
Post No. 12,116
Date uploaded in London – – 10 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கீழ்க்கண்ட பத்து நீர்வீழ்ச்சிக் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் உங்களுக்கு அருவி மன்னன் என்ற பட்டத்தை வழங்குகிறோம்
1.இந்தியாவிலேயே உயரமான நீர்வீழ்ச்சி எது? எந்த நதியில் அது உள்ளது?
2.குற்றால நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?
3.காவிரி நதியில் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளின் பெயர்கள் என்ன?
4.தாமிரபரணி நதியிலுள்ள நீர்வீழ்ச்சி எது ?
5.சில்வர் காஸ்கேட் Silver Cascade அருவி எங்கே இருக்கிறது?
6.அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி எங்கே எந்த நதியில் இருக்கிறது?
7. ஜோக் பால்ஸ் Jog Falls எங்கே இருக்கிறது? எந்த நதியில் ?
8.குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி எதனால் புகழ்பெற்றது எங்கே இருக்கிறது?
9. இந்தியாவின் நயாகரா பால்ஸ் Niagara Falls of India (அமெரிக்கா –கனடா எல்லையில் Niagara Falls உள்ளது) என்று அழைக்கப்படும் அருவி எது?
10. தூத்சாகர் நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்ன?

Answers
1.மேகாலயா மாநிலத்தில் சிரபுஞ்சி அருகில் நோ காளிகை (நவ காளி ) அருவி இருக்கிறது. இந்தியாவிலேயே உயரமான இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 1115 அடி. மலையில் சேரும் நீர் இப்படி விழுகிறது
2.சித்ரா நதி
3.சிவசமுத்திரம்; ஹொகனேக்கல்
4..பாபநாசம் அகஸ்தியர் அருவி
5.மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் .
6.கேரளத்தில் திருச்சூர் ஜில்லாவில் சாலக்குடி ஆற்றில் விழும் நீர் இது.
7. கர்நாடகத்தில் ஷிமோகா மாவட்டம்.ஜெரசப்பா நீர்வீழ்ச்சி; பழைய பெயர் ஜோக் பால்ஸ் ; உயரம் 830 அடி; நதி –ஷராவதி
8.ஷிமோகா ஜில்லாவில் (கர்னாடக மாநிலம்) வராஹி நதியில் அமைந்துள்ள இந்த அருவி கட்டம் கட்டமாக விழுகிறது. Kunchikal குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி மொத்த உயரம் 1493 அடி.
9. சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் ஜில்லாவில் இந்திராவதி நதி இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவி நீர் வட அமெரிக்காவிலுள்ள நயாகரா அருவி போல பரந்து அகலமாக விழுவதால் அது இந்தியாவின் நயாகரா பால்ஸ் Niagara Falls of India என்று அழைக்கப்படுகிறது இதை சித்ர கூட Chitrakote Falls அருவி என்பர்.
10.,தூத்சாகர் நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவன்றால் கோவா மாநிலத்தில் ரயில்பாதையில் அமைந்துள்ளது ; நதியின் பெயர் மாண்டோவி (Mandovi River)
—subham–. Tags- நீர்வீழ்ச்சி,அருவி