QUIZ இதிஹாசப் பத்து QUIZ (Post No.12,209)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,209

Date uploaded in London – –  30 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.சம்ஸ்க்ருதத்தில் ஆதி காவியம் என்று எதை அழைக்கின்றனர் ?

xxxx

2.இந்து மதத்தின் ஐந்தாவது வேதம் என்று போற்றப்படுவது எந்த நூல் ?

XXXX

3.கருப்பு நிறம் ( Mr Black, Miss Black) என்ற பெயர் உடைய 3 பெரிய இந்துக்கள் யார் ?

Xxxx

4.இதிகாசங்களில் எண் 18-ன் ( Significance of Number 18) சிறப்பு என்ன ?

xxxx

5.ராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் ? எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?

xxxx

6.ராமாயணத்தில் எண் 24- ன் சிறப்பு என்ன ?

xxxx

7.மகாபாரதத்தின் மூல நூல் எது?

xxxx

8.வால்மீகி ராமாயண சொற்றொடரை வைத்து துவங்கும் திருப்பதி பாலாஜி துதி எது?

xxxxxx

9.விஷ்ணு சஹஸ்ரநாமம் யார் சொன்னது ? எங்கே இருக்கிறது?

XXXXX

10.மஹா கவி பாரதியார் , பகவத் கீதையை மொழிபெயர்த்தார் ; அத்தோடு மகாபாரத த்தில்  ஒரு பகுதியை தனி கவிதை நூலாகச் செய்தார் / அந்த நூலின் பெயர் என்ன ?

xxxxx

விடைகள்

ANSWERS

1.இரண்டு இதிகாசங்களில் ஒன்றான வால்மீகி ராமாயணம் , ஆதி காவ்யம் என்று அழைக்கப்படும்

XXXX

2.இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட,  மஹாபாரதம்,  ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்படுகிறது.

XXXXXX

3.கிருஷ்ணன் (Mr Black) , கிருஷ்ணா=திரவுபதி (Miss Black) ,. கிருஷ்ணத் த்வைபாயனர் (Mr. Black Islander) வியாசர்

Xxxx

4.ஐந்தாவது வேதம் என்று போற்றப்படும் மஹாபாரதத்தில் மொத்தமுள்ள பர்வங்கள் 18. அதிலுள்ள பகவத் கீதையில் அத்தியாயங்களின் எண்ணிக்கை 18; மஹாபாரத யுத்தம் நடந்தது 18 நாட்கள் . மகாபாரதத்தின் மூல நூல்  ஜய என்று சொல்லப்படும் . கடபயாதி சங்க்யா முறைப்படி அதன் பொருள் 18.

Xxxxxxx

(5) ஆறு + ஒன்று  6+ 1 = 7 (கடைசி காண்டமான உத்தர காண்டம் பிற்சேர்க்கை என்று கருதப்படுகிறது) ; ஸ்லோகங்களில்ன் எண்ணிக்கை 24,000.

Xxxxxxxxxxx

6. நான்கு வேதங்களில் உள்ள, உலகம் முழுதும் உள்ள பிராமணர்கள் மூன்று வேளை சொல்லும் காயத்ரீ மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் உள்ளன . ராமாயணத்திலுள்ள 24, 000 ஸ்லோகங்களில் ஒவ்வொரு ஆயிரமும் ஒரு காயத்ரீ எழுத்தில் துவங்கும்

Xxxxxxxxxx

7. ‘ஜய’ எனப்படும் 8000 ஸ்லோகம் உடைய நூல் என்பர். யாருக்கும் அந்த 8000 ஸ்லோகம் எது, ஜய எது என்று தெரியாது.

Xxxxxx

8.வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் துவக்க வரிகள் ” கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்” – வால்மீகி ராமாயண ஸ்லோக வரிகள் ஆகும்.

Xxxxxxx

9.விஷ்ணு சஹஸ்ரநாமம்,, மகாபாரதத்தில், அனுசாசன  பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயம் ஆகும் .யுதிஷ்டிரருக்கு பீஷ்மர்  கற்றுக்கொடுத்த விஷ்ணுவின் 1000 நாமங்கள் இதில் இருப்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகிறது . மஹாத்மா காந்தி சிறு வழியது முதல் சொன்ன சகஸ்ரநாமம் இதுதான்.

Xxxxxxx

10.பாஞ்சாலி சபதம்

——subham—–

Tags- இதிகாசம் , கேள்வி பதில், Quiz

Leave a comment

Leave a comment