


Post No. 12,168
Date uploaded in London – – 22 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி பிடென் மற்றும் அவரது மனைவிக்கு இந்தியாவின் அதிகாரபூர்வ பரிசுகளை அளித்தார் . இதை “தஸ தானம் — பத்து தானங்கள் “– என்று அழைப்பர் . வெள்ளியால் ஆன விநாயகர் உருவத்தையும், உபநிஷத் பிரதி ஒன்றையும், மோடி கொடுத்தார்.. 7.5 காரட் எடையுள்ள செயற்கை வைரம் ஒன்றையும் இந்தியாவின் பரிசாக வழங்கினார்
இதோ முழு விவரம் :

ஒரு சந்தனப் பெட்டிடியில் “தஸ தானம் — பத்து தானங்கள் “–வைக்கப்பட்டன . இந்த சந்தனப் பெட்டியை ராஜஸ்தான் தலை நகர் ஜெய்ப்பூரிலுள்ள ஒருவர் வடிவமைத்தார்.இதற்கான சந்தனம் கர்நாடக மாநில மைசூரிலிருந்து வந்தது.
பெட்டிக்குள் விக்கினங்களை தகர்த்து எறியும் வெள்ளி கணபதியும் , மங்களம் அளிக்கும் விளக்கும் இருக்கிறது கல்கத்தாவிலுள்ள பிரபல வெள்ளித் தொழில் வினைஞர்கள் பிள்ளையாரைச் செய்தனர் .உத்தர பிரதேசத்தில் செய்யப்பட ,சம்ஸ்க்ருத் ஸ்லோகம் எழுதப்பட்ட, தாமிரத் தாம்பாளமும் , பொருட்களில் ஒன்றாகும்.
சஹஸ்ர சந்திர தரிசனம்
ஒருவர் எண்பது வயதைத் தாண்டிவிட்டால் (என்பது வயதும் எட்டு மாதங்களும்) அவர் ஆயிரம் முறை சந்திரனைத் தரிசித்துவிட்டதாக இந்துக்கள் கொண்டாடுவர். இதை சஹஸ்ர சந்திர தரிசனம் என்பர். அப்போது அவர்களுக்கு 10 பொருட்களை வழங்குவர். இதை பத்து தானங்கள் என்பர். பிடென் 81 வயதுக் கிழவனார். ஆகையால் அவருக்கு இந்து மத சம்பிரதாயப்படி தஸ் தான–த்தை சிறிய வெள்ளிப்பெட்டிகளில் வழங்கினார் மோடி .
பசு, நிலம், எள் , தங்கம், நெய் , தானியம் , துணி வெல்லம் , வெள்ளி , உப்பு ஆகியன பத்து தானங்கள் இதை ஸம்ஸ்க்ருத்த்தில் கோ தானம், பூ, தில ,ஹிரண்ய ஆய , தான்ய , வஸ்திர குட ரூப்ய , லவண தானங்கள் என்பர் .
தங்க தானத்துக்கு 24 காரட் சுத்த தங்க நாணயம் ஒன்றையும், பஞ்சாப் மாநில நெய் யையும், வஸ்திர தனத்துக்கு ஜார்கண்ட் மாநில துணியையும் தான்ய தானத்துக்கு உத்தரகண்ட் அரிசியையும், மஹாராஷ்டிரா மாநில வெல்லத்தையும் தமிழ் நாட்டிலிருந்து வந்த எள் தானியத்தையும் , ராஜஸ்தான் வெள்ளி நாணயத்தையும் நவம்பரில் 81 வயதை எட்டப்போகும் பிடென்- னுக்கு வழங்கினார்.
பூ தானத்துக்கு நிலத்தைக் கொண்டு செல்ல முடியாதாகையால் மைசூர் சந்தனப் பெட்டியும், பசுவுக்குப் பதிலாக கல்கத்தா கலைஞர் உருவாக்கிய வெள்ளித் தேங்காய் உருவமும் கொடுக்கப்பட்டன. இமயம் முதல் குமரி வரை ,அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை பரந்துள்ள அத்தனை மாநிலங்களையும் உள்ளடக்கிய பரிசு — பிடெனின் 81 வயதுக்கு பிறந்த நாள் வாழ்த்தாக அமைந்தது !!

((பல ஆண்டுக்களுக்கு முன்னர் சத்ய சாய் பாபா வின் சஹஸ்ர பூர்ண சந்திர தரிசன விழாவை பக்தர்கள் கொண்டாடினர். காஞ்சி சங்கராசார்யார் உள்பட சாது சந்யாசிகள் சென்று அவருடைய தங்க ரத பவனியைக் கண்டனர் )).
108 உபநிஷத்துக்களில் ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய பத்து உபநிஷத்துக்கள் முக்கியமானவை. இதன் ஆங்கிலப் பிரதியையும் மோடி கொடுத்தார்
சூரிய ஒளியையும் மற்ற சக்திகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 7-5 காரட் நிறையுள்ள செயற்கை வைரத்தை திருமதி பிடெனுக்கு , மோடி அளித்தார்.
அந்த வைரத்தை காஷ் மீரில் செய்யப்பட்ட காகிதக் கூழால் ஆன பெட்டியில் வைத்துத் தந்தார் .

பிடென் தம்பதியினர், மோடிக்கு சுவையான சைவ/ வெஜிட்டேரியன் உணவை பரிமாறினார்கள். சென்ற முறை மோடி அமெரிக்கா சென்ற போது , பாரக் ஒபாமா விருந்து கொடுக்க முடியவில்லை. ஏனெனில் மோடி அப்போது நவராத்திரி விரதம் அனுஷ்டித்ததால் வெந்நீர் மட்டுமே அருந்தினார் (வட இந்தியர்கள், குறிப்பாக குஜராத்திகள் கண்டிப்பான நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் .

–subham —
TAGS– வெள்ளை மாளிகை, வெள்ளி கணபதி, தஸ் தானம், பத்து , சஹஸ்ர சந்திர தரிசனம், மோடி, பிடென்