இந்திய சிற்பக் கலை! (Post No. 11,780)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,780

Date uploaded in London –   8 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்திய சிற்பக் கலை!

நாகராஜன்

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சிற்பக்கலையை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோமானால் அதில் சிறந்து விளங்குவது பாரத தேசத்தின் சிற்பக் கலையே என்பது தெரிய வரும்.

ஆயிரக் கணக்கான கோவில்கள் பாரத தேசமெங்கு பரவி நிறைந்துள்ளன.

கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள் கலை நேர்த்தியுடனும் அறிவியலின் இன்றைய தொழில்நுட்பத் திறனை உள்ளடக்கியும் அமைக்கப்பட்டிருப்பது பிரமிப்பைத் தரும்.

எடுத்துக் காட்டாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அறிவியல் ரீதியிலான ஒலி அமைப்பை உள்ளடக்கிய திறனைக் கூறலாம்.

அக்னி புராணம், சிற்பி தனது  கலையை உடனே உருவாக்கி விட முடியாது என்று உறுதி படக் கூறுகிறது.

ஒரு சிற்பத்தை வடிவமைப்பதற்கு முன்பாக முதல் நாள் இரவு அந்த சிற்பி உள்ளார்ந்து இறைவனை வழிபட வேண்டும் என்று அது கூறுகிறது.

“இறைவனுக்கு இறைவனே! எனது  மனதில் உள்ளதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எனது கனவில் வந்து தெரிவி” என்று ஒரு சிற்பி வேண்டிக் கொள்ள வேண்டும் என்று அது வழி வகை கூறுகிறது.

ஹைதராபாத்திற்கு 60  மைல் தொலைவில் உள்ளது அஜந்தா. இதன் புகழை அறியாதவர் இருக்க முடியாது.

எல்லோராவில் உள்ள கைலாஸ் ஆலயம் பற்றி மும்பை ஆர்ட் காலேஜின் முதல்வராக இருந்த  சாலமன் என்பவர் (ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) எழுதுகையில் கூறுகிறார் இப்படி:

“கைலாஸர் ஆலயத்தில் உள்ள பெரும் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்து ஹிந்து தெய்வங்கள், தேவதைகளைச் சித்தரிக்கிறது.

சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் அங்கு சுவர்களில் மிதக்கின்றனர்.”

அடுத்து மைசூரில் உள்ள சோமநாத்புர ஆலயத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து வியந்த யாத்ரீகர் ‘Through Town and Jungle’

என்ற தனது புத்தகத்தில் சோம்நாத்புர ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மனதை ஈர்க்கிறது என்றும் ஒவ்வொரு சிற்பமும் அநேக வடிவமைப்புகளையும் சிற்ப நேர்த்தியையும் கொண்டுள்ளது என்றும் கூறி வியக்கிறார்.

ஹாவல்  (Havell) என்ற எழுத்தாளர் தனது “Indian Architechture” என்ற நூலில் ஹிந்து கட்டிடக் கலை விற்பன்னர்கள் மட்டும் இல்லையெனில் ஒரு தாஜ்மஹாலோ அல்லது ஜும்மா மஜ்ஜித்தோ அல்லது மோடி மஜ்ஜித்தோ சிறப்புற இப்படி உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்.

ஹிந்து சிற்பிகளின் மேதையையும் புத்திகூர்மையையும் ஐரோப்பிய மற்றும் முகலாயர்கள் தங்களது மதத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டப் பயன்படுத்தியுள்ளனர் என்பது அவரது கூற்று.

அராபிய யாத்ரீகரான அல்பெரூனி ஹிந்து தேசத்தைப் பற்றிப் பாராட்டுவது ஒவ்வொருவரையும் வியக்க வைக்கும். தனது கூரிய பார்வையையும் தனது யாத்ரீக அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து அவர் வியந்து கூவுகிறார் இப்படி : Our people when they see them, wonder at them and are unable to describe them much less to construct anything like them”

“நமது மக்கள் இவற்றைப் பார்க்கும் போது வியப்பு மேலிட, அவை போல அமைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,

அவற்றை விளக்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள்.”

கஜினியைச் சேர்ந்த சுல்தான் மஹம்மது மதுராவை அழித்த பிறகு தனது கஜினி கவர்னருக்கு எழுதினான் இப்படி: “இது போன்ற இன்னொரு அமைப்பு இன்னும் இருநூறு ஆண்டுகளானாலும் அமைக்கப்பட முடியாது!”. அவன் மதுரா நகரின் புகழுக்குக் காரணமான லக்ஷக்கணக்கான பக்தர்களைப் புகழ்ந்து ‘லக்ஷக்கணக்கான’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறான்.

இப்படி பாரத தேசத்திற்கு வந்த யாத்ரீகர்களின் பார்வையையும் மேலை நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வையும் தனியாக எடுத்துத் தொகுத்து அலசி ஆராய்வோமானால் நமது தேசத்தின் சிற்பக் கலையின் பெருமை வர்ணனைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர முடியும்!

இப்படிப்பட்ட சிற்பக்கலையின் மகோன்னதத்தை உணராதவர்கள் நாம் என்பதை வருத்தத்தோடு உணர்வதோடு  மட்டுமல்லாமல், இதைப் பாராட்டி வியந்து நமது சந்ததியினருக்கு இந்த மாபெரும் உண்மையைத் தெரியப்படுத்த தவறியவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்பதையும் சோகத்தோடு சொல்லவும் வேண்டும்.

இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் முயன்று அனைவருக்கும் நமது புகழோங்கிய நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாழிய பாரதம்!                            வளர்க அதன் கலைகள்!

***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 3 (Post No.11,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,779

Date uploaded in London – –  7 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

36.Durva

Cynodon dactylon

RV 10-16-13; 134-5;142-8;10-16-3;142-8 grows n damp ground

Taittiriya samhita 4-2-9-2;5-2-8-3

Vajasneyi samhita 13-20

Aitareya Brahmana 8-5-8

SB 4-5-10-5;7-9-2-10,12 etc

Sacrificial, medicinal

Ganesh with Durva grass

Xxxx

37.Eranda

Ricinus communis

Sank her.Aras 12-8

Medicinal, oil

Xxx

38.Garmut

Wild bean

Taittiriya samhita 2-4-4-1,2

Kathaka samhita 13

Maitrayini samhita 2-2-4

Pulse

Xxxx

39.Gavendhuka

Colix lachryma

Taittiriya, Maitrayini Vajasneyi samhitas

Food, medicinal, fodder

Xxxx

40.Godhuma

Triticum vulgare

Maitrayini,Vajasneyi samhita s

SB 7-1-1-2

Cereal

Xxxx 

41.Guggulu

Bulsa modendron mukluks

AV. 19-38

Amulet for various blessings

Frankincense

Xxxx

42,Haridra

Curcuma long a

AV – 1-24-2

Medinal, remedy against leprous spot

Xxx

43.Haridru ,

Cedrus libani,

SB 13-8-1-1

Xxx

44.Isika

Polytoca barbata

AV 7-54-4; 12-2-54

SB 4-3-4-16 etc1-1-4-19 a basket of Isika

Chandogya Upanishad 5-24-3

Nirukta 9-8

Utensils, furniture

Xxxx

45.Jambila

Citrus aurantium

C.Medica varacida

Maitrayini samhita 3-15-3

Also Kathaka, Vajasneyi samhita s

Xxx

46.Jangida

Terminalia arjuna

AV 2-9;19-34,35

Against all sorts of diseases,19-39-10;2-4-1

Amulet 19-34-1-5,9,7

Xxx

47.Kakambira

Useful tree of some kind

RV 6-48-17

Xxx

48.Kapitthaka

Feronica elephantum

AV 4-4-8 for virility

Xxx

49.Karira

Cappris aphylla

C .decidua

Taittiriya samhita 2-4-9-2

SB 2-5-2-11

Also Kathaka samhita

Xxxx

50.Karkandhu

Zizyphus numularia

Z. Quenopila

Z.jujuba

RV 1-112-6

SB 5-5-4-10;12-7-2-9;9-1-5

Fruit

Also Kathaka, Maitrayini, Vajasneyi samhitas

To be continued………………………………….

 tags- Vedic plants 3, Durva, zisyphus

திருநாகேஸ்வரம்- மேலும் ஒரு பாம்புக் கோவில் (Post No.11,778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,778

Date uploaded in London – –  7 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பிப்ரவரி 2023-ல் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்களுக்கு விஜயம் செய்தேன். திருப்பாம்புரத்தில் சிவன் மீதும், அம்மன் மீதும் ஏழரை அடி , எட்டு அடிப் பாம்புகள் வந்து அவற்றின் சட்டைகளை மாலையாக அணிவித்துச் சென்றதை நேற்று கண்டோம் .

திருநாகேஸ்வரம் மற்றோர் பரிகார தலம். ராகு  தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலனை அடைகிறார்கள். இது ஒரு சிவன் கோவில்.

திருநாகேஸ்வரம் கோவில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

சுவாமியின் திரு நாமம் – சண்பகாரண்யேஸ்வரர் நாகநாதசுவாமி

ஒரு காலத்தில் இந்த இடம் சண்பக மரங்கள் நிறைந்த வனம் ஆக இருந்தது

அம்மனுக்கு இரண்டு சந்நிதிகள் உண்டு

தேவியின் திருநாமம் – குன்றாமுலைநாயகி , கிரி குஜாம்பிகை

கிரி குஜாம்பிகை சந்நிதி தனியே உள்ளது. சுதையால் ஆன உருவம் ஆதலால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.

பிறையணிவாள் நுதல் அம்மை என்ற பெயருடைய தேவியின் கருவறையில் கார்த்திகை மாத சந்திரன் ஒளி புகும்.

இறைவன் சந்நிதியில் சங்க நிதி, பதும நிதி, மகா சாஸ்தா விக்கிரகங்களும் இருக்கின்றன .

XXXX

கோவில் மிகவும் பெரியது. நான்கு புறங்களும் கோபுரங்கள் உடையது . சூர்ய புஷ்கரணி இங்குள்ள திருக்குளம் ஆகும். தேவாரப்பாடல் பெற்றதால் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடைத்து. ஆதித்ய சோழன் காலத்திலிருந்து வரலாறு உடையது. சேக்கிழாரும், கோவிந்த தீட்சிதரும் போற்றிய தலம் இது .

சந்திரனும் சூரியனும் , ஐந்து தலை நாகமும் இங்கே பூஜித்ததாக ஐதீகம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியார் சகிதம் தரிசனம் தருகிறார்.

ராகு பகவானுக்கு உள்ள தனி சந்நிதியில் மனித முகத்துடன் ராகு காட்சி தருவது வியப்பான விஷயம். ஏனெனில் பொதுவாக பாம்பு முகத்துடன்தான் ராகு சிலைகள் இருக்கும். ராகு காலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள், குடும்பச் சண்டைகள், குழந்தை பிறவாமை முதலிய பிரச்சினைகள் தீருமாம் .

(தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.(FROM WIKIPEDIA))

XXX

இங்கு சேக்கிழாருக்கு சந்நிதி இருப்பதுடன் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவும் நடைபெறுகிறது

பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், தாயார் அழகாம்பிகை இங்கே உள்ளனர். சேக்கிழாரின் ஊர் சென்னையில் பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள குன்றத்தூர் ஆகும் . அங்கு சிவபெருமானுக்கு கோவில் கட்டி, அந்தக் கோவிலுக்கு திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டினார். அவ்வளவு அன்பு இக்கோவிலின் இறைவன் மீது.

அங்கிருந்து அரை மைல்  தூரத்தில் உள்ள நத்தம் என்ற இடத்தில் சிறிய குன்றின்மேல் சுப்ரமண்யர் ஆலயமும் கீழே சேக்கிழார் கோயிலும் உள்ளன.

XXX

நரேந்திர மோடி, நச்சினார்க்கினியர், ஐந்து தலைப் பாம்பு

திருநாகேஸ்வரம் தேவாரம் —

சம்பந்தர் , அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பட்ட தேவார பதிகங்கள் நிறைய தகவல்களைத் தருகின்றன .

கச்சைசேர் அரவர் போலுங்

  கறையணி மிடற்றர் போலும்

பிச்சைகொண் டுண்பர் போலும்

  பேரரு ளாளர் போலும்

இச்சையால் மலர்கள் தூவி

  இரவொடு பகலுந் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும்

  நாக ஈச்சரவ னாரே.   1 —அப்பர்

தமிழ் இலக்கியத்தில் அதிகமாக உரை எழுதிய பார்ப்பனன் நச்சினார்க்கினியன். மதுரை நகர பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர் உச்சிமேல் புலவர்கொள்  நச்சினார்க்கினியன் என்று போற்றப்பட்டவர் . அவருடைய நாமம் இந்த அப்பர் பாட்டில் வருகிறது.

XXX

மோடி= துர்கா தேவி

போகமார் மோடி கொங்கை

  புணர்தரு புனிதர் போலும்

வேகமார் விடையர் போலும்

  வெண்பொடி யாடு மேனிப்

பாகமா லுடையர் போலும்

  பருப்பத வில்லர் போலும்

நாகநா ணுடையர் போலும்

  நாகஈச் சரவ னாரே.   8

5 தலை நாகம் = ஐந்து புலன்கள்

கொக்கரை தாளம் வீணை

  பாணிசெய் குழகர் போலும்

அக்கரை யணிவர் போலும்

  ஐந்தலை யரவர் போலும்

வக்கரை யமர்வர் போலும்

  மாதரை மையல் செய்யும்

நக்கரை யுருவர் போலும்

  நாகஈச் சரவ னாரே.   9

XXXX

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்

                தலையவனை மலையவனை உலக மெல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை

                அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள்

                மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற

தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்

                சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.   1 — அப்பர், ஆறாம் திருமுறை

XXXX

பாடல் எண் : 1  

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி

செல்வர் போல்திரு நாகேச் சரவரே.– அப்பர், ஐந்தாம் திருமுறை

XXX

1)

அரையினில் பாம்பை அணிகிற ஐயன் அவன்தாளை

விரைமலர் கொண்டு பணிகிற பத்தர் வினைபோக்கிக்

கரையினில் சேர்த்துக் கருணைசெய் ஈசன் கடிதேகும்

நரைவிடை ஏறும் நலம்தரும் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்

ஆதி சேடன் அன்று போற்ற அருள்செய்தான்

பாதி உடலைப் பார்வ திக்குப் பரிந்தீந்தான்

ஓதித் தொழுவோர் உள்ளத் துள்ளே உறைகின்ற

நாதி ஆவான் நலம்செய் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்

TO BE CONTINUED……………………………..

TAGS– திரு நாகேஸ்வரம் , ராகு, பரிகார தலம் , சேக்கிழார் , நீல நிறம் , தேவாரம், மோடி, நச்சினார்க்கினியர்

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல – 4 (Post No.11,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,777

Date uploaded in London –   7 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல – 4

ச.நாகராஜன்

உண்மை என்ற ஒன்று வரும் போது ஒவ்வொரு மனிதரும் “பொதுவான ஒரு அடிப்படையை” பின்பற்றுகின்றனர். இந்த உண்மை ஜன்னல் (“window of reality” ) மனித குலம் அனைத்திற்குமே பொதுவான ஒன்று தான்!

சுடு தண்ணீரின் உஷ்ணத்தை விட ஐந்து மடங்கு அதிக வெப்பமாக உள்ள எரியும் நிலக்கரி பரப்பட்ட இடத்தின் மீது ஒருவராலும் நடக்க முடியாது என்பதை அனைவரும் உண்மையே என்று ஒப்புக் கொள்வர். அதே போல ஒரு பொருளை மனமானது செல்வாக்குக்கு உட்படுத்த முடியாது என்பதையும் ஒப்புக் கொள்வர்.

ஆனால் இது நடக்கிறதே! பல இடங்களில் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறதே!!

ஒரு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து நன்றாக ஓய்வான நிலையில் இருந்து தொலைதூரத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ் காலத்தில் நிகழும் அல்லது வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க முடியாது என்பதை அனைவரும் உடனே ஒப்புக் கொள்வர். அதுவும் நாம் ஐம்புலன்களில் காணும் அளவு துல்லியமாகக் காண்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று உறுதிபடக் கூறுவர்.

ஆனால் ஆஸ்திரேலிய பூர்வ குடியினர் தங்களுக்கு இது சர்வ சாதாரணமான ஒன்று என்கின்றனர். இந்தப் “பரிசு” அவர்களிடம் காலம் காலமாக உள்ளது.

‘ரிமோட் வியூயிங்’ (Remore viewing) எனப்படும் தொலைதூரப் பார்வையை ஏராளமான ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிகிறார்கள். அனுபவித்தும் இருக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான சில தகவல்களைப் பெற இந்த தொலைதூரப் பார்வையாளர்களை அணுகுகிறார்கள்.

பல காலமாக நாம் ஏற்றுக் கொண்ட உண்மை ஜன்னல் (reality window) இனியும் கவைக்கு உதவாது. காலத்திற்கு உதவாது. அதை விட்டு வெளியில் வர பல விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

சில நிபந்தனைகளின் பேரில் உங்கள் மனமானது இந்த வழக்கமான ஜன்னலை விட்டுத் தப்பி ஓடுகிறது. அதிகமதிகம் பேர்கள் தங்களது “இந்த நம்பவே முடியாத, நடக்கவே முடியாத” நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் பிரக்ஞை மாறுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பெரிய அளவில் இந்த அனுபவங்களை பெரும்பாலானோர் பெறும் போது ‘நூறாவது குரங்கு’ என்ற கொள்கையின் படி ஒவ்வொருவரும் திடீரென்று இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொள்வர்; அதை சிலாகித்துப் பேச ஆரம்பிப்பர். இது எப்படி நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதை ஷெல்ட் ரேக்ஸின் மார்போஜெனிக் ஃபீல்ட் தியரி விளக்குகிறது,
(Sheldrake’s Morphogenic Field theory)

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை!!!

ஏனெனில் கடந்த நூறு ஆண்டுகளில் மேற்கத்திய நாகரிகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக ஆகி விட்டது. தொழில்நுட்பம் மேம்பாடு அடைய அடைய நவீனமாக ஆக ஆக அதை அனைவருமே விரும்பத்தான் செய்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் தர்க்கத்தை அடிப்படையாக – லாஜிக்கை- கொண்ட ஒன்று.

நமக்கு உண்மையைக் காட்டும் ஒரே ஜன்னலின் அடிப்படை தர்க்கம் தான்.

இப்பொழுதைய தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நாம் இன்னொரு வித்தியாசமான தொழிநுட்பத்தைக் கண்டுபிடித்து விழிப்புணர்வைக் கொண்டோமானால், நம்மிடம் உள்ள சம்பிரதாயமான கருவிகளைக் கொண்டு நாம் காணப்போகும் புது உண்மைகளை அளக்க முடியாது எனில் அப்போது நாம் திகைக்கப் போகிறோம்! பிரமிக்கப் போகிறோம். ஏனெனில் நாம் பார்க்கும் வழக்கமான ஜன்னல் வழியான ஒரு பார்வை அல்ல!

ஆனால் இந்த மாற்றுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. அது வரும் நூற்றாண்டின் விஞ்ஞானமாக அமையும். அவை இயற்கையில் உள்ள பல விசித்திரங்களைக் காணும்; காண்பிக்கும்!

ரெஸொனென்ஸ் (Resonance ) எனப்படும் ஒத்ததிர்வும் அவற்றில் ஒன்று. நிலையான காந்தத்தில் சுற்றி உள்ள காந்த பிரதேசம் இன்னொன்று.

க்ளீவி பாக்ஸ்டரின் பிரைமரி பெர்செப்ஷன் என்பது இன்னொன்று!     ( Cleve Baxter’s Primary Perception )

இப்போதுள்ள க்வாண்டம் பிஸிக்ஸ் மூலம் செய்யப்படும் பயன்பாடுகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும் பலவற்றில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்க இனி வரும் காலத்தில் நம்மை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

உதாரணத்திற்குச் சொல்லப் போனால் காலம் என்பது நிலையானது என்று கருதப்பட்டு வந்தது. அதாவது விநாடிகள், நிமிடங்கள், மணிகள் என்று ஒரே வேகத்தில் எப்போதும் டிக் டிக் டிக் என்று அடித்துக் கொண்டே செல்லும் ஒன்று என்று ஒவ்வொருவரிடமும் சொல்லப்பட்டது.

ஆனால் ஒரு அற்புதமான கருவி ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் நிலோலை கோஜிரெவ் (Dr. Nilolai Kozyrev) என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அது காலத்தின் மிக மிக நுண்ணிய வேறுபாடுகளைக் குறிக்க வல்ல ஒரு  கருவி. ஒரு சிறிய இயந்திர அல்லது இரசாயன நிகழ்வு சோதனைப்படுத்தப்படும் போது காலமானது காரணத்தின் பக்கம் மெலிதாகவும் அதன் விளைவாக ஏற்படும் காரியம் என்னும் விளைவின் பக்கம் அடர்த்தியாகவும் இருப்பது அந்தக் கருவியின் மூலம் காணப்பட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. அதாவது காலம் நிலையான ஒன்று அல்ல வேறுபாடுகளைக் கொள்ளும் ஒன்று என்பது அறியப்படுகிறது.
 

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

இயற்கை விசித்திரங்கள் நிறைந்தது. நடைமுறை விஞ்ஞானமானது இந்த விரும்பத்தகாத வரவேற்கப்பட முடியாத நிகழ்வுகளை ஒதுக்கிப் புறம் தள்ளி வந்தது – இது வரை! ஏனெனில் அது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது. ஒரு புதிய இனமான விஞ்ஞானிகளின் குழு, இப்போதைய விஞ்ஞானிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமின்றி இருக்கும் குழு, உண்மையை உண்மை என்று உடைத்துச் சொல்ல விரும்பும் ஒரு அருமையான குழு, வழக்கமான விஞ்ஞானிகள் பார்க்கும் ஜன்னலை விட்டு விட்டு வேறு வழியாக அனைத்தையும் பார்க்க நினைக்கிறது, விழைகிறது, உண்மைகளைக் காண்கிறது!

இந்தப் புதிய இனம் தான் 21ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள்.. இந்த சிறுபான்மை விஞ்ஞானிகளிடமிருந்து இனி வரும் காலத்தில் நிறையக் கேட்கப் போகிறோம்! ஏனெனில் ….

எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.

குறிப்பு : ஜேம்ஸ் எஃப் காயில் எழுதிய கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.

நன்றி : ஜேம்ஸ் எஃப் காயில்

( James F. Coyle, Author of Beyond Belief: The Ultimate Mindpower Instructional Manual)

***

இந்தக் குறுந்தொடர் முடிவடைகிறது.

முக்கியக் குறிப்பு : நூறாவது குரங்கு இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவியல் துளிகள் ஆறாவது பாகம் பதினொன்றாம் அத்தியாயத்தில் காணலாம். அதீத உளவியல் ஆய்வுகள் பற்றியும் அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் பற்றியும் காலம் பற்றிய ரகசியங்களையும் இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவுக்கும் அப்பால் நூலில் காணலாம்.

அனைத்துப் புத்தகங்களும் www.pustaka.co.in இல் காணலாம். படிக்கவும், மின்னணு நூலாக வாங்கவும், அச்சுப் பதிப்பாக வாங்கவும் முடியும்.

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 2 (Post No.11,776)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,776

Date uploaded in London – –  6 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

18. ASMAGANDHA

Withtania somnifera

SB 13-8-1;16

Medicinal

Xxx

19.ASVATTHA

Ficus religiosa

RV 1-164-20 vessels made of Asvatta ; 1-164-20

RV 10-97-5 tree

AV 3-6-1; 4-32-4 hardwood for kindling fire

SB 11-5-1-13starts life as an epiphyte on Khadira,sometimes strangles it

AV 3-6 it’s berries eaten by birds

Described as crested ones , Sikhandin, AV -374

Use – religious

Xxx

20.ASVAVLA/ ASVAVAARA

Sachcharam spontaneum

Maitrayini samhita 3-7-9

Kaathaka samhita- 24-8

Kapistha samhita 38-1

SB 3-4-1-7

Xxx

21.ASVAVATI

One of the four principal medicinal plants,

Not identified

RV 10-97-7

Xxx

22.AUKSHAGANDHI

Fragrant plant

AV 4-37-3

mentioned along with Guggulu and Naladi as fragrant plants

Xxxx

ASVAKA/ AQUATIC PLANT

Aquatic plant

Blyxa oryzetorum, Saivala – Blyxa griffiththii,also known as Sipala

AV 8-7-9, 37,8-10

Taittiriya, Vajasneyi, Maitrayini, samhita,SB7-5-1-11: 8-3-2-5 etc

Gandharvas eat it AV 4-37-8

Pot herb in Kashmir

Xxx

24.BADARA

Zizyphus species

Kathaka samhita 12-10

Maitrayini, vajasneyi Taittriya samhita

SB 5-5-4;1012-7-1-3

Jaiminiya Brahmana 2-156-5

Xxx

25.Baja, white and yellow varieties

Brassica species

AV 8-6-3, 6-7-24

Used against demon of disease

Xxxx

26.Balbaja

Elensine indica

Elensine coracona

AV 14-2-22, 23

RV 8-53-3 baskets and other things made from the grass, in Dana stuti

Taittiriya Sam.2-2-8-2

Kathaka samhita 10-10

Maitrayini samhita 2-5

Used for sacrificial litter,fuel.

Medicinal, fuel, furniture and utensils

Xxxx

27.Bhanga

Cannabis sativa

RV 9-61-13, it is an epithet of Soma

AV 11-6-15

Xxxx

28.Bilva

Aegle marmelos

AV 21-136-3

Aitareya brahmana 2-1

SB 13-4-4-8

Other samhitas

Amulet

Sacricial post in Taittiriya samhita

Xxxx

29.Bimba

Cephalandia indica

Jaiminiya Upanishad Brahmana 3-5-6

Medicinal

Xxxx

30.Canaka

Cicer arietinum

Vajasneyi samhita 1812

Pulses

Xxxx

31.Canda

Andropogan aciculatus

AV 6-13-3

Xxxx

32.Citraparni

AV 2-25-3

With spotted leaves

Protection of foetus

Xxxx

33.Darbha with its two varieties

Kharadarbha, Mrdudarbha

Eragnostis cynosuroides, E.teneela, E.ciliaris

RV 1-193-3

With Sara and Kusara

AV 6-43-2, 8-7-20

10-4-13; 9-6-15; 19-29-1

Used for calming of anger, AV 6-43

Xxxxx

34.Dasavrksa

A-trees according to Roth

AV2-9-1

Ritual

Xxx

35.Dhava

Anogeissus latifolia

AV 6-5-5

Used for healing wounds, Medicinal

To be continued………….

Tags – Vedic plants, part 2

கோவிலுக்குள் 8 அடி நீள பாம்பு அதிசயம்! இந்தியா முழுதும் பாம்பு நகரங்கள் !!! (Post.11,775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,775

Date uploaded in London – –  6 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நாகபுரி முதல் நாகர்கோவில் வரை எங்கு நோக்கினும் பாம்பு பெயர்களில் ஊர்களைக் கொ ண்ட ஒரே நாடு இந்தியா. காஷ்மீரில் இமயமலை உச்சியில் உள்ள அனந்த நாகம் ஜில்லாவிலுள்ள சேஷசநா கம் ஏரியிலி ருந்து தமிழ்நாட்டிலுள்ள திருப் பாம்பு புரம் வரை எங்கும் பாம்பின் பெயர் உண்டு. இந்து தெய்வங்களில் பாம்புகளை அணியாத தெய்வங்கள் மிகக் குறைவு.. சிவன் கழுத்திலும், திருமாலின் படுக்கையிலும் பாம்பு இருப்பதை பாடாத நாயன்மார்களோ , ஆழ்வார்களோ கிடையாது .

எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், பாம்பின் பெயர்களை உடைய மூன்று ஊர்களுக்குச் சென்றேன்.

திருப்பாம்புரம்

திருநாகேஸ்வரம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

xxxx

இந்து தெய்வங்கள் பாம்புகளைக் கழுத்திலோ கையிலோ வைத்திருப்பது ஏன்?

பாம்பு என்பதை குண்டலினி சக்தி என்ற வடிவத்தில் நேர்முகமாகக் காண்பர்.

பாம்பு என்பதை தீய சக்திகளான வடிவத்தில் புலன் இன்பத்தை அடக்குவதற்கும் பயன்படுத்துவர். கிரேக்க நாட்டில் பாம்புகளைக் கையில் கொண்ட பெண் தெய்வங்களும் ரிக்வேதத்தில், சிந்து சமவெளியில்  உள்ள பாம்பு ராணிகள் பற்றியும் உலகெங்கிலும் பாம்பு வழிபாடு என்ற என்னுடைய நூலில் விளக்கியுள்ளேன். பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை உங்களில் பலரும் அறிவீர்கள்.

முதலில் நான் கண்ட திருப்பாம்புரத்திற்குச் செல்வோம்.

திருப்பாம்புரம்

ராகுவும் கேதுவும் ஒரே உடலுடன் (ஏக சரீரி) இறைவனை வழிபட்ட தலம் இது என்பதால் ஜாதகத்தில் ராகு, கேது திசை நடந்தாலோ, அவ்விருவருக்கும் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தாலோ இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி , ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள். ஆகையால் நவக்கிரக பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று.

வன்னிமரத்துக்கு அடியில் பெரிய நாகர் சிலைகளைக் காணலாம்.

பாம்பு புரம் என்பது மருவி பாம்புரம் ஆகியது. நாகராஜன் பூஜித்த தலம் . ஆதி சேடனுடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும்  கோவிலில் உள்ளன

இறைவன் திரு நாமம் – பாம்புரேஸ்வரர் , திருப்பாம்புரமுடையார்

இறைவி – வண்டார் குழலி , மாமலையாட்டியாள்

தல  விருட்சம் – வன்னி மரம்

பேரளத்திலிருந்து மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.

15 கல்வெட்டுகள்  இருக்கின்றன ; அவை ராஜராஜன், ராஜேந்திரன், திரிபுவன வீரதேவன் , மூன்றாம் குலோத்துங்கன்,, சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர் காலத்தவை .

xxxx

கல்வெட்டு தரும் செய்திகள் :

சோழியதரையன் வேளான் தாமோதரையானால் மண்டபம் கட்ட நிலம் தானம் கொடுக்கப்பட்டது.

சரபோஜி மன்னன் பிரதிநிதியான சுபேதார் ராகு பண்டிதராயன் வசந்த மண்டபத்தைக் கட்டினான் .

திருப்பாம்புரத்தில் 1209-ம் ஆண்டில் கடும் பஞ்சம் நிலவியது. ஒரு பொற்காசுக்கு மூன்று படி நெல்தான் கிடைத்தது. பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன்  தன்னுடைய இரண்டு பெண்களை 100 பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாக விற்றான் .

Xxxx

கோவிலுக்குள் 8 அடி நீள  பாம்பு  அதிசயம்

2002ம் ஆண்டில் கோவில் கர்ப்பகிரகத்தைத் திறந்தபோது , பட்டர் ஒரு அதிசயத்தைக் கண்டார். ஒரு ஏழரை அடி நீளப் பாம்பு, தனது சட்டையை (பாம்புத் தோல்) அழகாக சிவலிங்கத்தின் மீது மாலை போல விட்டுச் சென்றிருந்தது. இதை அறிந்தவுடன் ஏராளமான மக்கள் வந்து அதைத் தரிசித்தனர். கோவில் நிர்வாகம் அந்தப் பாம்பின் சட்டையை அப்படியே கண்ணாடி பிரேமுக்குள் வைத்து , சந்நிதியில் பாதுகாக்கிறது . இன்றும் அதைக் காணலாம்.

26-5-2002 பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமையன்று பாம்பு தனது தோலை சிவ லிங்கம் மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம் 8-3 அடி

21-3-2002 அன்று பாம்பு தனது தோலை அம்மன் வண்டார் பூங்குழலி மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம்- 7-5 அடி

Xxxx

குழந்தை பிறக்காதோர் , பாம்புகளை வழிபட்டால் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாகர் பிரதிஷ்டைகளைக் காணலாம். பாம்பின் பெயர்களுடைய ஊர்களில் பெரிய நாகர் (பாம்பு) சிலைகளைக் காணலாம். ஆங்கிலத்தில் உள்ள ஸ்நேக் , ஸர்பண்ட் என்பற சொற்கள் தூய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்!!!

S+ naaka= SNAKE

Sarpa= Serpent

xxx

திருப்பாம்புரம் தேவாரம்

    துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்    

        சூறைநல் லரவது சுற்றிப்   

    பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்    

        பித்தராய்த் திரியும்எம் பெருமான்   

    மன்னுமா மலர்கள் தூவிட நாளும்    

        மாமலை யாட்டியுந் தாமும்   

    பன்னுநான் மறைகள் பாடிட வருவார்    

        பாம்புர நன்னக ராரே.    1.41.3

  குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்   

        குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்   

    கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்   

        கையர்தா முள்ளவா றறியார்   

    வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க   

        வாரண முரிசெய்து போர் த்தார்   

    பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்   

        பாம்புர நன்னக ராரே.    1.41.10

    பார்மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த   

        பாம்புர நன்னக ராரைக்   

    கார்மலிந்தழகார் கழனிசூழ் மாடக்   

        கழுமல முதுபதிக் கவுணி   

    நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான   

        சம்பந்தன் செந்தமிழ் வல்லார்   

    சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்    

        சிவனடி நண்ணுவர் தாமே.    1.41.11

    திருச்சிற்றம்பலம்   

அடுத்த கட்டுரையில் மேலும் இரண்டு நாகேஸ்வரர்களைத் தரிசிப்போம்.

—subham—

Tags- வன்னிமரம், நாகர் சிலை, திருப்பாம்புரம்,  ராகு, கேது,  பரிகாரத் தலங்கள் , கோவில்

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 3 (Post No.11,774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,774

Date uploaded in London –   6 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 3

ச.நாகராஜன்

உங்கள் வீட்டு வீடியோவை எடுத்துக் கொள்வோம்.

நீங்கள் இப்போது வீடியோ மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா, அது வெற்றிடத்தைத் தான் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sub atomic particles) தம்மைச் சுற்றிலும் பெரும் ஸ்பேஸ் (Space) எனப்படும் வெளியைக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பார்த்தால் அதிலுள்ள அனைத்துமே அதே போன்ற சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

திரையிலிருந்து கண்ணை உயர்த்துங்கள், சுற்றிப் பாருங்கள். பார்க்கும் அனைத்துமே சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே தான் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ப்பு பூனையையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிடம் தான்! இது பற்றிய சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயம் தான்! எல்லாமே அதே போலத்தான் – ஒன்றே ஒன்றைத் தவிர – அது தான் மனித பிரக்ஞை!

ஆம், இந்த விதிக்கு ஒரே ஒரு விலக்கு உண்டு, அது தான் மனித பிரக்ஞை!

பிரக்ஞை விழுப்புணர்ச்சி (Conscious Awareness) இருக்கிறதே, அது மட்டுமே தனியாக பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கிறது. இது ஒரு விசித்திரம் தான்!

சப் அடாமிக் என்று சொல்லப்படுவதை விட மனிதனின் பிரக்ஞை மிகவும் உயரியது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட பிரக்ஞை அசேதனம் அல்லது ஜடமான மேட்டர் (matter) மீது – பொருள் மீது – செல்வாக்கு செலுத்துகிறது. மனித மனம் செல்வாக்கு செலுத்தாத எதுவுமே இல்லை என்பதே உண்மை.

அதை ஏன் செய்ய முடியாது என்றால் நாம் அதைச் செய்யும்படி எதிர்பார்க்கப்படவில்லை.

இதே நிலை தான் விஞ்ஞானிகளுக்கும் – aperture test- அபெர்சர் சோதனையில் உள்ளது.

இந்த விதமாக அறிவியல் ரீதியாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே போனால் பிரக்ஞையின் தனித்தன்மையானது உயிரற்ற பொருள் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்தும் என்பதை உணரலாம்.

ஐன்ஸ்டீன் ஆற்றலும் பொருண்மையும் ஒன்றுக்கொன்று மாற்றப்படக்கூடியது – நியூக்ளியர் ரீ – ஆக் ஷனில் உள்ளது போல (energy and mass are interchangeable as in a nuclear reaction) என்றார்.

உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள சோதனைச் சாலைகள் மனித  மனம் உருவாக்கும் விசையை அளக்க இப்போது தயார் – சைக்கோ கைனடிக் சோதனைகள் மூலம்!

சரி, முடிவு தான் என்ன?, என்றால் மிகத் தெளிவாகப் புலப்படுவது இது தான் :- பொருண்மையும் ஆற்றலும் ஒன்றுக் கொன்று மாற்றப்படக்கூடியது, மனித பிரக்ஞையால் உருவாக்கப்படும் ஆற்றலானது  அதற்கு இணையான பொருண்மைக்குச் சமமாக மாற்றப்படலாம்- இதற்கான வழி முறை விசுவலைசேஷன் (VISUALIZATION) எனப்படுகிறது.

இது மனோசக்தி உள்ளவர்களால் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!

நாம் பிறக்கும் போது நம்மை யாரும் ‘புரோகிராம்’ செய்யவில்லை. நாம் மென்பொருள் அதாவது சாஃப்ட்வேர் இல்லாத கணினி போல இருக்கிறோம்.

நாள்தோறும் மேம்பாட்டை அடையும் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென உருவாக்கிக் கொள்ளும் ஒரு சட்டத்தில் தன்னை அமைத்துக் கொள்கிறார். வளர்ந்து கொண்டே இருக்கும் போது மற்றவர்களுடன் கலந்து வாழ ஒரு அடிப்படையான உண்மைக்கு நாம் பழக்கப்படுத்தப் படுகிறோம். இதை நாம் வழக்கமாக பள்ளிகளிலும் சமூக குழுக்களிலும் இணைந்து கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் செல்வாக்கும் கூடவே இருக்கிறது.

இப்படித்தான் நமது வளர்ச்சி அடைகிறது!

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடிகிறது

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 1 (Post No.11,773)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,773

Date uploaded in London – –  5 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Over 160 plants are listed in the Vedic literature. I have collected them from old books. So, there may be some changes in the nomenclature or identification. So, it is better to double check before using them in medicines.

1.ABHAYA

Brassica yuncea- dark seeds

Brassica alba- white seeds#

Mentioned in Atharva Veda 4-35-5

Oil – medicine

xxxx

2.AADHARA

Zingiber officinale

Mentioned in Atharva Veda 4-35-5

Medicine , spice

xxx

3.ADHYANDA

Mucana pruriens, Phyllanthas urinaria

Phyllanthas urinaria

Mentioned in Satabata Brahmana 13-8-1-16

medicine

xxx

4.AJASRNGI

Odina wodiar

Gymnema Sylvestre

Mentioned in Atharva Veda 4-37

Demon destroyer

xxxx

5.AALA

Weed of cornfield

Mentioned in Atharva Veda 6-16-3

xxxx

6.ALABU, ALAPU

Lagenaria Vulgaris

Mentioned in Atharva Veda 8-10, 29, 30

20-130-1,2

Maitreya Samhita 4-2-13, vessel made of it

Vegetables, fruit and vessel

xxxx

7.ALASALA

Grain creeper

Atharva Veda 6-16-4

xxxx

8.AMALA, AAMALAKA

Phyllanthus embilica

Jaiminiya Upanishad brahmana 1-38-6

Chandogya Upanishad 7-3-1 (Vamalaka)

Medicinal, fruit

xxxx

9.AMULA

Gloriosa superba

Cascata species

Atharva Veda 5-32-4

Poison; used for poisoning arrows

xxxx

10.AANDIKA

Nymphaea alba

Atharva Veda 4-35-5; 17, 16

Edible plant leaf and root egg shaped

In the

Pippalapada ed., i Paundarika is mentioned in its place

Flower, personal decoration, edibles.

xxxx

11.ANU (CINA)

Panicum miliaceum

Vajasneya Samhita 18-12

Brhadaranyaka Upanishad 6-3-13

Food grains, fodder diet

xxxx

12. APAMARGA

Achyranthes aspara

Atharvana veda – 4-7-6; 18,7; 19-4.

7-6-2. Vaj.Sam-35-11; Taitriya Brahmana-1-7, 8-1

Sat. Br- 5-2-4-14; Nirukta- 4-17-2

Medicinal, ritual use

xxxx

13.APARAJITA

Clitoria ternata for prosperity and long life

Atharvana veda – 2-27-3

Spell, amulet

Xxxx

14.ARKA

Calotropis gigantea

Atharvana veda –6-72-1;

Sat.Br.9-1-1-4, 9 (arka parna)

Arka palasa 1-2-3; 12, 13

medicinal

xxxx

15.ARALU

Oroxylum indicum

Atharvana veda -20-131-17;

The axle of the chariot is made out of it according to Rig Veda

Use- Timber, Medicinal

xxx

16.ARATAKI/ ARATU

Prosopis spicegera (suggested by Weber)

Acacia suma

Atharvana veda -4-37-6

Timber, fuel

xxxx

17.ARUNDHATI/ SAHADEVI

Sida cordifolia

Sida rhombhifolia

Atharvana veda -4-2-1; 5- 5-9;

6- 59-1,2; 7-7-16; 19-38-1

Healing properties as febrifuge, increades milk of cow, protection of cattle AV 6-59-1

Climber having stem of golden colour AV 5-5-7

Also called silaci and laksa appears to have been a product of it  (Whitney’s notes o AV 4-12

To be continued………………………

 Tags- Plants, Vedic literature, Trees, Herbs

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் கிளி அதிசயம் (Post No.11,772)

YOU CAN SEE THE PARROT AT THE TOP NEAR YALI

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,772

Date uploaded in London – –  5 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது.

நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023)  சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார்.  பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக்  கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.

நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச  நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.

பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார்  . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)

கொலுசு அதிசயம்

இந்த மேக நாதர் கோவிலில்  லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத்  துவங்கியவுடன் , சமையல்  அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).

அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக  அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.

11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்

அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்

சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.

கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .

பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே.

கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன

சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle)  அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .

அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோவில் இது

இறைவர்                   : முயற்சி நாதர்மேகநாதர் 

இறைவியார்               : சௌந்திரநாயகிசுந்தரநாயகிலலிதாம்பாள் 

தல மரம்                   : வில்வம் 

தீர்த்தம்                    : சூரிய புஷ்கரணி 

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் 

யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.

சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது

இதோ திருஞானசம்பந்தர் பதிகம்

பாடல் எண் : 1

காயச் செவ்விக் காமற் காய்ந்துகங்கையைப்

பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி,

மாயச் சூர்அன்று அறுத்த மைந்தன் தாதைதன்

மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. 

         பொழிப்புரை :அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள். 

பாடல் எண் : 2

பூஆர் சடையின் முடிமேல் புனலர்அனல்கொள்வர்,

நாஆர் மறையர்பிறையர்நறவெண் தலைஏந்தி

ஏஆர் மலையே சிலையாக் கழிஅம்பு எரிவாங்கி

மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே. 

பாடல் எண் : 3

பொன்நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்,

மின்நேர் சடைகள் உடையான்மீயச் சூரானைத்

தன்நேர் பிறர்இல் லானைத் தலையால் வணங்குவார்

அந்நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிதுஅன்றே.

பாடல் எண் : 4

வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்

பாகம் உமையோடு ஆகப் படிதம் பலபாட

நாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடியநம்பன்

மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே. 

பாடல் எண் : 5

விடைஆர் கொடியார்சடைமேல் விளங்கும் பிறைவேடம்,

படைஆர் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்,

பெடைஆர் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்

விடைஆர் நடைஒன்று உடையார் மீயச் சூராரே. 

பாடல் எண் : 6

குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர்கொன்றை

ஒளிரும் பிறைஒன்று உடையான் ஒருவன்கைகோடி

நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்,

மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே. 

பாடல் எண் : 7

நீல வடிவர்மிடறு நெடியர்நிகர்இல்லார்,

கோல வடிவு தமதுஆம் கொள்கை அறிவொண்ணார்,

காலர்கழலர்கரியின் உரியர்மழுவாளர்,

மேலர்மதியர்விதியர்மீயச் சூராரே.

பாடல் எண் : 8

புலியின் உரிதோல் ஆடைபூசும் பொடிநீற்றர்,

ஒலிகொள் புனல்ஓர் சடைமேல் கரந்தார்உமைஅஞ்ச

வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை

மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.

பாடல் எண் : 9

காதில் மிளிரும் குழையர்கரிய கண்டத்தார்,

போதில் அவனும் மாலும் தொழப்பொங்கு எரிஆனார்,

கோதி வரிவண்டு அறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி

மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

பாடல் எண் : 10

கண்டார் நாணும் படியார்கலிங்கம் உடைபட்டைக்

கொண்டார்சொல்லைக் குறுகார்உயர்ந்த கொள்கையார்

பெண்தான் பாகம் உடையார்பெரிய வரைவில்லா

விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே. 

         பொழிப்புரை :கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்

பாடல் எண் : 11

வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்

நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்

பாடல் ஆய தமிழ் ஈர்ஐந்து மொழிந்துஉள்கி

ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.

          பொழிப்புரை :பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர். 

–subham– 

Tags- திருமீயச்சுர் , லலிதாம்பிகை, லலிதா சஹஸ்ரநாமம் , சிவன் ,கோவில், கொலுசு,  வளையல் , மேகநாதர்

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 2 (Post No.11,771)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,771

Date uploaded in London –   5 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 2

ச.நாகராஜன்

ஆகவே எல்லாமே வேகத்தைப் பொறுத்தே தான் இருக்கிறது. காலமும் பொருண்மையும் வேகத்தால் நிர்ணயிக்கப்படுபவையே.

பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் .நிஜமல்ல.

மனோசக்தியை வளப்படுத்தும் குருமார்கள் தீடா அல்லது வேறு மாறுபட்ட நிலையில் மனதை இயக்குகின்றனர். அவர்கள் காலமற்ற பிரதேசம் ஒன்றில் நுழைந்து கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகத் தெளிவாக பார்க்க முடியும் என்கின்றனர்.

காலம் எப்போதுமே முன்னோக்கிச் செல்லும் ஒன்று என்று கருதப்பட்டு வந்தது. இதை வில்லிலிருந்து புறப்பட்ட அம்பானாது எப்படி ஒரு நேர்கோட்டில் செல்லுமோ அதே போலத் தான் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் க்வாண்டம் பிஸிக்ஸ் என்னும் அணு இயற்பியல் அது எதிர்திசையிலும் கூடச் செல்லும் தன்மை கொண்டது என்று சொல்கிறது. இந்தப் புது இயற்பியலின் உள்ளே செல்லச் செல்ல அதிகமதிகம் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வந்து நம்மை பிரமிக்க வைக்கின்றன.

இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா?

ஒரு திரையில் ஒரு குறுகிய வெட்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் வழியே ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்டது. இது அபெர்சர் டெஸ்ட் (aperture test) என்று சொல்லப்படுகிறது.

இந்த ஒளியானது ஒரு துகள் சித்திரமாகவோ அல்லது அலை வடிவிலோ சோதனையாளரின் விருப்பப்படி திரையில் தெரிந்தது.

இப்போது ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. சாதாரணமாக நாம் பார்க்கும் நிகழ்வுகள் அலைவடிவில் தோன்றுபவையா, அவை நாம் துகள் வடிவில் பார்க்க வேண்டும் என்று உணர்வுடன் சோதனை செய்யப்படும் போது அப்படித் தோன்றுகின்றனவா?


ஒரு திடப் பொருளில் உள்ளே மிக அதிகமான வெற்றிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  அதில் இந்த துகள் கொள்கை தன் பங்கிற்கு தனது செல்வாக்கைச் செலுத்தலாம்.

சூரிய மண்டலத்தை எடுத்துக் கொள்வோம்.  அவற்றில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவற்றிற்கு இடையே உள்ள தூரமோ மிக மிக அதிகமானவை. இந்தப் பெரிய சூரிய மண்டலத்தை ஒரு அணு அளவிற்குச் சுருங்கியதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கும் இடத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் இப்போது :-  99.9999999999% திடப் பொருளை வெளியாக (Space) வைத்துக் கொள்வோம்.

அப்போது ஒரு அபூர்வமான மதிப்பீடு பிரபஞ்சம் பற்றி நமக்கு வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா “வெளிகளும்” எடுக்கப்பட்டு விட்டால், “திடப் பொருள்” மட்டுமே விடப்பட்டால், பிறகு இதை உங்கள் உள்ளங்கையில் வைத்து விடலாம்!

****                          தொடரும்

tags- பார்ப்பதெல்லாம், நிஜமல்ல