliable person who even deserted his own brother. Rama weighed their opinions and gave the final judgement. He is very clear and says that it is MY POLICY to give asylum to anyone who surrenders humbly. And he also quoted the famous saying of Kandu Rishi. Here are the quotable quotes:

Vibhishana Saranagathi

मित्र भावेन सम्प्राप्तम् न त्यजेयम् कथंचन |

दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||6-18-23

“By any means, I do not desert anyone who arrives with a friendly appearance, even if he has a defect. His acceptance is irreproachable in the eyes of good men”

श्रूयते हि कपोतेन शत्रुः शरणम् आगतः ||६-१८-२४

अर्चितः च यथा न्यायम् स्वैः च मांसैर् निमन्त्रितः |

“It is narrated how by a dove, its enemy ( a fowler) when it came for a refuge, was received according to rules of hospitality and was invited for a feast with its own flesh.”

स हि तम् प्रतिजग्राह भार्या हर्तारम् आगतम् ||६-१८-२५

कपोतो वानर श्रेष्ठ किम् पुनर् मद् विधो जनः |

“O, the excellent of monkeys! The aforesaid dove indeed accepted as a guest, the fowler as he came, although he killed its wife .How much more a man like me has to do?”

ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परम ऋषिणा ||६-१८-२६

शृणु गाथाम् पुरा गीताम् धर्मिष्ठाम् सत्य वादिना |

“Hear the verses inculcating virtue so long ago, by Kandu, the son of a sage called Kanva, a great sage and a speaker of truth.”

बद्ध अन्जलि पुटम् दीनम् याचन्तम् शरण आगतम् ||६-१८-२७

न हन्याद् आनृशंस्य अर्थम् अपि शत्रुम् परम् पत |

“O, king the terminator of enemies! Even an enemy, who formed a cup with his hollowed hands, a miserable person, a person who is begging and who is seeking a refuge should not be killed with the aim of not being cruel.”

अर्तो वा यदि वा दृप्तः परेषाम् शरणम् गतः ||६-१८-२८

अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृत आत्मना |

“An enemy who comes for protection against others, even if the aforesaid enemy is oppressed or arrogant, is to be protected by one who has a disciplined mind, even by abandoning one’s life.”

स चेद् भयाद् वा मोहाद् वा कामाद् वा अपि न रक्षति ||६-१८-२९

स्वया शक्त्या यथा तत्त्वम् तत् पापम् लोक गर्हितम् |

“If he does not protect rightly through his strength, by fear or by ignorance or by desire, it is a sin to be reproached by the world.”

विनष्टः पश्यतस् तस्य रक्षिणः शरण आगतः ||६-१८-३०

आदाय सुकृतम् तस्य सर्वम् गच्चेद् अरक्षितः |

“If having not been protected, a refugee dies before the eyes of a man who is able to protect him, the former takes along all his moral merit and goes.”

एवम् दोषो महान् अत्र प्रपन्नानाम् अरक्षणे ||६-१८-३१

अस्वर्ग्यम् च अयशस्यम् च बल वीर्य विनाशनम्

“In not protecting thus the persons who take refuge, there is a great blemish involved in it. It does not bestow heaven. It destroys reputation. It devastates strength and valor”

करिष्यामि यथा अर्थम् तु कण्डोर् वचनम् उत्तमम् ||६-१८-३२

धर्मिष्ठम् च यशस्यम् च स्वर्ग्यम् स्यात् तु फल उदये |

“I will follow the excellent words of Kandu. It becomes a very righteous thing, gives reputation, leads to heaven and the rewards appear consequently.”

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

“He who seeks refuge in me just once, telling me that I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge” 6 -18 – 33

–subham—

Tags- democracy, Ramayana, Asylum, Surrender, Vibhishana, Quotes

அரைக்கினும் தன் மணம் குன்றாது சந்தனம்–அறப்பளீசுர சதகம் (Post.11,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,548

Date uploaded in London – 15 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 xxx

குறைந்தாலும் பயன்படல்

Arappalisura satakam Verse 23

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்

     சார்மணம் பழுதா குமோ!

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு

     சாரமது ரங்கு றையுமோ?

நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்

     நிறையுமாற் றுக்கு றையுமோ?

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு

     கதிர்மதி கனம்போ குமோ?

  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனிற்போ குமோ?

அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

அறப்பளீசுர சதகம் by  அம்பலவாணர்

 (இ-ள்.) அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே –

அறிவுடையோரைப் பிரிந்து செல்லாத தலைவனே!, ஐயனே – முதல்வனே!,

அருமை………..தேவனே!, தறிபட்ட சந்தனக்கட்டை பழுதாயினும் சார்

மணம் பழுது ஆகுமோ – வெட்டப்பட்ட சந்தனக்கட்டை குறைபட்டாலும்

அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ?, தக்க பால் சுவறிடக்

காய்ச்சினும் அதுகொண்டு சார்மதுரம் குறையுமோ – நல்ல பால் வற்றிடக்

காய்ச்சினாலும் அதனாலேயே அதனிடம் உள்ள சாரமான இனிமை

வற்றுமோ?, நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்

நீள்குணம் மழுங்கிவிடுமோ – நிறைந்த பேரொளியை உடைய மணி

அழுக்குப்பட்டாலும் அம் மணியின் உயர்ந்த ஒளிப்பண்பு

குறைந்துவிடுமோ?, நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்

நிறையும் மாற்றுக் குறையுமோ – பொன்னை நெருப்பிலே உருக்கினாலும்

(தகடாக) அடித்தாலும் அதனிடம் நிறைந்த மாற்றுக் குறைந்துவிடுமோ?,

கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு கதிர்மதி கனம்

போகுமோ – கருமைபொருந்திய கார்முகிலானது ஞாயிற்றையும்

திங்களையும் மறைத்தாலும் அக்காரணத்தால் அவற்றின் பெருமை

கெடுமோ?, கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும் காசினிதனில்

போகுமோ – படித்த பெரியோரின் மேன்மையை அறிவிலார்

அறியாவிட்டாலும் அதனால் உலகிலே அவர் பெருமை நீங்குமோ?

     (வி-ரை.) பசுமை + புயல் – பைம்புயல். பசுமை இங்குக்

கருமையையே உணர்த்தும், பசுமை நிறமுடைய முகிலே இல்லாமையால்.

இறைவன் வடிவம் அறிவே ஆகையால் அவர், ‘அறிவுற்ற பேரைவிட்டு

அகலாத மூர்த்தி’ ஆனார். கதிர் – ஞாயிறு, மதி – திங்கள்.

     (க-து.) சான்றோர் பெருமை அற்பரால் அழிவுறாது.

Xxxx

ஒப்பிடுக:

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

Xxx

ஒப்பிடுக:

பர்த்ருஹரி நீதி சதகம்

பாடல் 63

விபதி³ தை⁴ர்யம் அதா²ப்⁴யுத³யே க்ஷமா

ஸத³ஸி வாக்யபடுதா யுதி⁴ விக்ரம: ।

யஶஸி சாபி⁴ருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ

ப்ரக்ருதிஸித்³த⁴ம் இத³ம் ஹி மஹாத்மனாம் ॥ 1.63 ॥

विपदि धैर्यं अथाभ्युदये क्षमा

सदसि वाक्यपटुता युधि विक्रमः ।

यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ

प्रकृतिसिद्धं इदं हि महात्मनाम् ॥ 1.63 ॥

தாழ்வு வரும்போது திட உறுதி;

வாழ்வு வருகையில் அடக்கம், பணிவு;

அறிஞர் சபையில் வாக்கு வன்மை ;

புகழில் விருப்பம்;போரில் துணிவு;

கற்பதில் பேரார்வம் ; இவையே அறிஞற்கு இலக்கணம்

XXX

பாடல் 66 பர்த்ருஹரி நீதி சதகம்

सम्पत्सु महतां चित्तं

भवत्युत्पलकौमलम् ।आपत्सु च महाशैलशिला

सङ्घातकर्कशम् ॥ 1.66 ॥

ஸம்பத்ஸு மஹதாம் சித்தம்

ப⁴வத்யுத்பலகௌமலம் ।ஆபத்ஸு ச மஹாஶைலஶிலா

ஸங்கா⁴தகர்கஶம் ॥ 1.66 ॥

உயர்வு வருகையில் நல்லோரின் இதயம் தாமரை இதழ் போல  மென்மையாவும்

துன்பம் வருகையில்  மலைப் பாறை போல கடினமான உறுதியுடனு ம் இருக்கும்

XXX

மேலும் சில ஸம்ஸ்க்ருத  பொன்மொழிகள்/ சுபாஷிதங்கள்

சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்

ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்

பெரியோரின் குணமும் அப்படித்தான்.

Xxxx

ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்

ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்

தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை

ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது   …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

Xxx

அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்

இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.

ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல

Xxxx

SAIVAITE SAINT MURTHY NAYANAR USED HIS HANDS TO MAKE SANDAL PASTE

.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா

கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்

(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச் செல்வர்)

——subham——

Tags–அறப்பளீசுர சதகம், அம்பலவாணர், சந்தனம் , அரைத்தாலும், குறைவுபடாதவை, மேன்மக்கள், பர்த்ருஹரி , நீதி சதகம்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 4 (Post 11,547)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,547

Date uploaded in London – 15 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 4

ச.நாகராஜன்

திரைப்படங்களில் ராமர் பாடல்கள் என்ற எனது புத்தகத்தில் கண்ணதாசனின் ராமர் பாடல்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறேன். சில பாடல்களின் சில வரிகளை  மட்டும் இங்குபார்ப்போம்.

1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லட்சுமி கல்யாணம்.

ராம பக்தியில் தோய்ந்த கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்

கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்

தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்


வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!


இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்! வேறு எந்த மொழிக் கவிஞரும் இப்படி ஒரு ராமர் மாலையைப் பாடியதில்லை!

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
          தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.

ராமாயணத்தை கம்பன் அரங்கேற்றும் போது பொறாமை கொண்ட சிலர் அவனிடம். ராமருக்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று இடக்காகக் கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று அவன் பதில் அளித்தானாம்!

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,

நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!

கவி சக்கரவர்த்தி கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்

அவர்.

மருங்கு இலா நங்கையை அவர் இனம் காட்டுவது கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் இப்படி:

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா

வண்ண கண்ணல்லவா

இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா?

மின்னல் இடையல்லவா?

1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது.

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் 

ராஜாராமன் நினைத்திருந்தான்

அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும்

மிதிலைக்கு வந்திருந்தார் –

மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்

அவள் நிலைமை திரிபுறம்

1962ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் எஸ்.ஜானகி பாடும் பாடலுக்கான கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை:-

ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ

1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாடல்:

அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்    

 “ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்

இருவர் என்பது மாறிவிடும்

இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்

என்ற வரிகளோ

“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்’  என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தருவதைச் சுட்டிக் காட்டுகிறதல்லவா?!


படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981.

ராமனின் மோகனம்

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன்

தொடரும்

Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது, Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546)

Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது.

Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,546

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

I am giving more sentences using Impersonal verbs (This is from my  2011 Lessons)

Impersonal verbs use subject in the dative e.g.

எனக்கு,உனக்கு,

அவனுக்கு,ராமனுக்கு unlike English.

If one masters eight Tamil impersonal verbs it will be very useful during

travel. One can express most of one’s needs,likes,dislikes etc. easily

214 எனக்கு தமிழ் பிடிக்கும்

enakku thamiz pidikkum

to me Tamil like (I like Tamil)

215. உனக்கு என்ன பிடிக்கும்?

unakku enna pidikkum?

 to you  what liked? (What do you like?)

216. அவனுக்கு என்ன பிடிக்கும்?

avanukku enna pidikkum?

to him what liked

What does he like?

217. ராமனுக்கு என்ன பிடிக்கும்?

raanukku enna pidikkum?

to Rama what liked

What does Raman like?

218. உனக்கும் தமிழ் பிடிக்குமா?

unakku thamiz pidikkumaa?

to you Tamil liked

Do you like Tamil?

219. எனக்கு தோசையும் வடையும் பிடிக்கும்.

Enakku dosaiyum vadaiyum pidikkum

To me dosai and vadai liked

I like dosai and vadai

220. யாருக்கு தமிழ் பிடிக்கும்?

yaarukku thamiz pidikkum?

to whom thamiz liked?

Who does like Tamil?

221. எனக்கு இறைச்சி பிடிக்காது.

enakku iRaichi pidikkaathu

to me meat not liked

I dont like meat

222. மீனும் பிடிக்காது.meenum pidikkaathu

dont like fish too

223. ஆனால் பழங்கள் பிடிக்கும்.

aanaal pazangkaL pidikkum

But I like fruits.

224. உனக்கு என்ன பிடிக்காது?

unakku enna pidikkaathu?

what is it you dont like?

225. யாருக்கு இறைச்சி பிடிக்காது?

yaarukku iRaichi pidikkaathu?

Who doen’t like meat?

226. அவனுக்கு தோசை பிடிக்காதா?

avanukku dosai pidikkaathaa?

doen’t he like dosa?

227. உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? பிடிக்காதா?

ungkaLukku thamiz pidikkumaa? pidikkaathaa?

do you like Tamil or not?

228. ராமனுக்கு முட்டை பிடிக்காது.

ramanukku muttai pidikkaathu

Rama doesn’t like egg.

229. என் அண்ணனுக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்

en aNNanukku inippu adhikam pidikkum

my older brother likes sweets a lot

230. ஆனால் உரைப்பு பிடிக்காது.                  

aanaal uraippu pidikkaathu

but (he) doesn’t like spicy (dishes)

231. உங்களுக்கு தமிழ் தெரியுமா?

ungkaLukku thamiz theriyumaa?

Do you know Tamil?

232. ஆமாம் எனக்கு தமிழ் தெரியும்.

aamaam, enakku thamiz theriyum

Yes, I know Tamil.

233. இங்கிலீஷும் தெரியுமா?

engilish theriyumaa?

Do you know English?

234. ஆம், இங்கிலீஷும் தெரியும்

aam, engilish theriyum

Yes, I know English

235. எது அதிகம் தெரியும்?

edhu adhikam theriyum?

Which one you know more?

236. இங்கிலீஷ் அதிகம் தெரியும்,தமிழ் கொஞ்சம் தெரியும்.

engilish adhikam theriyum, thamiz konjam theriyum

I know English well, and Tamil a little

237. அவர்களுக்கு இந்தி தெரியாதா?

avarhaLukku inthi theriyaathaa?

Dont they know Hindi?

238. அவர்களுக்கு இந்தி தெரியாது.

avarhaLukku inthi theriyaathu

they dont know Hindi

239. When you use theriyum தெரியும் with human beings

you must use the accusative ‘ai’ e.g.ஒபாமாவை

240. உனக்கு ஒபாமாவைத் தெரியுமா?

unakku obaamaavaith theriyumaa?

Do you know Obama?

241. எனக்கு ஒபாமாவைத் தெரியும்

enakku obaamaavaith theriyum

I know Obama

242. உனக்கு பாடத் தெரியுமா?

unakku paatath theriyumaa?

do you know how to sing?

243. ஆமாம் எனக்கு பாடத் தெரியும்.

aamaam enakku patath theriyum

yes, i know how to sing

244. ஆடவும் தெரியுமா?

aatavum theriyumaa?

Do you know dance too?

245. enakku aataa theriyaathu

எனக்கு ஆடத் தெரியாது.

I dont know to dance

246. கண்ணனையும் ராமனையும் தெரியுமா?

kaNNanaiyum raamanaiyum  theriyumaa?

Do you know Kannan and Raman?

247. அவர்களை நன்றாகத் தெரியும்.

avarhaLai nanRaakath theriyum

I know them very well

248. யாருக்கு தமிழ் தெரியும்?

yaarukku thamiz  theriyum?

who does know Tamil?

249. நான்கு மாணவர்களுக்கு தமிழ் தெரியும்.

 naangu maaNavarhaLukku thamiz theriyum

four students know Tamil

250. யாருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியும்?

 yaarukku tennis viLaiyatath theriyum?

who does know to play tennis?

251. எனக்குக் கொஞ்சம் தெரியும்.

enakku konjam theriyum

I know a little

252. பெடரருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியுமா?

Ferererukku tennis viLaiyaatath theriyumaa?

Does Ferderer know how to play Tennis?

253. அவருக்கு டென்னிஸ் நன்றாகத் தெரியும்.

avarukku tennis nanRaakath theriyum

He does know Tennis very well.

254. உன் அக்காவுக்கு சமைக்கத் தெரியுமா?

un akkaavukku samaikkath theriyumaa?

Does your older sister know how to cook?

255. ஆம், அவளுக்கு சமைக்கத் தெரியும்.

aam, avaLukku  samaikkath theriyum

yes, she knows to cook

256. உன் அண்ணனுக்கு சமைக்கத் தெரியுமா?

 un aNNanukku samaikkath theriyumaa?

Does your older brother how to cook?

257. என் அண்ணனுக்கு சமைக்கத் தெரியாது.

en aNNanukku samaikkath theriaathu.

 My older brother doesn’t to cook.

258. Mudiyum முடியும் is an impersonal verb

which takes subject in the instrumental e.g.உங்களால்,

என்னால், ராமனால் . But it can take dative,

nominative and instrumental.

259. உங்களால் தமிழ் பேச முடியுமா?

ungaLaal thamiz peesa midiyumaa?

can you speak Tamil?

260. என்னால் கொஞ்சம் தமிழ் பேச முடியும்.

ennaal konjam thamiz peesa mudiyum

I can speak Tamil a little.

261. நன்றாகப் பேச முடியாதா?

nanRaakap peesa mudiyaathaa?

cant you speak Tamil vey well?

262. கொஞ்சம்தான் தமிழ் பேச முடியும்.

konjamthaan  thamiz peesa mudiyum

I can speak only a little.

263. என்னால் 10 கிலோமீட்டர் ஓட முடியுமா?

ennaal pathu kilometre ooda mudiyaathu.

Can I run 10 kilometres?

264. ராமனால் பத்து கிலோமீட்டர் ஓட முடியாது.

raamanaal pathu kilometre ooda mudiyaathu.

raman cant run ten kilometres.

265. கண்ணனாலும் பத்து கிலோமீட்டர் ஓட முடியாதா?

kaNNanaalum 10 kilometre ooda mudiyaathaa?

cant even Kannan run 10 km?

266. ஆம், கட்டாயம் ஒட முடியாது.

aam, kattaayam ooda mudiyaathu.

Yes, definitely cant run.

267. யாருக்குத் தமிழ் எழுத முடியும்?

yaarukku thamiz ezutha mudiyum?

who can write Tamil?

268. என் ஆசிரியரால் தமிழ் எழுத முடியும்.            

en aasiriyaraal thamiz ezutha mudiyum

My teacher can write Tamil.

269. உங்களுக்கு தமிழ் புரியுமா (விளங்குமா)?

ungaLukku thamiz puriyumaa?

Do you understand Tamil?

270. மெதுவாகப் பேசுங்கள். எனக்குப் புரியும்

methuvaakap peesungaL .enakkup puriyum.

Speak slowly, I (will) understand

271. ஹிந்தி புரியுமா?

indhi puriyumaa?

( Do you ) understand Hindi?

272. எனக்கு ஹிந்தி புரியாது.

enakku inthi puriyaathu

I dont understand Hindi

273. இந்தக் கடையில் தமிழ் புத்தகம் கிடைக்குமா?

inthak kadaiyil thamiz puththakam kidaikkumaa?

Can I get a Tamil book in this shop?

274. ஆம், கிடைக்கும். என்ன புத்தகம் வேண்டும்?

aam, kidaikkum. enna puththakam veNdum?

Yes, it is available. What book do you want?

275. இங்கே சிகரெட் கிடைக்குமா?

ingee cigarete Available?

Can I get cigarettes here ?

276. இந்தக் கடையில் சிகரெட் கிடைக்காது.

inthak kadaiyil sigaret kidaikkaathu.

in this shop cigarets not available

cigaretts are not available in this shop

277. கடைசி கடையில் கிடைக்கும்.

kadaisi kadaiyil kidaikkum

last in the shop available

it is available in the last shop

278. உங்களுக்கு ஒரு தோசை போதுமா?

ungaLukku oru dosai poothumaa?

to you one dosai enoug?

is one dosai enough for you

279. இல்லை, எனக்கு ஒரு தோசை போதாது

illai, enakku oru dosai poothaathu

no to me one dosai not enough

one dosai is not enough for me

280 ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதுமா?

raamanukku konjam kappi poothumaa?

to raman little coffee enough?

is little coffee enough for Rama?

281. ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதாது.

raamanukku konjam kappi poothaathu

to raman little coffee not enough

little coffee is not enough for raman

282. எனக்கு இந்த வீடு போதும்.

enakku intha oru viidu Pothum

to me this one house enough

this house is enough for me.

To be continued…………………..

Tamil Hindu Encyclopaedia -37; Durga/ கொற்றவை, துர்கா in Sangam Tamil Corpus (Post No. 11,545)

DURGA FROM INDONESIA, NOW IN MUSEUM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,545

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Durga is called Kotravai /கொற்றவை in Sangam Tami Literature. She was the goddess of dry and bushy area called.பாலை Paalai. The people who lived were called Maravar and they worshipped Godeess Durga alias Kotravai.

Her features are exactly similar to Durga in Sanskrit. Let us look at her in detail.

Nakkirar, famous poet of Sangam Age called Murugan/Skanda as son of Kotravai. So we can conclude one of Devi Uma’s forms is Kotravai/Durga

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி

திருமுருகாற்றுப்படை 258/259

See lines Murugu 258/259. Poet also gave her another name as an ancient lady /Pazaiyol பழையோள்

Xxxx

Forest Dweller

She is also portrayed as the dweller of forest by many poets.

ஓங்கு புகழ் கான் அமர் செல்வி –  அகம்.345 Akam 345

பெருங்காட்டுக் கொற்றி – கலி .89-6 Kali 89-6

விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலி – குறுந்.218-1Kurun 218

Her other names are காடுகிழாள் = காடுகாள்/ Forest Goddess

Xxx

Tri suli

Her image also includes her weapon Soolam. Commentator Nachinarkiniar commented it as Tri Soolam (trident)

The trident in her hand was referred to by more than one poet.

Kurun.218 விறல் கெழு சூலி

The reason given is that she killed Mahisa Asuran with this.

Durga was called Vitorious war woman வெல் போர்க் கொற்றவை. This also confirms that Kotravai was Mahishaasuramardhani

Some interesting scenes are also in Sangam books

Third Eye

DURGA IN AJANTA CAVE

Girls were bathing in the river. One of the girls put one red Tilak on another girls forehead and said this girl has Flame like eye of Kotravai

–Pari.11-99/100

This shows that Durga also got Third Eye like her husband Siva.

Xxx

Strange information about Ghost Riddles

Durga’s Temples were inside forest. Her friends were Ghosts. She spent her time solving the riddles of the ghosts.See Kali89-8

பெருங்காட்டுக் கொற்றிக்கு பேய் நொடித்தாங்கு – கலி 89-8

Xxx

Purananuru verse 247 gives a beautiful scene in front of Durga temple inside the forest

Hunters make bonfire with the wood sticks they gathered through elephants from the forest. Deer herds come and sleep there, but monkeys chase them and clear that area. புறம் 247-  1 / 4

Ghosts are guarding the temple; Wild pigeons are also living there- Pattinappalai Lines 57-59

Xxxx

Chera’s Deity

Chera Kings worshipped Goddess in Ayirai malai. This is similar to Vindhyavaasini- Goddess of Vindhya Mountains. Like Greek heroes wore Olive leaves, Tamil Heroes wore Vaakai flowers when they became victorious. Old commentators associate this with Durga. So she was the Deity of War Heroes

Xxx

Blood and Meat

Raksha bandhan was also mentioned in Kurun.218

After worshipping goddess Durga they wore a Raksha thread in their hands. Even today Hindus wear this Yellow Thread called Kaappu (meaning Protection/ Guard) during religious rituals.

For Durga worship, the hunters offered blood and meat to her. Pathitruppathu, the collection of poems giving the history of Chera kings, described such ceremonies

Pathitrupathu 9-14/18

88-11/12

80-19/21

88-1/5 old commentators say tha this reference is about Vindhyavasini in the Vindhya Hills.

xxxx

Tamil references

Third eye in the form f Red Tilak on the forehead of a girls while bathing in the river- Paripatal 11

பரிபாடல் 11

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.  100

xxx

218.பாலை Kurunthokai 218

Worshipping Goddess with Soola/Trident in her hand and then ties Raksha in hand (Raksha bandhan)

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் 

கடனும் பூணாம்கைந் நூல் யாவாம்;

புள்ளும் ஓராம்விரிச்சியும் நில்லாம்;

உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி!

உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று

இமைப்பு வரை அமையா நம் வயின்

மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.

Xxxxx

Purananuru 247

Pandya’s wife Bhutapandyan Devi entered fire after her husbands death/ she did the Sati ceremony infront of Durga temples. Hunters made the fire with the fuel wood gathered by elepants.

பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!

Xxxx

Chera king worshipped Ayirai  Hill Goddess with rice balls smeared with blood

குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)

உருகெழு மரபின் அயிரை பரவி

பதிற்றுப்பத்து 88-11/12

Xxxx

These lines are interpreted as Goddess of Vindhya Hill Goddess

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது

கடவுள் பெயரிய கானமொடு கல்உயர்ந்து

தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்

தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்

துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு) 5

—–பதிற்றுப்பத்து 88-1/5

Xxxx

அணங்குடை மரபின்  கட்டில்மேல் இருந்து

தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து

நிற ம்படு குருதி புறம்படின் அல்லது

மட்டை எதிர்கொள்ளா அஞ்சு வருமரபின்

கடவுள் அயிரை ——பதிற்றுப்பத்து 9-14/18

Pattinappalai 57-59

Temple guarded by the Ghosts

 பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்

தூது உணம் புறவொடு துச்சில் சேக்கும்

முது மரத்த முரண் களரி

Xxxxx

Old article

தொல்காப்பியத்தில் துர்க்கை Durga in Tolkappiam

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! – Tamil and Vedas

https://tamilandvedas.com › தொ…

 31 Mar 2014 — முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் …

 Tags- கொற்றவை, துர்கா, விந்தியமலை, அயிரைமலை, சங்கா இலக்கியம், பதிற்றுப்பத்து, Durga, Kotravai, Sangam books

நாய்ப் பாலும், பேய்ச் சுரைக்காயும்  யாருக்கும் பயனில்லை ! (Post.11,544)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,544

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பயனற்றவை யாவை ?அறப்பளிசுர சதகம் தரும் பட்டியல்

22. இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?

     குட்டநோய் கொண்டு மென்ன?

  குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன சுரவாது

     கொஞ்சமாய்ப் போகில் என்ன?

மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?

     மலராது போகில் என்ன?

  மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?

     மாவெண்மை யாகில் என்ன?

உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்னபடரா

     துலர்ந்துதான் போகி லென்ன?

  உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?

     ஓங்கும்மிடி வரில்என் னகாண்?

அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!
     (
இ-ள்.) அணியுற்ற பைங்கொன்றை மாலிகா ஆபரணனே –

அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,

ஆதியே – முதல்வனே!அருமை……..தேவனே!,

குணம் அற்ற பேய்

முருங்கைத் தழை தழைத்து என்ன – நல்ல குணம் இல்லாத பேய்

முருங்கை தழைத்தால் என்ன பயன்?, குட்டநோய் கொண்டும் என்ன –

குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கின்ற நாய் மடி

சுரந்து என்ன – குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன

பயன்?, சுரவாது கொஞ்சமாய்ப் போகில் என்ன – பெருகாமற் கொஞ்சமாக

இருந்தால்தான் என்ன பயன்?, மணம் அற்ற செம் முருக்கது பூத்து

அலர்ந்து என்ன – மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து

என்ன பயன்?மலராது போகில்

என்ன – மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, மதுரம் இல்லா

உவர்க்கடல் நீர் கறுத்து என்ன – சுவையில்லா உப்புக்கடலின் நீர்

கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, மாவெண்மை ஆகில் என்ன – தூய

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?உணவு அற்ற பேய்ச்சுரை

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உணவு அற்ற பேய்ச்சுரை

படர்ந்து என்ன – உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன

பயன்?, டராது உலர்ந்துதான் போகில் என்ன – படராமல்

காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, உதவாத பேர்க்கு வெகு வாழ்வு

வந்தால் என்ன – (பிறர்க்குப்) பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்

என்ன பயன்?, ஓங்கும் மிடி வரில் என்னகாண் – பெரிய வறுமை

வந்தால்தான் என்ன பயன்?

Xxxx

நாய்ப் பாலும் பேய்ச் சுரைக்காயும் யாருக்குப் பயன் தரும் என்று வினவுகிறார் அம்பல வாண கவிராயர்.

இதை விவேக சிந்தாமணி பாடல்களுடன் ஒப்பிடலாம்

02: பயன்படாதவை

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்;

தாபத்தைத் தீராத் தண்ணீர்; தரித் திரமறியாப் பெண்டிர்;

கோபத்தையடக்கா வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்;

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை:

அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,

குருவின் உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

xxxx

69. பயனில்லாதன

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,

இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,

இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

Xxxx

வீண்போகும் 4 விஷயங்கள்:—

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

Xxx

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 xxxx

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம் ALL WASTE

Xxx

TAGS-  பயனற்றவை, யாவை அறப்பளிசுர சதகம் பட்டியல்சம்ஸ்க்ருத சுபாஷிதங்கள்

லண்டன் டாக்டர் அ .நாராயணனின் மார்கழிக் கவிதைகள்(Post.11,543)

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

M argazhiththingal 1-4    

 மார்கழித்திங்கள்  1 to 4

திங்களைப்போற்றுவோம் மார்கழித் திங்களைப் போற்றுவோம்

திங்களில் மார்கழியாய்த் திகழும் திருமாலைப் போற்றுவோம்

திருமாலைப்போற்றுவோம் திருமாலைப் போற்றுவோம்

திருமாலைப் பற்றிய மங்கைக்  கோதையைப்  போற்றுவோம்

கோதையைப் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்

கோதை செப்பியத் திருப்பாவையைப் போற்றுவோம்                      1

புன்னகைத் தவழும் பூவிழிக்  கண்ணன்

பொன் நிறக் கோதையின் திருப்பாவையில் சங்கமம்

புவியோர்க் கெல்லாம் இப்பூமகளின் கீதையே                                 2

புன்னெறித் தவிர்க்கும் பக்தி யோகப் பாதையே

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்

குமரனும் யசோதை இளஞ்சிங்கமும் கார்

முகில் வண்ணணனும் கதிர்மதியம் செங்கண்

முகத்தானுமே பாரோர் போற்றிப் பறைதரும்

நாராயணனே வென முகுந்தனுக்கு

முகவுரை   முதற்பாவில் வரைந்து மார்கழி

முதல் நாளே மதி நிறைந்த நன்னாளாகப்

பாசுரம் துவக்கிய பாவை கோதை வாழியே                                             3

சீரார் செழு நிலம்  சுகந்தம்  கமழும் சோலையிலே

ஊரார் போற்றிய பெரியாழ்வார் கை தவழ்ந்த நாளே  

நாராயணனே வேத பாராயணமாய் தன் நாவினிலே

மாறா மறவா வென்றுமுறவாய்  கொண்ட கோதையே

போறாதொரு  சன்மம் புதிரான இவன் பேர் பாடவென                           

பேராயிரமுடையோனின் பிரிய நாயகியானவளே                                4                  

By

நாராயணன்

DR A NARAYANAN, Ph.D

London , December 2022

XXXX

ON MEENAKSHI AND SIVA

விடி காலை வருமுன்னெழுந்துன் கோயில்

படி வாசல் நின்றுக்  கருவறையிலுள்ளோனை

அடி பணிந்து வேணுவதோ கருப்பையில் மறு 

படியும் தள்ளாது நும் வீடுமெமை கொள்வீரோ                     1

கண்களிரண்டும் கயல் மீனெழிலாய்

கண்டு மையல் கொண்ட கங்காதரனை

துண்டு வலை விழி விசி சிக்கிய சொக்கியே!

கருவறையில் நினது திருவடி கிடந்தோரை

கருப்பையில் தள்ளி பிறவியெனும் பெரும்

கருங்கடலில் ஆசையெனும் அலை ஓசை

ஒழியா வாழ்க்கையில் பழியாயுழல 

திக்கறியா கரை தெரியா நின் நடைவாய்   

தஞ்சமடைவோர் கெஞ்ச அஞ்சுகம் தோள்

கொஞ்சும் வஞ்சிக்கொடி வஞ்சிப்பதேன்                       2

By

நாராயணன்

DR A NARAYANAN, Ph.D

London , December 2022

—subham—tags–லண்டன் டாக்டர் அ .நாராயணன்,  மார்கழிக் கவிதைகள்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 3 (Post 11,542)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,542

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் –

ச.நாகராஜன் 

கங்கைக்கரைத் தோட்டம்                                                  

கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ                                                   

 கண்ணன் நடுவினிலே                                                        

காலை இளங்காற்று                                                             

பாடிவரும் பாட்டு                                                        

 எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி

அழகு ரசிப்பதற்கே                                                             

அறிவு கொடுப்பதற்கே                                                        

மனது நினைப்பதற்கே – ஆஹா!                                               

வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே

வரவு எட்டணா                                                                  

செலவு பத்தணா                                                                        

அதிகம் இரண்டனா –                                                              

கடைசியில் துனா     படம் பாமா விஜயம்

பாட்டுப் பாடவா                                                                           

பார்த்துப் பேசவா                                                                       

பாடம் சொல்லவா                                                           

பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு

கண்ணெதிரே தோன்றினாள்                                                       /

கனிமுகத்தைக் காட்டினாள்                                                            

நேர்வழியில் மாற்றினாள்                                                    

நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்

நீ என்பதென்ன                                                              

நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை 

களங்கமில்லா காதலிலே                                                    

காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி

நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் சிலவற்றைப் பார்த்தோம்.

இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.

இவற்றைத் தொகுத்துப் பாடினாலே

வரும் சுகம்

இது நிஜம்!

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து, இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு நானூறு பாடல்களை மூச்சு விடாமல் உடனே சொல்லி விடுவர்.

அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு!

ஆசை முகம் மறந்துபோச்சே!

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்                                       

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ                                          

அன்பு நெறியிலே அரசாள – இந்த                                              

அகிலமெல்லாம் தமிழர் உறவாட                                                       

துன்பங்கள் யாவும் பறந்தோட                                                                     

 தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி, அகில உலக தமிழரை ஒன்று கூட்டி, தூய மனம் கொண்டு, கவி பாடி, துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று                                             

துயில் கொண்டதேன் இன்று                                                          

தொடர்ந்து பேசும் கிளியொன்று                                                                    

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

!

மயக்கம் எனது தாயகம்                                                              

மௌனம் எனது தாய்மொழி                                                           

கலக்கம் எனது காவியம்  –  நான்                                                   

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார்.

நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா – இந்த                                         

 பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?                                      

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது? 

தொட்டால் சுடுவது நெருப்பாகும்                                                       

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!                                                   

 தெரிந்தே கெடுப்பது பகையாகும்                                                   

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

 படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்                                           

இறக்கும் போதும் அழுகின்றான்                                                   

ஒருநாளேனும் கவலை யில்லாமல்                                                 

 சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்                                                  

உண்மை என்பது ஊமை!                                               

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்                                                 

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

 TO BE CONTINUED……………………………

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX