
Post No. 12,081
Date uploaded in London – – 4 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன், வாட்ஸ் அப், இன்டர்நெட், கூகுள் பே , மேலை நாடுகளில் மொபைல் போன் மூலம் பயணம் செய்தல் முதலியன இல்லை. இப்பொழுது மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்னர் அறிவியல் பத்திரிகைகளில் வெளியான செய்தி காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று சொல்கிறது. இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் நிலக்கரியை எரித்து நீரை வெப்பமாகிக்கி எடுக்கும் மின்சாரத்தால் காற்றும், புறச் சூழலும் மாசுபடுகிறது என்பது பெரிய குற்றச்சாட்டு . யுரேனியம், ப்ளூட்டோனியம் மூலம் உண்டாக்கும் அணுசக்தி மின்சாரத்தால் அந்தக் கழிவுப் பொருட்களில் (RADIO ACTIVE WASTE) உள்ள கதிரியக்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை (RADIATION) உண்டாக்கும் என்பது இன்னும் ஒரு குற்றச்சாட்டு ; இப்படி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுப்பது காற்று மின்சாரம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை யாரேனும் சொல்லியிருந்தால் என்ன கிண்டல் செய்கிறாயா? என்று பதில் கொடுத்து இருப்போம். இப்போது அப்படிச் சொன்னால் உனக்கு விஞ்ஞான அறிவு கொஞ்சமும் கிடையாதா? என்று திருப்பிக் கேட்டுவிடுவார்கள் .
Scientists generate ‘electricity from thin air.’ Humidity could be a boundless source of energy, they say.
வெய்யில் காலம் வந்தால் உடல் வேர்க்கிறது; தோல் எல்லாம் பிசு பிசு என்று ஒட்டிக்கொள்கின்றது ; இதற்கு காரணம் காற்றிலுள்ள ஈரப்பதம் (Humidity) ஆகும். இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும் என்பதுதான் புதிய செய்தி.
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் (SOLAR POWER) மின்சாரத்துக்கு வெய்யில் தொடர்ந்து அடிக்கவேண்டும். காற்றாடி மூலம் (WIND POWER) எடுக்கும் மின் சாரத்துக்கு காற்று தொடர்ந்து அடிக்கவேண்டும். ஆனால் காற்றிலுள்ள ஈரப்பத மின்சாரத்துக்கு இந்தத் தடைகள் இல்லை. அது எப்போதும் கிடைக்கும். மேலும் அது கிடைக்காத நாடு இல்லை.
அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக University of Massachusetts-Amherst பேராசிரியர்கள் இது பற்றி சொல்கிறார்கள் : நாம் எல்லோரும் மேகங்கள் சூழ்ந்த வானத்தில் மின்னல் (Lightning) அடிப்பதை பார்க்கிறோம். இது மிகப்பெரிய சக்தியுள்ள மின்சாரம் என்பதை அறிவோம். ஆயினும் அதை அறுவடை செய்யும் வகை நமக்குத் தெரியாது. நாங்கள் என்ன செய்தோம் என்றால் அது போல ஈரப்பத சூழ்நிலையில் செயற்கையாக மின்னலைத் தூண்டி அந்த மின்சாரத்தை அறுவடை செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம். .
காற்றிலுள்ள ஈரப்பத்தில் மின்சாரத்தை உண்டாக்க காற்றின் சக்தியையே பயன்படுத்தும் ஒரு மயிரிழை அளவுள்ள ஜெனெரேட்டர் உளது . இதன் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்கலாம். இதையே எல்லா இடங்களிலும் உண்டாக்கினால் ஆண்டுமு னுத்தும் 24 மணிநேரமும் மின்சக்தியைப் பெறலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்குப் பேராசிரியர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்
The device mentioned in the study is the size of a fingernail and thinner than a single hair. It is dotted with tiny holes known as nanopores, The Washington Post reported. “The holes have a diameter smaller than 100 nanometers, or less than a thousandth of the width of a strand of human hair,” The Post said.
மேலும் பேராசிரியர் யாவோ இது பற்றிப் பத்திரிகையாளரிடம் பேசுகையில் கோடி கோடி மயிரிழை ஜெனரேட்டர்களை வைத்தாலும் அது ஒரு ரெப்ரிஜிரேட்டர் (குளிர்ப்பதன சாதனம்) அளவுதான் இருக்கும். ஒரு வீட்டிற்கான ஒரு கிலோவாட் சக்தியை அது கொடுக்கும் என்கிறார்
Yao told The Washington Post that roughly 1 billion air-gens, stacked to be roughly the size of a refrigerator, could produce a kilowatt and partly power a home in ideal conditions.
கடலிலிருந்து தங்கம் எடுக்கும் கதை
கடலில் டன் கணக்கில் தங்கத் துகள் உள்ளது ஆனால் இதை எடுப்பதற்கான செலவு பூமியிலுலிருந்து தங்கம் வெட்டி எடுக்கும் செலவைவிட அதிகம் என்பதால் செயல்முறையில் பயன்படவில்லை. அது போல இந்தத் திட்டமும் ஆராய்ச்சியும் போய் விடாது என்று நம்புவோமாக .(Source- USA TODAY NEWSPAPER )
–subham—
Tags- காற்று , ஈரப்பதம் மின்சாரம்