மிகுந்த வேதனையிலும் கூட அன்பு செலுத்திய புத்த குரு (Post No.11,800)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,800

Date uploaded in London –   13 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மிகுந்த வேதனையிலும் கூட அன்பு செலுத்திய புத்த குரு மாஸ்டர் ஷு யுன்!

ச.நாகராஜன் 

மிகுந்த வலியிலும் மரண வேதனையிலும் கூட மற்றவர் மீது எல்லையற்ற அன்பு செலுத்த முடியுமா? குறிப்பாக அப்படி நமக்கு வேதனையைத் தந்த எதிரியிடம் அன்பு செலுத்த முடியுமா?

 முடியும் என்ற அதிசய பதில் புத்தமத குருமார்களின் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.

மரண வேதனையில் அப்படிப்பட்ட சொல்லவொண்ணா வேதனையைத் தந்த செஞ்சட்டை ராணுவத்தினருக்குத் தன் அன்பைக் காட்டிய அபூர்வமான குரு மாஸ்டர் ஷூ யுன் (Master Hsu Yun)!

 இவர் மாஸ்டர் ஷுவன் ஹுவாவின் (Master Hsuan Hua) குரு. மாஸ்டர் ஹூவா சீனாவில் பத்தாயிரம் புத்தர்கள் நகரின் மாபெரும் ஆலயத்தின் மடாதிபதி.

 அவரது குருவான மாஸ்டர் ஷூ யுன், சீனாவில் இருந்த ஐந்து விதமான புத்தமத வம்சாவளியினரின் தலைமை குரு. அந்த ஒவ்வொரு வம்சாவளியினராலும் அவர் மிகவும் பூஜிக்கப்பட்டார்.

சான் வம்சம், சூத்ரா வம்சம், மந்த்ரா வம்சம், வினயா வம்சம், மறைவியல் வம்சம் என இந்த ஐந்து வம்சங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் அன்பு பாராட்டினர். ஒவ்வொரு வம்சமும் அவரைத் தங்கள் வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டும் என்று வேண்டினர்.

துரதிர்ஷ்டவசமாக சீனாவில் செஞ்சட்டை ஆதிக்கம் கம்யூனிஸத்தால் ஏற்பட்ட போது புத்த மதத்தினரும் புத்த மத குருமார்களும் எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாயினர்.

செஞ்சட்டை ராணுவம் அவர் மடத்தைத் தாக்கிய போது அவருக்கு வயது 110.

மரத் தடிகளைக் கொண்டு செஞ்சட்டை தடியர்கள் அவரைத் தாக்கினர்.

மாமிசக் குவியலாக ரத்தம் ஒழுக அவரைப் பார்த்த பிறகே அவர் அப்படியே சாகட்டும் என்று விட்டு விட்டு அந்தப் பொல்லாத் தடியர்கள் அகன்றனர்.

உடைந்த எலும்புகள், பிய்ந்த சதைகள், ஒழுகும் ரத்தம் – என்றாலும் கூட அவர் உயிர் பிழைத்தார்.

இந்த அதிசயச் செய்தி சீனாவெங்கும் பரவியது.

இதைக் கேட்ட செஞ்சட்டையினர் மீண்டும் அவர் இருப்பிடத்திற்கு வந்தனர். அவரைக் குறி வைத்துத் தாக்கினர்.  இந்தத் தடவை இரும்புத் தடிகளால் தாக்கினர்.

அவர் சுருண்டு விழுந்தார்.

ஆனால் இந்த முறையும் அவர் இறக்கவில்லை.

அவரது சீடர்கள் அவருக்குக் கட்டுப் போட்டு சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றினர். அவர் உயிருடன் இருந்தார்.

அனைவரும் இது கண்டு அதிசயித்தனர்.

ஆனால் அற்புதமான தியானத்தின் சக்தி அவரிடம் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆகவே ஆற்றலுடன் அவர் இருப்பதை அனவரும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

 ‘தங்களது மாஸ்டர் தங்கள் மீது மாறா அன்பு கொண்டவர்; தான் இறந்து விட்டால் சீடர்கள் சொல்லொணா வேதனைக்கு ஆட்படுவார்களே என்று நினைத்து அவர் தன் உயிரை இந்த வேதனையிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனது பிரிவு வேதனையால் சீடர்கள் தவிக்கக் கூடாதே என்று தான் அவர் தன் உயிரை விடாமல் இறப்பைத் தள்ளிப் போட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்’ – என்று இப்படி அவர்கள் எண்ணினர். 

ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரிடம் சென்றனர்.

“ஐயனே! எங்களுக்காக நீங்கள் வேதனைப் பட வேண்டாம். நீங்கள் இப்படி வேதனைப்படுவதைத் தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்த வேதனைக்கு நீங்கள் இறந்ததால் வரும் வேதனையே பரவாயில்லை. நீங்கள் உங்கள் உயிரை விடுவதற்கான தருணம் இது தான் என்றால் தாராளமாக உயிர் துறக்கலாம்” என்றனர்.

உடனே மாஸ்டர் அவர்களைப் பார்த்து அன்புடன் கூறினார் இப்படி:

“சீடர்களே! நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது உண்மை தான்! ஆனால் அது உங்களுக்காக அல்ல. இது அந்த செஞ்சட்டை ராணுவ வீரர்களுக்காக. என்னை அடி அடி என்று அடித்து அவர்கள் துன்புறுத்தி இருக்கின்றனர். நான் இறந்தால் அந்த கர்மாவினால் அவர்களுக்கு வரும் எல்லையற்ற பாதிப்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு பெரியது. அந்த விளைவுக்கு நான் ஒரு காரணமாக இருக்க வேண்டாமே என்று நினைத்துத் தான் என் உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

இதைக் கேட்ட அனைவரும் எதிரி மீதும் அவர் காட்டும் பரிவையும் அன்பையும் எண்ணி பிரமித்தனர்.

இதை அறிந்த செஞ்சட்டை ராணுவ வீரர்கள் அதிர்ந்து போனார்கள்.

அவரை விட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

அதற்குப் பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார். 100 வயது புத்த சந்யாசியாக இருப்பதாக அவர் விரதம் பூண்டிருந்தார்.

தனது 120ஆம் வயதில் அவர் உயிர் துறந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சீடர்களுக்கு ஆற்றிய உரை பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த தர்மா போதனைகள் Ch’an and Zen Training என்ற நூலாக Charles Luk என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

 புத்த மத குருமார்கள் சரித்திரம் உலகில் அவ்வளவாகப் பரவவில்லை.

ஆர்வமுள்ளோர் அவற்றைத் தேடிப் பார்த்து நூல்களிலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

**

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 8 (Post No.11,799)

Udumbara- Ficus glomerata

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,799

Date uploaded in London – –  12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

XXX

123.SATAVARA

Asparagus racemosus

AV.19-36

Eatable, medicine

xxx

124.SILACI

Name of a healing plant; also called Laksaa

AV.5-5-1.8

xxx

125.SILAANJAALA

Grain creeper,

Same as Saalaanjaalaa

xxx

126.SIMSAPA

Dalbergia sisu

RV.3-53-19 (with Khadira), a stately and beautiful tree

AV.20-129-7; 6-129-1

wood

xxx

126 a.SIPALA

Water plant, Blyxa Cylanica

RV.10-68-5 later form Saivala; Siyalya overgrown with Sipala plants.

AV 6-12-3

xxxx

127.SOMA


Cannot now be identified with certainty; variously identified:

1.Sacrostemmabrevistigma= Asclepias acida

2.S.intermedium= S.viminale

3.Periploca asphylla

4.Ephedra vulgaris

5.Cannabis sativa

RV. The whole of Ninth Mandala and Six hymns of other mandalas devoted to this plant. Soma is described the best among plants all trees prostrate to Soma who is their king.

Drink.

xxx

128.SOMAVATI

RV.5-10-97,7

One of the four principal medicinal plants in Rigveda

xxx

129.SPANDANA

A certain tree

RV.3-53-19

xxx

130.SPHURJAKA

Diospyros perigrina

SB.13-8-1-16

Timber, fruit

xxx

131.SRAKTYA

Cleodendron phlomidis

Amulet derived from its wood, according to commentators on AV.8-5-4-7,8

(See Bloomfield in Amer. Jour.Phil.7, 477)

Medicinal

xxx

132.SREKAPARNA

Nerium odorum

Taittriya Bra.3-6-6-3

Aiareya Bra.2-6-15

Medicinal

xxx

133.SUGANDHI TEJANA

Andropogan squarrosus

Tittr; Kathak, samhitas

Aitare, Panca. Bra

SB .3-5-2-17

Grass

xxx

134.SVADHA

A plant

AV.6-96-3

xxx

135.SVADHITI

A great tree with hard wood, according to Roth

RV.5-32-10; 9-96-6; 1-82-2

xxx

136.SYAMAKA

Millet

Echinochla colona var fumentacea

Tait, Mait, Vaja. Kath.Samhitas

 SB.10-6-3-2

Food of pigeons – AV.20-35-12

Also Cha.Upa 3-14-3

Max Muller says Canary seed.

Cereal

xxxx

137.SYANDANA

Wood of a plant according to Roth

Kausika Sutra- 8-15

xxx

138.TAAJABHANGA

Ricinis communis

AV.8-8-3; Kau. Sut.14-14

Oil, medicinal

xxx

139.TALASA

Flacourtia cataphracta

AV 6-15-3

xxx

140.TARSTAAGHA

Tree

Kaus. Sut. 25-23

Its adjective tarstaaghi is found in AV.5-29-15

Weber thinks it is mustard plant.

xxxx

141.TANDI

AV 10-4-25

xxx

142.TILA, TIRYA

Sesamum indicum

AV.2-8-3; 6-140-2; 18-3-694-32

As an epithet of Kurambha- AV4-7-3

Many samhias, Upanishads

SB 9-1-1-3; often mentioned with Masa- AV6-140-2

Medicinal, Ritual

xxxx

143.TILVAKA

Symplocos racemosus

SB. 13-8-1-16

Yupa made of is wood

xxx

144.TRAYAMBANA

AV 8-2-6; also mentioned in Amarakosa

xxx

145.UDOJASA

One of the four principal medicinal plants

RV.10-97-7

xxx

146.UDUMBARA


Ficus glomerata

AV.19-31-1

Many samhitas and many brahmnas

Fruit as sweet as Madhu

Medicinal, eatable, ritual

Yupa and ladle made of its wood

Amulets- AV19-31-1

TO BE CONTINUED………………………….

 Tags- Vedic Plants, Part 8, Soma, Sesamum, 4 principal, medical palnts, RV, AV

குடந்தைக்கு அருகில் நல்ல ஹோட்டல், குடியிருப்பு (Post.11,798)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,798

Date uploaded in London – –  12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

குடந்தைக்கு — அதாவது கும்பகோணத்துக்கு — சுமார் ஐந்து மைல் தொலைவில் ஸ்ரீவத்சம் என்ற பெயரில் முதியோர் குடியிருப்பு இருக்கிறது. அங்கே எங்கள் நண்பர் ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். அவரது அழைப்பை ஏற்று அங்கே தங்கினோம் . இந்த முறை 3 வார இந்திய விஜயத்தில் நான்கு நாட்களை அங்கு செலவிட்டோம்.

இந்தக் குடியிருப்பு — ஹோட்டல்– லாட்ஜ் என்பது முதியோர் இல்லம் ஆகும். இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இடம். பெரும்பாலும் பிராமணர்கள்தான் அங்கே இருந்தாலும், வெஜிட்டேரியன் விஷயங்களை அப்படியே பின்பற்றும் பிராமணர் அல்லாத சிலரும் வசிக்கிறார்கள். சொந்தக் கட்டிடம் வாங்கியோ அல்லது அறைகளை நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தோ இங்கு பல முதியோர்கள் வசிக்கினறனர்.

மகன்களோ, மகள்களோ வெளிநாட்டில் குடியேறிய பின்னர், வயதான தாய் தந்தையரை இங்கே தங்க வைக்கின்றனர். இது போல சில ஊர்களில் உள்ளது . மேலும் பல குடியிருப்புகள் அவசியம்.

ஸ்ரீ வத்சம் குடியிருப்பில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் சிறிய அளவில் கட்டி வைத்திருக்கிறார்கள் ; சுப்ரபாதங்களும் ஸ்லோகக்ங்களும் காலையில் ஒலிக்கும்.

இந்த complex உள்ளேயே Divine Inn என்ற லாட்ஜும் உள்ளது. அப்பா, அம்மாவைப் பார்க்க வருபவர்களோ, என்னைப்போல நண்பர்களை பார்க்கச் செல்பவர்களோ ‘வசிப்போர் அறை’யிலும் தங்கலாம். பிரைவசி Privacy வேண்டுமானால் அறை எடுத்தும் தங்கலாம். நாங்கள் ஒரு Double Bedroom AC  டபுள் பெட்ரூம் ஏஸி அறை எடுத்து 4 நாட்கள் இருந்தோம். நண்பர் மூலமாகப் போனதால் தினசரி வாடகை 1500 க்குப் பதிலாக 1300 ரூபாய்தான் கொடுத்தோம். ரூ.300 தள்ளுபடி.

xxx

நல்ல பிராமண உணவு

காலை ஐந்தரை மணிக்கு, கும்பகோணம் பில்டர் காப்பி. அதே போல மாலை மூன்றரை மணிக்கும் அசல் பில்டர் காப்பி Filter Coffee . பகல் 12 மணிக்குப் பின்னர் ரசம், சாம்பார், கறியுடன் சாப்பாடு. மாலை 7 மணி வாக்கில் டிபன் என்று சொல்லக்ககூடிய பலகார வகைகள். பெரும்பாலும் வெங்காயம் பூண்டு இராது.

ஆனால் உலகின் பல பகுதிகளில் இருந்து தாய் தந்தையரைப் பார்க்க வருவோருக்கு Divine  Inn டிவைன் இன் மாடியில் சப்பாத்தி, தால் தால் Dhal , புட்கா Putka சஹிதம் சாப்பாடு உண்டு. எப்போதும் கிடைக்கும் இட்லி தோசை பொங்கல் வகையாறாக்களும் இருக்கும். மேலே, கீழே இரண்டு உணவு விடுதிகளிலும் சாப்பிடும் ஐட்டங்களுக்கு ஏற்ப நாம் பணம் கொடுக்கவேண்டும் . நல்ல ஏற்பாடு. அங்கேயே தங்கி வசிப்போர் சாப்பாடு வேண்டாம் என்று உபவாசம் இருக்கும் நாட்களும் உண்டு. அறையிலேயே சாப்பாட்டைப் (Room  Service) பெரும் வசதியும் உண்டு.

xxx

அமாவாசைச் சாப்பாடு

நாங்கள் தங்கிய நாட்களில் (பிப்ரவரி 2023)ஒரு அமாவாசையும் வந்துவிட்டது. நானும் என் சகோதரனும் அறையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு மதியச்  சாப்பாட்டுக்குச் சென்றோம். மூன்றே ஐட்டம்கள்தான். சாதம் மோர்க்குழம்பு, வாழைக்காய் கறி (பொடித்தூவல்)

எங்களுக்கு டாக்சி ஓட்டி வந்தவர் பிராமணர் அல்ல. அவரிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்

Sorry சாரி, நீங்கள் வேண்டுமானால் கும்பகோணம் வரை சென்று உங்களுக்குத் பிடித்த உணவைச்  சாப்பிட்டு வாருங்கள் அல்லது மாடிக்குப் போய் சப்பாத்தி, தால் , புட்கா சாப்பிடுங்கள் என்றேன்.

ஸார் , 15 நாட்களுக்கு கூட நன் பிராமண  உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவேன் என்றார் .

xxxx

இதைச் சொல்லும்போது வேறு ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. என் தந்தை வெ . சந்தானம் மதுரை தினமணி பத்திரிக்கையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் தினமணி ஊழியர் அதிகாரிகள் 300 பேர் வரை சாப்பிட வருவார்கள். வெங்காயம், பூண்டு என்பதை பிராமணர்கள் அறியாத காலம் அ து. 300 ஊழியர்களும் ‘அய்யர் வீட்டு சாப்பட்டைப் போல ருசி வேறு எங்கும் இல்லை’ என்று சொல்லி  மனம் மகிழ்ந்து சாப்பிடுவார்கள். இன்றோ வெங்காயம் இல்லாமல் சமைக்க பிராமணர்களுக்குத் தெரியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது .

xxxx

நான் வேலை பார்த்த இடத்தில் இரண்டு சீக்கிய பெண்மணிகளுடன் மதிய உணவுக்குச் செல்வேன். சில நாட்களில் நான் , வெங்காயம் பூண்டு உணவுகளைத் தவிர்ப்பேன். அவர்களும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். இது பற்றி ஒரு நாள் சம்பாஷணை Conversation எழுந்தது.

எங்களுக்கு எல்லாம் இந்த இரண்டும் இல்லாமல் சமைக்கத் தெரியாது. அலுவலத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற அடுத்த நிமிடத்தில் சமையல் அறைக்குள்  நுழைந்து எங்களை அறியாமலேயே வெங்கா யம், பூண்டு இவைகளை  வெட்டிவிட்டு பின்னர், இன்று என்ன சமைக்கலாம் என்று யோசிப்போம் என்றார்கள். அதாவது வெங்காயம்- பூண்டு இல்லாத வாழ்க்கை இல்லை.

மீண்டும் ஸ்ரீவத்சத்துக்குத் திரும்புவோம்.தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிப்போர் ஸ்ரீவத்சம் என்ற சொல்லுக்கு அடுத்த படியாக கெளஸ்துபம் என்ற சொல் வருவதை அறிவார்கள். அந்தக் கெளஸ்துபம் பெயரில் மேலும் ஒரு பெரிய குடியிருப்பு உருவாகிறது. முதலில் ஸ்ரீவத்சம் போய் தங்கி உங்களுக்குத் பிடித்திருந்தால் கெளஸ்துபம் குடியிருப்பில் வீடு வாங்க அப்ளிகேஷன் போட்டு வையுங்கள்.

xxx

டாக்டர் வசதி

வயதானோர் வசிக்கும் இடத்தில் தினமும் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்காக தினமும் டாக்டரும் இரண்டு நர்ஸுகளும் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் வருகிறார்கள்.

கும்பகோணத்தைச் சுற்றி 30, 40 கிலோ மீ ட்டர் சுற்று வட்டாரத்தில் 200 கோவில்கள் உள்ளன. ஆகவே யாத்திரைப் பிரியர்களுக்கு இந்த அமைதியான இடம் உதவும். அங்கேயே டாக்சி, ஆட்டோ வசதிகள் கிடைக்கும் என்றாலும், நம்முடைய சொந்த டாக்சியோ அல்லது காரோ இருப்பது அவசியம். நினைத்த நேரத்தில் புறப்பட்டு , இரவில் நினைத்த நேரத்தில் திரும்பலாம். நாங்கள் 4 நாட்களில் 40 கோவில்களையும் அதிஷ்டானங்களையும் தரிசித்து வந்தோம். காலையில் ஒரு ட்ரிப்.Trip ; மாலையில் ஒரு Trip . மதிய நேரத்தில் ஓய்வு.

xxxx

ஒரு சம்ஸயம் ! Doubt!

ஒரு வயதான நபரோ, தம்பதிகளோ இப்படிப்பட்ட இடத்தில் வசித்தால் போர் BOREDOM அடித்துவிடாதா என்ற எண்ணம்/ சந்தேகம் மனதில் எழுந்தது. என் நண்பர் அங்கு ஒன் றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.அவரால் வெளியே சென்று வரும் அளவுக்கு உடல் வலு இருப்பதால் ஆக்டி Active வாக உள்ளார். ஆனால் மிகவும் வயதானவர்கள் அங்கேயே பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டு வாழவேண்டும். வீட்டில் இருந்தாலும் அதையேதான் செய்யப்போகிறார்கள்.

என் நண்பரிடம் கேட்டேன். இங்கு நீண்ட காலம் வசிப்பவர் எவ்வளவு காலம் இருந்தார் என்றேன். மூன்று ஆண்டுகள் என்று பதில் கொடுத்தார்.

ஆயினும் ஸ்ரீ வத்சம் நிர்வாகம் அவ்வப்போது உபந்யாசம், பாட்டுக் கச்சேரி, யோகா முதலியவற்றை ஏற்பாடு செய்து எல்லோரையும் ஆ னந்தப்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இருந்த நாட்களில் பெரிய சினிமாப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.

சொந்தமாக வீடு வாங்கி இருப்பவர்கள் அங்கேயே சமைத்துச்  சாப்பிடவும் வசதி உண்டு. சமைக்க விரும்பாதோருக்கு 24 மணி நேரமும் காப்பி, டிபன், சாப்பாடு வசதியும் உண்டு.

கார் அல்லது டாக்சியில் சென்று தாங்கித்தான் பாருங்களேன். காலையிலும் மாலையிலும் கோவில் தரிசனம் கிடைக்கும்

ஸ்ரீவத்சம் என்று  கூகிள் செய்தாலேயே  முழு விவரங்களும் கிடைத்துவிடும் .

Srivathsam II | Home

Srivathsam II

https://www.srestateskumbakonam.com

We, SR Estates & SR Realtors – The premium real estate firms based in Kumbakonam have been operating in Kumbakonam and its surroundings for the last 10 years …

Srivatsam Kumbakonam · ‎Contact · ‎Videos · ‎Location

Divine Inn

divineinnkumbakonam.com

http://www.divineinnkumbakonam.com

Divine Inn Kumbakonam, located in a lush green surrounding that too in the River Bank, offers comfort, convenience and a warm welcome for the guests …

Kousthubham, Senior Citizens Homes of Srivatsam near …

HinduPad

https://hindupad.com › kousthubham-srivatsam

17 Nov 2022 — In this Project, they are going to build about 400 flats (approximately), and in this project also, they are going to build temples for Shiva …

–SUBAHAM—

Tags- ஸ்ரீவத்சம், குடியிருப்பு , பிராமணர், முதியோர், கும்பகோணம், Srivatsam, Divine Inn

திருவிடை மருதூர் கோவில் தரிசனம் (Post No. Post No. 11,797)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,797

Date uploaded in London – –  12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவிடை மருதூர் , மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர்.

திருவிடை மருதூர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது.

மூவர் பாடிய தலம்.

திருவிடை மருதூர் , திருப்புடை மருதூர், ஸ்ரீ சைலம் பற்றி காஞ்சி மகா சுவாமிகள் சொற்பொழிவுகளைப் படித்தோருக்கு மூன்று மருத மரத்தலங்களின் மஹிமை புரியும்

அர்ஜுன மரம் =மருத மரம்

xxxx

எங்களது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது தரிசித்த முக்கிய சிவன் கோவில் திருவிடை மருதூர் ஆகும். ஆந்திரத்திலும்  நெல்லை வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருதூர்களுக்கு இடையில் இந்த ஊர் அமைந்திருப்பதால் இது இடை மருதூர் என்று அழைக்கப்படுகிறது . திரு என்ற அடைமொழியே தேவாரப்பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டும். ஆகவே 1500 ஆண்டுக்கு முந்திய கோவில் இது.

திருவிடை மருதூர் தலம் மத்யார்ஜுனம் என்றும் அழைக்கப்படும். ஆந்திரத்தில் இருப்பது ஸ்ரீசைலம் இறைவன்- மல்லி கார்ஜூனர் ; திருநெல் வேலி வட்டாரத்தில் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் இருப்பது புடார்ஜுனம்.அர்ச்சுன / மரத்தின் பெயர் மூன்று ஊர்ப்பெயர்களிலும் இறைவன் பெயரிலும் உண்டு.அதுதான் தல விருட்சமும்.

சுவாமியின் திருநாமம் – மருதப்பர், மருதப்ப ஈஸ்வரர்

தேவியின்  திருநாமம்- பெருநல மாமுலை நாயகி

xxx

திருவிடை மருதூர், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது. தைப்பூசத்தில் இங்கே ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம் . .பாசமொன்றிலராய்  என்ற திருக்குறுந்தொகையில், அப்பர் பெருமான் , பூச ஸ்நானத்தைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய தலம் இது. அவர் அநேக தொண்டுகள் செய்து முக்தி பெற்ற தலமும்  இதுதான்

உருத்திரர், உமையம்மை, பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், முருகர் பூஜித்த கோவில் .

இத்தலம் மஹா லிங்கம் என்றும் சுற்றியுள்ள தலங்கள் பல சுவாமிகளின் சந்நிதிகளும் என்றும் சொல்லுவர்.

கோவிலின் கிழக்கு வாயிலில் பட்டினத்தடிகளும், மேற்கு வாயிலில் பத்ரகிரியாரும் எழுந்தருளி இருந்தனர்.

பிரகாரத்தில் கயிலாயக் காட்சிகளைக் காணலாம்.

திருவிடை மருதூர் தெருவழகு , திருவாரூர்த் தேரழகு என்பது பழமொழி. நான்கு பெரிய கோபுரங்களும், பெரிய தெருக்களும், திருக்குளமும் உடையது..

இங்கு மூகாம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவர் மவுனமாக இருந்து தவம் செய்த்ததால் இப்பெயர். பெரிய கோவில்  பிரகாரத்துக்கு அஸ்வமேத பிரகாரம் என்று பெயர்.அதை  வலம் வந்தால் அஸ்வமேத  யாகம் செய்த புண்ணியம் கிட்டும் என்றும், பேய் பிடித்தவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் வலம் வந்தால் நோய்கள் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.

கர்நாடகாத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகையை நமக்கு நினைவுபடுத்தும் சந்நிதி

xxxx

149 கல்வெட்டுகள் தரும் அரிய செய்திகள்

இந்த தலம் பற்றிய கல்வெட்டுகள் 149. அவை பராந்தகன் (CE 905-947) குலோத்துங்கன், வரகுண பாண்டியன், சுந்தர பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தவை .

கோவில் கல்வெட்டுகள் , அரிய விஷயங்களை நமக்கு அளிக்கின்றன.

1.முதலாம் ராஜேந்திரன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஏக நாயகன் வாசலுக்கு விளக்குப்போட ஆடுகள் அளித்த செய்தி இருப்பதால் மகாலிங்க சுவாமிக்கு ஏக நாயகன் என்ற பெயர் இருந்ததை அறிகிறோம்.

2.இங்கு உள்ள சோமாஸ்கந்தர் ஆடல் விடங்கத் தேவர் என்று அழைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு காட்டுகிறது

3.முதல் பராந்தகன் 37-ஆம் ஆட்சி ஆண்டில் திருவாதிரை, சதயம்,அமாவாசை நாட்களைக் கொண்டாட மானியம் கொடுத்து இருக்கிறான் .

4.மூலஸ்தான தெற்குப் பக்கத்திலுள்ள பூர்ண கணபதிக்கு எட்டு இலைக் காசுகள் மான்யம் கொடுத்ததால் அந்த விநாயகருக்கு பூர்ண கணபதி பெயர் இருந்ததும் தெ ரகிறது

5.தைப்பூச விழா பற்றியும் சில கல்வெட்டுகள் பேசுகின்றன.

6. மஹா லிங்க சுவாமிக்கு தினமும் செண்பகப்பூ சாத்தி வர, திருவெண்காடு பிச்சனால் நிபந்தம் அளிக்கப்பட்டது ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது

7.சோழன் இராஜகேசரி வர்மன் காலத்தில் (CE 985-1003), பத்தாவது ஆட்சி ஆண்டில் 278ம் நாளில் அரசி பஞ்சவன் மாதேவியரால் உமா சகிதருடைய தங்க உருவம் அமைக்கப்பட்டது .

8.திருக் காமக்கோட்ட முடைய நாச்சியாருக்கு இராஜகேசரி வர்மன்

ஒன்பதாம் ஆண்டில் நம்பிராட்டியார் பஞ்சமாதேவியால் 9 கழஞ்சு பொன் வழங்கப்பட்டது

9. பல கல்வெட்டுகள், திரு மஞ்சனம் கொண்டு வர, மண் குடங்கள் அளிக்கப்பட்டதைக் காட்டுவதால் அபிஷேகத்துக்கு மண் குடங்களில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டதையும் அறிகிறோம்.

10. விக்கிரம சோழனின் ஐந்தாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு மாணிக்கக்கூத்தர் கோவிலை குறிப்பிடுகிறது. இது நடராஜர் கோவிலா என்பதை உறுதிப டக் கூற முடியவில்லை

11. ஆறலூரிலுள்ள வாணாதிராயர் , ஆளுடைய பிள்ளையார் சிலை அமைக்க பணம் கொடுத்தான்

12.ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பி இவர்களுடைய படிவங்களை அமைக்க , வரியில்லாத நிலத்தை, இருமரபுந் தூய  பெருமாள் , சதுர்வேதி மங்கலத்தில்  அளித்தான் .

13.விக்கிரம பாண்டியன் சாந்தி திருவிழா என்ற ஒரு விழாக் கொண் டாடப்பட்டதை , அவனது கால கல்வெட்டு அறிவிக்கிறது .

14. நாலாவது பிரகாரத்திலுள்ள மூகாம்பிகைப் பிடாரி, யோகிருந்த பரமேச்வரி என்று அழைக்கப்படுகிறார் .

15. ஏனைய கல்வெட்டுகள், அரசனும் அரசியும், கோவிலில் விளக்கீட்டுக்காக,  நிலமும், பொன்னும், ஆடும் அ ளித்தமை அறிவிப்பின.

–subham— 

TAGS– திருவிடை மருதூர், கல்வெட்டுகள், மருத மரம், அர்ஜுனன், மகாலிங்க சுவாமி,  மூகாம்பிகை

ஐந்து வகை உபசாரம், ஐந்து வகை வழிபாடு, ஐந்து வகை கர்மம்! (Post.11,796)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,796

Date uploaded in London –   12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐந்து வகை உபசாரம்ஐந்து வகை வழிபாடுஐந்து வகை கர்மம்!

ச.நாகராஜன் 

1. ஆகாயம் ஐந்து வகைப்படும்.

அவையாவன:

1)  ஆகாசம் 2) பரமாகாசம் 3) மஹாகாசம் 4) தத்வாகாசம்

5) சூர்யாகாசம்

2. பங்க்தி பாவனா: ஐவர்

(விருந்தில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஐவர்)

1) ஷடங்கி – வேதாங்கங்களில் வல்லுநர்கள்

2) வினயி – எளிமையானவர்கள்

3) யோகி – யோகி

4) சர்வதந்த்ரா – அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்கள்

5) யாயாவரர் – பக்திமானான க்ரஹஸ்தன்

ஷடங்கி வினயி யோகி சர்வதந்த்ரததைவ ச |

யாயாவரஸ்ச பஞ்சைதே விக்ஞேயா: பங்க்திபாவனா: ||

3. உபசாரம் ஐந்து வகைப்படும்.

அவையாவன:

1) கந்தம் – சந்தனம்  2) புஷ்பம் – மலர்கள் 3) தூபம் – ஊதுபத்தி 4) தீபம் – தீபம் 5) நைவேத்யம் – நிவேதனப் பொருள்கள்

4. உபாசனம் அதாவது வழிபாடு ஐந்து வகைப்படும்.

பாஞ்சராத்ர ஆகமத்தின்படி ஐந்து வகை உபாசனம் கீழ் வருமாறு:

1) அபிகமனம் – access – அணுகுதல்

2) உபாதானம் – ஏற்பாடு செய்தல்

3) இஜ்யா – நிவேதனம்

4) ஸ்வாத்யாயா – வேதம் ஓதுதல் (விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை ஓதுதல்)

5) யோகா – யோகம்

ததுபாசனம் பஞ்சவிதம் – அபிகமனம் – உபாதானம் – இஜ்யா- ஸ்வாத்யாய – யோக இதி ஶ்ரீ பாஞ்சராத்ரேபிஹித்தம்

–    சர்வதர்சன சங்க்ரஹம் (ராமானுஜர்)

5. கர்மங்கள் ஐந்து வகைப்படும்.

1) நித்ய கர்மம் – தினசரி செய்யப்படுவது

2) நைமித்திகம் – எப்போதாவது செய்யப்படுவது

3) காம்யம் – ஆசைப்பட்டவிஷயத்தை அடைவதற்காகச் செய்யப்படுவது

4) ப்ராயச்சித்தம் – பரிகாரமாகச் செய்யப்படுவது

5) நிஷித்தகம் – தடை செய்யப்பட்டது

நித்யம் நைமித்தகம் காம்யம் ப்ராயச்சித்தம் நிஷித்தகம் |

கர்ம பஞ்சகர்மேதத்தை விஜேயம் வேதவாதிபி: ||

–    வேதாந்தசம்ஞாவளி

6. வாசனைகள் ஐந்து வகைப்படும்

1) கஸ்தூரி 2) சந்தனம் 3) கற்பூரம் 4) அகரு – அகர் மரம் 5) மலயாகாருசந்தனம் – மலாயா மலையிலிருந்து வருவது

கஸ்தூரிசந்தனம் சந்த்ரமகரு த்விதீயம் ததா |

பஞ்சகந்தசமாஅக்யாதம் சர்வகார்யேஷு ஷோபனம் ||

7. பாவிகள் ஐந்து வகையாவர்.

அவர்கள் :

அக்னிதன் – இன்னொருவரின் சொத்திற்கு தீயை வைப்பவர்.

காரதன் – மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி – நிராயுதபாணியைக் கொல்பவன்

தனாபாஹா _ மற்றவரின் சொத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதாராபஹர்தா – மற்றவரின் நிலம் மற்றும் மனைவியை அபகரிப்பவன் 

அக்னிதோ காரதச்சைவ சஸ்திரபாணி: தனாபஹ: |

க்ஷேத்ரதாராபஹர்தா ச பஞ்சைதே ஆததாயிந: ||

 ***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 7 (Post No.11,795)

Sarasaparilla

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,795

Date uploaded in London – –  11 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

101.PUTADA,PUTRAJANI,PUTRAKANDA

UCDutta identified the plants with U.lagopodiodes.

AV. 2-25-3 prescribed againstabortion and other maladies

Xxx

102.PUTUDRU

Pinus sp.

AV 8-2-8

Also Taittiriya, Maitrayini and Kaus.Sutra

Xx

103.ROHITAKA

Aphanamixis polystachia

Maitrayini samhita 3-9-3

Xxx

104.RAJJUDAALA

Cordia oblique

SB.13-4-4-16

Xxxx

105.SADA

RV.9-15-6

Vajasneyi samhita 25-1

Xxx

106.SADAMPUSPA

Ever flowering plant

AV. 4-20-9 against Pisaca/ supernatural agency

Xxxx

107.SAHA

According toRoth the name of a plant

AV.11-6-15; Sama Vidhana Brahmana 2-6-10

Xxx

108.SAHADEVA

A plant

RV. 1-100-17

Samavidhana brahmana 2-6-10

Xxx

109.SAHADEVI

See under Arundhati

AV.6-59-2

Xxx

110.SAHAMANA

A plant AV.2-25-2;4-7-2; 8-2-6;;7-5

Xxx

111.SAIRYA

Species of grass infested with insects

RV.1-151-3

Xxx

112.SAALMALI

Bombax ceiba

Fruit poisonous in RV.7-50-3; bridal car made of its wood.RV 10-85-20

Taittiriya samhita 7-4-12-1

Vajasneyi samhita 23-13

SB.13-2-7-4

Used as timber

Xxx

113.SALANJALA

Grain creeper

AV.6-16-4

Kaus Sutra 2-16

Xxxx

114.SAALI

Oryza sativa

A later word for paddy conjectured by Roth to be equivalent

To saari in the word Saarisaakaa in the AV

Cereal

Xxx 

115.SAALUUKA

Nymphaea lotus

AV.4-34-5

Xxx

116.SAMI

Prosopis spicigera

Mimosa suma

AV.6-11-1;30–2-3; 6-30-2,3as producing intoxication.

In fire kindling it forms the lower wood

It is found in many samhitas.

Wood

Xxx

117.SANA

Hemp.

Crotolaria junca

AV.2-4-5

Remedy against Viskandha

SB.3-2-1-11; 1-6-1-24;2,15

Xxxx

118.SAANDADUURVA

Cyperus rotandus

AV.18-3-6

Xxx

119.SANKHAPUSPIKA

Hemp?

AV.7-38-5

Xxx

120.SAPHAKA

Trapa bispinosa

AV.4-39-5

Apas.srautha sutra

9-14-14

Fruit

Xxxx

121.SARA

Saccharin arundanaceum

RV.1-191-3

AV.4-7-4

Many samhitas

Arrow shaft in AV1-2-1;3-1

Xxx

122.SARASSAPARILLA

Chandogya Upanishad 3-14-3

Sad.brahmana v-2

Medicinal

To be continued……………………………………………Tags- Vedic plants-7, Saraparilla, hemp

Story of a Dog shows ‘Don’t Vote for Low lives’(Post No.11,794)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,794

Date uploaded in London – –  11 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

If you appoint people with inherent bad qualities in higher posts, that will harm you. People with bad qualities seldom change. There may be a few exceptions. There is a proverb in Tamil that says You can never straighten the tail of a dog. There is also another Tamil proverb that says Even if you bathe a dog and place it in the hall of your house, that will run away to eat the XYZ. There is another beautiful Tamil proverb which says If you give authority to a scorpion that will always sting you.

Nature or Nurture what decides one’s fate is answered in the following story. Narrating this story Sri Kripananda Varaiar, a famous Tamil religious speaker,  advised his audience not to elevate people with low virtues to higher positions.

Xxx

Story of a Mangy Dog

There was a mangy dog living outside the Ashram of a saint. An ashram is a simple hut where a saint lives. This saint was full of compassion. And this Ashram was just outside the town where the forest begins.

The mangy dog was skinny and looked like a skeleton.

One day a wolf appeared suddenly from the forest and tried to eat the dog. The saint who watched it through his window immediately changed the dog into a big wolf by his power. And the dog that became a wolf chased the forest wolf.

Months rolled by. A tiger came to the Ashram and tried to devour the big wolf. The saint who watched it made the wolf into a large tiger by his magical power. And the larger tiger chased the forest tiger back into the forest.

Now years rolled by. There came a mad elephant blaring towards the Ashram. And the large tiger was ready to attack the elephant to save itself and the Ashram.

The saint thought of an idiom which says it is like a lion in the dream of an elephant. The meaning is that elephants fear lions even in a dream. So the saint changed the tiger into a lion and the blaring elephant ran back into the forest.

Now the dog-wolf-tiger- changed lion was the king of the forest. As Bacon says ‘Power corrupts; absolute power corrupts absolutely’, the lion became arrogant and vicious. It thought Oh My God. Our saint has a lot of power through his penance. If I eat him, I will get all his powers. Thinking this way, the lion peeped through the window of the ashram. The saint was a Tri Kaala Jnaani that means One Who can see the Past, Present and Future. When the lion entered the Ashram with very bad thoughts, the saint called it

Oh Ye Dog, Oh Ugly Dog, Go back Dog

Immediately,it changed back to its original form. The mangy dog was chased away.

This is how the low lives behave. We see bad people in power lose all morals and harm only good people. They are always anti religion.

Never give them higher positions.

Xxx

In Hindu religion, dog is praised as a grateful animal. At the same time, it is seen as a dirty animal. Even in Bhagavad Gita it is portrayed as a low life. Krishna says Panditaah Sama darsinah 5-18

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |
शुनि चैव श्वपाके च पण्डितासमदर्शिन|| 18||

vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini
śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ

BG 5.18: The truly learned, with the eyes of divine knowledge, see with equal vision a Brahmin, a cow, an elephant, a dog, and a dog-eater.

The Vedas do not support the view that the Brahmins (priestly class) are of higher caste, while the Shudras (labor class) are of lower caste.  The perspective of knowledge is that even though the Brahmins conduct worship ceremonies, the Kṣhatriyas administer society, the Vaiśhyas conduct business, and the Shudras engage in labor, yet they are all eternal souls, who are tiny parts of God, and hence alike.

Xxx

Manikkavasagar (maanikkavaasagar) was a great Saivite saint. He called himself A DOG in over hundred places in his famous Hymn Tiruvasagam.

Though he was a great person he used the word DOG to represent the common man. In one of the hymns, he says You elevated me to such a higher place that looks like Enthroning a dog as a king. We are reminded of those lines when we read the story above.

TIRU SATAKAM- Section 5 of TIRU VASAGAM

28. No one has heard of him. No one knows him. He is faultless. He has no relatives. He knows everything and hears everything. Your devotees wait for you sleeplessly. I am like a dog yet you put me up on a seat, made me your devotee and showed me things that you have never shown to anyone. You made me hear things that no one has ever heard. You removed my future births and made me yours. What a wonder you do for me! [32]

(Translation is from Project Madurai Website).

—subham—

Mangy dog, Low life, Sanit, Ashram, 

ஒப்பிலியப்பன்/ உப்பிலியப்பன் கோவில் விஜயம் (Post no.11,793)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,793

Date uploaded in London – –  11 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின் போது சில திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளைத் தரிசித்தேன்.

முதலில் ஒப்பில்லாத அப்பன்/ உப்பிலியப்பன் கோவிலுக்குச் செல்வோம்.

கோவிலுக்குள் நான் பட்டாச்சார்யாவிடம் கேட்ட கேள்வி:

இப்போதும் உப்பில்லாத பிரசாதம்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறதா?

அவர் ‘ஆமாம்’ என்று விடை கொடுத்தார்.

ஒப்பில்லாத அப்பன் என்பதும் உப்பிலியப்பன் என்பதும் சரிதான். எல்லா மொழிகளிலும் பல பொருள் உடைய சொற்களும் விஷயங்களும் உண்டு. நேற்று முன் தினம் கிருபானந்த வாரியாரின் சுந்தர காண்ட சொற்பொழிவைக் கேட்டேன். கம்ப ராமாயணத்தில் ஒரே பாடலுக்கு ஆறுவிதமாகப் பதம்பிரித்து பொருள் சொன்னார். அத்தனையும் பொரு த்தமாகவே இருந்தன.

108 திவ்ய தேசங்களில், கும்பகோணம் அருகே உள்ள பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் சென்றோம். சுமார் 7 கிலோமீட்டர்.

தென் திருப்பதி என்றும் ,திரு விண்ணகர் என்றும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது இது.

திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட து ; அதாவது பாடப்பெற்றது. மொத்தம் 47 பாசுரங்கள்.

xxxxx

இந்தக் கோவிலின் சிறப்பு என்ன?

திருப்பதிக்குப் போக இயலாதவர்கள், இதையே திருப்பதியாக நினைத்து, பாலாஜிக்கு- வெங்கடாசலபத்திக்கு- செய்யவேண்டிய பிரார்த்தனைகளை இங்கேயே செய்கின்றனர். இதற்கு காரணம் இவரை வெங்கடேசனின் தமையனாராகக் கருதுவதே.

மிருகண்டு முனிவரின் பத்தினியின் விருப்பப்படி பெருமாளுக்கு உப்பில்லாத தளிகை நைவேத்யம். உப்புள்ள பண்டங்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்வதே பாபம் என்றும் கருதப்படுகிறது.

திருமணம் புரிந்த நாள்:

எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.

இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது

சிரவணம் = திரு ஓணம்

நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.

xxxx

அமெரிக்காவில் உப்புக்குத் தடை

மனிதர்கள் சேர்த்துக்கொள்ளும் காய்கறி பழங்களில் உள்ள உப்புச் சத்தே உடலுக்குப் போதுமானது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்காவில் உப்பு பற்றி எச்ச ரிக்கும் அறிவிப்பை, ஓவ் வொரு உணவு விடுதியிலும் வைத்திருப்பார்கள் ;ஒரு  கருப்பு ச் சட்டமிட்ட இடத்துக்குள் உப்பை மறைத்து வைக்க வேண்டும் என்று 2016ம் ஆண்டில் நியூயார்க் நீதிபதி உத்தரவிட்டார்..உப்பிலியன் இதற்கெல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே No Salt Policy நோ சால்ட் பாலிசியைப் பின்பற்றினார். ரிக் வேதத்தில் உப்பு குறிப்பிடப்படவில்லை. சர்க்கரை மட்டுமே காணப்படுகிறது

Xxxx

ஆழ்வார்களால் படப்பட்டதால் இந்தக் கோவில் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடையது எனலாம்.

இந்தக் கோவிலில் பணம் செலுத்தி பெருமாள் கல்யாண உற்சவம் முதலியனவும் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்தன்று சிரவண தீபம் எடுத்துச் சென்று குறி சொல்வது விசேஷம்.

ஒப்பிலியப்பன்- நிகரற்றவன் – ஸ்ரீநிவாசன் இங்குள்ள விக்ரகங்கள்

திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலம்

பகவத் கீதையில் வரும் முக்கிய வாசகமான மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் ஒருவனையே சரண் அடை , என்ற வாசகம் எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

தாயார் – பூமி தேவி (நாச்சியார்)

பெருமாளுக்கு வலப்புறம் மண்டியிட்டு வணங்கும் கல்யாண

திருக்கோலம்.

தீர்த்தம் – பகலிராப் பொய்கை

xxxx

Judge upholds NYC rule on restaurant salt warnings 2016 news

NEW YORK (Reuters) – A New York judge on Wednesday shot down a challenge by a restaurant trade group, upheld a city rule requiring many chain eateries to post warnings on menu items that are high in sodium.

The rule, believed to be the first of its kind in the United States, mandates restaurants with 15 or more locations nationwide to post a salt shaker encased in a black triangle as a warning symbol next to menu items with more than 2,300 milligrams of sodium, the daily limit recommended by many nutritionists.

“Information is power,” Justice Eileen Rakower of New York state Supreme Court in Manhattan said in a ruling from the bench. Unlike the city’s unsuccessful large-soda ban, she said, the rule did not restrict the use of sodium.

New York City adopted the rule, which took effect in December, to help lower blood pressure and reduce the risk of heart attacks and strokes.

The National Restaurant Association, a restaurant trade group, then sued the city’s Board of Health saying the rule unfairly burdened restaurant owners.

In court on Wednesday, Rakower denied the group’s motion for a preliminary injunction to stop enforcement of the rule. Starting March 1, violators will be punished by $200 fines. In addition to chain restaurants, the rule also applies to concession stands at some movie theaters and sports stadiums.

Xxx

பேயாழ்வார் பாசுரங்கள் 2342, 2343

2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,

இளங்குமரன் றன் விண் ணகர். 61

2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, – மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62 

Xxxx subham xxxx tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், பகலிராப்பொய்கை, திரு விண்ணகர், உப்பு, பிரசாதம், தளிகை , இல்லாத , no salt policy

அர்த்தநாரீஸ்வரராக சிவபிரான் எழுந்தருளும் திருச்செங்கோடு! (Post No.11792)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,792

Date uploaded in London –   11 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 13

அர்த்தநாரீஸ்வரராக சிவபிரான் எழுந்தருளும் திருச்செங்கோடு!

ச.நாகராஜன்

தன் உடலில் அம்பிகைக்குப் பாதி இடம் கொடுத்து சிவபிரான் அர்த்தநாரீஸ்வரராக ஆன வரலாறு ஹிந்து மதத்தில் பெண்மைக்கு எப்படிப்பட்ட உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணமாகும்.

வரலாறு இது தான்:

பண்டொரு காலத்தில், ஒரு சமயம் பிருங்கி முனிவர் சிவபிரானை வணங்குவதற்குக் கைலாயம் சென்றார். பரமசிவனைத் தவிர மற்றுள்ளனவெல்லாம் அழிவுள்ளவை என்ற தனது எண்ணத்தினால் பார்வதி தேவியை வணங்க வேண்டாம் என்று நினைத்து பரமசிவனை மட்டும் அவர் வணங்கினார். இன்னொரு நாள் அவர்  கைலாயம் சென்ற போது பார்வதி தேவியைப் பிரிவில்லாதபடி அணைத்தவாறு ஒரே ஆசனத்தில் சிவபிரான் அமர்ந்திருந்தார்.

இதைக் கண்ட பிருங்கி முனிவர் சிவபிரானை மட்டும் வணங்க வேண்டும் என்ற தனது கருத்தினால் ஒரு வண்டு உருவம் எடுத்தார். வண்டாகப் பறந்த அவர் கழுத்தில் இருந்த சந்து வழியாகப் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்யலானார்.

தேவியார் சினந்தார். பிருங்கி முனிவரை நோக்கி, ‘என்னை அவமதித்தனை. ஆகவே என் கூறு ஆன பொருளையும் நீக்கி விடு’ என்றார்.

உடனே பிருங்கி முனிவரின் உடலில் இருந்த ஊன் முதலியன கழன்று விட்டன.

பிருங்கி முனிவர் வலுவை இழந்தார். வலிமை போன காரணத்தால் முனிவர் கீழே சாயலானார். உடனே சிவபிரான் இன்னொரு கால் தோன்ற அருள் பாலித்தார்.

முனிவரிடம் சிவபிரான், “கிரணமின்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை. ஆதலில் சக்தி இன்றி சிவம் இல்லை. சக்தி இன்றி இந்த சத்தன் இல்லை.  இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அவரைத் தேற்றினார்.

பிருங்கி உண்மை உணர்ந்து மகிழ்ந்தார். பார்வதி பரமேஸ்வரரை உளமாரத் தொழுதார்.

 ‘சிவன் வேறு, நாம் வேறு என்ற கருத்தினால் அல்லவோ ஒரு முனிவன் நம்மை இப்படி இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய பார்வதி தேவியார் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து பின்னர் திருச்செங்கோட்டை அடைந்தார்.

அங்கு கேதார விரதம் இயற்றி  சிவ பரம் சுடரின் இடது பாகத்தைப் பெற்றார்.

ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டு இருவரும் ஒன்றாக இணைந்து அருள் பாலிக்கலாயினர்.

திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. திருச்செங்கோடு தற்போதைய ஈரோட்டிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும் சேலத்திலிருந்து தெற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும் நாமக்கல்லிலிருந்து மேற்கே 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்,

அம்பிகை பாகம் பிரியாள்.

வேலவனுக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் போது ஆணாகவும் மறு புறம் பார்க்கும் போது பெண் போலவும் தோற்றமளிப்பது ஒரு தெய்வீக விந்தையாகும்

இப்படிப்பட்ட அரிய தலம் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் 13இல் பெருமையுடன் பதிவு செய்கிறது.

பாடல் இதோ:

நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை

யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்

நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ

வடிவான துந்திருச் செங்கோடு சுழ்கொங்கு மண்டலமே.

பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகில் உமா தேவியாரோடு சிவபிரான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே ஆகும்.

பெண்ணின் பெருமையை உணர்த்தும் திருத்தலம் திருச்செங்கோடு என்பதில் ஐயமுண்டோ!

***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 6 (Post No.11,791)

caesalpinia

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,791

Date uploaded in London – –  10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

xxxx

80.NYASTIKAA,SEE UNDER CANDAA

Anrdopogan aciculatus

AV.6-139-1

xxxx

81.PAAKADUURVAA

Edible millet

RV.10-16-3 mentions along with Kiyambu and Vyal kasa among plants used for growing on spots where dead bodies are burnt.

AV.18-3-6 reads sandadurva having egg shaped roots.

Could it be Cyperus rotandus?

Tait.Aranyaka -6-4-12

xxx

82.PALAASA

See under Kimsuka

xxxx

83.PARNA

See under Kimsuka

xxxx

84.PATA, PATHA

Stephania elegans

S.glabra, S.Rotanda

S.hernandifolia

AV.2-27-4

Also Kaus. Sutra

Medicinal

xxxx

85.PIILA

A fragrant  plant

AV.4-37-3

Fragrant plant mentioned along with Guggulu and Naladi

xxx

86.PIILU

Careya arborea

Salvadora persica

S.olleoides

AV.20-135-12

Doves feed on the fruits of this plant

xxx

87.PIPPALII

Piper peepuloides

P.longum

AV .6-107-4

Spices, medicinal

xxxx

88.PIITUDARU

Pinus longifolia

Kathaka Sam.25-6

Panchavimsa Br.24-5

SB.3-5-2-15

Mahidhara and Sayana mentioned them in Vaj. Sam and Aita. Br commentaries

xxxx

89.PLAKSA

Ficus lacor

Wavy leaf, white fruit Fig Tree

xxx

90.PRAKSA

Ficus lacor

AV.5-5

Tait. ,Mait.samhitas.

SB.3-8-3-10, 12 etc

Sama Veda -1-144; 2-465

Mentioned in other Brahmanas as well

xxx

91.PRAMANDA

RV 3-53-14

Hill debrandt thinks it is a plant with shoots turned downwards / naica sakha, refers to Soma

RV 1-14-16; 2-241-45

xxxx

92.PRAMANDANI

Certain sweet scented plant

Kaus. Sutra 8-17; 25-11; 32-22

xxx

93.PRAPROTHA

A substitute of Soma

Panc. Br.8-4-1

xxx

94.PRIYANGU/ PANIC SEED

Setaria italica

Tait.Sam.2-2-11-4

Katha. Sam10-11

Also Mait. And Vajas. Samhitas

medicinal

xxx

95. PRIYANGU

Aglaiya odorata

In Sadvima Br. It is described as Phalavati according to Weber. This plant appears to be a tree.

See Caraka Daaha cikithsa.

Amarakosa also describes it in the lexicon.

xxx

96.PRSNIPARNI/ HAVING SPECKLED LEAF

Uraria lagopioides

Lemna sp. (in lexicon) s a water plant

Hemionitis cordifolia

AV. 2-25-1 Protection against evil beings

SB 13-8-1-16

Roth identified it with Laksmana curing barrenness.

Kaatyaayan Srauta sutra identified it with Teramnus labialis(Glycine debilis)

xxx

97.PUNDAIIKA

Nelumbo nucifera

RV 10-142-8

AV.4-35-5; 10-8-3 compares lotus bud to human heart  shape.

Tait Br, SB, Chandogya, Brhad. Upanishads also mentioned it.

Flowers

xxxx

98.PUSKARA

Blue Lotus Nymphaea stellala

RV.6-16-13; 7-33-11

AV.11-3-8; 12-1-24 mentioned sweet perfume of flowers

Many references are available in Brahmanas, Upanishads etc.

xxx

99.PUUTIKA

Caesalpinia bonducella

Basella rubra

Kath. Sam. 34-3

SB.14-1-2-12

Hillebrandt identified it with Basella rubra.

Medicinal

xxx

100.PUTIRAJJU

AV. 8-8-2(See Roth for more details)

Sixty more plants will be posted here.

To be continued………………………….

Tags- Vedic plants, Part 6, Putika, Puskara, Priyangu