குணப்படுத்த முடியாத நோயாளிகளைக் கொல்லலாம்: காந்திஜி (Post No.12,065)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,065

Date uploaded in London – –  31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆஸ்ரமத்திலுள்ள கன்றுக்குட்டி யைக்  குணப்படுத்தவே முடியாது என்று டாக்டர்கள் கை விரித்தனர். அதற்கு விஷ ஊசி  போட்டுக் கொல்லுங்கள் என்றார் காந்திஜி.  அதுவும் இரண்டே நிமிடத்தில் செத்தது. உடனே ஆமதாபாத்திலும்,  நாடு முழுவதிலும் அஹிம்சா வாதிகள் போர்க்கொடி தூக்கினர். காந்திஜியை வசை மாரி பெய்து கடித மழை பெய்தனர். வச வுகளைக் கண்ட காந்திஜி நவஜீவன்  என்ற தன்னுடைய பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதினார் . அதன் சுருக்கம் பின்வருமாறு (தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

xxxx

ஒரு கவிஞர் பாடினார்

அன்பின் பாதை ஒரு அக்கினிப் பரீட்சை

கோழைகள் அதிலிருந்து ஓடிவிடுவர்

அஹிம்சை என்பதும் அன்புப் பாதை. அதை ஒருவர் தனிக்கத்தான் கடக்கவேண்டும் .

ஆனால் ஒருவர் ஒரு நியாயமான கேள்வியை என்னிடம் கேட்கலாம். கன்றுக்குட்டிக்கு பின்பற்றிய நீதியை மனிதர்களுக்கும் பின்பற்றுவீர்களா? ஐயா காந்திஜியே, உம்ம விஷயத்தில நீ இதைக் கடைப்பிடிப்பியா?

இதோ என் பதில்– ஆமாம்; அப்படித்தான் செய்வேன் . அதே விதி, இந்த இரண்டு கேள்விக்கும் பொருந்தும்.

யதா பிண்டேததா பிரஹ்மாண்டே  (பிண்டத்தில் இருப்பது பிரஹ்மாண்டத்திலும் இருக்கிறது ); இதற்கு  விதிவிலக்கு என்பதே இல்லை ; கன்றுக்குட்டியைக் கொன்ற முறை தவறானது; வன்முறை/ ஹிம்சை மிக்கது .

ஆனால் நிஜ வாழ்வில் நம்முடைய சொந்த பந்தங்கள் நோய்வாய்ப்பட்டால் இந்த விதியைப் பின்பற்றி  மரணத்தைக் கொடுப்பதில்லை ; ஏனெனில் அவர்களுக்கு உதவி செய்ய சில வழிகள் நம்மிடம் உள்ளன. மேலும் அவர்களுக்கு சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளது.  ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் என் நண்பருக்கு நோய் வந்துவிட்டது அவருக்கு இனி என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது; அவரும் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை ; அவர் நினைவற்ற நிலையில் இருக்கிறார் ; வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . இந்த நிலையில் அவருடைய உயிரை முடித்துவைப்பதை நான் ஹிம்சை என்று கருதவில்லை.டாக்டரின் கத்தியும் கொலைகாரன் கத்தியும்

ஒரு நோயாளியிடத்தில் அவனது நோயைக் குணப்படுத்த,அறுவைச் சிகிச்சை மருத்துவர் கத்தியால் உடற்பகுதிகளை வெட்டி சிகிச்சை தருகிறார் ; இதே போல சில தருணங்களில் ஒருவர் மேலும் ஒரு படி சென்று , நோயாளியின் நலனுக்காக அவரது உயிரைத் துண்டிக்கும் தேவை ஏற்படலாம். சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம். நீங்கள் சொன்ன முதல் உதாரணம் உயிரைக் காப்பாற்ற நடந்தது; இரண்டாவதில் உயிரை எடுக்க அல்லவா செய்தீர்கள் என்று .; இதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டிலும் குறிக்கோள் ஒன்றுதான் என்பது புலப்படும் கஷ்டப்படும் ஆன்மாவை அதிலிருந்து விடுவிப்பதுதான் .ஒரு சிகிச்சையில் வலி ஏற்படுத்திய பகுதியை டாக்டர் வெட்டி எடுத்தார்  இன்னொரு சிகிச்சையில் வலியை  நிறுத்த முடியாத உயிரை நீக்கினார் அப் போது அந்த உடலுக்கு/ சவத்துக்கு இன்பமோ துன்பமோ இல்லை. இன்னும் சில சம்பவங்களையும் கற்பனை செயது பார்ப்போம். அங்கும் கொல்லாமல் விடுவதே ஹிம்சை; கொன்று தீர்ப்பதே அஹிம்சை எனப்படும் . என்னுடைய மகளின் நோக்கத்தை அறிய நேரமே இல்லாத ஓர் நொடிப்பொழுதில் அவளை ஒருவன் தாக்குகிறான் ; அவளை என்னாலும் காப்பாற்றும் நிலை இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் . அப்பொழுது (மானத்தைக் காப்பாற்ற) அவளை நான் கொன்றுவிட்டு, அந்த முரடனை என் பலத்தைக் கொண்டு சமாளிப்பேன் . இது அஹிம்சையே.

ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் , நம்முடைய அஹிம்சாவாதிகள் அஹிம்சை என்பது வணங்கப்படவேண்டிய ஒரு வஸ்து / ஒரு தாயத்து என்று கருதிக்கொண்டு  அதைப் பின்பற்றுவதில் தடைகளையே போடுகிறார்கள் .

முடிவாக ஒன்று சொல்கிறேன் கோபத்தின் காரணமாகவோசுயநலத்தின் காரணமாகவோ ஒருவருக்கு தீங்கு செய்வது , தீங்கு செய்ய விரும்புவது , எதனுடைய உயிரையும் வாங்குவது ஹிம்சை எனப்படும்; இதற்கு நேர் மாறாக , ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர், ஒருவனுடைய உடல் ரீதியிலான, ஆன்மீக ரீதியிலான நன்மையை மனதில் கொண்டு, ஒருவருடைய உயிருக்கு முடிவுகட்டினால் அது அஹிம்சை எனப்படும்.; ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே பார்த்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து,  முடிவு செய்ய வேண்டும் ; இறுதியாக ஒரு செயல் ஹிம்சையா அஹிம்சையா என்பது அதன் நோக்கத்தையே சார்ந்தது ஆகும்.

(நவஜீவன் பத்திரிகையில் மஹாத்மா காந்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

–SUBHAM—

TAGS-  காந்தி, ஹிம்சை எது, அஹிம்சை எது, நோயாளி, கொல்லலாம் , கன்று, விஷ ஊசி

Leave a comment

Leave a comment