
Post No. 12,101
Date uploaded in London – – 8 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகுதி 3 (இறுதிப்பகுதி)
இந்த இறுதி பகுதியில் 24 ஏகாதசிக்களின் பெயர்களையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை உள்ளதையும் வெவ்வேறு பெயர்களால் அவை அழைக்கப்படுவதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்துக்களின் பஞ்சாங்கப்படி இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் வரும். அதாவது ஆண்டுக்கு 12 மாதங்களுக்குப் பதிலாக 13 மாதம். அவ்வாறு வருகையில் 26 ஏகாதசிக்கள் ஏற்படும். இந்த விரதம் பற்றி வேதத்தில் குறிப்பு இல்லை. ஆயினும் மஹாபாரதம், புராணக் கதைகள் இதன் பழமையைக் காட்டுகின்றன.
24 ஏகாதசிக்களில் சில ஏகாதசி முக்கியமானவை. அவைகளில் ஒன்று தேவோத்தன ஏகாதசி. இது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷம் வரும் ஏகாதசி. நான்கு மாதங்கள் தூக்கத்தில் இருந்த விஷ்ணு விழித்தெழுந்த மாதம் இது. அப்போது வரும் ஏகாதசி என்பதால் இந்தப்பெயர். இதை ப்ரபோதினி ஏகாதசி என்றும் அழைப்பர். அவர் தூங்க சென்ற மாதம் வரும் ஏகாதசியை சயன அல்லது சாயனி ஏகாதசி என்று அழைப்பர் ; உன்மையில் கடவுள் தூங்கவில்லை. இந்தியாவின் தென் மேற்குப் பருவமழை கேரளத்தில் துவங்கி, இமயமலையில் மோதி திரும்பி வரும் . (Returning Monsoon) அப்போது நாட்டின் பெரும்பகுதிகளில் மழை கொட்டும். இதனால் சாது சந்யாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் என்ற பெயரில் 4 மாதங்களுக்கு எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் முகாமிட்டு வழிபாடு செய்வார்கள். இதையே தேவர்கள் தூங்கும் காலம், கடவுளர் தூங்கும் காலம் என்று அழைப்பர் இந்த ஏகாதசியை சுவாமிநாராயண் பிரிவினர் பெரிதும் போற்றுவார்கள்.
ஏகாதசியின் போது விரதம் அனுஷ்டிக்கும் முறைகளையும் இதிஹாச புராணங்கள் நமக்கு விதிக்கின்றன..
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு விஷ்ணுவை வணங்கி அவர் பெயரை ஜபிக்க வேண்டும் ; குறைந்தது 108 முறை ; உணவு சாப்பிடக்கூடாது. நீரையும் முடிந்தவரை தவிர்க்கலாம்.விஷ்ணுவுக்கு மலர்கள்,துளசி, பழங்களை நைவேத்யம் செய்யலாம்.. வயதுக்கும் உடல் நிலைக்கும் ஏற்றவாறு சிலர் பால் , பழங்கள் அல்லது உப்பு உரைப்பற்ற கஞ்சியை அருந்துவார்கள் .
பொதுவாக பெருமாள் கோவில்களில் ஏகாதசியன்று பக்தர்கள் கூட்டம் காணப்படும்.ஏனெனில் அன்று கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. பண்டரீபுரம் , திருவரங்கம், திருப்பதி , குருவாயூர் முதலியன குறிப்பிடத் தக்கவை பண்டரிபுரம் முதலிய மஹாராஷ்டிர வைணவக் கோவில்களில் ஆஷாட ஏகாதசி பெரிதாகக் கொண்டாடப்படுகிறது இது ஆடி மாதம் ; (ஜூன்/ ஜுலையில்) வரும். தமிழ் நாட்டில் பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி பெரிதாகக் கொண்டாடப்படுகிறது.
ஏகாதசியில் இறந்தால் கூடப் புண்ணியம்.
ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்பது பழமொழி. துவாதசி என்றால் 12ம் நாள் . அதாவது ஏகாதசிக்கு மறு நாள்..
xxxxx
இப்போது சித்திரை மாதம் துவங்கி வரும் ஏகாதசிக்களை வரிசையாகக் காண்போம்
பாப விமோசன ஏகாதசி/ காமத ஏகாதசி
வாருதினி ஏகாதசி/ மோஹினி ஏகாதசி
அபரா ஏகாதசி/ நிர்ஜல ஏகாதசி
யோகினி ஏகாதசி/ சாயனி ஏகாதசி
காமிக ஏகாதசி/ ச்ராவண புத்ரத ஏகாதசி
அன்னதா ஏகாதசி/ பார்ஸ்வ ஏகாதசி
இந்திர ஏகாதசி/ பாசாங்குச ஏகாதசி
ராம ஏகாதசி/ ப்ரபோதினி ஏகாதசி
உத்பன ஏகாதசி/ மோக்ஷத ஏகாதசி (வைகுண்டஏகாதசி)
சபல ஏகாதசி/ பெளஸ புத்ரத ஏகாதசி (வைகுண்டஏகாதசி)
ஷட்டிலஏகாதசி/ பைமி ஏகாதசி
விஜய ஏகாதசி /ஆமலகி ஏகாதசி
(அதிக மாதம் வந்தால் பத்மினி ஏகாதசி / பரம சுத்த ஏகாதசி
Xxxx
நிர்ஜல என்றால் தண்ணீர் அற்ற என்று பொருள்; அந்த ஏகாதசியன்று , கடுமையாக விரத விதிகளைப் பின்பற்றுவோர் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள் .
இவ்வாறு ஒவ்வொரு ஏகாதசிக்கும் சிறப்பு உண்டு. அன்றைய தினம் கோரப் பசி கொண்ட பீமன் கூட தண்ணீர் குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-சுபம்–
Tags — ஏகாதசி, நிர்ஜல , ஆஷாட , தேவோத்தன , 24 ஏகாதசி பட்டியல்