Hinduism around the World: Evidence from My English Books (Post No.11,541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,541

Date uploaded in London – 13 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Please read the following books for the evidence of Hindu influence and impact in different parts of the world:

Hindu Influence in Mesopotamia and Iran

Contents

1.Similarities in Gilgamesh – Hindu Scriptures

2. Gilgamesh -Two Thirds Divine, One Third Human

3.More on Gilgamesh – Hindu Connection

4.Did Indra attack Ur in Sumeria?

5.Stars Show India’s  Link with Greece and Iran in Vedic Period

6.River Ganges in Sumerian Culture

7.Sapta Rishis in Sumeria! Similar to Hindus!

8.More on  Sumukan , Sumeria  & Indus Mystery

9.Two Tamil Words show Akkadian, Sumerian Link

10.Similarities between Sumerian and Hindu Marriages

11.Rig Vedic King and Sumerian King 2600 BCE!

12.Sanskrit Interpreter in Sumerian Sculpture

13.What is Meluha? Where is it?

14.Strange Word for Poison! Mahaa- Hailikila

15. Another Strange Word ‘GONI’

16.Oldest Sanskrit Word in Inscription!

17.Sanskrit Names in Kassite Dynasty in Sumeria

18. Mushika / Phyrgian research

19.Woman comes from  Vamana, i.e. Leftist

20.‘UR’ in Rig Veda and Tamil Literature

21.Kishkinda in Patanjali

22.Vishnu in Mesopotamia

23.Sanskrit words in Sumerian Culture:

Sumukan Mystery

24.Hindu Kings Who Ruled Syria and Turkey

25.SuMeru, Ku Meru, Pa Meru, Meru

26.Bernier’s Description of Peacock Throne

27.Rs.1000 Crore Indian Gem Wonder

28.India needs an Indiana Jones !

29.Parsu Mystery in Rig Veda

30.Yadava- Iran Connection

31.Parasurama – Persia/ Iran Connection

32.“Why Did Parsees ‘Return’ to Gujarat?”

33.India- Iran Vedic Connection



XXXX

Hindu Wonders in Muslim Countries (book title)

Contents

1.Hindu Wonders in Indonesia!

2.Madagascar –India Link via Indonesia

3.Ancient Sanskrit Inscriptions in Strange Places

4.Mulavarman Sanskrit Inscription of Indonesia

5.Durga, Agastya, Tamil and Sanskrit in Indonesia!

6.Pallankuzhi (Mancala) Mystery

7.Tolkappiar Statue in Indonesia?

8. Naga Rani Soma – Kaundinya Marriage Story in Vietnam

9.Hindu Temples in Vietnam

10.New Siva, Agastya statues discovered in Vietnam

11.The Mysterious link between Karnataka and

Cambodia

12.Mitanni Wonders; Every Hindu Must Know!

13.Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints!

14.Hittite Mystery! Were they Hindus?

15.Ghost busting-Hittite Style!

16. Sanskrit Wonders in Thailand!

17.Rare Sanskrit Inscriptions with Medical Information

18.Hindu Sankaranti Festival in Thailand and Laos!

19.Beatiful Hindu Temple in Thailand

20.Vedic Gods Indra, Varuna, Yama in Thailand

21.Ramayana 304 sculptures in two temples alone!

22.Hundred Sanskrit Names from 1800 BCE to 1400 BCE!

23.Creation: Vedic Hymn and Babylonian Hymn

24.Peacock Mystery: Hindu Bird in Turkey/Syria around 1400 BCE- Part 1

25.Peacock Mystery: Hindu Bird in Turkey/Syria around 1400 BCE- Part 2

Xxxxxxx

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

CONTENTS

1.Did Indians build Egyptian Pyramids?

2.Vedas and Egyptian Pyramid Texts

3.Vishnu in Egyptian Pyramids

4.Hindu Gods in Egyptian Pyramids

5.Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

6.More Tamil and Sanskrit Names in Egypt

7.RAMA’S MARCH TO EGYPT AND SUMERIA!

8.Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams

9.Hindu Mudras in Egyptian and Sumerian Statues

10.Eleven Egyptian Kings with Same Name: Ramesses!

11.URUGULA!!! EGYPT- SUMERIAN- TAMIL- ATHARVANA VEDA- GREEK LINK !

12.Flags: Indus Valley-Egypt similarity

13.The Great Scorpion Mystery in History-1

14.The Great Scorpion Mystery in History-2

15.Human Sacrifice in Indus Valley and Egypt

16.Eagle in the Rig Veda and Egyptian Civilization

17.Sanskrit Words in Egypt (Amarna Letters)

18.First Homosexual King in History!

19.Hindu Eagle Mystery deepens!

XXX

HOW CAN YOU GET THE ABOVE BOOKS ?

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels for readers

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags – My books, Hinduism, Around the world, Evidence

Learn Tamil Verbs -Part 32; புரியும் , விளங்கும் (1000 Verbs ) Impersonal Verbs – Post No.11,540

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,540

Date uploaded in London – 13 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

TAMIL Impersonal Verbs are very useful and easy to use.

They are called impersonal verbs because there is no PGN (Person,, Gender, Number).

Generally used in present tense context.

Take the subject in the dative case

Xxx

What is dative case?

It is To; in Tamil we call it Fourth Case நான்காம்  வேற்றுமை

Examples :

To Rama, To James, To July, To Latha, To Samantha, To Mary, To David

You can form thousands of useful, every day sentences.

Xxx

The often used impersonal Verbs are

புரியும் PURIYUM, UNDERSTAND

THERIYUM தெரியும், KNOW

KIDAIKKUM கிடைக்கும், AVAILABLE

POTHUM போதும்,ENOUGH

VILANGUM விளங்கும், UNDERSTAND

XXX

FOLLOWING ARE  USED SIGHTLY IN A DIFFERENT WAY

VENDUM வேண்டும்,NEED, WANT

MUDIYUM முடியும் CAN, POSSIBLE

XXX

NOT MUCH USED

MAATTUM மாட்டும் , POSSIBLE, CAN

XXX

Now let us look at the examples

புரியும் PURIYUM, UNDERSTAND= VILANGUM விளங்கும், UNDERSTAND

Indian Tamils use Puriyum and Sri Lankan Tamils use Vilangum

Enakku thamiz Puriyum= to me Tamil understand= I understand Tamil

எனக்கு தமிழ் புரியும்

xxxx

Avanukku hinthi Vilangum = To him Hindi understand= He understands Hindi

அவனுக்கு ஹிந்தி விளங்கும்

xxxx

Jamesukku aangkilam puriyum= James understands English

ஜேம்ஸுக்கு ஆங்கிலம் புரியும்

xxx

Julykku singalam Vilangum = July understands Sinhalese

ஜூலீக்கு  சிங்களம் விளங்கும்

xxx

Inge Ellorukkum thamil puriyum = Here –to all—Tamil—understand= all here understand Tamil

இங்கே எல்லோருக்கும் தமிழ் புரியும்

Xxx

You can change them into interrogative / Questions – sentences by adding ஆ

 AA in Tamil

புரியும்+ ஆ= புரியுமா = Does/ Do ——- understand?

விளங்கும் +ஆ = விளங்குமா Does/ Do ——- understand?

Examples

உங்களுக்கு ஆங்கிலம்/ தமிழ் புரியுமா ?= ungalukku Aangkilam/ Thamiz—puriyumaa? = To you English/ Tamil understand?=  Do you understand English/ Tamil?

Xxx

அவர்களுக்கு பிரெஞ்சு விளங்குமா ?== Avargalukku pirenju Vilangumaa?= To them French Understand? + Do they understand French?

Xxx

Negatiives

Negatives are formed by adding AATHU ஆது to infinitive

ஆது -aathu

Puriyaathu புரியாது,

Vilangaathu விளங்காது

புரிய+ ஆது – don’t or doesn’t understand

விளங்க+ ஆது –don’t or doesn’t understand

In the next lesson , we will look at other Impersonal Verbs.

To be continued…………………………..

 Tags – Impersonal verbs, Puriyum, Vilangum, Understand

லெட்சுமியும் அவள் அக்காளும் வசிக்கும் இடங்கள் பற்றி அம்பலவாணர் (11,539)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,539

Date uploaded in London – 13 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ARAPPALISURA SATAKAM VERSES 20 AND 21 ON LAKSHMI AND HER ELDER SISTER

20. திருமகள் இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்

நற்பரி முகத்திலேமன்னவர் இடத்திலே,

     நாகரிகர் மாமனை யிலே,

  நளினமலர் தன்னிலேகூவிளந் தருவிலே,

     நறைகொண்ட பைந்துள விலே,

கற்புடையர் வடிவிலேகடலிலேகொடியிலே,

     கல்யாண வாயில் தனிலே,

  கடிநக ரிடத்திலேநற் செந்நெல் விளைவிலே,

     கதிபெறு விளக்க தனிலே,

பொற்புடைய சங்கிலேமிக்கோர்கள் வாக்கிலே

     பொய்யாத பேர்பா லிலே,

  பூந்தடந் தன்னிலேபாற்குடத் திடையிலே

     போதகத் தின்சிர சிலே

அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) அண்ணல் – தலைவனே!, எமது………..தேவனே!, நல் பரி

முகத்தில் – அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் –

அரசரின் இடத்திலும், நாகரிகர் மாமனையில் – நாகரிகம் அறிந்தவர்களின்

வீட்டிலும், நளின மலர் தன்னில் – தாமரை மலரிலும், கூவிளந் தருவில் –

வில்வ மரத்திலும், நறைகொண்ட பைந்துளவில் – மணமுடைய பசிய

திருத்துழாயிலும், கற்புடையர் வடிவில் – கற்புடைய மங்கையரின்

வடிவத்திலும், கடலில் – கடலிலும், கொடியில் – துகிற்கொடியிலும்,

கல்யாணவாயில் தனில் – திருமண வீட்டின் வாயிலிலும், கடிநகர் இடத்தில்

– காவலுடைய நகரத்திலும், நல்செந்நெல் விளைவில் – நல்ல செந்நெல்

விளைவிலும், கதிபெறு விளக்கதனில் – ஒளிவீசும் விளக்கிலும், பொற்பு

உடைய சங்கில் – அழகுறும்சங்கிலும், மிக்கோர்கள் வாக்கில் – பெரியோர் மொழியிலும், பொய்யாத

பேர்பாலில் – பொய் மொழியாதவரிடத்திலும், பூந்தடந்தன்னில் – மலர்ப்

பொய்கையிலும், பாற்குடத்திடையில் – பாற் குடத்திலும், போதகத்தின்

சிரசில் – யானையின் தலையிலும், அல்பெருங்கோதை மலர்மங்கை

வாழ்இடம் என்பர் – இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும் இடம் என்பர் அறிஞர்.

நீண்ட பட்டியல் ; எளிய தமிழ்; விளக்கமே தேவை இல்லை . பல வீடுகளில் வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்திருப்பதற்கும், தோட்டத்தில் வில்வ மரம், துளசி மாடம் வைத்திருப்பதற்கும் இப்போது காரணம் தெரியும் .

தாமரை மலர் கொண்டு தேவியரை பூஜிக்கவேண்டும். கற்புடைய மங்கையரைப் போற்ற வேண்டும். சினிமாக்காரிகளை அல்ல..

மூ தேவி  வசிக்கும் இடங்களை அறிந்து தவிர்க்க வேண்டும்  இதே கருத்தை வேறு புலவர்கள் எப்படி விளம்புகிறார்கள் என்று ஒப்புநோக்குவோம்.

XXXXX

          21. மூதேவி இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்

மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,

          மிகுபாடையோர் இடத்தும்,

     மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்

          மிக்க பாதகரிடத்தும்,

கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய

          கந்தை அணிவோர் இடத்தும்

     கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத

          கன்னி வாழ் மனைஅகத்தும்,

ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,

          சார்ந்த ஆட்டின் திரளிலும்

     சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி

          தவ்வை வாழ் இடம் என்பர் காண்!

அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்

          அழகன் எமது அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

(இ-ள்.) அதிரூப மலைமங்கை நேசனே – பேரழகுடைய

மலைமகளின் கணவனே! மோழை தரும்அழகன் – மோழையென்பான்

பெற்ற அழகனான, எமது…………தேவனே!, அன்னம் மிதம் இன்றிப்

புசிப்போரிடத்திலும் – சோற்றை அளவின்றி உண்பவரிடத்திலும், மிகு

பாடையோரிடத்தும் – மிகைபடப் பேசுகின்றவரிடத்திலும், மெய் ஒன்று

இலாமலே பொய் பேசியே திரியும் மிக்க பாதகரிடத்தும் – ஒரு மெய்யும்

கலவாமல், எப்போதும் பொய்யையே கூறியலையும் மிகவும்

கொடியவரிடத்திலும், கதியொன்றும் இலர்போல மலினம் கொளும் பழைய

கந்தை அணிவோரிடத்தும் – சிறிதும் வழியற்றவரைப்போலக் கிழிந்த

பழைய கந்தையை உடுப்பவரிடத்திலும், கடி நாய் எனச் சீறி எவரையும்

சேர்க்காத கன்னிவாழ் மனையிடத்தும் – கடிக்கின்ற (வெறி) நாய்போலச்

சினந்து பேசி ஒருவரையும் அணுகவிடாத பெண்ணொருத்தி வாழும்

இல்லத்திலும், ததிசேர் கடத்திலும் – தயிர்ப்பானையிலும், கர்த்தபத்

திடையிலும் – கழுதைகளின் குழுவிலும், சார்ந்த ஆட்டின் திரளிலும்

– கூடிய ஆட்டுமந்தையிலும், சாம்பிணம் முகத்திலும் – இறந்த பிணத்தின்

முகத்திலும், இவையெலாம் கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் –

இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று

அறிஞர் கூறுவர்.

     கற்புள்ள பெண்களுக்கு நேர் எதிரி= வீட்டிற்குள் எவரையும் வரவிடாமல் எரிந்து விழும் பெண்கள். கணவனைத் திட்டும் பெண்கள் = கழுதை =ஆட்டுமந்தை= கந்தலாடை தரித்திரன்= பிணம்= பொய்யன்= வாயாடி= வயிறா வண்ணான் தாழியா என்று வியக்கும் வண்ணம் சாப்பிடும் சாப்பாட்டு ராமன்கள்= மூதேவி

XXX


இதோ இன்னொரு லெட்சுமி பாடல்:–

பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்

கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை

நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது

நிற்பிட நல்லோர் நெஞ்சுமே

–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்

பொருள்

லெட்சுமி வசிக்கும் இடங்கள்:-  பதுமம்= தாமரை; கொடி – த்வஜம்;  நகர் = நகரம்;  மின் = மின்னல் ஒளி;  பைந்துளவு = பச்சைத் துளசி;  வில்வம் = வில்வம்; கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்; சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு);; கடல் = சமுத்திரம்; தீபம் = விளக்கு; வதுவை மனை = கல்யாண வீடு; நற் பரி = நல்ல குதிரை; பால் பாண்டம் = பால் பொங்கும் பானை. இவை = இவை எல்லாம், நாண்மலராள் = மஹலெட்சுமி,  நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம். நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)

xxxx

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது.

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கைதாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காதுமூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்.

Xxx

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

Xxxx

: புறநானூறு தகவல் (Post No.3560)

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

–வான்மீகியார், புறம் 358

பொருள்:

இந்தப் பாட்டில் பல சுவையான செய்தி-

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.

Xxxx

முகடி= தவ்வை= மூதேவி= Lakshmi’s Elder Sister=Alakshmi

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்

கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்

ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்

பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

–விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது

xxxxx

செய்யாள், தவ்வை பற்றி வள்ளுவன் (from S Nagarajan’s post in my blogs)

திரு எனப்படும் லக்ஷ்மி தேவி

குறள் எண்கள் 179519617920

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்

திறன் அறிந்தாங்கே திரு   (குறள் 179)

அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு  (குறள் 519)

தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்  (குறள் 617)

தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)

இருமனப் பெண்டிர் என்றால்  பொது மகளிர் – வேசிகள்!  பொது மகளிர்கள்சூது ஆகிய இந்த  மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின்  தொடர்பு ஆகும்.

Xxx

மூதேவி

குறள் எண்கள் 617936

குறள் 617ஐ மேலே கண்டோம்.

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால்  மூடப் பட்டார்

சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.

செய்யவளும் தவ்வையும்!

லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

—- subham—-

Tags லெட்சுமி பற்றிவள்ளுவன்அம்பலவாணர் அறப்பளீசுர சதகம்புறநானூறுசெய்யாள்தவ்வைமூதேவி உவமான சங்கிரகம்வசிக்கும் இடங்கள்

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 2 (Post 11,538)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,538

Date uploaded in London – 13 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 2

ச.நாகராஜன்

உவமைகளை அடுக்குவதில் தான் ஒரு கவிஞனின் சாமர்த்தியம் ஒளிரும்.           ஆண் :மானல்லவோ கண்கள் தந்தது

       மயிலல்லவோ சாயல் தந்தது                                          

       தேனல்லவோ இதழைத் தந்தது

       சிலையல்லவோ அழகைத் தந்தது

பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது

        சின்ன யானை நடையைத் தந்தது                                         

        பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது                                            

        பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

நீதிக்குப் பின் பாசம் படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலில் உவமைகளின் அடுக்கைப் பார்க்க முடிகிறது. வில்லிப்புத்தூரார் தனது ஒரு செய்யுளில் பல உவமைகளை அடுக்குவது வழக்கம். அதே போல கண்ணதாசனும் திறம்பட உவமையின் சிகரத்தில் ஏறி அமர்கிறார்.

கம்பனை விமரிசிப்பதற்காக கம்பனைப் படிக்க ஆரம்பித்த கவிஞர் அவனது எல்லையொன்றின்மை என்று பாரதி வியந்த அதே INFINITY தன்மையை அவனது கவிதைகளில் கண்டு வியந்தார். அவனைத் தனது மனதிலே இருத்தினார். சொற்களிலே தோய்த்தார்கருத்துக்களிலே வார்த்தார்.

எடுத்துக்காட்டிற்காகசொல் விளையாட்டுப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

கம்பன் பாடினான் இப்படி:-

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ? மைவண்னத் தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்

கை வண்ணம் அங்கே கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்”

தாடகையை வதைத்த போது உன் வில் வண்ணம் கண்டேன். கல்லிலிருந்து அகலிகை எழுந்த இந்தச் சமயத்தில் உன் கால் வண்ணம் கண்டேன் என்கிறார் விஸ்வாமித்திரர்.

இப்படி ஒரு வண்ணத்தைக் கம்பன் காட்டியவுடன் தன் கை வண்ணத்தை கவியரசு பாசம் படத்திலே காட்டுகிறார் இப்படி:

‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்!

கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’

கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா

மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!

சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் மட்டுமா வண்ணம் கண்டு மகிழ்கிறார்கள். காலத்தை வென்று இன்றும் தமிழ் மக்கள் கண்ணதாசனின் பாடல் வண்ணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள்

To Sophia என்ற கவிதையில் ஷெல்லி கூறும் வார்த்தைகள் இவை :

Thy Deep Eyes A Double Planet. ஷெல்லிதாசனாக மிளிர்ந்த மஹாகவி பாரதி “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணமா, சூரிய சந்திரரோ” என்றான்.

ஆகப் பெரும் உயரிய மனங்கள் இடத்தாலும் காலத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் கருத்தால் ஒன்றோடு ஒன்று இணையும்; ஒன்றை விட இன்னொன்று விஞ்சும்.

இதையே கண்ணதாசன் கவிதைகளிலும் காண்கிறோம். ஆங்கிலக் கவிஞர்கள், பாரசீகக் கவிஞர்கள், வடமொழிக் கவிஞர்கள்  என்று பலரைச் சுட்டிக் காட்டலாம். தீயினில் அகப்பட்ட தீ  என்பான் ஆதிகவி வால்மீகி. தீயே உன்னைத் தீயில் போட்டு வாட்டோமோ என்பான் கண்ணதாசன்.

தமிழின்  ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான்.

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!

ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.

தமிழின் சிறப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அருட்பிரகாச வள்ளலார் தமிழ் பற்றி அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க வேண்டும்.

தமிழ் மொழியில்  இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற பரம்பரைச் சொத்து! தமிழ்ச் சொத்து!

எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.

கற்கக் கசடற – குறள் 391

செய்க பொருளை – குறள் 759

உண்ணற்க கள்ளை – குறள் 922

நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241

பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.

அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.

வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;

அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!

இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.

கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; நேரம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

வாழிய செந்தமிழ்!

சுடரே போற்றி!

விதியே வாழி!

செய்க தவம்!

சாகாவரம் அருள்வாய்!

வந்தேமாதரம் என்போம்!

நெஞ்சு பொறுக்குதிலையே!

ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள இப்படிப்பட்ட உவமைகளைக் காண்பது அரிது!

இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.

கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல். கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!

கலங்காதிரு மனமே! – நீ                                                                

கலங்காதிரு மனமே!  – உன்                                                    

கனவெல்லாம் நனவாகும்                                                       

ஒரு தினமே!

அடுத்து சில பாடல்களையும் படங்களையும் பார்ப்போம்!

தொடரும்

Tamil Hindu Encyclopaedia -36 ;Uma/உமா /உமை (Post No.11,537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,537

Date uploaded in London – 12 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Sangam Tamil poets give us a full picture of Lord Siva and his abode Kailash. They show him and his consort Uma residing in Kailash. When Ravana tried to lift Kailash and got crushed Siva was with his wife Uma (Kalittokai 38- 1/5)

The implied meaning in this anecdote is Lord Siva is so compassionate, that he even spared Ravana though he tried to shake Kailash. This is the interpretation that Sekkizar gave us in his Periyapuranam.

He is blessing his devotes , sitting with Uma, according to Murugu.153 and Kali.38).

Siva is portrayed as a God sitting under the banyan tree in another poem- ஆல் அமர் செல்வன் Kali.81-9; 83-14, Murugu.256.

Malaipadukadaam called him காரி உண்டிக் கடவுள் Kaari Undik Kadavul (eater of Black Poison).

Siva as Trayambaka (Three Eyed) was sung by many poets முக்கண்ணன், முக்கணான் Murugu. Line 153, Kali.2-4, Akam 181-16.

His weapon was Kanichi கணிச்சி (axe) and his Flag/ Vahana Bull

ஏறு Puram.56-1, Murugu line 151, Kali 26-5, Kali 150, Pari.8

Sangam poets said that Vedas came from him- -Akam.181, Puram.166, Pari-5-26/27

Xxx

Siva’s burning down of Three Forts of Asura is sung by many poets:

Pari.5-22/27. It is a detailed description. The imagery is as follows

Earth – Siva’s Chariot

Horses – Vedas

Bow- Himalayas

Bow String- The big Snake  ‘Aadi Seshan

Driver of the Chariot- Brahma

Weapon – Fire Arrow (may be Laser Gun)

When he fired his arrow, the Three Forts ( Tri Puras) became ash.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா, மலை வில்லாக,

மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,       25

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

உமையொடு (Uma) புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,        30

பரி பாடல் 5-22/27 PARIPATAL

XXXX

புறநானூறு 55 Purananuru 55

Following verse also mentioned the Snaky Bow Strig , Mountainous Bow, Destruction of Three Forts with One Arrow  Shot

ஓங்கு Mountain/மலைப் பெரு வில் பாம்பு/Snake ஞாண் கொளீஇ,

ஒரு கணை (One Arrow) கொண்டு மூஎயில் உடற்றி,

பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த

கறை மிடற்று(Black Spotted Neck) அண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் (Crescent Moon Forehead)  விளங்கும் ஒரு கண் போல,      

Xxx

Final destruction

Among the trinity Siva is attributed with the task of Final Destruction. Yama kills all the people. Even that Yama is destroyed by Siva during the Final destruction – says

Kali 101-24/26 and 103-43/45

Xxx

Worshippers at Navira Malai and Aala Mutram

Malaipadukadaam poem says that Siva in Naviramalai was worshipped by the bards and poets accompanied by music

Lines 81-83 and 25-233

நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்,

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,

காரி உண்டிக் கடவுளது (Siva) இயற்கையும்,

——-மலைபடுகடாம் 81-83

xxx

காரி உண்டிக் கடவுளைத் (Siva) தொழுதல்

உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, 225

மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,

தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்

சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,

ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்

பராவு அரு மரபின் கடவுள் காணின், 230

தொழா நிர் கழியின் அல்லது, வறிது.

நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி

மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே

——–மலைபடுகடாம் MALAIPADUKADAAM

XXX

Another place where Siva was worshipped was called Aalamutram –  Aka Nanuru 181 – 14/22 gives the details.

வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,  15

நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,

ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்

கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20

சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்

புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்

அகநானூறு 181 AKA NANURU 181

Xxx

References to Uma

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன்

–கலித்தொகை 38-2

xxx

உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

மூ எயில் முறுக்கிய முரண்மிகு செ ல்வன்

முருகு- 153/154

In short, Sangam poets said whatever said in the Sanskrit Puranas. They never missed a single point.

—SUBHAM—

Tags– நவிர மலை, ஆலமுற்றம் , உமை , கைலாஷ், சிவன் , காரி உண்டிக்கடவுள் , முக்கண்ணன்

அம்பலவாணரின் அழகான சொல் ஓவியம் (Post No.11,536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,536

Date uploaded in London – 12 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx

Poet Ambalavanar’s Imagery

உடல் — நீர்க்குமிழி (Body= Bubble)

வாழ்க்கை  — மலையைச் சுற்றிச் சுழன்று ஓடும் வெள்ளப்

பெருக்கெடுத்த ஆறு (Life span= Flooded river rapids)

உறவினர்-  கானல் நீர் (Relatives= Mirage

இளமை அழகு – மஞ்சள்  வெயில் (Youth= Dusk)

உயிர் – வெட்டவெளியில் காற்று வீசும் இடத்தில்

ஏற்றப்பட்ட விளக்கு (Life/ breath = Lamp in Windy Open Space)

19. நிலையாமை Impermanence VERSE 19 OF ARAPPALISURA SATAKAM WITH MY COMMENTARY

நீரில் குமிழி யாக்கை அறப்பளீசுர சதகம்

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்

     காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!

  கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்

     கானல்காட் டும்ப்ர வாகம்!

மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்

     வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,

  வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,

     வீண்பொழுது போக்காமலே

நேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்

     நினைவுவைத் திருபோ தினும்

  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க

     நிமலனே! அருள்புரி குவாய்

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) நிமலனே – தூயவனே!, ஆயும் அறிவாளர் பணி பாதனே –

ஆராயும் அறிஞர்கள் வணங்கும் திருவடிகளை யுடையவனே!, போதனே –

அறிவின் வடிவே!, அண்ணல் – தலைவனே!, எமது….தேவனே!,

காயம் ஒரு புற்புதம் – உடல் ஒரு நீர்க்குமிழிவாழ்வு மலைசூழ்தரும் காட்டில்

ஆற்றின் பெருக்குஆம் – வாழ்க்கையோ மலையைச் சுற்றியுள்ள

கானகத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளம் ஆகும்,

கருணைதரு புதல்வர்

கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் –

அருளுக்கிடமான மக்களும் உறவினரும் வீடும் இல்லாளும் ஆகிய

இவைகளெல்லாம் பேய்த்தேரிலே/MIRAGE காணப்படும் வெள்ளம்!,

மேய புயபல

வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் – (நம்மிடம்),

பொருந்திய தோளாற்றலும் இளம் பருவமும் அழகும் ஆகிய இவை மஞ்சள்வெயில் (இளவெயில்),

உயிர்தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் –

உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு,

எனவே கருதி – என்றே

நினைத்து, வீண் பொழுது போக்காமல் – வீணே காலத்தைக் கழிக்காமல்,

தெளிந்து – தெளிவடைந்து,

 உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு

நினைவுவைத்து –

உன் திருவடிகளிடையே நட்புவைத்து அன்புடன்

நினைத்து, இருபோதினும் நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு

அர்ச்சிக்க அருள் புரிகுவாய் – காலையினும் மாலையினும் நீரையும்

பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாயாக!

XXX

AMBALAVANAR’S NEW PAINTING

அம்பலவாண கவிராயர் ஒரு படம் வரைந்தார். அதற்கு வண்ணங்களும் பூசினார். பெயின்டிங் முடிந்தபின்னர் அதை நமக்கு கவிதையின் மூலம் வருணிக்கிறார்.

உடல் — நீர்க்குமிழி

வாழ்க்கை  — மலையைச் சுற்றிச் சுழன்று ஓ டும் வெள்ளப்

பெருக்கெடுத்த ஆறு

உறவினர்-  கானல் நீர்

இளமை அழகு – மஞ்சள்  வெயில்

உயிர் – வெட்டவெளியில் காற்று வீசும் இடத்தில்

ஏற்றப்பட்ட விளக்கு

நல்ல அருமையான ஓவியம்/ PAINTING பெயிண்டிங் .

இந்த விளக்கு எந்நேரமும் எளிதில் அணையக்கூடியதால் உடனே இரண்டு நேரமும் — காலையிலும் மாலையிலும் உன்னை நினைந்து வழிபட அருள்புரி என்று சிவபெருமானை வேண்டுகிறார்.

XXX

நிலையாமை , விருந்தோம்பல், பிறன் மனை நோக்காத பேராண்மை  போன்ற விஷயங்களை உலகில் இந்து மத இலக்கியங்களில் மட்டுமே காண முடியும் . இதை அவர்கள் தனித்  தலைப்பாக எடுத்துக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்திலும் , தமிழிலும் பாடியுள்ளனர் .

கும குருபரர் அருளிய நீதிநெறி விளக்க வெண்பாவிலும்  இதே கருத்தைக் காணலாம்

*நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்  

நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்  

எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே  

வழுத்தாத தெம்பிரான் மன்று.

xxxx

குறள் 335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்

[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

வளையாபதிப் பாடலொன்றும் இதையே செப்பும்

இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல

வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம்

உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும்

விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்”

என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது.

XXXX

விவேக சிந்தாமணி  ஆசிரியர் வேறு ஒரு சித்திர ஓவியம் வரைந்துள்ளார்

ANOTHER PAINTING BY THE AUTHOROF VIVEKA CHINTAMANI

பாடல் 32: அநித்ய சுகம் ( பூரணயோகம் வெப்சைட் )

கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,

 விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,

மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,

வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.

ஒரு கருடன்  தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும்,  தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து  அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.

(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)

XXX

கழுதை யார் ?

பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பதரிது எனப்

புகல்வர்பிறந்தோர் தாமும்

ஆதிமறை நூலின் முறை அருள் கீர்த்தி ஆம்

தலங்கள் அன்பாய்ச் சென்று

நீதி வழுவாத வகை வழக்குரைத்து

நல்லோரை நேசம் கொண்டு

காதவழி பேர் இல்லார், கழுதை எனப்

பாரில் உள்ளோர் கருதுவரே.–விவேக சிந்தாமணி

பொருள்: மானிடராய்ப் பிறப்பதரிது. பிறந்தாலும் சாத்திரப்படி தயவு, புகழுடன் வாழ்ந்து, தல யாத்திரை செய்யவேண்டும் நியாயம் தவறாமல் வழக்கு தீர்த்து, நல்லோருடன் பழகி ஒரு பத்து மைல் தூரத்துக்காவது புகழ் பரவ வேண்டும் அல்லது அவனைக் கழுதையின் மறு பிறப்பே என்று உலகம் கருதும்!

XXX

அப்பர் தேவாரம் GOD’S NOTE BOOK ; daily account for six billion people

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (அப்பர், 5ஆம் திருமுறை)

சிவ பெருமானே! உன் மீது எல்லையிலா அனபு கொண்டு அழுது, தொழுது, பாடிப் பரவுகின்றவர்களையும், பொழுதை எல்லாம் வீண் அடிக்கும், உன்னைக் கண்டு கொள்ளாத சோம்பேறிகளையும் எழுதி கணக்கு வைத்துக் கொள்பவன் நீ! என்று பாடுகிறார். இந்த ஊரின் பெயர் திருஇன்னம்பர். அங்குள்ள இறைவனின் பெயர் எழுத்தறி நாதர்!!

காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்று.

XXXX

Do it Now

கடவுளை வணங்குவதை , வயதான பின்னர் செய்து கொள்ளலாம் என்று ஒத்திப்போடக்கூடாது. அதற்குப்பின்னர், குடும்பக் கவலையும், உடல் நலக்  கவலையும் அதிகரிக்கும்; வேறு எதற்கும் நேரம் இராது என்பது ஆன்றோர் கண்ட உண்மை. ஆகையால் அவனை இரு போதும் மறவாமல் வழிபட வேண்டும்

நாளை நாளை எண்ணாதே

நாளை வீணில் போக்காதே

நாளை செய்யும் காரியத்தை

இன்றே நலமாய் முடித்திடலாம்.

நாளை நம்முடைய முறையோ?

நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.

Xxxx

காலையிலும் மாலையிலும் தொழுதல்  பற்றி அப்பர் சுவாமிகளும் தேவாரத்தில் பாடி அருளியுள்ளார்

பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை

மாலையும் கண்ணியும் ஆவன சேவடி

காலையும் மாலையும் கைதொழுவார் மனம்

ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே 4-17-8

—subham—

Tags—நீரில் குமிழி,  யாக்கை,  அறப்பளீசுர சதகம் , நாளை நாளை, . நிலையாமை, அம்பலவாணரின், சொல் ஓவியம்

பாரதியார் கண்ட  அழகான காடு (Post No.11,535)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,535

Date uploaded in London – 12 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இயற்கையை  வருணிப்பதில் பாரதியார் வெகு சமர்த்தர். மலைபுயல் காற்று வந்தே மாதரம் பாடலில் நாட்டின் இயற்கை வள வருணனை ஆகியவற்றைப் படித்தோரும் கூட பாரதியார் ஒரு அழகான காட்டை வருணித்திருப்பதைக் கவனித்து இருக்க மாட்டார்கள். ஏனெனில் அது கண்ணன் என் காதலன் வருணனைக்குள் புதைந்து போய்விட்டது. அழகான மலர்கள்பழங்கள் நிறைந்த மரங்களுடன் சிங்கம்புலிமான் என்று பல மிருகங்களையும் ,நிலத்தில் இலைகளுக்கிடையே மறைந்துள்ள மலைப்பாம்பிம்பியும் நமக்கு காட்டுகிறார். அதை ஆங்கில மொழிபெயர்ப்புடன் படிக்கும் போது அதன் பொருள் மேலும் அழகுடன் மிளிர்கிறது

கண்ணன் என் காதலன் – 3

(காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம்
ரஸங்கள்: பயாநகம், அற்புதம்


திக்குத் தெரியாத காட்டில் – உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

Kannan My Beloved

The Search in a Forest

Looking for you in a forest

O how tired and lost was I



1.     மிக்க நலமுடைய மரங்கள்; – பல
     விந்தைச் சுவையுடைய கனிகள்; – எந்தப்
     பக்கத்தையும் மறைக்கும் வரைகள்; – அங்கு
     பாடி நகர்ந்து வரு நதிகள்; – ஒரு (திக்குத்)

Goodly trees all around

Laden with wonderful fruits

Bamboo enclosures arow

Streams that made music like lutes



2.     நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், – எங்கும்
     நீளக் கிடக்குமிலைக் கடல்கள், – மதி
     வஞ்சித் திடுமகழிச் சுனைகள், – முட்கள்
     மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், – ஒரு (திக்குத்)

Flowers that set hearts aflame

Oceans of scattered leaves

Wide and tempting pools

And bushes with thorny sheaves



3.     ஆசை பெறவிழிக்கும் மான்கள், – உள்ளம்
     அஞ்சக் குரல்பழகும் புலிகள், – நல்ல
     நேசக் கவிதைசொல்லும் பறவை, – அங்கு
     நீண்டே படுத்திருக்கும் பாம்பு, – ஒரு (திக்குத்)

Long eyed and lovely gazelles

Tigers rehearsing their roar

Birds with their friendly lays

And pythons stretched on the floor


4.     தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் – அதன்
     சத்தத் தினிற்கலங்கும் யானை – அதன்
     முன்னின் றோடுமிள மான்கள் – இவை
     முட்டா தயல்பதுங்குந் தவளை – ஒரு (திக்குத்)

Lions striding like kings

Elephants a tremble to hear them

Young does scattering in front

And frogs that wouldn’t go near them



5.     கால்கை சோர்ந்துவிழ லானேன் – இரு
     கண்ணும் துயில்படர லானேன் – ஒரு
     வேல்கைக் கொண்டுகொலை வேடன் – உள்ளம்
     வெட்கங் கொண்டொழிய விழித்தான் – ஒரு (திக்குத்)

Foot sore and weary I stumbled

My eyes through the gloom ceased to peer

When suddenly stood there before me

A hunter with a spear and a leer!



6.     “பெண்ணே, உனதழகைக் கண்டு – மனம்
     பித்தங்கொள்ளு” தென்று நகைத்தான் -“அடி
     கண்ணே, எனதிருகண் மணியே – உனைக்
     கட்டித் தழுவமனம் கொண்டேன்.

My girl with your ravishing beauty

You have driven me crazy he said

Darling the apple of my eye

I must hug you and take you to bed



7.     சோர்ந்தே படுத்திருக்க லாமோ? – நல்ல
     துண்டக் கறிசமைத்துத் தின்போம் – சுவை
     தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் – நல்ல
     தேங்கள் ளுண்டினிது களிப்போம்!”

How come you are tired and lost?

Good meat let us prepare and eat

I will fetch you delicious fruits

And toddy divinely sweet



8.     என்றே கொடியவிழி வேடன் – உயிர்
     இற்றுப் போகவிழித் துரைத்தான் – தனி
     நின்றே இருகரமுங் குவித்து – அந்த
     நீசன் முன்னர் இவை சொல்வேன்.

So spoke that grim eyed hunter

His stare put my poor soul a stretch

On the rack with folded hands

I said these words to that wretch



9.     “அண்ணா உனதடியில் வீழ்வேன் – எனை
     அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா – பிறன்
     கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை – உன்றன்
     கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

My brother I fall at your feet

With evil words don’t frighten me

A woman, another man’s wife

Is it right that you should even see



10.     “ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன்; – நின
     தின்பம் வேண்டுமடி, கனியே! – நின்றன்
     மோடி கிறுக்குதடி தலையை, – நல்ல
     மொந்தைப் பழையகள்ளைப் போலே!”

Have done I want no preaching

It is pleasure I seek of your body

Your dalliance makes my head whirl

My dear like frothy old toddy



11.     காதா லிந்தவுரை கேட்டேன் – ‘அட
     கண்ணா!’ லென்றலறி வீழ்ந்தேன் – மிகப்
     போதாக வில்லையிதற் குள்ளே – என்றன்
     போதந் தெளியநினைக் கண்டேன்.

I heard those words and screaming

Kannan I swooned in my fear

Not many moments since then

I awake and find you here



12.     கண்ணா! வேடனெங்கு போனான்? -உனைக்
     கண்டே யலறிவிழுந் தானோ? – மணி
     வண்ணா! என தபயக் குரலில் – எனை
     வாழ்விக்க வந்த அருள் வாழி!

O Kannan,where is that hunter?

Was it he that screamed, fell a swoon?

My jewel come to rescue me

How beautiful is your boon!

Translated by Professor P S Sundaram

—subham—

Tags-பாரதி பாடல்,  ஆங்கில மொழிபெயர்ப்பு ,கண்ணன் என் காதலன் 3, பாரதியார் கண்ட  அழகான காடு

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 1 (Post 11,534)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,534

Date uploaded in London – 12 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

10-12-2022 அன்று நிகழ்த்திய உரை

ச.நாகராஜன் எழுதியுள்ள  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம், திரைப்படங்களில் ராமர் பாடல்கள் ஆகிய மூன்று புத்தகங்களில் உள்ள கருத்துக்களை பெரும்பாலும் கொண்டுள்ள உரை

ச. நாகராஜன்

10-12-2022 உரை

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 1


 அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று ஒரு நன்னாள். ஏனெனில் தமிழுக்குப் பெருமை சேர்த்த தலையாய, காலத்தை வென்ற கவிஞனை  மனதில் இறுத்திக் கொண்டாட இருக்கிறோம்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

அற்புதமான இந்தப் பழம் பெரும் பாடல் உலகிற்கு இருள் அகற்றி ஒளி தருவது இரண்டு. ஒன்று சூரியன் இரண்டாவது தமிழ் என்று கூறுகிறது. எத்துணை பொருள் பொதிந்த பாடல்.

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக கோடானு கோடி ஜீவராசிகளுக்கு ஒளி கொடுத்து உயிர் கொடுத்து வருபவன் சூரியன்.

அதே போல அக இருள் போக்கும் அற்புதத் தமிழ் மொழி கோடானு கோடி பேர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அக இருள் போக்கி, அவர்களை வாழ்விக்க வைக்கிறது.

இந்தத் தமிழை வாழ வைக்கும் அறிஞர்களைக் கொண்டாடுவது நமது சமுதாயக் கடமை.

எந்த ஒரு நாடு ஆகப் பெரும் அறிஞர்களையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறதோ அதுவே சிறந்த நாடு.

அவர்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம்; உன்னதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.

அந்த வகையில் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியைத் தன் பெயரிலே கொண்ட திரு காவிரிமைந்தன் வேறு யார் பொய்ப்பினும் தான் பொய்யாமல் கவியரசன் கண்ணதாசனை நாம் எண்ணும்  எண்ணதாசர்களாக ஆக்குவிக்கும் பான்மை போற்றத் தக்கது.

கண்ணதாசன் கலைக்கூடத்தில் அவருடன் இணைந்து நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி முனைவர் திரு தமிழ் இயலன் இந்த இணையவழிக் கூட்டத்தை நடத்துவது பாராட்டுக்குரியது.

ஐ. ஏ. எஸ் என்பதை Inspiration, Admiration, Salutation என்று கொள்கிறேன் நான். உத்வேகத்துடன் வியந்து பாராட்டப்பட வேண்டிய தலையாய தமிழ் மகன் கண்ணதாசன். அவரை முனைவர் மகா சுந்தர் போற்றும் தமிழ்த் தாய் வாழ்த்துடன்  நினைப்பது சாலச் சிறந்தது.

தமிழைத் தன்னுடன் இணைத்து தமிழுடன் இணைந்த கவியரசு கண்ணதாசனை உயிராக நேசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இணைய வழியில் கூடி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

சங்கப் புலவர்கள், தெய்வப்புலவர் திருவள்ளுவர், கவிச்சக்கரவர்த்தி கம்பன், தமிழாகரன் திருஞானசம்பந்தர், அப்பர், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், மகாகவி பாரதியார் என்ற பெரும் பரம்பரை அவ்வப்பொழுது தமிழுக்கு புதிய அணிகளையும் சந்தங்களையும் தந்து அதன் சிறப்பை உலகெங்கும் பரப்பி வியக்கச் செய்வதை வரலாறு கூறுகிறது.

அந்த வகையில் பாரம்பரியம் வழுவாமல் ஆனால் அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை உள் கிரகித்து புதியதொரு பாடல் வழியைக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

இவருக்கும் ஏனைய மற்றவருக்கும் உள்ள ஒரு மாபெரும் வித்தியாசம் :REACH.  அதாவது, கூறிய கருத்துக்கள் ஆயிரக்கணக்கானோரை உடனடியாகச் சென்றடைதல்.

கவிஞர் பாடினார் என்றால் அது உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அந்தக் கடைக்கோடி தமிழனையும் உடனடியாகச் சென்றடைந்தது.

கோயம்பேடில் வசிக்கும் சாமானியனாலும் சரி, கோடீஸ்வரன் மாளிகையாக இருந்தாலும் சரி, அவரது பாடலை அனைவரும் கேட்டு ரசித்தனர். இன்றும் ரசிக்கின்றனர்.

இதை காஞ்சி பரமாசார்யரே அவரிடமே சொல்லி இருக்கிறார்.

‘நான் பேசுவதை விட நீ கூறினால் அது அனைவரையும் எளிதில் சென்றடையும், அனுபவம் குழைந்தது அது’  என்றார் அவர்.

24-6-1927ஆம் ஆண்டு பிறந்த முத்தையா என்னும் கண்ணதாசன் 17-10-1981இல் மறைந்தார்.  54 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அவரை நினைத்துப் போற்றுகிறோமே அந்த ஒன்றே போதும் அவர் காலத்தை வென்ற கவிஞன் என்பதை உணர்த்த.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும், அந்த சூத்திர சுருக்கத்தில் படிப்போரின் அல்லது திரைப்படத்தில் பார்ப்போரின் மனக் கற்பனைக்குத் தக்கபடி பொருளை விரிவுபடுத்திக் கொள்ள வழியை அகலமாக வைத்திருப்பதும் அவருக்கே உரித்தான தனிப் பாணி.

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு Multi Dimensional Personality யாக ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். நல்ல பேச்சாளர். நடிகர். மேற்கோள்களை உருவாக்கியவர். கேள்விக்கு தக்க பதிலைத் தந்தவர். ஸ்வரம் கண்ட இசை மேதை.எல்லாவற்றிற்கும் மேலாக கள்ளங்கபடில்லா வெள்ளை உள்ளம் கொண்ட மா மனிதர். நல்ல மனிதர். இப்படிப் பல பரிமாணங்கள். Multi faceted Personality!

4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக் கணக்கில் கட்டுரைகள்என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.

வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.

இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும், காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.

அந்த வகை கணிப்பில் காலத்தை வென்ற கவிஞனாக மிளிர்கிறார் அவர்.

கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்;

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

அத்தோடு சமகால அரசியலை – குறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர்., தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கண்டு அதைத் தமிழ் மக்களுக்குத்தந்தவர்.

 சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.

நாதாப்ரிய சகி என்று கட்டுப்பட்டிருந்த திரைப்படத் துறைப் பாடல்களிலே தமிழ்ப் புரட்சியைச் செய்தார் கவிஞர்.

நாதா போனது. என் தலைவன்மன்னவன் வந்தானடிஅத்தான் என் அத்தான் என்று ஆனது. ப்ரிய சகி, தோழி ஆனது. கொஞ்சி விளையாடும் தமிழ்ச் சொற்கள் நளின நடை போட்டு பாடல்களில் நர்த்தனம் ஆடத் துவங்கின.

தமிழில் சகலத்தையும் தந்த சகல கால சங்கமம் கவியரசால் உதித்தது. சகலகலாவல்லவன் ஆனார் அவர்.

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்என்பது நல்ல குறுந்தொகையில் 40வது பாடல்.

இதே கருத்து வரும்படி

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

என்று பாடல் அமைத்தார்.

படம் : வாழ்க்கைப்படகு.

தொடரும்

வெளி உலகவாசிகள் பற்றி இந்துக்கள் நம்பிக்கை (Post No.11533)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,533

Date uploaded in London – 11 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

MY BOOKS

வெளி உலகவாசிகளை இந்துக்கள் நம்புகின்றனர். இதோ ஆதாரங்கள் :

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும்காலப்பயணமும் 

பொருளடக்கம்

1.நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!

2.ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு: நம்மாழ்வாரும் சொல்கிறார்!

3.வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! 4.ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

5.சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

6.ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரிடார்வின் சொன்னது 100% சரி

7.வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதைமனு தரும் தகவல்!!

8.மாண்டவர் மீண்டுவந்த 3 அதிசய நிகழ்ச்சிகள்

9.சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்?

10.பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

11.சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது! 

12.புறநானூற்றில் Drone ட்ரோன் ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்!

13.திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

14.அ(ம்)மாவாசை பெயர் அற்புதம்!

15.தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்!

16.முனிவர்கள் விஞ்ஞானிகளா பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது ?     

17.வடக்கே தலை வைக்காதே!

18.நாடி ஜோதிட ரகசியங்கள்: ‘நாஸா’ விஞ்ஞானிகள் கவனிக்க!

19.விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத அதிசய விஷயம்! இந்துக்கள் கண்டுபிடிப்பு!

20.தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் –2

Xxxxxx

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

பொருளடக்கம்

1.இந்துக்களின் அதி நவீனஅதி பயங்கர ஆயுதங்கள்!

2.ஐன்ஸ்டீன் ‘காப்பி’ அடித்தாரா?

3.இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

4. நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு

 5.நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்-

6.விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்?

7. உலகின் முதல் ரோபாட்– இந்துக்கள் கண்டுபிடிப்பு !

8. உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்கந்தனாயூரி ககாரினாஇசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்

9.தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

10.ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது உண்மைதான் !

11.மனதின் அபார சக்தி

12.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!- பகுதி 1

13. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது! -பகுதி 2

14.மஹாபாரதம் உண்மையேஆண்களுக்கும் குழந்தை பிறக்கும்

15.க்ளோனிங் cloning- அதிசய ஹிந்து விஞ்ஞானம்!

16.ஆணுக்குப் பிறந்த குழந்தை!

17.பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

18.பிரிட்டனிலும் ஆண் மரம்பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

19.தீபாவளிப் பண்டிகையில் விஞ்ஞான உண்மைகள்

20.கடலுக்குள் முனிவர்கள்கம்பன் சொல்லும் அதிசய செய்தி

xxxxxxxxx 

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 Tags–என் புஸ்தகம், வெளி உலகவாசிகள், பிரம்மாஸ்திரம், அணு ஆயுதமா?,

யானைக்கு இல்லை தானமும் தருமமும்; ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் (11,532)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,532

Date uploaded in London – 11 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

  THOSE WHO ARE WITHOUT DHAANA, DHARMA , DAYAA, AND TAPAS ARE NOTHING BUT  ANIMALS LIKE ELEPHANTS AND CATS. 

யானைக்கு இல்லை தானமும் தருமமும்

பூனைக்கு இல்லை தவமும் தயையும்

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்

சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்

முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்

அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை

கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.

வெற்றிவேற்கை (நறுந்தொகை) எழுதிய ஆசிரியர்  அதிவீரராம பாண்டியர் யாருக்கு எது இல்லை என்பதை அழகாக சொன்னார்.

அதே பாணியில் – ஸ்டைலில் style — அம்பலவாண கவிராயரும் யாருக்கு எது இல்லை என்று சொல்லுகிறார்.

திருவள்ளுவரும் நிறைய இடங்களில் யாருக்கு எது இல்லை என்பதை அடுக்குகிறார்.

குறள் 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

குறள் 59

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை

குறள் 247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

குறள் 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் . இனி அறப்பளீசுர சதகம் சொல்லுவதைக் காண்போம்

Xxxx

ARAPPALICHURA SATAKA VERSE 17 WITH MY COMMENTARY

அறப்பளீசுர சதகம்

18. இல்லை

காமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;

     கயவர்க்கு மேன்மை யில்லை;

  கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார

     கன்னியர்க் காணை யில்லை;

தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு

     சாதிகுலம்என்ப தில்லை;

  தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொரு

     சார்பிலார்க் கிடம தில்லை;

பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான

     புகழென்ப தொன்று மில்லை;

  புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்

     புருடருக் கொன்றும் இல்லை;

யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே

     அன்புடைய அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) யாமினி தனக்குநிகர் கந்தரத்து இறைவனே – இருளுக்கு

ஒப்பான கழுத்தினையுடைய முதல்வனே!, அன்பு உடைய – அன்புள்ள,

அருமை……………..தேவனே!, காமிக்கு முறை இல்லை – காம மயக்கம்

உடையவர்க்கு முறை தோன்றாது. வேசைக்கு நாண் இல்லை – பரத்தைக்கு வெட்கம் இராது, கயவர்க்கு மேன்மை இல்லை – தாழ்ந்தவர்க்கு உயர்வு  வராது, கன்னம் இடு கள்வருக்கு இருள் இல்லை – கன்னம் வைக்கும் திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது,

தாம் எனும் மயக்கு அறுத்து  ஓங்கு பெரியோருக்கு வரு சாதி குலம் என்பது இல்லை –

நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் தேவையில்லை,

தாட்சணியம் உடையபேர்க்கு இகல் இல்லை – கண்ணோட்டமுள்ளவர்க்குப் பகைவர் உண்டாகமாட்டார்,

 எங்கும் ஒரு சார்பு இலார்க்கு இடமது இல்லை – ஓரிடத்தும் ஆதரவு அற்றவர்க்கு இடம் கிடையாது,

பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான புகழென்பது என்றும் இல்லை –

உலகத்தில் வறியோர்க்குக் கொடாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும்ஏற்படாது,

புலையர்க்கு நிசம் இல்லை – இழிந்தவர்க்கு உண்மையிராது,

கைப்பொருள் இலாத ஓர் புருடருக்கு ஒன்றும் இல்லை – கைப்பொருள்

இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.

Xxxx

காம மயக்கம் உடையவர்க்கு முறை தோன்றாது. என்பதை ஆசை வெட்கம் அறியாது என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம். ஆங்கிலத்திலும் காதலுக்கு கண்ணில்லை LOVE IS BLIND என்பார்கள்

XX

– கைப்பொருள் இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.

என்பதை வள்ளுவரே சொல்லிவிட்டார்:-

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு –247

XX

நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் தேவையில்லை என்பதை கிருஷ்ண பரமாத்தவே பகவத் கீதையில் சொல்லிவிட்டார்  சொல்லிவிட்டார்:-

பகவத் கீதை 5-18

பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசுயானைநாய்புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।

शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥

வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|

ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||

கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சம பார்வையுடையோர்.

XX 

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.- குறள் 341

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று புத்தர்  சொன்னார். ஆசையை ஒழித்த ஞானிக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை

XXX

VALLUVAR’S VIOLENT STRATEGY 

பொருளை வைத்துக்கொண்டு மற்றவர்க்குக் கொடாமலிருப்பவனை கையை  முறுக்கி நாலு குத்து, குத்து என்கிறான் வள்ளுவன்

 குறள் 1077 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு- 1077

xx

இதே கருத்தையே, அறநெறிச்சாரப்பாடல் இவ்வாறு கூறுகிறது

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்

பட்ட வழங்காத பான்மையார்–நட்ட

சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்

சொரிவதாம் ஆபோற் சுரந்து.

அதாவது, தம்பால் உள்ள பொருள்களை, நட்பினர்களுக்கும் கொடாமலும், பிச்சையேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் கஞ்சராம் கீழோர் உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும். தடியெடுப்பவனுக்கும் தண்டல்காரனுக்கும் அஞ்சுகிற கீழோர், மற்றபடி, எச்சல் கையால் காக்கைகூட ஓட்டமாட்டார்கள்.

XX 

THOSE WHO ARE WITHOUT DHAANA, DHARMA , DAYAA, AND TAPAS ARE NOTHING BUT ANIMALS LIKE ELEPHANTS AND CATS.

 வெற்றிவேற்கையும் தானம் தர்மம் அற்றவர்களை

யானைக்கு இல்லை தானமும் தருமமும்

பூனைக்கு இல்லை தவமும் தயையும்

என்று சொல்லி அவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுகிறது 

–சுபம்—

 TAGS–  ஞானி, யானை, பூனை, கருமி, இல்லை, அறப்பளீசுர சதகம், சாதி குலம், காமம்