QUIZ பஞ்சமிப் பத்து QUIZ (Post No.12,130)

Manasa Devi Temple Chandigarh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,130

Date uploaded in London – –  13 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பஞ்சமி என்றால் என்ன ?

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஐந்தாவது  நாள். இந்துக்கள் நிலவின் இயக்கத்தைப்  பின்பற்றி ஒவ்வொரு மாதத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள் . அமாவாசைக்குப்  பின்னர் வரும் 14 நாட்கள்  சுக்ல பட்ச இருவாரம் (14 நாட்கள் ); அதே போல பெளர்ணமிக்குப் பின்னர் வரும் 14 நாட்கள்  கிருஷ்ண பட்ச இருவாரம் ( 14 நாட்கள்). இந்தக் கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு பஞ்சமி (5ஆம் நாள்) வரும்.

10 பஞ்சமிக்களை இந்துக்கள் கொண்டாடுவது ஏன் ?

கீழேயுள்ள 10 பஞ்சமிக்களையும் நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு பஞ்சமி ரத்தினம் என்ற பட்டத்தை வழங்குகிறோம் .

1.ரிஷி பஞ்சமியை ஏன், எப்போது கொண்டாடுகிறார்கள் ?

2.ஸ்ரீ பஞ்சமி என்றால் என்ன?

3. பாம்புகளை வழிபடும் நாள் எது?

4.வசந்த பஞ்சமி எந்த காலத்தில் வரும்? எப்படிக்கொண்டாடுவார்கள்?

5. ரங்க பஞ்சமி என்பதன் மற்றொரு பெயர் என்ன

6.புஷ்ய பஹுல பஞ்சமியன்று  தமிழ்நாட்டில்  என்ன நடக்கும்?

7.மானஸ பஞ்சமி நாளை யார் அதிகம் கொண்டாடுகிறார்கள் ஏன்?

8.பரணி பஞ்சமி என்ற சொல்லிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

9.கார்த்திகேய பஞ்சமி என்றால் என்ன?

10. அந்தப் பஞ்சமியின் வேறு பெயர் என்ன?

Manasa Devi from Bangladesh

விடைகள்

1.விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

2.மாக (மாசி) சுக்ல பஞ்சமியில் சரஸ்வதியை வழிபடுவர்; இது ஸ்ரீ பஞ்சமி எனப்படும் ; அன்றைய தினம் நேபாளி இந்துக்கள், தங்கள் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்விப்பர்.

3.நாக பஞ்சமி ; இது சிராவண (ஆவணி) சுக்ல பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது ; மகாராஷ்டிரா இந்துக்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

4. வசந்தம் என்பது வசந்த காலம் ஆகும். ஆனால் அது துவங்கும் முன்னரே அதைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார்கள் வட நாட்டில் அப்போது சரஸ்வதி பூஜையும் நடைபெறும்.. மாசிமாதம் சுக்ல பஞ்சமியின் மறு  பெயர் இது.

5.ரங்க என்றால் வர்ணம். ஹோலி போலவே அன்றும் சாயம் பூசுவார்கள். ஆனால் இதில் கலர் நீரையும் பாய்சசுவர். இது பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ பஞ்சமியில் வரும்

6.தமிழ்நாட்டில் திருவையாறு தியாகராஜர் சமாதியில் புஷ்ய பஹுல பஞ்சமியன்று  தியாகராஜ ஆராதனை நடக்கும் . பிரபல இசைக்கலைஞர்கள் வந்து பஞ்ச ரத்தினக் கிருதிகளைப் பாடுவார்கள்

7.மனசா தேவி என்பவள் பூமிக்கும் பாம்புகளுக்கும் அதிபதி. வங்கா ளத்திலும் வட இந்தியாவிலும் இவள் வழி படப்படுகிறாள் ஆஷாட கிருஷ்ண பட்ச பஞ்சமி மனசா பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

8.புரட்டாசி மாதம் வரும் மாளய பட்ச காலத்தில் கிருஷ்ண பட்ச பஞ்சமி  பரணி பஞ்சமி எனப்படும் ; கடந்த ஒரு வருட காலத்தில் நெருங்கிய சொந்தக்காரர் இறந்திருந்தால் அன்றைய தினம் தர்ப்பணம் செய்வார்கள்

9 & 10. கார்த்திகேய பஞ்சமியின் மறுபெயர் ஸ்கந்த பஞ்சமி; கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமி நாளன்று வங்காளிகள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள் 24 மணி நேரம் நீடிக்கும் விரதம் இது. இரவில் 4 ஜாமங்களிலும்  பூஜையும் செய்வார்கள்

—subham—

Tags- ரிஷி பஞ்சமி, ஸ்ரீ , பஞ்சமி, நாக ,வசந்த ,ரங்க,புஷ்ய பஹுல, மனஸ ,

பரணி பஞ்சமி

Leave a comment

Leave a comment