
Post No. 12,148
Date uploaded in London – 18 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்!
ச.நாகராஜன்
தாய் நாடு என்ற அதி அற்புதமான கருத்து உலகில் பாரதத்தில் தான் முதன் முதலாக ஏற்பட்டிருந்ததை வேதங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதர்வண வேதத்தில் 10வது காண்டத்தில் 60 செய்யுள்கள் உள்ளன.
மாதிரிக்கு இதோ சில:-
ச நோ பூமிவிஸ்ருஜதாம் மாதா புத்ராய மே பய: -|| (20)
கிரயஸ்தே ஹிமவந்தோ பரண்யம் தே ப்ருதிவிஸ்யோநமஸ்து |
மாதா பூமி புத் ரோஹம் ப்ருதிவ்யா: || (22)
பூமே மாத்ராநிர்தோஹி மா பத்ரயா சுப்ரதிஷ்டிதம் ||
இவை அனைத்திலும் அன்னை பூமிக்கு மகன் நான்; அன்னையை வணங்குகிறேன் என்ற கருத்து இருப்பதைப் பார்க்கலாம்.
ரிக் வேதத்திலும் பூமியை நமது அன்னையாக வணங்குகின்ற ஸ்லோகங்கள்/ துதிகள் உள்ளன.
இந்த வேத துதிகளே வந்தே மாதரம் என்ற எழுச்சி மிக்க துதியை நமக்கு வழங்கியது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி இவற்றினால் ஊக்கம் பெற்றே இந்த அற்புதமான முழக்கத்தை நமக்குத் தந்து சுதந்திரத்திற்கான எழுச்சியை ஊட்டினார்.
மகாகவி பாரதியாரும் வாழிய பாரத மணித்திருநாடு, வந்தே மாதரம் என்ற எழுச்சி மிகு பாடல்களை நமக்கு அளித்து உத்வேகமூட்டினார்.
ஒவ்வொரு புனிதமான சடங்கிலும் ஒவ்வொரு ஹிந்துவும் புனிதமான அனைத்து நதிகளையும் துதித்து அழைத்து வணங்குகிறான்.
அந்த நதிகள் கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பாய்ந்து ஓடுகின்றன.
கங்கே ச யமுனே சைவ சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு ||
இப்படி கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என அனைத்து புனித நதிகளையும் அழைக்கிறோம்.
இப்படி ஆரம்பிக்கும் தாய்நாட்டு வணக்கம் உலகம் தழுவிய பெரும் அன்புத் தழுவலாக மாறுகிறது.
மாதே மே பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர: |
பாந்த்வா சிவபக்தஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம் |
“அன்னை பார்வதி; தந்தை சிவபிரான். சிவபக்தர்கள் அனைவரும் உறவினர்கள்; சுய தேசம் பூமி முழுவதுமே” என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது!
லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து! |
சர்வே ஜனா சுகினோ பவந்து ||
என்பது தான் வேத முழக்கம்.
உலகம் அனைத்தும் நலமுடன் இருக்கட்டும் |
அனைத்து மக்களுடன் சுகத்துடன் இருக்கட்டும் |
இதுவே வேத பிரார்த்தனை!
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.
ஆக இது போன்ற ஏராளமான வேத துதிகளை நாம் அறிந்தோமானால் தாய் நாடு பற்றிய கருத்து முதலில் தோன்றியது பாரத தேசத்தில் தான் என்பதும் அது அப்படியே உலகம் தழுவிய உலக நலன் பிரார்த்தனையாக மிளிர்ந்து ஒளிர்கிறது என்பதும் நமக்குத் தெரியவருகிறது!
வஸுதைவ குடும்பகம் என்ற கோஷத்தை என்றுமே ஒரு பாரதீயன் விட மாட்டான் என்பது தான் உண்மை!
***