தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி! (Post No.12,064)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,064

Date uploaded in London –   31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 2

ச.நாகராஜன்

தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி! 

இத்தாலிய கவிஞரான தாந்தே (1265-1321) அபார நினைவாற்றல் சக்தியைக் கொண்டவர். அவரது டிவைன் காமடி (Divine Comedy)  என்ற கவிதை உலகப் பிரசித்தி பெற்றது. இத்தாலிய மொழியின் தந்தை என்றும் அவர் புகழப்படுகிறார்.

ஒரு நாள் அவர் ஃப்ளோரென்ஸ் நகர் வீதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரை அணுகி, “உலகில் சுவையான உணவு எது?”

என்று கேட்டான்.

அவனைச் சரியாகக் கவனிக்காமலேயே “முட்டை தான்” என்று பதில் கூறியவாறே நடந்தார் தாந்தே.

ஒரு வருடம் கழிந்தது. அதே நபர் அதே வீதியில் கவிஞர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து, “எதனுடன்?” என்று கேட்டான்.

முந்தைய வருட சம்பவத்தைப் பற்றி தாந்தே நினைத்தாரா இல்லையா யாருக்கும் தெரியாது, ஆனால்  அவர், “உப்புடன்” என்று பதில் கூறியவாறே நடந்தார்.

விக்டர் ஹ்யூகோவின் கேள்விக் குறி?

பிரான்ஸ் நாட்டில் நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் படைப்பிற்குப் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார் அறிஞர் விக்டர் ஹ்யூகோ (1802-1835) 

அவரது எழுத்துக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி அவருக்குப் புகழைத் தந்தது.  நாடர்டேம் டீ பாரிஸ் என்ற நாவலும் லெஸ் மிஸரபிள்ஸ் என்ற அவரது நாவலும் குறிப்பிடத் தகுந்தவை. 1862இல் அவர் லெஸ் மிஸரபிள்ஸ் நாவலை பிரசுரத்திற்காக தனது வெளியீட்டாளரிடம்  அனுப்பினார். ஆனால் அது வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை.

ஆவல் உந்த ஒரு கேள்விக்குறியை இட்டு ஒரு பேப்பரை தனது பப்ளிஷரிடம் அவர் அனுப்பினார்.

உட்னேயே பதில் வந்தது ஒரு பேப்பரில் – அதில் இருந்தது ஒரு ஆச்சரியக் குறி மட்டுமே!

அபாரமான வரவேற்பு என்று புரிந்து கொண்டார் விக்டர் ஹ்யூகோ.

 பிகாஸோவின் (PABLO PICASSO) பயம்!

பாப்லோ பிகாஸோவுக்கு உயில் எழுதுவது என்றால்  பயம். தன் உயிலைத் தான் எழுதினால் உடனே தனக்கு மரணம் சம்பவிக்கும் என்று அவர் நம்பினார். ஆகவே அவர் உயில் எழுத மறுத்தார்.

1881ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அவர் பிறந்தார்.

1973 ஏப்ரல் 8ஆம் தேதி அவர் மறையும் போது அவருக்கு வயது 92.

இந்த உயில் எழுத மறுத்ததால் அவருக்கும் குடும்பத்தாருக்கும் நேர்ந்த சங்கடங்கள் பல.

அவரது விதவை மனைவியான ஜாக்குலினுக்கும் அவரது நான்கு குழந்தைகளுக்கும் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டு அது பல வருடங்கள் நீடித்தது. அவரது படைப்புகள் பற்றிய ஆராய்ச்சியில் இது கொண்டு விட அங்குமிங்குமாக சிதறிக் கிடந்த அவரது 60000 கலைப் படைப்புகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

எண்பது வருட கால உழைப்பில் உருவானவை அவை.

ஒரு சமயம் உணவு விடுதி ஒன்றில் அவர் இருந்த போது ஒரு பெண்மணி அவரை அணுகி தனது கைக்குட்டையில் எதையாவது எழுதுமாறு வேண்டினார். அதற்கு எவ்வளவு பணம் சொன்னாலும் தருவதாக உறுதி கூறினார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிகாஸோ அப்படியே செய்தார்.

“எவ்வளவு பணம்?” என்று அந்தப் பெண்மணி கேட்க பத்தாயிரம் டாலர் தாருங்கள் என்றார் பிகாஸோ.

விக்கித்துப் போன அந்தப் பெண்மணி, “அதை நீங்கள் முடிக்க ஆன நேரம் முப்பது விநாடிகள் தானே” என்று கேட்டார்.

“இல்லைஇல்லைஅதற்கு எனக்கு நாற்பது வருடங்கள் ஆயின” என்று பதில் சொன்னார் பிகாஸோ.

***

Leave a comment

Leave a comment