நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய ஆராய்ச்சி! (Post.12,100)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,100

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 13

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

.நாகராஜன்

பகுதி 17

 “கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

    ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

.

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 இந்த மூளைகளை வைத்து அவை யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சி பெரிய முயற்சி.

அது இப்போது நடைபெறுகிறது!

***

Leave a comment

Leave a comment