அமெரிக்கா போட்ட ப்ளூட்டோனியம் அணுகுண்டு – 2 (Post No.11,884)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,884

Date uploaded in London – –  9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part Two of Plutonium in Tamil

தற்காலத்தில் அணு உலைகளில் (Nuclear Reactors) மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த ப்ளூட்டோனியம் (Plutonium) உலோகம் பயன்படுகிறது. ஆனால் இது உண்டாக்கும் கதிரியக்கக் கழிவை (radio active waste) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எந்த ஒரு செயற்கை உலோகத்தையும் விட அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது ப்ளூட்டோனியம் தான்.

காரணம் ?

இது அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணு உலைகளில்  மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இவ்வாறு செய்கையில் இது அணுசக்திக் கழிவுகளை வெளியே தள்ளும்;. கதிரியக்கம் கொண்ட அந்த ரசாயனப் பொருளை எங்கே கொண்டு கொட்டுவது?

முதலில் அதைக் குறைந்த ஆபத்துள்ள பொருளாக மாற்றவேண்டும் பின்னர் அதைக் கதிரியக்கம் வெளிவராத குப்பிகளில் (Canisters)  அல்லது டப்பாக்களில் (Containers) அடைக்கவேண்டும் . பின்னர் அவற்றை பாலைவனப் பகுதிகளிலோ அல்லது கடலுக்கு அடியிலோ இறக்க வேண்டும். இதெல்லாம் மேலை நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. பெரும்பாலான விஷயங்கள் ரகசியமாக செய்யப்படுகிறது.

வேண்டாத சனியனை விலைகொடுத்து வாங்குவது என்ற பழமொழிக்கு நல்ல உதாரணம் ப்ளூட்டோனியம்தான்.

அமெரிக்காவுக்கும்- ரஷ்யாவுக்கும் இடையேயான கெடுபிடிப்போர் (Cold war) முடிந்தவுடன் இரண்டு நாடுகளும் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தன. அப்போதுதான் இந்தப் பிரச்சனையின் முழுவடிவமும் தெரிந்தது. அணு ஆயுதங்களைப் பிரித்துப் பகுதி பகுதியாக எடுத்தால் (dismantling nuclear weapons)  கழிவு ப்ளூட்டோனியம், கழிவு யுரேனியத்தை என்ன செய்வது? இரு நாடுகளில் 65, 000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.. இதுவரை காற்று மண்டலத்தில் மட்டும் 500 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.. இதனால் காற்று மண்டலமும் அசுத்தமாக்கப்பட்டுவீட்டது. கடலிலும் , நிலத்துக்கடியிலும் நிறைய சோதனைகள் நடந்துள்ளன.(இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் பாலை வனைப் பகுதியில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்தது.)

அணுசக்திக் கழிவு, தவறானவர் கைகளில் சிக்கினால், அவர்களும் அணுகுண்டுகளை செய்யமுடியும். இது வரை உலக நாடுகள் ஆயிரம் டன்களுக்கு மேலாக ப்ளூட்டோனியம், உலோகத்தை உற்பத்தி செய்துள்ளன.

ஒரு டன் பெட்ரோலிய எண்ணை அல்லது எரிவாயுவை எரித்துக் கிடைக்கும் சக்தியை ஒரு கிராம் அளவுள்ள ப்ளூட்டோனியம் மூலம் பெறலாம்!

1971ம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பிய அப்பலோ 14 விண்கலத்தில் ப்ளூட்டோனியம் -238 பயன்பட்டது. அதிலுள்ள கருவிகளுக்கு இது மின்சக்தி அளித்தது.1977 வாயேஜர் விண்கலத்திலும் பயன்பட்டது. இப்போது செயற்கை இருதய கருவிகளுக்கும் இதுவே சக்தி தருகிறது பலவித ஆராய்ச்சிகள் செய்ய,  இந்த உலோகத்தை வேறு உலோகங்களுடன் கலக்கின்றனர் .

அமெரிக்கா , தனது அணுசக்திக் கழிவுகளை நெவாடா(Nevada)  மாநிலத்திலுள்ள யுகாடா மலையில் புதைக்கிறது. 4 கிலோ மீட்டர் ஆழத்தில் புதைத்து விட்டால் மூன்று கோடி ஆண்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. 

Xxx

Picture: Lucas Heights is in Australia

xxx

Chemical Properties

ரசாயனக் குறியீடு Pu

அணு எண்  94

உருகு நிலை-  640 டிகிரி C

கொதி  நிலை – 3330 டிகிரி C

காற்றில் வைத்தால் 135 டிகிரி C  யில் தீப்பிடித்துவிடும்

ப்ளூட்டோனியம்,என்ற உலோகம் வெள்ளி போல மினுமினுக்கும் உலோகம். இதற்கு 20 வகை ஐசடோப்புகள் (Isotopes)  இருக்கின்றன. சில ஐசடோப்புகள் 88 நாட்களில் பாதியாகக் கரைந்து விடும். இன்னும் சில ஐசடோப்புகள் எட்டு கோடி ஆண்டுகளில் பாதியாக ஆகும். இதை அதன் அரை வாழ்வு Half Life என்பர்.

அதிகமாக்க கிடைசிப்பது ப்ளூட்டோனியம்-239. அதன் அரை வாழ்வு 24000 ஆண்டுகள்.

ப்ளூட்டோனியம்-244. — அரை வாழ்வு எட்டு கோடி ஆண்டுகள்..

ப்ளூட்டோனியம்-242.– அரை வாழ்வு 376 000 ஆண்டுகள்.

ப்ளூட்டோனியம்-238. — அரை வாழ்வு 88 ஆண்டுகள்.

இந்த உலகத்துக்கு ஒரு வினோத குணம் உண்டு. இதைப்  பொதுவாக

ப்ளூட்டோனியம் ஆக்சைட் என்ற ரசாயனப் பொருளாகச் சேமித்துவைப்பர். இப்படிச் செய்கையில் இது விரிவடைந்து 40 சதவிகிதக் கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்ளும். 1983ம் ஆண்டில் 2-5 கிலோ சுத்தமான உலோகத்தைப் பாதுகாப்பான் பெட்டகத்தில் அடைத்துவைத்தனர். அதிலுள்ள கொஞ்சம் ஆக்சிஜன் வாயுவுடன் கிரியை செய்து  ப்ளூட்டோனியம் ஆக்சைட் ஆக மாறியது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் பார்த்தபோது அது, வெடித்து வெளியே வருவதற்குள் அதைக் கண்டுவிட்டனர் . பின்னர் பாதுகாப்பாக அதை அகற்றினர். அவர்கள் பார்த்திராவிடில் அது வெடித்து கதிரியக்கம் கசிந்து ஆபத்தை விளைவித்திருக்கும்.

Norh Korea threatens the world

இப்போதும் கூட எவ்வளவு பாதுகாப்பு செய்யப்பட்ட அணு உலைகளிலும் கூட பாதுகாப்புக் கவசம் இல்லாதபடி விஞ்ஞானிகளோ ஊழியர்களோ அணு உலைகளுக்குள் செல்லுவதில்லை . வெளியே வந்த பின்னரும் கீகர் கவுண்டர் கருவிகளைக் கொண்டு உடலில் அணுக்கதிரியக்கம் ஏறியிருக்கிறதா என்று சோதிப்பார்கள்..

ஜுராஸ்ஸிக் பார்க் (Jurassic Park) சினிமா பார்த்தவர்களுக்கு டைனோசர் மரபணு (DNA)  ஆராய்ச்சி எப்படி எதிரிடையாகப் போனது என்பது தெரியும். அது போல இந்த அணுக்கதிரியக்கப் பொருள்கள்- கழிவுகள் எப்போது டைனோசர் போல பூதாகார வடிவு எடுக்கும் என்று இப்போது தெரியாது . சர்வ தேச அணு சக்திக் கமிஷனின் கட்டுப்பாடுகள், அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் முதலிய பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் தன்னிச்சையாக நடக்கின்றன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவும், ரஷியாவும் பிரிட்டனும் இஸ்ரேலும்  ரகசியமாகச் செய்வதை யாரே அறிவார்?

—subham—

Tags- ப்ளூட்டோனியம், கதிரியக்கம், கழிவுப் பொருள், அணுகுண்டுகள்,

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது? (Post No.11,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,883

Date uploaded in London –   9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம்

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ச.நாகராஜன் 

எந்த காரணத்தினால் ஒருவரை கௌரவிக்க வேண்டும்?

ஒருவரை கௌரவிக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதி அவரிடம் இருக்க வேண்டுமல்லவா?

எந்த எந்த தகுதிகள்  பார்க்கலாமா?

1) வித்யா – கல்வியில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

2) புத்தி – புத்தியில் மேதையாக இருப்பவரை கௌரவிக்க வேண்டும்.

3) பௌருஷம் – வீரத்தில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

4) அபிஜனம் – ஒரு சிறந்த குடும்பத்தில் பிறந்தவரை மதிக்க வேண்டும்.

5) கர்மாதிசயா – பிரம்மாண்டமான பிரமாதமான செயல் புரிந்தவரை மதிக்க வேண்டும்.

இப்படி அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. ||| – 20-23

பூஜ்யா வித்யா புத்தி பௌருஷாபிஜன கர்மாதிஷயதஸ்ச புருஷா: |

யாரை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்?

யாரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து பேர்களை! யார் அவர்கள்?

1) அதிதி – வீட்டிற்கு வந்த விருந்தாளையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

2) பாலகா – குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

3) பத்னி – மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

4) ஜனனி – பெற்ற தாயை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

5) ஜனகா – பெற்ற தந்தையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித நூலில் உள்ள ஒரு ஸ்லோகம் இந்த அறிவுரையை வழங்குகிறது.

அதிதிபாலிக: பத்னி ஜனனி ஜனகஸ்ததா |

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச ஸ்வஷக்தித: ||

                     சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  157/206

ஒரு நல்ல எஜமானன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு நல்ல எஜமானனுக்கு என்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும்?

அவனுக்கு ஐந்து நல்ல அடிப்படை குணங்கள் தேவை.

அவையாவன:

1) பாத்ரே த்யாகி – தகுதியான (பாத்திரமுடையவர்களுக்கு) அவன் வழங்கவேண்டும்.

2) குணராகி – நல்ல குணங்கள் கூடியவராக இருத்தல் வேண்டும்.

3) போகி பரிஜனை: – உறவினர்களுடன் சந்தோஷமாக இருத்தல் வேண்டும்.

4) பாவ போதா – சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5) ரணே யுத்தா: – போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரியத் தெரிந்திருக்க வேண்டும்.

இதை சுபாஷிதம் ஒன்று தெரிவிக்கிறது.

பாத்ரே த்யாகீ குணே ராகீ போகீ பரிஜனை: சஹ |

பாவபோத்தா ரணே ப்ரபுள் பஞ்சகுணோ பவேத் ||

–    சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  142/12

நல்ல அறிவைப் பெற வழிகள் யாவை?

நல்ல அறிவைப் பெற்றவர் எப்படி இருப்பார்கள்?

1) சப்த ப்ரமாணம் – சப்தத்தால் ப்ரமாணத்தைத் தருபவர்கள்.

(நல்ல பேச்சுத் திறமையால் தமது கருத்தைத் தருபவர்கள்)

2) அர்தாபட்டி – (Postulation) கொள்கை அனுமானக் கோட்பாட்டைக் கொண்டு அர்த்தத்தை நல்ல முறையில் விவரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3) அனுமானம் – ஊகம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

4) உபமானம் – இதை இதனுடன் ஒப்பிடலாம் என்ற உபமானக் கலையில் தேர்ந்த வல்லவராக இருத்தல் வேண்டும்.

5) ப்ரத்யக்ஷம் – (Perception) எதையும் உள்ளுணர்வால் உணரும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் அவரை உலகம் நன்கு மதிக்கும்.

இந்த ஐந்து குணங்களை ப்ரபாகர மீமாம்ஸை வலியுறுத்துகிறது.

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

கலியுகத்தில் உயிராக இருப்பவர்கள் ஐந்து பேர். இந்த ஐந்து பேர்களை நீங்கள் உங்கள் உயிருக்குச் சமானமாக மதிக்க வேண்டும்.

யார் அந்த ஐந்து பேர்கள்?

1) க்ருஹிணி – இல்லத்தரசியாக விளங்கும் மனைவி

2) ஸ்வசுரௌ: – மாமனார்

3) ஸ்வஸ – மாமியார்

4) பகிணி – மனைவியின் சகோதரி

5) ஷ்யால – மைத்துனர் (மச்சான்)

பிழைக்கத் தெரிந்த வழியை இந்த சுபாஷிதம் கூறி நம்மை மகிழ்விக்கிறது; கலியுகத்தில் கடைத்தேற வழியைக் காண்பிக்கிறது!!

க்ருஹிணீ பகினீ தஸ்யா: ஸ்வசுரௌ ஷ்யால இத்யபி |

ப்ராணினாம் கலிநா ஸ்ருஷ்டா: பஞ்சப்ராண பரே ||

***

அமெரிக்கா போட்ட புளூட்டோனியம் அணுகுண்டு: லட்சம் பேர் மரணம் (Post No.11,882)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,882

Date uploaded in London – –  8 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அணுகுண்டு புகழ் யுரேனியம் உள்பட 47 மூலகங்களின் கதைகளை பார்த்தோம். இன்று ஜப்பானை நாசமாக்கிய அமெரிக்க PLUTONIUM புளூட்டோனியம் பற்றிக் காண்போம். 

ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்று அவ்வையார் பாடினார். அந்த மூதாட்டிதான் முதல் அணுசக்தி விஞ்ஞானி

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக்

குறுகத் தரித்த குறள்  —

என்று தீர்க்க தரிசனத்துடன் பாடினார்.. அணு என்ற சொல் முதல் முதலில் வேதத்தில், உபநிஷதத்தில் வருகிறது..

புளூட்டோனியம் என்னும் தனிமம்/ மூலகம் (Radio active element)  கதிரியக்கம் உடையது. இதனால் உடலில் புற்றுநோயும், மரபணுவைப்  பாதிக்கும் நோய்களும் உண்டாகும்.

1930ம்- ஆண்டுகளில் இதைக்கண்டு பிடித்தவர்கள் யுரேனஸ் பெயரில் யுரேனியமும், நெப்ட்யூன் என்ற கிரகத்தின் பெயரில் நெப்ட்யூனியமும் உள்ளதால் இதற்கு புளூட்டோ கிரகத்தின் பெயரில் புளூட்டோனியம் என்று பெயரிடலாம் என்று தீர்மானித்தனர்.

ஒவ்வொரு தனிமத்துக்கும் ஆங்கிலத்தில் Symbol குறியீடு உண்டு. இதற்கு பி எல் Pl என்று வைக்கலாமா அல்லது பி யூ Pu என்று வைக்கலாமா என விவாதம் எழுந்தது. இது கெட்ட உலோகம். ஆகையால் அசிங்கமான ‘பூ ‘ Pu என்ற சொல்லையே சூட்டுவோம் என்று முடிவு செய்தனர் ; தமிழில் பூ என்றால் மலர். ஆங்கிலத்தில் பூ Pu என்றால் மலம்.

இயற்கையில் எல்லா இடங்களிலும் இது இல்லை. ஆனால் மேலை நாடுகள் ஏராளமான அணு சோதனைகளைச் செய்ததாலும், அணு சக்தி உலை விபத்துக்களாலும் இப்போது புறச்சூழலைப் பாதித்திருக்கிறது . நம் ஒவ்வொருவர் உடலிலும் இந்த உலோகத்தின் அணு இருக்கிறது. ஆயினும் இதைக் கையில் கூட , கையுறை போட்டுக்கொண்டு எடுத்துப்பார்க்கலாம். மிக மெல்லிய தோலுக்குள் கூட  புளூட்டோனியம் அணு ஊடுருவ முடியாது .

.

மருத்துவ உபயோகம்

உலகையே அச்சுறுத்திய இந்த உலோகம் மாந்தர் குலத்துக்கு நன்மையையும் செய்கிறது . செயற்கை இருதய கருவிகளுக்கு சக்தி (Heart pace makers) கொடுப்பது புளூட்டோனியம் – 238 ஆகும்.

1940-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பெர்க்லியில் இரண்டு விஞ்ஞானிகள் யுரேனியம்-238 மீது ட்யூட்றான் DEUTRONஎன்னும் கனரக ஹைட்ரஜன் HEAVY HYDROGEN IONS  அணுவைப் பாய்ச்சி இதை உற்பத்தி செய்தனர். 1945ம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் மூன்று அணுகுண்டு செய்வதற்குத் தேவையான ப்ளூட்டோனியம் கிடைத்துவிட்டது .

ப்ளூட்டோனியம் -239 என்ற ஐசடோப் மீது நியூட்ரான் NEUTRON அணுவைப் பாய்ச்சினால் — மோதவிட்டால் —  அது அந்த அணுவைப் பிளப்பதோடு மேலும் நிறைய நியூட்ரான்களை வெளியிடும். அவை பக்கத்திலுள்ள அணுக்களைத் தாக்கி இதே விளைவை உண்டாக்கும். இதை சங்கிலித் தொடர் விளைவு (Chain Reaction) என்பர். ஒரு குறிப்பிட்ட அளவு ப்ளூட்டோனியம் இருந்தால் இது பிரமாண்டமான வெடிப்பினை ஏற்படுத்தி ஒரு நகரத்தையே அழித்து விடும்  இந்த அளவை கிரிட்டிகல் மாஸ் CRITICAL MASS என்பர்.

1945ம் ஆண்டில் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் அமெரிக்கா நடத்திய சோதனையில் இத்தனையையும் கண்டு பிடித்து ரகசியமாக வைத்திருந்தது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11-02 மணிக்கு ஜப்பானின் நாகசாகி நகரம் மீதுஅமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதற்கு குண்டு மனிதன் Fat Man என்று பெயர் சூட்டியது. இது ப்ளூட்டோனியாம் அணு குண்டு. இதற்கு முன்னர் ஹிரோஷிமா மேல் போட்ட குண்டு யுரேனியம் அணுகுண்டு.

நாகசாகியில் வீசிய குண்டினால் ஒரு சில நொடிகளில் 70,000 பேர் செத்து மடிந்தனர் முதலில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுக்கு சின்னப்பையன்Little Boy  என்று பெயரிட்டனர். மூன்றாவது அணுகுண்டு குமகாயா Kumagaaya என்னும் ஊர் மீது போட இருந்தது. ஆயினும் 6000 டன் சாதாரண வெடிகுண்டினால் அதை அழித்தனர் . நாலாவது அணுகுண்டினை ஆகஸ்ட் 17ம் தேதி கொக்குரா Kokura நகர் மீது வீசத் திட்டமிட்டனர். ஆனால் ஜப்பான் சரண் அடைந்ததால் இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஜப்பான் பிழைத்தது..

இப்படிப்பட்ட உலோகத்துக்கு மலம் Pu என்று பெயர் சூட்டியது பொருத்தம் தானே .

இனி பொருளாதாரப் பயன்களைக் காண்போம்.

TO BE CONTINUED……………………………….

Taags- புளூட்டோனியம், அணுகுண்டு, நாகசாகி

சிறை சென்ற சாமியார் சுவாமி சாந்தானந்தா (Post No.11881)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,881

Date uploaded in London – –  8 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Swami Sri Santhananda with my father V Santanam and my Brothers

புதுக்கோட்டை ஸ்ரீ சுவாமி சாந்தானந்தாவைப் பார்த்தவர்கள் பாக்கியவான்களே ; நெடிய உருவம்; முகத்தில் தேஜஸ்; சிவந்த மேனி; தரையில் விழுந்து புரளும் ஜடாமுடி; மேலே காவித் துணி. நெற்றியில்  விபூதிப் பட்டை; பெரிய குங்குமப்பொட்டு.

 மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருகையில் பிட்சை (அன்னம்= உணவு) ஏற்பார். எனது தாயார் அறுசுவை உண்டி சமைத்து ஆவலோடு காத்திருப்பார்  ; அத்தனையையும் கலக்கி உங்கள் கையால் மூன்றே பிடி போடுங்கள் என்று வாங்கிச் சாப்பிடுவார். தாயாருக்கோ மிக மிக வருத்தம். சந்நியாசிகள் நாக்கின் ருசிக்காகச் சாப்பிடுவதில்லை !

எங்கள் எல்லோரையும் பெயர் முதலியவற்றைக் கேட்டு ஆசீர்வதிப்பார். பின்னர் தான் செய்யப்போகும் சஹஸ்ர சண்டி யக்ஞத்தின் மஹிமையை என் தந்தையிடம் உரைத்து , தினமணிப் பத்திரிக்கையில் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்வார். அந்த யக்ஞம் முடிவதற்குள் மதுரையில் உள்ள எங்கள் வீட்டுக்கு பல முறை வந்தது எங்கள் அதிர்ஷ்டமே.

எங்களுக்கு சாந்தானதா, ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தையும் சொல்லிக்கொடுத்து திரும்பிச் சொல்லும்படி  சொல்லுவார். எங்கள் வீட்டிற்கு இவரைப் போலவே பல முறை வந்து மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, அச்சங்கோவில் என்னும் அய்யப்பன் க்ஷேத்திரத்தை எல்லோரும் எளிதில் அடையும் படி செய்தவர் ஆவார். ஆரம்ப காலத்தில் செங்கோட்டை முதலிய இடங்களிலிருந்து செல்வோருக்கு சாலை வசதிகள் கிடையாது. அப்போது சுவாமிஜி கிருஷ்ணாவின் சிஷ்யர்கள் புதர்களையும் செடிகளையும் அரிவாளால் வெட்டி அகற்றிச் செல்லுவார்கள். ஆண்டுதோறும் அங்கு புஷ்பாஞ்ஜலி நடைபெறும். அப்படிச் செல்லுகையில் சுவாமி சாந்தானந்தா அந்த குற்றால மலைக்காடுகளில் இருந்து தவம் செய்துகொண்டிருப்பதை சுவாமிஜியும் பார்த்திருந்தார். அவருடன் பேசும்போது தானே அவர் தவம் செய்யும் காட்சியைக் கண்டதையும் எங்களிடம் சொல்லியிருந்தார்.

xxxx

இதோ சுவாமி சாந்தானந்தாவின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு

பிறந்த இடம் – மதுரை; தந்தை – அந்தணர் ராமசாமி;

குடும்பத்த்தில் பத்தாவது குழந்தை. அவர் பிறப்பதற்கு முன்னரே மதுரை மீனாட்சி அருள்பெற்ற மாயாண்டி சுவாமிகள், பிறக்கப்போகும் குழந்தை அருள்பொங்கும் முகம் கொண்ட சந்நியாசி ஆவார் என்று அருள்வாக்கு சொன்னார்  பிறந்த ஞானக் குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர்கள்.

பாலகனை மீண்டும் சந்தித்தார் மாயாண்டி சுவாமிகள்; அருட்கல்வி கற்கவே அவர் பிறந்தார் என்று சொன்னார். பெற்றோரும், சுப்பிரமணியனை காரைக்குடி நாகநாதபுரம் வேத பாட சாலையில் சேர்த்தனர் .

வேதக்  கல்வி முடிந்தது  அப்போது நாட்டில் சுதந்திர வேட்கை எங்கும்  ஜொலித்தது. சுப்பிரமணியமும் சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் . சிறையில் தவம் செய்யவே அது தவச்  சாலையாக மாறியது.

விடுதலையான பின்னர் மீண்டும் மதுரை மீனாட்சியிடம் அடைக்கலம் புகுந்தார்; அங்கே காத்திருந்த மாயாண்டி சுவாமிகள் புவனேச்வரி மந்திரத்தை  உபதேசம் செய்தார்.

குற்றால மலைக் காடுகள், திருப்பதி, பழநி , கொல்லிமலைக்   காடுகளில் தவம் செய்தார்; பலர் இவரை பைத்தியம், பிள்ளை பிடிப்பவன் என்று கருதி சொல்லாலும், கல்லாலும் அடித்தனர் .சுப்பிரமணியம் வட திசை நோக்கி பயணமானார்.பத்ரி, கேதார்நாத், நேபாளம் வரை சென்று, சிவானந்தாஸ்ரமத்திலும் கைங்கர்யம் செய்தார்.

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் தவம் செய்தபோது ஒரு அவதூத சாமியார் தோன்றி என்னிடம் வா என்று சொன்னார். ஆனால் முகம் தெரியாது குரல் மட்டும் கேட்கவே, அவரைக் கண்டுபிடிக்க, நாடு முழுதும் அலைந்தார்.

குஜராத்திலுள்ள கிர்நார் மலையில் தத்தாத்ரேய பாதுகா பீடத்துக்குச்  சென்றபோது, சேந்தமங்கலம் அவதூத சுவாமிகளிடம் போ  என்ற கட்டளை பிறந்தது..

சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் மலைப்பகுதியில் தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்த ஸ்ரீ ஸ்வயம் பிரகாச  பிரும்மேந்திர ஸரஸ்வத் அவதூத சுவாமிகளை சுப்பிரமணியன் தரிசிக்கவே, அவர் சாந்தானந்தா என்ற நாமகரணத்துடன் சந்நியாசம் கொடுத்தார் குருவின் கட்டளையை ஏற்று புதுக்கோட்டையில் சிதிலமடைந்த ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தை புதுப்பித்து  1956-ல் கும்பாபிஷேகமும் நடைபெறச் செய்தார்.

சேலம் – ஆத்தூர் சாலையில் உடையாபட்டி கிராமத்தின் அருகில் மலை முகட்டிற்குச் சென்றபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பினால் , அந்த இடத்தின் புனிதத்தை உணர்ந்து அங்கே ஸ்கந்தாஸ்ரமம் அமைத்தார் . 1967ல் கும்பாபிஷேகம் நடந்தது.

ஸ்ரீமத் ஸ்வாமிகள் 27.05.2002 திங்கட் கிழமை வைகாசி மாதம் ப்ரதமை திதி அன்று சேலம் உடையாப்பட்டி ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீஅஷ்டாதசபுஜ மஹா லக்ஷ்மி துர்கை சந்நிதியில் விதேஹ முக்தி அடைந்தார்.

Xxx

சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவில் 1999ம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது  சுமார் 20 சந்நிதிகள் உள்ளன..2022 ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது

இது சென்னை தாம்பரம் பகுதியில் மகாலெட்சுமி நகரில் கம்பர் தெருவிலிருக்கிறது. இங்கே நித்திய ஹோமமும் நடைபெறுகிறது. சுவாமிகளின் சிலை, மகா மேரு, புவனேஸ்வரி மாதா  உள்பட அனைத்து தெய்வங்களையும் காண வசதியாக 20 சந்நிதிகள் உள்ளன.

கோவில் இருப்பிடம்

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்

எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073

போன் 22290134; 22293388

xxx

Also read my article:

சேலையூருக்கு வாருங்கள்; ஒரே கல்லில் 20 …

tamilandvedas.com

https://tamilandvedas.com › சே…

2 days ago — சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம் பகுதியில் சேலையூர் …

–subham—

கந்தாஸ்ரமம், ஸ்கந்தாஸ்ரமம், சேலையூர் , சேந்தமங்கலம், புதுக்கோட்டை, சாந்தானந்தா, சுவாமிகள்,  மாயாண்டி, அலிப்பூர் சிறை , தத்தாத்ரேயர்

ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதை! (Post No.11,880)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,880

Date uploaded in London –   8 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொன்னொளிர் பாரதம்!,,

ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதை!

ச.நாகராஜன்

இந்தியாவின் நெசவுத் தொழில் புகழ் பெற்ற ஒன்று என்பதை உலகம் நன்கு அறியும்.

டாக்கா மஸ்லின் என்பதைக் கேள்விப் படாதோர் இருக்க முடியாது.

இந்த நெசவுத் தொழிலில் தேர்ந்தவர்கள் இந்தியர்கள் என்பதையும் அவர்களை ஒரு நாளும் எந்த தேசத்தவராலும் வெல்ல முடியாது என்பதையும் அறிந்த ஆங்கிலேயர் பொறாமையால் கொதித்தனர்.

இதற்குக் காரணம் அவர்களின் கை திறமையே என்பதைக் கண்ட அவர்கள் அனைத்து நெசவாளர்களின் கைகளில் உள்ள கட்டை விரல்களை வெட்டினர்.

அந்தத் தொழில் நசித்தது.

பாவிகள் சந்தோஷப்பட்டனர்.

இப்போது ஒரு பட்டுக் கைக்குட்டையின் கதையைப் பார்ப்போம்.

இது நிஜமாக நடந்தது.

1915ஆம் ஆண்டு வங்காள லெஜிஸ்டேடிவ் கவுன்சிலில் சுரேந்திரநாத் பானர்ஜியின் தீர்மானத்தை வரவேற்று திருவாளர் பீட்ஸன் பெல் (Mr Beatson Bell, in the Bengal Legislative Council) பேசுகையில் நிஜமாக நடந்த இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.

அதையொட்டி அதை வரவேற்ற தனது பேச்சில் இந்த சுவாரஸியமான சம்பவத்தை பீட்ஸன் குறிப்பிட்டார்.

லார்டு கெமிகல் (Lord Chemichael) என்ற ஆங்கில துரையும் அவரது தந்தையாரும் எடின்பரோவில் இருந்த ஒரு கடைக்குச் சென்றனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளில் இந்திய பட்டுக் கைக்குட்டை ஒன்று அவர்களைக் கவர்ந்தது. அதை வாங்கினார் கெமிகல்.

பின்னர் அவர் மதராஸ் கவர்னராக மதராஸுக்கு வந்தார்.

வந்தவுடன் சென்னையில் உள்ள அனைத்து வியாபாரிகளிடம் தனது மாதிரி கைக்குட்டையைக் காண்பித்து அது போன்ற கைக்குட்டை வேண்டுமென்றார். சென்னை வியாபாரிகள் கை விரித்தனர்.

அது போன்ற கைக்குட்டைகள் வங்காளத்தில் தான் தயாரிக்கப்படுவதாகவும் அங்கே சென்றால் தான் அதை வாங்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

லார்டு கெமிகல் (Lord Chemichael) வங்காளத்தின் முதல் கவர்னராக ஆனார். வந்து பதவியேற்றார். பதவியேற்றவுடன் தன் மாதிரி கைக்குட்டையை அங்குள்ள வியாபாரிகளிடம் அனுப்பி அது போன்ற கைக்குட்டை வேண்டுமென்றார்.

அவர்கள் அதை நன்கு பார்த்து விட்டு அது ஒருவேளை பம்பாயில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றனர்.

பம்பாயில் அது பற்றிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

பம்பாய் வியாபாரிகள் அது பர்மாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

லார்டு கெமிகல் விடவில்லை. பர்மாவில் விசாரிக்கத் தொடங்கினார்.

பர்மா வணிகர்கள் அது ஜப்பானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற தங்கள் கருத்தை முன் வைத்தனர்.

லார்ட் கெமிகல் உடனே ஜப்பானின் டிபார்ட்மெண்ட் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸைத் தொடர்பு கொண்டார்.

பல மாதங்கள் கழிந்த பின்னர் ஜப்பானிலிருந்து பதில் வந்தது.

அது தென் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பதில்

கெமிகல் விடவில்லை.

பிரான்ஸில் தன் தேடுதலைத் தொடர்ந்தார்.

ஆனால் பிரான்ஸிலிருந்து பதிலே வரவில்லை.

என்ன செய்வதென்று யோசித்த அவர் தான் வாங்கிய எடின்பரோ கடையிலேயே அந்த கைக்குட்டையைப் பற்றி விசாரித்தார்.

நிஜமாக அவர்கள் அதை எங்கிருந்து பெற்றனர் என்பதைச் சொல்ல வேண்டும் என்று விசேஷ வேண்டுகோளை விடுத்தார்.

பதில் வந்தது.

என்ன ஆச்சரியம்? அது வங்காளத்தில் முர்ஷிபாத்தில் வாங்கப்பட்டதாம்.

முர்ஷிபாத்தில் அந்தக் கைக்குட்டைகளைப் பார்த்தவுடன் கெமிகல் ஆனந்தக் கண்ணீர் விட்டாராம்.

இதை தனது உரையில் சொன்னார் மிஸர் பீட்ஸன் பெல்.

இந்திய பட்டுக் கைக்குட்டைகளின் நேர்த்தியும் வடிவமைப்பும் கைத்திறனும் ஒப்பற்றது என்பதை உலகம் ஒப்புக் கொண்டது அன்றே!

இன்றும் கூட காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகளுக்கு உலகெங்கும் கிராக்கி இருப்பது கண்கூடு.

எதிலும் சோடையில்லை இந்தியர்கள் – அன்றும், இன்றும்!

***

நன்றி & ஆதாரம் : கல்கத்தா வார இதழ் ட்ரூத்

Thanks and Source

Truth Kolkata Weekly Volume 76 No 40 dated 16-1-2009

Reprinted from its old issue  Volume 4, No 36 dated 8-1-1937

Death Sentence to Naked Muslim Saints (Post No.11,879)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,879

Date uploaded in London – –  7 APRIL 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Two Muslim saints were executed by Muslim fanatics several hundred years ago. Aurangzeb was like a rabid dog. He executed great Hindu and Sikh saints. This is a story about a Sufi Muslim saint. His name was Sarmad.

He was a spiritual descendant of Mansur. Khalifa of Baghdad executed Mansur in 920 CE.  The reason for this killing is that Mansur was going about the streets saying An- al – Haq (I am God= Aham Brahma Asmi in Upanishads).

Sarmad was his follower. After wandering about in search of God, in many countries of Asia, he came to Delhi in the days of Shahjahan and Aurangzeb. He was a Sufi saint and went about in the streets naked. God intoxicated he did not care whether he wore anything or not, shouting An -al- Haq like Mansur, from time to time.

Aurangzeb ordered him to be beheaded (circa 1690 CE). He went to his martyrdom with a sad smile of compassion on his face for those who ‘knowing no better’, slew him and song of triumph over Death on his lips, for instruction of future generations:

Long years have passed

since Mansur gave the world

his message ; and its holy influence

grows faint; I must revive it now, and give

fresh power to it with the help of these-

the headman’s binding ropes and block of wood!

Death gives a larger life to Sons of God

Xxx

Sarmad addressed the following quatrain to Aurangzeb, when the latter ordered him to death for going about nude in the streets of Delhi:

He who did place the dead weight of a crown

With kingship worries on thy sinful head

He gave to me the wealth of Poverty

Self-chosen free from all the cares of Wealth

He told the sinful ones to hide their shame

In many folds of clothing; but to those

Who have not sinned, He gave the beauteous dress

Of babies – Innocence of Nakedness.

Source book:-Essential Unity of All Religions, Bhagavan Das, Bharatiya Vidhya Bhavan, 1932, (seventh edition 1990)

—subham—

Naked, Muslim saint, Sufi, Mansur, Sarmad, Aurangzeb, execution, beheading

நிர்வாண முஸ்லீம் சாமியார்களுக்கு மரண தண்டனை (Post No.11,878)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,878

Date uploaded in London – –  7 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இரண்டு முஸ்லீம் சாமியார்களுக்கு முஸ்லீம் வெறியர்கள் மரண தண் டனை கொடுத்துக் கொன்றுவிட்டனர். இவர்களில் ஒருவர் சமாதி டில்லி யில் உள்ளது. இப்போதும் சூஃபி(Sufi)  மத முஸ்லீம்கள் அவரை வணங்கி வருகின்றனர் .

மன்சூர் (Mansur)  என்பவர் , இராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் 1000 ஆண்டுகாலுக்கு முன்னர் வசித்தார் .இவர் நானே கடவுள் (உபநிஷத்தில் உள்ள அஹம்  பிரம்மாஸ்மி) ” அன் – அல் – ஹக் என்று சொல்லிக்கொண்டு தெருக்களில் வலம் வருவார். இது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று சொல்லி காலிபா, இவரைப் பிடித்து கி..பி. 920-ல் பாக்தாத் நகரில் சிரச் சேதம் செய்தான் 

இந்தியாவை ஆண்ட மொகலாய கொடுங்கோலர்களில் பலர் செக்ஸ் பைத்தியங்கள்; ஷாஜஹான் உள்பட எல்லோரும் ஏராளமான மனைவிகளை மணந்தவர்கள் ; அவர்களில்  பெரும்பாலானோர் தம்பி அல்லது அப்பனைக் கொன்ற கொலைகாரர்கள் . இதில் மிக மோசமான பேர்வழி அவுரங்க சீப். அவன் தனது உறவினர்களைக் கொன்றதோடு ஏராளமான இந்துக்களையும் சீக்கியர்களையும்  கொன்றவன். மத வெறியின் உச்சாணிக் கொம்பு . வாழ்க்கையில் இசை, நடனம் உள்பட எதுவமே பிடிக்காதவன். அவன், சர்மத்(Sarmad)   என்ற சாமியாருக்கு மரண தண்டனை விதித்தான்.

. இராக் நாட்டின் பாக்த்தாத்தில் மன்சூர் மரணதண்டனையை ஏற்று  இறந்தாலும் அவரது சூஃபி முஸ்லீம் மதக் கொளகைகள் இன்றுவரை உள்ளன. இவர்கள் முஸ்லீம்களானாலும் சித்தர்கள் போன்றவர்கள். கோவில்களையும் மசூதிகளையும்  விட , சடங்குகளை விட , ஆன்மீக தாகமே அவசியம் என்பவர்கள்.

இவர்களில் ஒருவர் சர்மத் (Sarmad)  . அவர் ஆசியாவின் பல நாடுகளில் ஆன்மீக வேட்கைகைக்காக அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் டில்லி நகரத்துக்கு வந்து சேர்ந்தார்..இந்து மத அவதூத (நிர்வாண) சன்யாசிகளைப் போல தில்லி நகரத்  தெருக்களில் ஆடையின்றித்  திரிவார் ; அதாவது உடலில் ஆடை இருக்கிறதாயில்லையா என்று அறியாத அளவுக்கு பக்தி பைத்தியம் மிக்கவர். அத்தோடு அன் – அல் – ஹக் (நானே பிரம்மம்) என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார். மதவெறி பிடித்த அவுரங்க சீப் இவரைப் பிடித்து வரக்  கட்டளையிட்டான் . முஸ்லீகள் இறைவனைப் பற்றிச் சொல்லும் கலீமா வைச் சொல்லக் சொன்னான் மன்னன்.. ஆனால் அவரோ கடவுள் என்ற அராபியமொழிச் சொல்லைச் சொன்ன அடுத்த வினாடியில் நிறுத்திவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு அவனைத்தானே தேடிக்கொண்டு இருக்கிறேன் (இன்னும் காணவில்லை) என்றார். இவனை சிரச்  சேதம் செய்யுங்கள் என்றான் அவுரங்க சீப்.

சாமியார் தலை நிலத்தில் உருண்ட து (circa 1690 CE). இது கி.பி (பொ .ஆ ) 1690 ல் நடந்தது . சாமியார் முகத்திலோ சாந்தமும் புன்னகையும் தவழ்ந்தது.

பாட்டுப் பாடிய வண்ணமே தியாகி ஆனார் சர்மத் (Sarmad. )

Xxxx

ஸர்மத் பாடியது என்ன?

மன்சூர் காலமாகி நீண்ட நெடுங்காலம் உருண்டோடிவிட்டது அவரது கொள்கைகளும் செல்வாக்கும் ஒளி மங்கிப்போய்விட்டன. அதை உயிர்ப்பித்து என் கடமை அதற்குப் புத்துயிர் ஊட்டுவேன் எனது உயிர்த்தியாகத்தின் மூலம் அதைச் செய்வேன். இறப்பு என்பது பெரிய உலகத்துக்கான வாசல் .

மரணத்தை தண்டனை வித்தித்த அவுரங்க சீப் குறித்தும் ஒரு செய்யுள் செய்தார் :-

மகுடம் தாங்கிய மண்டை,

பாவத்தால் கவலைப்படுகிறது

ஆனால் எனக்கோ வறுமை எனும்

செல்வம் கிடைத்திருக்கிறது;

அதாவது செல்வத்தினால் வரும்

 துயரம் இல்லாத ‘வறுமை’

அவனோ பாவம் என்னும் உடலை மறைக்க

பல மடிப்புள்ள ஆடை அணிகிறான் ;

இறைவனோ, பாவம் செய்யாதோருக்கு

குழந்தை அணியும் ஆடையைத் தருகிறான்

அதுதான் நிர்வாணம் என்னும் சூதுவாதற்ற ,

 கள்ளம் கபடமற்ற மனம் (தான் என் ஆடை)

இன்றும் உலகெங்கிலும் உள்ள சூஃபி மத முஸ்லீம்கள் இந்தப் புனிதர்களைப் போற்றி  அவர்தம் கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றனர்.

கொடுங்கோலர்கள், புனித மக்களின் உடலைத்தான் அழிக்கலாம் ; அவர்களுடைய புகழ் ஒளியை அழிக்க முடியாது .

–subham— 

Tags- சர்மத் , மன்சூர், மரண தண்டனை, அவுரங்கசீப், சிரச்சேதம், சூஃபி , நானே கடவுள், நிர்வாண ,சாமியார்கள்

வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?! (Post No11,877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,877

Date uploaded in London –   7 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83

வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் மன்னராட்சியின் போது அனைத்து நாட்டதிகாரிகளும் சிலம்ப வித்தையில் தேர்ந்திருப்பர். நாட்டுப்படை ஆக்கியும் வைத்திருப்பர்.

இப்படிப்பட்ட வீரர் தம் குடும்பங்களில் கொங்கு மண்டலத்தில் கட்டி முதலி என்ற குடும்பம் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக இருந்தது.

இவர்கள் தாரமங்கலம், அமரகுந்தி நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர்.

தொண்டை மண்டல வேளாளர் இளமன் கட்டி கட்டியதால் இளமீசுரர் கோவில் என ஒரு சிவாலயம் தாரமங்கலத்தில் உள்ளது.

இந்தக் கோவிலப் பற்றிய பல சாசனங்கள் உள்ளன.

ஔசல ராமநாத ராஜாவின் அரசியல் ஆண்டு 14-20 (கி.பி. 1268;1274) சாசனங்களும் இரண்டாவது ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1281, 1289,1290,1302) ஆண்டுகளின் சாசனங்களும் இளமீசுரர் கோவிலில் இருப்பதால் சாசன காலங்களுக்கு முற்காலத்திலேயே கட்டி முதலி சந்ததியினர் சிவாலயத் திருப்பணி செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

தார மங்கலம் கைலாசநாதர் கோவிலி மும்முடிக்கட்டி முதலியாலும் சீயால கட்டி முதலியாலும் முறையே செய்யப்பட்டு வணங்கா முடிக் கட்டி முதலியால் முடிவு பெற்றது.

இந்த வணங்காமுடிக் கட்டி முதலி பெரும் பெயரும் புகழும் பெற்றவன்.

அந்தக் காலத்தில் மேல்கரைப்பூந்துறை நாட்டுக்குத் தலைவனாக வாரணவாசி என்பவன் திகழ்ந்தான். அவன் இப்படிப்பட்ட பெரும் கட்டி முதலியை வென்று பெரும் புகழ் பெற்றான்.

இவனைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 83ஆம் பாடலில் காணலாம்.

வாரண வாகன நோவென மன்னர் மனமதிக்குங்

காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை

பூரண வாகினி யுஞ்சிரந் தாழப் பொருது வென்ற

வாரண வாசி வளர்பூந் துறை கொங்கு  மண்டலமே

           கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83

பாடலின் பொருள் :

வேந்தர்கள் அனைவரும் , இவன் தேவேந்திரனோ (வாரணவாகனன்) என மதிக்கும் படி காரணம் பெற்றவனான வணங்கா முடிக் கட்டி முதலியும், தகுதி வாய்ந்த அவனது முழுப் படையையும் தலை கவிழுமாறு போர் செய்து  வென்ற வாரணவாசி என்பவன் வசித்துள்ள பூந்துறையும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம்.

கட்டிமுதலிகள் சேலம் மாவட்டம், கோவை மாவட்டங்களில் பல கோவில்கள், குளங்கள், ஏரிகள், கோட்டைகள் கட்டியுள்ளனர்.

அடியார் மீது பக்தி, தெய்வ பக்தி, கல்விப் பெருக்குடன் திகழ்ந்த இவர்கள் பொதுவகை உபகாரங்களையும் நல்லறங்களை செய்து புகழ் கொண்டவராவர்.

இவர்களில் பெண்பாலாரும் இத்துறையில் தலை சிறந்து விளங்கினர் என்பதை பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் சாசனம் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

திருச்செங்கோட்டு திருப்பணி மாலை பாடல் எண் 248 முதல் 262 முடிய உள்ள பாடல்கள் திருச்செங்கோட்டில் இவர்கள் செய்த தருமங்களை விளக்கிக் கூருகின்றன.

வாரணவாசியைப் புகழ வந்த பாடலினால் கட்டி முதலி பற்றிப் பல விவரங்களை அறிய முடிகிறது.

வாரணவாசி கொங்குமண்டல சதகம் பாடல் எண் 56 விளக்கும் பூந்துறைக் குப்பிச்சியின் வழித்தோன்றலாவான்.

கொங்குமண்டலத்தைச் சார்ந்தோர் இப்படிப்பட்ட கட்டிமுதலி, மன்றாடியார் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்தல் இன்றியமையாதது.

***

Stories of Two Donkeys blessed by Lord Shiva (Post No.11,876)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,876

Date uploaded in London – –  6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Tamil Nadu has many temples associated with animals, birds, insects and plants. Most of them are Saivite (Shiva temples).

There is an interesting story  about a donkey who prayed to Lord Shiva and attained liberation. It happened in Karaveeram near Tiruvarur. The temple is at least 1400 years old  because it was sung by Tiru Gnana Sambandar, contemporary of Mahedra Pallava and saint Appar.

The donkey near the temple was praying for long to see Lord Shiva. But Shiva did not answer its prayer. At last, it decided to fall in the sea near Nagore and just before jumping into sea,it  heard a voice. When it stopped Lord Shiva appeared before and gave it Mokasha.

Old Dharmapuram Thevaram edition associated this shrine with donkey. It says Karaveeram means Donkey and the God here is called Karaveeranathar.

Other names are Brahmapureeswar.

The local purana associated this shrine with a plant as well. Gautama Rishi who was given the task of looking after the temple asked Lord Shiva for a boon. He requested that he should not be visible to anyone and so Lord Shiva changed him to the Sthala Vrksha, i.e. he sacred plant of the shrine.  There are two interpretations for the plant 1. Arali and 2.Alari

Even now women water the plant on New moon days so that they would get married soon.

Whatever the belief and customs, it shows that Hindus revere a plant or an insect or an un clean animal like  donkey.

If one goes to Ramanashram in Tiruvannamalai, one my see several Samadhis (graves) for animals from crow to a cow. If one goes to Tiru Kazuku Kundram near Chengalpattu one may see the statues of two eagles that visited the temple for hundreds of years to eat Sweet Rice Pongal. If one goes to Thirucherai Stone Garuda Temple, one can see the burial of sacred eagles. It is needless to say about the Samadhis or statues of sacred elephants in Guruvayur and monkeys in several places.

Xxx

Here is another story about an ass that went to Shiva loka:-

Ass that carried Rudraksha (Rosary beads)

There was once in Kīkaṭa (now Bihar state)  a merchant who had an ass to carry his merchandise. Once the merchant was returning home from Bhadrācala with his ass loaded with bundles of costly Rudrākṣas. The old ass fell down dead on the way, the weight of the Rudrākṣa bundles having been too much for it, and immediately it assumed the form of Deva and went to Kailāsa. Even if a man does not know what he is carrying, if he carries sacred things he will certainly attain salvation, like the ass that attained salvation in this case. (Devī Bhāgavata, 11th Skandha).

source- Wisdom Library.com

All these stories show the respect given to animal kingdom by the Hindus.

— Subham—

Tags- Karaveeram, donkey, Nagore, Ass, Kirata, Rudraksha bundle, Devi Bhagavata

சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள் (Post No.11875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,875

Date uploaded in London – –  6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கரவீரம், பத்ராசலம் ஆகிய இரண்டு தலங்களை சேர்ந்த 2 கழுதைகள் எப்படி சிவ லோகம் சென்றன என்ற இரண்டு கதைகளைக் காண்போம்.

கரவீரம் என்னும் தலம் திருவாரூருக்கு அருகில் இருக்கிறது. இது பாடல் பெற்ற கோவில். மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தர் பாடியதால், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது.

பழையா தருமபுர ஆதீன தேவாரப் புஸ்தகம், கழுதை வழிபட்டதால் இதற்கு கரவீரம் என்றே பெயர் என்று எழுதியுள்ளது. ஸம்ஸ்க்ருதத்த்தில் கரவீரம் என்றால் கழுதை . 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த  ஒரிஸ்ஸா சமண மத மன்னன் காரவேலன் பெயர் கழுதை என்று கூட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கிறது இல்லை கரவீரம் என்பது தாவரத்தின் பெயர் என்று கதைப்போரும் உளர் .

மும்மூர்த்திகளில் மிகவும் கருணை உடையவர் சிவபெருமான். நமக்குத் தெரிந்து விஷ்ணு காப்பாற்றிய ஒரே பிராணி கஜேந்திரன் என்னும் யானை. ஆனால் கருணைகடலான சிவனோ ஊருக்கு ஊர் அணில், குரங்கு, சிலந்தி, பன்றி, பசு, பாம்பு, யானை என்று, எறும்பு முதல் பல பிராணிகளையும் காப்பாற்றியதை தமிழ் நாட்டின் ஊர்ப்பெயர்களே காட்டா நிற்கின்றன. திரு எறும்பியூர்,  புள்ளிருக்கு வேலூர், குரங்கணில் முட்டம், கரிவலம் வந்த நல்லூர், , பன்றிமலை என்று சுமார் 50 ஊர்ப்பெயர்களை அடுக்கிவிடலாம்.

போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தாவரங்களும் சிவபெருமான் அருள் பெற்றதையும், சில மரங்களை சிவ பெருமான் சுவீகார பிள்ளைகளாக ஏற்றத்தையும் எனது பிளாக்கில் படித்திருக்கிறீர்கள். அப்படி ஒரு கதை கரவீரத்திலும் உண்டு. அங்கே சிவலிங்கத்தை பூஜித்த கெளதம ரிஷி,  தான் உருவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்ட, சிவனும் அவரை அரளி/ அலரி ஆக மாற்ற இன்றும் அமாவாசையில் பெண்கள் கரவீரம் கோவிலில், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி, தாவரத்துக்கு நீர் வார்க்கின்றனர்.

ஞான சம்பந்தர் இந்த ஊரில் night halt நைட் ஹால்ட் செய்தார் . அதாவது இரவு ஒய்வு எடுத்தார். அதை அப்படியே பாலோ follow / பின்பற்றும் நம் மக்கள் இங்கே night halt நைட் ஹால்ட் செய்து வழிபடுகின்றனர்.

xxxx

அது சரி கரவீரம்/ கழுதையின் கதை என்ன ?

இந்த ஊரில் ஒரு கழுதைக்கு சிவ பக்தி ஜாஸ்தி. கோவிலை விட்டு அகலவில்லை. ஆனால் சிவனோ மிகவும் delay டிலே/ தாமதம் செய்தார். அவர் தோன்றாமல் இருந்ததால், துவண்டுபோன அக்கழுதை ஏமாற்ற உணர்வில் நாகூரில் கடலில் விழுந்து உயிர்த்தியாகம் செய்வோம் என்று முடிவு செய்து சென்றது. திடீரென ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. சிவன் காட்சி தந்து அதனை ஆட்கொண்டார்.

திருவண்ணாமலை ரமண ஆஸ்ரமத்துக்குச் சென்று காக்கைக்கும் பசுவுக்கும் மானுக்கும் உள்ள சமாதிகளைப் பார்ப்போருக்கு பிராணிகளிலும் புனிதர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுவர். நிறைய பேர் சாபத்தால் மிருகங்களாய்ப் பிறந்து பின்னர் முக்தி அடைந்ததை நாம் புராணங்களில் படிக்கிறோம். மனு ஸ்ம்ருதியும் எந்தந்த பாபம் செயதோர் எந்தந்த அனிமல் animal  / பிராணியாகப் பிறப்பர் என்ற பட்டியலைக் கொடுத்து இருக்கிறார்.

மனு ஸ்ம்ருதி பற்றி நான் எழுதிய 4 நூல்களில் (2  தமிழ்+ 2 ஆங்கிலம்) இந்த அதிசய விஷயங்கள் உள .

ஆக கரவீரம் / கதை 1400 ஆண்டுகளுக்கு மேல் நம்மிடம் இருக்கிறது.

சம்பந்தர் பாடிய பதிகத்தில் இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலிலும் கஷ்டம் போகும் என்பதை அழகான அழகான தமிழ்ச் சொற்களால் பாடுகிறார், வினை நீங்கும், துயர் அகலும், அல்லல் போகும், இடர் அழியும் என்று கஷ்டம் என்பதற்குப் பல சொற்களை பிரயோகிப்பதால் கழுதையும் மோட்சம் அடைந்ததை உறுதி செய்யமுடிகிறது .

இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தக் கழுதை நாமும்தான் என்றும் விளங்கும். நம்மில் எத்தனை பேர் கழுதையாக வாழ்கிறோம். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற பழமொழியை மாற்றி கழுதை கெட்டால் டாஸ்மார்க் கடை, சினிமா கொட்டகை, உணவு விடுதி, அல்லது பேஸ் புக் , வாட்ஸ் அப் , கம்ப்யூட்டர் game கேம், சூதாட்டம் என்று நிற்கிறோம் . நாம்தான் கரவீரம்!!!

xxxx

கரவீரம் தேவாரம் : முதல்-திருமுறை- பதிகம் எண் 58

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட

மறையும் மாமணி போற்கண்டங்

கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்

இறைய வன்கழல் ஏத்தவே.

Xxx

நண்ணு வார்வினை நாசமே.

Xxx

தொழவல் லார்க்கில்லை துக்கமே.

Xxx

தொண்டர் மேற்றுயர் தூரமே.

Xxx

கனல வனுறை கின்ற கரவீரம்

எனவல் லார்க்கிட ரில்லையே.

Xxx

உள்ளத் தான்வினை ஓயுமே.

Xxx

தடிய வர்க்கில்லை யல்லலே.

Xxx

பாடு வார்க்கில்லை பாவமே.

Xxx

இரண்டாவது கழுதைக் கதை : தேவி பாகவதம்

தேவி பாகவதம்

ரிக் வேதத்தில் இந்தியாவின் பீஹார் மாநிலத்தை கீகட நாடு என்று விசுவாமித்திரர் பாடுகிறார். அந்த கீகட நாட்டு வணிகர் பற்றி தேவி பாகவதம் பதினோராவது ஸ்காந்தத்தில் ஒரு கதை வருகிறது ஒரு வணிகர், நிறைய ருத்திராட்ச மூட்டைகளை ஏற்றி ஒரு கழுதை மேல் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

பத்ராசலத்திலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கழுதைக்கு பாரம் தாங்கவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்கியது . வீடு நோக்கி வந்தபோது தொபுக் கட்டீர் என்று கீழே விழுந்து செத்தது. அடுத்த நிமிடமே அது தேவ சொரூபத்தை அடைந்து கைலாசம் சென்றது.

xxxx

இதிலுள்ள கருத்து

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல ருத்திராட்சம் போன்ற சிவ பூஜைக்குரிய பொருளைச் சேர்ந்து சிவனடியார்க்கு உதவினால் கழுதையானாலும் மோட்சம் பெறலாம். அதாவது கழுதை போல வாழ்வு நடத்துவோனும் ஏதாவது சிவ கைங்கர்யம் செய்தால் அவனுக்கு முக்தி உண்டு.

இதனால்தான் வள்ளுவனும் எனைத்தானும் நல்லவை கேட்க என்று குறள் பாடினான். கொஞ்சமாவது நல்லது கேளுங்கப்பா என்று வள்ளுவன் கெஞ்சுகிறான்

இது போன்ற கழுதைக் கதைகளைக் கேட்டால் கூட, படித்தால் கூட, நாமும் கழுதைக் குணத்திலிருந்து விடுபடுவோம்.

இதில் மற்றும் ஒரு கருத்து தொனிக்கிறது. இந்துக்கள் எல்லாப் பிரா ணிகளுக்கும் மரியாதையும் மதிப்பும் கொடுக்கின்றனர் பண்டிதாஹா சமதர்ரசினஹ என்ற கீதை ஸ்லோகத்தில் (5-18), ஞானிகளுக்கு நாயும், பசுவும் , வேதம் படித்த பிராமணனும் ஒன்றே– என்று கண்ணன் செப்புகிறான். 

-subham— 

Tags- கழுதை , சிவ பெருமான், கரவீரம், சம்பந்தர் தேவாரம்,

கழுதைக் கதைகள் , கீகட தேசம், பத்ராசலம், தேவி பாகவதம், ருத்திராட்சம்,