பழைய கேள்வி தான்; ஆனால் புதிய பதில்கள் (Post No.12,210)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,210

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பழைய கேள்வி தான்ஆனால் புதிய பதில்கள்!

ச.நாகராஜன்

இண்டர்நெட்டில் படித்து ரசித்த ஜோக் இது.

பழைய கேள்வி ஒன்று – ஆனால் பதில்களோ புதிது!

சுயமுன்னேற்றம் பற்றி பயிற்சி தரும் ஒரு பயிற்சியாளர் அனைவரையும் பார்த்துத் தான் கேட்கும் வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

“நல்ல நம்பிக்கை உடையவருக்கும் தோல்வி மனப்பான்மை உடையவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? எதிலுமே நாம் பிரகாசமான பக்கத்தைப் பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிறீர்களா?”

அனைவரும் ‘சொல்கிறோம்’ என்று கூவினர்.

பாவம் அந்தப் பயிற்சியாளருக்குத் தெரியாது விவகாரமான ஒரு கூட்டத்தினரிடையே தான் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று.

பயிற்சியாளர் தன் கையிலிருந்த ஒரு கிளாஸை எடுத்தார். அதில் பாதி அளவு தண்ணீரை விட்டார்.

“இப்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்கள், இதில்?” என்று கேட்டார்.

முதலில் இருந்த ஒருவர் – நல்ல நம்பிக்கை உடையவர் – ‘கிளாஸில் பாதி அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது’ என்றார்.

“பிரமாதம்” என்றார் பயிற்சியாளர்.

இன்னொருவர் – தோல்வி மனப்பான்மை உடையவர் – ‘கிளாஸ் பாதி காலியாக இருக்கிறது’ என்றார்.

இதை எதிர்பார்த்திருந்த பயிற்சியாளர் இது தான் தோல்வி மனப்பான்மைக்கு அடையாளம் என்று விவரிக்க ஆரம்பிக்கும் முன்னர் இன்னொருவர் எழுந்தார்.

நான் ஒரு எஞ்சினியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் , “இந்த கிளாஸ் எவ்வளவு தண்ணீருக்காக வடிவமைப்பு செய்யப்பட வேண்டுமோ அப்படி செய்யப்படாமல் ஓவர் டிஸைனாக – கூடுதல் வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது” என்றார்.

பயிற்சியாளர் விழித்தார்.

அடுத்தவர் எழுந்தார்.

நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், ‘கிளாஸில் தண்ணீர் நிரப்பப்பட்ட விதமே தப்பு. இதை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கும் விதத்தில் சிறிய கிளாஸ்களில் தண்ணீரைச் சமமாக ஊற்றி பங்கீடு செய்ய வேண்டும்’ என்றார்.

அடுத்தவர் எழுந்தார்.

தன்னை ஒரு உளவியலாளர் – சைக்காலஜிஸ்ட் – என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்,, “இந்த கிளாஸில் உள்ள தண்ணீர் உங்களை எப்படி உணர வைக்கிறது என்று கூறுங்கள்’ என்று கேட்கிறது” என்றார்.

அடுத்தவர் எழுந்தார்.

தன்னை க்வாண்டம் பிஸிக்ஸில் வல்லுநர் என்று கூறிக் கொண்டவர், “கிளாஸில் நீர் உள்ளே இருக்கலாம், அல்லது வெளியேயும் இருக்கலாம், அல்லது ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருக்கலாம்” என்றார்.

அடுத்தவர் எழுந்தார். அவர் ஒரு முதலாளி.

‘இதில் பயனாளரின் பயன்பாட்டிற்கு முழு அளவு முக்கியத்துவம் தரப்படாமல் தவறான விநியோக முறையைக் காண்பிக்கிறது’ என்றார் அவர்.

அடுத்த ஒரு வியாபாரி எழுந்தார். ‘கொள்ள வேண்டிய கொள்முதல் அளவு இல்லாமல் பாதி தண்ணீர் கொண்டிருப்பதால் இதன் மதிப்பு பாதியாக அல்லவா குறையும்’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.

ப்ராஜெக்ட் மானேஜர் எழுந்தார். ‘எவ்வள்வு இருக்க வேண்டுமோ அந்த அளவைக் கொண்டிராமல் இந்த கிளாஸ் இரு மடங்கு பெரிதாக இருக்கிறதே’ என்றார்.

 சந்தை விற்பனையாளர் அடுத்து எழுந்தார். “உங்களது கிளாஸை திருப்பி வடிவமைப்பு செய்ய வேண்டும்” என்றார்.

அடுத்து இயற்பியல் வல்லுநர் எழுந்தார். கி’ளாஸ் பாதி காலியாக இருக்கிறது என்று சொல்வது தவறு. பாதி அளவு தண்ணீரும் பாதி அளவு காற்றும் அதில் நிரம்பி இருக்கிறது’ என்றார்.

 ஆரோக்கிய மேம்பாட்டு பயிற்சியாளர் கேட்டார் :”இப்படி அனாவசியமாகக் கேள்வி கேட்காமல் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அதை முழுவதுமாக நிரப்பலாமே” என்றார்.

பயிற்சி கொடுக்க வந்தவர் பயிற்சி முடிந்தது என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார்!

காலம் ரொம்ப மாறிப் போச்சுங்க!

—– subham——

Leave a comment

Leave a comment