QUIZ சிலப்பதிகார பத்து QUIZ (Post No.12,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,193

Date uploaded in London – –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.சங்க காலத்தில் கேள்விப்படாத இரண்டு பெயர்களை முதல் தட வையாக  இளங்கோ சொல்கிறார் : ஒன்று வாத்தியத்தின் பெயர்; இன்னொன்று முனிவரின் பெயர் ; சொல்லுங்கள் பார்ப்போம் .

2.இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்தும் ஒரு பிராமணன்தான் கதைக்கு பாலம் போன்றவர். அவர் இல்லாவிடில் தொடர்ச்சி இராது. யார் அவர்?

3.சிலம்பில் என்னென்ன நாட்டுப்புற, தமிழ் பாடல் பகுதிகள் உள்ளன ?

4.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி,  உலகம் முழுதும் ஒலித்த சிலப்பதிகாரப் பாடல் எது ?

5.எண் 18-ன் சிறப்பை இளங்கோ எப்படிப் புகழ்கிறார் ?

6.சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம்- மூன்றும் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவை என்பதைக்காட்டும் ஸம்ஸ்க்ருதச் சொல் எது?

7.பாரதியார் இந்த நூலை எப்படிப் புகழ்கிறார் ?

8.மாதவி எத்தனை வகையான ஆடல்களை ஆடினாள் ?

9.இந்தக் காவியத்தில் காலத்தைக் காட்டும் இரண்டு மன்னர்கள் வருகின்றனர். அவர்கள் யார்?

10.சிலப்பதிகாரம் அறிவுறுத்தும் பாடங்கள்/ நீதிகள் மூன்று என்று இளங்கோ எப்படிச் சொல்கிறார் ?

xxxxx

answers

1.வீணை, நாரதர் (இரண்டும் சங்க இலக்கியத்தில் இல்லை).

2.மாடல மறையோன்

3.கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை , குன்றக் குரவை, ஊசல் வரி முதலியன

4.வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி ………நாராயணா என்னா நாவென்ன நாவே

xxxx

5.தேவர் அசுரர் போர் நடந்த காலம் – 18 ஆண்டுகள்

ராம- ராவண யுத்தம் நடந்த காலம் – 18 மாதங்கள்

பாண்டவர் – கெளரவர்கள் யுத்தம் நடந்த காலம் – 18 நாட்கள்

செங்குட்டுவன் – கனக விஜயர் யுத்தம் நடந்த காலம் – 18 நாழிகைகள்

Xxx

6.அதிகாரம் என்னும் சொல்;  (தொல்காப்பியத்தில் உள்ள காவியம்/காப்பியம் என்பதையும் சொல்லலாம் ).

7.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணி ஆரம் படைத்த தமிழ் நாடு (வேறு ஒரு இடத்தில் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்றும் இன்னொரு இடத்தில் இளங்கோ பெயரையும் பாடுகிறார் .

8.பதினோரு வகை ஆடல்கள்

9.கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு); நூற்றுவர் கன்னர் (சதகர்ணி ); இதனால் சிலம்பில் வரும் நிகழ்வுகள் இரண்டாம் நூற்றா ண்டு நடந்தது உறுதியாகிறது .

10. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்

உரைசால் பத்தினிக்கு  உயர்ந்தோர் ஏற்றலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.என்பதும்

1.            அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.            ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.            உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

–சுபம்–

Tags- சிலப்பதிகாரம் , இளங்கோ ,Quiz, அரசியல் பிழைத்தோர்க்கு

Leave a comment

Leave a comment