QUIZ கர்நாடகப் பத்து QUIZ (Post No.12,147)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,147

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1. கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற அரண்மனை எது?

2.கர்நாடகத்தில் சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடங்கள் எவை?

3.இந்த மாநிலத்தில் காவிரிநதி உற்பத்தியாகும் இடம் எது ?

4. கர்நாடகத்தில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் எது?

5.தங்கச்சுரங்கம் உள்ள இடத்தின் பெயர் என்ன?

6.இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலை எங்குள்ளது?

7.கொல்லூரின் புகழ் பரவக் காரணம் யாது?

8.ஆதி சங்கரர் நிறுவிய மடம் எங்கே இருக்கிறது ?

9.துவைத மத ஸ்தாபகர் யார் ? அவர் கர்நாடகாவில் எங்கே பிறந்தார் ?

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; வேறு என்ன மொழிகள் முக்கியமானவை ?

 xxxxx

விடைகள்

1.மைசூரிலுள்ள மஹாராஜா அரண்மனை

2.பேலூர், ஹளபேடு , ஹம்பி

3.குடகு, தலைக்காவேரி

4.உடுப்பியிலுள்ள கிருஷ்ணன் கோவில்

5.கோலார்

6.சிரவண பெலகோலாவில் மலை மீதுள்ள கோமடேஸ்வரரின் சிலை ஒரே கல்லினால் ஆனது.. அதன் உயரம் 58 அடி .

7.மூகாம்பிகை அம்மனின் அழகிய விக்ரகம் அங்கே இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு தமிழ் நாட்டின் முதலைச்சர் M G R .  வைரவாள் கொடுத்தவுடன் தமிழ்நாட்டில் அந்த அம்மனின் புகழ் பரவியது . பின்னர் முதலமைச்சராக வந்த ஜெயலலிதா தங்கம் கொடுத்தார் 

8.சிருங்கேரி

9.மத்வர் ; அவர் உடுப்பி தாலுகாவில் உள்ள பாஜக கிராமத்தில் பிறந்தார்.

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; துளு , கொங்கணி ஆகிய மொழிகளுடன் தமிழும் பேசப்படுகின்றன ; எல்லைப்பகுதியில் மராத்தி பேசப்படுகிறது.

–subham—

Tags – கன்னடம், மைசூரு, கர்நாடகம், கொல்லூர்

Leave a comment

Leave a comment