Strange Haldi Festival in Maharashtra (Post No.12,047)

b

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,047

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


The Haldi festival, held at Pattan Kodoli, in the district of Kolhapur in Maharshtra is organised every year in October. It is a festival of the Shepherd Community.

The festival  is celebrated to commemorate the birth anniversary of Vitthal Birdev Maharaj, who is considered to be a reincarnation of Lord Vishnu.

Birdev is also the family deity of the Dhangar, a shepherd community that resides in Maharashtra, Karnataka, Goa and Andhra Pradesh. The annual fair and festival attract thousands of devotees, where the festive mood is set with people throwing haldi or turmeric powder over Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ who sits under a Banyan tree. The baba is considered as the messenger of god, and people seek his blessings for a healthy life. He’s revered for his ability to foretell his predictions about farming, rain and future conditions of the country which is helpful to the people of the community.

The most important ceremony of this fare is the predictions by Shree Kheloba Rajabhau Waghmode, from Anjungau, a village in Solhapur District. He gives predictions whenn he gets the divine sword from the temple priest.

 Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ of the devotees, walks 17 days from his village to reach Pattan Kodoli for the festival every year. Huge umbrellas are brought in to welcome the Baba to the temple, accompanied with a procession with drums and traditional music. As soon as he enters the temple, Baba attains a trance mode that makes him jump and dance that lasts for nearly 10 minutes. The Baba then goes ahead to foretell his predictions about farming, rain and future conditions in Kannada, his trance language, which is translated by the priest. He starts his journey back after the rituals gets over.

For a week people walk towards the village with accompanied folk musicians. They are joined by acrobats, vendors and farmers. They carry a special type of umbrella.  which they spin and dance.. Baba’s predictions are like the predictions in Tamil Panchangs (almanacs). it also predicts about the weather, harvest, political situation, natural catastrphes that may happen in the new year.

Like Baba, Tamil village priests also get possesed and make preditions for the village; but in this Maharashtra village it is celebrated with a huge crowd.

Devotees offer the yellow powder to God in the village temple and take it back as Prasad. Since this area is famous for carpets made out of goats  hair, devotees offer goat hair with the yellow powder to God.

—subham—

Xxxxx Subham xxxxx

 Tags- Haldi Festival, Turmeric, Shepherd community Baba

‘ஆனந்தா’ குறுக்கெழுத்துப் போட்டி 16 ‘ஆனந்தா’க்களைக் கண்டுபிடியுங்கள் (Post.12,046)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,046

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

“னந்தா” என்ற எழுத்துக்களுக்கு முன்னுள்ள 16  சுவாமிஜிக்களைக் கண்டுபிடியுங்கள். வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வர்ணத்தில் உள்ளன உங்களுக்கு உதவி செய்ய சில துப்புத் தகவல் இதோ:

Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடர்

2.சின்மயா மிஷனின் முந்தைய  தலைவர்

3. ஒரு யோகியின் சுய சரிதை நூல் எழுதியவர்

4.அவர் ஸ்தாபித்த மிஷன் அவர் பெயரிலேயே இயங்குகிறது

8. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இந்த சுவாமிஜியை வாழ்த்தி 32 வரிகளில் பாரதியார் கவிதை படைத்தார்.

9. வட இந்தியாவில் கபீர், ரவிதாஸ் முதலியோரின் குரு

Xxxx

Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.பறக்கும் சுவாமிஜி என்று பெயர் எடுத்தவர்

4.தெய்வ நெறிக்கழகத்தை நிறுவியவர்

5.புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில் , ஸ்கந்தாஸ்ரமத்தை

நிறுவியவர்

6. திருக்கோவிலூர் தபோவன சுவாமிஜி

7. ஓடிப்போய் தீவில் வாழும் சுவாமிஜி ;போலீஸ் கேஸ்

10.மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ் நூல் எழுதி பிரபலம் அடைந்தவர்

11.சின்மயா இயக்கத்தின் தற்போதைய தலைவர்

12.தேனீ வேதபுரீ ஆஸ்ரமத்தை நிறுவியவர்

13..ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர் சீடர்

14. ஆர்ய சமாஜ நிறுவுனர் அல்லது மஞ்சக்குடி ஆஸ்ரமம் நிறுவுனர்

 1       2
         
       3 
     4   
   5  6    
        7
8     9  
         
         
   10 1112  13 14

Answers

ACROSS

1.வி வே கா , 3.ப ர ம ஹ ம் ச யோ கா ,4.சி ன் ம யா ,8.அ பே தா

9.ராமா

XXXX

DOWN

1.வி ஷ் ணு தே வா ,2.தே ஜோ ம யா ,4.சி வா ,6.ஞா னா ,7.நி த் யா

10.சு க போ தா ,5.சா ந் தா,11.ஸ் வ ரூ பா ,12.ஓ ம் கா ரா,13.பி ர ம் மா ,

14.த யா

வி 1வேகா    தே 2
ஷ்      ஜோ
ணும்ப 3
தேயோ  சி 4ன்யா
வாகாசா 5ஞா 6வா  த்
  ந்னாந்தாநி 7
8 அபேதா பாரா 9மா 
  போ ரூகாம் 
   ம்யா
  சு 10 ஸ்11ஓ 12பி 13த 14

 –SUBHAM —tags- ‘ஆனந்தா’ ,குறுக்கெழுத்துப் போட்டி

சிவாஜிக்கும் ஒரு கோவில்; 108 மஹாராஷ்டிர புனிதத்தலங்கள்- 20 (நிறைவு) -Post No.12,045

VEERA SHIVAJI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,045

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 108 புனிதத் தலங்கள் என்ற கட்டுரைத்  தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது . தமிழ் நாட்டைப் போலவே இந்த மாநிலத்திலும் ஏராளமான பிள்ளையார் கோவில்களும் அனுமார் கோவில்களும் இருக்கின்றன. இது தவிர ஹரே கிருஷ்ணா இயக்கக் கோவில்கள், குஜராத்திகள் வணங்கும் சுவாமி நாராயண் கோவில்கள் பெரிய ஊர்கள் அனைத்திலும் உள்ளன. ஆனால் நான் பழங் காலக் கோவில்களையும் முக்கியக் கோவில்களையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி மொகலாய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டிய சிவாஜிக்கும் கூடக் கோவில் இருக்கிறது. அவரை இம்மாநில மக்கள் , சிவ பெருமானின் அருள் பெற்ற பவானி தேவியின் அருள் பெற்ற ,ராஜாவாகவே கருதுகின்றனர்.

PART 20

101. கணேஷ் மந்திர், தேக்டி

நாகபுரி நகரிலுள்ள பழங்காலக் கோவில்களில் தேக்டி பிள்ளையார் கோவில் முக்கியமானதும் புகழ் பெற்றதும் ஆகும் ;  தேக்டி என்றால் குன்று. இந்தப் பிள்ளையாரும் குன்றின் மேல் அமர்ந்தவர் தான். தற்போதைய கோவில் கட்டி 250 ஆண்டுகள் ஆயிற்று . பிள்ளையாரின் தலை தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளி   ஆபரணங்கள்  அவர் உடலை அலங்கரிக்கின்றன. கவர்ச்சிமிக்க கணபதி .

102. ராம்டேக் கோவில்

நாகபுரியின் ராம்டேக் பகுதியில் ராமபிரானுக்கு கட்டப்பட்ட கோவில் இது இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ராமர் தங்கிய இடம் என்பது பக்தர்களின் கூற்று. ராமரின் சபதம் என்னும் பொருள்படும் வகையில் ராம் ‘டேக்’ என்று பெயர் இடப்பட்டது அகஸ்திய முனிவர் இங்கு இருந்தபோது அசுரர்களை ஒழிக்க ராமபிரான் சபதம் செய்த இடம் இது  

ஒரு குன்றின் மீது , கோட்டைக்குள் கோவில் அமைந்திருப்பதால் நகரத்தின் ‘கர் முர்’  ஒலிகளுக்கு அப்பால் அமைதியான சூழ்நிலையில் ராமரை தரிசிக்கலாம். இது குறைந்தது 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். 350 அடி அகல நீளமுள்ள ‘ஒம்’ சின்னத்தினால் கூடுதல் பெருமையும் உண்டு; காளிதாசரின் மேக தூத காவியத்தின் நினைவாக ‘ஓம்’ வடிவில் கட்டிடம் கட்டப்பட்டது. குரங்குகளுக்கும் குறைவில்லை . கார்கள், மலை உச்சி வரை செல்லும் . பின்னர் 60 படிகள் ஏறினால் போதும் . இந்த வட்டாரத்தில் மேலும் பல கோவில்களும் பழங்கால சின்னங்களும் உள .

103. போதரேஸ்வர் ராம் மந்திர்

நாக்பூர் நகரின் நடுவில் அமைந்த கோவில் இது.

ராஜஸ்தானிலிருந்து வந்து வியாபாரம் செய்த போதார்  குடும்பத்தினர் 1923-ம் ஆண்டில் கட்டிய கோவில்; ராமன் மற்றும் சிவன் மூர்த்திகளை தரிசிக்கலாம். ராமர், லட்சுமணர், ஹனுமான் சீதை சிலைகள் இருக்கின்றன. சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

104.ஆதாசா கணபதி கோவில்

நாகபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஆதாஸா என்னும் ஊர் உளது இந்தக் கிராமத்தில் குன்றின் மீதுள்ள கோவிலை பக்தர்கள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும் ; பழமையான கோவில் . இங்குள்ள கணபதியின் சிறப்பு 12 அடி உயரமும் 7 அடி அகலமும் ஆகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கணபதி..

பெளஸ மாதத்தில் பெரிய விழா நடைபெறுகையில் பெரும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம்.

XXXX

 கொறடி கோவில் (சென்ற பகுதியில் விவரம் உளது. நாக்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த சக்தி கோவில். கொறடி ஏரிக்கரையில் அமைந்த அம்மனைத் தரிசிக்க பெரிய பக்தர் கூட்டம் வருகிறது தேவியின் பெயர் மஹாலக்ஷ்மி ஜகதம்பா.

105. நாராயணபுர மஹாதேவ் / நாராயனேஸ்வர் கோவில்

புனே நகரிலிருந்து 35 கிலோமிடேட்டர் தூரத்தில் நாராயனேஸ்வரர் கோவில்  இருக்கிறது . அருகிலுள்ள நாராயண்பூர் தத்த மந்திர் பிரசித்தம் அடைந்த அளவுக்கு இது பிரபலம் ஆகவில்லை. அதற்கு அருகிலுள்ள இக்கோவிலில் ஸ்வயம்பூ லிங்கம் இருக்கிறது. கோவிலுக்குள் சின்ன தீப ஸ்தம்பம் இருக்கிறது . இது மிகவும் பழமையான கோவில் ஆயினும் உள்ளூர் மக்கள் நல்ல வண்ணக் கலவையைப் பூசியுள்ளனர்.உள்ளே சென்றால் பழமையை உணரலாம். கோவிலுக்குப் பின்னால் படிக்கிணறு அமைந்துள்ளது .

106.பராடிவாடி தேவி கோவில், ஆங்கண் வாடி

மால்வன் வட்டாரக் கோவிலான  பராடிவாடி தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஜாத்ரா (யாத்திரை ஊர்வலம்) மிகவும் புகழ் பெற்றது . பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் ஜாக்ருத் தேவஸ்தானங்களில் ஒன்று என்ற நம்பிக்கையால் பக்தர்களின் வருகை அதிகம். இந்தக் கோவிலின் சடங்குகள் விநோதமானவை.தேவியின் கற்சிலையை ஆபரணங்கள், முக கைவசத்தால் அலங்கரிப்பார்கள் ; இதற்குப் பின்னர் ஊர் நாவிதர் ஒரு கண்ணாடி மூலம் சூரிய கிர ணங்களை அந்தச் சிலை மீது பிரதிபலிப்பார் . அது மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்மணி சென்று, கோவில் பிரசாதம் தயாரிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும்; சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா இது.

இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள் – கங்கவிலி , ஓரோஸ்.

107.ஸ்ரீ சிவ சத்ரபதி (சிவாஜி) கோவில் , தர்கார்லி

சத்ரபதி சிவாஜியின் மகன்களில் ஒருவரான ராஜாராம், இந்தக் கோவிலை சிந்து துர்க் கோட்டையில் கட்டினார். மாலவன் நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது டில்லி கேட் அருகில் கோபுரத்தில் சிவாஜியின் கால், கை சுவடுகள் பதிக்கப்பட்டுள்ளன 1695-ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியின் நினைவாக இது கட்டப்பட்டது  சிவாஜியின் சிலை கருங்கல்லால் ஆனது. அவருடைய வாளும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.. சுற்றுலாப் பயணிளைத் தவிர உள்ளூர் மக்களும் பயபக்தியுடன் வந்து சிவாஜி மஹாராஜாவைத் தரிசித்துச் செல்கின்றனர் .

மால்வன் என்னும் இடத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் தார்கர்லி உளது.

108.பிரம்மநாத் கோவில், பாருண்டே

புனே மாவட்ட ஜுன்னார் தாலுகாவில் பாருண்டே கிராமத்தில் பிரம்மநாத் கோவில் இருக்கிறது. ஆஷாட கிருஷ்ண ஏகாதசியில் விழா நடைபெறும்.

நாத் சம்பி ரதாய வழிபாட்டின் சிற்பங்கள் இங்கே காணப்படுகின்றன..  ஹட யோகம் , தியானம், ஆசனம் மூலமாக வழிபடும் சைவர்கள் இவர்கள். மீனநாத அல்லது மச்சேந்திரநாத என்பவர் இதன் ஸ்தாபகர்

கோரக்க நாத் , ஹரிபா, கானுபா என்பவர்கள் அவரைப் பின்பற்றினர் .கோரக்நாதர் வழியாக இது பிரபலம் அடைந்தது  நாத் சம்பிரதாய பயிற்சி பெறுவோரின் சிற்பங்கள் பருண்டே முதலிய கோவில்களில் இருப்பதால் இங்கு ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர் .

xxxx சுபம் xxxxx

நாத் சம்பிரதாயம், சிவாஜி கோவில், மஹாராஷ்டிர , 1008 தலங்கள் , பிரம்மநாத், நாராயணேஸ்வரர்

மூன்றாவது நண்பன்! (Post No.12,044)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,044

Date uploaded in London –   26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூன்றாவது நண்பன்! 

ச.நாகராஜன்

ஒரு மனிதனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். 

முதலாவது நண்பன் மீது அவனுக்கு அளவு கடந்த அன்பு. இரண்டாவது நண்பன் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் உண்டு; ஆனால் முதல் நண்பனுக்கு அடுத்தபடியாகத் தான் அடுத்த நண்பனை அவன் வைத்திருந்தான்.

மூன்றாவது நண்பனுடன் அடிக்கடி பேசுவதில்லை. ஆனால் அவனும் நண்பன் தான்.

 ஒரு சமயம் ஒரு கோர்ட் கேஸில் அவன் சிக்கிக் கொண்டான். யாராவது காப்பாற்ற வேண்டிய நிலை.

வேகமாகத் தனது முதல் நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொன்னான்.

“உடனே என் கூட கோர்ட்டுக்கு வந்து என்னுடைய இந்த கேஸிலிருந்து என்னை நீ விடுவிக்க வேண்டும்” என்றான்.

முதல் நண்பனோ உடனே, “இதோ பார், இதற்கெல்லாம் உன்னுடன் கூட வர முடியாது. என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது” என்று கூறி விட்டான்.

அந்த மனிதனுக்கு சலிப்பும் ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டது.

நேராக இரண்டாவது நண்பனிடம் ஓடினான். நடந்த விஷயத்தைச் சொல்லித் தன்னைப் பாதுகாக்க உடனே கோர்ட்டுக்கு வருமாறு அழைத்தான்.

இரண்டாவது நண்பனோ, “ நீ சொல்வதெல்லாம் சரிதான், என்னால் கோர்ட்டுக்கு வர முடியாது. ஆனால் கூடவே கோர்ட் வாசல் வரை வருகிறேன்” என்றான்.

இதனால் சலிப்புற்ற அந்த மனிதன் மூன்றாவது நண்பனைப் பார்க்க ஓடினான். நடந்த விஷயங்களைக் கேட்டான் மூன்றாவது நண்பன்.

“என்னுடன் வந்து என்னைக் காப்பாற்றுவாயா?” என்று அந்த மனிதன் கேட்டான்.

மூன்றாவது நண்பன் புன்சிரிப்புடன், “இதை விட எனக்கு வேறு என்ன வேலை? வா, போவோம். உனக்காக நான் வாதாடுகிறேன், சாட்சி சொல்கிறேன், போவோம் வா” என்றான்.

அந்த மனிதனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கோர்ட்டுக்குச் சென்றனர் இருவரும். மூன்றாவது நண்பன் அடுக்கடுக்கான உண்மைகளைச் சொல்லி நண்பனை கேஸிலிருந்து விடுவித்தான்.

அந்த மனிதன் தனது உண்மையான நண்பன் மூன்றாவது நண்பனே தான் என்று தெரிந்து கொண்டான்.

கதை அல்ல இது, உங்கள் வாழ்க்கை தான் இது!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மூன்று நண்பர்கள் உண்டு.

1) செல்வம்

2) உறவும், சுற்றமும்

3) தர்மம்.

முதல் நண்பனான செல்வம் இந்த உலகில் ஆட்டம் போட்டுப் பாட்டுப் பாடி மகிழ்விக்கும். அது ஒருவன் மறையும் போது அடுத்த உலகிற்கு வராது. ஏனெனில் அது அங்கு செல்லுபடியாகாது.

அடுத்த நண்பனான உறவும் சுற்றமும் சுடுகாடு வரை நிச்சயமாக வருவர். அதற்கு மேல் அவர்கள் வர மாட்டார்கள்.

ஆனால் மூன்றாவது நண்பனாக தர்மமோ அடுத்த உலகிலும் வந்து நாம் செய்த நல்லது அனைத்தையும் ஒவ்வொன்றாக முன் வைத்து நம்மை சிக்கலிலிருந்து விடுவிக்கும். நமக்கு தர்மத்தால் அடைய வேண்டிய அனைத்தையும் பெற்றுத் தரும்.

ஒவ்வொருவரும் மூன்றாவது நண்பனான தர்மத்தை மறக்கவே கூடாது; அவனே நிஜமான துணைவன்; நண்பன்!

ஏக ஏவ சுஹ்ருத் தர்மோ நிதனேப்யநுயாதி ய: |

சரீரேன சமம் நாசம் சர்வம் அன்யது கச்சதி ||

செல்வமோ சுற்றமோ அல்ல; நல்ல மனதுடன் அனுஷ்டிக்கப்பட தர்மம் மட்டுமே நமக்குத் துணை; மற்ற அனைத்தும் அகன்று போய்விடும்!

***

நான் கண்ட பத்மநாபபுரம் அரண்மனை (Post.12,043)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,043

Date uploaded in London – –  25 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

1970 களில் கல்வெட்டுப் பயிற்சி முகாமையும் கல்வெட்டுகள் உள்ள  இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவைகளைக் காண்பதையும் தொல்பொருட் துறை இயக்குநரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்தார்.. அப்போது திருவனந்தபுரம் முதல் சிதம்பரமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண இலவச சுற்றுலாப்பயணத்தையும் தொல்பொருட் துறையின் சார்பில் ஏற்பாடு செய்தார். அந்த ஆயிரம் மைல் இலவச பஸ் பயணத்தில் ஆசிரியரல்லாத ஆசிரியர் நான் ஒருவன்தான் . நான் தினமணிப் பத்திரிக்கையின்  உதவி  ஆசிரியர். ஏனையோர் அனைவரும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். அவர்களோடு தொல்பொருட் துறையின் கல்வெட்டு மாணவர்களும் வந்திருந்தனர். எனக்கு நண்பர்களான   இரண்டு பேரும் அதில்  இருந்தனர். ஒருவர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் வி.ஜி. சீனிவாசன், இன்னொருவர் அதே பள்ளியைச் சேர்ந்த என்.சி.சி. மாஸ்டர் சீனிவாசன் . மூவரும் அரட்டை  அடித்துக் கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் பயணத்தை இனிதே முடித்தோம்.

கன்யாகுமரி வட்டாரத்தைப் பொறுத்த மட்டில் இன்று வரை நினைவில் நிறைக்கும் காட்சி திருவாட்டாறு கோவில், இயற்கை வனப்பும், பத்மநாபபுரம் அரண்மனையும் தான் .

இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் – பூமுகம்(நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை(மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம்.

இந்த அரண்மனை திருவநந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும் , தக்கலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது .

அவைகளைப் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம் .

1550 முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை வேணாட்டுத் தலைநகராக  விளங்கியது . இதைப் பிற் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று அழைத்தனர். கார்த்திகைத் திருநாள் ராம வர்மா (கி.பி 1758-1798) ஆட்சி முடிவு வரை இதுவே தலைநகர். கோட்டையும் அரண்மனையும் சேர்ந்து 186 ஏக்கர்.  நுழை வாயிலில் அலங்கார வளைவு. . அதைத்தாண்டி பூமுகம் அல்லது நுழைவறை ; அதிலுள்ள குறிப்பிடத்தக்க விஷயங்கள் :

ஒரே கல்லால் ஆன கட்டில்;

மன்னர்க்கு பரிசாக வந்த ஓவியங்கள் , வில்கள் ;;

அலங்கரிக்கப்பட்ட மரக் கூரை .

Xxx

பூமுகத்தின் முதல் மாடி மந்திர சாலை; அதாவது மந்திரிசபை மண்டபம்; அரசனுக்கும் மந்திரிகளுக்கு தனித்தனி ஆசனங்கள்.; மேலே காற்று வருவதற்கு துவாரங்கள்.ஆசனங்களில் யாளி, சிங்க உருவங்கள். மண்டபத்தைத் தாங்கும் தூண்களிலும் சிற்பங்கள் !

இதன் அருகில் ஊத்துப் புறம் என்னும் உணவருந்தும் அறை ; இது கீ ழடுக்கும், மாடியும் உடையது . அன்னதானம் அளிக்கும்போது 2000 பேர் உட் காரலாம் ; இவ்வறையின் கூடாரம் இரு கூறைகளுடன் அமைக்கப்பட்டிருப்பதால் மழைக் காலத்திலும் பாதிக்கப்படமாட்டாது..

xxx

மணிக்கூண்டு

இதிலுள்ள கடிகாரம் 200 ஆண்டுக்கு முன்னால் செய்யப்பட்டது.. அது அடிக்கும் மணி ஓசை சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் ; சக்கரம், அதிலிருந்து தொங்கும் 9 மீட்டர் சங்கிலி, அதில் தொங்கும் இரண்டு  கற்களால் இயங்கும் விசித்திரமான கடிகாரம் ஆகும் .

Xxx

தாய்க்கொட்டாரம் அல்லது தாய் அரண்மனை

இதுதான் பழமையான இடம்; ஏகாந்த மண்டபம் எனும் திறந்த வெளிக்கூடத்தில் பல மரச் சிற்பங்களைக் காணலாம்.. நவம்பர் டிசம்பர் மாதங்களில் 41 நாட்களுக்கு துர்கா பூஜை நடத்தப்பட்ட இடம் .

உப்பரிகை மாளிகை

இதுதான் அழகான இடம்.; மூன்று மாடிகள் கொண்டது. மேல் மாடியில் ஒரு மரக்கட்டில் போடப்பட்டுள்ளது தினமும் இதில் விஷ்ணு சயனிப்பதாக நம்பிக்கை. . ஓர் மூலையில் சிவப்புத துணியால் போர்த்தப்பட்ட கத்தி இருக்கும். இப்போதும் கூட நவராத்ரி விழாவின்போது இக்கத்தி திருவனந்த புரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது .

17ம், 18ம் நூற்றாண்டு ஓவியங்கள் இந்த மாடியை அலங்கரிக்கின்றன. அவைகள் இந்த மாநிலத்தின் கலைப் பாரம்பரியத்தின் சின்னங்களாகத் திகழ்கின்றன . முக்கிய ஓவியங்களில்ன் பட்டியல் இதோ :

ஹரிஹரன், அர்த்த நாரீஸ்வரர், கணேசர், கிருஷ்ணனும் கோபியர்களும், நடராஜர், சாஸ்தா வேட்டையாடுதல், சுப்ரமண்யர், அனந்த சயனம், பார்வதி திருமணம், தேவியர்களுடன் ஸ்கந்தன்..

Xxxx

நவராத்ரி மண்டபம்

உப்பரிகை மாளிகைக்கு மேலேயுள்ள நவராத்ரி மண்டபம் ஓர் விசாலமான அறை . இதில் நாயக்கர் கால பாணியை நினைவுபடுத்தும் அழகிய கற்றூண்கள் இருக்கின்றன . முன்காலத்தில் காலை நிகழ்சசிகள் நடந்த இடம். இதற்கு முன்னால் , சிறிய சரஸ்வதி கோவில் இருக்கிறது. கோவிலை இணை க்கும்  நமஸ்கார மண்டபத்தில் தூண்கள் இருக்கின்றன. மண்டபம் முழுதும் இந்துக் கடவுள்களின்  தெய்வங்களும் ஊழியர்களின் சிற்பங்களும் இருக்கின்றன  அந்தப் புறத்திலிருக்கும் பெண்கள் மறைவாக நின்று பார்க்கக்கூடிய திரைகள் உள்ள இடமும் இருந்தது .

அரண்மனையில் தஸ்தாவேஜுகளைப் பாதுகாத்து வைக்கும் (சந்திர விலாசம் )அழகான வேலைப்பாடு மிக்க  மர மேஜைகளும் இருந்தன . வேலை பார்க்கும் இடங்களில் கூட சிற்பங்கள் !!

கோவிலைச் சுற்றி பெரிய கோட்டை . இந்தக் கல் கோட்டையின் குறுக்களவு நாலு கிலோமீட்டர் என்றால் எவ்வளவு பெரியது என்பதை ஊகிக்கலாம் ; நான்கு புறங்களிலும் கொத்தளங்கள் இருக்கின்றன..

(இதிலுள்ள படங்கள் கேரள அரசு தொல்பொருட் துறை இயக்குனர் என். ஜி, உண்ணித்தான் வெளியிட்ட கையேட்டிலிருந்து  எடுக்கப்பட்டது). 

xxxx

2-11-2020 News Item

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்வேளிமலை முருகன்பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் கடந்த மாதம் 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றுதிருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்றன. அந்த சாமி சிலைகள் கடந்த 27-ந் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு கோட்டை வாசலில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் தேவார கட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதே போல் வேளிமலை முருகன் குமாரகோவில் சென்றடைந்தது.

 —subham—

Tags- பத்மநாபபுரம் அரண்மனைசரஸ்வதி அம்மன்நவராத்ரி மண்டபம், ஓவியங்கள்  

Part 19 -Last Part of 108 Famous Hindu Shrines in Maharashtra (Post No.12,042)

Narayaneswara temple, Pune

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,042

Date uploaded in London – –  25 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 There are hundreds of Swaminarayan and Hare Krishna (ISKCON) temples in addition to hundreds of Hanuman temples in Maharashtra. I have not listed them. I tried to list only the popular and ancient temples. This is the final part of 108 Maharashtra Shrines. Jain and Buddhists shrines are also there and Hindus visit them with the same veneration.

PART 19 (Last Part)

101. Shree Ganesh Mandir Tekdi

Shri Ganesh Mandir Tekdi is one of the oldest temples in the city of Nagpur and is one of the most famous too. The temple is situated at the top of a hill and thus the name of Tekdi Ganesh as tekdi in Marathi means hill. The temple is believed to be constructed over 250 years ago. The idol of Lord Ganesha’s head is decorated with gold and has other silver ornaments.

102. Ramtek Temple

Ramtek temple or Ram temple located at Ramtek area of Nagpur is dedicated to Lord Rama. According to popular belief, Lord Rama rested in this place while he was in exile before he went ahead to win over Lanka. Tek in Marathi means vow and thus Ramtek signifies ‘Vow of Lord Rama’. The present temple is believed to be over 400 years old. It is away from the hustle bustle of city life and located inside a fort on a hill.

It is also very popular and revered for its OM structure that is a whopping 350 feet long. The temple is also famous for its notorious yet super smart monkeys roaming around the premises. Cars can go up to the last step post which you need to climb around 60 steps to the temple.

103. Poddareshwar Ram Mandir

Sri Poddareshwar Rama Mandir located in the heart of Nagpur city is a major tourist attraction. It’s a Hindu temple dedicated to Lord Rama and Shiva and was constructed in the year 1923 by Late Shri Jamnadhar Poddar, famous businessman of the popular Poddar family hailing from Rajasthan. The idols of the temple are in a Ram Parivar setup and posture including those of God Rama, Lakshman, Hanuman and goddess Sita. The temple is built with marble and sandstone .

104. Adasa Ganpati Temple

Adasa is located 45 kilometres from Nagpur.  Devotees believe that the temple is very ancient. it is on a hillock in this village and people love to climb all the way to the hill to reach it; the idol of Lord Ganesha is of huge size, around 12 feet in height with 7 feet in breadth ; it is carved out of a single stone!

During Pausha in winter, a major fair is organized in the village and many pilgrims flock to the place during that time.

xxxx

Koradi Temple (Posted in the last part)

One of the very important Hindu religious places near Nagpur is the Koradi Temple located around 15 kilometres away from the city. It’s one of the Shakti Peethas of the country and especially dedicated to Goddess Mahalaxmi Jagadamba. Situated on the banks of Koradi Lake, this temple is buzzing with devotees throughout the year.

Xxxx

105.Mahadev Temple (Narayaneshwar) Narayanpura

Narayaneshwar temple is located at a distance of 35km from Pune, on Saswad-Narayanpur road. Dutta mandir of Narayanpur is a highly sacred and much known temple of Narayanpur but this temple which is adjacent to Dutta mandir is not known to many. This temple has स्वयंभू (self-manifested) Shivling and is worshipped daily. Temple is built inside a compound and a small दीपमाळ(structure to light Diyas) is present here. The temple is made out of rock and is really ancient. However, some part of it is colored now, mostly by the locals. Inside the temple, you can still witness the ancient look. It has 2 beautifully carved द्वारपाल (gate keeper) outside the गर्भगृह(main sanctum). Behind the temple, is a beautiful पुष्करणी (stepwell).

Xxxx

106. Bharadi Devi temple

Anganewadi in Malvan is more famous for its Bharaadi Devi temple and the most popular fair called Anganewadi Jatra which is held annually.

Bharaadi devi of Anganewadi is one of the “Jagrut Devasthans”  fulfilling the wishes of all those visitors who come to this place with a devotion and great belief.

The rituals at the fair are really interesting which include embellishing the stone plaque of the deity with ornaments, mask and new clothing. Afterwards the village barber standing in front of the temple reflects sunrays over the plaque. There is one more interesting trend which strengthens unity and cooperation among the residents during this fair. As per this trend one female from each family has to join cooking of food at the temple which is offered as Prasad to the devotees. The Jatra lasts for one and a half day only.

Nearby railway stations are Kankavli and Oros.

xxxx

107.Shree Shivchhatrapati Temple, Tarkarli

Build on Sindhudurg fort by Shivaji’s son Rajaram. It is a temple of Shivaji Maharaj. You can also find his foot and palm prints on a lime preserved slab on the tower near Dilli Gate.

Shree Shivchhatrapati Temple was built to remember the contributions of king Chhatrapati Shivaji for the creation of the separate and unique Hindu kingdom. The temple was built by Rajaram in 1695. 

Location: The temple is located at Dilli Gate. It is barely 6km from Malvan Town.

108. Brahmanath Temple in Parunde

Parunde is a Village in Junnar Taluka in Pune District .Brahmanatha temple, which is rare, is located here. A fair is held on Ashada Krishna Ekadasi.

We find the archaeological remains of the Nath Cult in the form of mausoleums, temples, caves, images, sculptural panels, inscriptions, memorials and monasteries. Ornate pillars of the medieval Brahmanath temple at Parunde, Pune district have rare depictions of different yogic postures along with some rites and rituals of the Nath Cult.

Nath cult seems to have had as object the attainment of mystic powers by practicing Hatha Yoga. Hatha Yoga is mental concentration that is accompanied by gymnastic postures of the body. Its chief saints were Minanath also known as Matsyendranath and Goraknath..

He is the founder of the cult. Other saints include Goraksanath, Haripa and Kanupa. Gorakshanath is considered to have been the most influential of the ancient Naths.

—- subham—

Tags- Final Part, Maharashtra shrines, Brahmanath, Ramtek

பொருள் தராத உன்னைக் கடைவிதியில் விலை கூறி விற்பேன் – புலவரின் தைரியம்! (Post No.12,041)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,041

Date uploaded in London –   25 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 67

பொருள் தராத உன்னைக் கடைவிதியில் விலை கூறி விற்பேன் – புலவரின் தைரியம்!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் புலவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தது என்பதைக் கேட்டால் பிரமித்துப் போவோம்.

வள்ளல் ஒருவர் புலவருக்கு தான் சொன்னபடி குறித்த காலத்தில் பொருள் தரவில்லை. அவர், “கேட்டவுடன் பொருள் தராத உன்னைக் கடைவீதியில் விலை கூறி விற்பேன்” என்று அவர் கையைப் பிடித்து இழுத்தார்.

உண்மையில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கொங்குமண்டல சதகம் தனது 67ஆம் பாடலில் இப்படிப் பதிவு செய்கிறது.

கொடையிற் பெரியோ யுடனே யெனக்குக் கொடாமையினாற்

கடையிற் பெறநினை விற்றென் கலியைக் கழிப்பனென

மடியைப் பிடித்திழுத் தேவிலை கூறிய வாணன்மிடி

வடியப் பொருடந்த காமிண்டனுங் கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : ஈகையில் சிறந்தோனே! கேட்ட பொழுதே நீ பொருள் தந்து உதவாமையால் உன்னைக் கடைத்தெருவில் விலை கூறி விற்பேன், வா என மடியைப் பிடித்து இழுத்த புலவனது வறுமை போகும்படி பொன் கொடுத்து உதவிய காமிண்டனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

வரலாறு : காமிண்டன் என்பது ஒரு பழைய காலப் பட்டப் பெயர்.

இதைக் கொண்ட சர்க்கரை என்ற பெரும் வள்ளல் ஒரு சமயம் சிவனை தரிசிக்கத் தலயாத்திரையை மேற்கொண்டிருந்தார். அங்கே வழியில் ஒரு புலவர் இவரைப் பார்த்தார். அவருக்கு வறுமை, கடன் தொல்லை.

தனக்குக் கடன் தொல்லை இருப்பதாகவும் பொருள் தந்து உதவ வேண்டும் என்றும் அவர் சர்க்கரையாரை வேண்டினார்.

“தல யாத்திரையில் இருக்கிறேன். பதினைந்து தினங்களில் யாத்திரையை முடித்து ஊர் திரும்பி விடுவேன். அப்போது என்னை வந்து பாருங்கள். உங்களுக்கு உதவுகிறேன்” என்றார் வள்ளல்.

பதினைந்து நாட்கள் கழிந்தன. புலவர் நத்த காரையூருக்கு வந்தார்.

‘வள்ளல் பெருமான் எங்கே’ என்று விசாரித்தார். ‘அவர் இன்னும் ஊர் வந்து சேரவில்லை’ என்ற பதில் அவருக்குக் கிடைத்தது.

உடனே அவர் திரும்பிச் சென்றார். நேராகக் கரூருக்குப் போனார்.

அங்கே அவர் வள்ளல் இருக்கக் கண்டார்.

“உன் வார்த்தையை நம்பிக் கடன்காரனுக்குக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்களித்தேன்.  சொன்ன நாள் கடந்து மூன்று தினங்கள் ஆகின்றன. பணத்தை உடனே கொடு” என்றார் புலவர் வள்ளலை நோக்கி.

அவரோ, “ஊருக்குப் போவோம், வாருங்கள். அங்கே கொடுக்கிறேன்” என்றார்.

வந்ததே புலவருக்குக் கோபம்!

“”இது தான் உனது கொடைத்தன்மையா? உன்னை நான் இதே ஊர் கடைவீதியில் விலை கூறி விற்பேன்” என்ற புலவர் அவரது மடியைப் பிடித்து இழுத்தார்.

வள்ளலுக்குக் கோபம் வரவில்லை. மகிழ்ச்சியே பிறந்தது.

அவரது கடன் தொல்லையும் தன்பால் அவருக்குள்ள நம்பிக்கையும் அவருக்குப் புரிந்தது.

உடனேயே பொருளுதவி செய்து அந்தப் புலவரின் கடனைத் தீர்த்தார் சர்க்கரையார்.

இந்தச் சம்பவம் ஊரெங்கும் பரவி அனைவரும் காமிண்டனைக் கொண்டாடினர்.

இதைப் பதிவு செய்யும் இன்னொரு பாடல் இது:

மற்றோர் புலவன் மடிமேற்கை போட்டிழுத்து

விற்றா லல்லாதென் வறுமை நோய் தீராதே

எங்கும் விலைகூற வேயிசைந்த புண்ணியவான்

எங்குங் கனகாபி ஷேகமாகப் பொழிந்தோன்

என்று இப்படி நல்லதம்பி சர்க்கரைக் காதல் என்ற நூல் கூறுகிறது.

காமிண்டன் என்ற பட்டப்பெயரை இன்றும் கூட கொங்குமண்டலத்தில் வாழும் பலர் கொண்டிருக்கின்றனர்.

சாலி சகம் 727 என்பது கி.பி. 803-804 அப்போது இருந்த ராஷ்டிரகூட ராஜா மூன்றாவது கோவிந்தப்பனது மனைவியின் பெயர் காமுண்ட பாய் (Gamundab Bai)

இன்னும் வரலாற்று சாஸனங்களை உற்று நோக்கினால் பல உண்மைகள் வெளிப்படுகின்றன.

அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூர் தாலுகாவில் மானிப்பள்ளியில் நுளம்ப பல்லவ ராஜா ஜயதேவன் காலத்து சாஸனம் ஒன்று ஶ்ரீ புருஷய்யர் மகன் கோரப்பனும், காமுண்டர்களும், பிராமணர்களும் சேர்ந்து பெத்து கொண்டே என்ற ஊரில் சூரிய தேவனுக்குத் தானம் செய்தனர் என்று கூறுகிறது.

சித்தூர் மாவட்டம் கர்ஷனபல்லி என்ற ஊரில் முத்துக்கூர் கிரமத்தில் இறந்த ஒரு வீரனுடைய மகனுக்குக் காமுண்டர்கள் தானம் செய்தார்கள்.

இதை சாஸன எண் 331- 1912 கூறுகிறது.

இப்படி இன்னும் பல சாஸனங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. விரிப்பின் பெருகும்.

ஆக புலவர் எந்த அளவிற்கு உரிமை கொண்டாடி வள்ளல்களிடம் பழகினார்கள் என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.

தமிழின் வன்மையும் அதைத் தம் பால் கொண்ட புலவர்களின் தைரியமும் போற்றுதற்கு உரியதே!

***

Swami’s Crossword 2452023 (Post No.12,038)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,038

Date uploaded in London – –  24 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Following are the clues; each word has a different colour.

ACROSS

1.Deity of Swamimalai near Kumbakonam

7.Bharata ruled Kosala country from here for 14 years.

8.Bliss; suffix with many Hindu Swamijis

9.I in Sanskrit; first word of Upanishad Sentence I am Brahman

10. Woman with I or Ego

11. Short sound: Liquor; Long sound- Heroic

12.Elephant Headed God

13.Indra killed this demon; name begins with P

14. Month in which Raksha Bandhan happens

xxxxx

DOWN

1.Old name of Hindu Dharma

2.Forest in Sanskrit

3.Rainbow in Hindu Mythology

4.Womans name, also All in Sanskrit; pre fix f several organisations

5.Embodiment of Truth; Chandramathi’s husband; king

6. Name in Sanskrit; English word Name is derived from it.

 2 3  4  5 6
            
  7         
            
            
       9   
    10        
  11         
 12           
13           
      14      

 xxxxx

answers 

 —subham–

Tags- Crossword, 2452023

அம்மனுக்கு கண்ணாடி கோவில்: 108 மஹாராஷ்டிர புனித தலங்கள்- 19 (Post No.12,040)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,040

Date uploaded in London – –  24 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

மலேசியாவில் கண்ணாடியிலான இ நதுக் கோவில் இருப்பது பற்றி முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது மஹாராஷ்டிராவிலுள்ள கண்ணாடிக் கோவிலை தரிசிப்போம் .

பகுதி 19 Part 19

மஹாராஷ்டிரத்தில் நான்கு சக்திக் கேந்திரங்கள் இருந்த போதிலும் அவற்றை ஏன் சாடே தீன் (மூன்றரை) சக்தி தலங்கள்  என்று அழைக்கிறார்கள் என்று முன்னரே கண்டோம். அவை கோலாப்பூர் மகாலெட்சுமிதுல்ஜாபூர் பவானி , வாணி சப்த ஸ்ருங்கி (ஏழுமலை) தேவி, மாஹூர் ரேணுகா தேவி கோவில்கள் என்பதையும் அறிவீர்கள். இது தவிர தற்காலத்தில் புகழ்பெற்ற மும்பை மஹாலெட்சுமியையும் தரிசித்தோம்.

89. ரேணுகா தேவி கண்ணாடிக்கோவில்

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரசுராமன் அவதாரம் ஒன்று. அவருடைய தாயார் ரேணுகா தேவி. அவருக்கு நாடு முழுதும்  பல கோவில்கள் உண்டு, சனி பகவானுக்கு கோவில் அமைந்த சனிஷிங்னாபூர் அருகில் அமைந்தது இந்தக் கோவில். சோணை என்னும் கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் தூண்களும் சுவர்களும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் ஒளி பிரகாசிக்கிறது. ராஜஸ்தானிலிருந்து வந்த விசேஷ சிற்பிகள் இந்தக் கோவிலைக் கட்டினர் .

சோணை என்பது ஸ்வர்ணம்/ தங்கம் என்பதன் மருவு.. மச்சேந்திரநாத்ஜி ஒரு தங்கக்கட்டியை இந்தக் கிராமத்தில் போட்டதால் சோணை/சொர்ணம் என்ற பெயர் வந்ததாம் .

90.கொதிக்கும் ஊற்று நிறைந்த அதிசய வஜ்ரேஸ்வரி கோவில்

இமயமலையில் பனிக்கட்டிகளுக்கு இடையே கொதிக்கும் தண்ணீர் உள்ள ஊற்றுகளை இமய மலை பற்றிய அதிசயங்கள் கட்டுரையில் தந்தேன். அதே போல இந்த மாநிலத்திலும் எரிமலைப் பாறைகள்  நிறைந்த இடத்தில் வஜ்ரேச்வரி கோவில் இருக்கிறது ஊரின் பெயரும்   வஜ்ரேஸ்வரிதான் . மும்பை நகரிலிருந்து 75 கிலோமீட்டர்; குறுகிய பூக்கடைத் தெருக்கள் வழியே சென்றால் கோவிலை அடையலாம் . மந்தாகினி மலையில்  எரிமலைப் பாறைகளுக்கு இடையே கோவில் இருக்கிறது . 1739-ம் ஆண்டு சிமாஜி அப்பாஜி என்பவர் போர்ச்சுக்கீசியரை த் தாக்கி விரட்டினார். அவர் வழிபட்டுச் சென்று வெற்றிவாகை சூடக் காரணமானவள் இந்த தேவிதான் என்று அறிவிக்கும் பலகையும் எல்லோரையும் வரவேற்கும்.

மலையில் கடினமான பாதையில் ஏறி தேவியை தரிசிக்க வேண்டும். இன்னும் சற்று ஏறிச்சென்றால் பல மைல்கள் பரவியுள்ள பூமியைக் கண்டு களிக்கலாம். கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அக்லொலி என்னும் இடத்தில்தான் 7 வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன.. இதில் குளித்தால் நோய்கள்  நீங்கும். மிதமான சூடு; அதற்கும் பின்னால் தான்ஸா நதி ஓடுகிறது . சித்திரை மாதத்தில் பெரிய விழா நடக்கும்..

91.கணேசபுரி கோவில்

வஜ்ரேஸ்வரி கோவிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் கணேஷ் புரி என்னும் ஊரில் பல கோவில்களைத் தரிசிக்கலாம். 1961ம் ஆண்டில் இங்கு நித்யானந்தா என்பவர் சமாதி  அடைந்தார்.  அவருடைய சமாதியையும்  பார்க்கலாம். கோவில் சலவைக் கற்கள்  மற்றும் கருங் கற்கள்  வைத்துக் கட்டப்பட்டுள்ளது . கோவிலுக்கு அருகில் மூன்று வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன.

மழை யிலில்லாத நாட்களில் செல்லக்கூடிய அக்கினி குண்ட  வெந்நீர் ஊற்றில் சோறு சமைக்கலாம் . விரார் என்னுமிடத்திலிருந்து 34 கிமீ. தான்.கொதிக்கும் சூடுள்ள வெந்நீர் ஊற்றுக்களில் அரிசிக் கலயத்தை வைத்தால் சோறு ஆகிவிடும். இலவச சமையல் !!

92. சத்புதா மனுதேவி கோவில் ; இருப்பிடம் அட் ஹாவ்ன் ; இது ஜல்காவ்ன் மக்களுக்குக்  குல தெய்வம்

93. பார்வதி மலை கோவில், புனே. 108 படிகள் ஏறிச்சென்றால் குன்றில் அமைந்த குமரியைக் கண்டு வணங்கலாம்

94. மாதா மந்திர் , கொறடி , நாகபுரி  ஜகதாம்பா அம்மனின் பழைய கோவில்

95. சீதளாதேவி கோவில், மாஹிம் , மும்பை

96. ஏகவீரா தேவி கோவில், லோனாவாலா

ரேணுகா தேவியின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறாள் ஏகவீரா தேவி.

கார்லா குகைகள் அருகில் உள்ள கோவில். இந்த தேவி பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வைத்தாளாம் . ஒரே நாளைக்குள் கோவில் கட்ட முடியுமா என்று. அவர்கள் அப்படி ஒரே நாளில் கோவில் கட்டிக் காட்டியதால் அஞ்ஞாத வாச காலத்தில் உங்கள் எவரையும் துரியோனாதி துஷ்டர்கள் காணாதபடி உங்களுக்கு சக்தி அளிக்கிறேன் என்றாள் ஏகவீரா தேவி.

97.அம்பாதேவி கோவில், அமராவதி

நாகபுரியிலிருந்து  155 கி.மீ. அமராவதி நகரின் நடுவில் அமைந்தது. விதர்பா பிரதேசத்தின் புகழ்பெற்ற கோவில். ருக்மிணி, ஒரு அம்பாதேவி கோவிலுக்கு பிராத்தனை செய்யவந்த போதுதான் , கிருஷ்ணன் அவளைக் கடத்திக் காதல் கல்யாணம் கட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது .

98. தக்காரி

கமலா பைரி என்பவளுக்கான கோவில் இது.

இந்தக் குகைக் கோவிலில் மஹா சிவராத்திரியைத்  தொடர்ந்து 3 நாட்களுக்கு விழா நடைபெறும் .பல்லக்கில் தேவி பவனி வருவாள் ; குகையின் ஒரு பகுதியை அடைக்கும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது . குகைக்குச் செல்ல கால் மைல் உயரே செல்ல வேண்டும்.

99.ரூப நாராயணன் கோவில்

இந்த விஷ்ணு கோவில்; இருக்கும் ஊரின் பெயர் திவேக்கர்.

மும்பை நகரிலிருந்து 165 கி.மீ தொலைவில் ரூப நாராயணன் கோவில் இருக்கிறது. பழைய கோவில் சிதிலம் அடைந்த இடத்தில் மஹாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் கட்டிய புதிய கோவில் இது. இதற்கு முன்னர் இருந்த கோவிலை போர்ச்சுகீசியர்கள் சிதைத்து ,சிலையை கடலில் தூக்கி எறியச் சென்றனர் . அப்போது அவர்களுடைய கப்பல் விபத்துக்குள்ளாகி பிற்காலத்தில் சிலை மட்டும் கரை ஓதுங்கியது  இபோதைய கோவில் சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது . இந்த இடம் அருமையான கடற்கரைக்கு பெயர் பெற்ற இடம். ஐஞ்சீரா தீவுக்கும் செல்லலாம். 20 கிலோமீட்டர் தொலைவில் ஹரிஹரேஸ்வர் கோயில் மற்றும் கடற்கரையும் இருக்கிறது

xxxxxxx

மஹாராஷ்டிரத்தின் புகழ்மிகு நரசிம்மர் கோவில்கள்

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கும் இம்மாநிலத்தில் பல கோவில்கள் உள்ளன . அவை பின்வருமாறு :

1.ஜ்வாலா நரசிம்மர் கோவில் ,கோலே நரசிம்மபூர் , சாங்லி மாவட்டம்

2.உக்ர நரசிம்மர் கோவில், ஹோலி, நான்டெட்

3.லட்சுமி நரசிம்மர் கோவில், புனே

4.லட்சுமி நரசிம்மர் கோவில், ரஞ்சனி , புனே மாவட்டம்

5.நரசிம்மர் கோவில், தாவதே , புனே மாவட்டம்

6. நீர நரசிம்மர் கோவில், புனே மாவட்டம்

7. நிட்டூர் தாலுகா நரசிம்மர் கோவில், சந்த் கட் , இது பாண்ட வர்களால் கட்டப்பட்டதாக ஐதீகம்

8.போகாமி நரசிம்மர் கோவில், பர்பணி மாவட்டம்

9.சங்கவடே நரசிம்மர் கோவில், கோலாப்பூர் மாவட்டம்

10.லட்சுமி நரசிம்மர் கோவில், தோம் , சாதாரா மாவட்டம்

xxxxxx

100. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் (श्री लक्ष्मी नृसिंह देवस्थान)

புனே மாவட்டத்தில் பீமா நதியும் நீரா நதியும் சங்கமம் ஆகும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்து இருக்கிறது . பல புகழ்பெற்ற குடும்பங்களுக்கு இந்த நரசிம்மர் குல தெய்வம்; அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தேவேந்திர பட்நாவிஸ் குடும்பம் . அவர் முன்னாளைய முதலமைச்சர் தற்போது துணை முதலமைச்சர் . 1527ல் கட்டப்பட்ட இக்கோவில் மீண்டும்  திருப்பணி செய்யப்பட்டு 1787ல் முழு வடிவம் பெற்றது

தொடரும் …….

 tags –  கண்ணாடி கோவில், 108 மஹாராஷ்டிர, புனித தலங்கள், part19 ,லட்சுமி நரசிம்மர், ரேணுகா தேவி, ரூப நாராயணன்

ஆபரேஷன் குன்னர்சைட்! உலகத்தைப் பிழைக்க வைத்த ஒரு சாகஸ செயல்! (Post.12,039)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,039

Date uploaded in London –   24 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அத்தியாயம் 12 

ஆபரேஷன் குன்னர்சைட்! உலகத்தைப் பிழைக்க வைத்த ஒரு சாகஸ செயல்!

 ச.நாகராஜன்

பகுதி 16

ஹிட்லர் நார்வேயின் மீது படையெடுத்த போது டெலிமார்க் (Telemark) என்ற இடத்தில் இருந்த வெமார்க் (Vemark) என்ற ஒரு தொழிற்சாலையைக் கைப்பற்றியது நாஜி படை.

அந்தத் தொழிற்சாலை கனநீரை உற்பத்தி செய்து வந்தது.

கனநீர் புளுடோனிய உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்று. ஆகவே புளுடோனியம் தயாரிப்பில் மும்முரமாக முனைந்தனர் நாஜி நிபுணர்கள்.

அவர்களது ஒரே நோக்கம் புளுடோனியத்தை உபயோகித்து அபாயகரமான அணு ஆயுதத்தைத் தயாரிப்பது தான்.

ஒரு இடத்தில் குண்டு போட வேண்டியது தான்! படார்!

பல லக்ஷம் மனிதர்கள் ஒரு சில கணங்களில் மாண்டுபோவர்.

இதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டது.

வெமார்க் (Vemark) ஒரு 60 MW பவர் ஸ்டேஷன்.  இது ஜுகான் (Rjukan) என்ற நீர்வீழ்ச்சிக்கு அருகில் நிறுவப்பட்டிருந்த பவர் ஸ்டேஷன். 1934ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.

இதன் கனநீர் உற்பத்தி ஆண்டுக்கு 12 டன்கள்.

நார்வே மீது ஜெர்மனி 1940ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி படை எடுத்தது.  அதற்கு சற்று முன்னதாக பிரான்ஸ் 185 கிலோகிராம் கனநீரை வெமார்க்கிலிருந்து அகற்றியது. இது இரகசியமாக ஆஸ்லோவிற்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கிருந்து பெர்த், ஸ்காட்லாண்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இங்கிருக்கும் கனநீரை ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தினால், அவ்வளவு தான் உலகம் என்பதை அறிந்த நார்வே அரசு அந்த பவர் ஸ்டேஷனை அடியோடு அழிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 இதன் விளைவாக ‘ஆபரேஷன் குன்னர்சைட்’  (Operation Gunnerside) என்ற ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டது. குன்னர்சைட் என்பது ஒரு கிராமத்தின் பெயர்.

ஆறு கமாண்டோக்கள் அடங்கிய ஒரு குழுவை  1942 பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பிரிட்டிஷ் விமானம் ஒன்று  பாராசூட் மூலம் கீழே தரை இறக்கியது.

அவர்கள் ரகசியமாக ஒரு கேபிள் டன்னல் வழியே பவர் ஸ்டேஷனுக்குச் சென்று அதை குண்டு போட்டு அழித்தனர்.

இவர்களைப் பிடிக்க 3000 நாஜி படைவீரர்கள் துடிதுடித்து செயலில் இறங்கினர். ஆனால் அவர்களைப் பிடிக்கவே முடியவில்லை. ஆறு பேரும் உயிருடன் சாகஸமாக தப்பினர்.

இந்த ஆறு பேரில் ஐந்து பேர்கள் ஸ்கீயிங் மூலமாக 400 கிலோமீட்டர் பயணித்து ஸ்வீடனுக்குத் தப்பிச் சென்றனர்.

ஜெர்மனி தனது திட்டத்தைக் கை விட்டு மீதி இருக்கும் கனநீரை ஜெர்மனிக்குக் கொண்டு செல்ல முயன்றது. ஆனால் அதுவும் கூட நார்வேயினால் முறியடிக்கப்பட்டது.

அபாரமான இந்த சாகஸ செயலை விவரமாக விளக்கும் நூல்களைப் படித்தால் சுவையாக இருக்கும்.

***