லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 6 (Post.11,543-part 6)  

WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 6

Date uploaded in London – 6 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 18

வழிந்து பெருகும் மத நீர் யானையை

எழுந்து முன் நின்று தாக்கும் கொடுந்தோள்

வலியன் நந்தகோபன் மருமகள் நப்பின்னாய்!

புலர்ந்த பொழுதறிய கோழிகள் கூவலும் மாதவிப்

பந்தல் மேல் குயில்களும் கூவப் பூங்குழல் மணமும்

பந்தார் விரல்களையுடையவளே! சீ ரார் வளையொலிக்க

செந்தாமரைக்கையால் தாள் திறந்துன் அகமுடையோன்

பேர் பாட முறையிடுமெமை மகிழ் விக்க வேண்டி

வாயிலிற்றிரண்ட வனிதை குழாம் வாழியே.

பூ மகளோ! ஆழ்வான் பூங்கா வனத்துப்

புனையா ஓவியம் போன்ற பூங்கொடியோ!

புவி தவழ்ந்த பொன் நாள் முதல் பூ வாய்

புகன்றதோ பொய்யுடலில் மெய்யாகப்

பொருளுள்ளடங்கியுமடங்காத வனுமானப்

புருடோத்தமன் நாராயணனே.*

நாராயணன்

XXXX

மார்கழித்திங்கள் 19

குத்து விளக்கொளியில் கோட்டுக்கால் கட்டில் மேவிய

அழகு,தண்மை,மென்மை,வெண்மை, நறுமை

குழைத்த படுக்கை ஏறிய கோவலனே!கொத்தலர்

கூந்தலும் குவிந்த தனமுடைய நப்பின்னை மார்பு

தழுவிய பறந்த மார்பினனே! திறவாதோ திருக்கண்

பாராதோ எமை என கெஞ்சிய வஞ்சியர்க்கு

போறாதிம்மைவிழிக்கண்ணாள் மார்புறங்கிய

பொழு தென அவன் குறை கூறியது தகுமுனக்காயினும்

நீ! எங்களைப் புறக்கணிப்பது பொருந்தாதோ உன்

கருணையுள்ளத்துக்கெனப் பாடிய கோதை வாழியே

நாளுமொரு நாளும் திருநாளாகா

நாரணன் நினைவிலா நாளானால்

ஊரும் பேரூராயினு மூராகா

உருவமோ அருவமோ கோயிலிலா

பேரும் பலபேருடையான் பேணுவதோ

பெருந்தவத்தோரடி பணிந்தோரை

தேறுமிவர் பிறவி கடை தேறும்

பெருந்தவத்தோர் பின் செல்ல

நாராயணன்

XXXXXXX

மார்கழித்திங்கள் 20

முப்பத்து மூன்று வகையான அமரர்க்கு வருமல்லல்களை

முப்போதேயறிந்து எப்போதும் முன் சென்று செற்றாரை

முறியடிக்கும் விருப்பு வெறுப்பில்லா விமலன்

துயிலெழமூத்தாள் திருமதிக்கிணையான பொலியுமங்கங்களுடைய

ஓரகத்தாள் நப்பின்னையை துயிலெழுந்து ஆடியும்

ஆலவட்டமும் தந்து அவள் நாயகனை உடனே தம்முடன்

நீராட்டப் பரிந்துரைக்க வேண்டிய கோதை வாழியே

றி வெண்ணெய் களவாடியுண்ட வாயோனே

உலகமுண்ட வாயோனாய் உள்ளோனாக

உலகனைத்தும் உள் பொருளானோன், களவாடி

உறவாடிய நெஞ்சங்கள் பலவாயினும் அவனுள்

நிறைவாய் நிலைப்பவள் நிலமங்கை கோதையே

நாராயணன்

XXXXX

மார்கழித்திங்கள் 21

ஏந்திய கலசங்கள் பொங்கி வழிந்து,கை மாற

இடைவிடாப் பால் சொரியும் என்ணற்றப் பசுக்களை

உடையவனான நந்தகோபனின் குமரனும் மறையுள்

உறைவதை மறையே அறியாப் பெருமையுடையவனும்

குறையாத தேசில் நிறைவாய் ஒளிரும் பரமனே! வலி

குலைந்தப் பகையோர் வலிமையறிந்துனதடிமையராய்

கூடிய உன் வாயிலில் எளியோராய் உனதடி தலை

குனிந்த குலமக்களை துயிலெழுந்தருள்வாயே வென

குலத்தோர் குறை தீர்க்கப் பாடிய கோதை வாழியே

வாடினாள் வருந்தினாள் வாயினாற்பாடினாள்

தேடினாள் நாடினாள் ஓடினாள் ஆடினாள்

மூடினாள் நாணத்தால் முகத்தை முகுந்தனின்

மூச்சுத் தென்றலாய் தொட்ட வெண் மதியாளை

முகில் வண்ணன் திரையிடச் சிறையில்

பிறந்த மறையோனை மனதிற்சிறையிட்ட

நில நங்கை வாழியே.

நாராயணன்

Xxxx

மார்கழித்திங்கள் 22

அகண்டு பறந்து விரிந்த அழகிய இப்புவியை

ஆண்ட பெரு மன்னர்கள் அகம்பாவம்

அற்றுறுதியாகி அனந்தனுன் மஞ்சத்தடி தஞ்சம்

அடைந்தது போல் கூடியோரெம்மீது பிளந்தவாய்

சதங்கையுள்ளாடும் மணி போன்று மலர்ந்து

மலராத செந்தாமரைக் கண்ணால் விடு

மதியும் தொடு சூரியனுமாய் ஒருங்கிணைந்த

உன் பார்வையொன்றே போதுமென தங்கள்

சாபம் நீக்கிட வேண்டிய நங்கையர் வாழியே

படி வாயில் நின்றரங்கனழகில் அகமகிழ்ந்து

கூடிய ஆழ்வார்கள்  பாசுரங்களால்   தேசுடையோனைப்

பாடியும் மூடிய கண்கள் திறந்தவன், தேடியவள்

கடைவாயில் நிற்பது கண்டு பின் தங்குமணங்கோ

நடை பயின்ற நாள் முதலென்னைத் தன் நாவிலே

குடிவைக்க இடை வந்தோர் நீவீர் சற்றே விலகி எம்

அடி சேர்க்குமவளை யாம் கைப்பிடிக்கும் நன்னாள்

கூடிற்றோ வென குமிழ்ந்த வாயுடையரங்கன்

கூறாமல் கூறினானோ

நாராயணன்

To be continued………………………………………

Leave a comment

Leave a comment