QUIZ மனைவிப்பத்து QUIZ (Post No.12,201)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,201

Date uploaded in London – –  29 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.தேவாரம் பாடிய சுந்தரரின் இரண்டு  மனைவிகளின் பெயர் என்ன ?

2.கிருஷ்ண தேவ ராயரின் இரண்டு  மனைவிகளின் பெயர் என்ன?

3.கிருஷ்ண பரமாத்வுக்கு எட்டு மனைவியர் இருந்தபோதிலும் முக்கியமான இரண்டு  மனைவிகளின் பெயர் என்ன?

4.அப்பழுக்கற்ற ,களங்கமில்லாத மண்டோதரி யாருடைய மனைவி ?

5.கணவன் இறந்தவுடன் தீப்பாய்ந்து சிதையில் எறிந்த பாண்டியன் மனைவி பெயர் என்ன ?

6. ராமனின் மனைவி சீதை; லெட்சுமணன், பரதன், சத்ருக்னன் மனைவிகள் யார் ?

7.சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும்  புகழப்படும் வசிட்டரின் மனைவி யார் ?

8.புத்தரின் மனைவி பெயர் என்ன?

9.துரியோதனனின் மனைவி பெயர் என்ன ?

10.ரிக்வேத அகஸ்திய ரிஷியின் மனைவி பெயர் தெரியுமா  ?

 xxxxxxx

ANSWERS

1.பரவை நாச்சியார் , சங்கிலியார்

2.சின்னா தேவி , திருமலா தேவி

3.ருக்மிணி சத்யா பாமா

4. இராவணன் மனைவி

XXX

5. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது.

XXXXX

6. ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருகீர்த்தி

7. அருந்ததி

8.யசோதரா

9.பானுமதி

10..லோபாமுத்ரா

—–SUBHAM——-

TAGS– சதி , மனைவி , லெட்சுமணன் , துரியோதனன், QUIZ

Leave a comment

Leave a comment