‘ரம்’ ‘ரம்’ குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,149)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,149

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில்  8 ‘ரம்’ உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  . எல்லா சொற்களும் ‘ரம்’ என்று முடியும்

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

   1   2
8       
        
        
7  ரம்   3 
        
        
6     4 
   5    

1.இந்தியர்களுக்கு 1947 ஆகஸ்ட் 15ம் தேதி கிடைத்தது ,

2.இப்படி ஒரு இலக்கண நூல் இருந்ததாகப் பகர்வர்  ,

3.மட்டும் என்பதன் சம்ஸ்க்ருதம் 

4.தொல்காப்பியயருக்கு இது தெரியும் என்று பனம்பாரனார் பகர்வார் ,  5.மாதந்தோறும்  ,

 6.தெலுங்கு பேசும் இடம்  ,

7.ஐயர்கள் முழங்குவது 

8.நரிகளுக்குத் தெரிந்தது

Xxxxxx

Answers

1.சுதந்திரம், 2.காதந்திரம், 3.மாத்திரம் 4.ஐந்திரம்,  5.மாதாந்திரம் , 6.ஆந்திரம் , 7.மந்திரம் , 8.தந்திரம்

   சு1   கா2
8 த     
 ந் ந் ந்  
  திதிதி   
7மந்திரம்தித்மா 
  திதிதி   
 ந் ந் ந்  
ஆ6  தா  ஐ4 
   மா5    

–subham—

Tags- rum, rum, crossword, tamil

தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்! (Post No.12,148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,148

Date uploaded in London –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்! 

ச.நாகராஜன் 

தாய் நாடு என்ற அதி அற்புதமான கருத்து உலகில் பாரதத்தில் தான் முதன் முதலாக ஏற்பட்டிருந்ததை  வேதங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அதர்வண வேதத்தில் 10வது காண்டத்தில் 60 செய்யுள்கள் உள்ளன.

மாதிரிக்கு இதோ சில:-

ச நோ பூமிவிஸ்ருஜதாம் மாதா புத்ராய மே பய:  -|| (20)

கிரயஸ்தே ஹிமவந்தோ பரண்யம் தே ப்ருதிவிஸ்யோநமஸ்து |

மாதா பூமி புத் ரோஹம் ப்ருதிவ்யா: ||  (22)

பூமே மாத்ராநிர்தோஹி மா பத்ரயா சுப்ரதிஷ்டிதம் ||

இவை அனைத்திலும் அன்னை பூமிக்கு மகன் நான்; அன்னையை வணங்குகிறேன் என்ற கருத்து இருப்பதைப் பார்க்கலாம்.

ரிக் வேதத்திலும் பூமியை நமது அன்னையாக வணங்குகின்ற ஸ்லோகங்கள்/ துதிகள் உள்ளன.

இந்த வேத துதிகளே வந்தே மாதரம் என்ற எழுச்சி மிக்க துதியை நமக்கு வழங்கியது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி இவற்றினால் ஊக்கம் பெற்றே இந்த அற்புதமான முழக்கத்தை நமக்குத் தந்து சுதந்திரத்திற்கான எழுச்சியை ஊட்டினார்.

மகாகவி பாரதியாரும் வாழிய பாரத மணித்திருநாடு, வந்தே மாதரம் என்ற எழுச்சி மிகு பாடல்களை நமக்கு அளித்து உத்வேகமூட்டினார்.

ஒவ்வொரு புனிதமான சடங்கிலும் ஒவ்வொரு ஹிந்துவும் புனிதமான அனைத்து நதிகளையும் துதித்து அழைத்து வணங்குகிறான்.

அந்த நதிகள் கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பாய்ந்து ஓடுகின்றன.

கங்கே ச யமுனே சைவ சரஸ்வதி

நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு ||

இப்படி கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என அனைத்து புனித நதிகளையும் அழைக்கிறோம்.

இப்படி ஆரம்பிக்கும் தாய்நாட்டு வணக்கம் உலகம் தழுவிய பெரும் அன்புத் தழுவலாக மாறுகிறது.

மாதே மே பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர: |

பாந்த்வா சிவபக்தஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம் |

“அன்னை பார்வதி; தந்தை சிவபிரான். சிவபக்தர்கள் அனைவரும் உறவினர்கள்; சுய தேசம் பூமி முழுவதுமே” என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது!

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து! |

சர்வே ஜனா சுகினோ பவந்து ||

என்பது தான் வேத முழக்கம்.

உலகம் அனைத்தும் நலமுடன் இருக்கட்டும் |

அனைத்து மக்களுடன் சுகத்துடன் இருக்கட்டும் |

இதுவே வேத பிரார்த்தனை!

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.

ஆக இது போன்ற ஏராளமான வேத துதிகளை நாம் அறிந்தோமானால் தாய் நாடு பற்றிய கருத்து முதலில் தோன்றியது பாரத தேசத்தில் தான் என்பதும் அது அப்படியே உலகம் தழுவிய உலக நலன் பிரார்த்தனையாக மிளிர்ந்து ஒளிர்கிறது என்பதும் நமக்குத் தெரியவருகிறது!

வஸுதைவ குடும்பகம் என்ற கோஷத்தை என்றுமே ஒரு பாரதீயன் விட மாட்டான் என்பது தான் உண்மை!

***

QUIZ கர்நாடகப் பத்து QUIZ (Post No.12,147)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,147

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1. கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற அரண்மனை எது?

2.கர்நாடகத்தில் சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடங்கள் எவை?

3.இந்த மாநிலத்தில் காவிரிநதி உற்பத்தியாகும் இடம் எது ?

4. கர்நாடகத்தில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் எது?

5.தங்கச்சுரங்கம் உள்ள இடத்தின் பெயர் என்ன?

6.இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலை எங்குள்ளது?

7.கொல்லூரின் புகழ் பரவக் காரணம் யாது?

8.ஆதி சங்கரர் நிறுவிய மடம் எங்கே இருக்கிறது ?

9.துவைத மத ஸ்தாபகர் யார் ? அவர் கர்நாடகாவில் எங்கே பிறந்தார் ?

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; வேறு என்ன மொழிகள் முக்கியமானவை ?

 xxxxx

விடைகள்

1.மைசூரிலுள்ள மஹாராஜா அரண்மனை

2.பேலூர், ஹளபேடு , ஹம்பி

3.குடகு, தலைக்காவேரி

4.உடுப்பியிலுள்ள கிருஷ்ணன் கோவில்

5.கோலார்

6.சிரவண பெலகோலாவில் மலை மீதுள்ள கோமடேஸ்வரரின் சிலை ஒரே கல்லினால் ஆனது.. அதன் உயரம் 58 அடி .

7.மூகாம்பிகை அம்மனின் அழகிய விக்ரகம் அங்கே இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு தமிழ் நாட்டின் முதலைச்சர் M G R .  வைரவாள் கொடுத்தவுடன் தமிழ்நாட்டில் அந்த அம்மனின் புகழ் பரவியது . பின்னர் முதலமைச்சராக வந்த ஜெயலலிதா தங்கம் கொடுத்தார் 

8.சிருங்கேரி

9.மத்வர் ; அவர் உடுப்பி தாலுகாவில் உள்ள பாஜக கிராமத்தில் பிறந்தார்.

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; துளு , கொங்கணி ஆகிய மொழிகளுடன் தமிழும் பேசப்படுகின்றன ; எல்லைப்பகுதியில் மராத்தி பேசப்படுகிறது.

–subham—

Tags – கன்னடம், மைசூரு, கர்நாடகம், கொல்லூர்

More Information about Plants in Hinduism -Part 2 (Post No. 12,146)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,146

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 1 was posted yesterday. 

Kush grass

Eragrotis cynosuroides

It is considered sacred . it is used as a mat to the pitris/departed souls. The eldest son of Rama was named Kush aster this grass.i  In the Chaturmass Mahatmya this grass is associated with planet Ketu. This grass is used in ceremonies, and in sharaddhas/ funeral rites .

Xxxxx

Kushmand

Cucurbita maxima or pepo

This fruit represents buffalo demon, Mahisasura , sacrificed on the Dasara day. It is also considered a great merit/ punya to hollow this fruit, fill it up with gold and jewels and to present it to a brahmin priest as a gupta dhan or secret gift. Vrat Kaumudi book calls this creeper a goddess and recommends its worship.

In the Padma purana, saint Narada recommended to King Chandrasen  for worship .

King Chandrasen was the chief of the  Kaayastha  Prabhus, a twice born caste of  Bombay, Baroda and Central India.

Xxxx

Naaral , coconut tree

Cocos nucifera

It is considered an auspicious offering to the gods. It is worshipped as Lakshmi . The tree is called Kalpa Vriksha , wish fulfilling tree . All the parts of the tree are used. It is sold in all the temple towns for offering to god. It is placed on top of a metal pot with mango leaves and offered to god, ascetics and other leaders as Poorna (Puurna) Kumbha to honour them. Fishermen community in the West Coast of India offer to Vedic God Varuna every year.

Xxxx

Neem

Melia azadirachta

Its leaves are eaten on the new year day Gudi paadva, Ugadi days. Tamil Hindus use it in all village goddess Maariamman temples. It is considered an antidote to smallpox and infectious diseases. Its medicinal properties are well known. The oil of the neem is a well known remedy for leprosy and other skin diseases. During epidemic of small pox, festoons of the fresh leaves of this tree are hung on the doors of Hindus’ houses.

Xxxx

Nivadung

Euphorbium pentandra

Panchdhaari

It is worshipped as goddess Manasa in Bengal. During Divali , boys of the Patheri Prabhu caste play with this plant making lamps out of it.

Xxxx

Padma

Lotus

It has got scores of names in Sanskrit. Hindu girls’ names are mostly flower names, particularly lotus names. Lakshmi and all Hindu goddesses are associated with this flower. Also national flower of India.

Xxx

Pan

Piper betel

Betel is derived from Tamil word Vetrilai . Hindus chew it with betel-nuts and spices. It is used in all Hindu ceremonies in the south. It is offered to gods. Of late, betel leaves garlands are offered to lord Anjaneya   in all Hanuman temples . it is good for digestion. It is also offered paan / beedaa.

To be continued…………………………

 tags – plants, hinduism, coconuts, betel leaves, Maraiamman

D for Dharma Crossword (Post No.12,145)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,145

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

All the words begin from centre. If u follow the colour, you may easily fill the gaps. These words have  ‘D’ as the initial letters. Though Sanskrit, they r well known throughout India.

    1    2
8         
          
          
          
7   D    3
          
          
          
6         
         4
    5     

1Unshakable, immovable, fixed – name of a boy and polestar

2Shortened name of Dattareya and Given in Sanskrit. One of the three Ds given by God to Devas Asuras and Humans

3.Bmae of an Asana; name of a month

4.Wealth

5. The danavas are a mythological race of Asuras, the half-brothers to the Devas and Daityas

6.Ambassador, Messenger

7.Flag

8.Smoke

Answers

1.DHRUVA , 2.DHATTA, 3.DHANUR, 4.DHANAM,

5.DHANAVA, 6.DHUTA, 7.DWAJA, 8.DHUMA

    A1    A2
A8   V   T 
 M  U  T  
  U R A   
   HHH    
A7JAWDHANUR3
   HHH    
  U A A   
 T  N  N  
A6   A   A 
    V    M4
    A5     

—subham—

tags – d for dharma, crossword

QUIZ சங்கீத (முத்து சுவாமி தீட்சிதர்) பத்து QUIZ (Post No.12,144)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,144

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.சங்கீத மும்மூர்த்திகள் யாவர் ?

2.சங்கீதம் கற்க வருவோருக்கு தீட்சிதரின் க்ருதியைத்தான் முதலில் சொல்லித் தருவார்கள் . அது என்ன பாடல் ?

3.தீட்சிதரின் காலம் என்ன? பிறந்த ஊர் எது?

4.ஒவ்வொரு பாடகரும் இறுதியில் ஒரு முத்திரை வைப்பர்; எதை வைத்து தீட்சிதர் க்ருதி என்று கண்டுபிடிக்கலாம் ?

5.தீட்சிதர் பாடிய முதல் க்ருதி எது ? எங்கே பாடினார் ?

6.காஞ்சிபுரத்தில் யாரிடம் தீட்சிதர் தத்துவம் கற்றார்?

7.தீட்சிதரை தஞ்சாவூரில் சந்தித்த பிரபல பாடகர் யார் ?

8.எட்டயபுரத்தின் வறட்சியைக் கண்டு மனம் நொந்து,

 என்ன கீர்த்தனை பாடி மழையை வருவித்தார் ?

9.கங்கையில் தீட்சிதருக்கு என்ன கிடைத்தது ?

10.நவாவர்ண கிருதிகள் என்பது என்ன ?

XXX

விடைகள்

1. தியாகராஜ சுவாமிகள், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்

2. ஹம்சத்வனி ராகத்திலுள்ள ‘வாதாபி கணபதிம் பஜே ‘.

3. பிறந்த ஊர் திருவாரூர் . அவர் வாழ்ந்த காலம் 1775-1835.

4. அவர் பாடல்கள் அனைத்தும் ‘குரு குஹ’ என்ற முத்திரையுடன் முடியும் .

5.திருத்தணியில் முருகன் மீது பாடினார். மாய மாளவ கெளல ராகம் ;

‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி’.

6.உபநிஷத் பிரம்மன்

7.சாமா சாஸ்திரிகள் (சியாமா சாஸ்திரிகள்)

8.ஆனந்தாமிர்தகர்ஷினி – அமிர்தவர்ஷினி ராகம்

9. வீணை கிடைத்தது

10. திருவாரூரில் குடிகொண்டுள்ள அன்னை கமலாம்பாள் மீது தீட்சிதர் பாடியவை நவாவர்ண கிருதிகள். தேவியானவள் ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோண  கோட்டையின் நடுவில்  அமர்ந்திருப்பது நவ ஆவரணம் எனப்படும் . இதில் அவர் வெவ்வேறு சம்ஸ்க்ருத வேற்றுமைகளை (விபக்தி) வைத்துப்  பாடினார் . தீட்சிதர் சுமார் 440 கிருதிகளைப் பாடியுள்ளார் .

—subham—

Tags– மழை , அமிர்தவர்ஷினி, எட்டயபுரம், முத்து சுவாமி தீட்சிதர் , நவாவர்ணம் , கிருதிகள், வாதாபிம் , குருகுஹ

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்! (Post No.12,143)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,143

Date uploaded in London –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்!

ச.நாகராஜன்

மூன்று ரதங்களின் பெயர்கள்

அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.

அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.

யாருடைய ரதங்கள் அந்த  மூன்று?

அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.

அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.

மந்த்ரிணீயுடைய ரதம் – கேய சக்ர ரதம்

வாராஹியினுடைய ரதம் – கிரி சக்ர ரதம்.

இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!

சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |

யத்ர கேய ரதஸ் தத்ர  கிரி சக்ர ரதோத்தம: ||

ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||

ஸம்பத்கரீ

66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:

ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா

இதன் பொருள்:

ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.

ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.

அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.

ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.

சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர். அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.

சுக சம்பத்கரீ என்றால் என்ன?

ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)

 ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.

இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.

அஸ்வாரூடா

67வது நாமமாக வருவது இது:

அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா

அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.

அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.

அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.

மந்த்ரிணீ, தண்டிணீ

அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.

1) மந்த்ரிணீ 2) தண்டிணீ

மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.

இவர்களே மிக முக்கியமானவர்கள்.

ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.

இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர். மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம்

அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)

சக்ரராஜ ரதம்

சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)

இதன் பொருள்:

சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.

யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.

இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.

சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.

ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.

1) த்ரைலோக்ய மோஹனம்

2) சர்வாசா பரிபூரகம்

3) சர்வசம்சேக்ஷாபணம்

4) சர்வ சௌபாக்யதாயகம்

5) சர்வார்த்தசாதகம்

6) சர்வரக்ஷாகரம்

7) சர்வரோகஹரம்

8) சர்வஸித்திப்ரதம்

9) சர்வானந்தமயம்

ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.

இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.

சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத – ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.

இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.

சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.

கேய சக்ர ரதம்

அடுத்து 69வது நாமம் இது:

கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா

இதன் பொருள்:

கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.

இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.

கேய – பிரசித்தமான

சக்ர – சக்கரத்தை உடைய

ரதம் – ரதமான சூர்ய மண்டலம்

இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.

இன்னொரு பொருள்

கேய – முக்கியமான

சக்ர ரதா – சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை

ஆரூட – புத்தியில் அநுசந்தானம் செய்யும்

மந்த்ரிணீ – மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.

கிரி சக்ர ரதம்

அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா

இதன் பொருள்:

கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.

கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.

கிரி – கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்

சக்ரம் – சமூகமாகிய ரதத்தில்

ஆரூட – ஏறி இருந்தவளாக இருப்பினும்

தண்டநாத – யமனால்

அபரஸ்க்ருதா – ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.

அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.

வெற்றிக்கு வழி!

அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.

*

குறிப்பு: மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.

லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.

இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.

அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!

***

More Information about Plants in Hinduism (Post No.12,142)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,142

Date uploaded in London – –  16 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

There are scores of articles in this blog about the role of plants in Hinduism. Tamil and English books are also published by me on the subject. Here I will briefly go through new details.

Aghada

Achyranthes aspera

If balsam plant is not available for worship this is used

For Gauri puja. The twigs of these plants are used as tooth brushes on the Rishi Panchami day . the leaves are used in Ganesh worship. Some scriptures associate it with Buddha.

Xxxx

Aam , Aamra

Mango tree, Magnifera indica , is a sacred tree. Its inflorescence is offered to Moon on the second day of month Maagh . it is also sacred to Manmatha , the hindu cupid. Festoons of mango leaves are  round the halls  and bowers in which wedding and other auspicious ceremonies are held. Mangoes are distributed among Brahmins on Vata Savitri day. Hindus believe the tree represents Prajaapati.  Its twigs are used as tooth brushes. Its leaves are used as spoons for pouring libations. On Maha Shivratri day, Shiva is worshipped with mango blossom.

xxxx

Amlaki ,Aamalaka

Phyllanthus emblica

The tree is worshipped and a feast is taken under the tree during Aavali  Bhojan. In the olden days chips of the wood are thrown into well to clean it. Its wood is used in well curbs. Medical properties are already posted

Xxxxx

Apta

Bauhinia tomentosa

It is worshipped and looted on Dasara day, and its leaves over which mantras repeated, are distributed as gold. In the absence of Shami tree this tree must be  worshipped on day. Dasara day.

Xxxx

Ashoka

Saraca indica or

Joneshia asoka

This tree is held scared, because  Sita devi spent her day in the Ashoka tree grove. Its buds are eaten by women in Bengal on the  Ashok  shasthi day. It is supposed to bloom vigorously  if kicked by a young lady.

Xxx

Bael or Bel  

Aegle marmelos

Its trifoliate leaf is sacred  to Shiva. No worship of shiva is  omplete without it.   These Vilva are  leaves are sacred and the three leaves represent hindu trinity – brahama ,Vishnu and shiva.

Xxxx

Balsam

Impetiens

It represents Gauri in the month of Bhadrapath

Xxxxx

Bena, also known as

Khas  or Kush

Andropogon murica . its  fragrans root  known as kas are made in use.

Xxxxx

Chirgat

Mukia scrabrella

It represents giant Narakaasura in Diwali and crushed as such. Its pulp is then applied to body, possibly due to its medicial properties.

Xxxx

Dub

Cynodont dactylon

Its leaves are sacred to Ganesh , who is worshipped with them. The plant represents Raahu. It is worshipped on the eighth day of Bhadrapada month. Its marriage with Ficus indica is recommended. It is called tree marriage.

To be continued…………

Tags- plants, Hindus, worship, tooth brush

‘கள்’ , ‘ள்’ முடியும் வார்த்தை’கள்’ (Post No.12,141)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,141

Date uploaded in London – –  16 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பறவை  ,

2. எண்ணெய் கொடுக்கும்

3.ரோஜாச்  செடியில் இருக்கும்

4. வெளி என்பதன் எதிர்ப்பதம்

5.போருக்குச் செல்லும் முன் அரசர்கள் உரைப்பது

 6. குளத்தின் , ஏரியின் ஆழ த் தைச் சொல்ல பயன்படும் சொல் 

7.காப்பிப்பொடி இப்படி இருக்கும்

8.குடித்தால் போதை,

9. கோடைகாலத்தில் விற்பனை ஆவது

10.ஆண்களின் எதிர்ப்பதம்

11.மேடைப் பேச்சாளரைப் பிடிக்காவிட்டால் வீசுவ து

12.வார்த்தைகள் என்பதன் தமிழாக்கம்

13.இவ்வூரின் முக்கிய திருவிழா சித்திரை மாதம், ஸ்ரீகுளுந்தாளம்மன்

தேர்திருவிழா. (திருச்சி மாவட்டம்)

14.மனிதனுக்கு 32.

15.நான் என்பதன் பன்மை

16..திருடன்

17.பனை மரத்திலிருந்து கிடைப்பது

18.குட்டையானவன்

19.பள்ளு பாடுவோன் ; கீழ் ஜாதி

 1239   
8ள்4    10
765    
       
 11  ள்  12
       
     13  
14   ள்  15
 16  17  18 
 19ள்   ள் 
       
       

12.சொற்கள் , 11.கற்கள், 14.பற்கள் , 9. பானங்கள்

17.பனங்கள் , , 15.நாங்கள் , , 10.பெண்கள்

1.புள் , 8.கள்,  , 2. எள் , 3.முள் , 5.சூள்,  , 7.தூள் , 6. ஆள் ,4. உள்

16.கள்ளன் 19.பள்ளன் ,  18.குள்ளன்,

பு 1எ2மு3பா 9   
க8ள்உ4  பெ 10
தூ7ஆ6சூ5ங் ண் 
     
க 11ற்ள்ற்சொ12
    
 ற் ங்பு 13ங் 
ப 14  ள் நா 15
 க 16 ப 17கு 18 
ப 19ள்ன்ம்ள் 
   பா 
 ன்  டின் 

–subham—

கிறிஸ்தவ மத மாற்றம் பற்றி மஹாத்மா காந்தி கடும் எச்சரிக்கை (Post No.12, 140)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,140

Date uploaded in London – –  16 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தீனபந்து சி எப் ஆண்ட்ரூஸ் C F  Andrews  , எப்படியாவது காந்திஜி Gandhiji வாய் மூலம் மத மாற்றம் (Conversion)  சரியே என்று சொல்ல வைக்கவேண்டும் என்று  தந்திரம் செய்தார். ஆனால் மஹாத்மா காந்தியோ கிறிஸ்தவ மத மாற்றம்  உலக சமாதானத்துக்கு (Danger to World Peace) பேராபத்து என்று சொல்லி (அ) தீன  பந்துவின் வாயை மூடினார். இதோ காந்தியின்  ஹரிஜன் பத்திரிகை 28-3-1936 பத்திரிகையில் வெளியான உரையாடல்:-

C F Andrews: ஒரு மனிதன் நன்றாகச் சிந்தித்து, பிரார்த்தனை எல்லாம் செய்துவிட்டு, நான் கிறிஸ்தவனாக மதம் மாறினால்தான் எனக்கு விமோசனம் கிடைக்கும் என்று உங்களிடம் சொன்னால் , காந்திஜி, நீங்கள் என்ன செய்வீர்கள் ?

Gandhiji : நான் சொல்வேன் – ஒரு கிறிஸ்தவனிடம் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவன், உதாரணமாக இந்து ஒருவன் வந்து,  இப்படிச் சொன்னால், நீ நல்ல இந்துவாக மாறு. மற்ற மதத்தை நாடாதே – என்பேன்.

C F Andrews: இது பற்றி உங்களுடன் நீண்ட விவாதம் செய்ய முடியாது; என்னுடைய மனப்பாங்கு உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து மட்டுமே பரலோக சாம்ராஜ்யத்தைக் காட்ட முடியும் என்ற வாதத்தை நான் என்றோ நிராகரித்துவிட்டேன் உதாரணத்துக்காக கேட்கிறேன். ஆக்ஸ்போர்ட் குரூப் இயக்கத்தினர் , உங்கள் மகனின் வாழ்க்கையை மாற்றி, உங்கள் மகனையே கிறிஸ்தவனாக்கினால்  நீங்கள் என்ன சொல்வீர்கள் ?

(காந்திஜியின் மகன் பக்கா அயோக்கியன் ; குடிகாரன்; அவனை முஸ்லிம்கள் மதம் மாற்றினர் ; காந்திஜி மனைவி புலம்பல் கடி தங்கள் எழுதியும் அவன் திருந்தாதால் கஸ்தூரிபாய் காந்தி சிறையில் இருக்கும்போதே இறந்து போனார் ; இது பற்றி அந்தக் காலத்தில் தினமும் பத்திரிக்கையில் திடுக்கிடும் செய்திகள் வெளிவரும். அதை அறிந்தவர்களுக்கு ஆண்ட்ரூஸின் கேள்வி புரியும்; நொந்து போன காந்திஜியை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல குத்துகிறார் ஆண்ட்ரூஸ்)

மதம் மாறிய பிராமணன் கதை

Gandhiji : நான் சொல்வேன் ;ஆக்ஸ்போர்ட் கிறிஸ்தவ மதமாற்ற இயக்கத்தினர் எத்தனை பேரின் வாழ்வை வேண்டுமானாலும் சீரமைக்கட்டும். ஆனால் அவர்களின் மதத்தை மாற்றத் தேவை இல்லை ; அவரவர் மதத்தில் உள்ள நல்ல போதனைகளைச் சுட்டிக்காட்டி அதை பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லட்டுமே.

என்னிடம் ஒரு பிராமணப் பையன் வந்தான் . நீங்கள் (C F Andrews)  எழுதிய புஸ்தகத்தைப் படித்ததால் அவன் கிறிஸ்தவனாக மாறியதாக என்னிடம் சொன்னான் . அப்படியானால் உங்கள் அப்பா, அம்மா தாத்தா பாட்டி மதம் எல்லாம் தப்பா? என்று நான் கேட்டேன். இல்லை இல்லை என்றான் அந்தப் பிராமண இளைஞன் . நான் சொன்னேன்; பைபிளையும் கிறிஸ்து வையும் ஏற்பதில் உனக்கு சிரமம் இருந்ததா? ஆண்ட்ரூஸ் அவருடைய புஸ்தகத்தில் எங்கும்  பைபிளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக மதம் மாறுங்கள் என்று இந்தியர்களுக்குச் சொல்லவில்லையே . நீ அவருடைய புஸ்தகத்தை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய் .என்றேன் 

ஒருவேளை நீங்களும் காலம் சென்ற முகமது அலி போல நினைக்கிறீர்களா? அவர் ஒரு கெட்ட முஸ்லிம்கூட  நல்ல இந்துவை விட மேலானவன் என்றார்’

C F Andrews: நான் முகமது அலி சொன்னதை ஏற்கவே மாட்டேன் ஆயினும் ஒருவன் உண்மையாகவே மதம் மாற விரும்பினால் அதற்குத் தடை போடக்கூடாது என்பதே என் கருத்து

Gandhiji :ஆனால் அவனுக்கு சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பே நீங்கள் கொடுக்கவில்லை என்பது உங்களுக்குத் புரியவில்லையே!! நீங்கள் அவனை ‘ஏண்டா மதம் மாறுகிறாய்?’ என்று குறுக்கு விசாரணை கூடச் செய்யவில்லையே . உதாரணத்துக்குச் சொல்கிறேன். ஒருவன் பாகவத புராணத்தைப் படித்துவிட்டு அதனால் நான் இந்துவாக மாற விரும்புகிறேன் என்று என்னிடம் வந்து சொன்னால் ; வேண்டாமப்பா, பாகவத புராணம் சொல்லும் நல்ல விஷயம் எல்லாம் பைபிளிலும் உள்ளது ; அதைக் காண்பதற்கு நீ முயற்சியே செய்யவில்லை . அதை படித்து நல்ல கிறிஸ்தவனாக இரு என்றுதான் சொல்வேன்.

C F Andrews: எனக்குத் தெரியாது ; ஒருவன் நான் நல்ல கிறிஸ்தவனாக மாற விரும்புகிறேன் என்று என்னிடம் சொன்னால் , நீ மாறாப்பா என்றுதான்  நான் சொல்வேன்.; ஆயினும் உங்களுக்குத் தெரியும்; ஒருவன் என்னிடம் வந்து கிறிஸ்தவனாக மாற விரும்புகிறேன் என்று சொன்னபோது என் பெயரைச் சொல்லி மதம் மாறாதே என்று நான் சொன்னேன்.ஆயினும் மனிதனுக்கு உறுதியான ஒரு மதம் வேண்டும் அல்லவா?

(ஆண்ட்ரூஸ் சுற்றி வளைத்து கிறிஸ்துவே ஒரே வழி என்று சொல்லவைக்க தொடர்ந்து முயற்சி செய்யவே, காந்திஜி போட்டார் ஒரு போடு; அந்த ஆள் வாய் மூடி மவுனமானார் )

Gandhiji :ஒரு மனிதனுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருந்தால் அவன் சொல்லட்டுமே. அதற்காக அவன் தாய் மதத்தை விட வேண்டுமா?  இப்படி மதம் மாறுவது உலகில் அமைதியே  இல்லாமல் செய்துவிடும் . சமயம் என்பது அவரவர் சொந்த நம்பிக்கை; நாம் நமது கொள்கைப்படி வாழ்ந்ந்து காட்டி நல்லனவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் இது கடவுளை அடைய மனிதன் செய்யும் முயற்சிக்கு வலுவூட்டும் .

இப்படிச் சொல்லிவிட்டு காந்திஜி தொடர்ந்து பேசினார் :- நீங்கள் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதையோ அல்லது எல்லா மதங்களும் சமமே என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களோ இல்லையோ . என்னுடைய கருத்து என்னவென்றால் உலகிலுள்ள மதங்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே ; நம்முடைய மதத்தில் நமக்கு என்ன மரியாதை உண்டோ, அது மற்ற  மதத்தின்மீதும் இருக்கவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொல்லுவேன் ;ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளுதல் அல்ல சகிப்புத்தன்மை அல்ல; ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும் என்பதே என் கொள்கை. Harijan 28-3-1936

ஹரிஜன் பத்திரிகை 28-3-1936

என் கருத்து 

காந்திஜி ஆஸ்ரமத்தில் வசித்துக்கொண்டே உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த ஆண்ட்ரூஸுக்கு சரியான பதிலடி கொடுத்தார் காந்திஜி; சிறு வயது முதலே பகவத் கீதையையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் ராம நாமத்தையும் ஜபித்து வந்ததால் எவ்வளவோ கிறிஸ்தவர்கள் அவரை மதம் மாற்ற முயற்சித்தும் அவர் மதம் மாறவில்லை. ஆனால் அப்படி மதம் மாறியிருந்தால் அவரை இந்திய மக்கள் குப்பைத்தொட்டியில் வீசி எறிவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.

–SUBHAM—

TAGS-  காந்தி , மதம் மாற்றம்,  எச்சரிக்கை, உலக சமாதானம், சி எப் ஆண்ட்ரூஸ்