
Post No. 12,068
Date uploaded in London – 1 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காங்கிரஸின் நீதி பரிபாலனம்!
ச.நாகராஜன்
புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்தது மன்னிக்க முடியாத தவறான செயல்.
சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனம் டில்லிக்கு செங்கோலை எடுத்துச் சென்று கொடுத்ததைத் திரித்தும், மறைத்தும், பொய் சொல்லியும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செய்து வரும் பிரச்சாரம் மிக மிகத் தவறான உண்மைக்குப் புறம்பான ஒன்று.
இதில் பெரும் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது இவர்கள் எல்லாம் படித்தவர்களா, தேச பக்தி உள்ளவர்களா என்பதை ஆயிரம் முறை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு மனச்சலிப்பை அடைய வேண்டிய நிலையை அடைய வேண்டியதாக இருக்கிறது.
எந்த நல்ல காரியத்தைச் செய்தாலும் உடனே அதை எதிர்ப்பது எதிர்க்கட்சியின் வேலை இல்லை. தேசத்துரோக எதிரிக் கட்சிகளின் வேலை தான் அது.
இதை நிச்சயமாக தேசபக்தி உள்ள சோஷியல் மீடியா நண்பர்களும், தனி ப்ளாக்கில் எண்ணங்களைப் பதிவு செய்வோரும் எதிர்த்து உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
காங்கிரஸின் பழைய நல்ல பாரம்பரியம் போயே போய் விட்டது.
அதற்குத் தொடக்கம் எமர்ஜென்ஸி காலம் என்றே சொல்லலாம்.
1973இல் இந்திரா காந்தி அவர்கள் ஏ.ஏன். ரேயை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தார். J M Shelet, K S Hegde A N Grover – ஜே.எம். ஷெலத், கே.எஸ்,ஹெக்டே, ஏ.என். க்ரோவர் ஆகிய சீனியர்களைப் புறம் தள்ளி ஒதுக்கி அவர் ஏ.என்.ரேய நியமித்தார்.
இதனால் மனம் வெறுத்துப் போன மூன்று சீனியர் நீதிபதிகளும் தங்கள் ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.

இதற்கு பாராளுமன்றத்தில் பதில் அளித்த காங்கிரஸ், “ யார் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயிக்கும். அதன் வேலையே அது தான். எங்களது கொள்கைக்கு உகந்தவர்கள் யாரோ அவர்களையே நாங்கள் நியமிப்போம்” என்று கூறியது.
ஆனால் இன்றோ அவர்கள் உரத்த குரலில் நீதி அமைப்பு சுதந்திரமாக இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.
1975ஆம் ஆண்டு நீதிபதி ஜக்மோஹன் சின்ஹா ஒரு தீர்ப்பை வழங்க வேண்டி இருந்தது.
தேர்தல் ஊழல் பற்றிய கேஸ் அது. ராஜ் நாராயண் Vs இந்திராகாந்தி கேஸ் அது.
நீதிபதி சின்ஹாவுக்கு ஒரு போன் வந்தது.
“நீங்கள் இந்திராகாந்திக்கு எதிராகத் தீர்ப்பை வழங்கினால், உங்கள் மனைவி அடுத்த கர்வ சௌத் விரதம் அனுஷ்டிக்க மாட்டார்” என்றது போன் கால்.
அதாவது சின்ஹா உயிரோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம்.
அதற்கு உடனே சின்ஹா பதில் கூறினார்: நல்ல வேளையாக என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டார்.” என்று!
சின்ஹாவின் வரலாற்றுப் பிரசித்தமான தீர்ப்பு தேசத்தை ஒரு கலக்கு கலக்கியது.
காங்கிரஸின் மணிமகுடம் ஆடியது.
மகுடம் கழன்று தரையில் விழாமல் இருக்க எமர்ஜென்ஸி – அவசரநிலை பிரகடனம் அவசரம் அவசரமாய்ச் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகப் பிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
இந்திரா காந்தியும் காங்கிரஸும் தேசத்தைக் காப்பாற்ற இந்த அவசர நிலை என்று கூறியபோதும் கூட அனைவருக்கும் தெரிந்தது – இது இந்திராகாந்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த செயல் என்று.
1976இல் ஏ.என். ரே தனக்கு நீதிபதி பதவியை அளித்ததற்கான நன்றிக் கடனைத் தீர்த்தார். ஷிவ்காந்த் சுக்லா Vs ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் வழக்கை விசாரிக்க அவர் அமைத்த பெஞ்ச் அவரது அடிப்படை உரிமை அனைத்தையும் பறித்தது.
அதில் ஒரே ஒரு தைரியமான நீதிபதி தான் இருந்தார். அவர் பெயர் நீதிபதி H R கன்னா.
அவர் சக நீதிபதியைப் பார்த்துக் கேட்டார்: “நீங்கள் கண்ணாடியில் உங்களை உங்கள் சொந்தக் கண்ணால் பார்க்க முடியுமா? என்று!
(Can you see yourself in the mirror with your eyes)
ஆதாரம் :இணையதளப் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்ட தேதி 8-4-2023